எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 24, 2018

மாவிளக்கும், உளுந்து வடையும்! சரியான கூட்டு தானா? :)

அதிரடிக்கு மாவிளக்குப் பத்தி நெ.த. சொன்னதில் கொஞ்சம் சுணக்கம்! ஹெஹெஹெஹெ! அவங்க மாவு எப்படித் தயாரிப்பாங்கனு தெரியலை! நாங்க எப்போவுமே கடையிலே வாங்கும் மாவில் மாவிளக்குப் போடுவது இல்லை! முன்னெல்லாம் கருவிலியில் வீடு இருந்ததால் என்னிக்கு மாவிளக்குப் போடறோமோ அந்த வெள்ளியன்று காலைதான் அரிசியையே ஊற வைப்போம். இதிலே என் மாமியார் ஒரு படிக்குக் குறையக் கூடாதுனு சொல்லிடுவாங்க! அன்னிக்குக் காலம்பரலே இருந்து வீடு திமிலோகப்படும்! சீக்கிரமாக் குளிச்சுட்டு மாவு இடிக்க உட்காரணும். மகமாயி/மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடும்போது அதைச் சலிக்கக் கூடாதுனு சொல்வாங்க! ஆகவே கூடியவரை மாவு நன்றாக இடிபடும் வரை இடிக்கணும். வீட்டு வேலை செய்யறவங்கல்லாம் உதவ முடியாது! குளிச்சுட்டு ஈரப்புடைவையை உள் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இடிக்கணும்.

இடிக்கும்போதே அதிலேயே வெல்லத்தையும் போடுவாங்க! இரண்டையும் சேர்த்து இடிக்கணும். மாவு இளகி வரும் பதத்துக்கு வந்துட்டால் எடுத்துடுவோம். ஏலக்காயையும் சேர்த்தே போட்டு இடிப்பது வழக்கம்.  அதுக்கப்புறமா அதை இரண்டு உருண்டைகளாக உருட்டி நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரி போடணும். சுமார் நான்கு ஆண்டுகள் முன்னர் வரையிலும் கொட்டை எடுக்காத பஞ்சைத் தான் கொட்டை நீக்கித் திரித்துப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமாக் கோயிலிலேயே பூசாரி மாவிளக்குத் திரியே விக்கறாங்க அம்மா, அதையே வாங்கிப் போடுங்கனு சொன்னார். அதுக்கு அப்புறமா அதான் வாங்கி வைச்சிருக்கேன். அடியிலே குண்டாகவும், மேலே திரி மெல்லிதாகவும் இருக்கும்! என் மாமியாருக்கு இந்த விஷயம் தெரியாது! ஹிஹிஹி!

ஏனெனில் அவங்க இப்போல்லாம் மிக்சியில் அரைப்பதையே ஒத்துக் கொள்ள யோசிப்பாங்க! கருவிலியில் வீடு போனப்புறமாக் கூடக் கோயிலில் என் பெரிய மாமியார் போட்டிருந்த கல்லுரலில் தான் மாவு இடிப்போம். முதல்நாள் இரவே பேருந்தில் கும்பகோணம் கிளம்பிக் காலை நாலு மணி அளவுக்குக் கும்பகோணம் போவோம். அங்கிருந்து கிளம்பும் முதல் டவுன் பஸ்ஸில் ஊருக்குப் போவோம். அங்கே கோயில் குளத்திலேயே குளித்துவிட்டு ஈரப்புடைவையுடன் மாவு இடிப்போம்.  அதுக்குள்ளே பூசாரி வந்து கோயில் கதவைத் திறப்பார். அவரைப் பால் வாங்கி வைச்சிருக்கச் சொல்லி இருப்போம். கையில் இன்ஸ்டன்ட் காஃபி பவுடர், சர்க்கரை கொண்டு போவோம். காஃபி சாப்பிட்டுக் கொள்வோம். அதுவே எனக்கு மிகுந்த அவஸ்தையாக இருக்கும். கழிப்பறை வசதி என்பதே இல்லாத கிராமங்கள் அவை எல்லாம்! எனக்குத் தெரிந்து கருவிலி கோயிலில் முதல் முதல் கும்பாபிஷேஹம் ஆகும் வரைக்கும் அங்கே கழிவறையே கிடையாது! அப்போத் தான் முதல் முதல் கழிவறை கட்டினாங்க! ஆகவே கருவிலி வந்துவிட்டுப் போனால் எனக்குக் கொஞ்சம் வசதி தான்! ஆனால் அங்கே  எல்லாச் சமயங்களிலும் முதலில் போக முடிவதில்லை! காஃபி தவிர்த்துக் குழந்தைக்குப் பால், எங்களுக்குக் கஞ்சினும் அந்த விறகடுப்பில் போட்டிருக்கேன். ஒரு தரம் எங்க பொண்ணு வந்தப்போக் கையோடு இன்டக்‌ஷன் ஸ்டவையும் பால் காய்ச்சும் பாத்திரங்களும் எடுத்துப் போய்க் குழந்தைக்குப்  (அப்புவுக்கு) பால் காய்ச்சிக் கொடுத்திருக்கேன்.


