எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 19, 2007

ஆணி வாங்கலையோ ஆணி, இந்திய ஆணி!

ஆணி ரொம்ப சேர்ந்து போனதால் 2 நாளா எழுதலை. எல்லாம் பழைய ஆணிகள். இந்தியாவிலேயே பிடுங்கிட்டு வந்திருக்கணும். முடியலை. இங்கே வந்து எல்லாம் செட் ஆகிப் பிடுங்க நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ளே நம்ம அணுக்கத் தொண்டர் கார்த்திக், வந்து ஆஃபீஸ் ஆணியை எல்லாம் விட்டுட்டு ஏன் மேடம் ஒண்ணும் எழுதலைன்னு கேட்டுட்டுப் போனார். காலையிலே அதுவும் காலங்கார்த்தாலேயே புலி வந்து (காஃபி கூடக் குடிக்காமல் இருந்தேன், அம்பி note the point) அப்போ வந்து எனக்கும் என் ஆருயிர்த் தோழி வேதாவுக்கும் சிண்டு முடியப் பார்த்துட்டு அதுக்கு எட்டாமல் தோற்றுப் போய்ப் போயிடுச்சு. ஹிஹிஹி, புலி இருக்கிறது சூடானிலே, வேதா இந்தியாவிலே, நான் யு.எஸ்ஸிலே. சிண்டு எப்படி எட்டும்? இந்த நாரதர் வேலை என் கிட்டே வேணாம்னு சொன்னா, புலி என்ன சொல்லுது தெரியுமா? மேடம், நாரதர் அம்பி தான், நான் புலி, உறுமறேன் பாருங்கனு அம்பியைப் போட்டுக் கொடுத்துட்டுப் போயிடுச்சு. புலி, இது எப்படி இருக்கு? நம்ம வேலை? அம்பிக்கும் உங்களுக்கு சிண்டு முடிஞ்சாச்சு! என் வழி தனீஈஈஈஈஈஈஈஇ வழீஈஈஈஈஈஈஈஈஈஈ (ரஜினி ஸ்டைலில் படிச்சுக்குங்க)அதெல்லாம், சூரிய சந்திரர்கள் உள்ள அளவும், இந்த நட்சத்திரங்கள் உள்ள அளவும், கடல் அலைகள் உள்ள அளவும், மணல்கள் உள்ள அளவும், மலைகள் உள்ள அளவும், என்னையும் வேதாவையும் சண்டை மூட்டி விடப் பார்க்கிறவங்க அவங்க தான் மாட்டிப்பாங்க. நறநறநறநற .
*************************************************************************************

இப்போ சிகாகோவில் குளிரில் நடுங்கிட்டு இருந்த நாங்க என்ன செஞ்சோம்னு பார்ப்போம். அதான் சிகாகோக் காரங்க எல்லாம் சொல்லிட்டாங்களே, குளிரில் நடுங்கினீங்களான்னு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்......... என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு? :P என் பொண்ணு கிளம்பும் முன்னாலேயே சொன்னா, குளிருக்குப் பாதுகாப்பா ஒரு ஸ்வெட்டரும், ்ஷாலும் கையிலே வச்சுக்குங்க 2 பேரும். அப்போ கோட், உன்னோட கோட் வச்சுக்குங்க. நாங்க 2 பேரும் ரொம்பப் பெருமையா ஹூம், எல்லாம் அந்தக் கைலைக்கே போய்ப் பார்த்தாச்சு. இது என்ன பிரமாதம்? அதுவும் ஏப்ரல் மாதத்தில் அப்படின்னு அலட்சியமா ஒரு கைக்குட்டை கூடக் கையிலே வச்சுக்கலை. அதான் டிஸ்யூ பேப்பர் தராங்களே கை துடைக்க. அதனாலே. தவிர கையிலே எடை அதிகம் வச்சுக்கிட்டா யார் தூக்கிட்டு "லோ லோ"ன்னு ஒரு டெர்மினல்லேஇருந்து இன்னொரு டெர்மினலுக்கு நடக்கிறது?

