தமிழ்நாட்டில் சோழர்கள் இன்னமும் வாழ்கின்றனராம். தந்தி தொலைக்காட்சியின் செய்திகளில் காட்டினார்கள். கும்பகோணத்துக்கு அருகே ஓர் சின்ன கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனராம். சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் இவர்களுக்கே முதல் மரியாதையாம். அதே போல் முதல் மண்டகப்படி அல்லது கட்டளையும் இவர்களுடையது தானாம்! முன்னொரு காலத்தில் ஹிரண்ய வர்மனால் திருப்பணி செய்யப்பட்டுக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சிதம்பரம் கோயிலில் இவர்கள் தான் ஹிரண்ய வர்மனின் வாரிசுகளாக இன்றளவும் கருவறைக்குச் செல்லும் வழியில் உள்ள பஞ்சாக்ஷரப் படிகள் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்வார்களாம். இதற்கு முன்னால் இருந்த அரசர் 1978 ஆம் வருஷம் பட்டம் சூட்டிக் கொண்டாராம். இப்போது அவர் காலம் ஆகிவிடவே அவரின் இளவல் விரைவில் பட்டம் சூட்டிக் கொள்ளப்போகிறாராம். பஞ்சாக்ஷரப் படிகளில் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டாம்! சற்று முன்னர் தான் இந்தச் செய்தியை தந்தி தொலைக்காட்சியில் கூறினார்கள். எங்க கட்டளை தீக்ஷிதர் இது குறித்து இன்றளவும் ஏதும் சொன்னதில்லை. அவர் ஆய்வு செய்து எழுதிய சிதம்பரம் பற்றிய நூலிலும் இந்த விபரங்கள் காணப்படவில்லை. நேரில் அவரைப் பார்க்கையில் கேட்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வரையில் ஹிரண்ய வர்மன் கௌட தேசத்தில் இருந்து வந்தவன். தோல் வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இவன் தில்லைக்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் குளித்து தோல் நோய் நீங்கப்பெற்று ஹிரண்யம் போல் ஜொலிக்கும் ஹிரண்ய வர்மன் ஆனான். அவன் உண்மைப்பெயர் சிம்மவர்மன் ஆகும். இவனிடமிருந்தே பல்லவ குலம் தோன்றியதாகவும் படிச்சிருக்கேன். ஆனால் இன்னிக்குத் தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய சோழ வாரிசுகள் தாங்கள் ஹிரண்ய வர்ம சோழனின் வாரிசுகள் என்றனர். ஒண்ணும் புரியலை!
நாங்க நின்ற இடத்திலிருந்து நம்பெருமாள் பத்து அடி தூரத்திலே இருந்தாலும் ஜூம் பண்ணி எடுக்க முடியலை! கூட்டம் நாலாபக்கமும் நெருக்குது! செல்லே கீழே விழுந்துடுமோனு பயமா இருந்தது. அதனால் தான் காமிராவைக் கீழே போட்டுடுவோமோ என்னும் பயத்தில் கொண்டு போகலை! செல்லில் எடுத்தது. அதுவும் எனக்குக் கொண்டையும் முகமும் மட்டுமே தெரிஞ்சது. ரங்க்ஸ் எடுத்தார் படங்கள்!
