எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 26, 2013

உன்னை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தேன்!

ஹிஹிஹி, என்ன நினைச்சீங்க?? குலாப்ஜாமூனை முதன்முதலாகப் பார்த்தப்போ என்ன நினைச்சேனு சொல்லப் போறேன்.

ஹோட்டல்னு சொன்னதும் பல நினைவுகள்.  ஹோட்டலுக்கே போகாத எங்கள் குடும்பத்திலே திடீர்னு ஒரு ஜனவரி ஒண்ணாம் தேதி அப்பா எங்களை எல்லாம் ஹோட்டலுக்குக் கூட்டிப் போய் ஸ்வீட், காரம் வாங்கித் தரப் போவதாய்ச் சொன்னார்.  உடனே எனக்குள்ளே பல நினைவுகள், பல கனவுகள்.  ஹோட்டல்கள் வழியாய்ப் போகும்போதும் வரும்போதும் அங்கே உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள ஸ்வீட் வகையறாக்களைப் பார்த்துப் பெருமூச்சு, சிறுமூச்சு விட்டது உண்டு. இப்போ ஹோட்டலுக்கே போறோம்னதும் தலைகால் புரியலை.  வடுகக் காவல் கூடத் தெருவில் இருந்தோம் அப்போ.  அங்கிருந்து ஒரே ஓட்டமாய் மேலாவணி மூல வீதி பெரியப்பா வீடுக்கு ஓட்டமாய் ஓடி, அங்கே அறிவிப்புச் செய்தேன்.  ஏதோ பெரிய விஷயமே நடந்துட்டதாய், உலகமே தலைகீழாய் மாறி விட்டதாய் எனக்குள் நினைப்பு.  ஆனால் அங்கே எல்லாரும் சாதாரணமாய் எடுத்துக்கக் கொஞ்சம் ஏமாற்றம்னே சொல்லணும்.

அங்கிருந்து அதே தெருவின் பிள்ளையார் கோயில் வாசலில் தங்கள் நண்பர் குழாமுடன் (இவங்க நண்பர்கள் அனைவருமே இந்தப்பெயரில் தான் பழகினார்கள்) இருக்கும் மாமாக்களிடம் போய்ச் சொன்னேன்.  அவங்களும் சிரிச்சாங்க. சே, எவ்வளவு பெரிய விஷயம்,  யாருக்குமே இதன் அருமை புரியலை.  நாளைக்கு ஸ்கூலில் போய்ச் சொல்லணும்.  மனசுக்குள்ளே நினைச்சுக் கொண்டே வீடு திரும்பினேன்.  அன்னிக்குச் சாயந்திரமா ஹோட்டலுக்குக் கிளம்பினோம்.  ஒரே படபடப்பு, திகில் கலந்த எதிர்பார்ப்பு.  என்ன ஆர்டர் கொடுப்பது என எங்களுக்குள்ளாக ஒரு கலந்தாலோசனை.  வேறே உடை மாத்திக்கணும்னு எனக்கு ஆசை.  இதே பாவாடையோடயா போறது? ஆனால் அப்பா முழித்த முழியில் ஹோட்டல் ப்ரொகிராமே கான்சல் ஆகிவிடும் சாத்தியக் கூறு தென்பட்டதால் அடக்கிக் கொண்டு கிளம்பினேன்.

