எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 26, 2016

தக்காளி, வெங்காயம், பறவைகள் குறித்த ஓர் பார்வை! :)

மஹாராஷ்டிராவில் ஒரு குவின்டால் வெங்காயம் 50 ரூபாயாக ஆகி விட்டது. கிலோ ஐந்து ரூபாய்க்கும் கீழே. மத்திய பிரதேசத்தில் வெங்காயம் விளைச்சல் அதிகம் என்பதால் அரசைக் கேட்டு அவற்றை ஏலத்தில் விடச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் விலை போகவில்லை! அந்த வெங்காயம் இப்போது ரேஷனில் இலவசமாக விநியோகம் ஆகிறது. சரியானபடி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தால் ஆறு மாதம் இருந்திருக்கும். இப்போது இப்படி வீணாகவும் போய் இலவசமாகவும் கொடுத்தபடியினால் திடீர்னு வெங்காயம் விலை ஏற வாய்ப்பு இருக்கிறது. அப்போது எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு மோதி அரசைத் திட்டவும் வாய்ப்பு அதிகம். :) மத்திய, மாநில அரசும் இந்த மாதிரி விரைவில் வீணாகும் பொருட்களைப் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகள் செய்ய வேண்டும். அது சரி, வெங்காயம் விலை ஏறினால் அது குறித்து ஜோக்குகள் வருகிற மாதிரி விலை குறைந்தால் வராதோ!!!!!!!!!!!!!!!!!!!!

இப்படித் தான் தக்காளியும் வீணாகப் போகிறது. தக்காளி விரைவில் வீணாகும் பொருளும் கூட! அதையும் தக்கபடி பாதுகாக்கலாம். பொதுவாக உணவுப் பண்டங்கள், முக்கியமாய்க் காய்கறிகள், பழங்கள் விலை குறைந்துள்ளது என்னமோ உண்மை. ஆனால் விலை கொஞ்சம் உயர்ந்தால் மக்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று சொல்லும் ஊடகங்கள் எதுவும் இப்போதுள்ள விலை குறைவைக் குறித்து வாயே திறக்கவில்லை. வேண்டாத கேள்விகளைக் கேட்டுக் காஷ்மீர் பிரச்னையை  மேலும் மேலும் அதிகரிப்பதில் உள்ள ஈடுபாடு நல்ல விஷயங்களிலும் ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும்.


முள்ளங்கி விளைச்சல் குறித்தும் அது நல்ல விலைக்குப் போவதால் விவசாயிகள் அடைந்திருக்கும் மகிழ்ச்சி குறித்தும் நேற்றைய தொலைக்காட்சி செய்திகளில் பார்க்க முடிந்தது. எல்லா சானல்களிலும் இது வரவில்லை! ஆனால் முள்ளங்கி நன்கு விளைந்திருந்தது பார்க்கக் கண்களுக்கே குளிர்ச்சியாக இருந்தது. தஞ்சாவூரில் உள்ள விவசாய நிலங்களில் இது நடந்துள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைத்தது என்றும் கூறினார்கள். இப்படிக் கிடைத்தால் விவசாயத்தில் நம் விவசாயிகள் சாதனையே படைப்பார்கள்.

எங்க வீட்டிலே பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க ஒரு மண் சட்டியும் அதுங்களுக்குத் திங்க நொறுக்ஸ் வைக்க ஒரு தட்டும் வைச்சிருப்போம். அது தவிர ஒரு தம்பளரிலும் தண்ணீர் வைப்போம். நொறுக்ஸ் போட்டால் தான் சாதமே சாப்பிடுதுங்க. சாப்பிட்டு முடிச்சதும் எப்படியோ அந்தத் தட்டைக் கீழே தள்ளி விட்டுடுதுங்க! தண்ணீர்ப் பாத்திரத்தையும் அப்படித் தான் நகர்த்தி விடுதுங்க. ரொம்பவே விஷமக்காரப் பறவைங்களா இருக்கும் போல! முந்தாநாள் தட்டையும் தம்பளரையும் கீழே தள்ளி அப்புறமா நம்ம ரங்க்ஸ் கீழே போய்ப் பக்கத்துத் தோப்பில் இருந்தவங்களைக் கூப்பிட்டுத் தட்டையும், தம்பளரையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி வந்தார். இதுங்க இதே வேலையா வைச்சுக்கப் போகுதுங்கனு கொஞ்சம் யோசனையா இருக்கு! அலகாலேயே இவ்வளவு தூரம் தள்ளி விடுதுங்களே! 

