எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 09, 2018

சில, பல எண்ணங்களின் தொகுப்பு!

அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் தன் பணியாளர்களுடன் சாலை அமைக்க உள்ளே நுழைந்திருக்கிறது! அதை இந்திய ராணுவம் விரட்டி அடித்துள்ளது. இது டிசம்பர் 28-12-2017 இல் நடந்திருக்கிறது. உடனே நம் தமிழ்நாட்டு மோதி எதிர்ப்பாளர்களுக்கு வழக்கம்போல் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றி விட்டது. இந்திய ராணுவத்தைப் பார்த்து , "உங்களால் தான் சாலை போட முடியவில்லை! அவங்களாவது போடட்டுமே!" என்கிறார்கள்.  அந்நிய ராணுவமோ அதன் பணியாளர்களோ நம் நாட்டுக்குள் நுழைவது சரியல்ல என்று கூடத் தோன்றாமல் மோதி எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது.

இதைக் கேட்டால் இங்கே சென்னையில் கொளத்தூரிலிருந்து மாதனாங்குப்பம் செல்லும் சாலையை வந்து பாருங்க என்று பதில் வருகிறது. இந்தச் சாலையை மோதி அரசும், இந்திய ராணுவமும் நேரில் வந்து போட்டுக் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களோ! அவங்களுக்குப் புரியும்படி இது மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை! பராமரிப்பு அவங்களோடது! இல்லைனா மாநில அரசு செய்யணும்னு சொன்னாலும் புரிஞ்சுக்கவே இல்லை.  இப்படி எல்லாத்துக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு என்றால் என்ன செய்ய முடியும்!
*********************************************************************************

ஆன்மிகத்துக்கும் பக்திக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரியலைன்னே நினைக்கிறேன். பொதுவா பக்தியைத் தான் ஆன்மிகம் என்றே சொல்கிறார்கள். இளைஞர்கள் பலருக்கும் இதில் இன்னமும் குழப்பம் இருக்கிறது! ரஜினி சொல்வது பக்தி நிரம்பிய கடவுளை நம்பும் ஆட்சி என்றே எண்ணுகிறேன்.  ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கு! ஏனெனில் அவர் கன்னடராம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பின்னர் யாருமே தமிழர்கள் ஆளவில்லை! வடுகர், மலையாளி, கன்னடர் என்றே ஆண்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருப்பதால் அவங்கல்லாம் தமிழர்கள் தாம் எனில் ரஜினியும் தமிழர் தானே! போகட்டும்! இப்போ பாக்யராஜும் அரசியலுக்கு வருகிறாராம். ஏற்கெனவே கட்சி ஆரம்பிச்ச நினைவு!
**********************************************************************************
இப்போல்லாம் பெண்கள் சமையல் என்றாலே ஏதோ மட்டமான வேலையாக நினைக்கின்றனர். நான் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைச் சொல்லவில்லை. இருபதில் இருந்து 30,35 வயது வரை உள்ள தற்கால நவநாகரீகப் பெண்களைச் சொல்கிறேன். திருமணம் ஆகிச் செல்லும் இத்தகைய பெண்கள் புக்ககத்தில் சமைப்பதைப் பெரிய தண்டனையாக நினைக்கிறார்கள் அது தனிக்குடித்தனமாகவே இருந்தாலும்! இவ்வளவு படிச்சுட்டு, இத்தனை சம்பாதிச்சுட்டு இங்கே சமையல் செய்து கொண்டிருக்கிறேனே எனத் தங்கள் மீதே கழிவிரக்கம் கொள்கின்றனர். நம் அம்மாக்கள் நமக்குச் சமைத்துப் போடவில்லை எனில் நாம் என்ன ஆகி இருப்போம்? அவங்க இப்படி எல்லாம் நினைச்சாங்களா? ஒரு வேளை நினைத்திருந்தால்? இன்னிக்கு நாம் வெளிச்சாப்பாடே பழகிக் கொண்டிருந்திருப்போமோ!

அந்த வெளிச்சாப்பாடும் ஏதேனும் ஓர் பெண்/அல்லது ஆண் சமைத்துத் தான் தர வேண்டி இருக்கு! அப்போ அந்தப் பெண்ணிற்கும் பெண்ணுரிமை உண்டு தானே! அவங்க மட்டும் சமைத்துத் தரலாமா? இம்மாதிரிப் பெண்ணுரிமை பேசும் பெண்கள் தங்களிடம்  வீட்டு வேலை செய்யப் பெண்களைத் தானே அமர்த்திக் கொள்கிறார்கள்? அந்தப் பெண்களும் பெண்ணுரிமை பேசிக் கொண்டு இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டோம்னு ஒதுங்கிட்டால்? என்ன ஆகும்? சரி! கூட்டுக் குடும்பம்னா மாமியார் சமைக்கலாமா? அவங்க மட்டும் பெண் இல்லையா? நமக்கு உள்ள பெண்ணுரிமை நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் சிறந்த அவங்களுக்குப் பெண்ணுரிமை கிடையாதா? அதோடு இல்லாமல் நம்மைப் போல் படிக்கலை என்பதால் அவங்க மட்டும் சமைக்கலாமா? எனக்குத் தெரிந்த ஓர் இளம்பெண் தான் படித்து நல்ல வேலையில் இருந்தும் கூட மாமியார் தன்னைச் சமைக்கச் சொல்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். இது சரியா?

