இன்னிக்கு ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சினு எல்லாம் சேர்ந்து வந்திருக்கு. ஆடி அமாவாசைக்கு எப்போவுமே அம்மாமண்டபத்தில் கூட்டம் இருக்கும். இன்னிக்கு ஆடிப் பெருக்கு வேறே சேர்ந்திருக்கா! கூட்டம் தாங்கலை! இன்னிக்கு நம்ம ராமரை இந்த வெளிச்சம் பிரதிபலிப்பு இல்லாமல் எடுக்கணும்னு முயன்றேன். ஆனால் முடியலை! விளக்கே இல்லாமல் ஒரு நாள் எடுக்கணும். பக்கவாட்டு விளக்கின் வெளிச்சம் தான் பிரதிபலிக்குதோனு நினைச்சால் வேறே விளக்குப் போட்டதிலும் அதே போல் வெளிச்சம்!
கீழே உள்ள உம்மாச்சிங்க எல்லாம்! முன்னால் தெரிகிறாரே பிள்ளையார்! இடப்பக்கமாக மெரூன் பிங்க் கலரில்! அவர் தான் கீழே விழுந்தார். அப்புறமா இடம் மாத்தியாச்சு!
இதான் இன்னிக்குச் செய்த மொத்த சாப்பாடுமே! :) வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்! என்பாங்க! இங்கேயும் அப்படித் தான்! இரண்டு டேபிள் ஸ்பூன் தே.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் பு.சா. ஒரு டேபிள் ஸ்பூன் வெ.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் த.சா. வடை நாலைந்து, அம்புடுதேன், இன்னிக்குச் சாப்பாடு. தொட்டுக்க வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு! அதை நிவேதனத்தில் வைக்கலை! கூடவே ஒரு செம்பில் காவேரித் தண்ணீர். புதுசாக் கொண்டு வரணும். ஆனால் இந்தக் கூட்டத்தில் யார் போறது? வீட்டில் வர காவிரி நீரையே பிடிச்சு வைச்சாச்சு! நீர்வளம் பெருகப் பிரார்த்தனைகளும் செய்தாச்சு.
நம்பெருமாள் இன்னிக்குச் சாயந்திரம் வரைக்கும் காவிரிக்கரை அம்மாமண்டபத்தில் ஆஸ்தானம் இருப்பார். அதுக்காக வந்திருந்தார். அவர் பக்கத்து மண்டகப்படிக்கு வந்துட்டார்ங்கற விஷயமே தெரியலை! கொஞ்சம் தாமதமாகப்போனோம். ரங்க்ஸ் முன்னாலே போயிட்டு எனக்குத் தொலைபேசித் தெரிவிச்சார். அவசரம் அவசரமாப் போனேன். உம்மாச்சி வெளியே வரும் இடத்திலே முன்னாடி நின்னுண்டு இருந்தேன் என்றாலும் கூட்டம் அதிகம்! மண்டகப்படிக் கூட்டம். எங்கள் குடியிருப்பு வளாக மனிதர் கூட்டம். தெருவிலே ஏற்கெனவே இருபக்கமும் போட்டிருக்கும் புதிய நடைபாதைக்கடைகளால் கூட்டம். காவிரிக்கரைக்கும் பெருமாளைப் பார்க்கவும் வந்திருக்கும் மக்கள் கூட்டம்! பெருமாளைப் பார்ப்பதே பெரிய விஷயமாயிடுச்சு! இதிலே படம் எங்கே எடுக்கறது? முடியலை! அவர் கொஞ்சம் தள்ளிப் போனப்புறமாப் படம் எடுக்கலாம்னு நினைச்சா அப்போப் பார்த்து ஜனங்க வந்து நின்னுட்டு மறைச்சுட்டாங்க!
