எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 24, 2016

ரஞ்சனிக்காக இரட்டை விளிம்பு தோசை! :)

ஹிஹிஹி,  உல(க்)கை நாயகர், கமல் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு நகைச்சுவைப் படம் கொடுப்பார். அது போல நானும் அவரைப் பார்த்து முந்தைய சீரியஸ் பதிவுக்குப் பின்னர் கொடுக்கும் மொக்கைப் பதிவு இது! ஆனால் இது இங்கே கொடுக்கக் காரணம் உண்டு. காமாட்சி அம்மா தன் தொட்டில் பதிவில் தொட்டில் 12 இரட்டை விளிம்பு தோசை என்று எழுதி இருந்தார். அதைப் பற்றி ரஞ்சனி அவரிடம் கேட்க நான் இலுப்பச்சட்டி தோசை தானேனு காமாட்சி அம்மாவிடம் கேட்க அவரும் ஆமாம் என்றார். இதைக் குறித்து ஏற்கெனவே அப்பாதுரைக்காகப் பதிவு போட்டேன். 2012 ஆம் ஆண்டில்! ஆமாம், அப்பாதுரை எங்கே? யாருக்குத் தெரியும்?

இப்போ அதே பதிவு மீள் பதிவாகப் போடறேன், ரஞ்சனிக்காக! :) இதை ஏன் இரட்டை விளிம்பு என்று சொல்கிறோம் என்றால் தோசை மாவைச் சட்டியில் ஊற்றியதும் சுற்றி எண்ணெய் விட்டதும் ஓர் விளிம்பு வரும் அல்லவா? அதன் பின்னர் மாவு நடுவில் வேக வேண்டும் என்பதற்காகக் கரண்டியை தோசையின் நடுவில் சிறிதே நேரம் வைப்போம். சிறிது நேரம் என்றால் சிறிது நேரம் தான். அதிக நேரம் இருந்தால் மாவெல்லாம் கரண்டியில் ஒட்டிக் கொண்டு அடியில் பெரிய ஓட்டையுடன் கறுப்பாகி விடும். எடுத்ததும் கரண்டி வைத்த பாகத்தில் ஓர் விளிம்பு வரும். ஆகவே இரட்டை விளிம்பு தோசை! நல்ல காரசாரமான வெங்காயச் சட்னி அல்லது மிளகாய்ப் பொடி இதற்கு நல்ல துணை!  இப்போல்லாம் நம்ம ரங்க்ஸுக்கே இது பிடிக்க ஆரம்பிச்சுடுத்தாக்கும்!  கீழே இருக்கும் தோசையில் பார்த்தால் இரு விளிம்புகள் நன்றாகவே தெரியும். :)


அப்பாதுரைக்காக இலுப்பச்சட்டி தோசை! :))))

அப்பாதுரைக்காக இலுப்பச் சட்டி தோசை.  இது இட்லி மாவிலே நல்லா இருக்கும்.  ஆனால் நான் இட்லிக்கு, தோசைக்குனு எல்லாம் தனியா அரைப்பதில்லை.  சின்ன மொட்டைச் சட்டி.  எங்க குடும்பத்திலே பரம்பரையா எல்லாருக்கும் சீர் வரிசையிலே இந்தச் சட்டி கட்டாயம் கொடுப்பாங்க.  எல்லாருக்கும் இந்த தோசை ரொம்பப் பிடிக்கும்.  தொட்டுக்க மிளகாய்ப்பொடிதான் இதுக்கு நல்லா இருக்கும்.  அப்பாதுரை வாங்க,  இந்தியா வந்தப்போ இங்கே வந்திருந்தா கிடைச்சிருக்கும்.  வராம ஏமாத்திட்டீங்க!  கீழே வார்த்து எடுத்த தோசைகள்.  மேலே பொன் முறுகலா உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரி ஓட்டை ஓட்டையா நல்லா வரும் இது.

யாருக்கெல்லாம் வேணுமோ சாப்பிடுங்க.