உலகப் புகழ் பெற்ற பெப்சியின் சி ஈஓ(?) ஆக இருக்கும் இந்திரா நூயி தான் இவ்வளவு பெரிய வேலையில் இருப்பதால் குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை! மாறாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தால் நான் என் கணவரின் மனைவி, என் குழந்தைகளின் தாய் என்னும் எண்ணம் தான் என்னிடம் இருக்கும் என்று சொல்கிறார். அதே போல் நம் கண்ணெதிரே அருணா சாய்ராம், கர்நாடக சங்கீதப் பாடகி தன் இரு பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து பெரியவர்கள் ஆகித் தங்கள் வேலைகளைச் சுயமாகச் செய்ய ஆரம்பித்த பின்னரே மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அவருக்குத் தான் பெரிய பாடகி, ஆகையால் சமையல் எல்லாம் செய்யக் கூடாது என்னும் எண்ணம் இருந்ததாகவோ/ இருப்பதாகவோ தெரியவில்லை! ஆனால் இப்போதைய பெண்கள் தங்கள் ரோல் மாடலாக, முன் மாதிரியாக எடுத்துக் கொள்வது இவர்களைப் போன்ற பெண்கள் அல்ல.
*********************************************************************************

பெண்களைப் பற்றிப் பேசும்போது ஆண்டாள் நினைவு வந்தது. பிரபல பாடலாசிரியர் ஒருவர் பிரபல தமிழ் தினசரியில் ஆண்டாளை ஒரு தேவதாசி என்று சொல்லி இருக்கிறாராம்! நேற்றிலிருந்து அதான் வாதவிவாதங்களுக்கு உட்பட்டுக் கொண்டு இருக்கிறது.  ஆண்டாளோ, ராமனோ, கிருஷ்ணனோ யாராக இருந்தாலும் நம் கடவுள்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் குற்றம் சுமத்தப்பட்டுக் கொண்டும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள். அந்தப் பாடலாசிரியர் சொன்னதால் ஆண்டாளை நாம் அப்படி எல்லாம் நினைக்கப் போவதில்லை!

58 comments:

 1. மாமியாருக்கான தங்களது பகிர்வு மிகவும் சரியே.... அவரும் பெண்தானே... மனைவியை வீட்டில் உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்று நினைக்கும் ஆண்களுக்கு இப்பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்.

  பாக்கியராஜுக்கு சூடு போதாதா ?

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி பாக்யாராஜ் இங்க எங்க வந்தார்...புரியலையே அதையும் சொல்லியிருக்கலாமே...ரசிச்சுருக்கலாமே!! படமா?

   கீதா

   Delete
  2. //இப்போ பாக்யராஜும் அரசியலுக்கு வருகிறாராம். ஏற்கெனவே கட்சி ஆரம்பிச்ச நினைவு!/ஹெஹெஹெஹெ, கீதா, நீங்க பதிவைச் சரியாப் படிக்கலை! நான் எழுதி இருக்கேனே! அதுக்குத் தான் கில்லர்ஜி பதில்! :)

   Delete
  3. வாங்க கில்லர்ஜி, இப்போல்லாம் ஆண், பெண் இருபாலாரும் சமைக்கிறார்கள் எனினும் எனக்குத் தெரிந்த சில வீடுகளில் ஆண் தான் சமையல் பொறுப்பு! இன்னும் ஒரு பெண் கணவனுக்கும் சமைக்கத் தெரியாது என்பதால் தினம் தினம் மெஸ் சாப்பாடு! குழந்தை பிறந்து பள்ளிக்கும் போக ஆரம்பிச்சாச்சு! ஆனால் இன்னும் மெஸ் சாப்பாடே தொடர்கிறது. அவங்க வீட்டுக்குப் போனால் சாப்பிட்டு விட்டுப் போகணும், இல்லைனா சாப்பாடு எனக்கும் சேர்த்து வாங்குங்கனு சொல்லிட்டுப் போகணும்! :))))

   Delete

  4. எங்கவீட்டில் 80 சதவிகிதம் சமைப்பது நாந்தான் அதனால் இந்த பக்கம் வந்தால் என் சமையலை டேஸ்ட் பண்ணலாம்... ஆமாம் எப்ப வறேள் சதியமா நான் ராமசேரி இட்லி பண்ணி தரமாட்டேன்

   Delete
  5. அவர்கள் உண்மைகள், வேணாம், வேணாம், பயம்மா இருக்கு! நானே அரைச்சு இட்லி செய்து சாப்பிட்டுக்கறேனே! :)))))

   Delete

 2. ///இப்போல்லாம் பெண்கள் சமையல் என்றாலே ஏதோ மட்டமான வேலையாக நினைக்கின்றனர். நான் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைச் சொல்லவில்லை. இருபதில் இருந்து 30,35 வயது வரை உள்ள தற்கால நவநாகரீகப் பெண்களைச் சொல்கிறேன்//

  இப்படி 30 35 வயது பெண்கள் நினைக்க காரணமே நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இளம் பெண்களுக்கு தவறான எண்ணத்தை கற்றுக் கொடுத்ததினால்தான் என்னவோ... நான் இப்படி சமைச்சு கொட்டுற மாதிரி நீயும் சமைச்சு கொட்டாதே நல்லா படிச்சு கால் மேல் கால் பொட்டு கம்பிரமாக இருக்கணும் என்று சொல்லி சொல்லி வளர்த்துவிட்டு இப்போ அவர்கள் கிச்சன் பக்கம் போகலைன்னா அவங்களை குற்றம் சொல்வது தவறுதானே

  ReplyDelete
  Replies
  1. வாங்க அவர்கள் உண்மைகள்! சமையல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை! அதான் தங்கள் பெண் குழந்தைகளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கின்றனர்! என்ன செய்ய! நான் குற்றமெல்லாம் சொல்லலை. நடப்பு நிகழ்வைச் சொல்றேன்.

   Delete
 3. நானும் பாங்கு மானேஜராக இருந்துதான் விஆர் எஸ் வாங்கினேன். காரணம் வீட்டு வேலை ஆபீஸ் வேலை இரண்டையும் கவனிக்க முடியவில்லை .வேலையாட்களும் செட் ஆக வில்லை.இப்போதெல்லாம் யாருக்கும் வேலையை விட மனமில்லை .