40 comments:

 1. தக்காளி வெங்காயம் குறித்த உங்கள் கருத்து சரியே! விலை குறையும் போது அதைப் பற்றி வெளியில் சொல்லுவதில்லை ஊடகங்கள். நல்ல செய்திகள் பேசப்படுவதே இல்லையே..

  பறவைகளுக்குச் சாதத்திற்குக் கூட்டிக் கொள்ள நொறுக்ஸ் வேண்டும் போல...பேசாமல் நீங்கள் செய்யும் காய்களையும் வைத்தாலோ!!! ஹஹஹஹ் சாம்பார் ரசம் என்று கேட்டுவிடுமோ!!!! ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. காய்களை வைச்சுப் பார்த்தோம். அதுங்களுக்குப் பிடிக்கலை! ) அப்புறமாத் தான் நொறுக்ஸ் வாங்கி வைக்கிறோம்.

   Delete
 2. பெங்களூர் தக்காளியெல்லாம் வாரக்கணக்கா அழுகாது. நம்ம நாட்டுத்தக்காளிதான் சீக்கிரம் அழுகிடும். இதுக்கெல்லாம் குளிர்பதனக் கிடங்கு அமைத்தால் விவசாயிகளுக்கு நட்டம் வராது. இதுக்கெல்லாம் யார் முன்னுரிமை கொடுக்கறா? ஏதோ விவசாயிகள் விளைவிக்கறதுனால நமக்கு எல்லாம் சாப்பிடக் கிடைக்குது

  ReplyDelete
  Replies
  1. நாட்டுத் தக்காளி சிறந்த மருத்துவ குணம் கொண்டது. பெண்களூர்த் தக்காளி கலப்பினம் தானே! :( நான் வாங்கினதே இல்லை. வாங்கினால் நாட்டுத் தக்காளி தான்.

   Delete
 3. எங்கள் வீட்டு ' மொட்டை ' மாடியில் காக்காய்க்கு சாதம் - போடும் இடத்திற்கு அருகிலேயே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நல்ல தண்ணீர் வைத்திருக்கிறோம் ..அதன் மேல் அமர்ந்து காக்கை தண்ணீர் குடிக்கும் பொழுது சில சமயம் பாத்திரம் கீழே தள்ளப்பட்டு விடுவதை தடுக்க , அந்த பாத்திரத்திற்குள்ளேயே ஒரு சின்ன கருங்கல்லை போட்டு வைத்திருக்கிறேன் ..என்ன இந்தக.. காரணம் தெரியாத யாராவது சிலர் பாத்திரத்திலிருந்து கல்லை எடுத்துவிடுகிறார்கள் !

  மாலி

  ReplyDelete
  Replies
  1. மொட்டை மாடியில் வைக்கிறதில்லை. எங்க போர்ஷனின் ஜன்னலிலேயே இதற்கென ஓர் துத்தநாகத் தகட்டைப் பொருத்தி அதில் வைத்து வருகிறோம். மண் சட்டியைச் சாதாரணமா நகர்த்தியது இல்லை. இப்போ என்னவோ இரண்டு நாட்களாக அதையும் நகர்த்துகிறது!

   Delete
 4. எங்கள் பால்கனியிலும் ஒரு பலகை வைத்து , அதில் ,''காக்கை சாதம்
  இத்யாதி அவ்வப்பொழுது பரிமாரிக்கொண்டிருக்கிறோம் ..இரண்டு-மூன்று அணில்களும் , குருவிகளும் ..வந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன ..சில சமயம் சப்தம் செய்து கூப்பிட்டு கேட்கின்றன !

  மாலி

  ReplyDelete
  Replies
  1. ஹையோ, அழகு! இங்கேயும் பறவைகள் வந்து சப்தம் போடும்! ஆனால் கதவைத் திறந்தால் ஓடிடும்! :) பழகணும் போல!