மாரியம்மன் கோயில் சமையல் அறை

இப்போக் கருவிலிக் கோயில் கழிப்பறையும் வீணாகிப் போய்விட்டது! மக்கள் பயன்படுத்தத் தெரியாமல் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். இரண்டு வருஷங்களுக்கும் மேல் அதைப் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது! ஆனால் மாரியம்மன் கோயிலில் வருகிறவர்கள் தங்கவும், கழிவறை வசதிக்காகவும் இப்போப் புதுசாக் கட்டி இருக்காங்க! ஆனாலும் சுத்தம் போதாது! கழிவறைக்கோ, குளியலறைக்கோக் கதவு கிடையாது! பொதுவான வெளிக்கதவு மரம் நன்றாக இல்லாததால் சார்த்தவும் முடியலை! திறக்கவும் முடியலை! பின்னர் வந்த நாட்களில் முதல்நாளே கிளம்பிக் கும்பகோணத்தில் அறை எடுத்துத் தங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலை ஊருக்குப் போக ஆரம்பித்தோம். இது கிட்டத்தட்ட 2000 ஆம் வருஷம் முதல் பழக்கம் ஆனது! ஆகவே மாவிளக்குக்கு உரிய மாவை புதன் கிழமையே தயார் செய்யணும். மாவு ஈரம் போகக் காயணும்! எல்லாம் பக்குவமாக அன்று இதைத் தயார் செய்து முடிக்கும் வரை சாப்பிடாமல் எல்லாம் செய்துப்பேன். இதற்கெனத் தனிப் பை வைச்சுப்பேன். அந்தப் பையை வேறே யாரிடமும் கொடுக்கக் கூடாது! இப்படிச் சில வருடங்கள்!

அதுக்கப்புறமாப் பையர் கல்யாணம் ஆனதும் மருமகள் மாவிளக்குப் போட ஆரம்பித்தாள். பையர் ரயில் பயணத்தை விரும்பாததால் அவருக்காக வேண்டிக் காரிலேயே சென்னையிலிருந்து போக ஆரம்பித்தோம். அப்போ வியாழன் அன்று காலையிலேயே மாவைத் தயார் செய்துப்பேன். காரிலே போய்க் கும்பகோணத்தில் இரவு தங்கி மறுநாள் காலை குளித்துவிட்டு அங்கிருந்து சென்று கோயிலில் மாவிளக்குப் போடுவோம். ஓட்டலில் டிஃபன் வாங்கிச் சாப்பிட்டிருக்கும் பையரும், நம்ம ரங்க்ஸும் அவங்க அவங்க தங்க்ஸுக்கும் சேர்த்து டிஃபன் வாங்கிடுவாங்க. மாவிளக்குப் போட்டு முடிச்சதும் சாப்பிடமாட்டேன்னு சொல்லாமல் அதைச் சாப்பிட வேண்டி இருக்கும். என்றாலும் நான் எப்படியோ வேண்டாம்னு சொல்லிடுவேன்.  இப்படியாகத் தானே மாவிளக்குப் புராணம் கால, தேச, வர்த்தமானங்களை ஒட்டி மாறுதல் பெற்றது.