  ReplyDelete
  Replies
  1. வாங்க அபயா அருணா, பாராட்டப்பட வேண்டிய விஷயம்! நான் ஆரம்பத்திலேயே முதல் குழந்தை பிறந்த பின்னர் ஆறு மாதத்துக்கெல்லாம் வேலையை விட்டு விட்டேன்.அதோடு கணவருக்கும் அடிக்கடி மாற்றல் ஆகும் உத்தியோகம்! :) இப்போதெல்லாம் பெண்களுக்குத் தங்கள் சுய சம்பாத்தியம் தேவையாக இருக்கிறது!

   Delete
 4. நம் பண்பாட்டையும், கலையழகினையும் பலர் பலவாறாகத் திரித்துக்கூறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதுவும் விதிவிலக்கல்ல.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!

   Delete
 5. ஆன்மிகத்துக்கும் பக்திக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரியலைன்னே நினைக்கிறேன். பொதுவா பக்தியைத் தான் ஆன்மிகம் என்றே சொல்கிறார்கள். // ரொம்ப கரெக்டுக்கா...ஏன் படிச்சவங்களுக்குமே, பெரியவங்களுக்குமே, அதுவும் ஸ்லோகம் சொல்லி அதைப் பற்றிப் பேசுபவர்களுக்குமே புரியலை...அப்புறம்னா இளைஞர்கள். என்ன சொல்ல...இதோ அடுத்த பகுதிக்குப் போய்ட்டு வாசித்து வரேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா! நானுமே என்னோட இன்னொரு முக்கிய வலைப்பக்கத்துக்கு ஆன்மிகப் பயணம்னு பெயர் வைச்சப்போ மறுத்துச் சொல்லலை! நண்பர் ஒருவர் தான் அதை அமைத்துக் கொடுத்தார். அப்போ ஆன்மிகப் பயணம்னு பெயர் வைச்சார். சரினு விட்டுட்டேன்! :)))) ஆன்மிகப் பயணம் என்பது எனக்குள்ளே நான் செய்ய வேண்டியது இல்லையோ! ஆனாலும் அந்தப் பெயரிலேயே இருக்கு! :))))))))

   Delete
 6. இப்போல்லாம் பெண்கள் சமையல் என்றாலே ஏதோ மட்டமான வேலையாக நினைக்கின்றனர். நான் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைச் சொல்லவில்லை. இருபதில் இருந்து 30,35 வயது வரை உள்ள தற்கால நவநாகரீகப் பெண்களைச் சொல்கிறேன். திருமணம் ஆகிச் செல்லும் இத்தகைய பெண்கள் புக்ககத்தில் சமைப்பதைப் பெரிய தண்டனையாக நினைக்கிறார்கள் அது தனிக்குடித்தனமாகவே இருந்தாலும்! //

  யெஸ் யெஸ்!! வளர்ப்பும் ஒரு காரணமாக இருக்குமோ?!!....அப்படிச் சமைக்கப் பிடிக்காததால, பெரிய வேலையில் இருக்கறதுனால இப்ப என்னாச்சு தெரியுமா தெருவுக்குத் தெரு உணவுக் கடைகள் பல வந்தாச்சு...உள்ளவற்றின் தரமும் போய்க்கொண்டிருக்குது..சமைப்பதைக் கடனே கடமை என்று நினைக்காமல் அதில் ஆர்வத்துடன் (நம்ம நெல்லை, ஸ்ரீராம், மதுரை, துரைசெல்வராஜு சகோ...போல.ஹா ஹா ஹா ஹா!!) சமைச்சா...பிரச்சனை இல்லையே..அந்த ஆர்வம் ஈடுபாடு இல்லாததால் தான் எதிலுமே ஆர்வம் இருந்தால்மட்டுமே செய்ய முடியும் இல்லையா.. வெங்கடேஷ் பட்டும் இதையேதான் சொல்லுவார். ஈடுபாட்டோடு செய்யணும்னு....நிறைய இளம் பெண்களைப் பார்க்கிறேன்...கை எல்லாம் அப்படி மழு மழு என்று புளி கரைத்தால், காய் கட் பண்ணினால் கை அழகு கெட்டுடும் என்று கூடச்சொல்லும் பெண்களைப் பார்க்கறேன்...என்னவோ போங்க...நம்ம சகோக்கள் எப்படி அழகா சமைச்சுப் படம் புடிச்சு போடுறாங்க...ஹும் அதுங்ககிட்ட இவங்களைக் காட்டிச் சொல்லணும்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கீதா, முக்கால்வாசிப் பெண்கள் வளர்ப்புக் காரணம் எனில் பல பெண்களும் இப்போதெல்லாம் outgoing type ஆக இருக்கின்றனர். அத்தகைய பெண்கள் வெளியில் போய்ப் பல காரியங்கள் நிறைவேற்றிக் கொண்டு வருவதில் உள்ள சாமர்த்தியம் ஒரு காஃபியோ, தேநீரோ தயாரிப்பதில் இருக்காது. முனையவும் மாட்டார்கள்! :(

   Delete
 7. ஹை அக்கா உங்க ப்ளாக்ல கமென்ட் சீக்கிரம் போயிருச்சே!!!!

  ஹா ப்ளாகர் கூட உங்ககிட்ட பயந்துருச்சு....ஸிஸ்டம் சரி செய்யணும்னு சொல்லிட்டீகளே!!!! ஹா ஹா ஹா ஹா...

