எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 16, 2016

மஹாலக்ஷ்மியும், குழந்தை வேலப்பரும்!



சமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்த போது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் போகும் வழியில் இருந்த மஹாலக்ஷ்மி கோயில். ஒரு தூரப் பார்வையில்.





மஹாலக்ஷ்மி கோயிலில் நம்ம ஆள் ஜம்முனு உட்கார்ந்திருக்கார் பாருங்க. 



கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மலையில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். இது முருகன் குழந்தையாகக் காட்சி அளிக்கும் கோலத்துடன் போகரால் வடிக்கப்பட்ட நவபாஷாண விக்ரஹம். பழனி முருகன் பழத்துக்காகக் கோவிச்சுண்டு போனப்போ, (ஹிஹிஹி, அது சரி இல்லைனு பலரும் சொல்வாங்க என்றாலும் இதானே வெகுஜன வாக்கு!) முதல்லே இங்கே தான் வந்து உட்கார்ந்துண்டாராம். கிட்டத்தட்டப் பழனியில் மேல் மலையில் காட்சி அளிப்பதைப் போலவே இங்கேயும் காட்சி அளிக்கிறார். ஆனால் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நன்றாக தரிசனம் செய்யலாம் யாரும் போ, போனு விரட்டுவதில்லை. சிறப்புத் தரிசனம் கிடையாது. நாங்க போனப்போ யாரோ அபிஷேஹம் செய்து பிரசாத விநியோகங்கள் நடந்து கொண்டிருந்தது.

அதோடு இன்னும் யாரோ முக்கியமான அரசியல்வாதிகள் வருகை தர இருந்தனர். ஆகவே கோயில் பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் நாங்கள் தரிசிப்பதில் எவ்விதமான தடையும் இல்லை. பஞ்சாமிர்தப் பிரசாதம், அபிஷேஹ விபூதிப் பிரசாதம், தேனும், தினைமாவும் என்று கிடைத்த பிரசாதங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம். கோயில் அமைதியான சூழ்நிலையில் சுத்தமான சுகாதாரமான பராமரிப்பில் இருக்கிறது. 
குழந்தை வேலப்பர் கோயிலில் படம் எடுக்கத் தடா! :( கோமதி அரசு போனப்போப் படங்கள் நிறைய எடுத்துப் போட்டிருந்தாங்க. ஆனால் எங்களை எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே எடுக்க முடியலை. இந்தக் கோயில் பழனி மலைக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.  அன்னிக்கு முக்கியமான மனிதர்கள் வருகையினால் படம் எடுக்கத் தடானு நினைக்கிறேன். மதுரையிலே காமிராவை வெளியேயே செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் வைக்கச் சொல்லிட்டாங்க. அது மாதிரி சொல்லலை! ஆனாலும் காமிராவை வெளியே எடுத்தால் சத்தம் போட்டாங்க! 


இப்போப் போனவாரம் காணாமல் போனது கொடைக்கானலுக்கு இல்லை! ஹிஹிஹி! அது வேறே! இது அதுக்கு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி போனப்போ!

19 comments:

  1. இதுதான் நீங்க போன இடமான்னு யாரும் கேட்கும் முன்னரே முன்ஜாக்கிரதை முத்தண்ணியா முந்திக்கறீங்களே.... சூடான சூடுன்னு சொல்லியிருந்தீங்க... அதெப்படி கோடைக்கானல் சுடும்? ஹி.... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அங்கே போகலைனு எல்லோருக்கும் புரியணுமில்ல! :) சூடான சூட்டில் வெந்து உருகிட்டோம். ரொம்பக் கஷ்டமாப் போச்சு! ஏ.சி. போட்டு அதுக்கும் மேலே மின் விசிறியும் போட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  2. கோவிலுக்கெல்லாம் சுற்றும் அளவு எனக்கு இன்னும் வயதாகவில்லை. மறுபடியும் ஹி... ஹி.... ஹி...

    ReplyDelete
    Replies
    1. அநியாயமா இல்லையோ! எங்க வீட்டில் எல்லாம் சின்னக் குழந்தையா இருக்கிறச்சேயே கோயில்களுக்குப் போய்வரப் பழக்கப் படுத்திடுவோம்! :) :P :P :P :P :P :P

      Delete

  3. குழந்தை Ganesan.அழகு. மஹாலக்ஷ்மி எங்கே.

    ReplyDelete
    Replies
    1. மஹாலக்ஷ்மிக்கு அபிஷேஹ, ஆராதனைகள் முடிஞ்சு அலங்காரமும் பண்ணின பட்டாசாரியார் முறைச்ச முறைப்பில் எடுக்கத் தோணலை! :)

      Delete
  4. குழந்தை வேலப்பர் கோயில் பற்றிய தகவல்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  5. கொடைக்கானலுக்குப் போய் இருக்கிறோம் கோவிலுக்குப் போனதில்லை. நம்ம ஆள் என்றதும் ஆஞ்சியோ என்று நினைத்தேன் ........!

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஆள்னா எப்போவுமே தும்பிக்கையார் தான்! :)

      Delete
  6. //அதோடு இன்னும் யாரோ முக்கியமான அரசியல்வாதிகள் வருகை தர இருந்தனர். ஆகவே கோயில் பரபரப்புடன் காணப்பட்டது//

    இதுதான் எனக்கு எரிச்சலாக வருகின்றது அப்படியானால் தெய்வத்தைவிட அரசியல்வாதி உயர்ந்தவரா ? எல்லா இடங்களிலுமே இப்படித்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உண்மை தான். ஆனாலும் அந்தக் கோயிலில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் தேவஸ்தான அலுவலக ஊழியர்களால் செய்யப்பட்டாலும் குருக்கள் எங்களுக்கெல்லாம் அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுக்கவோ, தரிசனத்தின் போது தேவையானவற்றைக் கூறவோ மறக்கவில்லை. குருக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. கருவறையிலேயே இருந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். பக்தர்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை. அதுவே பெரிய விஷயம் தானே!

      Delete
  7. கொடைக்கானல் சென்ற போது இங்கே சென்று வந்த நினைவில்லை. ஒரு முருகர் கோவிலுக்குச் சென்றோம், ஆனால் இது அதே கோவிலா என்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. குறிஞ்சி ஆண்டவரைப் போய்ப் பார்த்திருப்பீங்க, நாங்களும் போனோம். அங்கிருந்து பழனி மலை தெரியும்னு சொல்றாங்களேனு காத்திருந்தது தான் மிச்சம். மேகங்கள் கலையவே இல்லை! ஒரே மேகக் கூட்டம் தான்!

      Delete
  8. 'நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கியிருக்கிறோம். நல்ல நிறைவான தரிசனம். போகர் இரண்டு 'நவபாஷாணச் சிலைகளைச் செய்தார் என்றும், இது பங்கமில்லாமல் இருக்கு என்றும் சொன்னார். போற வழில உள்ள மகாலக்ஷ்மி கோவிலுக்கும் போனோம். பூம்பாறை என்ற இந்த இடத்தில் கேரட், மலைப்பூண்டு போன்றவை பயிரிடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதனால் தான் அந்த அபிஷேஹ விபூதிக்கு எக்கச்சக்கமான போட்டாபோட்டி! இந்தச் சிலை அழகோ அழகு! மலைப்பூண்டு கொடைக்கானலில் எங்கே போனாலும் விற்கின்றனர். பூண்டு சாப்பாட்டில் சேர்ப்பதில்லை என்பதால் வாங்கவில்லை. :)

      Delete
  9. கொடைக்கானலில் இப்படி ஒரு கோயில் இருப்பதை உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete