பொதுவாய் நம் திருமணப் பழக்கங்களை எழுதினாலே கொஞ்சம் இல்லை, நிறைய வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும். இப்போ மாறி வரும் கலாசாரத்தில் பலருக்கும் அந்த நாளையத் திருமணப் பழக்கங்களே தெரியவில்லை என்பதோடு இப்போதைய திருமணங்களில் சில முக்கியமான பழக்கங்கள், சம்பிரதாயங்கள் முன்பின்னாகவும், முரணாகவும் நடைபெறுகின்றன. இதை எல்லாம் நன்கு கவனித்துவிட்டே திருமண முறைகள் பற்றி மட்டுமில்லாமல், முக்கியமான திருமண மந்திரங்கள் குறித்தும் எழுத நினைத்தேன். மின் வெட்டு (இப்போ சில நாட்களாக இல்லை) கணினியில் தேடுதல் என்பதற்கேற்பப் பதிவின் போக்கு சில சமயங்களில் மாறி வரலாம். என்றாலும் கூடுமானவரை கோர்வையாகவே எழுத முயற்சிக்கிறேன்.
இன்னும் சிலர் எல்லாத் திருமணப் பழக்கங்களையும் கேட்டு எழுதச் சொல்கின்றனர். இயலுமா தெரியவில்லை. தமிழ்நாட்டிலேயே பிராமணர்களுக்குள்ளேயே மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப் படும். ஆகவே பொதுவான திருமணப் பழக்கங்கள், திருமண மந்திரங்கள், கணவன், மனைவி உறவு குறித்த விளக்கங்கள் என்பதோடு மட்டுமே நிறுத்திக்க எண்ணம். இது பொதுவான ஒரு தகவல் குறிப்புக்களே தவிர எதையும், எவற்றையும் நியாயப் படுத்த வில்லை. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. ஆனால் நம் திருமண மந்திரங்கள் அர்த்தமற்றவை அல்ல. குறித்த நேரத்தில் அதைக் குறித்தும் கூடியவரை விளக்கமாக எழுத ஆசை. இதுவும் இப்போதெல்லாம் ஒரே நாளில் எனக் குறுகி விட்டது. முன்னெல்லாம் 3 நாட்கள் இருந்தது போய், ஒரு நாள் திருமணத்தில் காலை, மாலை என இருந்ததும் போய் இப்போது காலை மட்டும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல என ஆகி இருக்கிறது. இதற்கு நாமே முக்கியக் காரணம்.
அதோடு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறும் திருமண வழக்கங்கள் மாநிலத்துக்கு மாநிலம் இன்னமும் மாறி விடுகிறது. வட நாட்டவர் வழக்கம் நம்மிடம் இல்லை. நம் வழக்கம் வடநாட்டவரிடம் இல்லை. தமிழ் நாட்டிலேயே மதுரையிலே உள்ள வழக்கம் தஞ்சை மாவட்டத்துக்காரர்களிடம் கிடையாது. தஞ்சை மாவட்டத்து வழக்கம் ஆற்காடு மாவட்டத்திலே கிடையாது. ஊருக்கு ஊர் சமையல் கூட மாறுபடும். ஆங்காங்கே மாறும். இப்படி மாறுவதைத் தெரிந்தவரை சுட்டுவதே குறிக்கோள்.
எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவற்றின் நம்பகத்தன்மை உறுதியாய்த் தெரிந்த பின்னரே பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு பகிர்வு மட்டுமே! இது ஆன்லைன் பதிவு! :)))))

இதுவும் வரலாற்று பெட்டகமே. தொடருங்கள்.
ReplyDelete// ஆனால் நம் திருமண மந்திரங்கள் அர்த்தமற்றவை அல்ல. //
ReplyDelete;)))))
அழகான ஆரம்பம். தொடருங்கள்.
>>>>>
சமீபத்தில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த திருமதி. பத்மாவதி கோபாலகிருஷ்ணன் என்ற மாமி ஓர் அருமையான நூல் வெளியிட்டுள்ளார்கள்.
ReplyDeleteதலைப்பு:
“புனித ஸம்ஸ்காரங்களும் இனிய ஸம்ப்ரதாயங்களும்”
விலை ரூ. 140/-
மொத்த பக்கங்கள் 218 உள்ளன.