  அதிரா ஏஞ்சல் சீக்கிரம் வாங்க!! ப்ளாகரே பயப்படும் நம் தானைத் தலைவி கீதாக்கா வாழ்கனு கோஷம் போடுவோம்...ஹா ஹா ஹா ஹா ஹா....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே கீதா! இத்தனை நேரமாக் கொஞ்சிக் கெஞ்சி அப்புறமாப் பத்துத் தரம் க்ளிக் செய்ததுக்கு அப்புறமாத் தான் அரை மனசா வெளியிடுகிறது! என்ன ஆச்சு இந்த ப்ளாகருக்குனு தெரியலை!

   ஆனால் அதுக்காக கோஷம் போடாமல் எல்லாம் இருக்க வேண்டாம்! நான் எப்போவும் தலைவி தான்! தாயுள்ளத்தோடு உங்களை எல்லாம் வரவேற்கிறேன். (கோஷம் போட! ஃப்ளெக்ஸ் பானர் வைக்க, கட் அவுட் வைக்க) எல்லாத்துக்கும் தான்! :))))

   Delete
 8. இம்மாதிரிப் பெண்ணுரிமை பேசும் பெண்கள் தங்களிடம் வீட்டு வேலை செய்யப் பெண்களைத் தானே அமர்த்திக் கொள்கிறார்கள்? //

  டிட்டோ செய்யறேன் அக்கா..

  அதுலயும் நீங்க கொடுத்துறக்கற உதாரணங்களில் அருணா சாய்ராம் நல்ல உதாரணம்..இந்திரா னூயி அவர்களும் சொல்லிக் கேட்டுருக்கேன்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கீதா, குடும்பம் ஒழுங்காக இருந்தால் தான் நம் சமூகக் கட்டமைப்பு உடையாமல் இருக்கும். அதுக்குப் பெண்கள் இந்த சமையல் என்னும் மாபெரும் யக்ஞத்தைக் கட்டாயம் தினம் தினம் செய்தாக வேண்டும். பேசாமக் கோர்ட் ஆர்டர் கொடுத்துடலாமானு கூடத் தோனுது! :)))))

   Delete
 9. நம்ம ஊர்ல பொதுப்பணித்துறையில் திறமையான ஆட்கள் இல்லை போலிருக்கு. ஒரு சாலையையும் ஒழுங்காக அமைக்கத் தெரியலை. பேசாம இதனை வேறு தேசத்துக்கு outsource பண்ணிவிடலாம். நம்ம பொறியாளர்களின் லட்சணம்தான் இப்படி இருக்குன்னு நினைக்கறேன். அரபு தேசங்களின் வழக்கம், ஒரு சாலை போட கான்டிராக்ட் கொடுத்தால் (1 கி.மி அல்லது 10 கி.மி போன்று), எத்தனை தடிமன், என்ன என்ன உபயோகப்படுத்தணும் என்று எல்லாமே ஒப்பந்தத்தில் இருக்கும். சாலையில் 3 இடங்களில் (அது எந்த இடம் வேண்டுமானாலும் இருக்கும்) கடைசியில் தோண்டுவார்கள். ஒப்பந்தப்படி இல்லை என்றால், அந்த இடங்களில் எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்றவாறுதான் பணம் செட்டில் பண்ணுவார்கள். (முழு ஒப்பந்தத்துக்கும்). இதுக்கு, சரி பார்க்கும் அதிகாரிகள் தேசப்பற்று மிக்கவர்களாக இருக்கணும் (அல்லது செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவர்களாக இருக்கணும்). கொள்ளைக்காரர்களாக (நம்ம நாட்டைப்போல்) இருக்கக்கூடாது.

  வேலைல என்ன, இது ஒசத்தி, இது தாழ்த்தி என்ற எண்ணம். (பணம் வீட்டின் பொதுவாக இருக்கும் பட்சத்தில்). சின்ன வயசுலயே இருபாலாருக்கும் சமையல் சொல்லித்தந்துடணும். அப்போதான் நல்லது.

  ஆண்டாள் - தேவதாசி என்பதற்கு நாம புரிந்துகொள்கிற அர்த்தம் வேறு. 'நாயகன் நாயகி' Bபாவம் வேறு. ஆண்டாள் பெண்ணாகவே இருந்ததால், கண்ணனை நாயகனாக வரித்தாள். 'உனக்கே நாம் ஆட் செய்வோம்' என்பது ஆண்டாளின் வாக்கு. நம்மாழ்வார், தன்னை 'பெண்ணாக நினைத்துக்கொண்டு' கண்ணனை நாயகனாக எண்ணி, 'சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும், செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே' என்று பாடினார்.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. பொதுப்பணித் துறை வெறும் பராமரிப்பு மட்டுமே என நினைக்கிறேன். ஏனெனில் இத்தகைய சாலைகள் போடுவதற்கு டென்டர் விட்டே குறைந்த கொடேஷனில் கேட்பவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தக் கான்ட்ராக்டர் நல்லவராக இருக்கணும். முன்னே அம்பத்தூரில் சில தெருக்களுக்கு "நாகார்ஜுனா" என்னும் கம்பெனி டென்டர் எடுத்துச் செய்தது! வெகு விரைவில் பல்லிளித்து விட்டது என நினைக்கிறேன். இப்போ அம்பத்தூர் சாலைகள் அனைத்துமே பிரமாதம்! நாங்க இருக்கும் வரை கஷ்டப்பட்டோம்! ஹிந்துவில் மெட்ரோ நியூஸ் பக்கத்தில் வாரா வாரம் எழுதுவோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை!