சிகாகோவை "காற்று நகரம்" என்று சொல்வதுண்டு. நம்ம திருநெல்வேலிப் பக்கம் "முப்பந்தலில்' முன்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கோடைக்கால ப்ளாகர்ஸ் மீட்டிங் வச்சுப்பாங்களாம். கேள்விப் பட்டிருக்கேன். ஏனெனில் அங்கே வரு்ஷம் 365 நாளும் அப்படி ஒரு காற்று. அந்த மாதிரித்தான் இருக்கும்னு நினைச்சா., இது காற்று இல்லை, காத்துனு சிவாஜி "பிராப்தம்" படத்திலே (மிலன் இன்னும் நல்லா இருக்கும்) சொன்னாப்பலே கூட இல்லை. காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆத்து. நடுங்கிட்டே வந்தால் சாமான்கள் எல்லாம் அங்கேயே எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் க்ளியர் பண்ணிக் கொண்டு பின் உள்நாட்டு விமானப் போக்குவரவு நடக்கும் டெர்மினல் போகணும். சாமான்கள் எல்லாமே ரொம்பக் கரெக்டா வந்திருந்தது. எங்களாலே தூக்கி வைக்க முடியலைங்கிறதைத் தவிர. உள்நாட்டுப் பயணத்துக்கே நாங்க தூக்கிற மூட்டை முடிச்சு பத்தி இங்கே அடிக்கடி வந்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஹிஹிஹி, இதிலே ரொம்ப சந்தோ்ஷமான வி்ஷயம் என்னன்னா பங்களூர் போனப்போ அம்பியை மூட்டை தூக்க வச்சது தான். காமிரா பெட்டியிலே இருந்துடுச்சு. இல்லாட்டி ஒரு ஃபோட்டோ எடுத்துப் போட்டிருக்கலாம். அப்புறமா எடுத்தோம், நாங்க போன ஃபங்க்ஷனிலே ஆனால் அம்பி மூட்டை தூக்கினது தானே முக்கியமா இருக்கணும். அதை விட்டுட்டேன். தோணவே இல்லை, இப்போ நினைச்சாக் கூட வருத்தமா இருக்கு. இன்னொரு சான்ஸ் அம்பி கொடுக்காமலா போகப் போறார்? :P (மெயில் கொடுத்து என்னை மிரட்டலா? இது எப்படி இருக்கு?)

ம்ம்ம்ம், என்ன சொல்ல வந்தேன்? ஹாங், மூட்டை தூக்கி உதவ ஒரு ஆபத்பாந்தவன் அங்கே வந்தான். எல்லா மூட்டையையும் மொழி ஜோதிகா மாதிரி அனாயாசமாத் தூக்கி (ஹிஹிஹி, படம் பார்த்துட்டேன், விமரிசனம் தனியா வரும்) வச்சு எங்களைக் கஸ்டம்ஸ் கூட்டிப் போய் அவரே கிளியர் பண்ணி, ஹிஹிஹி, கஸ்டம்ஸ் செக் பண்ணவே விடலை, அந்த ஆசாமி, நேரே போய் அந்த ஆஃபீஸர் கிட்டேச் சொல்லிட்டுக் கூட்டிப் போயிட்டார் எஸ்கலேட்டர் பக்கம். நான் மறுபடி நடுங்கிப் போயிட்டேன். ஹிஹிஹி.அ.வ.சி. இந்த எஸ்கலேட்டருக்கும் நமக்கும் 7-ம் பொருத்தம். எப்போவுமே. அதுவும் ஒரு 2,3 விபத்து வேறே நேரே பார்த்துட்டனா? மனதளவில் ஒரு பயம் இன்னும் இருக்கு. போன முறை ஹூஸ்டனில் "மால்" போனப்போ என் பையன் ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி சொல்லாமல் கொள்ளாமல் படிகள் இருக்கும் பக்கம் போகாமல் வேணும்னே எஸ்கலேட்டரில் திடீரென ஏற்றி விட்டுட்டு அப்புறம் அவனே பயந்துட்டான். ஹிஹிஹி, நான் கத்தியதில். இப்போ இந்த போர்ட்டரிடம் அந்த ரிஸ்க் வேணாம்னு முன்னாலேயே நான் லிஃப்டில் தான் போகணும் இல்லாட்டி படிகள்னு வாக்குறுதி வாங்கிட்டேன், அவரும் அதை மீறாமல், லிஃப்டில் கூட்டிப் போய் மேலே ஏறிப் போனதும் உள்நாட்டு விமானப் பணியாளர்கள் சாமான்கள் வாங்கும் இடம் வந்ததும் அங்கே போய் எங்கள் சாமானின் "டாக் நம்பரைக்" காட்டிச் சாமான்களை ஏற்றி விட்டுப் பின் ரெயிலில் ஏறும் இடம் கூட்டிப் போய் ரெயிலில் ஏற்றி விட்டு இறங்கும் இடமும் தெரிவித்து விட்டு (அங்கே உள்ள மத்தவங்க கிட்டே ஊர் வந்ததும் இறக்கி விடுங்கன்னுதான் சொல்லலை, இதிலே என்னோட கையிலே நான் வச்சிட்டு இருந்த பையையும் அவரே எனக்காகத் தூக்கி வந்தார்) நாங்க கொடுத்த பிச்சைக் காசை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாழ்த்துக் கூறி விடை பெற்றார்.