நேற்று நம்பெருமாளை ஆயிரக்கால் மண்டபத்திலாவது பார்த்துட்டு வரலாம்னு மூணு மணிக்கே கிளம்பிப் போனோம். வண்டியை எங்கோ நிறுத்திட்டு நடந்து தான் போகும்படி இருந்தது. ஆயிரக்கால் மண்டபத்திலேயே பெருமாள் இருப்பார். பார்த்துட்டு வர வேண்டியது தான்னு நினைச்சால் அங்கே மண்டபத்துக்குப் போகும் வாசலில் மக்கள் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். விசாரித்ததில் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் நம்பெருமாள் அங்கே வருவதற்கு என்றார்கள். எங்கே போனார் என்றால் மத்தியானம் ஓய்வு எடுக்க நம்மைப் போல் அவரும் போயிருக்கார். ஆழ்வார்களும் அனைவரும் போயிருக்காங்க! நேற்றுத் திருக்கைத்தல சேவை வேறே! அதனால் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். நமக்குப் பெருமாளைப் பார்த்தால் போதுமேனு வரவரைக்கும் உட்காரலாம்னு உட்கார்ந்திருந்தோம். ஓர் வயதான அம்மா வந்தார்கள். அவரைப் பார்த்ததும் எங்க பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு தம்பதியினர் (இந்தத் தம்பதியர் அருப்புக்கோட்டையிலிருந்து திருவிழாவுக்கு வந்திருக்காங்களாம்! இப்படி எத்தனையோ பேர்!) ஓடிப் போய் அவரை வணங்கினார்கள். அவங்க கோயில்லே எனக்கெல்லாம் நமஸ்காரம் செய்யக் கூடாதுனு தடுத்துட்டுச் சிறிது நேரம் பேசிட்டுப் போயிட்டாங்க. அவங்க போனதும் அந்தத் தம்பதியர் அந்த அம்மா கூரத்தாழ்வாரின் வாரிசைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதாகவும் அந்த அம்மாவின் கணவர் கூரத்தாழ்வாரின் நேரடி வாரிசு என்றும் சொன்னார். அட, பேசி இருக்கலாமேனு நினைச்சேன்.
ஶ்ரீரங்கம் பத்தி எழுதறதாலே சில, பல சந்தேகங்கள். அந்த அம்மாவைச் சிநேகிதம் பண்ணிக் கொண்டிருக்கலாமோனு நினைச்சேன். இன்னொரு முறை பார்த்தாலும் எனக்கு அடையாளம் தெரியாது! ஹிஹிஹி! அவ்வளவு சமர்த்து!
கிட்டத்தட்ட நாலு மணி இருக்கும்! சாரி,சாரியாக மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஆழ்வாராக வர ஆரம்பிச்சு ஒன்பது பேர் வந்துட்டாங்க! இன்னும் மூணு பேர் வரணும். அதுக்குள்ளே வடக்கு வாசலில் கொட்டு சத்தம் கேட்டது! சரி நம்பெருமாள் தான் வராரோனு நினைச்சா யாரையும் காணோம். அப்போ ஒரு பெரியவர் வந்து அங்கே உட்கார்ந்தார். கோயில் ஊழியம் செய்பவர் எனத் தெரிந்தது. அவரிடம் விபரம் கேட்டதுக்கு இப்போத் தான் வடக்கு வாசல் திறந்து நம்பெருமாள் வெளியே வந்திருக்கார் என்றும், இங்கே வர இன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என்றும் கூறினார். ஏற்கெனவே கூட்டம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அன்னிக்குத் திருக்கைத்தல சேவை பார்க்க வேறே மக்கள் முண்டிக் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்துக்குள் உட்கார்ந்திருந்தார்கள். பெருமாள் உட்காரும் இடத்தில் மட்டும் ஆட்கள் இல்லை! மற்றபடி கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியே அதற்கும் மேல்! அதுவும் சொர்க்க வாசலை மிதிக்கவும், உள்ளே முத்தங்கி சேவையில் பெரிய ரங்குவைத் தரிசிக்கவும் கூட்டம் அலை மோதியது! இலவச தரிசனத்துக்கோனு நினைச்சால் 250 ரூபாய்க்காம்! அதுக்கே இவ்வளவு கூட்டமானு நினைச்சு மயக்கமே வந்தது.
