எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 05, 2013

சம்ப(ம)ந்தி சாப்பிடவே மாட்டாள்! இட்லியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு

இது எல்லாம் போகப்பல பெண்கள் இன்று முன்பே பழகி ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டாலும் பின்னால் ஒத்துப் போவதில்லை. பல கல்யாணங்கள் நிச்சயம் முடிந்து நின்று போயிருக்கிறது.  பல கல்யாணங்கள் கல்யாணம் ஆகி விவாகரத்தில் முடிகிறது.  இன்று பெருமளவு விவாகரத்துத் தான் காணப்படுகிறது.  ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இதையே வலியுறுத்த வேண்டி உள்ளது.  திருமணம் என்பது வெறும் புலன்களின் சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல.  அதை ஆணோ, பெண்ணோ திருமணம் இன்றியே பெற்றுவிடலாம். இரு மனமும் ஒரு மனமாக இணைந்து அற வழியில் வாழ்க்கையை நடத்தவே திருமணம் வேண்டும். இம்மாதிரித் திருமணங்களில் புலன் வேட்கை என்பது முக்கியம் பெறாது.  அல்லது வேட்கை தணிந்த பின்னரும் அவர்கள் அன்பு தொடரும்.

அதோடு தன் வம்சம் தழைக்கவேண்டியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் தேவை என்பார்கள்.  அஸ்தி என்ற வடமொழிச் சொல்லுக்கு இருக்கிறது என்று பொருள்.  தன் வம்சம் தொடர்ந்து இருக்க வேண்டி பிள்ளைக்குழந்தை பிறக்க வேண்டும்.  தன் வம்சத்தைச் சுமக்க ஒரு பெண்ணை இன்னொருவர் நமக்குத் தந்தது போல் வேறொருவரின் வம்சத்தைச் சுமக்க வேண்டி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என்று தம்பதியர் வேண்டிக் கொள்வார்கள்.  இருவருக்கும் இடையே மன ஒற்றுமை தான் முக்கியம்.  இந்தக் காலத்தில் விட்டுக் கொடுத்தல் என்றால் நான் அவ்வளவு இறங்கிப் போகணுமா என்று நினைக்கிறார்கள்.  கெளரவம் பார்க்கின்றனர்.  நானும் தான் படிச்சுச் சம்பாதிக்கிறேன். நான் என்ன மட்டமா எனப் பெண்ணும், அவள் தான் இறங்கி வரட்டுமே என ஆணும் நினைக்கின்றனர்.


சகிப்புத் தன்மை அறவே இல்லை. இந்த விஷயத்தில் ஆண், பெண் பேதமில்லை. குறைகளே அற்ற மனிதர் கிடையாது.  நம் தாய், தந்தையரோடும், கூடப்பிறந்தவர்களோடும் நமக்குக் கருத்து வேறுபாடு வராமல் இருக்கிறதா?  அல்லது வெளியே வேலைக்கு என்று செல்லுமிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கிறதா?  வேலை நிலைக்க வேண்டி எத்தனையோ அவமானங்களைச் சகித்துக் கொள்கின்றனர் பெண்கள். ஆனால் வீட்டில்?? சின்ன ஒரு விஷயத்துக்குக் கூடச் சண்டை வந்துவிடுகிறது.  வீட்டையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போகும் பெண்கள் சதாவதானம் பண்ணத் தான் வேண்டி இருக்கும்.  ஆனால் வேலைக்கு நிச்சயமாய்ப் போயாகணுமா என்ற முடிவையும் எடுக்கணும்.  அத்தியாவசியத் தேவைகளுக்கு வேலைக்குப் போவது போய் இப்போதெல்லாம் ஆடம்பரச் செலவுகளுக்கு ஈடு கட்டவும், குழந்தைகளுக்கு நினைத்ததை வாங்கிக் கொடுக்கவும் பணம் தேவைப் படுகிறது.  அதற்காக வேலைக்குப் போகிறார்கள்.  அல்லது அவர்கள் "சுயம்" என்பதைத் திருப்தி செய்து கொள்ள வேலைக்குச் செல்கிறார்கள்.  இதை எல்லாம் பெண்ணும், பிள்ளையும் இப்போதெல்லாம் திருமணம் நிச்சயம் ஆனதுமோ அல்லது நிச்சயத்துக்கு முன்னரோ முடிவு செய்து கொள்கின்றனர். என்றாலும் பலருக்கும் இதில் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.


