எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 08, 2013

தென்னிந்தியத் திருமணப் பாடல்கள் தொடர்ச்சி!




ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

கெளரி கல்யாண வைபோகமே 
விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து
பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே - 2 times
சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா -
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் -
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பில

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

கன்னூஞ்சல்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
மனமகிழ்ந்தாள் 
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் 

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்

ரத்ன ஊஞ்சல்
ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன
மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன

ஆடிர் ஊஞ்சல்
விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
தும்புரு நாரதரும் வீணை மீட்ட
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
நலங்கிட வாரும் ராஜா
நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட
பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட
எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்
சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்
சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்
போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்
மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்

பொதுவான சில கல்யாணப்பாடல்கள்

ஸ்ரீராமா ஜெய ஜெய
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய
தில்லையில் வனம் தனிலே
ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம்
ராமரைக் கொண்டாட

சங்கு சக்ரம் தரித்துக் கொண்டு
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
கோலாகலமாய் இருந்தார்
ஜனகரோட மனையில் வந்து
சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார்
ஜனகர் அரண்மனை தனிலே
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணா நிதே ஜெய ஜெய
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி-மன்மதனுக்கு
மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனைக் கைப் பிடித்து
கனகநோன்பு நோற்றது போல்
கிடத்தது பாக்யமடி-மன்மதனுக்கு
செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்தது போல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி-மன்மதனுக்கு

36 comments:

  1. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...
    அழகு அருமை ஆனந்தமே...
    எத்தனை உணவு வகைகள் ஆனந்தமே...
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...

    ReplyDelete
  2. //ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே
    நம்ம ஜானகி மணமகள் ஆனாளே.. //

    அது என்னங்க, ஜானகிக்கு மட்டும் ஒரு 'நம்ம'? ஸ்ரீராமனுக்கு மட்டும் ஒரு 'னும்' போட்டால், ஜானகிக்கு ஒரு 'யும்' போட வேண்டாமா?.. அப்படி போட்டா ஓசை நயம் கூட கூடுது பாருங்க..

    இல்லேனா,

    ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே
    நம்ம ஜானகி அவருக்கு மணமகள் ஆனாளே...

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன்!

    பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து...

    ஏரியாவுக்கு இன்னும் வரலையா?

    ReplyDelete
  4. பதிவுக்கே ஒரு கல்யாண களை வந்திடுத்து, பாருங்க.. அருமையோ அருமை!

    ReplyDelete

  5. இவ்வளவு நீண்ண்ண்ண்ட பாடலா.?பல இடங்களில் அழகு தமிழுடன் பழகு மொழியும் கட்டிக் கலந்து அடேயப்பா.....

    ReplyDelete
  6. ஹிஹி டிடி, நன்றி, நன்றி, உணவு வகைகளைக் கண்ணால் படிச்சாவது பார்த்துக்கலாமே! :)))

    ReplyDelete
  7. பல பாடல்கள் ரசித்தவை......

    போஜனம் செய்ய வாருங்கள் பாடலும் எனது தளத்தில் கேட்க முடியும்.....

    எல்லா பாடல்களும் பாம்பே சிஸ்டர்ஸ் பாடியிருக்கிறார்கள்.....

    ReplyDelete
  8. வாங்க ஜீவி சார், நண்பர் ஒருத்தர் தொகுத்து அனுப்பினது, கொஞ்சம் முன்பின்னாகவும் வந்திருக்கு, நலுங்குப் பாடல்களைக் கடைசியில் போட்டிருக்கணும். அவர் கொடுத்தபடியே போட்டது மட்டும் என் வேலை.