நாங்க தாயார் சந்நிதிக்குப் போற வழியிலே சென்றோம். ஆயிரக்கால் மண்டபத்துக்கு வராமல் இருந்த 3 ஆழ்வார்களுக்கும் வழியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருத்தர் நம்மாழ்வார், இன்னொருத்தர் திருமங்கை மன்னன். மற்றவர் பெரியாழ்வாரோனு நினைப்பு! தெரியலை. கூட்டம் அங்கேயும்! கிட்டே போக முடியலை. மேலே நடந்தோம். வடக்கு வாசலுக்குப் போகும் வழியிலேயே பாதி வழியில் நம்பெருமாளை இருத்தி இருந்தார்கள். தூரக்க இருந்து தெரியலை. ஆனால் ரங்க்ஸ் பார்த்துட்டு, "இவர் நம்பெருமாள் இல்லை போலிருக்கே! ரொம்பச் சின்னவரா இருக்காரே!" என்றாரே பார்க்கலாம்! கொஞ்சம் கிடைத்த இடைவெளியில் பார்த்த நான் பாண்டியன் கொண்டையையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் வைத்து அடையாளம் கண்டுகொண்டு நம்பெருமாள் தான் என உறுதி செய்தேன். பக்கத்தில் இருந்தவர்களும் ஆமோதித்தார்கள். சற்று நேரம் நின்று பார்க்க முயன்று விட்டு, அருகே செல்ல முயன்றுவிட்டு, கூட்டத்தின் நட்ட நடுவில் மாட்டிக் கொண்டால் வெளியேறுவது சிரமம் என்பதால் பார்த்தவரைக்கும் போதும்னு திரும்பினோம். பிரசாதங்கள் விற்பனை அமோகம். ஆனால் எங்கிருந்து வருதுனு தெரியலை! தீரத் தீரச் சூடாக நிரப்பிக் கொண்டே இருந்தார்கள். அங்கேயும் கூட்டம். டோக்கன் வாங்கி வாங்கணும்.
வைகுண்ட ஏகாதசித் திருவிழா சமயத்தில் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை (கிட்டத்தட்ட பிட்சா! அதைப் போல் தான் முக்கோணமாக வெட்டி இருந்தார்கள்) வாங்கிக் கொண்டோம். ஒரு துண்டம் 30 ரூபாயாம்! அநியாயம். சாதாரணமாக ஒரு தோசையே 60 ரூபாய் தான். கூட்டத்தைக் கண்டதும் விலை ஏற்றி விட்டார்கள்.
இந்த ஒரு துண்டம் தான் 30 ரூபாய்! தோசை சூடு கை பொரிந்து விடும்போல இருந்தது. வீட்டுக்கு வந்து மிளகாய்ப் பொடியுடன் சாப்பிட்டோம். செய்முறை
நம்ம காஞ்சீபுரம் இட்லி மாதிரித் தான்.
பச்சை அரிசி ஒரு கிண்ணம்
இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிண்ணம்
உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
எல்லாவற்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைக்கவும். பின்னர் சுக்கைப் பொடி செய்து அதில் போட்டு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். (கோயிலில் நோ பெருங்காயம்) அடுப்பில் ஓர் வாணலியில் நெய்யை ஊற்றிக் கொண்டு மிளகு, சீரகத்தைப் பொடித்து அதில் போட்டு தோசை மாவில் கலக்கவும். உடனே வார்க்காமல் கொஞ்சம் புளிக்க வைக்கவும். பின்னர் அடிகனமான தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாகப் பரப்பி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு மேலே கருகப்பிலையைத் துண்டாக நறுக்கித் தூவவும். மூடி வைத்து வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கமும் திருப்பிச் சிறிது வேக விட்டு எடுக்கவும். இதற்குச் சட்னி, சாம்பாரை விடக் காரமான மிளகாய்ப்பொடி அல்லது தக்காளித் தொக்கு அல்லது தக்காளிச் சட்னி நன்றாக இருக்கும். கோயிலில் செய்யும் சம்பார தோசைக்குக் கறுப்பு உளுந்து சேர்ப்பார்கள். அதனால் ருசியில் மாறுபாடு தெரியும்.

