கிருஷ்ணனுக்குப் பால், தயிர், வெண்ணெய் அவல் வெல்லம், அப்பம், முறுக்கு, தட்டை, உப்புச் சீடை, வெண்ணெய்ச் சீடை, கோளோடை, சீப்பி, பால் பாயசம், வடை, வெற்றிலை, பாக்கு, பழங்கள் நிவேதனம் பண்ணியாச்சு. பக்ஷணங்கள் எல்லாம் இந்த வருஷம் சொதப்பல்! :( முறுக்குச் சுத்தவே வரலை எனக்கு! அதிர்ச்சியாப் போயிடுச்சு! மற்ற பட்சணங்களும் சுமார் ரகம் தான். ஆகவே கவனிச்சு ஜாக்கிரதையாச் சாப்பிடுங்க! வெல்லச் சீடை பரிசோதனையில் இறங்கவே இல்லை! அதுவும் காலை வாரிடுச்சுன்னா என்ன செய்யறது! கிருஷ்ணன் குழந்தையா! அதனால் பக்ஷணங்கள் எல்லாமும் மிருதுவாகவே வந்திருக்கு! பல்லே இல்லாதவங்க கூடச் சாப்பிடலாம்.
கிருஷ்ணா ஏண்டாப்பா இப்படி சோதிக்கிறே என்னைனு வாய் விட்டு அழலாம் போல இருக்கு! முறுக்கு அப்படிப் படுத்திடுச்சு! நான் கல்யாணம் ஆன புதுசிலே கூட இப்படிச் சொதப்பினது இல்லை. முறுக்கும் நல்லாவே வரும். என்ன அப்போல்லாம் கெட்டியாச் சுத்துவேன். மெலிசுச் சுத்து சுத்தினதில்லை. இப்போச் சுத்தவே வரலை! என்னவோ போங்க! ஒண்ணும் புரியலை!
'நாலாவது படத்தைத்தான் நல்லா கவனித்துப்பார்த்தேன். (கிருஷ்ணனுக்குப் படைச்சாச்சா என்று மனது கேள்விகேட்டது). அப்பம் கொஞ்சம் கருகிவிட்டதுபோல் தெரிந்தது. உப்புச்சீடையில், சூப்பி (இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? விரல் சைசுல பண்ணுவதை) கலந்துவிட்டது. அப்பம் உள்ள பாத்திரத்துக்குக் கீழ உள்ள பாத்திரத்தில் உள்ள இனிப்பு என்ன என்று தெரியவில்லை. கை முருக்கிலும் வரிகள் சரியாக வரவில்லை. கிருஷ்ணன் இதெல்லாமா பார்க்கிறான். இத்தனையும் பண்ணி அவனுக்குப் படைக்கும் மனதைத்தானே பார்க்கிறான்.
ReplyDeleteஹிஹிஹி, படங்களைப் பெரிது பண்ணிப் பார்த்திருக்கீங்க! முந்தாநாள் சுற்றிய முறுக்குகள் கொஞ்சம் பரவாயில்லை ரகம். நேற்றுத் தான் சுத்தமாகச் சுத்த முடியலை! முக்கியமா அடுப்பருகே நிற்க முடியாமல் சூட்டின் தாக்கம் அதிகமாகத் தெரிந்தது. :( அப்பம் கருகவெல்லாம் இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்ல பொன்னிறமாக வந்திருக்குனு ரங்க்ஸே சொன்னார். அது என்னமோ தோசை, அப்பம் போன்றவை நேரிலே பார்க்கிறச்சே நல்ல நிறமாகவும் படம் எடுத்தால் கொஞ்சம் நிறம் அதிகமாவுமே தெரியுது! :) அப்பம் பக்கத்தில் உள்ள கிண்ணத்தில் அவலுக்குத் துணையாக வெல்லக்கட்டி.
