துளசி அன்னமூர்த்தியைப் பத்திச் சொன்னதிலிருந்து மடப்பள்ளி வழியா வரச்சே எல்லாம் அந்த சந்நிதியைப் பார்த்துக் கொண்டே வருவேன். சந்நிதி திறந்தே பார்க்கலை! ஒரே ஒரு முறை சந்நிதி திறந்திருந்த போது படம் எடுக்க முடியலை, காமிரா ரங்க்ஸ் கிட்டே மாட்டிண்டு இருந்தது. அவர் எங்கேயோ போக நான் மெதுவாக உலா வரக் கடைசியில் துளசியின் பதிவில் உள்ள படத்தைத் தான் பகிர்ந்தேன். அன்னிலேருந்து அன்னமூர்த்தியைக் கோயிலுக்குப் போறச்சே எல்லாம் பார்க்க முயற்சிகள் பல செய்தும் அந்த சந்நிதி திறக்கிறாப்போல் தெரியலை. கதவை எல்லாம் பார்த்துட்டுத் துளசியும் ஆச்சரியப்பட நானும் கதவு இருக்குனு சாதித்தேன். அப்போ எடுத்தபடம் கீழே!
இந்தப் படத்தில் பக்கவாட்டில் அன்னமூர்த்தி தெரிகிறார் பாருங்க. இன்னிக்கு ரங்க்ஸ் சொன்னார். எப்போவுமே பக்கவாட்டிலேயே எடுக்கிறியே, இன்னிக்காவது நேரே வைச்சு எடுன்னு! என் ம.ம.க்கு அப்போத் தான் உறைச்சிருக்கு! என்னத்தைச் சொல்ல! யானைக்கும் அடி சறுக்கியது! :)
ஆனால் படம் எடுக்கும்போது கூடப் பக்கத்தில் இருந்த இம்புட்டுப் பெரிய விக்ரஹம் கண்ணில் படாமல் போனது நினைச்சால் ஆச்சரியமா இருக்கு. இன்னிக்குக் கோயிலுக்குப் போனப்போ வழக்கம்போல் பெரிய மடப்பள்ளி வழியாக வரச்சே நம்ம ரங்க்ஸ் அன்னமூர்த்தியைப் படம் எடுக்கலையானு கேட்கவும், நான் நிமிர்ந்து பார்த்தால் எதிரே அமர்ந்த வண்ணம் சிரிக்கிறார். இவர் எப்படி இத்தனை வருடங்களாக என் கண்களில் படாமல் எனக்குப் பூட்டிய கதவு மட்டுமே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது? இதன் தாத்பரியம் என்னனு யோசிக்கிறேன். இதோ கீழே அன்னமூர்த்தி!
இந்தப் படத்தில் பக்கவாட்டில் அன்னமூர்த்தி தெரிகிறார் பாருங்க. இன்னிக்கு ரங்க்ஸ் சொன்னார். எப்போவுமே பக்கவாட்டிலேயே எடுக்கிறியே, இன்னிக்காவது நேரே வைச்சு எடுன்னு! என் ம.ம.க்கு அப்போத் தான் உறைச்சிருக்கு! என்னத்தைச் சொல்ல! யானைக்கும் அடி சறுக்கியது! :)
ஆனால் படம் எடுக்கும்போது கூடப் பக்கத்தில் இருந்த இம்புட்டுப் பெரிய விக்ரஹம் கண்ணில் படாமல் போனது நினைச்சால் ஆச்சரியமா இருக்கு. இன்னிக்குக் கோயிலுக்குப் போனப்போ வழக்கம்போல் பெரிய மடப்பள்ளி வழியாக வரச்சே நம்ம ரங்க்ஸ் அன்னமூர்த்தியைப் படம் எடுக்கலையானு கேட்கவும், நான் நிமிர்ந்து பார்த்தால் எதிரே அமர்ந்த வண்ணம் சிரிக்கிறார். இவர் எப்படி இத்தனை வருடங்களாக என் கண்களில் படாமல் எனக்குப் பூட்டிய கதவு மட்டுமே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது? இதன் தாத்பரியம் என்னனு யோசிக்கிறேன். இதோ கீழே அன்னமூர்த்தி!
சாதாரணமாக ஒரு கல்லைக்கூட விடாமல் ஆராய்ச்சி செய்வேன் என்ற பெயரை வாங்கி இருக்கும் எனக்கு அந்த சந்நிதியை ஒட்டியே இருந்த இவர் கண்களில் படவே இல்லை என்பது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் இன்று கண்களில் பிரம்மாண்டமாகப் பட்டது தான்! துளசிக்கும் இதைச் சரியாச் சொல்லத் தெரியலை. கதவு இல்லைனு மட்டும் சொன்னாங்க. நானோ கதவை மட்டுமே பார்த்திருக்கேன். இந்த அன்னமூர்த்தியை ஒட்டியே அந்த சந்நிதிக் கதவு மூடியே இன்றும் காட்சி அளித்தது. ஹிஹிஹி அ,வ,சி,
தொண்டமான் ஏற்றத்தில் மேலே ஏறினதும் இன்னிக்குப் பளிச்சென்று கோபுரம் எவ்விதமான இடையூறுகளும் இல்லாமல் காண முடிந்தது.