me first
ReplyDeleteவாங்க அவர்கள் உண்மைகள், கருத்து ஒண்ணுமே சொல்லலை! :)
Deleteஹிரண்யவர்மன் கதை எனக்கு மங்கை மிஸ் சொல்லித்தெரியுமே .ஆனா பல்லவ வார்சுலாம் சொன்னார்களா நினைவிலில்லை :) 10 வது படிக்கும்போதுதான் தெரியும் .எங்க தமிழ் மிஸ் ரொம்ப வித்யாசம் பாடம் ஆரம்பிக்குமுன்னே இப்படி திருவாசகம் தேவாரம் எல்லாம் மேற்கோள்காட்டி மனப்படமா நடிச்சே காட்டுவாங்க .அஸ்வத்தாமன் ,ராமாயணமும் மகாபாரதம்லாம் இன்னும் நினைவிருக்குன்னா அவங்கதான் காரணம் .
ReplyDeleteபெருமாளும் ஓய்வெடுக்கதானேக்கா வேண்டும் . அவருக்கும் டயர்ட் இருக்குமே .
சம்பார தோசை பார்க்க அச்சுஅசலா ஜெர்மன் Zwiebelkuchen மாதிரியே இருக்கு அதில் வெஙகயம் இருக்கும் இப்படி தட்டையா இருக்கும் ..இதையே பீட்ஸாவாக்கிடலாம் நீங்க மேல சாஸ் சீஸ் கொஞ்சம் வெஜ் போட்டு மைக்ரோவேவ் பண்ணினா பிட்ஸாதோசை .
செய்முறையில் சொன்ன பொருட்களைப்போட்டு தான் ஆப்கான் அளவை மாற்றி அழகர் கோயில் தோசை செய்வேன் ..கருப்புஉளுந்து இங்கே தாராளம் கிடைக்கும் ஆனா கொஞ்சம் தோசை கல்லுமாதிரி இருக்கும் நல்லா வர நெய்யூற்றி வேகவைக்கணுமாமே .
வாங்க பேப்பர்க்ராஃப்ட்ஸ், நான் அறிந்தவரை ஹிரண்யவர்மன் பல்லவ குலம்னு தான் சொன்னாங்க! இதை நான் என்னோட "சிதம்பர ரகசியம்" நூலில் கூட எழுதி இருக்கேனே! http://freetamilebooks.com/ebooks/chidambara-ragisiyam இந்தச் சுட்டியில் பாருங்க, புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்கலாம். ஹிஹிஹி, விளம்பரத்துக்கு வாய்ப்புக் கிடைச்சா விடுவோமா! :)
Deletebook marked it. will read it akka
Deleteபெரிய புத்தகம். அதனால் நிதானமாக நேரம் கிடைக்கும்போது படிங்க சேவலைக்காத்த சேயிழையே! :))))
Deleteமதியம் தந்தி தொலைக்காட்சியில் நானும் அந்தச் செய்தி பார்த்தேன். 'மன்னரை'ப் பார்க்க பாவமாக இருந்தது. நான் கூட அதை வைத்து ஒரு பதிவு எழுதலாமா என்று ஒருகணம் யோசனை வந்தது!
ReplyDeleteஆமாம், மன்னர் பாவம் தான்! நானும் ஏதேனும் கற்பனை பண்ணி எழுதலாம்னு நினைச்சால் மேல் மாடி காலினு ம.சா. கத்திக் களேபரம்! :)
Deleteஒரே படத்தையே இரண்டுதரம் போட்டிருக்கிறீர்கள். உண்மையைச் சொன்னால் எனக்கு நீண்ட நேரம் கோவிலில் காத்திருக்கும் பொறுமை கிடையாது!
ReplyDeleteஶ்ரீராம், ஆட்கள் நகர்ந்தால் தானே மாறுவதற்கு! :) அசையாமல் இருந்தாங்க!
Deleteசம்பார தோசையைப் பார்த்தல் தேங்காய் பன் மாதிரி இருக்கிறது.
ReplyDeleteவீட்டில் செய்தால் இந்த அளவு கனம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
ஶ்ரீராம்... இந்த கமென்டைப் படித்தவுடன் சிரித்துவிட்டேன். எதைப் பார்த்து எந்த நினைப்பு வருகிறது.
