எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 22, 2007

போஸ் நீக்கப் பட்டார்!

காந்தியை மகாத்மா என்றும் தேசத் தந்தை என்றும் சொல்லுபவர்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாய்த் தான் இருக்கும் இது. என்றாலும் அப்போது நடந்த வி்ஷயத்தை இப்போ மற்றச் சிலரின் பார்வையில் இருந்தும் பார்க்கலாம். போஸின் அசுர வளர்ச்சி காந்தியைப் பிரமிக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி காந்திக்குப் பிடிக்கவில்லை. காந்தி சொன்னபடி தேர்தலில் நிற்க நேருவும் படேலும் மறுத்தாலும் காங்கிரஸின் சின்டிகேட்டைக் காந்தி கூட்ட ஏற்பாடு செய்து அதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரச் செய்து போஸை நீக்க மறைமுக ஏற்பாடுகள் செய்தார் என்றே சொல்ல வேண்டும். இதில் மாக்கியவல்லியின் தந்திரம் வெளிப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஒரே வித்தியாசம் மாக்கியவல்லியின் அரசியல் ஆன்மீகம் கலக்காதது. காந்தியின் அரசியல் ஆன்மீகத்துடன் பின்னிப் பிணைந்தது. ஆக்வே வித்தியாசம் யார் கண்ணையும், மனதையும் உறுத்தாமல் காந்தியால் தன் வேலைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது எனச் சொல்லலாம்.

காந்தியின் வார்த்தைகளிலேயே இதைப் பார்க்கலாம். ஜனவரி 29, 1939-ல் தன்னுடைய காரியதரிசியான மகாதேவ தேசாய்க்குக் காந்தி எழுதிய கடிதத்தில் கூறுகிறார். "திரிபுரா காங்கிரஸில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை" என்று. அதற்குப் பின் 3 பெப்ரவரியில் நேருவுக்கு எழுதுகிறார்:தான் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொள்ளாமலேயே நாட்டுக்கு உழைக்கப் போவதாயும், தான் ராஜ்கோட் சென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாயும் சொல்கிறார். 27 பெப்ரவரியில் ராஜ்கோட் அடைந்த காந்தி உண்ணாவிரதம் அறிவிக்கிறார். 3 மார்ச்சில் தேசாய், படேல் போன்றவர்கள் தங்களுடைய அதிகப் பிரசித்தி பெறாத 'PANT RESOLUTION" கொண்டு வருகிறார்கள். காந்தி அதற்கு ஒன்றும் வாயே திறக்கவில்லை. உண்மையில் போஸ் தோல்வி அடைந்திருந்தால் அப்போதும் காந்தி உண்ணாவிரதம் இருந்திருப்பாரா? காந்தி போஸிடம் உன்னுடைய தோழர்களுடன் ஒத்துப் போய் வேலைகளைச் செய் என்கிறார். அவர்கள் கருத்துக்கு மதிப்புக் கொடு என்கிறார். உண்மையில் போஸின் வெற்றியை விரும்பி இருந்தால் ஏன் பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய சொந்தத் தோல்வி என அவர் அறிவிக்க வேண்டும்? ஏப்ரல் 10 1939-ல் காந்தி பந்த் ரெசலூஷன் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. அது எனக்கு மிக்க மனவருத்தத்தை அளித்தது என்கிறார். உண்மை எனில் அவர் ஏன் தன் செல்வாக்கை உபயோகித்து அதைத் தடுக்கவில்லை? Amillion dollar question indeed!

இதை அவர் நேரடியாய்ச் செய்யாமல் மறைந்திருந்து தாக்கும் கொரில்லாப் போரைப் போல் பின் நின்று இயக்கினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அஹிம்சை என்ற பேரில். காந்தியின் பார்வையில் இது சரியே! காந்தியைத் தெய்வம் என நினைப்பவர்களுக்கும் இது சரியே! ஏனெனில் அன்றைய இளைஞர் கூட்டம் போஸின் தலைமையில் உற்சாகம் அடைந்து ஒரு புதிய இந்தியாவிற்கு வழிகாட்டப் போகும் தலைவர் என அவரை நினைக்க ஆரம்பித்து இருந்தனர். இது காந்தியின் செல்வாக்கிற்கு வீழ்ச்சி என்றே சொல்லலாம். வீழ்ச்சி அடைந்தவர் மேலே வரப் பார்ப்பது தவறு ஒன்றும் இல்லை அல்லவா? ஆனால் அவர் தன்னுடைய சொந்தக் காரணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாட்டின் நன்மைக்கு போஸின் தலைமை உகந்தது அல்ல என்னும் எண்ணம் வரும்படி நடந்து கொண்டதால், சர்தார் வல்லபாய் படேல் அப்போது உடல் நலம் கெட்டிருந்த போஸ் அவர்களின் வெற்றி "ஒரு அரசியல் ஜுரம். இதை நீக்க வேண்டும்" என்று சொல்லும்படி நேர்ந்தது. இதை அப்போதே அநேகத் தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். முக்கியமாய் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.
(தொடரும்)