திருமணம் நிச்சயம் ஆனதும் பெண்ணும், பிள்ளையும் பழக வேண்டாம் என அந்தக் காலங்களில் தடுத்ததில்  அர்த்தம் உள்ளது. திடீரென ஏதேனும் ஒரு காரணத்தால் அந்தத் திருமணம் நடக்காமல் போய்விட்டால்?? இருவர் மனமும் பாதிப்புக்கு உள்ளாகுமே!  நிச்சயம் முடிந்து பழகிப் பின்னர் மாப்பிள்ளை அழைப்பு, ரிசப்ஷன் என முடிந்து காலை கல்யாணம் என்னும்போது திருமணத்தை நிறுத்துவதும் முறையல்ல.  முதலிலேயே  நம் எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.  எத்தனை உறவினர் வந்திருப்பார்கள்?  ஏதேனும் ஒரு குழுமத்தார் பிள்ளை வீடு/அல்லது பெண் வீடு இந்தக் கல்யாணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள் அல்லவா? மேலும் மண்டபச் செலவும், சாப்பாடுச் செலவு என அனைத்தும் வீணாகுமே.  சரியான காரணம் இருந்தால் நிறுத்துவது முறையே. நம்மால் சமாளிக்க முடிந்த சின்னச் சின்னக் காரணங்களுக்காகக் கல்யாணத்தை நிறுத்துவது சரியல்ல.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிச்சாச்சு.  அடுத்துப் பிள்ளை வீட்டிலும், பெண் வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் துவங்கும்.  அந்த நாட்களில் சீர் வரிசையாக முக்கியமாகப்  பாத்திரங்களே இடம் பெற்றன.  அதே போல் திருமண விருந்திலும் பெரிய அளவில் உணவு வகைகள் இடம் பெற்றிருக்காது.  கிராமம் என்றால் கிராமத்தில் ஒரு வீட்டில் திருமணம் எனில் திருமண வீடு இருக்கும் தெருவில் உள்ளவர்கள், மற்றும் தெரிந்தவர்கள் அவரவரால் இயன்ற பொருட்களைக் கொடுத்து உதவுவார்களாம்.  பால் மிஞ்சினால் திருமண வீட்டிற்கு வந்துவிடும்.  அந்த நாளில் குளிர்சாதனப் பெட்டி எல்லாம் கிடையாது என்பதால்  மரக்குடுவைகள் அல்லது மண் பானைகளில் பாலை ஊற்றித் தயிர் தோய்த்து ஊர்க்குளத்தில் கொண்டு போய் மிதக்க விட்டு விடுவார்களாம்.  வெகு நாட்கள் ஆனாலும் தயிர் புளிக்காதாம். இப்படித் தயிர் சேகரித்துப் பலருக்கு அன்னதானமே செய்திருக்கின்றனர்.

அதே போல் திருமண வீட்டிலும் காலை ஆகாரம், இப்போதைப் போல் இட்லி, தோசை, பூரி, இடியாப்பம் என்றெல்லாம் கிடையாது.  ஆசாரக் காரர்கள், பெரியவர்கள், மற்றும் கல்யாண வீட்டினர் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் விரதம் போல் இருந்துவிட்டுத் திருமண முஹூர்த்தம் முடிந்ததுமே உணவு உண்ணுவார்களாம்.  சிறு வயதினருக்கும், குழந்தைகளுக்கும், கைக்குழந்தை உள்ள இளம்பெண்களுக்கும், பசி தாங்க முடியாதவர்களுக்கும் பழையது தான் காலை ஆகாரமாகப் போடுவார்களாம்.  அதில் முதல்நாள் குழம்பு சுண்ட வைத்தது, மேலும் வற்றல், வடகங்கள், ஊறுகாய் வகைகள் என இருக்குமாம்.  கல்யாணத்தில் அதிகம் இடம்பெறும் இரண்டு முக்கிய உணவுகளில் ஆமைவடையும், போளியும் ஆகும் என்கிறார்கள்.  இந்த போளியே மராட்டியர் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த ஒரு உணவுப் பண்டம் ஆகும். அது குறித்துப் பின்னர் ஆராய்ச்சி செய்யலாம். 

36 comments:

  1. அருமை.

    ஊர்க்குளத்தில் தயிர்ப்பானையை மிதக்க விடுவது மிகப் புதிய சேதி.
    நிச்சயத்துக்குப் பிறகு ஒன்றாகக் கடிதங்கள் பரிமாறியதாலயே ஒரு திருமணம் நின்று போனது. நல்லதுதான்.இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும் இரு பக்கமும் மனவருத்தம்,பொருள் நஷ்டந்தான் எவ்வளவு:( ஒரேஒரு கிராமக் கல்யாணத்தைத்தான் பார்த்திருக்கிறேன்,


    கீதா. ரொம்ப நன்றிம்மா.அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. // கிராமம் என்றால் கிராமத்தில் ஒரு வீட்டில் திருமணம் எனில் திருமண வீடு இருக்கும் தெருவில் உள்ளவர்கள், மற்றும் தெரிந்தவர்கள் அவரவரால் இயன்ற பொருட்களைக் கொடுத்து உதவுவார்களாம். பால் மிஞ்சினால் திருமண வீட்டிற்கு வந்துவிடும். அந்த நாளில் குளிர்சாதனப் பெட்டி எல்லாம் கிடையாது என்பதால் மரக்குடுவைகள் அல்லது மண் பானைகளில் பாலை ஊற்றித் தயிர் தோய்த்து ஊர்க்குளத்தில் கொண்டு போய் மிதக்க விட்டு விடுவார்களாம். வெகு நாட்கள் ஆனாலும் தயிர் புளிக்காதாம். இப்படித் தயிர் சேகரித்துப் பலருக்கு அன்னதானமே செய்திருக்கின்றனர்.//

    கேட்கவே நன்றாக இருக்கிறது, ஊர் மக்களின் உதவும் குணம்.

    முன்பு அளவு இல்லையென்றாலும் கிராமமக்கள் இப்போதும் உதவும் மன்பான்மையுடன் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. ஊர்க்குளத்தில் கொண்டு போய் மிதக்க விடுவது வியப்பாக இருக்கிறது...!

    ReplyDelete


  4. பாவம் செஞ்சவன் தான்
    பொண்ணைப் பெத்துப்பான் அப்படின்னு

    நினைக்கத் தூண்டுகிறது.

    கட்டு சாதக்கூடையோட வைக்கிற தாம்பூலப்பையிலே
    தேங்காய் ஒரு பத்து பாக்கெட்லே இல்லைன்னு
    என் தங்கையோட மாமியார் ஒரு முப்பது வருசத்துக்கு
    போற கல்யாணம் எல்லாத்துலேயும் எல்லாருக்கும் முன்னாடி
    இடிச்சுக்க்காட்டிண்டு இருந்தாளாம்.

    அதுக்கு மேலே, எங்களுக்கு காஃபி கொடுக்கறதுக்கு முன்னாடி,
    எங்க கண்ணுக்கு முன்னாடியே பொண்ணைப் பெத்தவரோட‌
    மூத்தவருக்கு காபியா ? இதென்ன அனியாயமா இருக்கு அப்படின்னு
    சொன்னாகளாம்.

    இத விட பெரிய கலாட்டாக்கள் எல்லாம் நடக்கறது.
    வெளிப்படையா சொன்னா கம்யூனிடியோட ஃபால்ஸ் ப்ரெஸ்டிஜ்
    மெட்ராஸ் காட்டன் மாதிரி வெளுத்துப்போகும்.

    இதெல்லாம் பார்த்தா, பொண்ணே தனக்குப் பிடிச்சவனை கல்யாணம்
    பண்ணிண்டு ,
    அப்பா, இவனைத் தான் நான் அன்னிக்கு பண்ணிக்கறதா இருக்கேன்.
    நீ வந்து அட்சதை போட்டால் போதும். அதுவும் உன்னோட ஆப்சன்.
    நான் கம்பெல் பண்ணல்ல.

    என்று சொல்லும் பொண்கள் ஒரு புதிய கல்சருக்கு இழுத்துச் செல்வதாகத்
    தோன்றினாலும்,

    அம்மா அப்பாக்களுக்கு ஏற்படுகின்ற ஹ்யுமிலியேஷன்ஸ் இருந்து
    காப்பாற்றுவதாகத் தான் தெரிகிறது.

    அல்டிமேட்லி ஒவ்வொரு அம்மா அப்பாவுக்கும் தன் பொண்ணு நன்னா இருக்கணுமேன்னு
    கவலையிலே தான் எல்லா சூழ் நிலைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகிறார்கள்.

    உருவாகின்ற புதிய சூழ் நிலை, பொண்ணைப் பெத்த அம்மா அப்பாக்களுக்கு கல்யாண நாட்களில் மட்டுமல்ல,
    தொடர்ந்து நடக்கின்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலேயும் சாதாரணமாக படும் ஹ்யுமிலியேஷன்சுலேந்து
    காப்பாற்றும் என்றும் தோன்றுகிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. //ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இதையே வலியுறுத்த வேண்டி உள்ளது. திருமணம் என்பது வெறும் புலன்களின் சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. அதை ஆணோ, பெண்ணோ திருமணம் இன்றியே பெற்றுவிடலாம். இரு மனமும் ஒரு மனமாக இணைந்து அற வழியில் வாழ்க்கையை நடத்தவே திருமணம் வேண்டும்.. //

    பல தடவை இதேயே சொல்லிச் சொல்லி வெறுத்துப் போய் இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை என்கிற மாதிரி வெளிப்பட்ட விளக்கம். திருமணத்தின் தாத்பரியத்தை மனசில் தைக்கிற மாதிரி எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்.

    திருமணம் என்பது எதற்கானவோ ஆன லைசன்ஸ் தான் என்று நினைப்பவர்கள், அதையே அடிக்கடி சொல்பவர்கள் இந்த விஷயத்தில் தெளிவு கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  6. நல்ல கட்டுரை வாழ்க. சம்பந்தி சண்டையை பற்றியும் எழுதுங்கள். நான் முன் நின்று நடத்திய கல்யாணத்தில் சம்பந்து வீட்டில் 'தனித்தளிகை' என்று பாடாய் படுத்தி விட்டார்கள். என் எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரே வழி. எல்லாரும் வயிறு புடைக்க தின்ற பின், நடு நிசியில் காஸ்லைட் தூக்கிய தலித்களுடன் அமர்ந்து உண்டது. இன்று கூட என் உறவு அதற்கு என்னை கேலி செய்கிறது. அதையெல்லாம் மிகைப்படுத்தி, புனைந்துரையுடன் கலந்து அளிக்கலாம் என்றால், நீங்கள் பொறுப்பாக எழுதி, எம்மை அண்டவிட மாட்டேன் என்கிறீர்கள்!

