எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 22, 2018

குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்! 2

 

மாவிளக்கு இந்தச் சுட்டியில் பார்க்கவும்! (எனக்கு வேலை செய்யுது!)

எல்லோரும் மாவிளக்குப் படத்தையே கேட்டதால் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே பகிர்ந்திருந்ததைப் போட்டிருக்கேன். ஹெஹெஹெஹெ, முந்தாநாள் கோயிலில் கூட்டம் என்பதோடு, என்னோடு சேர்ந்து மற்ற மூவர் மாவிளக்கு ஏற்றி இருந்ததால் படம் எடுக்க முடியவில்லை! அவங்க ஆக்ஷேபணை தெரிவிப்பாங்களோ என்பதோடு நம்ம ரங்க்ஸும் வேண்டாம், எடுக்காதேனு சொல்லிட்டார்! இது  2009 ஆம் ஆண்டிலேயோ 2010 ஆம் ஆண்டிலேயோ மாவிளக்குப் போட்டப்போ எடுத்த படம்! இதே போல் தான் இப்போவும் போட்டேன். விளக்கு நின்னு நிதானமா எரிஞ்சது!

கருவிலி கோயிலில் உள்ளே நுழையும்போது பார்க்க இருட்டாகத் தெரிந்தாலும் வெளிச்சம் தான் உள்ளே! நேரே கருவறை என்பதால் அதிகம் ஜூம் பண்ணிப் படம் எடுக்கலை! மேலும் நான் கோயிலின் வெளியே ராஜகோபுரத்துக்கு எதிரே இருந்து படம் எடுத்ததாலும் உள்ளே இருட்டாகத் தெரியுது!  கருவிலி கோயில் பத்தியும் சர்வாங்க சுந்தரி பத்தியும் ஏற்கெனவே பல முறை எழுதி இருக்கேன். அம்பாள் நல்ல உயரமாக இருப்பாள். படம் பழைய ஃபைல்களில் இருந்து எடுத்ததைக் கீழே பகிர்கிறேன்.நம்ம ரங்க்ஸின் செல்லப் பிள்ளையார் கீழே! இவரையும் பலமுறை பகிர்ந்திருக்கேன். இம்முறை இவரைப் பார்க்கவே இல்லை! கொஞ்சம் குறை தான்! தினமும் இவருக்கு எண்ணெய் முழுக்காட்டிப் பூ வைச்சு, தீபம் ஏற்றிவிட்டுத் தான் ரங்க்ஸ் பள்ளிக்குச் செல்வாராம்!

 


கருவிலி
சென்ற வருடம் மே மாதம் நாங்க அம்பேரிக்காவில் இருந்து வந்ததும் ஜூன் 30 ஆம் தேதி கருவிலி கோயிலில் கும்பாபிஷேஹம் எனத் தெரிய வந்தது. ஆனால் போக முடியவில்லை. ஆனால் அதைக் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அது கருவிலி குறித்த இணைய தளத்தில் கோயில் அறங்காவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது. கோயில் அறங்காவலர்கள் தூரத்து உறவினர்களே! மேற்கண்ட சுட்டியில் அதைக் காணலாம். மேலும் கோயில் குறித்த தகவல்களையும் அறியலாம்.

கருவிலி கோயிலில் இருந்து பொய்யாப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பிள்ளையார் மட்டும் தன்னந்தனியாக எப்போவும் போல் இருந்தார். அவருக்கு விளக்கு ஏற்றி வைத்ததில் இருந்து குருக்கள் வந்து நித்தியப்படி வழிபாடுகளைச் செய்து விட்டுப் போய்விட்டார் என்பது தெரிந்தது. பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி வழிபாடுகள் செய்தார் ரங்க்ஸ். அதன் பின்னர் அங்கிருந்து நேரே பெருமாள் கோயிலுக்கு வந்தோம்.இந்தப் பதிவில் சொன்ன மாதிரிப் பெருமாள் கிடைத்தாலும் வலக்கையின் சக்கரம் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கைக்கட்டை விரல், சக்கரத்தைப்பிடித்திருக்கும் ஆட்காட்டி விரல் போன்றவையும் வெட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் படங்கள் கீழே! இது இன்றைய நிலைமை. இப்போதும் இதே நிலைமை தான்!இப்போதும் பெருமாள் இதே நிலைமையில் கூண்டில் தன்னுடைய கை சரியாகவும் கருட சேவைக்காகவும் காத்திருக்கார்!