Deleteதேங்காய் பன்? எனக்கு பிட்சா தான் நினைவில் வந்தது! நெ.த.வுக்குச் சிரிப்பு வந்த காரணம் தான் புரியலை!
Deleteநேக்கும் புரியலையாக்கும்!
Deleteஎங்கே அவர்? குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்கிறார் போல! இருக்கட்டும், இருக்கட்டும்! :)
Deleteகோவில் பிரசாதம் உங்களுக்கு ஏற்படுத்திய நினைவைத்தான் சொன்னேன்.
Deleteகீதா ரங்கன் செய்த படத்தைப் பகிர்ந்துகொண்டபோது, unfortunately எனக்கு தில்பசந்த், தில்குஷ் நினைவு வந்தது.
எதுக்கு அடுப்படியிலேயே நின்றுகொண்டு, 5-6 தோசை வார்க்கணும்னு சோம்பல்படறவங்க, எல்லா மாவையும் ஒரேயடியாக திண்டுபோல ஒரு தோசை வார்த்துடறாங்களோ?
ஶ்ரீராம், கீதா ரங்கன் படம் அனுப்பி இருப்பாங்களே! கிட்டத்தட்ட இந்த அளவுக்கே அவங்க தோசையும் இருந்தது!
Deleteகீதாக்கா என்ன நெல்லையை ரொம்பவே ஓட்டறீங்க!! ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteச்சே என்னக்கா இப்படி கூரத்தாழ்வாரின் வாரிசின் மனைவியை விட்டுவிட்டீங்களே அப்புறம் கூட்டத்தில் பார்க்க முடியைலையோ...யாரிடமாவது விசாரித்து அவங்க எங்க இருக்காங்க ஸ்ரீரங்கத்துல நு கேட்டு எப்படியாவது சினேகம் செஞ்சுக்கோங்க...நமக்கு நிறைய தெரிஞ்சுக்கலாம் இல்லையா...
இந்தத் தோசை பற்றி என் மிக நெருங்கிய உறவினர்கள் அங்கு இருப்பதால் அறிந்தேன். ரெசிப்பியும் கோயில் அருகிலேயே இருந்தார்கள்...நான் வந்திருக்கேன் அங்கு. இப்போ கோயில் அருகில் தான் என்றாலும் ராகவேந்திரா நகர்?? என்று வந்திருக்கு இல்லையா அங்கு இருக்கிறார்கள்.அங்கும் ஒரே ஒரு முறை வந்ததுண்டு...புதிதாக நிறைய ஃப்ளாட்ஸ் வீடுகள் வந்திருக்கே அங்கு...அப்புறம் ரொம்ப வருஷமாக மிக
அங்கு தெரிந்ததிலிருந்து வீட்டில் செய்வதுண்டு....அது போல அழகர் கோயில் தோசையும்
இப்படித் தடிமனாகவே வீட்டில் செய்வதுண்டு...இதுவும்..டேஸ்டியா இருக்கும்..என்றாலும் கோயிலில் கிடைப்பது என்னவோ ஸ்பெஷலாக இருப்பது போல இருக்கும்....
கீதா
வாங்க கீதா, அந்த மாமி முகம் நினைவில் இல்லை! இருந்தாலும் அந்தக் கூட்ட நெரிசலில் கண்டுபிடிப்பது கஷ்டம்! சம்பார தோசைனு கேள்விப் பட்டிருக்கேனே தவிர இம்முறை தான் சுடச் சுட வாங்கினோம். முன்னர் பெரிய ரங்குவைப் பார்த்துட்டுத் திரும்பும்போது இப்படித் தான் சூடாக அப்பம் கொடுத்தார்கள்! நல்ல ருசி!
Deleteஅக்கா நானும் கறுப்பு உளுந்துதான் பயன்படுத்துகிறேன்..அதுவும் இந்தக் கோயில் தோசை செய்யும் போது....எப்பவுமே நார்மல் தோசை இட்லி செய்தாலும் கருப்பு உளுந்து தான் பெரும்பாலும் பயன்படுத்துவேன்...அது அப்படியே பழகிவிட்டது...ஆமா பெருங்காயம் கிடையாது...