    ReplyDelete
  7. கல்யாணமாகிற பெண்களுக்கு குறைந்த பட்ச குடும்பம் நடத்துகிற பாங்கைக் கூடக் கற்று தராத பெற்றோர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு தயாராக இருக்கிற பெண்களுக்கு கோலம் போடத் தெரியாது, பூத்தொடுக்கத் தெரியாது, துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது என்று நிறைய தெரியாதுகளையும் தெரிய வைக்கிறவர்களாய், அவர்களை அடுப்பங்கரையில் புழங்க வைக்கிற பெற்றோர்களாய் இருக்க வேண்டும்.
    இக்காலத்தில் பேச்சுலர்களாய் இருக்கையிலேயே வேலை நிமித்தம் வெளியூர்களில் தங்கும் இளைஞர்கள் சமையல் அனுபவம் கூட கற்றுத் தேர்ந்திருந்திருக்கிறார்கள். ஆனால் பெண்களோ கல்யாணத்திற்கு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பாவனையில் வளர்கிறார்கள். 'இதற்குத் தானா ஆசைப்பட்டேன்' என்று நொந்து போகும் இளைஞர்கள் பற்றி யார் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை.

    ReplyDelete
  8. //அஸ்திக்கு ஒரு ஆணும்,//

    அஸ்தி தான் தமிழில் சொல்லும்போது ஆஸ்தி ஆகி விட்டதா?

    கல்வி விற்கும் விலையில் இப்போதெல்லாம் குழந்தைகளைப் படிக்க வைப்பதே ஆடம்பரச் செலவு போலத்தான்! :))

    ReplyDelete
  9. புலன்வேட்கை - அருமையான சொல். நன்றி.

    ஊர்க்குளத்தில் மோர்ப்பானை பற்றிப் புறநானூற்றுப் பாடல் ஒன்று இருப்பதாக ஆசிரிய நண்பர் அரசன் அடிக்கடி சொல்லியிருக்கிறார். எங்கே, கவனிச்சா தானே? interesting thought அந்தக் காலத்துக்கு ஒத்து வந்திருக்கலாம். மோர்ப்பானையில தவளை விழுந்திருந்தா அதை எடுத்துப் போட்டும் சாப்பிட்டிருக்கலாம். (எனக்கு இப்படித் தான் தோணுது)

    இட்லி வகையறாக்களுக்கு பழையது வற்றல் வடாம் பரவாயில்லை என்று தோணுதே?



    ReplyDelete
  10. ஊர்க்குளத்தில் தயிர்ப்பானையை மிதக்க விடுவது ---

    வியக்கவைக்கும் பகிர்வுகள்...

    ReplyDelete

  11. இட்லியில் முன்னூறு ஜாங்கிரியில் இருநூறு என்று எப்படி சாப்பிடமுடியும். திருமணங்களில் நடக்கும் பல அடாவடி செயல்களை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். எனக்குத் தெரிந்த ஒரு திருமணத்தில் பிள்ளை வீட்டார் ஏதோ கேட்கப் போய் பெண்ணின் தாயார் “ அவர்கள் கேட்டதெல்லாம் கொடுத்தாய் விட்டது . இனி நான் என்னைத்தான் கொடுக்கவேண்டும் “ என்று கூறப் போக அந்தத் திருமணம் நிற்காமல் நடக்க பலரும் பாடுபட்டது நினைவுக்கு வருகிறது. திறுமணம் இருவர் இணைந்து வாழ உலகம் வழங்கும் லைசென்ஸ் என்பது உண்மை என்று எல்லோருக்கும் தெரிகிறது என்றாலும் அதை ஒப்புக்கொள்ள ஏனோ ஒரு false ப்ரெஸ்டிஜ் தடுக்கிறது. இல்லாமலா நேரங்காலம் குறித்துச் சாந்தி முஹூர்த்தம் என்று முதலிரவுக்கு வழி செய்கிறார்கள்.? திருமணம் என்பது ஒரு லைசென்ஸ் இல்லாவிட்டால் பெற்றதுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது.? இந்த அறவாழ்க்கையே பொறுப்புகளைச் சுமப்பது அல்லவா.?திருமணத்துக்கான காரணங்களைச் சொல்கிறேன் சொல்கிறேன் என்று எத்தனை நாட்களுக்கு கீரி பாம்பு சண்டை காட்ட முடியும்.?

    ReplyDelete
  12. வாங்க வல்லி, இந்தத் தயிர்ப்பானையை மிதக்க விடறது பத்தி தமிழ்த்தாத்தா கூட எழுதி இருக்கார்னு நினைக்கிறேன். :))))

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, கிராம மக்கள் உதவும் மனத்தோடு இருந்தாலும் இப்போல்லாம் நகரங்களில் திருமணம் செய்யவே விரும்பறாங்களே! :(

    ReplyDelete
  14. வாங்க டிடி, இது மாதிரிக் கேள்விப் பட்டிருக்கேன். :))))

    ReplyDelete
  15. //இத விட பெரிய கலாட்டாக்கள் எல்லாம் நடக்கறது.
    வெளிப்படையா சொன்னா கம்யூனிடியோட ஃபால்ஸ் ப்ரெஸ்டிஜ்
    மெட்ராஸ் காட்டன் மாதிரி வெளுத்துப்போகும்.//