    இப்போல்லாம் இந்தப் பாடல்களைப் பாடறதுக்கு ஆள் தேட வேண்டி இருக்கே, இல்லைனா மூலத்தில் எப்படினு தெரிஞ்சுக்கலாம். :(

    ReplyDelete
  9. ஹிஹி டிடிக்குப் பாயசம் பிடிக்காதோ? :)))

    ReplyDelete
  10. கல்யாணம் குறிச்சுச் சொல்றச்சே கல்யாணக்களை இல்லைனா எப்படி? :)))

    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார், இவை எல்லாமே தென்னிந்தியத் திருமணப்பாடல்கள் என்ற தலைப்பிலே காசெட்டுகளாய்க் கிடைத்தன. இப்போத் தெரியலை.

    ReplyDelete
  12. சுட்டி கொடுங்க வெங்கட், நாமளும் கேட்டு ரசிக்கலாம்.

    ReplyDelete
  13. http://rasithapaadal.blogspot.com/2011/05/blog-post_24.html

    இங்கே போஜனம் செய்ய வாருங்கள் பாடலைக் கேட்கலாம்....

    ReplyDelete
  14. கேட்டுட்டு இருக்கேன், ஆனால் டவுன்லோட முடியாதே!:(

    ReplyDelete
  15. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
    பரமானந்தம் ஆனந்தம்
    தெய்வதிருமணங்கள் கண்டு களித்த ஆனந்தம்.
    மாலைமாற்றும் போது மாலை சாற்றினார்,
    ஊஞ்சல் பாட்டு காஞ்சன்மாலை பாட்டு, தாலி கட்டியவுடன் ஆனந்த்ம் ஆனந்தமே,
    எவ்வளவு ரசித்து சாப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை காட்ட போஜனப்பாட்டு எல்லாமே மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. போஜனப் பாட்டுதான் சூஉப்ப்பர்ர்ர்ர்ர்.
    ஆனந்தமானந்தமும் நிஜமாகவே மகிழ்ச்சி தருகிறது.
    இவ்வளவு பாடல்கள் பாடிக் கல்யாணம் நடக்க நான்கு நாட்கள் வேண்டும்.
    நன்றாகத்தான் இருக்கும். :)

    ReplyDelete
  17. //மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்கள் என்ற பெரிய பட்டியலோடு ஒரு பாடல் இருக்கிறது அது தான் இந்த பகிர்வில். மாம்பலம் சகோதரிகள் குரலில் இந்த பாடல் இதோ உங்களுக்காய்.//
    மேலே உள்ளது வெங்கட் அவர்கள் பகிர்ந்த பதிவிலிருந்து எடுத்தது.
    போஜனம் செய்ய வாருங்கள் இந்த பாட்டும் மாம்பலம் சகோதரிகள் பாடி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  18. இந்தப் பாடல்கள் மரபு விக்கிக்காகத் தொகுத்தவை கோமதி அரசு.:))) திரு தமிழ்த்தேனி தொகுத்துக் கொடுக்க எல்கே தட்டச்சி, நான் மரபு விக்கியில் சேர்த்தேன். :)))))

    ReplyDelete
  19. வெங்கட்டின் பதிவிலும் பாடலைக் கேட்டேன், ஆனால் தரவிறக்க முடியவில்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை. :(

    ReplyDelete
  20. வாங்க வல்லி, முன்னாடியெல்லாம் கல்யாணங்களில் பாடிட்டுத் தான் இருந்தாங்க. இப்போத் தான் அவசரக் கல்யாணங்களாகிவிட்டனவே! :(

    ReplyDelete
  21. தகவலுக்கு நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  22. சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நல்லெண்ணை வடை என்றால் நல்லெண்ணையில் செய்த வடையா?

    சுக்ல உதயம் போல் ஜவ்வரிசி வடாம் - ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
  23. ஜீவியும் திங்கு அலைக்கு போலருக்கு.

    ReplyDelete
  24. மிகவும் அருமையான அழ்கான மனதுக்கு இனிய பாடல்கள். நிறைய கேட்டு ம்கிழ்ந்துள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ஒரு சிறிய வேண்டுகோள்:
    ========================

    கருப்பு கலரில் BOLD LETTERS இல் எழுதி மஞ்சள் நிறத்தில் HIGHLIGHT செய்தால் படிக்க பளிச்சென்று இருக்கும்.