   Delete
  2. ஆண்டாளை தேவதாசி குலம் என்றே சொல்லி இருப்பதால் தான் வேதனையே! :( ஆனால் ராஜாஜி கூட திருப்பாவை, நாச்சியார் திருமொழி எல்லாம் ஆண்டாள் என்னும் பெண்ணால் எழுதப்பட்டிருக்கும் வாய்ப்பு இல்லை என்றும் பெரியாழ்வாரே ஆண்டாள் என்னும் பெயரில் எழுதி இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். நாயகன், நாயகி பாவம் வேறு தான். அப்பரும் ஒரு சில தேவாரப் பாடல்களை நாயகன், நாயகி பாவத்தில் எழுதி உள்ளார். பராங்குச நாயகி பற்றிக் கேட்கவே வேண்டாம்! :))))

   Delete
 10. கடைசி செய்தி பிரபல ஆசிரியர்னு பெயரைப் போடலாம் எல்லாம் வைமுதான்...அதைப் பற்றி தமிழ்பூ தளத்து முனைவர் கோவிந்தராஜு ஐயா அவர்கள் ரொம்ப அழகா ஒரு பதிவு போட்டுருக்கார்...அக்கா அவரை விடுங்க...அவர் இப்படித்தான் உளறி நிறைய அரைபடுவாரே...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா, முனைவர் கோவிந்த ராஜு ஐயாவின் பதிவோட சுட்டி கொடுங்க! படித்துப் பார்க்கலாம்.

   Delete
  2. என்ன வயித்தெரிச்சல்னா இவருக்குப்போய் ஞானபீடத்துக்கு சிபாரிசு! :(

   Delete
  3. வைமுதான். - இப்போதான் இது யாருன்னு தெரிஞ்சது. அவர் திமுகவின் அல்லக்கை அல்லவா (புரோக்கர் என்று சொல்வார்கள்)

   Delete
  4. அட? உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் நெ.த.!

   Delete
 11. இப்படி சில பலஎண்ணங்களை பகிர்வதில் அனுகூலங்கள் உண்டுஎதற்கு என்று பின்னூட்டமெழுதுவது என்று தெரியாமல் ஏதோ ஒருசெய்திக்கு கருத்து வரும் எனக்கும் அதுபோல் தான் பிரபல சமையல் நிபுணர்கள் என்று பார்த்தால் பெரும்பாலும் ஆண்களே எங்கள் வீடுகளில் எல்லாம் சமையல் பெண்களே தேவைப்படும்போதுஆண்கள் ஒத்தாசை செய்வார்கள் நான் மட்டும்விதிவிலக்கு சூபர்விஷன் செய்வதோடு சரி இப்போது இருக்கும் அரசுபற்றி யாரும் மூச்சு விடக்கூடாது கீதாம்மாவுக்குப் பிடிக்காது

  ReplyDelete
  Replies
  1. //இப்போது இருக்கும் அரசுபற்றி யாரும் மூச்சு விடக்கூடாது கீதாம்மாவுக்குப் பிடிக்காது.// யாரங்கே உடனே அரசைப் பற்றிக் குற்றம் சொல்வதை நிறுத்துங்கள்! அப்படினு நான் சொன்னதும் நிற்கவா போகுது? ம்ஹூம், இங்கே ஒரு கொசு செத்தாலும், மழை பெய்தாலும், பனி பெய்தாலும் மத்திய அரசும் மோதியும் தான் காரணம்! சிலருக்கு மலச்சிக்கல் என்றாலும் மோதி தான் காரணம் என்பார்கள்!

   Delete
  2. ஒரு காலண்டரில் முதல் அமைச்சரோடு பிரதமரின் படம் வந்திருக்கு என்பதற்காக எத்தனை எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்! ஏன், இருந்தால் என்ன? அவர் என்ன பாகிஸ்தானில் இருந்தோ, சீனாவில் இருந்தோ வந்தாரா என்ன? இந்தியர் தானே! அதுவும் நம்முடைய பிரதமர்! அவர் படம் காலண்டரில் வந்தால் என்ன தப்பு? ஒரே கூச்சல், குழப்பம், ஆங்காரம், ஆத்திரம்! இதே ஒரு காங்கிரஸ் பிரதமரின் படமாக இருந்தால் ஏத்துப்பாங்க தானே!

   Delete
 12. ///இருபதில் இருந்து 30,35 வயது வரை உள்ள தற்கால நவநாகரீகப் பெண்களைச் சொல்கிறேன். ///

  ஹா ஹா ஹா இதில சுவீட் 16 ஐயும் சேர்த்திருக்கோணும் கீசாக்கா:).. மீக்கு சமைப்பது பிடிக்கும்..

  என்னைப்பொறுத்து பெண் பிள்ளைகளில் தப்பில்லை அம்மாக்கள் மேல்தான் தப்பு... இப்போ ஆஅண் பெண் பேதமிருக்கப்படாது எல்லாமே சரிசமனாச்சு என ஊரெல்லாம் கொடி கட்டிப் புலம்புவதாலோ என்னமோ.. பெண் பிள்ளைகளையும் கிச்சினுக்குள் வர விடாமலேயே வளர்த்து விடுகிறார்கள்... அதனாலேயே பிள்ளைகள் பின்னாளில் கஸ்டப்படுகிறார்கள்...

  என்னதான் ஆர்தான் ஆயிரம் கதை பேசினாலும் நம் சமுதாய வழக்கம் பெண்கள்தானே கிச்சின் பொறுப்பை ஏற்கிறார்கள்.. ஆண்கள் ஒத்தாசையாக இருக்கிறார்கள் .. அப்போ பெண் பிள்ளைக்கு சமைக்கப் பழக்குவது பெற்றோரின் கடமை...

  என் அக்காவின் மகள் கனடாவில்... அங்கு பிறந்து வளர்ந்தவ... நன்கு சமைப்பா, நம் கறிகள் அல்ல, வெளிநாட்டு சமையல்கள் விதம் விதமா செய்வா.. அக்காவும் எதுக்கும் தடை போடுவதில்லை... இப்போதாஅன் 17 ஆகியிருக்கு.. ஹை ஸ்கூலில் இருக்கிறா.