பிச்சை எடுக்கும் பெருமாள்

இந்தத் தலைப்பில் என்னுடைய புகுந்த ஊரான பரவாக்கரைப் பெருமாள் பத்தி எழுதி இருந்தேன். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அதைக் குறித்து எழுதிய பதிவு இதோ!

ஓர் அவசரப் பதிவு இது! பெருமாளையே காணோம்!

அதன் பின்னர் அப்போது இந்தச் சிலைக்கொள்ளைகளைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியான திருமதி திலகவதியை நேரில் சென்று பார்த்து விண்ணப்பித்தோம். அப்போது இந்தப் பெருமாளின் படத்தையும் ஸ்கான் செய்து எடுத்துப் போனோம். அதை வைத்துப் பின்னர் காவல்துறை பெருமாள் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துப் பெருமாளை மீட்டு விட்டார்கள். ஆனாலும் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்ற காரணத்தால் திருவாரூரிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 2015 ஆம் வருடம் ஒரு வழியாகக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
பெருமாள் கிடைத்து விட்டார்!

அதன் பின்னர் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டு செய்தோம். படங்களுக்கான சுட்டி இங்கே
 கும்பாபிஷேஹப் படங்கள்

35 comments:

 1. ஒரு இடுகையிலேயே ஏகப்பட்ட இடுகைகளுக்கான சுட்டிகள் கொடுத்திருக்கீங்க. நிதானமா வந்து படிக்கறேன்.

  நான் மாவிளக்கு இப்போ போட்டதைத்தான் படம் போட்டிருக்கீங்களான்னு பார்த்தால், 2010ம் ஆண்டில் போட்ட படம்.

  சின்னப் பையனாக இருந்தபோதும், பொய்யாப் பிள்ளையாருக்கு எண்ணெய் முழுக்காட்டிவிட்டு, பூ வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்வாரா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கு. கடவுள் பக்தி நம் வாழ்வில் எப்போதும் கைவிடுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. ஹிஹிஹி, பதிலளிக்க தாமதம் ஆகிப் போச்சு! :)))) திட்டாதீங்க! :)))) பெருமாளைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு தான் சுட்டிகள் கொடுத்தேன், மெதுவாப் படிங்க! இம்முறை கோயிலில் இருந்த கூட்டம் காரணமாய்ப் படம் எடுக்கலை. சிலர் ஆக்ஷேபிக்கிறார்கள். அதோடு கருவறையில் மாவிளக்குப் போடுவதால் அம்பாளும் சேர்ந்து படத்தில் வந்துடுவாங்கனு சிலர் எண்ணம். கருவறைப் படம் எடுக்கக் கூடாதுனு சிலர் கருத்து! பிள்ளையார் எல்லோருக்கும் செல்லமாச்சே! அதான் நம்மரங்க்ஸுக்கும்! :))))

   Delete
  2. நான் அப்போ அப்போ வந்துபார்த்து, சரி... இன்னும் கீசா மேடத்துக்கு நேரம் கிடைக்கலை என்று நினைத்துக்கொள்வேன். இன்றைக்கு புது இடுகையைப் பார்த்ததும், இப்பவாவது பதில் போட்டிருக்காங்களா என்று பார்க்க வந்தேன்.

   ஆனாலும் நீங்க நியாயமா நடக்கப் பார்க்கிறீங்க. 'சாப்பிடலாம் வாங்க'க்கு ஆடிக்கொருதடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பதில் போடுவீங்க (சமயத்துல போடவே மாட்டீங்க). 'எண்ணங்கள்'ல் மட்டும் உடனுக்குடன் பதில் போடக்கூடாதுன்னு, 'சாப்பிடலாம் வாங்க' மாதிரி இதையும் மாற்ற முயற்சிக்கிறீங்க போலிருக்கு. :-)

