எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 24, 2007

உதித்தது புதிய உத்வேகம்!

ரவீந்திரநாத் தாகூருக்குக் காந்தி அடிகளிடமும், நேருவிடமும் செல்வாக்கு உண்டு. அப்படி இருந்தும் போஸின் விஷயத்தில் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காந்தியோ என்றால் வாயே திறக்காமல் உண்ணாவிரதத்துடன் மெளன விரதமும் இருந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டார். மாக்கியவல்லியின் தந்திரம் என்றே சொல்லலாம் இதை. மாக்கியவல்லிக்கும் காந்திக்கும் ஒரே வித்தியாசம் காந்தி வாய் பேசாமல் "அஹிம்சை" என்ற பேரால் தன் வேலைகளை நடத்திக் கொண்டது தான். தன்னுடைய பலம் தெரிந்திருந்தது அவருக்கு. போஸ் தன்னை மதிக்கிறார், வணங்குகிறார், தன் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசமாட்டார் என்று தெரிந்தே சின்டிகேட்டைக் கூட்டி அவர்கள் மூலம் போஸின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். வெற்றியும் பெற்றார். இதை emotional black mail என்றே சொல்லலாம். டொமினிக் லாப்பியர் கூட தன்னுடைய "Freedom at Midnight" புத்தகத்தில் நவகாளி யாத்திரை சம்பவத்திலும், நேரு பிரதம மந்திரியாக வர ஏற்பாடு செய்த வி்ஷயத்திலும் காந்தியை " Wily Gandhi" என்றே குறிப்பிடுவார். ஆங்கில அரசுக்கும் காந்தியின் பேரில் அதிக நம்பிக்கை இருந்தது என்றே சொல்லலாம். போஸ் வந்தால் தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்களும் உணர்ந்தே இருந்தார்கள்.

ஆனால் கட்சிக்குள் அனைவருக்கும் இது மகிழ்ச்சி அளிக்க வில்லை. திரு அமலே்ஷ் திரிபாதி போஸுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார். காந்தி தான் பின்னிருந்து இயக்குவதாய் எடுத்துச் சொல்லி அவர் ஏன் நேரிடையாக இதைச் செய்யக் கூடாது? என்றும் கோபம் அடைந்தார். ஆனால் போஸ் ஆங்கில அரசைப் புரிந்து கொண்ட அளவிற்கு காந்தியைப் புரிந்து கொள்ளவே இல்லை. போஸ் இதில் காந்தியின் பங்கு இல்லை என்றே நம்பினார். அல்லது மற்றவர்களைப் போல் காந்தியின் மீது அவர் கொண்டிருந்த "தெய்வ நம்பிக்கை" அவரை அவ்வாறு எண்ணச் செய்ததோ என்னவோ? ஆனாலும் அமலே்ஷ் திரிபாதி சும்மா இருக்க வில்லை. நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: "அந்தக் கிழவர் சண்டை போட ஆசைப் பட்டால் நேரடியாய்ப் போட்டிருக்கலாமே? ஏன் மற்றவர்களை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்?" என்று. திரு நேதாஜியின் சகோதரரும் இவ்வாறே கூறுகிறார்.நேருவுக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்:"நடந்த ்விஷயங்கள் எதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இல்லை. இது இவ்வாறு நடந்திருக்க வேண்டாம். இதனால் நீங்கள் அடைந்த லாபம் தான் என்ன?" என்று கேட்கிறார். ஆக காந்தியைப் பொறுத்த மட்டில் போஸின் வளர்ச்சியை எவ்விதத்திலாவது தடுக்க வேண்டும். அவர் நினைத்தவாறே செய்தார். இதற்கு போஸ் நாடு கடத்தப் பட்ட சமயம் ஐரோப்பியப் பெருந்தலைவர்களைச் சந்தித்ததும் அவர்களிடம் ஆதரவு திரட்டியதும் அதில் வெற்றி அடைந்து வந்ததும் முக்கியக் காரணமாய்ச் சொல்லப் படுகிறது. எப்படியோ வெளியில் தானாகவே ராஜினாமா கொடுத்டு விட்டு வந்த போஸ் சும்மா இருக்கவில்லை.

உதித்தது ஃபார்வார்ட் ப்ளாக் கட்சி. அதன் விவரம் நாளை!

