அப்புவுக்கு மே 2 ஆம் தேதி பிறந்த நாள். அன்னிக்கு ஸ்கூல் இருந்ததாலே அவங்க அம்மா, அப்பா, நாலாம் தேதியன்னிக்குப் பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க. :)) யு.எஸ்ஸிலே இதான் வழக்கம். தீபாவளியோ, பொங்கலோ, கார்த்திகையோ வார நாட்களில் வந்தாக் கூட சனி, ஞாயிறு தான் கொண்டாடுவாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்பு பிறந்த நாளன்னிக்கு ஸ்கூல் போயிருக்கு அதனால் மறுநாள் தான் வாழ்த்துச் சொன்னோம். அப்போவே எங்களிடம் நாளைக்கு பார்ட்டி, நீங்க ரெண்டு பேரும் வாங்கனு கூப்பிட்டது. ம்ம்ம்ம்ம்ம் எங்கே! அப்போத் தான் அவ அம்மா, ஏற்கெனவே ஒரு கடிதம் முன் கூட்டியே எழுதி அனுப்பி இருக்கிறதாச் சொன்னாள். அப்பு வார்த்தைகளாகக் கோர்வையாக எழுத ஆரம்பிச்சிருக்கிறதாவும் சொன்னாள். இது அப்பு கிட்டே இருந்து எழுத்தில் வந்த முதல் கடிதம். இன்னும் கணினி கிட்டே எல்லாம் விடலை. விட்டால் மெயிலும் அனுப்ப ஆரம்பிச்சுடும். :))))
இது ஒரு பொக்கிஷம்! :)))))
இது ஒரு பொக்கிஷம்! :)))))
:-)))
ReplyDeleteபி.நா.வா!
Yes, Appu's Birthday on May 2nd. :))))
ReplyDelete
ReplyDeleteஅப்புவுக்கு வயதென்னவென்று சொல்லவில்லையே. இக்காலத்தில் குழந்தைகள் அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள். குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பெற்றோரைப் பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தரும். நம் குழந்தைகளின் செய்கைகளை நாம் மகிழ்ந்து விவரிக்கும்போது எதிரிலிருப்பவர் அவர்கள் வீட்டுக் குழந்தைகளின் பிரதாபங்களை சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.அவர்கள் குழந்தைகளும் மேலானவர்கள், புத்திசாலிகள். ஒப்புக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் செயல்களைத் திரட்டினால் அதில் ஒரு பெரிய பதிவுக்கு விஷயங்கள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் சமர்த்துகள் தான்.
பேரனின் கடிதம் பாட்டி தாத்தாவிற்கு பொக்கிஷம் தான்.
ReplyDeleteகுழந்தைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்.
நிச்சயம் பொக்கிஷம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பி நா வா ஆச்சர்யக்குறிதானே? அப்போ வாழ்த்துக்கள்தானே? கேள்விக்குறி இருந்தால்தானே எஸ் என்று பதில் சொல்ல வேண்டும்? ஹிஹி....
ReplyDeleteநானும் பி.நா.வா சொல்லிக்கறேன்.
கண்டிப்பா அந்த லெட்டர் பொக்கிஷம்தான்.
பொக்கிஷம்! :)))))
ReplyDeleteஅப்புவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!
பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
ReplyDeleteமிகப்பெரிய பொக்கிஷமே தான்.
ReplyDelete//
""அப்"பு டேட்ஸ்! புத்தம்புதியது!"//
தலைப்பு அருமை. டேட்ஸ் ஃப்ரூட் போல இனிமை. புதுமை. ;)))))
அப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!
அச்சு அசல் குழந்தையின் கடிதம் லக்ஷணம்.
ReplyDeleteஸ்விஸ் பேத்தியும் இமெயில் போடுகிறது. மிஸ் யூ பாட்டி தாத்தா.
எப்போ வரே?இப்படிதான் கடிதம் இருக்கும். அப்பு குட்டி லெட்டர்வந்தது மிகவும் சந்தோஷம்.என்ன அழகா எழுத்துகளை வளைத்து எழுதி இருக்கு.
பாட்டி மாதிரி பெரிய எழுத்தாளினியா வரப் போகிறது. குழந்தைக்கு ஆசிகள் கீதா.
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... சொல்லிடுங்க... நன்றி...
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், அப்புவுக்கு 5 வயது முடிந்து விட்டது. இந்தக் காலக் குழந்தைகளே சமத்துத் தான். :))))
ReplyDeleteகோமதி அரசு, உங்கள் வாக்குப்படியே பேரனும் பிறக்கட்டும். நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை, நன்றி.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நன்றி.
ReplyDeleteராஜராஜேஸ்வரிக்கு நன்றி.
ReplyDeleteரா.ல. நன்றி.
ReplyDeleteவைகோ சார், ரொம்ப நன்றி.
ReplyDeleteவாங்க வல்லி, உங்க ஆசிகளுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க டிடி, கட்டாயமாச் சொல்றேன்.
ReplyDeleteநான் சொன்னது சரிதானே.பார்க்க வல்லிசிம்ஹன் கருத்து.
ReplyDeleteஅப்புவின் கடிதம் கண்டு மகிழ்ந்தோம்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.