திருமணத் தேதி குறிக்கப்பட்டுப் பத்திரிகைகள் அடிக்கக் கொடுக்கிறோம். அதிலே குறைந்தது இரண்டு தலைமுறையைக் குறிப்பிட்டால் தான் நாம் அனுப்புபவர்களுக்கு யாரிடமிருந்து பத்திரிகை வந்திருக்கிறது என்பது புரியும். பிள்ளைக்குக் கல்யாணம் எனில் பிள்ளையின் தந்தை, மற்றும் தாத்தா பெயரும் பூர்வீக ஊரும் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் பிள்ளையின் தாய்வழித் தாத்தா பெயரையும் குறிப்பிடுவார்கள். அதிலும் தவறு இல்லை. ஏனெனில் பிள்ளையின் அம்மா வழி உறவினர்களுக்கு எளிதில் புரியும். அதே போல் பெண்ணுக்கும் தந்தைபெயர் மற்றும் தாத்தாக்கள் இருவரின் பெயர், அவர்களின் பூர்விகம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கூடிய வரையில் பத்திரிகை எளிமையாக இருந்தால் நல்லது. சிவப்பு, மஞ்சள் கலந்த வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிட்டாலே போதுமானது. அதிலேயே ஆங்கிலத்திலும் அச்சிட வசதி இருக்கிறது.
சிலநாட்கள் முன்னர் ஒரு அரங்கேற்றத்துக்குப் பத்திரிகை வந்தது. குறைந்த பக்ஷமாக அந்தப் பத்திரிகையின் விலை ஐநூறு ரூபாயாக இருக்கணும். அவ்வளவு விலை உயர்ந்த பத்திரிகை. இதில் எல்லாம் காசைப் போடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. பத்திரிகை மங்களகரமாக இருந்தால் போதுமே! அதுக்காகப் பெயர், விலாசம், கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வரும் வழி போன்றவை கூட அடிக்க முடியாத அளவுக்கு மோசமாவும் இருக்க வேண்டாம். அப்படியே தூக்கிப் போடணும் அவற்றை. :( அதுக்கப்புறமா "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" நபர்களின் பெயர்கள். இது தேவையே இல்லை. பெண் வீட்டுக்கார முக்கியஸ்தர்களும், பிள்ளை வீட்டின் முக்கியஸ்தர்களும் அனைத்து உறவினரின் நல்வரவைக் கட்டாயம் எதிர்ப்பார்க்கத் தான் செய்வார்கள்; செய்கிறார்கள். இதிலே பெயர் போடவில்லை எனில் ஒவ்வொரு குடும்பத்தில் சண்டையே வருகிறது. ஆகவே நல்வரவை எதிர்பார்க்கும், நண்பர்களும் உறவினர்களும் என்று பொதுவாகப் போட்டுடலாம். வம்பே இல்லை. ஒண்ணுமே போடலைனால் இன்னும் நல்லது. அடுத்து மறுபடியும் ஜவுளியைப் பார்க்கலாம். அவ்வளவு சீக்கிரம் இது முடியாது.
பெண்ணிற்குக் கூறைப்புடைவை பொதுவாகப் பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு. ஆனால் பெரும்பாலான பிள்ளை வீட்டினர் அதை ஒத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்குப் புடைவை எடுப்பது என்பது ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும். ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும். மற்றப் புடைவைகள் நிச்சயதார்த்தம், கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை, கிரஹப்ரவேசப் புடைவை போன்ற நான்கு புடைவைகளும் பிள்ளை வீட்டிலேயே எடுப்பார்கள். ஏனெனில் பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்கு வரப் போகிறாள். வீட்டுக்கு அழைக்கும் பெண்ணைப் புதுப்புடைவையோடு மங்கலப் பொருட்களைக் கொடுத்துத் தான் அழைப்பார்கள். அதோடு கூறைப் புடைவை மிகவும் முக்கியம். அதை முஹூர்த்தத்தின் போது பிள்ளைதான் பெண்ணிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டு வரச் சொல்லுவார். இது குறித்துப் பின்னாலும் வரும். அந்தப் புடைவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குப் பிள்ளை எடுத்துக் கொடுப்பதாகவே ஐதீகம். ஆகவே தான் பிள்ளை கையால் கொடுக்கச் சொல்லுவார்கள். அப்போது சொல்லப் படும் மந்திரங்களும் இதையே அறிவுறுத்தும். ஆனால் இன்றைய நாட்களில் அதையும் பெண் வீட்டினரே எடுக்கின்றனர்.