   Delete
 5. விலை குறையும் போது அதைப் பற்றி வெளியில் சொல்லுவதில்லை ஊடகங்கள். // சொல்லுவாங்களே! விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்ன்னு சொல்லுவாங்க!

  ReplyDelete
  Replies
  1. ஆமா இல்ல! இது தோணவே இல்லையே! தம்பின்னா தம்பிதான்! :)

   Delete
 6. ஆசாரமான பறவைகளா இருக்கு. அலமாம வெக்கறீங்கன்னு தள்ளிவிட ஆரம்பிச்சு இருக்கும்! :P

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நல்லா எடுத்து விம் திரவச் சொட்டுக்கள் விட்டுச் சுத்தம் செய்து வைக்கிறோமாக்கும்! :)

   Delete
 7. நீங்க பண்ண சீடையை வைங்க. அப்புறமா வரவே வராது! :P ;P

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இருக்கே! சாப்பிட நல்லாத் தான் இருக்காக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

   Delete
  2. ஆனைக்கும் அடி சறுக்கும் இல்லையோ! சறுக்கிடுத்து! :)

   Delete
 8. விலை குறைவால் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டாராமே விலை குறைவு அதிகம் எல்லாம் மிடில் மென்- ஆல் வருவது என்று தோன்றுகிறது நடுவில்வருபவர்கள் லாபம் பார்க்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், விலை குறைவால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதுக்கும் மோதி அரசே காரணம். :) வெளிநாடுகளில் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் விவசாயிகளோடு நேரடிக் கொள்முதல் செய்கின்றனர். அப்படிச் செய்தால் இங்கேயும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கலாம். அதற்கு முனைந்து திட்டம் போட்டுச் செய்பவரும் இல்லை. இங்குள்ள பெரிய பெரிய முதலாளிகளுக்கு அதில் ஆர்வமும் இல்லை. எனக்குத் தெரிந்து ஒடிஷாவில் அப்படி இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நாங்கள் சென்ற வருடம் டிசம்பரில் போனப்போ கிராமத்துக்கு கிராமம் காய்கறிகள், பழங்கள் போன்றவை ஆங்காங்கே நேரடியாக விவசாயிகளாலேயே விற்கப்பட்டன. பெரிய பெரிய காரில் வரும் மஹாப்பணக்காரர்கள் கூட அங்கே வண்டியை நிறுத்தி வாங்கிச் சென்றனர்.

   Delete
 9. விளைச்சல் அதிகமா இருக்கும்னு முன்கூட்டியே யோசனை பண்ணி பாதுகாப்பு கிடங்கு அமைப்பது யார் வேலை? :p

  ReplyDelete
  Replies
  1. அம்பி, உங்களைப் போல புத்திசாலிங்களுக்கு முன் கூட்டியே விளைச்சல் குறித்து யோசனை பண்ண முடியும். இயற்கைக்கு மாறாக யோசிக்கிறவங்க நம்ம ஊர்ப்பக்கம் அதிகமா இல்லை. விளைச்சல் அதிகம் இருக்கும்னு எதிர்பார்க்கிறச்சே எதிர்பாரா மழை, காற்று, போன்றவற்றால் விளைந்தது நாசமாகலாமே! ஆகவே அரசு பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்புக்கான கிடங்குகளைத் தயார் நிலையில் வைக்கலாம்.

   Delete
 10. விலை குறைவு என்னும் செய்தி எல்லாலாம் போடலாமோ? தப்பில்லையோ? அப்படியே போட்டாலும் மூன்றாம் அல்லது ஐந்தாம் பக்கத்தில் சின்....னதாய்ப் போடுவார்கள். அல்லது வாசுதேவன் ஸார் சொல்வது மாதிரி போடுவார்கள். காக்கைகள் எல்லாம் இப்போ ரொம்ப விஷமக்காரக் காக்கைகளாகி விட்டன.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், விஷமக்காரக் காக்கைனு பாட வேண்டியது தான் பாக்கி. ஆனால் நம்ம வீட்டுக்கு வர விருந்தாளிங்க காக்கைங்க ஜாஸ்தி இல்லை. மைனாக்கள், தவிட்டுக்குருவிங்க எப்போவானும் அபூர்வமாக் குயில்கள்! இந்தக் குயில்கள் இருக்கே எப்போவுமே தனிமையிலே இனிமை காணும் போல! கூட்டத்தோட சேர்ந்தே பார்த்ததில்லை. செம்போத்துக்களும் வரும்! கரிச்சான் குருவியும் வரும்!

