வலை உலக ரசிகப் பெருமக்கள் அனைவரும் இன்னிக்கு என்னோட பிறந்தநாள்னு 62 அடி கேக் வெட்டி, 62 முறை அலகு குத்திண்டு, 62 தீச்சட்டி எடுத்து, 62 முறை மண் சோறு சாப்பிட்டு, 62 கோயில்களில் அபிஷேஹ ஆராதனைகள் பண்ணுவதாக அறிய வந்தது. இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை.
இன்னும்சில தினங்களில் வரப்போகும் பிறந்த நாளுக்கு மறுபடி இவை எல்லாத்தையும் தொண்டர்கள், குண்டர்கள் எல்லாரும் செய்யறதோடு 62 வகை ரத்தினங்களை, 62 வளையல்களில் பதித்து 62 கிலோ எடை தங்கத்தோடு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மேலும் அன்பளிப்புகளாக விவாஹா, பிரைடல் செவன், வஸ்த்ரகலா போன்றவையும் வரவேற்கப் படுகின்றன. வகைக்கு 62 போதும்.
தலைமைக்கழகத்திலிருந்து வந்த செய்தி!
இன்னும்சில தினங்களில் வரப்போகும் பிறந்த நாளுக்கு மறுபடி இவை எல்லாத்தையும் தொண்டர்கள், குண்டர்கள் எல்லாரும் செய்யறதோடு 62 வகை ரத்தினங்களை, 62 வளையல்களில் பதித்து 62 கிலோ எடை தங்கத்தோடு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மேலும் அன்பளிப்புகளாக விவாஹா, பிரைடல் செவன், வஸ்த்ரகலா போன்றவையும் வரவேற்கப் படுகின்றன. வகைக்கு 62 போதும்.
தலைமைக்கழகத்திலிருந்து வந்த செய்தி!
// 62 வகை ரத்தினங்களை, 62 வளையல்களில் பதித்து 62 கிலோ எடை தங்கத்தோடு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மேலும் அன்பளிப்புகளாக விவாஹா, பிரைடல் செவன், வஸ்த்ரகலா போன்றவையும் வரவேற்கப்படுகின்றன.//
ReplyDeleteகேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)))))
//வகைக்கு 62 போதும்.//
ஏன் இப்படி மிகவும் எளிமையாக ?
வரப்போகும் பிறந்தநாளுக்கு 62 நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஹா ஹா ஹா - அட்வான்ஸ் வாழ்த்துகள். அறுபத்திரண்டு தடவை!
ReplyDeleteஹிஹிஹி, வைகோ சார், எளிமையாக இருக்கறதே ஆச்சரியமா இருக்கில்லை?? போகட்டும் அடுத்த பிறந்த நாளுக்கு இப்போ ஒரு காஸ்ட்லி புடைவை, "ஆடி" காரை விடவும் விலை ஜாஸ்தியாம், அதை வாங்கிக் கொடுக்கச் சொன்னாப் போச்சு!
ReplyDeleteஎன்ன சொல்றீங்க??
வைகோ சார்,
ReplyDeleteகெளதமன் சார்,
வாழ்த்துகளுக்கு நன்றி.
அட்வான்ஸ் வாழ்த்துகள். (ஹிஹிஹி...62 முறை படித்துக் கொள்ளவும்!)
ReplyDeleteஹா... ஹா... வாழ்த்துக்கள்...
ReplyDelete
ReplyDelete62 வெல்ல கொழுக்கட்டைகள். 62 லட்டுகள், 62 புளியோதரை பொட்டலங்கள், 62 சக்கரை பொங்கல்
பொட்டலங்கள், 62 வெண்பொங்கள் பொட்டலங்கள்.
வெல்ல கொழுக்கட்டைக்கு ஸ்பெஷலா
பூரணம் தேங்காய், உளுத்தம்பருப்பு இத்யாதி மட்டுமல்ல, நெய்யோடு, ஏலக்காய், இத்யாதியோட
பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, திராட்சை இத்யாதியும் போட்டு
தயார் பண்ணப்போறதா டி.வி.லே ந்யூஸ் வரது.
எனக்கு ஒண்ணே ஒண்ணு அனுப்பவும்.
இல்ல, நானே ஃப்ளைட் புடிச்சு ஸ்ரீரங்கம் வரட்டுமா?
சுப்பு தாத்தா.
\
ஹாப்பி பர்த் டே.
