ஒரு வாரமா சூட்டில் வெந்து கொண்டிருந்தோம். இப்போ மறுபடி சொர்க்கத்துக்கு மீண்டாச்சு. அப்பாடானு இருக்கு. விபரங்கள் மெல்ல, மெல்ல. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் பலருடைய ரத்தமும் சிந்தித் தான் இந்த சுதந்திரமே நமக்குக் கிடைச்சிருக்கு. ரத்தம் சிந்தினவங்க பத்தி நாம் அதிகம் அறியவில்லை. பஞ்சாபில் ஜலியாவாலாபாகில் ஜெனரல் டயரால் உயிரிழந்தவர்கள் பலர். அதன் பின்னரும் மக்களைப் பல விதங்களில் கொடுமைப்படுத்தியவை எல்லாம் அங்கே படங்களாக, செய்திகளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் படம் எடுத்துப் போடுவதற்குத் தடை! :( ஆகவே பலரின் தியாகங்கள் வெளியே வரவே இல்லை. அத்தகைய மௌனராகம் பாடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நம் நன்றியை இன்று தெரிவித்துக் கொள்வோம்.
ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்!
போன ஒரு வாரம் கொஞ்சம் நிம்மதியா இருந்தோம், சண்டை சச்சரவு இல்லாமல். இப்படியா சொல்லாமல் புஞ்சாப் பக்கம் போவது. சர்தார்களின் சொர்க்கம் பொற்கோவில் பற்றிய பதிவு எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete--
Jayakumar
ஹாஹாஹா, பஞ்சாப் போயிட்டு வந்து வாகாவிலே என்னோட தேசபக்தி ரத்தம் கொதிச்சது பத்தி எல்லாம் ஏற்கெனவே எழுதிட்டேனே! :)
Deletehttp://sivamgss.blogspot.in/2014/03/blog-post_14.html
Deleteஇந்தச் சுட்டியில் பார்க்கவும்.
ஜெய்ஹிந்த்.....
ReplyDeleteஎங்கே ரொம்ப நாளா காணோமேன்னு நேத்து கூட நினைச்சுட்டு இருந்தேன்... நலம் தானே...
ஶ்ரீரங்கம் வந்திருக்கீங்களா? :) உங்களோட பதிவுகள் நிறையப் படிக்கலை. மெதுவா வரணும். மற்றபடி நலமே!
Deleteநற் சுதந்திர தின வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteவாழ்த்துகள் வல்லி.
Deleteஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDelete//ஒரு வாரமா சூட்டில் வெந்து கொண்டிருந்தோம்.//
ராஜஸ்தான் போயிருந்தீங்களா?
ஹிஹிஹிஹி, ராஜஸ்தானிலே 50 டிகிரி செல்ஷியஸிலே எல்லாம் இருந்திருக்கேன். மின் விசிறி தான் இத்தனைக்கும். ஏசி எல்லாம் இல்லை. ஏர் கூலரும் இருந்ததில்லை. மின் விசிறி போட்டுக் கொண்டாலே போதும்! மாலை/இரவு எட்டு மணிக்கு மேல் பூமித்தாய் குளிர்ந்து விடுவாள். இரவு வெளியே படுத்தால் போர்த்திக்க வேண்டி இருக்கும். :) இதற்கு நேர்மாறாகக் குளிர்காலத்தில். 0 டிகிரி செல்ஷியஸிலே கூட இருந்திருக்கோம். குழாயில் தண்ணீர் வராது! :)
Deleteமாட்டேனே! மாட்டவே மாட்டேன்! எங்க போயிருந்தீங்கன்னு கேக்கவே மாட்டேன்! ஏன் கேக்கணும்? மாட்டேன்!
ReplyDeleteசொல்ல மாட்டேனே! :P :P :P :P :P
Deleteசுதந்திரதின நல்வாழ்த்துக்கள் அம்மா!
ReplyDeleteநன்றி செந்தில்குமார். உங்களுக்கும் தாமதமான வாழ்த்துகள்.
DeleteOK
ReplyDeleteFrom Mobile
வாங்க கில்லர்ஜி, வேலை மும்முரமோ? உங்க பதிவுகள் நிறைய இருக்கு. வரணும்!
Deleteசுக்கா மிளகா சுதந்திரம் கிளியே அக்காள் வந்து கொடுக்க :)
ReplyDeleteஇனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் :)
#ஆமா எங்க போய்ட்டிங்க ?? நான் தினமும் ஆஜர் போட வந்தேனே !!!!
ஹிஹிஹி, எங்கே போனேன்னு சொல்லப் போறதில்லையே!
Deleteஎன்ன இருந்தாலும் நீங்க என் உபிச என்பதை நிரூபிக்கிறீங்க! கண்ணிலே தண்ணியே வந்துடுச்சு! :)
ReplyDeleteவீடு எப்போதும் சொர்க்கம்தான்
ReplyDeleteஅங்கேயும் வீடு தான்! என்றாலும் என்னமோ ரசிக்கலை! :)
Deleteபுதியதொரு பயணக்கட்டுரைக்கு நாங்க ரெடி!
ReplyDeleteம்ஹூம் வராதுனு நினைக்கிறேன். :)
Deleteசுதந்திர தின வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.
Delete