எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 27, 2015

ஆஞ்சிக்கு எதிரே நம்ம நரசு, லக்ஷ்மியோடு குடி இருக்கார்!

ஒரு வழியா மடிக்கணினி சரியாகி இருக்கு. இந்த முகநூல் தான் போன வாரம் மடிக்கணினி கோமா நிலைக்குப் போனப்போ உள்ளே நுழைஞ்சது! இன்னி வரைக்கும் வெளியே வரவே முடியலை. வெளியேறும் ஆப்ஷனில் க்ளிக்கினால் எதுவுமே வரலை. உள் பெட்டி திறக்கலை! நோட்டிஃபிகேஷன்ஸ் வரும் ஆப்ஷனும் திறக்கலை. பூட்டுப் பெட்டி மட்டும் திறந்தது. அப்புறமா நண்பர் ஒருத்தர் ஆலோசனையின் பேரில் முகநூலுக்கு ஒரு செய்தி அனுப்ப இருந்தேன். ஆனால் திடீர்னு தானே சரியாச்சு! இன்னிக்கு முகநூல் பக்கம் திறந்ததும் ஒவ்வொரு ஆப்ஷனாப் போட்டுப் பார்த்து ஒவ்வொண்ணையும் சோதனை செய்து எல்லாமும் சரியாக வேலை செய்வதைக் கண்டேன். என்ன ஆச்சுனு தெரியாம திடீர்னு இப்படி ஒரு பிரச்னை!  அதோடு இரண்டு நாட்களாகக் கல்யாணங்களில் கலந்து கொள்ளவேண்டிய நிலைமை. ஞாயிறன்று திருச்சியிலேயே ஒரு கல்யாணம். நேற்று நாமக்கல்லில் ஒரு கல்யாணம்.

போயிட்டு வந்தாச்சு. அங்கே பல வருடங்களாகப் பார்க்க நினைச்சிருந்த ஆஞ்சியைப் பார்த்தாச்சு! நைனா மலை என அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு எதிரே ஆஞ்சி காணப்படுகிறார். லக்ஷ்மி நரசிம்மரைப் பார்த்துட்டுத் தான் ஆஞ்சியைப் பார்க்கணுமாம். எங்களுக்குத் தெரியாது. முதலில் ஆஞ்சியைத் தான் பார்த்தோம். அங்குள்ள பட்டாசாரியாரிடம் படம் எடுத்துக்கலாமா எனக் கேட்டுப் படமும் எடுத்துக் கொண்டேன். எதிரே மலை! கோட்டை போல் அமைப்பு. மலையின் நடுவே ரங்கநாதரும், உச்சியில் வரதராஜரும் இருக்கின்றனராம். என்னது? ஏறிப் போய்ப் பார்த்தீங்களாவா?  சரியாப் போச்சு! போங்க! இதுக்கே நாக்குத் தள்ளுது! ஏறி எல்லாம் போகலை! அதோட கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வேறே போகணும். நாமக்கல் ஊருக்குள்ளே நுழைஞ்சதும் முதல்லே கோயிலுக்குப் போயிடலாம்னு இங்கே வந்துட்டோம். மலை தான் ஏற முடியாது! போய்விட்டுத் திரும்பக்  குறைந்தது நான்கு மணி நேரம் ஆயிடும். ஆகையால் எதிரே உள்ள லக்ஷ்மி நரசிம்மரையும் போய்ப் பார்க்கலாம்னு என்னோட விருப்பம். ஆனால் அங்கேயும் சில படிகளாவது ஏற வேண்டி இருக்கும். ஆனாலும் பரவாயில்லைனு போனோம்.

நுழையும்போதே சில, பல படிகள். அதிலே ஏறி உள்ளே போனால் மேலும் சில, பல படிகள்! அதிலும் ஏறி முன் மண்டபத்திற்குப் போனால் இடப்பக்கம் நாமகிரித் தாயார் சன்னதி! திரை போட்டிருந்தனர். சரி நரசுவைப் பார்க்கலாம்னா இங்கேயும் தாயாரைத் தான் முதல்லே பார்க்கணும்னு சொன்னாங்க. நாங்க தான் சொன்னதைக் கேட்க மாட்டோமே! ஆகவே நரசுவைப் பார்க்கப் போயிட்டோம். மேஏஏஏஏஏஏஏஏஏஏலே ஏறித் தான் போய்ப் பார்க்கணும். ஹிஹிஹி, அங்கேயும் திரை! ஆனால் பட்டாசாரியார் இப்போத் திறக்கப் போவதாகவும் மேலே வரும்படியும் கூறினார். ஹிஹிஹி, மறுபடி சில, பல படிகள் ஏறிப் போனால் அங்கேயும் ஒரு மேலே! அங்கே உள்ளே வரச் சொல்லி பட்டாசாரியார் சொல்ல, நான் ஏறத் தயங்க, எங்களோடு வந்த எங்க மருமகள்(மாட்டுப் பெண் இல்லை, நாத்தனார் பெண்) மாமி, இங்கே ஒரு சிற்பம் பாருங்க, காலைத் தூக்கிக் கொண்டு பெருமாள்! என்று சொல்ல உடனே அலறி அடித்துக் கொண்டு மேலே ஏறி உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போயிட்டேனே!
வைகுண்டநாதர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!  தினமலர் பக்கம்

