முகநூலில் நண்பர் ஜடாயு பகிர்ந்தது. சிவக் குடும்பம். முருகனும், ஆனைமுகனும் ஆனைத் தோல்க் கூடாரத்தினுள் இருக்காங்க. நந்தி தேவர் அருகே அமர்ந்திருக்கும் அம்பிகை மான் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு புலித் தோலினால் ஆன குல்லாய்/தொப்பியைக் கிரீடம் போல அணிந்திருக்கிறாள். பிக்ஷைப் பாத்திரத்தை ஈசனிடம் நீட்டிக் கொண்டிருக்க ஈசனோ புலித் தோலை அரைக்கசைத்துக் கொண்டு அம்பிகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். திருக்கயிலையில் இப்படித் தான் இருப்பாங்கனு ஓவியர் கற்பனை செய்து வரைஞ்சிருக்கார். காங்க்ரா ஓவியமாம். ட்விட்டரில் இருந்து எடுத்துப் போட்டிருக்கார். என்ன ஒரு இயல்பான எளிமையான குடும்பம்! மானசரோவர் ஏரிக்கரையிலே குடித்தனம் நடக்குதோ? குளிருக்குப் பக்கத்தில் கட்டைகளை மூட்டி இருக்காங்க!
Photo courtesy: https://twitter.com/blog_supp…/…/760285275218120704/photo/1…
Photo courtesy: https://twitter.com/blog_supp…/…/760285275218120704/photo/1…
கூடாரத்துக்குள்ளே ஒரு குட்டீஸ் இருக்கே.. கவனிக்கலியா?ஓரிரு இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. சரிபாருங்க
ReplyDeleteகூடாரத்தினுள் ஆனைமுகனும், முருகனும் இருப்பதைத் தான் சொல்லி இருக்கேனே! எழுத்துப் பிழைகள் எதுவும் கண்களில் படவில்லை. குறிப்பாகச் சொல்லுங்க. திருத்தலாம். யானையை நான் வேண்டுமென்றே ஆனைனு சொல்லி இருக்கேன். :)
Deleteகீதாம்மா இதை சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் ..
Deleteபொல்
//தொப்பியைக் கிரீடம் பொல் அணிந்திருக்கிறாள்//
குறிப்பு : படித்ததும் கிழித்து விடவும் ..
இனிய குடும்பம்!
ReplyDeleteஆமாம்.
Deleteஎல்லாம் சரி, சிவ குடும்பமா? சிவக் குடும்பமா?
ReplyDelete"க்" வராதுனே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு இடத்தில் போட்டிருக்கேன். யாரானும் சொல்றாங்களானு பார்க்கலாமே!
Deleteபுதுமையாகத்தான் இரு(னி)க்கின்றது
ReplyDeleteஆமாம், மிகப் புதுமை!
Deleteநல்ல ரசனை.
ReplyDeleteஅருமையான ஓவியம், இல்லையா?
Deleteதெய்வீகம் வியாபித்திருக்கும் ஓவியம் .!
ReplyDeleteஆமாம், பார்க்கவே மனம் நிறைகிறது.
Deleteகடவுள்கள் எல்லாம் குடியும் குடித்தனமுமாக நன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள்
ReplyDeleteஅவரவர் பார்வை ஐயா! :)
Deleteரொமப்வே சூப்பர் குடும்பம்...இனிமையான குடும்பம்....மிகவும் பிடித்தக் குடும்பம்!!!
ReplyDeleteஅருமையான குடும்பம். கடவுளரை நம்மைப் போல் குடித்தனம் பண்ணறவங்களா நினைக்கிறதும் ஒரு ரசனை தானே!
Deleteஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, சம்பா பகுதி ஓவியங்கள் வெகு அழகாய் இருக்கும். ஓவியப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteரசனைக்கு நன்றி.
Deleteஅருமையான ஓவியம். எளிமையும் கூட அற்புதமாக இருக்கிறது.
ReplyDeleteஆமாம், ரொம்பவே இயல்பாக இருக்கிறது.
Delete