ReplyDeleteஉங்க படம் பார்க்கவே சூப்பரா இருக்கெ..வீட்டில ஊறப் போட்டாச்சு ஹா ஹா ஹா ஹா...
தஞ்சாவூரில் உள்ள உறவினரிடம் கற்றது கூட அரிசியும், கறுப்பு உளுந்து மட்டும் சேர்த்து உளுந்து அடை என்று செய்வாங்க...அதுல மிளகாய் வத்தல் பெருங்காயம் மட்டும் சேர்த்துப்பாங்க அதுவும் கொஞ்சமாக...அது ஒரு டேஸ்ட்...
கீதா
அம்மா வீட்டில் இருந்தவரைக்கும் கறுப்பு உளுந்து தான் இட்லி, தோசைக்கு! அடைக்கு எல்லாத்துக்கும். இங்கே மாமியார் வீட்டில் தோசை மிளகாய்ப் பொடிக்கும் அடைக்கும் மட்டும் போடுவார்கள். இப்போல்லாம் வாங்கறதையே விட்டாச்சு!
Deleteநானும் பெருங்காயம் சேர்க்காமத்தான் செய்வேன்...மத்ததெல்லாம் கோயில் தோசைதான் அப்படிக் கற்றுக் கொண்டதால்..
ReplyDeleteநீங்க சேர்க்கச் சொல்லியிருக்கீங்க அதையும் சேர்த்துச் செய்யறேன்...
நாளை என்ன டிஃபன்செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...கோயில் தோசை நீங்க சொன்னதும்....ஆஹா கொஞ்ச நாளாச்சே செஞ்சு என்று ஊறப் போட்டுட்டேன்..ஹா ஹா ஹா
கீதா
கீதா, வீட்டுக்குச் செய்யும்போது கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்க்கலாமே! இந்த தோசை ஒரு நாள் செய்து பார்க்கணும். ஆனால் இப்போ உடனே முடியாது!
Deleteஆமாம் அக்கா காஞ்சிபுரம் இட்லி போலத்தான் அப்ப சொல்ல நினைத்து விட்டுப் போக நீங்களும் கொடுத்திருக்கீங்க
ReplyDeleteகீதா
கீதா, காஞ்சீபுரம் இட்லியும் நிறையச் செய்தாயிற்று! இந்த தோசை தான் இன்னும் பண்ணிப் பார்க்கலை!
Deleteகீதாக்கா பெருமாளைப் பார்த்த கதை பெருங்கதையாக இருக்கே:)... நானும் நினைப்பேன் எங்கிருந்துதான் மக்கள் வருகிறார்களோ என...
ReplyDeleteகோயிலுக்குப் போனாலும் கூட்டம், சொப்பிங் போனாலும் கூட்டம், ரெஸ்ட்டோரண்ட் போனாலும் கூட்டம்:)...
பிட்ஷா ரொட்டி பார்க்க நல்லா இருக்கு... முப்பது ரூபாய்தானே.. எனக்கும் ஒன்று வாங்கி வந்திருக்கலாம்:)...
வாங்க அதிரடி, ஒண்ணே தின்ன முடியுமானு சந்தேகம்! உங்களுக்கும் வாங்கிட்டு அப்புறமா நீங்க வரலைனா தேம்ஸிலா போட முடியும்! அதான் வாங்கலை! :))))
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
வாங்க காசிராஜலிங்கம், நன்றி.
Deleteசம்பார தோசையைப் பார்த்து ரங்கனைப் பார்த்த சந்தோஷம் அடைய வேண்டியதுதான்.
ReplyDeleteவாங்க வல்லி, ரங்கனையும் முகத்தையாவது பார்த்தேனே!
Deleteவாரிசு பிரச்சனை நம் நாட்டில் இன்றுவரை முடியவில்லையே....
ReplyDeleteகில்லர்ஜி, இதுக்கு முடிவே இருக்காது போல!