Deleteசூப்பினு தான் என் அப்பா சொல்லுவார். சூப்பி ஒரு ஐந்தாறு தான் பண்ணினேன். அதனால் சீடை மேலேயே போட்டு விட்டேன். அதுவாக் கலக்கலை. நான் தான் போட்டேன். :)
Deleteநெல்லைத் தமிழன் சூப்பி ஆமாம் சிறு குழந்தைகளுக்கு பல் முளைக்கும் நேரம் செய்துகொடுப்பார்கள் நம்மூர் பக்கத்தில்....பல வருடங்களுக்குப் பிறகு இந்த வார்த்தை கேட்டு மனது மகிழ்ச்சி... இப்போது என் தங்கை பெண்ணிற்குப் பிறந்த குழந்தை 9 மாதங்கள் என்பதால் நேற்றுதான் வாட்சப்பில் சூப்பி பற்றி அவளுக்கு அனுப்பினேன். இதோ இப்போது உங்கள் கருத்தில்....
Deleteகீதா
கீதாக்கா சூப்பி ! வெகு நாட்கள் ஆயிற்று வார்த்தையைக் கேட்டு...
Deleteஆமாம், சூப்பினு தான் சொல்வாங்க! நான் என்னமோ சீப்பினு எழுதிட்டேன். இது என் மாமியார் வீட்டில் புழங்கும் சொல்! ஆகையால் அதுவாக வந்திருக்கு!
Deleteதேங்காய் சீயன்லாம் காணோம். இந்தத் தடவை மனோகரம் பண்ணலாம்னு இருக்கேன். மனைவி, அதெல்லாம் ஸ்ரீஜெயந்திக்குக் கிடையாது என்று சொல்றா
Deleteஎன் பிறந்த வீட்டில்தான் சிய்யம்/சிய்யன் எல்லாம் பண்ணுவாங்க. இங்கே அப்பமே கிடையாது. என் மாமியாருக்கு நான் அப்பம் பண்ணுவது தெரிந்தால் அவ்வளவு தான்! :)))) பாயசம் கூட வைக்க மாட்டாங்க. நோ வடை! நான் தான் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்கேன். சிய்யம் பண்ண ஆசைதான். மாமா சாப்பிட மாட்டார். சீக்கிரம் செலவு பண்ணணும். எல்லாத்தையும் நானே சாப்பிட முடியுமா? அக்கம்பக்கம் இங்கே எல்லாம் அதிகம் பரிமாற்றம் இல்லை. அரிசி கர்ச்சிக்காய் பண்ணுவேன். இப்போல்லாம் அதுவும் பண்ணுவதில்லை. ஒரு நாள் பண்ணிப் படங்களோடு போடறேன். இது புக்ககத்து வழக்கம் அரிசி கர்ச்சிக்காய் பண்ணுவது.
Deleteசரியா வரலைன்னு நேர்மையா ஒத்துக்கறீங்களே... க்ரேட். ஏகப்பட்ட தின்பண்டங்கள் பெயர் சொல்லி இருக்கீங்க... ஓ மை காட்... எவ்வளவு ஐட்டங்கள் தின்னாமல் இருந்திருக்கிறேன் நான்?!!!
ReplyDeleteசொதப்பல் சொதப்பிட்டு நேர்மை என்ன வேண்டிக்கிடக்கு? :) உள்ளதை உள்ளபடி ஒத்துக்கணும் தானே! முறுக்குச் சுற்றுச் சரியா வராததுக்கு மாவும் ஒரு காரணம். மாவு மிக்சியில் அரைத்தேன். கொர கொரனு வந்திருக்கு! :) பாதிக்கு மேல் அரைக்கவும் முடியலை. இரண்டு ஆழாக்கு ரவை அப்படியே இருக்கு! அதனால் தான் பக்ஷணங்களும் கொஞ்சம் போல்! :)
Deleteகீதாக்கா மாவை மிக்ஸியில் தண்ணீர் விட்டு நைசாக அரைக்க வரலையா அப்படியும் செய்யலாமே. அரைத்து விட்டு தண்ணீர் சற்றுக் கூடுதலாக இருந்தால் துணியில் சுற்றி வைத்துவிடலாமே புழுங்கரிசி முறுக்கிறிகுச் செய்வது போல்...