அடுத்து விளையாடல் எனப்படும் நலுங்குப்புடைவை. இதை நாத்தனார் தான் செய்ய வேண்டும் என்பார்கள். நலுங்கு என்பது பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கூச்சம் விலகிப் பழகிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு. இதைப் பெண்ணின் நாத்தனார் தான் ஏற்பாடு செய்வதாக ஐதீகம். ஆகவே நலுங்குக்கான சாமான்களும், விளையாட்டுப் பொருட்களும், நலுங்குக்கான புடைவையும் அவள் தான் வாங்குவாள். தன் சகோதரன் அவன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்குத் தான் போடும் இந்த அச்சாரம் நன்மையாக இருத்தல் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் தன் சகோதரன் மனைவிக்குப் புடைவை, வளையல், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மங்கலப் பொருட்கள் என வாங்கித் தருவாள். இதன் மூலம் அவளுக்கு சகோதரன் மனைவியிடம் நெருக்கம் அதிகரிக்கும். கல்யாணப் பெண்ணுக்கும் நாத்தனாரிடம் அன்பு ஏற்படும். கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்கும் இப்படி இரு;குடும்ப உறவுகளையும் ஒன்றுக்கொன்று பிணைப்பதாகவே இருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் புடைவைகளையும் பெண் வீட்டிலேயே எடுக்கின்றனர். இதனால் அவர்களுக்குச் சுமை கூடத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படித்தான் நடக்கிறது. கூறைப் புடைவையைக் கூடப் பிள்ளை வீட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர்ப் பக்கம் கிரஹப்ரவேசப் புடைவையும் கூடப் பெண் வீட்டிலே தான் பெண்ணுக்கு எடுக்க வேண்டும். ஆனால் சாஸ்திரப் படி பிரமசாரியானவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்ததுமே தன் திருமணத்திற்கான செலவை தானமாகத் தான் பெற வேண்டும். முன் காலங்களில் அரசர்களிடமோ அல்லது அரசரின் பிரதிநிதிகளிடமோ பெற்று வந்தனர். இதிலிருந்து பிள்ளை வீட்டினருக்கே திருமணச் செலவு என்பது புரிய வரும். இந்தக் காலங்களில் அது இயலாது என்பதால் முடிந்தவரை விவாகச் செலவைப் பிள்ளை வீட்டினரும் பகிர்ந்து கொள்ளலாம்.
இருங்க, இருங்க, இன்னும் துணிமணி எடுத்து முடியலை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எடுப்பதோடு முடியற விஷயமா இந்த ஜவுளி எடுப்பது!!!! அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே! இதான் ரொம்பவே கஷ்டமான விஷயம். பெண் வீட்டில் பெண்ணைத் தவிர பெண்ணின் அம்மா, அத்தை, அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் மனைவியர், அம்மாவின் கூடப் பிறந்தவர்கள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். அதே போல் பையர் வீட்டிலும் இருக்கும். ஆக இந்த ஜவுளி விஷயத்தில் மட்டும் யாருமே தப்பிக்க முடியாது. முன்னாலெல்லாம் இப்படி இல்லைனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். முக்கியமாய்ப் பெண்ணின் அத்தை, பிள்ளையின் அத்தை, பெண்ணின் மாமி, பிள்ளையின் மாமி ஆகியோருக்கு மட்டுமே எடுப்பார்களாம். அதுவும் இரண்டு மூன்று அத்தைமார், மாமிமார் இருந்துவிட்டால் பணமாக ஓதிக் கொடுப்பார்களாம். பெண்ணுக்கு அத்தை அப்பக்கூடை வைப்பது என்றொரு வழக்கம் உண்டு. அது பெண்ணின் அத்தை செய்வதால் அவங்களுக்கு பதில் மரியாதையாகப் பிள்ளை வீட்டார் ஏதோ பணம் கொடுத்து வந்தது போய் இன்றைய தினம் பட்டுப்புடைவையில் வந்து நிற்கிறது. அதே போல் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் மாமா வீட்டு ஆசீர்வாதப் பணம் தான் முதலில் தருவாங்க. அப்போ மாமாக்களுக்கும், பதில் மரியாதை உண்டு. அது இன்று மாமாவுக்கும், மாமிக்கும் துணி எடுப்பதாக ஆகி விட்டிருக்கிறது.