பெண்கள் தங்கள் வயதை சொல்லமாட்டார்களாம். உங்கள் வழி தனி வழி. சொல்லாமலேயே சொல்கிறீர்கள். என்று வருகிறதொ அன்றைக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கீதா.அது எப்ப வேண்டுமானாலும் இருக்கட்டும்:)
ReplyDelete62 வஸ்த்ரகலா, எக்ஸட்ராகளில் 10 சென்னைப்பக்கம் அனுப்பிடுங்கோ கர்ட்டனா போடலாம்னு இருக்கேன்!!
23 ஆம் தேதியா. அடிசக்கை அன்னிக்குத்தான் நிருசிம்ஹஜயந்தி. மத்த பண்டிகைகளும் வருகிறது.
அட்வான்ஸா வாழ்த்துகள் மீண்டும் கீதா. ஆரோக்கியத்தோட மனமகிழ்வோட ,திரு சாம்பு சாரோடு இன்னும் சகலசௌபாக்கியங்களோடு இருக்க வாழ்த்துகள்.
வரப்போகும் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நானும் சொல்லிகிறேன் அக்கா
ReplyDelete26ங்கிறதை அவசரத்துல மாத்திட்டீங்களோ? 29 இருக்கலாம்.. நீங்க வேறே.. முப்பத்து நாலைத் தாண்டாது.. சரி.. முப்பதெட்டு.. நோ, நோ நாப்பத்து மூணுக்கு மேலே சான்சே இல்லைங்கறேன்.. நாப்பத்தெட்டா? அதை எல்லாம் நம்பறவா கிட்டே சொல்லணும்.. மிஞ்சி மிஞ்சி போனா அம்பத்து மூணு.. அம்பத்து அஞ்சு.. அட யாருக்கும் வேணாம், அம்பத்தெட்டு வச்சுக்கலாம்.. இந்த அறுபதெல்லாம் இஷ்டத்துக்கு சொல்லணும்னு சொல்றது.. என்ன ஆனாலும் சரி.. அறுபத்து ரெண்டுக்கு ஒரு நாள் கூட அதிகமா ஒத்துக்கவே முடியாது.. சொல்லிப்டேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வணக்கங்கள் வணக்கங்கள் வணக்கங்கள்.
பிறந்த நாளன்னிக்கு 26 மணி நேரம் கரண்டு வரட்டும்.
Sabyasachi, Elie Saab னானாமா ?? :))Just for a change?!!
ReplyDeleteதோடு ஓட்யாண ம் நாகொத்து ஜடைபில்லை எல்லாம்
Gassan ல ஆர்டர் பண்ணி அடுத்தவாரம் போய் வாங்கிண்டு வரேன்:)) அதை ஏன் விடறது
Ha HA!
Many returns of the day. May GOD bless!
62 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கமான தமிழ் தலைவிக்கு இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteமேலும் மேலும் பல பிறந்தாட்களை இதேபோல எளிமையுடன் கொண்டாட வாழ்த்துகள்!
ஹிஹிஹி, வைகோ சார், எளிமையாக இருக்கறதே ஆச்சரியமா இருக்கில்லை?? போகட்டும் அடுத்த பிறந்த நாளுக்கு இப்போ ஒரு காஸ்ட்லி புடைவை, "ஆடி" காரை விடவும் விலை ஜாஸ்தியாம், அதை வாங்கிக் கொடுக்கச் சொன்னாப் போச்சு!
ReplyDeleteஎன்ன சொல்றீங்க??
என்ன ஓர் எளிமையான மனம் ........!!!!!!! :))))))) முற்கூட்டியே என்
இனிய வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு :)
அரிய பொக்கிஷமே இருக்கும் போல! புத்தகம் எத்தனை பக்கங்கள்?? விலை ரொம்பக் கம்மியா இருக்கே, முடிஞ்சால் ஸ்கான் பண்ணித் தர இயலுமா? எங்கள் மின் தமிழ்க் குழுமத்தின் மின்னூல் பக்கத்தில் உங்கள் பெயரோடு புத்தகத்தின் ஸ்கான் செய்த பக்கங்களைச் சேர்த்து மின்னூலாக்கி இணைக்கலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே! இல்லை எனில் இந்தப்பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம். புத்தகம் உங்களிடமே இருக்கும். அதன் ஸ்கான் செய்த பக்கங்கள் மட்டுமே மின்னூலாக்கப்பட்டு உங்கள் பெயரோடு இணைக்கப் படும். நன்றி. :))))))
ReplyDeleteஅரிய பொக்கிஷ்ம் தான். புத்தக பக்கங்கள் 568. எங்களீடம் ஸ்கான் வசதி இல்லை, வெளியில் தான் செய்ய வேண்டும். சந்தர்ப்பம் அமையும் போது ஸ்கான் செய்து தருகிறோம்.
தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
ஸ்ரீராம், 62,000 முறை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரப் போறேன். :)))) சோம்பலுக்கு வாழைப்பழம் தோலோடுனு என்னோட அம்மா சொல்லுவா, அது சரியா இருக்கு! :)))))
ReplyDeleteவாங்க டிடி, நன்றிப்பா.
ReplyDeleteசூரி சார், 62 பொட்டலங்களெல்லாம் எப்படிப் பத்தும்?? போதவே போதாது! வலை உலகில் எத்தனை லக்ஷம் மக்கள் என்னோட ரசிகர்கள், தொண்டர்கள், குண்டர்கள்! கணக்கே இல்லை. குறைந்தது 62 படியோ 62 கிலோவோ அரிசி, பருப்பு(ஒண்ணொண்ணும்) வாங்கிச் செய்ய வேண்டாமா?
ReplyDeleteஅப்புறமா 62 அடி உயர கட் அவுட்?? அது வேண்டாமா? 62 வகை டிஜிடல் பானர்~! அதை மறந்துட்டோமே!:))))62000 அலங்கார வளைவுகள் ஒரு மாவட்டத்து 62னு வேணா வைச்சுப்போம்.
நீங்க எப்போ வேணா ஸ்ரீரங்கம் வாங்க, திருச்சிக்குத் தான் ஃப்ளைட் வரும். ஸ்ரீரங்கம்னா ஹெலிகாப்டர் தான்! :)))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், வயசை மறைச்சு என்ன ஆகப் போறது?? :)))) எப்படியும் என்னைப் பார்க்கிறவங்களுக்கு ஓரளவு தெரிஞ்சுடுமே! :)))))
ReplyDeleteவாங்க வல்லி, ஆஹா வஸ்த்ரகலா கர்ட்டனா?? பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு! :))))
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி. கை வலிக்குதுனு சொல்லிட்டு இருக்கீங்க. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்குங்க. :(
வாங்க கோமதி அரசு, வாழ்த்துகளுக்கு நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை, உங்க வாழ்த்தின் கடைசி வரி நிஜம்மாவே மனசைக் குளிர வைச்சது. இப்போதைய தேவை மின்சாரம் தானே!:))
ReplyDeleteஹிஹிஹி, போன வருஷம் 16 வயசு, அதுக்கு முந்தி 6 வயசு, இந்த வருஷம் 26 அடுத்த வருஷம் 36 இப்படி வைச்சுக்கலாமே! வருஷங்கள் ஆக, ஆக குழந்தை தானே! :))))
வாழ்த்துகளுக்கு நன்றி.
ஜெயஶ்ரீ, அனுப்பி வைங்க, போட்டுக்கலாம். வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.
ReplyDeleteவாங்க ரஞ்சனி, வாழ்த்துகளுக்கு நன்றி. ரொம்பவே எளிமையா இருக்கோ? :)))))) இன்னும் என்ன சேர்த்துக்கலாம்னு ஒரு ஐடியா கொடுங்க. :))))
ReplyDeleteவாங்க அம்பாளடியாள், வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
ReplyDeleteபின்னே தலைவின்னா எளிமை இருக்க வேண்டாமா? அதுவும் இது போன்ற எளிமை! :))))))
கோமதி அரசு, தகவல்களுக்கு நன்றி. எங்கள் மின் தமிழ்க் குழுமத்தின் உறுப்பினர்கள் சிலரால் மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் உள்ள சுட்டியை அளிக்கிறேன். ஒரு பார்வை பார்த்து வையுங்கள்.
ReplyDeletehttp://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html
ReplyDeleteமேற்கண்ட பக்கத்தில் புத்தகங்கள் இணைக்கப்பட்டு அனைவரும் வாசிக்கலாம்.
மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் உள்ள சுட்டியைப் பார்த்தேன்.
ReplyDeleteமிகவும் நல்ல காரியம். வாழ்த்துக்கள்.
உங்கள் மின் தமிழ்க் குழுமத்தினருக்கும் வாழ்த்துக்கள்.
ஹா...ஹா... அனுப்பிவிட்டால் சரிதானே.
ReplyDeleteவாழ்த்துகள்.
அட்வான்ஸா என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDelete:))