Deleteகீதா
முடியலை! அதனால் அரைக்கலை. முதல்நாள் புழுங்கலரிசியை அப்படித் தான் நீர் விட்டு அரைத்து வெள்ளைத் துணியில் முடிந்து வைத்துப் பின்னர் முறுக்கும், தட்டையும் செய்தேன். இதை அப்படி முயலவில்லை. கிரைண்டரில் போடுவதெனில் நிறையப் போடணும். மிக்சியில் என்னமோ சரியா அரைபடலை! சரியாக வராததற்கு மனம் பதிந்து வேலை செய்யாததும் ஓர் முக்கியக் காரணம்! :(
Deleteஉங்களுக்கு டயபடீஸ் இருக்கிறது. விரல் நரம்புகள் உணர்வு இழந்து வருகின்றன.peripharal diabetic neuropathy. அதனால் பாத்திரங்கள் முக்கியமாக கண்ணாடிப் பாத்திரங்கள் பிடிப்பது சில சமயம் தவறும். அது போலத்தான் முறுக்கு சுற்றுவதும். கைமுறுக்கு சுற்ற plastic முறுக்கு அச்சு (gear எல்லாம் உண்டு) விற்கறது. அதை வாங்கிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteவயதாகும்போது எனக்குத் தான் தெரியுமே என்று நிறைய பதார்த்தங்கள் செய்து பூஜை செய்ய வேண்டாம். கொஞ்சம் போதும். அசதி உண்டாகாது.
ஜெயக்குமார்
P.S
Vitamin B1 B6 B12 tablets Neurobion forte or Doloneuron
may provide some relief.
வாங்க ஜேகே அண்ணா, இப்போதெல்லாம் உங்களை என் பதிவுகளில் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. ஆகவே வருகைக்கு முதலில் என் நன்றி. எனக்கு சராசரி சர்க்கரை அளவு பார்த்தப்போவே குறைவாகத் தான் இருந்தது. இது இரண்டு மாசம் முன்னால் பார்த்தது. சர்க்கரை அளவு எல்லைக்கு மிக அருகே இருந்து வருகிறது என்னமோ உண்மை தான். ஆனால் எனக்கு எப்போவுமே பாத்திரங்கள் தவறும். கையில் எடுப்பதைப் பிடிக்க முயல்கையில் தவறும். அதுவும் மாமியார், மாமனாரோடு கூட்டுக் குடித்தனமாக இருக்கையில் நிறையத் தவறும். இப்போதெல்லாம் பாத்திரங்கள் விழுவதில்லை. வருடக் கணக்காக உப்பு, புளி பீங்கான் ஜாடியில் தான் வைக்கிறேன். நல்லவேளையா ஒண்ணும் ஆகலை. வயசானது ஒரு முக்கியக் காரணம் தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். கைகளை விடக் கால்கள் தான் பிரச்னை எனக்கு. தொடர்ந்து நிற்க முடியலை. :)
Deleteஅந்த ப்ளாஸ்டிக் கைமுறுக்கு அச்சு வாங்கி வந்தேன். ப்ளாட்ஃபார்ம் கடை பெண்களூரில். அந்த நபர் பரபரன்னு செஞ்சு காமிச்சப்ப அட! இவ்ளோ சுலபமான்னு மாய்ஞ்சு போயிட்டேன். அப்புறம்.... ஊஹூம்.... ஒன்னும் வேலைக்காகலையாக்கும்:-(
Deleteநான் ஒரு கேஸரியும் சுண்டலுமா முடிச்சுக்கிட்டேன். போறுமுன்னான் நம்ம க்ருஷ் :-)
வாங்க துளசி, இந்த மாதிரி செயற்கையான சமாசாரங்கள் எல்லாம் எனக்குப் பிடிக்காது; ஒத்துக்காது! என்னமோ தெரியலை, சுத்த முடியலை! சுத்தின வரை போதும்னு விட்டுட்டேன். :( இங்கேயும் கிருஷ்ணனுக்கு இனிமேல் அப்படித் தான் செய்யணுமோ என்னமோ!