   Delete
  2. பொதுவாக எல்லோரும் தொடரும் ஆப்ஷன் க்ளிக்கி விட்டு, தங்கள் தங்கள் மெயில் பாக்ஸில்தான் பின்னூட்டங்களைத் தொடர்வார்கள். பதிவாளர்கள் பதில் சொல்லும்போது ரிப்ளை பாட்டனைக் க்ளிக்கி பதில் சொல்லி விடுகிறீர்கள். மெயில் பாக்சில் படிக்கும்போது நமக்கான பதில் எது என்று கண்டுபிடிப்பதில் சிரமம் வருகிறது. பெயர் சொல்லி பதில் சொல்லும்போது இந்தப் பிரச்னை வராது!

   Delete
  3. நான் ஒரு நாளும் நீங்கள் சொன்னமாதிரிப் பின்னூட்டங்களைக் கொடுத்ததும் இல்லை. பதில்களைக் கொடுத்ததும் இல்லை! நேரடியாகப் பதிவிலேயே பின்னூட்டங்களானாலும் சரி, பதில்கள் ஆனாலும் சரி கொடுத்து விடுவேன். அதுவும் ரிப்ளை கொடுக்கையில் அவரவர் பின்னூட்டங்களுக்கு அடியிலேயே கொடுப்பதால் பிரச்னை இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் சொன்னதில் எங்கே குழப்பம் நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை! :)

   Delete
  4. அவரவர் பெயர் சொல்லி விளித்து பதில் சொன்னால் நல்லது என்று சொல்ல வந்தேன். பதிவில் வந்து யாரும் பின்னூட்டங்களுக்கு பதிலைப் படிப்பதில்லை என்பதால் பெயர் சொல்லி பதில் தரலாமே என்று சொல்ல வந்தேன்! தவறாகப் பட்டிருந்தால் மன்னிக்கவும்!

   :))

   Delete
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போத் தான் ஜிஎம்பி சாரோட பேசிட்டு வந்தா இங்கே நீங்களா? இன்றைய நாள் என்னுடைய நாள் இல்லைனு நினைக்கிறேன். காலம்பர சந்திராஷ்டமம்னு சொன்னது எனக்குத் தானோ? ஹிஹிஹ்ஹி, நான் பதிவில் வந்து தான் பின்னூட்டங்களுக்கான பதிலைப் படிக்கிறேன், படித்து வருகிறேன், இனிமேலும் படிப்பேன் என்று உரக்க அறிவிப்புச் செய்து கொள்கிறேன். :)

   Delete
 11. இந்த விவசாயிகள் இப்படித்தான். விலை ஏறி இருக்கும்போது எல்லோரும் அதை பயிர் செய்வார்கள். அதனால் விலை மிகவும் கீழே இறங்கிவிடும்.

  மேல் நாடுகளில் மதிப்புக்கு கூட்டு முறையாக விலை குறைவாக இருக்கும்போது வெங்காய பவுடர் (onion powder), தக்காளி சல்சா, சாஸ், கெட்சப், போன்றவைகளை செய்து வருடம் முழுதும் விற்பனை செய்கிறார்கள். நம் நாட்டிலும் வெங்காய வடகம் (பெரிய வெங்காயத்தில் செய்யமுடியுமா?) தக்காளி தொக்கு, தக்காளி வடகம், போன்றவற்றை செய்யலாம். ஆனால் மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். சந்தைப் படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய எந்திரங்கள் உண்டாக வேண்டும்.

  MTR போன்ற சிலர் முயற்சிப்பார்கள். ஒரு தடவை அவர்கள் களாக்காய் ஊறுகாய் போட மார்க்கட்டில் உள்ள களாக்காய் முழுதும் அவர்களுக்கே போய் சேர்ந்தது.