இப்போல்லாம் காரிலேயே போய்விடுவதால் (ஹை, பணக்காரங்களாயிட்டோமுல்ல!) வியாழன் அன்று பனிரண்டு மணிக்குள்ளாகக் கொழுக்கட்டை, மாவிளக்கு எல்லாமும் தயார் செய்துடுவேன். பின்னர் வெள்ளியன்று காலை மூன்றரைக்கு எழுந்தால் ஐந்தரைக்குக் கிளம்பும் வரை வேலை சரியாக இருக்கும்.  காலை ஆகாரத்துக்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் தயார் செய்து ஃப்ளாஸ்கில் காஃபியும் எடுத்துப்பேன். கோயிலில் மாவிளக்கு ஏற்றுவதற்கு முன்னால் மாவையும், வெல்லத்தையும் நன்றாகக் கலக்கவேண்டும். தண்ணீர் அதிகம் பயன்படுத்தாமல் உத்தரணியால் மட்டும் தெளிச்சுப்பேன். நெய் சேர்த்துக் கொண்டு கையாலேயே மாவைப் பிசைய வேண்டும். வெல்லம் இளகியதாக இருந்தால் சீக்கிரமாய் உருட்ட வரும். இம்முறை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. எனக்கு வேறே கையில் வலி இருந்ததால் அதிகம் வலுவுடன் உருட்டவும் முடியலை! ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு நெய்யை விட்டுப் பிசைந்தே உருட்டி விட்டேன்.

பின்னர் குழி செய்து நெய்யை ஊற்றிக் கொண்டு திரியை அதில் நனைத்துக் கொண்டு மாவிளக்கை ஏற்றினோமானால் முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைப்பதில்லை. திரியின் அடிப்பாகத்துக்கு வந்துவிட்டால் மலை ஏறி விட்டது என்போம். அப்போ ஒரு உத்தரணியால் எடுத்து அருகே உள்ள விளக்கு எதிலானும் மாற்றிவிடுவோம். இரு திரிகளையும் அப்படியே மாற்றுவோம். எங்க அம்மா வீட்டில் மாவிளக்கு மாவை உருட்டுவதில்லை. பொடியாகவே வைப்பார்கள். தேங்காயைத் துருவிச் சேர்த்து விடுவார்கள். அதைத் தவிர்த்தும் தேங்காய் உடைத்து வைப்பார்கள். நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிக் கொண்டு அதில் துணியால் முடிச்சுக் கட்டித் திரி போல் செய்து போடுவார்கள். அந்த முடிச்சின் அருகே திரி எரிந்து முடிய ஆரம்பித்தால் மலை ஏறிவிட்டது என்று சொல்லி எடுத்து விடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம். ஏற்றிவிட்டுத் திரி முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைத்தால் தான் அதிராவின் மாவிளக்கில் பார்த்த மாதிரி ஆகி விடுகிறதோ என நினைக்கிறேன். அதிரா என்ன செய்தார்னு தெரியலை! :))))