Deleteஆமாம் அது என்ன கோளோடை. செய்முறை என்ன?
ReplyDelete--
Jayakumar
தஞ்சை ஜில்லா செய்முறை. வெண்ணைச் சீடைக்குப் பிசையும் மாவிலே முக்கோணமாகச் சுற்றிப் பொரித்து எடுப்பார்கள். வெல்லச் சீடை மாவிலும் செய்யலாம்.
Delete//முறுக்கு அப்படிப் படுத்திடுச்சு//
ReplyDeleteசாம்பு மாமா கோவிலுக்கு போயிருந்தாரா? :)
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete//கோளோடை//
ReplyDeleteஅப்படினா?
மேலே சொல்லி இருக்கேன் பாருங்க!
Deleteஎத்தனை பலகாரம்...கிருஷ்ணன் கண்டிப்பா சந்தோசமா இருப்பார்...
ReplyDeleteஎங்க வீட்டுக்கு கிருஷ்னர் இன்றைக்கு தான் வருவார்...so waiting...
கிருஷ்ணன் வரவுக்கு வாழ்த்துகள். இதை விட அதிகமாய் எல்லாம் செய்தாச்சு! இப்போ இதுக்கே நாக்குத் தள்ளுது!
Deleteநிறையவே செய்திருக்கிறீர்களே! படங்களும் அருமை. பரவாயில்லை நன்றாக வரவில்லை எனினும் இறைவனுக்கும் நம் மனம்தான் முக்கியம் இல்லையா...
ReplyDeleteம்ம்ம்ம்ம், ருசி சரியாத் தான் இருக்கு! போன வருடம் உப்பு அதிகம். இந்த வருடம் அதெல்லாம் சரியா இருக்கு! :) சாப்பிடலாம்!
Deleteவிசேஷ தினங்கள் என்றாலேயே நிவேதனம் செய்வதும் கடவுளுக்குப் படைப்பதாகக் கூறி நாம் உண்பதுதானே அதுவும் தேவைதான் பலகாரங்களையெல்லாம் தினமுமா செய்ய முடியும் ஆனால் பிள்ளையார் என்றால் கொழுக்கட்டை கிருஷ்ணன் என்றால் முறுக்கு சீடை என்று யார் எப்போது தீர்மானித்தார்கள் என்பதுதான் விளங்கவில்லை. அதுவும்படங்களைக் காண்பித்து எடுத்டுக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதும் கடவுளுக்குக் காண்பிப்பது போல் இருக்கிறது இருந்தாலும் அயராது செய்யும் உங்களுக்குப் பாராட்டுகள்
ReplyDeleteஐயா, உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
Deleteகண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திரு கோளூரே!
என்கிறார் ஆழ்வார் திருவாய்மொழியில்! அவன் கொடுத்ததை அவனுக்குக் காட்டி இவற்றை எல்லாம் கொடுத்து என்னைப் பெருமை அடைய வைத்ததற்கு உனக்கு நன்றிப்பா என்று சொல்வது தான் நிவேதனம் செய்வதின் தாத்பரியமே! உடனே இறைவனா வந்து உண்கிறான்! நாம் தின்பதற்கு என்று பண்ணுகிறோம். இதெல்லாம் தேவைதானா என்றெல்லாம் கேள்விகள் எழலாம். நாம் செய்கையிலேயே இதெல்லாம் கண்ணனுக்கு என்னும் நினைப்புடன் செய்வதால் அவை எல்லாம் மானசிகமாகக் கண்ணனுக்குப் படைக்கப்பட்டுப் பின்னர் அவன் பிரசாதமாக நம்மிடம் வருகின்றன. நாம் சமைக்கையில் நல்ல எண்ணங்களுடன் சமைப்பது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது தானே!
பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை என்பதில் உள்ள தாத்பரியத்தைப் பலரும் பல முறை சொல்லி இருக்கின்றனரே! கண்ணன் குழந்தை என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த பலகாரமாகச் செய்கின்றனர். படங்களைக் காட்டி எடுத்துக்கோங்க என்று நான் சொல்வது சும்மா விளையாட்டுக்குத் தான் என்று இங்கே கருத்துச் சொல்ல வரும் நண்பர்கள் அனைவருக்குமே நன்கு தெரியும்; புரிந்தும் கொள்வார்கள். அயராமல் எல்லாம் செய்யவும் இல்லை. இந்த வருஷம் கொஞ்சம் அசந்து தான் விட்டேன். :(
Deleteகீதா மேடம்.. உங்களுக்கு ஒரு கேள்வி. சோறு என்பது வைணவர்கள் உபயோகிக்கும் வார்த்தை அல்ல. அப்புறம் ஏன் ஆழ்வார் உண்ணும் சோறு என்கிறார்?
Deleteஎனக்குத் தெரிந்து ஆழ்வார்கள் மட்டுமில்லாமல் அனைவருமே ஒரு காலத்தில் சோறு என்ற சொல்லைத் தான் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆண்டாள் கூடப் பால்சோறு என்று தான் சொல்லி இருக்கிறாள். தமிழில் சோறு தான் பயன்பாட்டில் இருந்துள்ளது. அன்னம், சாதம் எல்லாம் பிற்காலத்தில் வந்திருக்கலாம்.
Deleteபதிவு போட்டு நாளாச்சு. உங்கள் பதிவை பார்த்தது போடும் ஆசை வந்து விட்டது. பால்கோவா மட்டும் வீட்டில் (ஒரு சின்ன கிண்ணம் அளவு) செய்தேன்,மற்றவை எல்லாம் சுய உதவி குழு பெண்கள் தயார் செய்தவை. வெல்ல சீடை, உப்பு சீடை,வாங்கி வீட்டில் இருந்த பால், தயிர், வெண்ணை, அவல் வைத்து வணங்கி முடித்துக் கொண்டேன். கண்ணன் என் நிலைமையை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார்.
ReplyDeleteஉறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து காலியாகி விட்டது.
எல்லோரும் என்னையும், சுயஉதவி குழு பெண்களையும் பாராட்டினார்கள்.
மகிழ்ச்சி..
இனிமேலே நம்ம கிருஷ்ணனும் இப்படித் தானோனு நினைக்கிறேன். எங்க பிறந்த வீட்டில் அம்மாவுக்கு ரொம்ப முடியலைனா வெல்ல அவல் செய்துட்டுப் பால், தயிர், பழங்கள் நிவேதனம் செய்வோம். அது போலச் செய்ய வேண்டியது தானோ என்னமோ! :(
Deleteநீங்க பதிவுகளும் போடுவதில்லை. பதிவுகளுக்கு வருவதும் இல்லை! உடல் நிலை சரியா இருக்கீங்க தானே!
Deleteஒன்னும் பிரச்சனை இல்லை !! முகவரி தரேன் ஒரு கூரியர் அனுப்பிடுங்க :) #என்ன கனெக்டிகட் வந்து சேரனும்
ReplyDeleteஹாஹா, கனெக்டிகட் தானே. அனுப்பினால் போச்சு. காஷ் ஆன் டெலிவரிலே அனுப்பிடறேன். :)
Deleteம்ம்ம்... கிருஷ்ணர் எப்படியிருந்தாலும் சாப்பிடுவார்... :)
ReplyDeleteநமக்குத் தான் கஷ்டம்!
கிருஷ்ணர் எங்கே சாப்பிடறார்! :)
Deleteமுறுக்கு உங்களோட முறுக்கிகிட்டு போயிருச்சோ? ஏகப்பட்ட பலகாரங்கள் குட்டி கிருஷ்ணர் சாப்பிட ரொம்ப நேரம் எடுத்திருப்பார் போல! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅது என்னமோ தெரியலை, சுத்தவே முடியாமல் முழங்கை வரை இழுக்க ஆரம்பிச்சது! :( சரினு விட்டுட்டேன். குட்டி கிருஷ்ணர் எல்லாத்தையும் ருசி பார்த்ததோடு சரி.
Delete