    இப்போவுமா??? இப்போல்லாம் அப்படி நடக்கிறதாத் தெரியலையே சூரி சார்??? இப்போ இரண்டு பக்கமும் அவங்க அவங்க மனிதர்களை அவங்க அவங்க கவனிச்சுக்கறதோடு காடரிங் மாஸ்டர் தான் எல்லாரையும் உபசரணைகள் செய்யறதும். காலம் மாறிப் போச்சு சார். :)))))

    ReplyDelete
  16. அதுக்காகப் பெண்கள் தனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கறதில்லை. நிச்சயமாத் தெரியும். எங்க உறவுகளிலேயே பார்த்திருக்கேன். அந்த நேரம் அவங்களுக்கு அப்படி ஒரு தீர்மானம் எடுக்கும்படி எது தூண்டுகிறது எனத் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து இப்படிக் கல்யாணம் செய்து கொண்ட மூன்று பெண்கள் பின்னர் வருந்துகின்றனர். ஒருத்திக்கு விவாகரத்தே ஆயாச்சு. :((((

    ReplyDelete
  17. இப்போதெல்லாம் நீங்க சொல்றாப்போல் பெண்ணைப் பெற்ற அம்மா, அப்பாக்களை விடப் பிள்ளையைப் பெற்ற அப்பா, அம்மாக்கள் தான் கஷ்டப்படறாங்க. இதான் நிஜம், யதார்த்தம், பெண்கள் சுலபத்தில் வளைந்து கொடுப்பதில்லை.

    ReplyDelete
  18. கீழே ஜீவி சார் சொல்லி இருப்பதையும் கவனிங்க.

    ReplyDelete
  19. வாங்க ஜீவி சார்,

    //பல தடவை இதேயே சொல்லிச் சொல்லி வெறுத்துப் போய் இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை என்கிற மாதிரி வெளிப்பட்ட விளக்கம். திருமணத்தின் தாத்பரியத்தை மனசில் தைக்கிற மாதிரி எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்.//

    எத்தனை முறை சொன்னாலும் தங்கள் அபிப்பிராயத்தை யாரும் அவ்வளவு சுலபமா மாத்திக்கறதில்லை. :))))) மனைவி என்பவள் இல்லைனா எந்த நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்யவும் அனுமதி இல்லை என்பதையும் யாரும் புரிந்து கொள்ளவே இல்லை. அக்னி ஹோத்ரம் பண்ணறவங்களுக்கு திடீர்னு உடல்நலமில்லாமல் பண்ண முடியலைனா அவருக்காக மனைவி அதைச் செய்தே தீர வேண்டும். அவள் இல்லைனா அக்னி ஏது? இதைக் குறித்துச் சொல்ல ஆரம்பிச்சால் பெரிசாப் போகும். :))))

    ReplyDelete
  20. வாங்க "இ"சார், எங்க வீட்டிலேயும் இப்படிக் கடைசிப் பந்தியிலே வேலை செய்யும் ஆட்களுடன் உணவு உட்கொண்டவர்கள் உண்டு. இப்போவும் நடக்கிறது.

    //அதையெல்லாம் மிகைப்படுத்தி, புனைந்துரையுடன் கலந்து அளிக்கலாம் என்றால், நீங்கள் பொறுப்பாக எழுதி, எம்மை அண்டவிட மாட்டேன் என்கிறீர்கள்!//

    நீங்கள் எழுதுங்கள் ஐயா, படிக்கக் காத்திருக்கோம். உங்களை அண்டவிடாமல் இருப்பேனா? :))))))

    ReplyDelete
  21. கல்யாணமாகிற பெண்களுக்கு குறைந்த பட்ச குடும்பம் நடத்துகிற பாங்கைக் கூடக் கற்று தராத பெற்றோர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு தயாராக இருக்கிற பெண்களுக்கு கோலம் போடத் தெரியாது, பூத்தொடுக்கத் தெரியாது, துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது என்று நிறைய தெரியாதுகளையும் தெரிய வைக்கிறவர்களாய், அவர்களை அடுப்பங்கரையில் புழங்க வைக்கிற பெற்றோர்களாய் இருக்க வேண்டும்.//

    ஐயா, ஏற்கெனவே இது குறித்து நிறையச் சொல்லிட்டேன். தமிழ் ஹிந்துவில் எழுதப் போய் எனக்கு இந்தக் காலப் பெண்களைக் கண்டால் பொறாமைனு சொன்னாங்க. இப்போதைய பெண்கள் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டும் தடுமாறுகின்றனர். பூத் தொடுக்கிறது என்ன? பூ வைத்துக்கொள்ளவே மறுக்கின்றனர். எங்க உறவினர் வீட்டுத் திருமணங்களில் எல்லாம் பந்து பந்தாய்ப் பூச்சரங்கள் நடுத்தர, முதிய பெண்களின் தலைகளை மட்டுமே அலங்கரித்தன. முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களில் இருந்து அதற்குக் கீழே உள்ள பெண்கள் வரை யாரும் பூவே வைத்துக்கொள்ளவில்லை, கல்யாணப் பெண் உட்பட. :((((((( ஒரே சென்ட் வாசம். என்னோட ஆஸ்த்மாவை அதிகமாக்கியது. :(((( பூ வாசம் இல்லை.