    நீங்கள் கொடுத்துள்ள நிறங்களில் படிக்கவே மிகவும் STRAIN ஆக உள்ளது.

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  25. மாலை மாற்றினால் பாடலும் ரத்னா ஊஞ்சலில் ஆடினாள் பாடலும் எப்பவும் ரசிப்பது... அப்புறம் கண்ணூஞ்சல்

    கடைகளில் கல்யாணப் பாடல்கள் என்று சிடி கிடைக்கிறது. பெரும்பாலும் பாம்பே சிஸ்டர்ஸ். யூ டியூபிலும் கிடைக்கலாம்!

    ReplyDelete
  26. //திரு தமிழ்த்தேனி தொகுத்துக் கொடுக்க எல்கே தட்டச்சி, நான் மரபு விக்கியில் சேர்த்தேன். :)))))//

    இது எப்ப ? மறந்து போச்சு.. மாலை மாற்றினாள் , போஜனம் அப்புறம் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் என்னோட விருப்பம்

    ReplyDelete
  27. நல்லெண்ணை வடையா, வாடையானு எனக்கு சந்தேகம் உண்டு அப்பாதுரை! :))))))

    ReplyDelete
  28. //கருப்பு கலரில் BOLD LETTERS இல் எழுதி மஞ்சள் நிறத்தில் HIGHLIGHT செய்தால் படிக்க பளிச்சென்று இருக்கும்.

    நீங்கள் கொடுத்துள்ள நிறங்களில் படிக்கவே மிகவும் STRAIN ஆக உள்ளது.//

    சாதாரணமாக என்னோட பதிவு படிக்கும் முறையிலேயே வரும், முந்தைய பதிவுகளைப் பாருங்கள். :)))

    இது மரபு விக்கியில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்ததால் ஏற்பட்டது. நோட்பாடில் போட்டுட்டு இங்கே அதிலிருந்து காப்பி, பேஸ்ட் செய்திருக்கணும், தோணலை! :))))))

    இது பரவாயில்ல, பதிவிலிருந்து குழுமத்துலே பேஸ்ட் செய்தால் வித்தையெல்லாம் காட்டும். :))))))

    ReplyDelete
  29. வாங்க ஶ்ரீராம், இப்போல்லாம் ஊஞ்சல் போது பாடுவது ஒரு சில கல்யாணங்களிலே தான். பெரும்பாலும் அவசர ஊஞ்சல் தான். :(

    ReplyDelete
  30. எல்கே, நீங்க ஆக்டிவா இணையத்திலே இருந்த சமயம் அது! :))))) மரபு விக்கியிலே சடங்குகள் என்ற தொகுப்பிலே போய்ப் பாருங்க. :))))

    ReplyDelete
  31. இவ்வளவு பாடல்களா!!

    ReplyDelete
  32. திங்கு அலைக்கு.. ?

    அப்பாஜி! டிக்ஷனரியை இந்தப் பக்கம் கொஞ்சம் காட்டுங்க... அது என்ன 'திங்கு அலைக்கு'?

    ReplyDelete
  33. O! Think alike- ஆ!

    எது குறித்து என்பது குறித்து அடுத்த ஐயம்.

    ReplyDelete
  34. ஊஞ்சல் பாட்டு வரிகள் கிடைத்தல் பதிவேத்துங்களேன் ப்ளீஸ். ”பாலாலே கால் அலம்பி, பட்டாலே துடைத்து” என இந்த வரிகள் தான் தெரியும்.

    ReplyDelete
  35. ஊஞ்சல் பாட்டு வரிகள் கிடைத்தல் பதிவேத்துங்களேன் ப்ளீஸ். ”பாலாலே கால் அலம்பி, பட்டாலே துடைத்து” என இந்த வரிகள் தான் தெரியும்.

    ReplyDelete
  36. என்ன சொல்ல எப்படி சொல்ல? கனவில் கேட்பது போலுள்ளது. கடைசியில் எங்களுக்கு ஆனந்தம் ஆனந்தம் ஆனநதமே.

    ReplyDelete