எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 15, 2015

சூடான பட்டாணிச் சுண்டல்! ஓடி வாங்க, ஓடி வாங்க!

நேத்துச் சுண்டல் ஓரளவுக்கு போணி ஆச்சு! இன்னிக்குப் பட்டாணிச் சுண்டல். பச்சைப் பட்டாணி! எப்படி போணி ஆகப் போகுதுனு தெரியலை! :) நேத்தி கலெக்‌ஷன் கம்மி! இன்னிக்குப் பார்க்கணும்! :) எல்லோரும் சுண்டல் சாப்பிட மட்டும் வராங்க போல! யாரும் பதிவுக்குக் கருத்துச் சொல்ல வரதில்லை! :)போனால் போகட்டும் போடீனு பாடிக் கொண்டே இப்போ அடுத்த பதிவு போடலாம்.படத்துக்கு நன்றி விக்கிபீடியா

நவராத்திரி நான்காம் நாளான நாளைய தினத்துக்கான தேவி கூஷ்மாண்டா ஆவாள். இன்றைக்கு 5 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையை "ரோஹிணி" என பாவித்து வழிபட வேண்டும். இன்றைய தினம் அம்பிகையை ஜயதுர்காவாக அலங்கரிக்கலாம். அக்ஷதைகளால் படிக்கட்டுக் கோலம் போட வேண்டும்.  கதிர் பச்சை மலர்களால் அலங்கரிக்கலாம். 5 வயது கன்னிகைக்குக் கதிர்பச்சை நிறத்தால் ஆன துணிகளோ, ஆபரணங்களோ கொடுக்கலாம். அம்பிகையை இன்று செம்பருத்தி, செந்தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் விசேஷம். சிவந்த நிற வ்ருக்ஷிப் பூக்களும் ஏற்றவை.

காலை கதம்ப சாதமாகச் செய்து குழந்தைக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். இந்தக் கதம்பசாதம் கிட்டத்தட்ட நம்ம் எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் எழுதின தேங்காய்ப் பால் விட்ட தேங்காய் சாதம் போலத்தான். ஆனால் இதில் பூண்டு, வெங்காயம், மற்ற மசாலாப் பொருட்கள் சேர்ப்பதில்லை தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் பாலைத் தனியாக வைக்கவும். இரண்டாம் பாலோடு சம அளவு வெந்நீர் விட்டுக் கலந்து வைக்கவும்.

அரிசி ஒரு கிண்ணம்
காய்கள் கலவையாக ஒரு கிண்ணம் (பீன்ஸ், காரட், சௌசௌ, பட்டாணி, விரும்பினால் முருங்கைக்காய், கத்திரிக்காய், முழு மொச்சையும் சேர்க்கலாம்)

உப்பு தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க

நெய் அல்லது சமையல் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

மி.வத்தல் 4 அல்லது 5

கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன்

தாளிக்க

முந்திரிப்பருப்பு விரும்பினால்

கிராம்பு ஒன்று அல்லது இரண்டு (ஏலக்காயும், கிராம்பும் நல்ல நாட்களுக்குப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளதால் அவை மட்டும் இங்கே பயன்படுத்தலாம்.)

ஏலக்காய் ஒன்று அல்லது இரண்டு

பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு(அவரவர் காரத்துக்கு ஏற்ப)


கருகப்பிலை, கொத்துமல்லி விரும்பினால், பெருங்காயம் விரும்பினால் ஒரு சிட்டிகை

முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் மி.வத்தல், கொ.மல்லி விதை, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.   ஆறியதும் பொடியாக்கி வைக்கவும். மீதமுள்ள எண்ணெயை அதே வாணலியில் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்துத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பின்னர்  பச்சைமிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும்.பின்னர் காய்கறிகளைச் சேர்த்துச் சிறிது வதக்கவும். அரைத்துப் பொடித்துள்ள பொடியைப் போட்டு, உப்புச் சேர்த்து மீண்டும் காய்கறிக்கலவையை வதக்கவும்.  பின்னர் ஒரு கிண்ணம் அரிசியைக் களைந்து வடிகட்டி காய்கறிக்கலவையில் சேர்த்துச் சிறிது நேரம் நன்கு பிரட்டி விட்டுப் பின்னர் வெந்நீர்கலந்த தேங்காய்ப் பாலைத் தேவையான அளவு விடவும். இதை ஒரு குக்கர் பாத்திரத்தில் மாற்றிக் குக்கரில் பாத்திரத்தை வைத்துச் சமைக்கவும். இரண்டு விசிலே போதுமானது. குக்கரைத் திறந்து மீதம் இருக்கும் முதல் தேங்காய்ப் பாலையும் சேர்த்து மீண்டும் குக்கரை மூடி 2 விசில் கொடுக்கவும். பின்னர் குக்கரைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரியைப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி, கருகப்பிலையும் போட்டுக் கிளறினால் கமகமவென்ற மணத்தோடு தேங்காய்ப் பால் கதம்ப சாதம் தயார்!