அப்பா முன்னே செல்ல பின்னால் நாங்கள் மூவரும் ஏதோ பெரிய முக்கியமான இடத்துக்கு அவார்ட் வாங்கச் செல்லும் மனோபாவத்துடன் தெருவில் இருந்த நண்பர்களை அலட்சியமாய்ப் பார்த்தபடி சென்றோம்.  தெருத் திரும்பி அப்பா அழைத்துச் சென்றது மேல மாசி வீதி மாடர்ன் லாட்ஜோ, அப்போ புதுசா மேல கோபுர வாசலில் வந்திருக்கும் வட நாட்டு இனிப்பு வகைகள் உள்ள புத்தம்புதுக்கடையான டெல்லிவாலாவோ  இல்லை.  வடக்காவணி மூல வீதியில் வழக்கமாய் சாம்பார் வாங்கும் சுமுஹ விலாஸ் ஹோட்டலுக்குத் தான் கூட்டிப் போனார். சொப்புனு உற்சாகம் குறைய அசடு வழிய உட்கார்ந்தோம்.  அங்கே என்ன இருக்கும்!  வழக்கமான பஜ்ஜி, சொஜ்ஜி தான்.  என்ன ஆனாலும் அதைச் சாப்பிடக் கூடாது.  சுற்றும் முற்றும் பார்த்த என் கண்களில் ஜீராவில் மிதக்கும் குலாப்ஜாமுன்கள் கண்களில் பட, (அதன் பெயரே அப்போத் தெரியாது.) எனக்கு அதான் வேண்டும்னு சொல்ல, அப்பாவுக்கு திக்.  அதெல்லாம் உனக்குச் சாப்பிடத் தெரியாது.  எதிலே பண்ணி இருக்காங்களோ!

22 comments:

  1. oru thotarum pootakkuutaathaa? :P:P

    ReplyDelete
  2. முடிவில் வாங்கித் தந்தாரா... இல்லையா...?

    ReplyDelete
  3. //உன்னை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தேன்!//

    அழகான தலைப்பு. ருசியான பதிவு. அருமையான நினைவலைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வா.தி. குலாப் ஜாமூன் சாப்பிட முதல் ஆளா வந்துட்டீங்க?? :)))) ஹிஹிஹி, பதிவை பப்ளிஷ் பண்ணவே இல்லை. பப்ளிஷ் ஆயிடுச்சு. மறுபடி மறுபடி சேமிக்கப் பார்த்தாப் பிடிவாதம்பிடிச்சுட்டு இருந்தது. சரினு + லே ஷேர் பண்ணிட்டுப் போயிட்டேன். :)))) மிச்சம் நாளைக்கு! :)))))

    ReplyDelete
  5. வாங்க டிடி, நாளைக்கு!:)))

    ReplyDelete
  6. வாங்க வைகோ சார், ரசனைக்கு நன்றி. செய்யவும் சாப்பிடவும் மிகவும் எளிதான தின்பண்டம் குலாப் ஜாமூன்! :)))))

    ReplyDelete
  7. இப்போதெல்லாம் பேரன் பேத்தியுடன் ஹோட்டலுக்குப் போனால் மெனு கார்டை வாங்கிப் பார்த்து அவர்கள் ஆர்டர் செய்யும் விதமே அலாதி. எப்படி இருந்தோம் நாம். எப்படி இருக்கிறார்கள் அவர்கள். ஹூம் ( இது பெருமூச்சு,)

    ReplyDelete
  8. முடி திருத்த சலூனுக்கு சித்தப்பா என்னை அழைத்து சென்றதே, பெரிய அவுட்டிங்க். முதலாளி தங்கவேலுவே எம் சிரசில் கத்திரியை கையாண்ட அனுபவம் புதிசு.அந்த எக்சைட்மெண்ட் முடிவதற்குள் பாமா ஹோட்டல் விஜயம்.சின்னப்பசங்கக் கிட்ட 'என்ன வேணும்' என்ற கேட்கலாமோ? கேட்டார்கள். என் சுண்டுவிரல் குலாப் ஜாமூனை சிட்டியது. சித்தப்பா வீட்டுக்கு வந்து பட்ஜெட் எல்லை தாண்டியதற்கு ஈட்டாக பணம் கொணர்ந்த்தார்.

    ReplyDelete
  9. "உன்னை முதல்முதலாக....ரசனை.

