அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.
துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:
"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"
ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.
"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:
குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"
சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளுக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது.
ஆதி சங்கரரே அன்னையர் தினம்னு ஒண்ணை ஆரம்பிச்சிருப்பாரோ? :)))))))
அன்னைக்கு நிகர் எது?
ReplyDeleteகடவுளின் பூவுலகப் பிரதிநிதி.
நம் வாழ்வின் எல்லாமுமாய் ஆனவள்.
அன்னைக்கு தினமுண்டா... தினமும் அன்னை முகத்திலேயே கண்விழிக்கிறேன். (அலைபேசியில் ஸ்க்ரீன் சேவராக அன்னை படம்)
சிறப்பான பகிர்வு... அப்படியே பட்டினத்தார் பற்றியும் சொல்லி இருக்கலாம்...!
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
துறவியாக இருந்தாலும் பிறவியைக் கொடுப்பதற்கு ஒரு ஜனனி வேண்டும், இல்லையா?
ReplyDeleteசங்கர ஜெயந்தியையும் அன்னையர் தினத்தையும் மிகச் சிறப்பாக இணைத்து எழுதியிருக்கிறீர்கள், கீதா!
'மாத்ரு பஞ்சக'த்திலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் வரிகள் மனதை நெகிழ வைக்கின்றன.
இதுவரை அம்மாவின் மேல் பாசம் வைக்காதவர்கள் உங்கள் இந்தப் பதிவு பார்த்து சற்றேனும் மனம் மாறுவார்கள்.
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்!
அம்மா என்பவள் ஆதார சுருதி!
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துகள்..!
இதைப்படிச்சதும் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து கண் கலங்குது,
ReplyDeleteMother's day வாழ்த்துக்கள்.
சங்கர ஜெயந்தியையும் அன்னையர் தினத்தையும் மிகச் சிறப்பாக இணைத்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDelete'மாத்ரு பஞ்சக'த்திலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் வரிகள் மனதை நெகிழ வைக்கின்றன.
அம்மா என்பவள் ஆதார சுருதி!
அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்..!
பகிர்வுக்கு நன்றிகள்.
சங்கர ஜெயந்தியும் அன்னையர் தினமும் சிறப்பு பதிவு அருமை.
ReplyDeleteஅம்மா தான் வாழ்வின் ஆதாரம்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
மிக அருமையான பதிவு. மாத்ரு பஞ்சகத்தைப் படித்துவிட்டால் அன்னையின் மீதான பாசம் அதிகமாகும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
ReplyDeleteமழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. //
ReplyDelete// இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது.//
நூறு சதம் உண்மை.
http://vanavilmanithan.blogspot.in/2012/03/blog-post_23.html
இப்பதிவில் மாத்ரு பஞ்சகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை படித்த பின் இன்று உங்கள் பதிவிலும் வாசித்துக் கண் கலங்குகிறேன்.
வாங்க ஸ்ரீராம், வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
ReplyDeleteடிடி, வருகைக்கு நன்றிப்பா.
ReplyDeleteவாங்க ரஞ்சனி, கருத்துக்கும் ஜி+இல் ஷேர் பண்ணினதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை, பகிர்வுக்கு நன்றி. உங்கள் உணர்வு புரிகிறது.
ReplyDeleteவாங்க வைகோ சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteகோமதி அரசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க நிலாமகள், நீங்க கொடுத்திருக்கும் சுட்டியிலும் போய்ப் படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, அத்தி பூத்தாற்போன்ற உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteநித்ய தரிசனம் உண்டு. பொதுவாக மெளனம். அவ்வப்போது பிரதிவசனம். :) :) :)
ReplyDeleteபொதுவாக அன்னையரைப் பார்த்துத்தான் பழக்கம். அவர்கள் அன்பு கண்டுதான் பழக்கம்.என் அன்னையின் முகம் கூட நினைவில் இல்லை. இருந்தாலும் .....நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘ யாதுமாகி நின்றாய்’ என்று. படித்துப் பாருங்களேன். வேண்டுமானால் சுட்டி தருகிறேன்.
ReplyDeleteதீக்ஷிதரே, அடிக்கடி வரச் சொல்லிக் கொடுத்த பின்னூட்டம் இன்னொரு பதிவுக்குப் போயிருக்கு! :))))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், உங்கள் பதிவின் சுட்டியைக் கொடுங்கள். படிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteநன்றி தீக்ஷிதரே, அடிக்கடி ப்ரசன்ட் சொல்லுங்க, இல்லைனா வருகைப் பதிவேட்டில் தெரியாது. :))))))
ReplyDeleteசிறப்பான பகிர்வு.
ReplyDeleteஅன்னையர்களை போற்றுவோம்.