நம்பெருமாள் படம் நன்றி தினமலர் கூகிளார் வாயிலாக! இன்னிக்குச் சின்னப் பல்லக்கில் வந்தார். அதிலே திரை போட்டு மறைத்து வேறே வைச்சிருந்தாங்களா! கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது பார்க்கவே! ஆனாலும் ஒரு மாதிரியாப் பார்த்துட்டேன். கிட்டக்க நின்று கொண்டிருந்ததால் பார்க்க முடிந்தது. அதே காரணத்தால் படமும் எடுக்க முடியலை!
நீங்க சேவித்த ரங்கனை நானும் சேவித்துக் கொண்டேன்.
ReplyDeleteநாம் சாப்பிடும் அளவே பகவானுக்கு அருமை. காவிரி அருள் பெருகட்டும். மங்களம் பெருகி
மக்கள் குறையெல்லாம் தீரட்டும்.
வாங்க வல்லி, முதல் ஆளாக வருகை தந்து கருத்துக் கூறியமைக்கு நன்றி. :)
Deleteநேத்து அமாவாசை வேறேயே! பொதுவாவே குறைவாகத் தான் அரிசிச் சாதம் சமைப்பதும், சாப்பிடுவதும். நேற்று அமாவாசை என்பதால் இன்னமும் குறைவு! :)
DeleteSema.. appadiyae all items inga parcel pannirunga :)
ReplyDeleteஹிஹிஹி, நாங்க சாப்பிட்டு மிஞ்சினால் தானே! :)
Deleteஃபேஸ்புக்கில் பார்த்து வந்தேன்! எங்கள் ப்ளாக்கில் அப்டேட் ஆகவில்லை.
ReplyDeleteஆமாம், பல சமயங்களிலும் உங்கள் பதிவுகளும் எனக்கு அப்டேட் ஆகாது!
Deleteவடை கொஞ்சமாக இருக்கின்றதே பதிவர்கள் நிறையப்பேர் வருவார்களே...
ReplyDeleteஹிஹிஹி, மொத்தமே எட்டு வடை தான். நாலு வடை நிவேதனத்தில் வைச்சேன்! :)
Deleteஆடிப்பெருக்கின் மகிழ்வினை உங்கள் பதிவின்மூலம் அடைந்தோம்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஆடிப்பெருக்கு நம்பெருமாள் விஜயம் பார்த்தாச்சு. மெரூன் பிங்க் கலர் பிள்ளையார்தான் கண்ணுக்குத் தட்டுப்படலை. ஆடிப்பெருக்குக்கு இனிப்பைக் காணோம்? முதலில் அது சர்க்கரைப் பொங்கலோ என்று நினைத்தேன்.. அப்புறம்தான் நீங்கள் எழுதிய வெஜிடபிள் ரைஸ் என்பதைப் பார்த்தேன்.
ReplyDeleteஇவையெல்லாமே இயற்கையோடு இயைந்த வாழ்வின் மிச்சங்கள். வாழ்த்துக்கள்.
வெஜிடபுள் ரைஸா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் எங்கே வெஜிடபுள் ரைஸ்னு எழுதி இருக்கேன்?
Deleteஅருஞ்சொற்பொருள்
தே.சா= தேங்காய் சாதம்
பு.சா= புளியஞ்சாதம்
வெ.சா.==வெல்ல சாதம், (ஆடிப்பெருக்குக்குச் சர்க்கரைப் பொங்கல் பண்ண மாட்டோம்)
த.சா= தயிர் சாதம்.
இடப்பக்க ஓரத்தில் மெரூன் பிங்க் கலர் பிள்ளையாரின் நிறம் மட்டும் தெரியும், பிள்ளையார் தெரிய மாட்டார். :)
வெ.சா - வெல்ல சாதமாக? வெஜிடபிள் சாதம்னு புரிஞ்சிண்டேன். வெல்ல சாத்த்துக்கும் ச்பொங்கலுக்கும் என்ன வித்யாசம்? பாகு, நெய்ல வித்யாசமா?