இப்போது தான் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
மிகவும் அழகாக, சுவைபட எழுதியுள்ளார்கள்.
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
இன்று "எல்லாமே" அவசரம் தான்...
ReplyDeleteபிறப்பது முதல்...
இது ஒரு கருத்துரை மட்டுமே... ஹிஹி...
வழக்கங்கள் இடத்துக்கு இடம் மாறுபடும். இவற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்வது நல்லதுதானே.
ReplyDeleteஎழுதுங்கள் அறிந்துகொள்கின்றோம்.
எதற்கு இந்த திடீர் விளக்கம்?
ReplyDeleteமுடிந்தவரை எழுதுங்கள். நீங்கள் ஒன்றைப் பற்றி எழுதத் தொடங்கினால், அது சம்பந்தப் பட்ட விஷயங்களை எப்படித் தேடி எடுத்துப் படித்து எங்களுக்குக் கொடுக்கிறீர்கள் என்று உங்கள் கண்ணன் பதிவின் மூலமும், ஆன்மீகப் பயணத்திலும், ராமதாசர் பதிவிலும் பார்க்கும் போது தெரிகிறது. எனவே முடிந்தவரை தொடருங்கள், உடல்நலத்திலும் கவனம் வைத்து.
மின்வெட்டு தற்போது கொஞ்சம் பரவாயில்லை எனத் தெரிந்து மனதில் மகிழ்ச்சி......
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பகிர்வுகளை! கல்யாணம் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி.
என்ன கீதா. எது மாறினால் என்ன. கல்யாணத்தின் புனிதம் மாறாது. ஒன்றுமே தெரியாமல் இருக்கும் தலைமுறையினருக்கு இவை எல்லாம் அர்த்தமுள்ள கட்டுரைகள் இல்லையா.
ReplyDeleteஅதனால் நீங்கள் எழுதும் எதிலும் மறுப்பு கிடையாது. தொடரவும் ப்ளீஸ்:)
நீங்கள் சொல்வது போல் மூன்று நாட்கள் திருமணம் இப்போதும் நடைபெறுகிறது எங்கள் பக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்குகளை வரிசைப்படுத்தி வைத்து இருக்கிறார்கள் முன்னோர்கள் அதை ஒரே நாளில் முடிப்பது நீங்கள் சொல்வது போல் காலத்தின் கோலம் தான். எல்லோருக்கும் நேரமின்மை ஒரு காரணம், மண்டப செலவு மற்றும் காரணம்காட்டி ஒரே நாளாக சிலர் செய்கிறார்கள்.
ReplyDeleteநல்ல பதிவு... அடுத்த பதிவை மொதல்ல படிச்சுட்டேன்.. .இட்ஸ் ஒகே... தொடர்ந்து படிக்க சொல்லும் பகிர்வு தான்
ReplyDelete
ReplyDeleteதலைப்புக்கு நன்றி. தொடருகிறேன்.
ReplyDeleteதிருமண முறைகளில் சில வருடங்கள் முன்பு வரை கேரளாவில் நடைமுறையிலிருந்த நான் கேட்டறிந்த வழக்கத்தை ஒட்டி ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அதில் புடவை கொடுப்பது என்பது ஒரு முறை.என் மனதுக்கு ஏற்பு இல்லாததைக் கதையாய் வடித்திருந்தேன். மருமக்கதாயம் வழக்கை ஒட்டியது. பலதிருமண முறைகள் பற்றி நீங்கள் எழுதுவதால் இதைக் குறிப்பிடுகிறேன். சுட்டி
gmbat1649.blogspot.in/2012/10/blog-post_17.html._
Sorry, the page you were looking for in this blog does not exist.
ReplyDeleteஜிஎம்பி சார், சுட்டி சரியில்லை. கொஞ்சம் சரி பார்க்கவும். நன்றி.
சுட்டி முடியும் இடத்தில் ஒரு சின்னப்புள்ளியும் _ ஹைபனும் வந்திருக்கு. அதான் திறக்கலை. அதை நீக்கிட்டுப் போட்டால் திறக்குது. நன்றி.
ReplyDeleteசரியான சுட்டி
gmbat1649.blogspot.in/2012/10/blog-post_17.html