இங்கே விக்ரஹமாகக் காட்சி அளிக்கிறார் வைகுண்ட நாதர். இந்தக் கோலமே அங்கே சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது.
சந்நிதியின் திரை இன்னும் விலகவில்லை. இடப்பக்கம் வைகுண்டநாதர் பாம்பு ஆசனத்தின் மேல் உட்கார்ந்திருக்க, அவருக்குக் கொஞ்சம் இடப்பக்கமாக சந்நிதியில் குடி கொண்டிருக்கும் நரசிம்மருக்கு வலப்பக்கமாக ஹிரண்யனைக் கிழிக்கும் கோலத்தில் அஷ்டபுஜ நரசிம்மர்.
அஷ்டபுஜ நரசிம்மர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் பக்கம்

பார்க்கவே பயங்கரமாக அந்த மலைக்குள்ளே குடைவரையில் வடித்த சிற்பி நரசிம்ம அவதாரத்தின் இந்நிகழ்வை நேரில் கண்டிருக்க வேண்டும் என்றே தோன்றியது. நரசிம்மருக்கு இடப்பக்கச் சுவரில் பூவராஹர், பூமாதேவியைத் தன் மூக்கில் தூக்கியவண்ணம், அவருக்கு அருகே நான்கு வேதங்கள்!
பூவராஹர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் பக்கம்

வைகுண்ட நாதருக்கு எதிரே உலகளந்த பெருமான்,

உலகளந்த பெருமாள் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் பக்கம்
உயரமாக மஹாபலியின் பக்தியைச் சோதிக்க உலகளந்த கோலத்தில் காட்சி அளித்தான். கண் கொள்ளாக் காட்சி தான். உடல் பட்ட சிரமம் எல்லாம் இந்தச் சிற்பங்களைப் பார்த்ததில் பெரிய விஷயமாய்த் தெரியவில்லை. சற்று நேரத்தில் திரை திறக்கப்பட்டது. அற்புதமான தரிசனம்! பெரிய நரசிம்மர். மார்பில் மஹாலக்ஷ்மி. பெருமானுக்கு வலப்பக்கமாக நாமங்களைத் தரித்த கோலத்தில் சிவன்! ஹிஹிஹி! அதே போல் நாமங்களைத் தரித்த வண்ணம் இடப்பக்கமாக பிரம்மா! மூன்று பேரையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும். குடைவரைக் கோயில்! கட்டிய/ செதுக்கிய சிற்பிக்கு என்ன பரிசு கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்தக் கூரிய நகங்களும், வலது உள்ளங்கையில் சிவந்த நிறத்துடன் காணப்படும் ரத்தக்கறையும் ஓர் சிற்ப அற்புதம்! சனகாதி முனிவர்களோடு சூரிய, சந்திரரும் காணப்படுகின்றனர்.

இவருக்கு அபிஷேஹ ஆராதனைகள் கிடையாது. குடவரை மூர்த்தி என்பதால் உற்சவருக்கே அபிஷேஹங்கள் எல்லாம். எப்போது கட்டிய கோயில் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. மிகப் பழைய கோயில் என்று மட்டும் புரிகிறது. அனுமன் குறித்த கதை நாளைக்கு! அதிலேயே இந்தக் கோயிலின் தல புராணமும் வரும். 

17 comments:

 1. அருமை. நான் பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், எனக்கும் கிடைக்கும்னு எல்லாம் நினைக்கலை! :)

   Delete
 2. இன்னும் அந்தப்பக்கம் போகலை. இப்போ மேலோட்டமா வாசிச்சுப் படங்கள்: மட்டும் பார்த்தேன். இன்னொருக்கா நல்லா வாசிக்கணும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, இங்கே ஶ்ரீரங்கத்திலே இருந்து 80 கிலோ மீட்டருக்குள் தான். இரண்டே மணி நேரத்தில் போயிடலாம்.

   Delete
 3. இரண்டு வருடம் முன்பு ஓர் அதிகாலைப்பொழுதில் இந்த நரசிம்மர், மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் செய்தேன்! மறக்க முடியாத நினைவுகள் அவை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அதிகாலை இல்லாட்டியும் நாங்களும் ஏழு மணிக்கெல்லாம் போயிட்டோம். நல்ல தரிசனம்.

   Delete
 4. இந்தக் கோவில் நிறைய முறை பார்த்திருக்கேன்.. ஆனாலும் உங்கள் கண்வழியே பார்க்கும் போது ரம்யமாய் இருக்கு மேடம்!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, என்னோட கண்ணு அப்போ ஸ்பெஷல் கண்ணா?

   Delete
 5. நானும் இங்கே போனதில்லை. சிறு வயதில் ஆஞ்சியைப் பார்த்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம்? இங்கே போகாமல் அப்புறம் எப்படிப் பார்த்தீங்க?

   Delete
 6. நாமக்கல் ஆஞ்சிநேயரை எப்பவோ ஒரு முறைப் பார்த்திருக்கிறேன் நினைவில் சரியாக வரவில்லை. இருந்தால் என்ன உங்கள் பதிவு எல்லாவற்றையும் விளக்குகிறதே

  ReplyDelete
  Replies
  1. அதனால் என்ன ஐயா? பரவாயில்லை! :)

   Delete
 7. நாமக்கல் தரிசனம் செய்து வந்து இருக்கிறீர்கள்.
  படங்கள் எல்லாம் நேரில் பார்த்த அனுபவம் தந்தது.

  ReplyDelete