Deleteகோயிலுக்கு உடன் வந்ததுபோன்ற உணர்வு. சம்பார தோசை என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, சம்பார தோசை இங்கே ஶ்ரீரங்கத்தில் தான் பிரபலம்!
Deleteதொலைக்காட்சியில் சொன்ன செய்திகள் சரியாக ஆராய்ந்து சொல்லப்படவில்லை. சோழர்களின் வாரிசுகள் கடலூர் அல்லது பாண்டிச்சேரி அருகே இருப்பதாகப் படித்திருக்கிறேன். அவர்களின் முடியணிவிப்பு சிதம்பரம் கோவிலில் நடப்பதாகவும் அறிந்திருக்கிறேன். செய்தி உண்மை. ஆனால் பல்லவர்கள் இல்லை.
ReplyDeleteஎனக்கு அரங்கன் கோவிலில் அவன் பிரசாதம் (ஒரு ரெண்டு நாள் தங்கி, எல்லா வேளை) வாங்கிச் சாப்பிடவேண்டும் என்று ஆசை (பிரசாத ஸ்டாலில் அல்ல). உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாழ்க.
வாங்க நெ.த. உங்களைக் காணோமா? சரி, மறுபடி மறுபடி சமையலானு ஓடிப் போய் ஒளிஞ்சுட்டீங்கனே நினைச்சேன்! :)))
Deleteஅந்த இளவரசரும், அந்த அம்மாவும் (என்னவோ நாச்சியார்னு பெயர்! மறந்துட்டேன்) அவங்க தான் பழைய ராஜாவின் ராணியாம். இரண்டு பேருமே ஹிரண்ய வர்மனின் வாரிசுகள் என்கிறார்கள். ஆனால் ஹிரண்யவர்மன் பல்லவ குலத்துக்கு முதல்வன் என்றுபடிச்சிருக்கேன். ஒண்ணும் புரியலை போங்க!
நெ.த. இதெல்லாம் தற்செயலாகக் கிடைப்பது. பிரசாத நேரம் ஓரளவுக்குக் கணக்காய்த் தெரியும்! அந்த நேரங்களில் தான் கிடைக்கும்
Deleteஇன்னொன்று கீ.சா. மேடம். பழைய ஜமீன் பரம்பரைனு சொல்லி, அவங்க 'ராஜா' டிரெஸ் போட்டு போட்டோ போடுவாங்க. அதைப் பார்த்தால் எனக்கு கழைக் கூத்தாடிகள் எண்ணம்தான் வரும். நாம மனசுல நினைக்கற ராஜா பிம்பமும், அதற்கான உடைகளுமே வேற (சிவாஜி சில படங்களில் அதனைச் சரியாக சித்தரித்திருப்பார்). இந்த சோழகுலத் தோன்றலின் முடியணிவிப்பு படத்தைப் பார்த்தபோது, (30-40 வருடங்களுக்கு முந்தையது என நினைக்கிறேன்), எனக்கு 'ஐயோ பாவம்' என்ற பரிதாப உணர்ச்சிதான் வந்தது.
Deleteஇப்போவும் பார்க்கப் பாவமாத் தான் இருக்கு! என்ன செய்யறது? அவங்க நம்பறாங்க!
Deleteரெங்கனை சேவித்ததோடு சம்பார தோசையைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். ஒரு முறை வேளுக்குடி தன் உபன்யாசத்தில், பல கோவில்களின் ப்ரசாதங்களைப் பற்றி கூறிவிட்டு, ஸ்ரீரெங்கத்தில் மட்டும் எந்த பிரசாதமும் சிறப்பு என்று கூறி விட முடியாது. அங்கு கிடைக்கும் தேன்குழலை சாப்பிட்டால் பல் என்ன கதி ஆகும் என்று கூற முடியாது என்றார். அவர் எப்படி அரவணை பாயசத்தை மறந்தார் என்று தெரியவில்லை. நீங்கள் அரவணை பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா?