    //இக்காலத்தில் பேச்சுலர்களாய் இருக்கையிலேயே வேலை நிமித்தம் வெளியூர்களில் தங்கும் இளைஞர்கள் சமையல் அனுபவம் கூட கற்றுத் தேர்ந்திருந்திருக்கிறார்கள். ஆனால் பெண்களோ கல்யாணத்திற்கு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பாவனையில் வளர்கிறார்கள். 'இதற்குத் தானா ஆசைப்பட்டேன்' என்று நொந்து போகும் இளைஞர்கள் பற்றி யார் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை.//

    கெட்டிக்காரப் பையர்கள் மனைவியை மெல்ல மெல்ல தாஜா செய்து பழக்குகின்றனர். சாமர்த்தியம் இல்லாதவர்கள் நொந்து போகின்றனர். மேலும் இப்போதைய துரித உணவு தான் பெண்களுக்கு வசதியாக இருக்கிறது. அதில் உள்ள கேடுகளைக் குறித்து நினைப்பதில்லை. :(((((

    ReplyDelete
  22. ஸ்ரீராம், இந்த அஸ்தி, ஆஸ்தி ஒரு விவாதமாகக் குழுமத்தில் நடக்கிறது. சம்ஸ்கிருத அகராதியைப் பார்த்துட்டுச் சொல்றேன். எனக்குத் தெரிந்தவங்க எல்லாம் அஸ்தி தான் சரினு சொன்னாங்க. இல்லைனு தி.வா. மற்றும் சிலர் சொல்றாங்க. :))))))

    ReplyDelete
  23. வாங்க அப்பாதுரை,

    // மோர்ப்பானையில தவளை விழுந்திருந்தா அதை எடுத்துப் போட்டும் சாப்பிட்டிருக்கலாம். (எனக்கு இப்படித் தான் தோணுது)//

    ஹாஹா, இதான் அப்பாதுரையோரியல் டச்!:))) அதெல்லாம் தவளை விழும்படி போட மாட்டாங்க. நல்லா சீல் வைச்சுடுவாங்களாம். அநேகமாக மூடி உள்ள மரக்குடுவைகள் மட்டுமே.

    அது சரி, தவளை மட்டுமா இருக்கும்?? மீன்?? அதை விட்டுட்டீங்களே? :)))))

    ReplyDelete
  24. //இட்லி வகையறாக்களுக்கு பழையது வற்றல் வடாம் பரவாயில்லை என்று தோணுதே?//

    ஆமா இல்ல?? எத்தனை பாரம்பரியங்கள் இழந்திருக்கோம்?? ஹிஹிஹி, இதுக்கு உங்க பதிலைத் தெரிஞ்சுக்க ஆசை. :))

    ReplyDelete
  25. வாங்க ராஜராஜேஸ்வரி,

    நன்றிங்க.

    ReplyDelete
  26. வாங்க ஜிஎம்பி சார், அது ஒரு நையாண்டிப் பாடலின் வரிகள். அதை அப்படியே அர்த்தம் கொள்ளுவீங்கனு எதிர்பார்க்கலை. :))) முழுப்பாடலையும் இன்னிக்குக் கொடுத்திருக்கேன் பாருங்க. :))))

    ReplyDelete
  27. //திறுமணம் இருவர் இணைந்து வாழ உலகம் வழங்கும் லைசென்ஸ் என்பது உண்மை என்று எல்லோருக்கும் தெரிகிறது என்றாலும் அதை ஒப்புக்கொள்ள ஏனோ ஒரு false ப்ரெஸ்டிஜ் தடுக்கிறது.//

    எந்த ப்ரெஸ்டிஜும் இல்லை. எதுக்குத் தடுக்கணும்?? எங்க சாம வேதத்தில் மனைவி இல்லைனா சிராத்தத்தில் ஹோமம் செய்ய முடியாது. இளைய மகன் இருந்து அவனுக்கு மனைவி இருந்தாலும் மூத்த மகனின் மனைவி இல்லைனா யாருக்கும் அதிகாரம் இல்லை. மூத்த மகனின் காலம் ஆகி இளைய மகன் பொறுப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே அப்போதும் அவர் மனைவி இருந்தால் தான் ஹோமமே. இல்லைனா இல்லை. இதை விவரிப்பது என்றால் இந்தப் பதிவுகளின் நோக்கம் மாறும்.


    // இல்லாமலா நேரங்காலம் குறித்துச் சாந்தி முஹூர்த்தம் என்று முதலிரவுக்கு வழி செய்கிறார்கள்.? //


    நேரம் காலம் குறிப்பது நல்ல ஆயுள், புத்தி உள்ள குழந்தை பிறப்பதற்கும், வம்ச விருத்திக்காக ஆண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை நல்ல நேரத்தில் ஜனிக்க வேண்டும் என்பதற்காகவும். லைசென்ஸ் வாங்கி வாழ்க்கை நடத்த காரா ஓட்டறோம். வாழ்க்கை ஐயா வாழ்க்கை.