டிஸ்கி: எல்லாருக்கும் சந்தேகம் நான் பின்னூட்டம் அளிப்பது தமிங்கிலத்தில் என்பதால் எப்படி பதிவு எல்லாம் தமிழில் போடறேன் என்று. தமிழ் அஞசலில் நெருப்பு நரியில் இருந்து தட்டச்சு செய்கிறேன். தட்டச்சு செய்வதில் தேர்ச்சி அதிகம் என்பதால் என்னால் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் எக்ஸ்ப்ளோரரில் பார்க்கும் போது தவறுகள் தெரிகின்றன. இருந்தாலும் ஓர் ஊகத்தின் பேரிலும், தமிழில் உள்ள பயிற்சியினாலும் ஓரளவு தட்டச்சு செய்ய முடிகிறது. அதனாலேயே வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் நெருப்பு நரியில் இருக்கும்போது கொடுக்க முடியவில்லை. யார் என்ன சொன்னாங்கன்னு நினைவு வச்சுக்கணுமே அதான். பொறுத்துக்குங்க. வேறே வழியே இல்லை. மற்றவழிகளெல்லாம் முயன்று பார்த்து விட்டேன். இங்கே அது முடியலை. ஆகவே இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லாரையும் இப்படித்தான் வாட்டி எடுக்கணும்.

8 comments:

 1. nan pona pathivula sonna comments than ithukum, puthusa solla onnum illai..... gandhi thanaku thandiramum theriyum enthai katiya sambavam athu... anal ithu enaku thurogamaka than padukirathu.

  ReplyDelete
 2. ம்ம்ம்.....அட்டகாசமாக போய் கொண்டுயிருக்கிறது ;)

  தொடருங்கள் தலைவி ;)

  ReplyDelete
 3. nicely written. (nijamaave thaan solren) :)
  waiting for the next part.

  itha maathiri inimeyum nalla ezhuthunga. :p

  intha disci ellam thevaiyaa? ithukku intha vilambaram..? :)

  ReplyDelete
 4. geetha,
  puthiya parimaaNNgaL
  therikiRathu.
  innooru thadavai sariththiram padikkum uNarvu.
  nallaa ezuthunga.

  ReplyDelete
 5. உங்கள் டிஸ்கி குழப்புகிறது.

  //டிஸ்கி: எல்லாருக்கும் சந்தேகம் நான் பின்னூட்டம் அளிப்பது தமிங்கிலத்தில் என்பதால் எப்படி பதிவு எல்லாம் தமிழில் போடறேன் என்று. தமிழ் அஞசலில் நெருப்பு நரியில் இருந்து தட்டச்சு செய்கிறேன்.//

  1. முரசு அஞ்சல் மென்பொருள் கொண்டு தட்டச்சி, அதை Firefox திரைக்குள் வெட்டி ஒட்டுகிறீர்களா?

  (அல்லது)

  2. Firefox தமிழ்விசை extensionஐப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் நேரடியாகவே browserஇல் தமிழை தட்டச்சலாமே?

  //தட்டச்சு செய்வதில் தேர்ச்சி அதிகம் என்பதால் என்னால் தட்டச்சு செய்ய முடிகிறது.//

  1.தமிழ் டைப்ரைட்டிங் பயின்றிருக்கிறீர்களா?

  (அல்லது)

  2. ஆங்கில டைப்ரைட்டிங்கை குறிப்பிடுகிறீர்களா?


  //ஆனால் எக்ஸ்ப்ளோரரில் பார்க்கும் போது தவறுகள் தெரிகின்றன.//

  Internet Explorer? அதில் பார்க்கும்போது என்ன தவறுகள் தெரிகின்றன?

  // இருந்தாலும் ஓர் ஊகத்தின் பேரிலும், தமிழில் உள்ள பயிற்சியினாலும் ஓரளவு தட்டச்சு செய்ய முடிகிறது. அதனாலேயே வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் நெருப்பு நரியில் இருக்கும்போது கொடுக்க முடியவில்லை. யார் என்ன சொன்னாங்கன்னு நினைவு வச்சுக்கணுமே அதான்.//

  Firefoxஇலிருந்துதான் இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன், 'தமிழ்விசை' extensionஐப் பயன்படுத்தி. உங்களுக்கு தமிழ் டைப்ரைட்டிங் பயிற்சி உள்ளதென்றால், மேலும் நல்லது. 'தமிழ்விசை' அதற்கும் ஆதரவளிக்கிறது. காண்க: http://tamilkey.mozdev.org/

  ReplyDelete
 6. நான் இப்போதுதான் சரித்திரத்தினை ஆழமாய் படிக்க ஆரம்பிக்கிறேன்...

  அடுத்த பதிவிற்கு... காத்து கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
 7. ஆனாலும் போஸ் காந்திஜி மேல் மதிப்பு மாறாமல் இருந்தார்.

  ReplyDelete
 8. ஆமாம், காந்தியை மஹாத்மா எனச் சொன்னதே போஸ் தான்!

  ReplyDelete