மாவிளக்கு ஆச்சா! இப்போ வடை! எ.பி. வாட்ஸப்பில் 500 கிராம் உளுந்தில் வடை செய்யறதைப் பத்திப் பேச்சு வந்தது. அப்போ நான் 500 கிராம் உளுந்தில் வடை செய்தால் 50 பேர் சாப்பிடலாம்னு சொல்ல நெ.த. 500 கிராம் மாவில் 22 வடை வரும்னு ஓட்டல்காரங்க சொன்னதாகச் சொல்லி இருந்தார். 500 கிராம் மாவு என்பது உளுந்தை மெஷினில் கொடுத்து மாவாக(பவுடர்) அரைத்தது எனில் வேண்டுமானால் நெ.த. சொன்னாப் போல் இருக்கலாம். ஆனால் 500 கிராம் உளுந்தை ஊற வைச்சு அரைச்சால் வடை நிறைய வரும். முதல்லே வீட்டு உபயோகத்துக்கு இருக்கும் கிரைண்டர்கள் எனில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டே அரைக்கணும்! அதுவே ஓட்டலுக்கென உள்ள பெரிய கிரைண்டர்கள் எனில் எல்லாத்தையும் போடலாம். ஆனால் சில, பல சமயங்கள் உளுந்து அரைபட்டு மேலே மேலே வரும்போது சுற்றி வாரியடிக்கும்.  எங்க வீட்டிலே ஒரு விசேஷத்திலே அம்மாதிரி ஆகிவிட்டது! சுவரெல்லாம் உளுந்து மாவு! :)))) இன்னைக்கு ரதசப்தமிக்கு நிவேதனம் செய்ய உ.வடைக்கு ஒரே ஒரு கிண்ணம் தான் போட்டேன். மிக்சியில் தான் அரைத்தேன். பனிரண்டு வடைகளுக்கு  மேல் வருகிறது! உளுந்தின் தரம் முக்கியம்! உதயம் உளுந்து எனில் நன்றாகவே வருகிறது. ஒரு சில கடைகளில் உளுந்து நன்றாக இருக்கிறது. ஆனால் ரேஷனில் வாங்கும் உளுந்து எனில் தரம் நிரந்தரம் அல்ல! :))))

53 comments:

 1. சாப்பாட்டுப் பதிவாக ஆக்கிட்டீங்களா.

  உங்கள் அம்மா செய்யும் முறையில்தான் என் ஹஸ்பண்டும் செய்கிறாள் (எங்க அம்மாவும் அப்படித்தான் செய்தார்). வெல்லத்தையும் (ஊறவச்சு அரைச்ச அரிசி)மாவையும் ரொம்ப விளக்கு பண்ணுவதுபோல் கலக்குவதில்லை. மாவாகத்தான் இருக்கும். அதில் குழிபோல் செய்து விளக்கு ஏற்றுவார். கடைசில (மலை ஏறின பிறகு), திரியைத் தவிர்த்து மற்றவற்றைச் சேர்ந்து பிசைய மாவிளக்கு மா ரெடியாயிடும் (நாங்க சாப்பிட).

  கால, தேச, வர்த்தமானங்களை ஒட்டி - உண்மை.. பசங்களாக நாங்க இருந்தபோது எங்கள் ஊரில், வீட்டில் என்ன வழக்கம், இப்போ எப்படி மாறியிருக்கிறது என்று பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

  'நாங்க ஒரு திரிதான் வைப்போம். நீங்க ரெண்டு விளக்கு ஏத்திருக்கீங்க. அதிரா, ஒரே தட்டில், 4-5 விளக்கு ஏற்றியிருந்தாங்க.

  இங்குள்ள ஹோட்டல்காரன், 1 கிலோ உளுந்துமாவில் (அதாவது நான் புரிந்துகொள்வது, உ.பருப்பை ஊறவைத்து அரைத்து, வடை மாவாக்கி, அவங்க, 1கிலோ பாக்கெட்டா 7-8 ரெடி பண்ணிடுவாங்க, அல்லது இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்) 23 வடை வரும். அவங்க COMBO TIFFINல் ஒரு வடையும் உண்டு. எப்போ மீதி வடை 3 ஆகிறதோ, அப்போ தேவையைப் பொறுத்து இன்னொரு கிலோ மாவை எடுத்து வடையாக்குவாங்க. நான் சொல்லும் கிலோ, வடை மாவு எடை.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. ஹோட்டலில் எல்லாம் உளுந்தை ஊற வைச்சு அப்போ அப்போ அரைச்சுப் பார்த்திருக்கேன். சென்னையிலும் பார்த்திருக்கேன். இங்கே திருச்சியிலும் பார்த்திருக்கேன். ஒரு கிலோ உளுந்தை ஊற வைச்சு அரைக்கும் அளவுக்குப் பெரிய கிரைண்டர் இருந்தால் தான் முடியும். மாவு எடை ஒரு கிலோ என்றாலும் ஊற வைச்சு அரைச்ச மாவு குளிர்சாதனப் பெட்டியில் இருந்தாலே புளிப்பு வந்துடும்! ஆகவே எப்படிச் சமாளிக்கிறாங்கனு புரியலை! எனக்குத் தெரிந்த பல ஹோட்டல்களில் உளுந்து மாவு (பவுடர்) தயாரித்து வைத்துக் கொண்டு வடை செய்கிறார்கள். எம்.டி.ஆரில் கூட அப்படித் தான் என என் நண்பர் ஒருத்தர் சொன்னார். இன்னும் சொல்லப் போனால் வட மாநிலங்களில் எல்லாம் இந்த உளுந்து மாவுப் பவுடரில் தான் உ.வடை! எங்களுக்கு நேரேயே பிரித்துக் கலந்து கொண்டு வடை தட்டிக் கொடுத்துப் பார்த்திருக்கேன்.