இதையே புளி சேர்த்தும் சிலர் பண்ணுகிறார்கள். அதற்குதேங்காய்த் துருவலோடு, மி.வத்தல், சீரகம் வைத்து அரைத்துச் சேர்ப்பார்கள். சீரகம் போடாமல் மிவத்தலோடு தனியா, கடலைப்பருப்பு மட்டும் வறுத்தும் அரைத்துச் சேர்க்கலாம்.
இன்றைய சுண்டல்!

பச்சைப்பட்டாணியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கம்போல் ஊற வைக்கும்போதே சமையல் சோடாவைச் சேர்க்கவும். பின்னர் பட்டாணியை நன்கு களைந்து கொண்டு குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் கொடுக்கலாம். பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை வரிசையாகத் தாளித்துக் கொண்டு வெந்த பட்டாணியைக் கொட்டி ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியையும் சேர்க்கவும். சிறிது நேரம் கிளறி விட்டுத் தேங்காய்த் துருவல் சேர்க்கவும் தேங்காயைப்பல்லுப் பல்லாகக் கீறிப் போட்டால் சிலருக்குப் பிடிக்கும். அப்படியும் போடலாம். கூடவே மாங்காய் கிடைத்தால் அதையும் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். சூடான சுவையான   தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் தயார்!!


10 comments:

 1. நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உள்ள தாத்பர்யம் அழகாக எழுத்தில் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா, ஏற்கெனவே விரிவாக எழுதி இருக்கிறேன். ஆகையால் இப்போது சுருக்கம் மட்டுமே! :)

   Delete
 2. ஓ.. எஸ்.. பட்டாணி சுண்டல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் ஜாஸ்தி எடுத்துக்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. எடுத்துக்குங்க! இந்த வருஷம் என்னமோ யாரும் சரியாக வரலை! :( கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டி இருக்கு! :(

   Delete
 3. இப்ப அந்த பானகமுன்னு நான் நினைச்சது ஆரத்தி கலக்கி வச்சதுபோலத் தெரியுதே!

  ReplyDelete
  Replies
  1. ஓ, அதைக் கேட்டீங்களா? அது ஆரத்தி தான்! எப்போவுமே இருக்குமே! கவனிச்சதில்லையா? சுவாமிக்கு ஆரத்தி எடுக்கக் கூடாதாம். கரைச்சு எதிரே வைச்சாப்போதும்னு குடும்ப புரோகிதர் சொன்னார். இல்லாட்டியும் நான் எடுப்பதில்லை! கரைச்சுத் தான் வைப்பேன். மறுநாள் காலையிலே எடுத்துச் சுத்தம் செய்வேன்.

   Delete
 4. சமையல் சோடா உடலுக்குக் கேடாயிற்றே!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஸ்பை, அதுக்குத் தான் ஊற வைக்கிறச்சே போட்டுடறேன். ஊறினப்புறமும் கழுவுவோம் இல்லையா
   ஆமாம், ஸ்பை! அதுக்குத் தான் ஊற வைக்கிறச்சேயே போட்டுடறேன். ஊறினப்புறமும் கழுவுவோம் இல்லையா! அதில் ஒரு ஆறுதல்! :) மன சமாதானம்.


   Delete
 5. நான்காவது நாள் நவராத்திரி தேவி விளக்கம் சிறப்பு! சாப்பாட்டை பத்தி அதிகமா எழுதி அம்பாள் பத்தி குறைவா எழுதறீங்க அப்புறம் சுண்டல் சாப்பிட மட்டும் வர்ரீங்கன்னு குறைசொல்றது நியாயமா?

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, சுரேஷ், நாம தான் தீனி தின்னிக் குழுவைச் சேர்ந்தவங்க ஆச்சே! :) அதோட இதை எல்லாம் ஏற்கெனவே பலமுறை விரிவாக எழுதியாச்சு! ஆகையால் இப்போச் சுருக்கம் மட்டுமே கொடுக்கிறேன். இதையும் நம்ம ஏடிஎம் மின்னூலாக் கேட்டிருக்காங்க. அப்போ உங்களுக்கும் மின்னூல் சுட்டி அனுப்பறேன். :)

   Delete