  எங்கள் வீட்டில் காம்பௌண்ட் சுவர் தூணில் சரியாக பன்னிரண்டு மணிக்கு சத்தம் வடித்தவுடன் சூடு சாதம் வைப்போம். அதற்கென்று 2 காக்கை மற்றும் 3 அணில் காத்திருப்பார்கள். அணில்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காகங்கள் காத்திருக்கும். அப்படியே காகங்கள் முந்தினால் அணில்கள் காகங்களை விரட்டும். சூடு சாதம் இல்லாமல் ஆறிவிட்டால் காகங்கள் சாப்பிடாமல் போய்விடும்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஒரு வயலில் பயிரிடுவதை மட்டும் வைத்து விநியோகம் செய்ய முடியுமா? எல்லா இடங்களுக்கும் அனுப்புவதற்கும் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்கும் அவரவர் வசதி விருப்பத்தை ஒட்டித் தானே பயிரிடுவார்கள்! ஆகவே இதில் குற்றம் சொல்ல முடியாது. வெளிநாடுகளில் விற்பது போன்ற வெங்காயப் பவுடர் எல்லாம் நம்ம ஊர்ப்பக்கம் அவ்வளவா விற்காது. குடிசைத் தொழிலாகத் தக்காளித் தொக்கு, தக்காளி வடகம் போன்றவற்றை வேண்டுமானால் ஊக்குவிக்கலாம். அதையும் குறைந்த அளவில் தான் சந்தைப்படுத்த முடியும். வெகு விரைவில் வீணாகும் பொருள்!

   Delete
  2. ஆமாம், சாப்பாடெல்லாம் சூடாய்த் தான் வேண்டி இருக்கு. இதுங்க படுத்தற பாடு இருக்கே! :)

   Delete
 12. விலை குறைவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி இல்லையே! அதனால் போடுவதில்லையோ என்னமோ? எந்த ஊடகங்களும் இப்போது நடுநிலைமையுடன் செய்தி வெளியிடுவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், மக்களுக்கு விலை ஏற்றம் மகிழ்ச்சி அளிப்பதில்லை! ஆக மொத்தம் ஏதேனும் ஒரு சாராருக்குக் குறை இருக்கத் தான் செய்யும். இல்லையா? அனைவரையும் ஒருசேரத் திருப்திப் படுத்துவது கஷ்டமே!

   Delete
 13. விஷமக் கார பறவைகள் போலிருக்கே! தட்டுக்கு கீழே கொஞ்சம் பெவிக் குயிக் வச்சிருங்களேன்! ஹாஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. எவர்சில்வர் தட்டில் பெவிக் குயிக் ஒட்டிக்குமா? தெரியலை! இப்போல்லாம் உடனுக்குடன் பார்த்துத் தட்டை எடுத்துடறோம். :)

   Delete
 14. விளைச்சல் அதிகரிக்கும் பொழுது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோர் வெகு குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் அவர்கள் உற்பத்திக்கு செலவழித்தது கூட கட்டுபடியாகவில்லையே என்பதினால் சோர்ந்து போகின்றனர்.

  உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகப்படியான சாகுபடியால் வெண்டைக்காய் விலை வெகுவாக குறைந்தது. நம்பினால் நம்புங்கள், கிலோ ரூ.1/-க்கு அவர்களிடமிருந்து கொள்முதல் செய்தார்கள். பச்சைப் பசேலென்று ஆரோக்கியமான வெண்டைக்காயை கூடை கூடையாக விவசாயி இனாமாகக் கொடுப்பது போல கொடுக்கிறான். டி.வி.யில் காட்டினார்கள். உடனே வெண்டைக்காயின் சந்தை விலையும் வீழ்ச்சி அடைய வேண்டும் தானே?.. அது தான் இல்லை.

  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெண்டைக்காயின் வரத்து அதிகம் இருந்தும், தரம் குரைந்த வெண்டைக்காய் கூட கிலோ. ரூ.24/-க்கு குறையவில்லை. அப்போ சாகுபடி செய்யும் விவசாயி என்ன பாவம் செய்தான்?.. சொல்லுங்கள்.