   Delete
  2. எங்க அம்மா வீட்டில் மீனாக்ஷி மாவிளக்கு என்றால் மாவு கொஞ்சம் புட்டுப் போல் பிடித்தால் பிடிக்கவும் உதிர்த்தால் உதிராகவும் இருக்கும். அதுவே மாரியம்மன் மாவிளக்கு எனில் நான் செய்திருக்காப்போல் தான் செய்வாங்க! வண்டியூர் மாரியம்மனுக்கு நேரே கோயிலுக்கு நடந்தே போய் அங்கேயே உரலில் மாவு இடித்து மாவிளக்குப் போட்டுவிட்டு வந்திருக்கோம். அது ஒரு கனாக்காலம்.

   Delete
  3. ஓஹோ... உளுந்து மாவு தயாரித்து உபயோகப்படுத்துவார்களா? இந்த ஹோட்டலில் என்ன செய்கிறார்கள் என்று கேட்டு பிறகு எழுதறேன் (எங்கிட்ட பொய் சொல்லமாட்டாங்க. நாந்தான் 9 வருஷத்துக்கு முன்னால் அவங்க இங்க ஹோட்டல் ஆரம்பித்த போது, ஸ்வீட் போடுங்கன்னு அனத்தி 1 வருஷம் கழித்து அதுக்கு ஒரு கண்ணாடிப் பெட்டி-இங்க அதுக்கெல்லாம் Rule இருக்கு. 2 லட்ச ரூபாய் செலவழித்து வாங்கினாங்கன்னு சொன்னார், அப்புறம் ஸ்வீட் போட ஆரம்பித்தார்கள்)

   Delete
  4. கேட்டுச் சொல்லுங்க. ஊற வைச்சு அரைச்சால் மாவு நிறையவே வரும், நான் கிட்டத்தட்ட 50 பேர் வரை சமைத்திருக்கேன். அந்த அனுபவத்தில் சொன்னேன். :))) மாவிளக்கு எங்க மாமியார் வீட்டில் இரண்டாகத் தான் போடுவாங்க! :)

   Delete
  5. ஆமாம் கமரிஷியல் என்றால் உளுந்து மாவு பௌடர் பண்ணி வைத்துக் கொண்டு. ரெடிமேடாகவே விற்கிறார்களே அதாவது மிளகு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு வடைக்கு என்று மாவு...

   நான் முதலில் என் பையன் அங்கு போனப்ப, உளுந்தை நன்றாகத் துடைத்துவிட்டு மெஷினில் மாவு திரித்து புழுங்கலரிசியும் திரித்து கலந்து கொடுத்துவிட்டேன். தோசை செய்து கொள்ள...ஓரளவு நன்றாகவே வந்ததாகச் சொன்னான். வெங்காயம் நறுக்கிப் போட்டும் வெங்காய தோசையாகவும் செய்ததாகச் சொன்னான். அதே போன்று உளுந்து மாவு, ரவை கொஞ்சம் அரிசி மாவு கலந்து மிளகு ஜீரகம் கறிவேப்பிலை பெருங்காயம் எல்லாம் போட்டு உப்பும் கலந்து கொடுத்துவிட்டேன் ரவா தோசை போல் செய்து கொள்ள...சாதரணமாகச் செய்யும் ராவ தோசை மிக்ஸும் தனியாக...