  இப்போ ஒரு ஆண் பிள்ளை என்னதான் தலைகீழாக நின்றாலும், உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைப்போலதான், பெண்பிள்ளைகளும் சமைக்கத் தெரிஞ்சிருக்கோணும்...

  இன்னொன்று கீதாக்கா... தமிழ் நாட்டில் கலியாணத்தின் போது பிள்ளைக்கு அம்மாவே சொல்லி அனுப்புறாவாம்.. சமையல் தெரியாததுபோல நடிச்சுக் கொண்டிரு.. இல்லை எனில் வேலை வாங்கிடுவார்கள் என.. இதை எங்கு போய்ச் சொல்வது???..

  நானும் அப்படித்தான் நினைக்கிறேன்ன்.. 25 வயதாகியும் ஒரு பெண் சமைக்கத்தெரியாது என்றால்.. அது நடிக்கிறா என அர்த்தம்... பெரிசாக பலகாரம் அச்சப்பம், ராமசேரி எல்லாம்:) செய்யத் தெரியாதெனில் அது ஓகே, சும்மா சாதாரண சமையல் தெரியாமல் இருக்குமோ.. யூ ரியூப்பை ஓன் ல வச்சிட்டே மளமளவெனச் சமைக்கலாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

  எழுத நிறைய வருது.. வாணாம் என் பக்கம் கொஞ்சம் பிசி:))

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரடி, அதிரடியா வந்து பதில் சொல்லிட்டுப் போயிட்டீங்க! சில குடும்பங்களில் பெற்றோர் செய்யச் சொன்னாலும் தாத்தா, பாட்டி இருக்கும் கூட்டுக் குடும்பம் எனில் தாத்தா, பாட்டியோட செல்லம் அதிகமா இருக்கும். அவங்க செய்யக் கூடாதுனு தடுப்பதைக் கண்டிருக்கேன். சிலர் மட்டுமே இதை உணர்ந்து கொண்டு செய்வார்கள்/அல்லது பின்னால் வருந்திச் செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சமையல் என்றாலே ஏதோ வேலை, வெட்டி இல்லாத வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று என்றும் படித்து வேலை பார்த்தால் தாங்கள் சமைப்பது கௌரவக் குறைவு என்றும் நினைக்கிறார்கள். இவ்வளவு படிச்சுட்டுச் சமையலைச் செய்து கொண்டு உட்கார்ந்திருக்கேனே என்று கழிவிரக்கம் கொள்கிறார்கள். ஆனால் வகை வகையாகச் சாப்பிடும்போது மட்டும் அதெல்லாம் தேவையாத் தானே இருக்கு! மற்றப் பெண்கள் செய்து சாப்பிட்டால் பரவாயில்லை போல! :(

   Delete
 13. ///ஆன்மிகத்துக்கும் பக்திக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரியலைன்னே நினைக்கிறேன்.///

  இது உண்மைதான், பலர் இரண்டையும் போட்டுக் குழப்புகிறார்கள்... இதுக்கு அஞ்சு இப்போ பதில் ஜொள்ளட்டும் பார்ப்போம்ம்:)) ஹா ஹா ஹா:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அதிரடி, அஞ்சு ஆளையே காணோம்! ஓடிட்டாங்க போல! :)))))

   Delete
  2. ஆன்மிகம் என்பது எல்லாத்துக்கும் மேலே அதையும் தாண்டிய நிலை .அது ஒரு உணர்வு :) இதைத்தான் சித்தப்பா சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன் :)
   பக்தி என்பது நம்பிக்கை :) அது நம்பிக்கை என்பதுவாழ்க்கையில் பத்து படி ஏறும்போது விழுந்தாலும் காப்பாற்றும் கடவுளேன்னு வேண்டிக்கிட்டு நம்பிக்கையோட மீண்டும் எழும்பி மேலேறிப்போறோமே அந்த நம்பிக்கைதான் பக்தி ..பிறரின் நம்பிக்கைகளை கேலி கிண்டல் செய்யாததே பக்தி இப்போ புரிஞ்சுதா மியாவ் :) ..



   இப்போ புரிஞ்சுதா மியாவ் :)

   Delete
 14. கீதாக்கா உங்கள் புளொக்கின் பெயரை சற்று மாற்றி வைத்தால் என்ன?.. கீதாவின் எண்ணங்கள் இப்படி ஏதும்.. ஏனெனில் பல தடவை குழப்பமாக இருக்கு இழங்கோ அண்ணனுடையதும் உங்களுடையதும்..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, ஆரம்பத்தில் My Thoughts அப்படினு தான் பெயர் வைச்சிருந்தேன். 2005 ஆம் வருஷம் நவம்பரில் ஆரம்பிச்சது. அப்புறமா 2006 ஆம் வருஷம் சூடு பிடிச்சதும் "எண்ணங்கள்" என்று மாத்தினேன். திரு தமிழ் இளங்கோ அவர்கள் அப்புறமாத் தான் வந்திருக்கார்னு நினைக்கிறேன். நான் அவரோட பதிவுப் பக்கத்தோட பெயரைப் பார்த்ததுமே புரிஞ்சுக்கறேனே! உங்களுக்கு வயசாச்சு இல்லையா? அதான் குழப்பம்! ஹிஹிஹிஹி

   Delete
  2. //இழங்கோ//
   "மியாவ் நறநற நரகர கர்ர்ர்

   Delete
 15. சீன ராணுவம் சாலை போட முயன்ற செய்தி இன்னும் பழசு இல்லையோ? முன்னரே படித்தது போல இருக்கே.... அது வேறு இடமோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், தெரியலை! ஆனால் இப்போ இரண்டு நாட்கள் முன்னர் கூட சீனாவுடைய கடுமையான எதிர்ப்புப் பத்திப் படிச்சேன். புதுசுனு தான் நினைக்கிறேன். சீனா தன் செய்கையை நியாயப்படுத்தி இருக்கு வழக்கம்போல்!