   Delete
  3. ம்ம்ம்ம் நெ.த. இன்னமும் நேரம், காலம் சரியாக ஆகவில்லை. முன்னும், பின்னுமாகத் தான் இருக்கு! ஒரு வாரமாக வீட்டை ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கோம். வந்த விருந்தினர் படுத்திருந்த படுக்கை விரிப்புக்களையே இரண்டு நாட்களாகத் தான் சுத்தம் செய்ய முடிந்தது. இன்னும் ஒரு செட் நாளைய தினத்துக்குக் காத்திருக்கு! கணினியில் அமர்கையில் ஏதேனும் தொலைபேசி அழைப்பு, அல்லது முக்கிய வேலை வந்தால் அன்றைய திட்டமிட்ட வேலைகள் தடைப்படத்தான் செய்கின்றன. சிநேகிதி ஒருத்தருக்கு என்னோட சிதம்பர ரகசியம் மின்னூலை அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி 1 மாதம் ஆச்சு! இன்னும் அனுப்ப முடியலை! :)))) சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் நான் பதில் சொல்லி இருக்கும் பதிவுகளை நீங்க பார்ப்பதில்லை! :))))

   Delete
  4. அது எப்படி சொல்றீங்க. இன்னும் நீங்க 'கறிவேப்பிலை' பதிவுக்கு பதில் சொல்லலை. இன்றைக்குத்தான் ஸ்ரீராம் பதிலை வாசித்தேன். முந்தைய புதினா பதிவைப் படிக்கலை (எனக்கு புதினாவையே ஏனோ பிடிப்பதில்லை. அதன் முத இடுகைல எழுதிட்டதனால படிக்கலைனு நினைக்கறேன். இப்பக்கூட என் மனைவி வந்திருந்தபோது அவள் விரும்பிக் கேட்டதால் புதினாக் கட்டு வாங்கிக்கொடுத்தேன். பசங்களுக்கு பண்ண அவளுக்கு நேரம் இல்லை. ஃப்ரிட்ஜ்லயே வச்சுட்டுப் போயிட்டா. அவ போய் 2 வாரத்துக்கு மேல் ஆகிறது. இன்னும் புதினாக் கட்டு ஃபிரிட்ஜ்லயே இருக்கு. அதுக்கு வேளை வரும்போது தூரப்போடணும்)

   Delete
 2. எப்படியோ பெருமாள் திரும்பி விட்டாரே நன்று நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. படித்தேன், தெரிந்து கொண்டேன்.

  முன்பு எப்போதோ மாவிளக்கு பற்றிய பதிவிலோ, இதில் நான் உங்கள் தளம் எப்போது முதலில் வந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மாவிளக்குப் பதிவு இந்த வலைப்பக்கம் போட்டதே இல்லை. அது தமிழ் மரபு அறக்கட்டளைக்காகத் தனியாஎழுதின பதிவு! அந்த வலைப்பக்கம் தான் பார்க்கலாம்! :))))) மாவிளக்குப் போட்டது குறித்து எழுதி இருக்கிறேன், படம் போட்டதாக நினைவில் இல்லை!

   Delete
  2. ஹெஹெஹெ, ஶ்ரீராம், அ.வ.சி. ஏற்கெனவே 2013 ஆம் ஆண்டில் ஒருதரமும் 2010 ஆம் ஆண்டில் ஒரு தரமும் இந்தப் படங்களை (மாவிளக்கு)ப் பகிர்ந்திருக்கேன். இப்போத் தான் வேறே ஏதோ தேடினால் அது வந்தது! :)))))

   Delete
 4. உங்கள் கணவர் பெரிய பிள்ளையார் பக்தர்போலிருக்கிறதே. தினமும் எண்ணெய்க்காப்பு, பூ, விளக்கு - நமது பெண்கள்கூட இப்படி சிரத்தை காண்பிப்பது அரிதாயிற்றே. ப்ரமாதம்.

  பெருமாள் விக்ரஹமும் திருட்டுப்போய்விட்டதா? கிடைக்கையில், கை உடைந்து காணப்பட்டதா..என்ன சோகம். தமிழ்நாட்டில் இந்துக்கோவில்கள், கடவுள்களுக்கு அபாரமான மரியாதை..அடடா! ஆழ்வார்களும் , நாயன்மார்களும், சித்தர்களும், இன்னபிற ஞானியரும் வாழ்ந்த, சுற்றிவந்த ப்ரதேசத்தில், கடவுள் விக்ரஹங்களைக் காப்பதே இந்தக்காலத்தில் பெரும்பாடாக இருக்கிறது. எத்தகைய காலகட்டத்தில் வாழ்கிறோம்..