அதைத் தவிரவும் தெரிந்தவர்கள், முக்கிய உறவினர்கள் என ஒரு சூட்கேஸ் நிறைய வேட்டி, புடைவைகளை வாங்கி வைத்துக் கொண்டு விநியோகம் செய்வதும் உண்டு. இது கொடுத்தாலும் கஷ்டம்; கொடுக்கலைனாலும் கஷ்டம். பெரும்பாலும் நாம் கொடுப்பது வாங்கிக்கிறவங்களுக்குப் பிடிக்காது. வேறே வழியே இல்லாமல் வாங்கிப்பாங்க. நமக்கோ பெரிய செலவு செய்துட்டோமேனு இருக்கும். ஆக இப்படி இருபக்கமும் மனம் வருத்தம் அடைவதைத் தவிர்க்கலாம். கட்டாயமாய் மரியாதை செய்ய வேண்டியவங்களுக்குப் பணமாகக் கொடுத்துடலாம். என்ன வேணுமோ அதை வாங்கிப்பாங்க. நமக்கும் கல்யாணச் சத்திரத்துக்கு மூட்டை தூக்கும் சுமை இல்லை. முன்பெல்லாம் இதைக் கல்யாணத்தின் போது முதல்நாள் காலை அல்லது மாலை சாஸ்திரிகளிடம் கொடுத்து ஓதிக் கொடுக்கச் சொல்வார்கள். இப்போதெல்லாம் அவசரம்+நாகரிகம் கலந்து பத்திரிகை கொடுக்கும்போதே பாக்கு, பழம், பூவோடு புடைவை, வேஷ்டியையும் வைத்துக் கொடுத்துவிடுகின்றனர். இப்படி ஒரு வழக்கமே கிடையாது. பத்திரிகை கொடுக்கையில் மஞ்சள் கலந்த அல்லது குங்குமம் கலந்த அக்ஷதை தான் பத்திரிகையின் மேலே வைத்துத் தருவார்கள். இப்போதெல்லாம் அக்ஷதை கொண்டு வருவதே இல்லை.
புடவை எடுப்பது இவ்வளவு சீக்கிரத்தில் முடியும் என்று நினைக்கவே இல்லை... ஹிஹி... நன்றி...
ReplyDeleteபுடவை - புடைவை
ReplyDeleteகூரைபுடைவை- கூறைப்புடைவை
நிச்சியதார்த்தம் - நிச்சயதார்த்தம்
இந்த வார்த்தைகளில் அவ்வப்போது குழப்பம் வரும்.
பெண் வீட்டிலேயே கூறைப்புடைவை எடுத்தாலும் மாப்பிள்ளை வீட்டில் பணம் கொடுத்து விடுவார்களோ என்னவோ...!
//நாம் எடுத்துக் கொடுப்பது அவர்களுக்கு திருப்தி இருக்காது.....//
ஆமாம். இது ஒரு பிரச்னைதான்! எத்தனையோ அதிருப்திகளைப் பார்த்திருக்கும் அனுபவம் இருக்கிறது!
அருமையான தகவல்கள்.
ReplyDeleteகாலம் மாறமாற காட்சிகளும் மாறி வருகின்றன.
பகிர்வுக்கு நன்றிகள்.