    ReplyDelete
  10. நல்ல அனுபவம்தான். அவசரப்பட்டு ஆட்டோ பப்ளிஷ் ஆகி விட்டது போல...:)))) நாங்கள் இது போலச் சென்ற கேண்டீனில் ஒரு கண்ணாடி டம்ப்ளரில் பால் ஆடை போல ஒன்று வைத்திருந்தார்கள். பாசந்தியாய் இருந்திருக்கலாம்! எவ்வளவு கேட்டும் வாங்கித் தர மாட்டேனுட்டார்!

    ReplyDelete
  11. இறுதியில் இனிப்பு என்னாச்சு!ஹீ

    ReplyDelete
  12. "குலோப்ஜாமூன் பாக்கறுதுக்குத் தான் அப்படிக் கண்றாவியாருக்கும், சாப்பிடு" என்று கட்டாயபடுத்திய என் மாமா நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
  13. வாங்க ஜிஎம்பி சார், இப்போதைய குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகள் தேவை. :))))பாரம்பரிய உணவுகள் பிடிக்கிறதில்லை.

    ReplyDelete
  14. வாங்க "இ"சார், உங்கள் வரவினால் மகிழ்ந்தேன். என் சிறு வயதுக் காலங்களில் குலாப்ஜாமுன் என்பது அரிது என நினைக்கையில் நீங்கள் பார்த்ததோடல்லாமல் சாப்பிட்டிருப்பதும் ஆச்சரியம் தான். குலாப்ஜாமூன் எப்போத் தமிழ்நாட்டுக்கு வந்ததுனு ஒரு ஆய்வு நடத்தணும். :)))))

    ReplyDelete
  15. வாங்க மாதேவி, தலைப்புத் தானே நேயர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது! :))))

    ReplyDelete
  16. வாங்க ஸ்ரீராம், ஆமாம், பாதி தான் காப்பி, பேஸ்ட் பண்ணி இருந்தேன். அதுக்குள்ளே அவசரம்! :)))) பாசந்தியாத் தான் இருக்கும். :))))

    ReplyDelete
  17. வாங்க தனிமரம், இன்னிக்குப் பாருங்க. :))))

    ReplyDelete
  18. வாங்க அப்பாதுரை, முதல்லே உங்க மாமாவுக்கு ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநறநற, எனக்குப் பிடிச்ச ஸ்வீட்டைப் போய் இப்படியா சொல்றது!! ஆனால் தமிழ்நாட்டுச் செய்முறை கொஞ்சம் சுமார் தான். இதே ஜாமூனை வடமாநிலங்களில் சாப்பிடுங்க, விடவே மாட்டீங்க. அதுவும் ஸ்டஃப் பண்ணின ஜாமூன்!! ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் தான்! :)))))

    ReplyDelete
  19. நான் கூட என்னமோ நம்மள பத்தி தான் எழுதி இருக்காங்களோனு... ஹ்ம்ம்...:). ஒகே ஒகே... ஸ்பெஷல் போஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன், விரைவில் ரிலீஸ் செய்யப்படும்

    ReplyDelete
  20. ஏடிஎம், நீங்க எழுதறதுக்குத் தானே காத்துட்டு இருக்கேன். :)))) பக்கோடா பத்திக் கட்டாயமா எழுதப் போறீங்கனு நம்ம ரங்க்ஸ் ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கார். :)))))

    ReplyDelete
  21. எனக்கென்னவோ குஜா இப்பவும் பாக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட வேண்டிய ஐட்டம்.

    ReplyDelete
  22. அப்பாதுரை, ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே "க்" ஐ முழுங்கிட்டேன். என்னோட அருமையான குலாப் ஜாமூனை இப்படியா மட்டம் தட்டறது?? வைச்சுக்கறேன். நீங்க இந்தியா வரச்சே வெறும் குலாப் ஜாமூன் மட்டும் தான்! வேறே ஒண்ணும் கண்ணிலே காட்டப் போறதில்லை. :)))))

    ReplyDelete