ReplyDeleteஒரு முறை பதிவிடுகிறேன். என்னை நெ.த.வும், கீதா ரெங்கனும் முந்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
வாங்க பானுமதி, ஶ்ரீரங்கம் அரவணை எனில் சாப்பிட்டது இல்லை. ஆனால் ஐயப்பனுக்கு அரவணை என்றால் நானே நிறையப் பண்ணி இருக்கேன். என்னோட ரங்க்ஸும், பையரும் மாலை போட்டுக் கொண்டு மலைக்குப் போகும்போதெல்லாம் போகும் முன்னர் நடக்கும் சமாராதனைக்கு அரவணைப் பாயசம் தான் பண்ணுவேன். அதற்கெனத் தனியாகத் திருச்சூர் உருளியும் வைச்சிருக்கேன். தூக்கத்தான் முடியாது! :)
Deleteசம்பார தோசை ..நானும் இந்த முறை ருசித்தேன்...நல்லா இருந்தது....
ReplyDelete25௦ டிக்கெட் எல்லாம் அப்படியே நிறுத்தி கும்பல் ரொம்ப அதிகம் மாதரி ஏதோ பண்றாங்க...
பகல்பத்து ஒன்பதாம் நாள் அன்னைக்கி நாங்க மூலவர் தரிசனம் பெற்றோம்....5௦ ரூவா டிக்கேட்ல 40 நிமிசத்தில கிடைத்தது...கும்பல் இருந்தாலும் இடித்தல்...தள்ளு முள்ளு எதுவும் இல்ல..ரொம்ப நிறைவா அமைந்தது...
அனைக்கி தான் முத்துக்குறி அலங்காரத்துடன் நம்பெருமாள் இருந்தார்..அதுவும் அழகு..
நீங்களும் ஶ்ரீரங்கமா? எங்கே இருக்கீங்க? முத்துக்குறி அலங்காரமெல்லாம் பார்த்ததே இல்லை! :(
Deleteஅம்மா வீடு திருச்சி தில்லைநகர்... நாங்க இருப்பது பெங்களுரு...ஏற்கனவே உங்கள்ட்ட சொன்னதா நியாபகம்...
Deleteமுத்துக்குறி ன்னா மூலவர் மாதரி அன்னக்கி உற்சவரும் முத்தால் ஆன அங்கி மற்றும் ஆபரணங்கள் போட்டு இருப்பார்...
விரைவில் அப்படங்களை என் தளத்தில் பதிவிடுவேன் ..அப்போ பாருங்க ரொம்ப அழகு...
இப்பொழுது திருப்பாவை பாசுரத்திற்கான ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை படங்களை பதிவிடுகிறேன்...( இப்பொழுது அங்கு படம் எடுக்க அனுமதிஇல்லை அதனால் இவை பழைய படங்களே ..)
முடிந்தால் பாருங்க..
https://anu-rainydrop.blogspot.in/2018/01/25.html
நேற்றே படித்தாலும் கருத்திட வில்லை....
ReplyDeleteசம்பார தோசை எனக்கு பிடிக்கவில்லை - புகை வாசம் ரொம்பவே வரும்.
கூட்டம் அதிகமோ இல்லையோ, காசு சம்பாதிக்க மட்டுமே எண்ணுகிறார்கள். சரியான வசதிகள் செய்து தருவதில்லை. குறிப்பாக இது போன்ற விழாக்காலங்களில்.
சரியானபடி நிர்வகித்தால் எத்தனை கும்பலையும் சமாளிக்க முடியும் என்பதற்கு கட்ரா வைஷ்ணவ் தேவி கோவில் ஒரு எடுத்துக் காட்டு.
வாங்க வெங்கட், எங்களுக்கு வாசனை எல்லாம் ஏதும் வரலை! நல்லாவே இருந்தது.
Deleteஇங்கே ஒருங்கிணைப்பு என்பது இல்லை! தினம் தினம் அவங்க சௌகரியத்துக்கும், வசதிக்கும் ஏற்ப மாத்தறாங்க! :(