  எனக்குத் தெரிந்து, பின்னமான (சிதைந்த) விக்ரஹங்கள் பூஜைக்குரியவை எனக் கருதப்படுவதில்லை. கை உடைந்த நிலையில், இதனை மீண்டும் எப்படி ப்ரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள்? இதுபற்றிய பேச்சு வரவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், வருகைக்கு நன்றி, எங்க வீட்டில் அநேகமா எல்லோருமே பிள்ளையார் பக்தர்களே! பெருமாள் விக்ரஹம் கோயிலில் வழிபாடுகள் செய்தவராலேயே திருடப்பட்டுப் பின்னர் கண்டு பிடிச்சாங்க. முதலில் பின்னமான விக்ரஹம் பூஜைக்கு உதவாது என்றே சொல்லப்பட்டது! ஆனால் ஒருத்தருக்குப்பெருமாள், உன் குழந்தைக்குக் கை திடீரென ஊனமாகி விட்டால் தூக்கிப் போட்டுவிடுவாயா? என்று கேட்டாற்போல் இருந்ததாம்! ஆகவே இதைச் சரி செய்ய முடியும் என ஸ்தபதிகள் கூறியதாலும் இதையே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது!

   Delete
  2. உங்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது (ன்னு நினைக்கறேன்).

   இராமகிருஷ்ண பரமஹம்சர், கதாதரன் என்ற பெயரில் பூஜாரியாக கொல்கத்தா கோவிலில் இருந்தார் (அது ராணிக்குச் சொந்தமான கோவில்). அங்கு ஒரு முறை கிருஷ்ண விக்ரஹம் கீழே விழுந்து கை உடைந்துவிட்டது. உடனே எல்லோரும் பின்னமான விக்ரஹத்தைப் பூஜிக்கக்கூடாது, வேறு விக்ரஹம் வைக்கவேண்டும் என்று ராணியிடம் சொன்னார்கள். ராணி, கதாதரரிடம் வந்து, உங்கள் அபிப்ராயம் என்ன என்று கேட்டவுடன், 'உங்கள் மாப்பிள்ளைக்குக் கை உடைந்துவிட்டால், வேறு மாப்பிள்ளை தேடுவீர்களா. நானே இதனைச் சரி செய்துவிடுகிறேன். வேறு விக்ரஹம் தேவையில்லை' என்று சொன்னாராம். இதைப் படித்த ஞாபகம் வந்தது.

   Delete
  3. நெ.த. என்னிடம் ரா.கணபதி எழுதிய பரமஹம்சர் பற்றிய புத்தகமும், விவேகானந்தர் குறித்த அறிவுக்கனலே, அருட்புனலே புத்தகமும் உள்ளது! அவ்வப்போது எடுத்துப் படிப்பேன், உண்மையில் இதை எழுதும்போது பரமஹம்சர் சொன்னதைச் சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனால் அந்த ஊர்க்காரர் மிகவும் உணர்வு பூர்வமாகச் சொன்னது கண் முன்னே தோன்றியதால் அதை மட்டும் குறிப்பிட்டேன். பரமஹம்சர் வழிபட்ட தக்ஷிணேஸ்வர் காளி கோயிலுக்குச் சென்று பார்த்தோம். 2015 டிசம்பரில்! பேலூர் தான் போக முடியவில்லை! பனிரண்டு மணிக்கே மூடிடுவாங்களாம்! :( செம்படவ ராணி பத்தின கதைகளும் தெரியும்! நான் அதிகம் பரமஹம்சரைக் குறிப்பிடுவதில்லை என்பதால் எனக்குத் தெரிந்திருக்காதுனு நினைச்சிருக்கீங்க! :) என் தாத்தா பரமஹம்சர், சாரதாமணி தேவியைப் பூஜை அறையில் வைத்துப் பூஜித்திருக்கிறார். அம்மாவின் அப்பா! பல புத்தகங்கள் படிக்கவும் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கார்! பள்ளி நாட்களிலேயே அறிமுகம்! :))))

   Delete
  4. நிச்சயம் கொல்கத்தா சென்று இரண்டு இடங்களையும் தரிசிக்கவேண்டும்னு நினைச்சிருக்கேன். ஹிந்தில்லாம் தெரியாம என்ன செய்யறது, இடம் வேறு சுத்தமாத் தெரியாது. யாராவது போனால், நாங்கள் (+மனைவி) ஒட்டிக்கொள்வோம். அதுவும் தக்ஷிணேஸ்வரர் காளி கோவில்.