22 comments:

  1. பதிவு ரஞ்சனி மேடத்துக்கு ,தோசை எனக்கு சரியா :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா தோசைக்கு ஆசையா? ஆனால் ஒண்ணும் எத்தனை தரம் சாப்பிட்டாலும் அலுக்காத ஒன்று தோசை தான்! :)

      Delete
  2. பார்க்கவே நன்றாக இருக்கே. மூன்றாம் நாள் இந்தத் தோசைதான் அனேகமா எல்லார் வீட்லயும். ஃப்ரிட்ஜ் இல்லாத காலத்துல.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், காமாட்சி அம்மா சொல்லி இருக்காப்போல் இரும்புக் கரண்டியிலும் என் அம்மா செய்து கொடுப்பார். வேலைக்குப் போகும்போது மத்தியானம் சாப்பிட இதுவும் வெங்காயத் துவையலும் எடுத்துப் போவேன். :)

      Delete
  3. இந்த தோசையை ஸமயத்தில் குழிவான இரும்புக்கரண்டியில் கூட ஒரு நிமிஷம் கரண்டியை வைத்து எடுத்துவிட்டு குட்டியாக அப்பம் போல வார்ப்பதுண்டு. எங்காத்து வாணலியும் கனமான குழிவான சின்ன அளவு வாணலி. மொட்டை வாணலின்னே பேரு. இப்பவும் எனக்கு இந்தத் தோசைதான் மிகவும் பிடிக்கும். பதிவுக்குப் பதிவு எழுதி இரட்டை விளிம்பு தோசை பிரபலமாக்கி விட்டீர்கள். மிக்க நன்றி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. இரும்புக்கரண்டியிலும் செய்தது உண்டு. எனக்கும் இந்தத் தோசை ரொம்பப் பிடிக்கும். இட்லி முன்னெல்லாம் பிடிக்காது. இட்லி சாப்பிட முரண்டு பண்ணுவேன். அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் இந்தச் சட்டியில் இரண்டு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்த்துக் கொடுப்பார். :)

      Delete
  4. என்னாலெல்லாம் சுருக்கச் சுருக்கப் பதிவு செய்ய முடிவதில்லை. அதிக ஸௌகரியங்கள் வேண்டியிருக்கு. ஆனால் மனதுக்கு ஒரு ஸந்தோஷம் சிறிது கிடைக்கிறது. நிதானமாகி விட்டேன்.அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அம்மா, இது ஏற்கெனவே போட்டிருந்ததால் உடனே போட முடிந்தது. நானும் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வருகிறேன். :)

      Delete
    2. என் அம்மா இலுப்பச்சட்டி தோசை செய்வார். அது ஊத்தப்பங்களை விரட்டி விடும் சுவையில். எனக்கு அரிசி உப்புமா காந்தல் நினைவுக்கு வ்
      வருகிறது. நானொரு லிகிதம் அனுப்பினேனே? கிடைத்ததோ?

      Delete
    3. உங்கள் கடிதம் ஏதும் வரவில்லை ஐயா. ஆனால் என்னுடைய பழைய பதிவுக்கான உங்கள் பின்னூட்டம் கிடைத்தது. காரைக்குடியில் உங்களுடன் ஆன சந்திப்பு குறித்து எழுதிய பதிவு அது!

      Delete
  5. இரட்டை விளிம்பா? தோசையா? கேள்விப்பட்டதில்லையே...! ஆஹா...!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சாதாரண இலுப்பச்சட்டி தோசை தான். காமாட்சி அம்மா ஊர்ப்பக்கம் இரட்டை விளிம்பு தோசைனு சொல்வாங்க போல! அதான் அந்தத் தலைப்பே வைச்சேன். ரஞ்சனிக்காகப் போட்ட இந்தப் பதிவுக்கு அவங்க வரலை, முகநூலில் மட்டும் வந்துட்டுப் போயிருக்காங்க. :)

      Delete
  6. ஊத்தப்பத்தில் செய்து பார்க்க வேண்டும் நடுவில் சற்று வித்தியசமாக இருக்கும் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கிட்டத்தட்ட ஊத்தப்பம்போலத் தான். மாவு புளிச்சிருக்கணும்! :)

      Delete
  7. இலுப்புச் சட்டி தோசையையா அவர்கள் இரட்டை விளிம்பு தோசை என்று சொல்லியிருந்தார்கள்? நல்ல எண்ணெய்விட்டுச் செய்வதால் இலுப்புச்சட்டி தோசை அருமையாக இருக்கும்.