கல்யாணத்துக்கு வருகின்றோம் எங்களுக்கும் புடவை கிடைக்கும்தானே :))
ReplyDeleteநம் வழக்கில் அம்மாவீட்டில் இருந்து மணவறைக்கு உடுத்துப்போகும் புடவை எடுப்பார்கள்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து கூறைப்புடவை, இரண்டாம் கூறை என அழைக்கப்படும் ஒரு பட்டுப்புடவை என இரண்டு எடுப்பார்கள்.
உறவினர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. தப்பித்தோம் :)
கூறை புடவை எடுக்க இரண்டு பக்கம் உறவினர் சேர்ந்து போய் பெண்ணுக்கு எந்தகலர் பிடிக்கும் என்று கேட்டும், அவளிடம் முன்பு இல்லாத கலர் என்றுப் பார்த்து புடவை எடுப்பார்கள்.
ReplyDeleteஇப்போது பெண் கூடவருகிறாள் அவளுக்கு பிடித்தபுடவையை அவளே தேர்ந்து எடுக்கிறாள்.
எங்கள் பக்கம் மூன்று புடவை எடுப்போம் கல்யாணத்திற்கு . என் மருமகளை அழைத்து சென்று அவளுக்கு பிடித்தமாதிரி எடுத்தேன்.
மாப்பிள்ளைக்கு எடுக்கும் உடையை பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து தேர்வு செய்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருபதற்கு தான் திருமணம். உறவுகளை திருப்தி படுத்துவது ஒரு பெரிய கலை.
புடவைக்கு பொறுத்தமாய் சட்டை தைக்க வேண்டும் என்று இப்போது இருபக்க உறவினருக்கும் கொடுக்க வேண்டிய துணிகளை முன்பே எடுத்துக் கொடுத்து விடுகிறோம்.
கல்யாண வீட்டில் மறுபடியும் வாங்கி ஓதி கொடுக்கபடும்.
கோவை பக்கம் உப்பு ஜவுளி என்று இரு பக்க உறவினர்களும் ஒரு நல்ல நாள் பார்த்து கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பின் துணி எடுக்க கூட்டமாய் போவார்கள்.பார்ககவே நன்றாக இருக்கும்.
கல்யாணப் பத்திரிக்கையில் ஆரம்பித்து அட்சதை தூவி முடித்து விட்டீர்கள் ...கல்யாணத்தில் கலந்து கொண்ட திருப்தி எனக்கும் உண்டானது !
ReplyDeleteதலைவிக்கு இனிய மனமார்ந்த பிறந்த நாள் வணக்கங்கள் & வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஎல்லாச் செலவுக்குமானத் தோராயத் தொகையில் பாதியைப் பெண் பெயரிலும் பாதியை பிள்ளை பெயரிலும் பணமாக டிபாசிட் செய்து திருமணம் நடத்தும் காலம் பொறக்குது.. சடங்கு, சீதனம், சாப்பாடு எல்லாம் சட்ட விரோதமாகும் காலம் பொறக்குது..
ReplyDeleteவாங்க டிடி, நானும் நினைக்கலை. ஆனால் எனக்கு அரை மணி நேரம் தான் ஆகும். மோசமான ஷாப்பர் நான். :))))) என்னோட ஷாப்பிங் வரவங்களுக்கு வெறுத்துப் போயிடும். நான் பாட்டுக்கு ஒரு நாற்காலியைத் தேடிப் போய் உட்கார்ந்துடுவேன். :))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்,
ReplyDeleteஎனக்கு சந்தேகம் இல்லைனாலும், எதுக்கும் நம்ம தமிழ் வாத்தியார் சொல்லட்டும்னு அவர் கிட்டேக் கேட்டேன். நிச்சயமா நிச்சயதார்த்தம்தான்னு சொல்லிட்டார்.:)))))
//நமஸ்காரம் கீதாம்மா
நல்லா இருக்கீங்களா? போஸ்ட் எல்லாம் படிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.
நிச்சயமா சொல்லறேன் நிச்சியம் = பூண்டு! நிச்சயம் = உறுதி / மெய்!!