  அடுத்தபடியாக பொதுமக்கள். எது என்ன விலை குறைந்தாலும் அதனால் அவர்களுக்கும் சந்தோஷம் இல்லை.

  உடனே எங்கள் ஊரில் இப்படி இல்லை என்றெல்லாம் எழுதாதீர்கள். அது சரியான பதில் இல்லை.

  நான் சென்னை நிலவரத்தைச் சொல்லியிருக்கிறேன். ஏன் இப்படி என்று சொன்னீர்கள் என்றால் அது குறைந்த பட்சம் இந்த பதிவு எழுதியதற்கான அர்த்தபூர்வமான பதிலாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அரசு விற்கும் பாலின் விலையே சென்னையில் ஒரு விலை, திருச்சியில் ஒரு விலை, காஞ்சீபுரத்தில் ஓர் விலை. சென்னையில் நீலநிற ஆவின் பால் 20 ரூ, திருச்சியில் 21 ரூபாய் (ஆவின் பால் பூத்துகளிலேயே) அதுவே காஞ்சீபுரத்தில் 22ரூ அல்லது 23 ரூபாய் என விற்கப்படுகிறது. அப்படி இருக்கையில் காய்கறிகள் விலை மட்டும் எல்லா இடத்திலும் ஒரே விலையா இருக்கும்? வாய்ப்பே இல்லை!

   ஆனால் சென்னையில் கோயம்பேடு விலை நிலவரம் தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் போட்டிருக்கிறபடி சராசரியாகக் கிலோ பத்து ரூபாய்க்குத் தான் வெண்டைக்காய் விற்கப்படுவதாகச் சொல்கின்றனர். இதைக் குறித்துக் கோயம்பேடு விவசாயி ஒருத்தர் கூடச் சொல்லி இருந்தார். ஆகவே அங்கிருந்து மற்ற இடங்களுக்கு வரும்போது ஒரு வேளை விலை ஏறி இருக்கலாம். இங்கே விலை குறைந்து உள்ள பொருட்களை விலை குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல முடியும். :) மாற்றிச் சொல்ல முடியாது!

   Delete
  2. திருச்சியில் காலிஃப்ளவர் கிடைப்பதே அதிசயம். இப்போது கிடைக்கிறது என்பதோடு அல்லாமல் நல்ல வெள்ளை நிறமுள்ள தரமான காலிஃப்ளவர் 25 ரூபாய்க்குக் கிடைக்கிறது என்பது அதிசயமே! அதுவே வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை இலை, வாழைப்பூ போன்றவற்றிற்குப் பெயர் போன திருச்சியில் இப்போது இவை சரிவரக் கிடைப்பதில்லை. காற்றினால் மரங்கள் சாய்ந்து இலைகள் கிழிபடுகின்றன. வாழைத் தார்கள் சரியான பக்குவத்துக்கு வரும் முன்னரே கீழே விழுந்து விடுகின்றன. பழங்கள் இயற்கையாகப் பழுக்க வைக்க முடியவில்லை. இப்படி எத்தனையோ காரணங்கள்!

   Delete
  3. வெண்டைக்காய் விலை குறைந்து தான் இருக்கிறது. கால்கிலோ வெண்டைக்காய் பத்து ரூபாய்க்கு வாங்கிய காலம் போய்விட்டது. கிலோ பத்து ரூபாய் என்பதால் கடைகளில் அரைக்கிலோவுக்குக் குறைந்து தர மறுக்கின்றனர். தக்காளியும் அப்படியே!

   Delete
 15. நல்ல பகிர்வு. விலை குறைந்தாலும் கஷ்டம் தான்.... போட்ட முதலை எடுக்க முடியாது போகும் விவசாயிகளுக்கு...

  ReplyDelete
  Replies
  1. இப்போக் கொஞ்சம் விலை ஏற்றம் தெரிகிறது. :)

   Delete
 16. பறவைகளை நீங்கள் ரசித்ததை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இப்போதைய செல்லங்கள் இவை தானே! :)

   Delete