Deleteவெல்ல சாதம் என்றால் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பூரணம் போல் கிளறிவிட்டு அதில் சமைத்த சாதத்தைத் தேவையான அளவு போட்டு நெய் ஊற்றிக் கிளறி ஏலக்காய் சேர்த்துச் செய்வது. இதற்கு மு.ப. தி.ப. எல்லாம் வேண்டும்னு அவசியம் இல்லை.
Deleteஆடிப்பெருக்கன்று 1967-ம் வருடம் அம்மா மண்டபத்துக்கு குதிரை வண்டியில் போனது நினைவுக்கு வருகிறது
ReplyDeleteநாங்க அம்மாமண்டபம் பக்கத்திலே தான் இருக்கோம். ஆனால் அந்தக் கூட்டத்தில் போய் மாட்டிக்க பயம்!
Deleteநம் பெருமாளை தரிசிக்க வைத்ததற்கு நன்றி! கொஞ்சமாவது செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆசையை போற்றுகிறேன்!
ReplyDeleteஆமாம், குழந்தைகளும் பக்கத்தில் இல்லாததுக்குப் பண்டிகையைக் குறை வைத்தால் மனம் சமாதானம் அடையாது!
Deleteஆடிப்பெருக்கு என்றாலே ஊர் நினைவு வந்துவிடும்....தாழம்பூ வைத்துப் பின்னிக்கொண்டு, கலந்த சாதம் கட்டிக் கொண்டு மதியம் 3 மணிக்கெல்லாம் ஊரோடு அனைவரும் குறிப்பாக மிகவும் நெருங்கிய குடும்பங்கள் தோழிகள், நண்பர்கள் எல்லோரும் அருகிலேயே...10 நிமிடம் கூட வேண்டாம் நடக்க ஆற்றங்கரைக்குச் சென்ரு அங்கு எல்லோரும் பகிர்ந்து உண்டு, ஆற்றில் விளையாடி, மணலில் விளையாடி, கரையில் இருக்கும் சிவன் கோயிலில் சென்று வணங்கி, மண்டப்பத்தில் விளையாடி என்று கோல்டன் டேய்ஸ்...ஒன்ஸ் அப் ஆன் எ டைம் என்று ஆகிப் போனது..இப்போதும் வருத்தம் தான்...
ReplyDeleteகீதா
மதுரையிலே படிக்கையில் மத்தியானமா பள்ளி விடுமுறை விடுவாங்க. எல்லோருமா புட்டுத்தோப்புக்குப் போவாங்க! நாங்க போனதில்லை! :(
Deleteநாலு வருஷம் ஆடிப் பெருக்கு அம்மா மண்டபத்தில் இருந்திருக்கிறேன். பெருமாளை ,அகிலாண்டேஸ்வரியை, வயலூர் முருகனை, உச்சிப்பிள்ளையார் பிள்ளையாரை, எறும்பீஸ்வரனை,சமயபுரத்தாளை விடாமல் தரிசனம் பண்ணிய நாட்கள். அந்த நாளும் வந்திடாதோ ?
ReplyDeleteவடையை நான் சிப்ஸ்ன்னு நினைச்சுட்டேன்க்கா!!
நீங்க இல்லாத இடமே இல்லை போல! :)
Deleteஆடிப்பெருக்கு - ஒரு வருடம் கூட திருவரங்கத்தில் இருந்த நினைவில்லை....... எப்போது வாய்ப்பு கிடைக்கிறது பார்க்கலாம்! :)
ReplyDeleteவாங்க வாங்க, ஶ்ரீரங்கத்துக்கு நல்வரவு! அடுத்த வருடம் ஆடிப்பெருக்குக்கு ஶ்ரீரங்கத்தில் இருந்து சாப்பிட அந்த நம்பெருமாளும் அன்னமூர்த்தியும் உதவட்டும்!:)
Delete