   Delete
 16. பாக்கியராஜ் அரசியலுக்கு வர்றாரா? சரிதான்!

  ReplyDelete
  Replies
  1. ஏற்கெனவே வந்தாரே!

   Delete
 17. இப்போ செல் ஆப் சில வந்திருக்கின்றன. உதாரணமாக Zomato. அருகில் கடைகள் லிஸ்ட் ஆக, குறிப்பிட்ட சதவிகித தள்ளுபடியுடன் எத்தனை நிமிஷத்தில் வீட்டுக்கு வரும் என்று தகவலுடன் வருவதால் அதில் ஆர்டர் செய்து சாப்பிட்டு விடுகிறார்கள். என் தங்கை பெண் இந்த விஷயத்தில் விதம் விதமாக ரகம் ரகமாக ஆர்டர் செய்வாள்! அதே சமயம் அவள் பெரும்பாலும் வீட்டிலும் சமைத்து விடுகிறாள்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், நல்லவேளையா இவை எல்லாம் நான் தரவிறக்குவதில்லை. அதோடு இப்போதைய இளம்பெண்கள் வெளியில் வாங்கிச் சாப்பிடுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். ஆனால் உங்கள் தங்கை பெண் சமைக்கவும் சமைப்பதாகச் சொல்கிறீர்கள். பாராட்டுகள்!

   Delete
 18. வைரமுத்துவின் அந்தக் கட்டுரை நானும் படித்தேன். படிக்கும்போது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை. தமிழின் மாறுபட்ட சொற், பொருள் பிரயோகங்கள் பற்றிச் சொல்லியிருந்தார். நானும் அந்த சர்ச்சை பற்றிய கோபங்களைப் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் ஆண்டாளின் திருப்பாவையை விரசம்னு சொல்லி இருக்கார்! இவரும் கிட்டத்தட்ட அந்தக் கருத்திலேயே எழுதி விட்டுத் தனக்கு வந்த சந்தேகம் இந்தப் பேராசிரியர் சொன்னதின் மூலம் தெளிவு ஆனது என்னும்படி பேசி இருக்கார்/அல்லது எழுதி இருக்கார்! மேலோட்டமாகப் படிச்சால் ஒண்ணும் இல்லை தான்! ஆனால் அவர் முழுக்க முழுக்கத் தான் அனுபவிச்ச விதத்தையே குறிப்பிட்டதோடு, அரங்கனுக்கு முந்தி விரித்ததாகவும் சொல்லி இருக்கார்! :(

   Delete
 19. கமெண்ட் மாடரேஷன் இருக்கும் இடங்கள் பரவாயில்லை. சட்சட்டென அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நான் கொடுக்கிற பதில் எல்லாம் மாடரேஷனில் வராதே! ஒவ்வொண்ணுக்கும் இரண்டு நிமிஷம் எடுக்குது! :(

   Delete
 20. எண்ணங்களின் தொகுப்பு அருமை .
  சீனாவை ரோட் போட அனுமதிப்பது நாமளே நம்ம தலையில் மண்ணை கொட்டிக்கிறமாதிரி .இது கூடவா இந்த புரட்சிக்காரர்களுக்கு தெரியலை :( ஒரு இலங்கைத்தமிழர் சொன்னார் இப்போ இலங்கையில் நிறைய கட்டுமான பணிகள் அது இதுன்னு கொஞ்சம் கொஞ்சமா இலங்கையில் சைனா ஆதிக்கமாம் கிட்டத்தட்ட சைனாவிடம் இலங்கை என்கிறர்ப்போல் இருக்குன்றாங்க.
  சைனா ஒட்டகம் போல மழைக்கு தலையை கூடாரத்தில் நுழைச்சி அப்புறம் கூடாரம் என்னுதுன்னும் .

  ரஜினி இப்போதான் அறிக்கையே வெளியிட்டிருக்கார் எலெக்க்ஷனில் நின்னு வெல்லட்டும் அப்பறம் பார்க்கலாம் :)
  ஆவ் பாக்கியராஜ் அப்புறம் டி ஆர் ரெண்டுபேருமே ஏற்கனவே கட்சி ஆரம்பிச்சு அதை பிறகட்சிகளுடன் இணைத்தவர்கள் ..பாவம் எல்லாருக்கும் ஆசை :)


  //
  இப்போல்லாம் பெண்கள் சமையல் என்றாலே ஏதோ மட்டமான வேலையாக நினைக்கின்றனர். //
  நானா நினைக்கிறேன் அநேகமா அதிரடி இந்த பின்னூட்டத்தை வச்சி என்ன வம்புக்கிழுத்திருப்பாங்க :) ஹாஹாஹா
  நம்மூரில் அப்படி இகழ்வா நினைக்கறவங்களை தூக்கி வெளிநாட்டில் போடுங்க :) அதுவும் ஹோட்டல் கூட இல்லாத ஏரியா தான் சரி லண்டன் வேணாம் :)

  வேற வழியில்லாம அவங்களே சமைச்சி தெளிவாகுவாங்க .
  நம் நாட்டில்தான் கணினியில் புலமைனா அவங்க கிச்சன் போகக்கூடாதுன்னு ஒரு அபிப்ராயம் .இங்கே வெளிநாட்டில் மருத்துவரும் பெரிய மந்திரியும் கூட சமைப்பாங்க விதவிதமா அதெல்லாம் இங்கே ஸ்கூலிலேயே கற்றுக்கொடுக்கறாங்க எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கணும் இங்கே .நானும் ஊரில் இருந்தப்போ உருப்படலை அதுக்கப்புறம்தான் விதவிதமா கற்று தேர்ந்தேன் .
  வை மு ..பப்லிசிட்டி ஸ்டண்ட். ஆமாம் செய்தியில் பார்த்தேன் ..அவர் இப்படி அவசரக்குடுக்கைத்தனமா எதையாவது சொல்லி தான் இருப்பதை நிலைநாட்டிப்பார் .சும்மா எதையாச்சும்சொல்லி .