கோயிலில் மீண்டும் வழியை எல்லாம் மாற்றி, நடக்க வசதியாகச் சாய்வாகப் போடப்பட்டிருந்த மரப்படிகளை எல்லாம் அகற்றி என்னென்னவோ மாற்றங்கள். சில காலம் கோயிலுக்குப் போகலைனா எல்லாம் மாறிடுது. இப்போதைக்குக் காசு கொடுத்து தரிசனம் செய்யும் நபர்கள் டிக்கெட் வாங்கும் கவுன்டர் மட்டும் மாறலை! நல்லவேளையா கொடிமரத்தருகேயே இருக்கு. இலவச தரிசனத்துக்கு இன்று கொடிமரம் வரை கூட்டம்! அதே 250 ரூ டிக்கெட்டுக்கோ, 50 ரூ டிக்கெட்டுக்கோ யாருமே இல்லை. நாங்க போய்ச் சீட்டு வாங்குகையில் இரண்டு, மூன்று பேர் வாங்கினார்கள். ஒரே மணி நேரத்தில் தாயாரையும், பெருமாளையும் தரிசித்து வந்தாயிற்று.
தாயார் சந்நிதியில் வழக்கத்தை விடக் கூடுதலாக நிற்கவும் முடிந்தது. விரட்டவில்லை. பெருமாள் சந்நிதியிலும் விரட்டலை என்றாலும் கூட்டம் இருந்தது. என்றாலும் இரண்டு நிமிஷம் நின்று நம்பெருமாளைப் பார்த்து விசாரிச்சுட்டு வந்தேன். பெரிய ரங்குவையும் முகம் மற்றும், திருவடி சேவை எல்லாம் நன்கு பார்க்க முடிந்தது. போனமுறை போனப்போ நம்பெருமாளைச் சரியாவே பார்க்க முடியலை. அது வருத்தமாகத் தான் இருந்தது. இப்போது பெரிய ரங்குவின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் மீண்டும் தைலக்காப்புச் சார்த்தும்போது மூடி விடுவார்கள்.
கதவு கதவுன்னதும் உள்ளூர்க்காரர் சொன்னால் சரியாகத்தான் இருக்குமுன்னு நானும் நம்பிட்டேன் பாருங்க. அப்படியும் நான் எடுத்த படத்தையும் அனுப்பினேனே அப்பக்கூடக் கவனிக்கலையா :-) சரிசரி எதுக்கும் அக்டோபரில் வரும்போது கதவு உண்டா இல்லையான்னு கன்ஃபர்ம் பண்ணின்ட்டால் ஆச்சு :-)
ReplyDeleteபாவம்.... அவர்பாட்டுக்கு தேமேன்னு உக்கார்ந்துருக்கார்!
முதல் படத்தைப் பாருங்க, கதவும் தெரியும், பக்கவாட்டில் அன்னமூர்த்தியும் இருப்பார்! :) நான் தான் தப்பாப் புரிஞ்சுண்டு இருக்கேன்! :)
Deleteகதவு கிடையாது! தனியே தன்னந்தனியே நின்று கொண்டிருப்பார் - கவனிக்க ஆள் இல்லாமல்!
ReplyDeleteஆமாம், ஆனால் பாருங்க இத்தனை நாட்களாக அவருடைய பக்கவாட்டில் எடுப்பதைத் தெரிந்தும் நம்ம ரங்க்ஸ் ஒருமுறை கூடச் சொன்னதில்லை. நேத்திக்குத் தான் சொல்லி இருக்கார். எனக்கும் அப்போத்தான் ஙே னு விழிப்பு வந்தது. மூளையில் உறைச்சது!
Deleteதெரியறதுதான் தெரியும். தெரியாதது நேரம் வரும்போதுதான் தெரியும் என்கிற பெரிய தத்துவம் இதற்குப் பின் இருக்கறதா நினைக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு அன்னமூர்த்தியைத் தெரிந்து கொள்ள நாலு வருடம் பிடிச்சிருக்கு! :)
Deleteஎனக்கு அன்னமூர்த்தியைப் பற்றிச் சொன்னவர் நம்ம வெங்கட் நாகராஜின் அப்பாதான். முதியோர் இல்லத்தில் ரசம் சாதம் கிடைக்கணுமேன்னு உடனே போய்த் தேடிக் கும்பிட்டுக்கிட்டேன். அதுக்குபின் எப்ப அன்னமூர்த்தி சந்நிதி பார்த்தாலும் வெங்கட்டின் அப்பா நினைவு வந்துரும்:-)
ReplyDeleteஆமாம், உங்க பதிவிலே சொல்லி இருந்ததை நானும் படிச்சிருக்கேன்! :)
Deleteஎன்னத்தான் நாம பிரயத்தனப் பட்டாலும் கடவுள் மனசு வைச்சாத்தான் எல்லாம்னு தோணறது! நன்றி!