23 comments:

 1. //உதித்தது ஃபார்வார்ட் ப்ளாக் கட்சி. அதன் விவரம் நாளை//

  அவளோ கஷ்டபட்டு உருவாக்குன அந்த கட்சியோட நிலமை இப்போ யார் கைலயோ மாட்டிட்டு முழி பிதுங்குது...

  ReplyDelete
 2. hihihi,ச்யாம் ஏதோ சொல்லி இருக்கார்னு தெரியுது. அப்புறமாப் படிச்சுக்கறேன். இப்போ நெருப்பில் வ்ந்துட்டு இருக்கேன். இதையும் ஒரு டிஸ்கி கொடுக்கணும்னு தான். வர வர நேயர் விருப்பம் ரொம்பவே அதிகமாயிட்டு வருதே? கொஞ்ச நாள் அதிகமா எல்லாம் எழுத முடியாது. இது எழுதறதே ஜாஸ்தி! :D நேயர் விருப்பம் எல்லாம் குறிச்சு வச்சிருக்கேன். வரிசையா வரும் அப்புறமா! :)))))))))))))

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. // வர வர நேயர் விருப்பம் ரொம்பவே அதிகமாயிட்டு வருதே//

  என்ன மேட்டருன்னே படிக்காம நீங்களா ஏதாவது சொல்லிட்டு இருக்கீங்க :-)

  ReplyDelete
 5. hihihi, syam athu ungalukku illai. neyar viruppam thaniya vanthirukku. athukku intha pathil sonnen. :P

  ReplyDelete
 6. Nicely narrated. waiting for the next part. good going.

  :) on syam comment.

  @syam, madam apdi thaan, ethavathu comedy pannuvanga. kandukaatha! :p

  ReplyDelete
 7. தலைவி

  சூப்பர போயிக்கிட்டு இருக்கு ;-)

  \\அவளோ கஷ்டபட்டு உருவாக்குன அந்த கட்சியோட நிலமை இப்போ யார் கைலயோ மாட்டிட்டு முழி பிதுங்குது...\\

  சரியா சொன்னிங்க நாட்டமை....தமிழ்நாட்டுல அப்படி ஒரு கட்சி இருக்கான்னே ஒரு சந்தேகம் வருது.

  ReplyDelete
 8. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கீதா. காந்தி போஸின் அணுகுமுறையையோ, வளர்ச்சியையோ விரும்பவேயில்லை. இதே போல் காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்குக்கு தூக்கு தண்டனை கிடைக்காமல் காப்பற்றியிருக்கலாம் என்ற controversy யும் உண்டு.

  சில நேரங்களில் அவரது அஹிம்சையே அவர் மற்றவர்கள் மேல் செலுத்திய மிகப் பெரிய வன்முறையாக இருந்திருக்கிறது.

  மேலும் எழுதுங்கள்.

  ReplyDelete
 9. அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது கீதா மேடம். பல தளங்களில் இருந்து செய்திகளை சேகரித்து எழுதுவதற்கும், நினைவில் இருந்து எழுதுவதற்கும் தான் எத்தனை வேறுபாடு.

  ReplyDelete
 10. மேடம், போஸிற்கும் காந்திக்கும் இடையில் இப்படி ஒரு பனிப்போரா.. முதல் முறை கேள்விப்படுகிறேன்..

  முதல் முறை காந்தியின் மீது, இந்த பதிவு தொடரை பார்த்ததிலிருந்து கொஞ்சம் மரியாதை குறைகிறதுங்க மேடம்..

  ReplyDelete
 11. //உதித்தது ஃபார்வார்ட் ப்ளாக் கட்சி. அதன் விவரம் நாளை!//


  ஹ்ம்ம்.. இப்போது எல்லா அரசியல் கட்சிகளும் இப்படித் தான் குரங்கு கையில் பூமாலையாக.. அதுவும் இந்த கட்சிக்கு மதுரையை சுற்றியுள்ள இடங்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் மதிப்பு இருக்கிறது..குறிப்பிட்ட ஜாதியினால்..

  ReplyDelete
 12. History Class la irukira feeling.
  yenakkum Gandhi patri ippdi oru yennam irundhadhu.He has used his position or nehru has used him for his benefits.
  What ever,appovae ,Freedom nu kidaikum munbae adhai yeppdi thamakku saadhagama nadathikanum nu planned.politicians maaravae maatanga.