    //திருமணம் என்பது ஒரு லைசென்ஸ் இல்லாவிட்டால் பெற்றதுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது.?//

    நம் குழந்தைகளுக்குப் பொறுப்பு ஏற்க லைசென்ஸா?? இது என்ன காலாவதியா ஆகிறது? வாழ்நாள் முழுதும் கூடவே வரும் பெண்ணையும், அவள் மூலம் பெறும் குழந்தைகளையும் சுமையாக நினைத்தால் அல்லவோ லைசென்ஸ் என்றெல்லாம் தோன்றும்! :(((((


    // இந்த அறவாழ்க்கையே பொறுப்புகளைச் சுமப்பது அல்லவா.?திருமணத்துக்கான காரணங்களைச் சொல்கிறேன் சொல்கிறேன் என்று எத்தனை நாட்களுக்கு கீரி பாம்பு சண்டை காட்ட முடியும்.?//

    எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பொறுப்புகளைச் சுமந்தே ஆகவேண்டும். பொறுப்புகளைச் சுமக்கப் பயப்பட்டால் திருமண வாழ்க்கையையே ஏற்கக் கூடாது. திருமணத்துக்கான காரணங்களை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். கீரி, பாம்பு சண்டையெல்லாம் இருக்கிறது என்று காட்டத் தான் சொல்லப் படுகிறது. இரு குடும்பங்களின் இணைப்பை அவ்வளவு சுலபமாக நினைத்து விட்டுப்போகக் கூடாது.

    ReplyDelete
  28. திருமணங்களில் நடக்கும் தவறுகளைச் சுட்டினால் தானே திருமணங்கள் தவறுகளில்லாமல், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருமனங்களை இணைக்கும் பந்தமாக இருக்கவேண்டும் என்பது புரியவரும். ஆகவே சில நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப் பட்டன.

    ReplyDelete
  29. @ஸ்ரீராம்,


    अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக

    अस्थि= bone kennel or stone(seed) of a fruit (noun)

    ஹிஹிஹி, அகராதியை எங்கேயோ வைச்சுட்டுத் தேட இரண்டு நாள். ரங்க்ஸ் தினமும் புத்தக அலமாரியை ஒழிச்சு வைனு சொல்றார். எங்கே? எனக்குப் பிடிச்ச விதத்திலே கலைச்சு வைச்சிருக்கேன். எது எங்கே இருக்கும்னு எனக்குத் தான் தெரியும். அப்படியும் அகராதியைக் கண்டு பிடிக்க முடியலை!

    இங்கே சொல்வது முதல் அஸ்தி. வெர்பல் ஃபார்ம். இரண்டாவது அஸ்தி இல்லை. அப்பாடா! யாரங்கே , ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

    ReplyDelete
  30. //अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக

    अस्थि= bone kennel or stone(seed) of a fruit (noun)//

    பதில்களைத் தேடிக் கொடுக்கும் உங்கள் பொறுமைக்கும் பொறுப்புணர்வுக்கும் வணக்கங்கள். அதுசரி, இரண்டிலுமே ஆவன்னா தானே வருகிறது?!

    //ஊர்க்குளத்தில் தயிர்ப்பானையை மிதக்க விடுவது ---//

    பழைய பாடல் ஒன்று அரைகுறையாக நினைவுக்கு வருகிறது. குட்டி யானைக்கும் கொம்பு முளைச்சுதாம் என்று 2 பாடல்களை இணைத்து,

    அம்மா பொண்ணுக்குக் கல்யாணம்
    அவரவர் வீட்டுல சாப்பாடு

    கொட்டுமேளம் கோவில்ல...
    ------------------------------------

    என்று வரும்.


    ReplyDelete
  31. "ஆ" இல்லை ஶ்ரீராம், அது "அ" தான் நல்லாப் பாருங்க. கடைசி வார்த்தை "தி" யின் கால் வாங்குவது ஹிந்தி/சம்ஸ்கிருதத்தில் குறிலாக உச்சரிக்கப் படுவதால் "அ"வுக்குப் பக்கத்தில் வந்திருக்கு. நெடில் என்றால் முடியும் இடத்தில் காணப்படும்.

    अस्ती//

    இது போல! இப்போ இரண்டையும் பார்த்தீங்கன்னா வித்தியாசம் தெரியும். :)))) ஹிஹிஹி, இன்னிக்கு க்ளாஸ் எடுத்துக் களைச்சுப் போயாச்சு, ஒரு ஜோடா ஆ ஆ ஆ

    ReplyDelete
  32. போன வாரம் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற போது கண்ணால் கண்ட காட்சி. மல்லிகைப்பூ அருமையாக இருக்கிறதே என்று தொடுத்து சாமி படத்திற்குப் போடலாம் என்று வாங்கியிருக்கிறார் கள். புது மருமகளைத் தொடுக்கச் சொல்லி விட்டு, மாமியார் சமையல் அறையில் பிஸியாக இருந்தார்கள்.