   Delete
  5. ஐஆர்சிடிசியின் மூலம் சென்னையில் ட்ராவல் டைம்ஸ் ஏற்பாடு செய்யும் "பாரத் தர்ஷன்" சுற்றுலா மூலம் போனால் அவங்களே வந்து விளக்கம் எல்லாம் கொடுப்பாங்க! ஹிந்தி தெரியணும்னு இல்லை. அவங்க கொடுக்கும் தேதிகள் எங்களுக்கு ஒத்து வராததால் நாங்க போகலை! என்ன ஒரு சிரமம்னா ரயில் பயணம். ஆனால் ஏசி வகுப்புகள் இருக்கின்றன. தங்கறதுக்கு இடம் நாம் கேட்டால் அவங்க மூலமே ஏற்பாடு செய்து தருவாங்க! குறைந்த பட்சமாக ஸ்டார் ஓட்டல் தான்! ஒரு நாளைக்கு 1500 அல்லது 2000 ஆகும் அறை வாடகை! சாப்பாடு நாம் இருக்கும் இடத்துக்கே சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் கொண்டு வந்து தந்துடுவாங்க! அவங்க பொறுப்பு அது!

   Delete
  6. அறை நாம் ஏற்பாடு செய்துக்கலைனா அவங்க மற்றப் பயணிகளைத் தங்க வைக்கும் பள்ளி, கல்யாண மண்டபங்களில் தான் தங்கிக்கணும். நாங்க ஒரு முறை போனப்போ குறிப்பிட்ட ஊர் போனதும் அறையை நாங்களே சுற்றுலா நிர்வாகம் தங்குமிடத்துக்கு அருகே ஏற்பாடு செய்து கொண்டோம். ஆனால் அதுக்கெல்லாம் மொழி தெரியணும். ஐஆர்சிடிசியே ஏற்பாடு செய்கிறது! என்றாலும் கொஞ்சம் குறைகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். நீங்க விசாரித்துத் தெரிந்து கொண்டு செல்லலாம். வெளிநாடுகள் எனில் விமானம் மூலம் அழைத்துச் செல்வார்கள். சிக்கிம், புடான்,அந்தமான், லக்ஷதீவுகள், ஶ்ரீலங்கா போன்ற இடங்களுக்கும் சுற்றுலா ஏற்பாடுகள் இருக்கின்றன.

   Delete
 5. அழகா இருக்கு கீதா.

  ReplyDelete
 6. அங்கும் சென்று படிச்சேன் .அழகா இருக்கு மாவிளக்குகள் .நான் இதுவரை நேரில் கண்ணாலும் சாப்பிட்டும் பார்த்ததில்லை அதான் கேட்டேன் :)

  பெருமாளை மீட்டது IPS திலகவாதியா ?.. கிடைத்தது மகிழ்ச்சி ஆனா கவனிப்பார் இல்லாம பாவம் பெருமாள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், இப்போத் திருச்சி வந்தப்புறம் தான் மாவிளக்குப் போகும்போதெல்லாம் சாப்பாடு செய்து எடுத்துச் செல்கிறேன். முன்னெல்லாம் சென்னையில் இருந்து செல்கையில் விநியோகம் போக மீதம் இருக்கும் மாவிளக்கே எனக்கு அன்றைய ஆகாரமாக இருக்கும்! ஆமாம், பெருமாளை மீட்டது திலகவதி ஐபிஎஸ் தான். அதுக்கு என் சித்தப்பா(அசோகமித்திரன்) சிபாரிசும் செய்தார் திலகவதியிடம்!

   Delete
 7. ஆங் மீ ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன் நேக்கு நீதி வேணும்.. ஆரம்பம் திரி போட்டுக் கொழுத்தும்போது மாவிளக்கு அழகாய்த்தான் இருக்கும்.. ஸ்ரெப் பை ஸ்ரெப் ஆ படங்கள் தேவை.. என்னுடையதை சொக்கப்பனை கொழுத்திட்டேன் என நெ.தமிழனும் அஞ்சுவும் ஜொள்ளிட்டாங்கோ.. அதனாலதான் கீசாக்காவுக்காக வெயிட் பண்ணினேன். பட் ஏமாத்திப் போட்டீங்க... எனக்கு மாவிளக்கு முழுப்படமும் வேணும்ம்ம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. நான் மனசுல அப்படி நினைச்சு சொல்லலை அதிரா. உங்கள் படம், ரொம்ப நல்லா வந்திருந்தது. ஜக ஜோதியா, சன்னிதில விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. (என்ன, மாவு ரொம்ப கருகிவிட்டது, கீழ்ப்பக்கத்தில். எங்க வீடுகள்ல அப்படி ஆகாது.). ஆனாலும் உங்கள் சன்னிதி படம் என் மனதில் இன்னும் இருக்கு