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க ஏஞ்சல்! சீனாவை உள்ளே அனுமதிப்பது! அதுவும் அருணாசலில் அனுமதிப்பது என்பது மிகப் பெரிய தவறு! இந்த விஷயத்தில் இந்த அரசு கவனமாகவும் எச்சரிக்கையுடனுமே செயல்பட்டு வருகிறது. ரஜினியைப் பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது! போகப் போகப் பார்க்கலாம்.

   ஹிஹிஹி ஏஞ்சலின், அதிரா உங்களை சமையலில் வம்புக்கு இழுக்கலை. மாறாக ஆன்மிகத்தில் இழுத்திருக்காங்க. பதில் சொல்லுங்க!

   நம் நாட்டுப் பெண்கள் அதிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் ரொம்பவே அலட்டல் ரகம்னு தான் எனக்குத் தோணும்! அதிலும் சிலருக்கு எப்போவும் லைம் லைட்டில் இருக்கணும். ஆனால் சமையல் செய்வது என்றால் அலர்ஜி! எங்க உறவிலேயே சில மருத்துவர்கள் இருக்காங்க, பெண் மருத்துவர்கள்! எல்லோரும் சமையல் தெரிஞ்சவங்க தான்!

   Delete
 21. அதெப்படிக்காக உங்க பிளாக் மட்டும் உடனே கமெண்ட் அக்செப்ட் பண்ணுது :)

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி,ஏஞ்சலின், என்னோட கமென்ட் எல்லாம் மெதுவாத் தான் போகுது. மாடரேஷன் இருந்தால் சீக்கிரம்போவதாக ஶ்ரீராம் சொல்கிறார். என்னோட வலைப்பக்கம் உங்க கமென்டெல்லாம் மாடரேஷனில் தானே வருது! அதான் சீக்கிரம் போகுது போல!

   Delete
 22. நிறைய விஷயங்கள் இங்கே பிடிபடுவதில்லை.... என்னத்த சொல்ல!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்! பிடிபடுவதில்லை என்பதோடு மனசும் ஏத்துக்கறதில்லையே! :))))

   Delete
 23. சில பல எண்ணங்களின் கலவை சுவை! இந்தக் காலகட்டத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் சமையல் சொல்லித் தர வேண்டிய கட்டாயம் உள்ளது!
  ஆண்டாளைப் பற்றிய ஒரு கவிஞரின் பேச்சும் அதற்கான விமர்சனமாக நாகரிகமற்ற பேச்சும் அருவருப்படையச் செய்கின்றன. இந்த ஆராய்ச்சிகளுக்கு பதிலாக வைரமுத்து உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, பார்க்கவே முடியலை! ஆண்கள் தான் பொதுவாக எப்போவுமே நல்லாச் சமைக்கிறாங்க என எனக்குத் தோணும். விதி விலக்கு சில ஆண்கள் இருக்கலாம்.

   வைரமுத்துவுக்கு விளம்பரம் தேவை! :))) வேறென்ன சொல்வது! :)))))

   Delete
 24. நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்கள் நான்கும் உண்மைதான்.

  //அந்த வெளிச்சாப்பாடும் ஏதேனும் ஓர் பெண்/அல்லது ஆண் சமைத்துத் தான் தர வேண்டி இருக்கு! அப்போ அந்தப் பெண்ணிற்கும் பெண்ணுரிமை உண்டு தானே! அவங்க மட்டும் சமைத்துத் தரலாமா? இம்மாதிரிப் பெண்ணுரிமை பேசும் பெண்கள் தங்களிடம் வீட்டு வேலை செய்யப் பெண்களைத் தானே அமர்த்திக் கொள்கிறார்கள்? அந்தப் பெண்களும் பெண்ணுரிமை பேசிக் கொண்டு இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டோம்னு ஒதுங்கிட்டால்? என்ன ஆகும்? சரி! கூட்டுக் குடும்பம்னா மாமியார் சமைக்கலாமா? அவங்க மட்டும் பெண் இல்லையா? நமக்கு உள்ள பெண்ணுரிமை நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் சிறந்த அவங்களுக்குப் பெண்ணுரிமை கிடையாதா? அதோடு இல்லாமல் நம்மைப் போல் படிக்கலை என்பதால் அவங்க மட்டும் சமைக்கலாமா?//

  நல்ல கேள்வி கேட்டீங்க. பெண்ணியவாதிகள் காதுல இதெல்லாம் விழுந்தா உங்கள பெண்ணினத்தின் எதிரி/துரோகி-னு சொல்லிடுவாங்க.

  //அந்தப் பாடலாசிரியர் சொன்னதால் ஆண்டாளை நாம் அப்படி எல்லாம் நினைக்கப் போவதில்லை!//
  சிலபேர் எப்பவும் வெளிச்சத்துல இருக்கணும்னு எதாவது கொளுத்தி போட்டுட்டு போய்டுவாங்க. அதுக்கப்புறம் அவங்க அதை மறந்துடுவாங்க. மத்தவங்கதான் தன் வேலையை விட்டுட்டு அதப்பத்தி பேசிகிட்டு இருப்பாங்க. அப்படிப்பட்ட ஆட்களை அடக்க ஒரே வழி அவங்க சொன்னத கண்டுக்காம இருக்கறதுதான்.

  ReplyDelete