அதனால நிச்சய தாம்பூலம். நிச்சயதார்த்தம்தான் சரி. சந்தேகமே வேண்டாம்!//
இதான் அவரோட பதில், அப்புறம் கூறைப்புடைவை தான். இதைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிலே பலமுறை பார்த்திருக்கேன். :))))) சாலியன் கூறை என்று சொல்வார்கள். சாலியன் என்றால் நெசவு செய்பவர்களைக் குறிக்கும்.
ஆமாம், பலருக்கும் திருப்தி ஏற்படுவதில்லை என்பதை நானும் பார்த்துக் கொண்டு இருக்கேன். :(
ReplyDeleteவாங்க வைகோ சார், காலம் ஒரேயடியா மாறிடுச்சேனு கவலையிலே எழுந்தது தான் இந்தப் பதிவுகள். ஆரம்பத்திலே எழுதினதெல்லாம் படிச்சீங்களா?? :))))
ReplyDeleteவாங்க மாதேவி, புடைவை கிடைக்குமாவா?? ஹிஹிஹி, ஒரு பெரிய நோ. வாங்க உங்களுக்குப் பிடிச்சதை நீங்களே எடுத்துக்குங்க. சந்தோஷமாக் கட்டிட்டுக் கல்யாணத்துக்கு வாங்க. விருந்தெல்லாம் உண்டு.
ReplyDeleteஎங்க பக்கம் அம்மாவீட்டில் தான் இப்போதெல்லாம் எடுக்கிறாங்க. பிள்ளை வீட்டில் எடுப்பதில்லை.
வாங்க கோமதி அரசு,
ReplyDeleteகூறைப்புடைவைக்குனு இங்கெல்லாம் குறிப்பிட்ட வர்ணங்கள் தானே அநுமதி??? இல்லையா??? ஆனால் முன்பெல்லாம் எம் எஸ் நீலத்தில் அரக்குக் கரை போட்டுத் தான் எடுப்பாங்கனு என் அம்மா, அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.
//எனக்கு சந்தேகம் இல்லைனாலும், எதுக்கும் நம்ம தமிழ் வாத்தியார் சொல்லட்டும்னு அவர் கிட்டேக் கேட்டேன். நிச்சயமா நிச்சயதார்த்தம்தான்னு சொல்லிட்டார்.:)))))//
ReplyDelete//ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும். மற்றப் புடைவைகள் "நிச்சியதார்த்தம்," கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை//
ஹிஹி.....!
கோமதி அரசு, கோவைப் பக்கம் மட்டுமில்லை, எங்க வீட்டிலேயும் உறவினர் கூடித் தான் ஜவுளி எடுப்பாங்க. ஆனால் கல்யாணப் பெண்ணுக்கு அங்கே இடமில்லை. அவளை அழைத்துச் செல்ல மாட்டார்கள். இப்போதெல்லாம் போகிறார்கள். :)))) இரு வீட்டினரும் சேர்ந்து பேசி எடுப்பதும் தற்காலங்களில் மட்டுமே. முன்னெல்லாம் இல்லை.
ReplyDeleteவாங்க பகவன் ஜி,முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பத்திலே இருந்து படியுங்கள்.
ReplyDeleteகோபி, நன்றிப்பா. :)))))
ReplyDeleteஅப்பாதுரை, இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. கல்யாண விருந்து எளிமையாகவும் இருக்கும். ஆடம்பரமான கல்யாண விருந்து சாப்பிட ராஜஸ்தான் செல்ல வேண்டும். :))) இனிப்பு வகைகள் மட்டுமே 60,70 இடம் பிடிக்கும். ஒரு நிச்சயதார்த்தத்திலேயே 40 வகை இனிப்புகள் சாப்பிட முடியாமல் திணறினோம்.:))))))
ReplyDelete@ஶ்ரீராம், அது "டைபோ" ஹிஹிஹி, கண்டுக்கக் கூடாது.
ReplyDeleteபி.கு. திருத்திட்டேன். :))))
என்னைப் பொறுத்தவரை திருமணம் அங்கீகரிக்கபட என்ன செய்ய வேண்டுமோ அது மட்டும் செய்தால் போதுமானது. உழைத்து சம்பாதிக்கும் பணத்தை விரயம் செய்யக் கூடாது. முக்கியமாக உணவுப் பண்டங்கள் விரயமாகக் கூடாது. It is criminal !