   Delete
  2. ஹையோ நான் சந்தோசத்திலதான் அப்படிச் சொன்னேன் நெல்லைத்தமிழன்:)... சொக்கப்பனை என்றது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச் ஹா ஹா ஹா... இப்போதான் யோசிக்கிறேன் ஊரில் அப்படிக் கலராகத்தான் வரும் எல்லோருக்கும் ஏனெனில் நாங்க சாமி/தினையில் மட்டுமே மாவிளக்கு ஏத்துவோம்... ஒருவேளை அரிசிமாவுக்கு அப்படி ஆகாதோ:)..

   Delete
  3. ஹாஹா, அதிரடி அதிரா, கவிப்புயல் அதிரா, இன்னிக்குப் பதிவே மாவிளக்குப் பத்தித் தான் எழுதப் போறேன். :) மற்றபடி தினையிலும் மாவிளக்குச் சாப்பிட்டிருக்கேன்! கொடைக்கானல் குழந்தை வேலப்பர் சந்நிதியில்! அதுவும் நல்லாவே இருக்கும். கருகாது! :))))

   Delete
 8. செல்லப் பிள்ளையார் அழகா இருக்கிறார் கீ ரக் சைஸ்ல..

  பொய்யாப் பிள்ளையார் படம் இருந்தா போடுங்கோ கீதாக்கா...

  ReplyDelete
  Replies
  1. Geetha akka its //கீ ரக் சைஸ்ல// key tag size :)

   Delete
  2. அதிரா மியாவ், பொய்யாப் பிள்ளையார் கோயிலைத் திறந்தால் தான் படம் எடுக்க முடியும் . பழைய ஃபைல்களில் இருக்கானு பார்க்கிறேன்.

   Delete
  3. https://www.google.co.in/search?q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0ahUKEwjuqMnn6fLYAhVMso8KHSBKDwQQsAQIKw

   Delete
  4. ஐயா, நம்பியாண்டார் நம்பி வழிபட்டது "பொள்ளாப் பிள்ளையார்" பொள்ளாமல் தானாகவே தோன்றியவர். வேறு ஊர்களிலும் "பொய்யா"ப்பிள்ளையார்" இருக்கலாம். தெரியவில்லை, எங்க பூர்விக ஊரில் இருப்பவர் "பொய்யாப் பிள்ளையார்!"

   Delete
 9. ஒவ்வொரு முறையும் நீங்கள் கருவிலி பற்றி எழுதும்போதும் எனக்கு நாங்கள் சென்று வந்த நினைவு வருகிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, நன்றி.

   Delete
 10. ஹை செல்லப்பிள்ளையார்!!! சூப்பர் மாமாவின் செல்லப் பிள்ளையார் ரொம்ப க்யூட்டாக இருக்கார்!!!

  மாவிளக்கு இப்போதைய ஃபோட்டோ?!!! காணலையே! இனிதான் வருமோ...புதிய பதிவிலும் இல்லைனு நினைக்கிறேன்...அழகான வழிபாடு!!! கோயில் அம்பிகை சர்வாங்க சுந்தரி சுந்தரிதான்!!! மனது லயிக்கிறது!! சூப்பர்!!

  உம்மாச்சி பாவம்! சக்கரம் இல்லை கை உடைந்து ம்ம்ம் அப்புறம் ஐபிஸ் திலகவதி மீட்டெடுத்தார் என்பது மகிழ்ச்சியாக இருக்கு!! அதுவும் விண்ணப்பித்ததும் ஆக்ஷன் எடுத்துருக்காரே!! பாராட்டுவோம்...எப்படியோ பெருமாள் வந்துவிட்டார்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இப்போதைய மாவிளக்கு போட்டோ வராது கீதா! எடுக்கவே இல்லை! முடிஞ்சால் சர்வாங்க சுந்தரியை நேரில் போய்ப் பார்த்துட்டு வாங்க!

   Delete