    நூலில் வண்டைக் கட்டித் தொங்க விட்டார் போல, மல்லிகையை நூலில் இடைவெளி விட்டு சுருக்கிட்டுக் கொண்டிருந்தது அந்த பெண். பார்த்த எனக்கே பொறுக்க வில்லை.

    இன்னொரு நாள் இன்னொரு நண்பர் வீட்டில் தெரிந்து கொண்டஇன்னொரு பாடமும் உண்டு. வெளியூரில் இருக்கும் மருமகள் நாலு வயது குழந்தையோடு மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார். மருமகளுக்குக் கோலம் போடத் தெரியாது என்று மாமியாரே வீட்டு வாசலில் வழக்கம் போல சின்னதாக தினப்படிக் கோலத்தைப் போட்டிருந்தார்கள்.
    நாலு வயது குழந்தை, வந்த நாலு நாளில் பாட்டி கோலம் போடும் பொழுது தானும் கூடச் சேர்ந்து விளையாட்டாக கோலம் இழுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு அவர்கள் வீட்டிற்குப் போயிருந்த பொழுது பேத்தி இழுத்திருந்த கோலத்தைக் காட்டி பாட்டி என்னிடம் மகிழ்ந்து போய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
    இந்த மாதிரி அந்தப் பெண்ணிற்கு அவள் தாய் சொல்லித் தந்திருந்தால்
    புகுந்த வீட்டில் ஜமாய்த்திருக்கலாமே என்று தோன்றியது.

    சில விஷயங்கள் பெண்களுக்காகவே அமைந்தது. கோலம் போடுவது, இலை பார்த்துப் பரிமாறுவது, சுமங்கலிகள் தன் வீட்டு வந்து போகும் பொழுது குங்குமம் கொடுத்து வழி அனுப்புவது என்று நிறைய. இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. பார்த்துப் பார்த்து பழக்கமாவது.

    ReplyDelete
  33. வாங்க ஜீவி சார்,

    கோலம் போடுவதால் மன ஒருமைப்பாடும் கணக்குப் போடும் திறனும் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் எல்லாம். இதை எல்லாம் நாகரிகமான வேலைகளாகவும் கருத மாட்டார்கள். பூத்தொடுக்கிறதும் ஒரு கலை. வித விதமான வர்ணங்களில் உள்ள பூக்களை நம் ரசனைக்கேற்பக் கதம்பமாகத் தொடுப்பதில் உள்ள சந்தோஷத்தை அனுபவித்தால் தெரியும்.

    மதுரையில் இருந்த வரை மல்லிகைப் பூக்களை மூன்று மூன்றாகச் சேர்த்துச் செண்டாகத் தான் கட்டுவேன். இப்போவெல்லாம் அதற்கேற்ற குச்சிகள் கிடைப்பதில்லை. இங்கே அநேகமாக இப்போது உதிரிப்பூக்கள் வாங்கித் தான் தொடுக்கிறேன். பத்து ரூபாய்க்கு 100 கிராம் மல்லிகைப் பூ வாங்கினால் நான்கு, ஐந்து முழத்துக்கும் மேல் வரும். இதையே பூக்காரியிடம் முழம் பத்து ரூபாய் என்று வாங்குவாங்க. :))))

    ReplyDelete
  34. எங்க மின் தமிழ்க் குழுமத்தின் இளம் நண்பர் உதயனின் கோலங்கள் குறித்த தளம். உதயன் மிக அருமையானக் கோல வித்தைக்காரர்.

    http://tinyurl.com/cuhhj8o

    மேற்கண்ட சுட்டியில் போய்ப் பார்க்கலாம்.

    ReplyDelete
  35. திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை பூராவுக்கும் ஆன ஒன்று.

    எதற்கானதுக்கான லைசன்ஸ் என்பதோ வாழ்க்கை பூராவுக்கும் ஆன ஒன்றில்லை. இடைக்காலத்தி- லேயே காலாவதி ஆகக்கூடிய ஒன்று.

    அப்படி அதுவே நிர்ணயிக்கக் கூடியதாக இல்லாமலிருக்கும் பொழுது, அதற்கான லைசன்ஸ் தான் இது என்று திருப்பித் திருப்பிச் சொல்வதில் அர்த்தம் இல்லை அல்லவா, ஜிஎம்பீ சார்?..

    ReplyDelete
  36. நேற்று கும்பகோணத்திலே காந்தி பார்க் அருகே பார்த்தேன். மல்லிகை அரும்புகள் பச்சைப்பசேல் காம்புகளு டன் ஒரே சீறான அளவில் கொட்டிக் கிடந்த காட்சி கண்கொள்ளா காட்சி..

    காந்தி பார்க்கில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். தி.ஜா, கு.ப.ரா. எம்.வி.வி. கரிச்சான் குஞ்சு அத்தனை பேரும் நினவில் வந்தனர். அந்தக் குழாம் இங்கே தானே உட்கார்ந்து பேசிக் களித்திருக்கும் என்கிற நினைவே மேலோங்கியது.
    சொல்லப் போனால் அந்த நினைவைக் கொள்வதற்காகத்தான்
    காந்திப் பார்க்கினுள் நுழைந்தேன் என்பதே உண்மை.

    ReplyDelete