    ஆமாம் உங்கள் படத்தில் இரண்டு தோசைகள்தான் எனக்குக் கண்ணில் தெரிகிறது. இரண்டு விளிம்புகள் தெரியவில்லையே? (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் தான் சொல்லணும். :) தோசைத் திருப்பி பக்கத்திலே தோசையில் ஓர் வட்டம் தெரியுது பாருங்க, அது ஓர் விளிம்பு. அதுக்கப்புறமா மொத்த தோசைக்கும் சேர்த்து ஏற்கெனவே இருக்கும் ஓர் விளிம்பு. தோசை, ரவா உப்புமா, சேமியா உப்புமா, புளிப்பொங்கல், புளி உப்புமா, மோர்க்களி இதுக்கெல்லாம் எப்போவுமே நல்லெண்ணெய் தான். மாற்றியதே இல்லை. ரவா கிச்சடி நல்லெண்ணெய் ஊற்றிச் செய்து விட்டு இறக்கும் முன்னர் ஒரு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறிச் சாப்பிட்டால் ருசியும் மணமும் தூக்கும்.

      Delete
  8. ஓ! இலுப்பச் சட்டித் தோசைக்குத்தான் இரண்டு விளிம்பு தோசை என்ற பெயரா..மாவு புளித்தால் இந்தத் தோசைதான்...மிக்வும் பிடித்த தோசை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்தத் தோசை பிடிக்காதவங்களே இல்லைனு நினைக்கிறேன்.

      Delete
  9. பார்க்க நல்லா இருக்கு... சாப்பிட்டதில்லை!

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டுப் பாருங்க வெங்கட். மி.பொடியோடு அருமையா இருக்கும்.

      Delete
  10. எனக்காகப் போட்ட பதிவுக்கு இப்போதுதான் என்னால் வர முடிந்தது. 4 நாட்களாக வைரல் ஃப்ளூ. எழுந்திருக்கவே இல்லை. இன்றுதான் இரட்டை விளிம்பு தோசை சாப்பிட வரமுடிந்தது. இப்படிச் செய்வதால் ஓரத்தில் மட்டுமில்லாமல் நடுவிலும் கரகரப்பு வரும், இல்லையா? அதுவே ருசியைக் கூட்டும் போலிருக்கிறது. செய்து பார்க்கிறேன்.

    எங்கள் வீட்டிலும் இந்த மொட்டை வாணலி (மாமியாரிடம்) இருந்தது. அதை அடுப்பிலிருந்து இறக்குவது எனக்கு அந்தநாளில் சிம்மசொப்பனம்! இடுக்கி கிடையாது பிடிதுணி தான். அந்தப் பெரிய துணியை சமாளித்து அதற்கு இந்த வாணலியை அடக்கி.....!!!

    என்னிடம் இருக்கும் விளிம்பு வைத்த வாணலியிலேயே செய்து பார்க்கிறேன்.

    எனக்காக பதிவு போட்டதுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, நானெல்லாம் பனிரண்டு வயதிலேயே சமையலறைக்குள் புகுந்தாச்சு. அம்மாவுக்கு முடியாத நாட்களில் சமைத்து வைக்காமல் பள்ளிக்குச் செல்ல முடியாது. மறுப்பும் சொல்ல முடியாது. மறுப்புச் சொன்னால் அப்பா படிப்பையே நிறுத்திடுவார். :) அதுக்குப் பயந்தே வேகமாகவும் கவனத்துடனும் சமைக்க ஆரம்பித்தேன். தங்க விழா கொண்டாடியாச்சு என்னோட சமையல் கலைக்கு. அப்போவே இந்த மொட்டைச் சட்டியில் தோசை வார்த்திருக்கேன். இடுக்கி தான் எனக்கு வசதி. பிடித்து இறக்கிடுவேன். அதோடு அப்போல்லாம் குமுட்டி அடுப்பும், ஸ்டவ்வும் தானே! என்ன தான் விளிம்பு வைத்த வாணலியில் செய்தாலும் இந்த மொட்டைச் சட்டியில் செய்வது போன்ற ருசி என்னமோ கிடைக்கலை. நானும் பல வாணலிகளிலும் செய்து பார்த்துட்டேன். :)

      Delete