ReplyDeleteதெலுங்கு சம்பிரதாயத்தில் தாலி முடியும் புடவை நூல் புடவைதான். இதைத்தவிர முதல் நாள் மஞ்சள் குங்குமம் வைக்கும் சடங்குக்கு (பெண்ணை மணமகன் வீட்டில் பார்க்காதவர்கள் போய் பார்க்கும் பொழுது வைப்பதாம்), ஜானவாசம், வெல்லம்பு சீர எனும் தாலி முடியும் புடவை (மஞ்சள் அல்லது வெள்ளை), நாகவல்லி, நலுகு, கிரஹப்ப்ரவேசம், சாந்தி முஹூர்த்தம் என லிஸ்ட். இதில் கிரஹ்ப்ரவேசமும், தாலிமுடியும் புடவை மட்டும்தான் பெண் வீட்டார் எடுப்பார்கள். இதிலும் இப்போ பல மாற்றங்கள்.
ReplyDeleteதாலி முடியும் புடவை தவிர மற்றவை பட்டுக்கள்தான் பெரும்பாலும். என் கல்யாணத்தில் நோ பட்டு என்பதால் எல்லாமே அருமையான கைத்தறி புடவைகள்.
உங்களின் இந்த பதிவு வகை ரொம்ப பிடிச்சிருக்கு.
இருவீட்டாரும் சேர்ந்து கல்யாண புடவை எடுப்பது எங்கள் குடும்பத்திலும் உண்டு.
ReplyDeleteகோவையில் ஒரு பிரிவினர் உப்பு ஜவுளி என்று அவ்வளவு கூட்டமாய், கூடை எல்லாம் வைத்துக் கொண்டு கூட்டமாய் போவதை எங்கும் பார்த்தது இல்லை அப்படி.
குஜராத் எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கே!
ReplyDeleteவணக்கம். உங்கள் பதிவுகளை நானும் படித்து ரசித்து வருகிறேன். நான் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறேன்.(தங்கமணி ஸ்ரீனிவாசனின் தங்கை) அவர் உங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.
ReplyDeleteUma Jeyaraman.
@Uma Jeyaraman,
உங்கள் பின்னூட்டத்தைக் கொஞ்சம் திருத்தி வெளியிட்டுள்ளேன். தவறாய் நினைக்கவேண்டாம். நான் தங்கமணி அம்மாவின் ரசிகை. இங்கே வந்தப்புறமா மின்சாரப் பிரச்னை காரணமாய் உடனுக்குடன் அவங்க கவிதைகளைப் படிக்க முடியவில்லை. :))))) மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த நாளின் சந்தோஷம் எல்லா நாளும் பொங்கிப் பெருகட்டும்.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், நீங்க சொல்வது ஏற்கப் பட வேண்டியதே. ஆனால் தினசரி சமையலிலேயே கணக்காகச் செய்ய முடியலை. கொஞ்சமானும் மிஞ்சித் தான் போகுது. :)))) வாங்கிக்கிறாப்போல் ஆட்களும் இல்லாமல் கீழே தான் கொட்ட வேண்டி இருக்கு! :(
ReplyDeleteவாங்க புதுகை, தெலுங்குக் கல்யாணங்களில் மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் சில குறிப்பிட்ட வகுப்பினர் கல்யாணங்களில் நூல் புடைவை தான் தாலி கட்டும்போது. அதுவும் குறிப்பிட்ட ஒரு கலர் மட்டும். காமேஷ்-யாங் கல்யாணத்துக்கு நான் போயிருந்தப்போவும் பார்த்தேன்.
ReplyDeleteகோமதி அரசு, மறு வரவுக்கு நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை, மஹாராஷ்டிரத் திருமணம் இன்னும் சிக்கனம். :))))
ReplyDeleteஸ்ரீராம், வாழ்த்துகளுக்கு நன்றி.:))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்கவளமுடன்.