10 comments:

 1. ஹிஹிஹி, ரொம்பவே சந்தோ்ஷமா இருக்கு, முதல் ஸ்வீட்டும் எனக்குத் தான். நான் "மொக்கை"னு கொடுத்த லேபலை ஏத்துக்காமல் மறுத்துடுச்சு ப்ளாக்கர். இது மொக்கையானு கேட்டு லேபல் கொடுத்தால் "these characters are not allowed" அப்படின்னு சிவப்பு, மஞ்சள் கலரில் விளக்குப் போட்டுப் போட்டு அணைச்சு எடுக்கச் சொல்லிடுச்சு. ப்ளாக்கரே இது மொக்கை இல்லைனு சத்தியம் பண்ணியாச்சு, ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! எல்லா ஸ்வீட்டுமே எனக்குத் தான்.

  ReplyDelete
 2. மேடம், இது வருகை பதிவு மேடம்..

  நீங்களே உங்களுக்கே முதல் கமெண்ட் போட்டுகிட்டு ஸ்வீட் எனக்கேன்னு சொல்றது நல்லா இல்லை.. இதை நகைச்சுவையை வா.வா. சங்கத்துல போட்டா கொஞ்சம் பரிசையாவது அள்ளலாம் மேடம்

  ReplyDelete
 3. Chinna ponnu chinnavanga pechu kaetka vendamo?Chinnavanga sonna padi kaetka mattomna ippdidhaan maatuveenga.:D

  But,oruthar udhavinarae.you are lucky.

  ReplyDelete
 4. //அங்கே உள்ள மத்தவங்க கிட்டே ஊர் வந்ததும் இறக்கி விடுங்கன்னுதான் சொல்லலை, //

  யார் கண்டா.. சொன்னாலும் சொல்லியிருப்பாங்க..

  ReplyDelete
 5. மேடம், பாவம் அம்பி.. அவன் இருக்கிறான் பெங்களூர்ல பாவப்பட்டவன்.. உங்க பதிவுல எதுன்னாலும் அவனை இப்படி போட்டு இழுக்குறீங்க..இப்ப லவ் வேல வேற இருக்கு அவனுக்கு

  என்னடா அம்பி..கேக்கப்படாதா..

  ReplyDelete
 6. ஆக மொத்தம் அமெரிக்காவிலும் பிரைப் கொடுக்க ஆராம்பிச்சிட்டிங்க....

  ReplyDelete
 7. //பங்களூர் போனப்போ அம்பியை மூட்டை தூக்க வச்சது தான்.//

  Child labour casela ungala thedaraanga inga. :)

  //நான் "மொக்கை"னு கொடுத்த லேபலை ஏத்துக்காமல் மறுத்துடுச்சு ப்ளாக்கர்//
  ha haa, verum mokkainu kudunga, spl charecters like mokkai! ithellam kudukka koodathu. Grrrr.

  ungaluku thaan sugar irukke! pesama enakkum kodikum pathi pangu pirichu kuduthrunga. :)

  ReplyDelete
 8. @கார்த்திக், அதெல்லாம் பரிசு வராப்பலே எல்லாம் இல்லை. சும்மா ஏதோ கிறுக்கி இருக்கேன்.
  @எஸ்கேஎம்., ஹிஹிஹி, சின்னப் பொண்ணு தான் சொன்ன பேச்சுக் கேட்காது.
  @கார்த்திக், சொன்னரோன்னு தான் இப்போத் தோணுது.
  @மதுரையம்பதி, அதுக்குப் பேரு "ப்ரைப்" எல்லாம் இல்லை. அவர் வேலையே தூக்க முடியாதவங்களுக்கு மூட்டை தூக்கறதும் அதுக்கு நாமளா கொடுக்கிற கூலியை வாங்கிக்கறதும் தான். ஆதரைஸ்ட் ஏர்போர்ட் போர்ட்டர் அவர். ஆனால் பேரம் எல்லாம் இல்லை. முதலிலேயே சொல்லிடறார். அதுபடியே நடந்துக்கறார். இந்தியாவை நினைச்சுப் பெருமூச்சு விடும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. :(

  ReplyDelete
 9. வேதா, இத்தனை சுத்தி இருக்கேனே, இந்த எஸ்கலேட்டர் மட்டும் என்னமோ ரொம்பவே பயம். அதுவும் ஒரு சின்னக் குழந்தை சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசாவிலும், இன்னொரு குழந்தை யுெஸ்ஸில் இருந்து டெல்லி வந்தப்போ டெல்லி ஏர்போர்ட்டிலும் மாட்டிக் கொண்டு பரிதாபமாய் இறந்ததில் இருந்து இன்னும் பயம். சிலர் கீழே விழுந்து தவிச்சதையும் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
 10. ஆப்பு, நீங்க குழந்தையா? குழந்தைக் கல்யாணம் கேஸிலே உள்ளே தள்ள அரசாங்கம் தயாரா இருக்கு. சிறுவயதுக் கல்யாணம் கூடாது தெரியுமா? இன்னொரு முறை "நான் குழந்தை"ன்னு சொன்னா நேரே அப்துல் கலாமுக்கு மெயில் போகும். பார்த்து! :P

  ReplyDelete