ReplyDeleteஆமாம், சுரேஷ், நீங்கள் சொல்வது சரியே! இத்தனை வருடங்களாக எனக்கு மூடிய கதவுகளே கண்களில் பட்டிருக்கிறது. அதன் மிக அருகேயே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தம் தெரியவில்லை! :(
Deleteநாங்கள் அடுத்த முறை ஸ்ரீரங்கம் போகும்போது அன்ன மூர்த்தியை மறக்கக் கூடாது
ReplyDeleteகொடிமரத்துக்கு அருகே வலப்பக்கமாக இப்போதைக்கு 50 ரூ, 250 ரூ டிக்கெட் கொடுக்கும் கவுன்டரிலிருந்து கொஞ்சம் தள்ளிக் காணப்படும். கூட்டம் அதிகம் இருந்தால் அன்னமூர்த்தி சந்நிதிக்கு அருகே உள்ள வரிசைகளில் நின்று வரும்படி இருக்கும். அப்போதும் பார்க்கலாம். அல்லது பெரிய ரங்குவைத் தரிசித்து முடிந்து பின் சுற்றி வருகையில் பிரதான மடப்பள்ளியைத் தாண்டியதுமே எதிரில் கண்களில் படுவார் அன்னமூர்த்தி! சங்கு, சக்கரத்தோடு இருக்கிறார்.
Deleteதொண்டைமான் ஏற்றம், கிளி மண்டபம் இதெல்லாம் (ஸ்ரீரங்கம் கோவில் அமைப்பையும் ஒவ்வொரு இடத்தையும்) விளக்கி ஏதேனும் பதிவு இருக்கா? அல்லது அங்கு செல்லும்போது இதெல்லாம் சொல்லி நமக்கு விளக்க ஆட்கள் இருக்கா? கொஞ்சம் guide பண்ணுங்களேன்.
ReplyDeleteஎன்னோட ஆன்மிகப்பயணம் வலைப்பக்கம் கிளிமண்டபம், சந்தனு மண்டபம், அர்ஜுன மண்டபம் பத்தி எல்லாம் எழுதி இருக்கேன். இன்னும் தொண்டைமான் ஏற்றம் குறித்து எழுதலை. ஆனால் ரங்கா கோபுரம் கடந்து உள்ளே வருகையில் நிர்வாக அலுவலகத்தில் விசாரித்தால் வழிகாட்டிகளுக்கு அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். வழிகாட்டிகள் இருப்பதாகவே நினைக்கிறேன். வீல் சேருக்குச் சில ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை அவர்களாலும் சொல்ல முடியலாம்.
Delete@ நெல்லைத் தமிழன்.
Deleteகோவிலில் அஃபீஸியல் கைடுகள் இருக்காங்க. நமக்கு கைடா வந்தவர் காளிமுத்து என்பவர். இவரை இப்போ நமக்கு நல்லாவே தெரிஞ்சுருச்சு. அடுத்த சில பயணங்களில் கோவிலில் நம்மைப் பார்த்தவருக்கு ஆச்சரியம். எப்ப வந்தீங்க? சொல்லவே இல்லை என்ற அளவுக்குப் பழக்கம் ஆகிவிட்டார்.
இன்னும் கொஞ்சம் பார்க்க இங்கே ....
http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/blog-post_29.html
ரொம்ப நன்றி கீதா மேடம், துளசி டீச்சர். நிறைய சன்னிதிகள் இருக்கு. சமயத்தில் எது எங்க இருக்கு என்று சரியாகத் தெரிவதில்லை (என்னுடைய குறை). பசங்களோட போனால், கால் வலி அது இது என்று சில சன்னிதிகளுக்குத்தான் செல்ல முடிகிறது. ஸ்ரீவேணுகோபாலன் புத்தகத்தில், சன்னிதிப் பிரகாரத்தில் நடந்த சம்பவங்களைப் படிக்கும்போது, இது எங்க இருக்கு என்று தோன்றியது. நன்றி இருவருக்கும்.
Deleteஇன்னும் ஒன்று. எனக்கு அரங்கனின் பிரசாதம் எப்படிக் கிடைக்கும் என்று சொல்லமுடியுமா (தெரிந்தால்).
பிரசாதம் நிவேதனம் ஆகும் நேரம் தெரிந்து கொண்டு கோயிலுக்குச் செல்லுங்கள். காயத்ரி மண்டபம் என்னும் கர்பகிரஹத்துக்கு வெளியே உள்ள பிரகாரங்களில் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பார்கள். சில, பல சமயங்களில் மதிய நேரம் பனிரண்டரையிலிருந்து ஒன்றரைக்குள்ளாகப் பெரிய மடப்பள்ளியில் (அன்னமூர்த்தி சந்நிதிக்கு அருகே) சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், தோசை போன்றவை பட்டாசாரியார்கள் வைத்துக் கொண்டு விற்பார்கள். மாலை இரண்டிலிருந்து மூன்று, மூன்றரைக்குள்ளாகச் சில சமயங்களில் அப்பம், தோசை போன்றவை கிடைக்கலாம். அபூர்வமாகப்பெருமாள் வடையும் கிடைக்கும்.
Delete