  ReplyDelete
 13. India and Paakisthaan nu piriya karanam kooda Gandhidhaan nu ninaikiren.Hindu Muslim sagidharagal sollittae saamarthiyama pirichar,jinna melae pazhi pottutu. Avar ninachurundha thaduthu irukkalam. Thanks or all the facts. history refresh pannida madhiri irukku.

  ReplyDelete
 14. neyar viruppama?! hmmmmmmmm nadakkatum :-)

  naan medhuva vandhu fulla padichittu poren. idhu attendance ;-)

  ReplyDelete
 15. ennaga madam ..pathivu sinnatha aaiduchu,,,


  mmmm. apprum oru mukkiyamana pathiva ezutharappa ippadi technology idaiyuurua irukke.

  unga pathilgalum thamila vanthu iruntha innum nalla irunthu irukkum

  ReplyDelete
 16. எல்லா பகுதியும் ஒரே மூச்சுல படிச்சுருக்கேன். எவ்ளோ பாராட்டு வந்துருக்கு பாத்தீங்களா? :-)

  எனக்கு ஹே ராம் படம் பாத்தப்போ வந்த உணர்வு தான் வருது! அந்த படம் தான் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு சார்பு இருக்கறதை சொன்னது எனக்கு. இப்போ உங்க தொடர். அடுத்தவர் வளர்வதை காந்தியால் கூட தாங்க முடியாதானு ரொம்பவே ஆச்சரியமா இருக்கு!

  ReplyDelete
 17. நேரு குடும்பத்தில் கூட பயங்கர அரசியல் இருந்ததுனு ஒரு மெயில் படிச்சுருக்கேன் முன்ன, இது அதுக்கு சற்றும் குறைந்தது இல்ல.

  இது அத்தனையும் உண்மைனாலும், காந்தி எதிர்ப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கற மாதிரி தெரியுது. போஸ் பத்தின விவரங்களை இன்னும் கொஞ்சம் விவரமா (முடிந்தால்), இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக யோசித்து எழுதுங்கள்.

  ReplyDelete
 18. இருந்தாலும் அது எப்படி 3 உயிர்கள் (பகத் மற்றும் தோழர்கள்) போகப் போகுதுனு தெரிஞ்சும் யாரும் ஒரு முயற்சியும் எடுக்கலை? காந்தி பேசலைனா போஸ் அப்போதே எதிர்த்து இருக்கணும் இல்லியா?

  ReplyDelete
 19. இப்போ ஃபார்வர்ட் ப்ளாக்கை வெச்சு எழுதாத ஜோக்கே இல்லனு ஆகிடுச்சு நிலமை... ரொம்ப வருத்தமளிக்கிறது.

  அடுத்த பாகத்துக்கு காத்திருக்கேன்.

  ReplyDelete
 20. //அவளோ கஷ்டபட்டு உருவாக்குன அந்த கட்சியோட நிலமை இப்போ யார் கைலயோ மாட்டிட்டு முழி பிதுங்குது... //

  :-)

  ReplyDelete
 21. //இது அத்தனையும் உண்மைனாலும், காந்தி எதிர்ப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கற மாதிரி தெரியுது. போஸ் பத்தின விவரங்களை இன்னும் கொஞ்சம் விவரமா (முடிந்தால்), இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக யோசித்து எழுதுங்கள். //

  இல்லை பொற்கொடி! கீதா மேடம் கொஞ்சம் மைல்டா தர்ராங்க! உண்மையை எழுதினா காந்தியின் மறுபக்கம் வெட்ட வெளிச்சமாகும்.

  ReplyDelete
 22. கீதாம்மா! நான் மவுனராகம்ன்னு பேர் பாத்து ஸ்கிப்பானது உண்மைதான். மருநாள் கோபிதம்பி போன் பண்ணி இது போஸ் பத்தின தொடர்ன்னு சொன்னவுடனே தொடர்ந்து படிக்கிறேன். நல்ல வேளை மிஸ் பண்ண பார்த்தேன்:-)

  ReplyDelete
 23. // போஸ் தன்னை மதிக்கிறார், வணங்குகிறார், தன் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசமாட்டார் என்று தெரிந்தே சின்டிகேட்டைக் கூட்டி அவர்கள் மூலம் போஸின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.//

  ஆம்... இதை என்ன சொல்ல!

  மாநில பேத உணர்வுகள் கூட இருந்திருக்கலாமோ?

  ReplyDelete