   நானுமே ஒரே ஒரு முறை உளுந்து திரித்த மாவை வைத்து வடை செய்தேன்...ஓரளவு நன்றாகவே வந்தது என்னதான் அரைத்துச் செய்வது போல் இல்லை என்றாலும்...

   கீதா

   Delete
  6. நான் இந்தத் தயாரிப்புக்களில் ரவா இட்லி மிக்ஸ் எம்டிஆரோடது மட்டும் எப்போவானும் பயன்படுத்துவேன். இடியாப்ப மாவு வாங்கி ஒரு தரம் நல்லா வந்தது. அடுத்த முறை சொதப்பல்! அதனால் எப்போவும் போல புழுங்கல் அரிசி+கொஞ்சம் பச்சை அரிசி ஊற வைச்சு அரைச்சுத் தான் இடியாப்பம் அல்லது சேவை! http://sivamgss.blogspot.in/2016/01/blog-post_17.html இங்கே பாருங்க ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆனதை! அதனால் வடை மாவு விஷயத்தில் ரிஸ்க் எடுப்பதே இல்லை! அரைச்சுச் செய்யறதுக்கே ரங்க்ஸ் ஆயிரம் நொட்டுச் சொல்லுவார்! ஹெஹெஹெஹெ!

   Delete
  7. நான் இந்த ரெடிமிக்ஸ்லாம் உபயோகப்படுத்தியிருக்கேன். எல்லாமே மோசம் என்று சொல்லமுடியாதபடி நல்லாத்தான் வரும். ஆனால் அவற்றில் உபயோகப்படுத்தியுள்ளது நம் ஹெல்த்துக்கு நல்லதல்ல. ரொம்ப வருஷமா, நான் அரிசி உப்புமா மிக்ஸ் வாங்கிவருவேன். அப்புறம் நாமே செய்வது மிகவும் சுலபம் என்பதைக் கண்டுகொண்டேன்.

   வடையைப் பொறுத்தமட்டில், இதுவரை எனக்கு நன்றாக வந்ததில்லை. எப்படியும் 3-4 வடைக்குமேல் என்னால் ஒரு நாளில் சாப்பிடமுடியாது. அதனால் எப்போ ஆசை வருதோ அப்போ ஹோட்டல்ல சாப்பிட்டா தீர்ந்தது கதை.

   Delete
  8. ஒரு முறை டைஃபாயிட் வந்தப்போவும் இன்னொரு முறை மூலம் ஆபரேஷன் நடந்தப்போவும் கல்லுரலில் அரைக்கச் சிரமம் என்பதால் அம்மா அரிசி+உளுந்து மாவுக் கலவை மாவு மெஷினில் அரைத்துக் கொடுத்தார். தோசைக்குப் பரவாயில்லை. இட்லிக்கு நன்றாக வரவில்லை. அப்புறமாப் புழுங்கலரிசியை ரவை போல் மெலிதாக உடைத்துவிட்டு உளுந்து மட்டும் அரைத்துப் போட்டுக் கலந்து இட்லி வார்த்தாலும் உதிர்ந்து விடும். கலவை சரியில்லையோ என்னமோ! அப்போ மிஞ்சி மிஞ்சிப் போனால் 22 வயசுக்குள் தானே! அதனாலோ என்னமோ! அப்புறமா இந்த திடீர்த் தயாரிப்பு ரகங்களையே விட்டாச்சு!

   Delete
 2. கடைசிவரை மாவிளக்கு கண்ணுல தென்படவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, கில்லர்ஜி! அதான் போன பதிவில் கொடுத்திருந்தேனே! :))))

   Delete
  2. ஹா ஹா ஹா மீயும் கில்லர்ஜி கட்சி:)... இவ்ளோ ரைப்போ ரைப்பெண்டு ரைப் பண்ணிட்டு மாவிளக்கைக் காட்டவே இல்ல கர்ர்:)).

   Delete
  3. ஹெஹெஹெஹெ, அதிராமியாவ், தெடுங்க!

   Delete
 3. /என் மாமியாருக்கு இந்த விஷயம் தெரியாது! ஹிஹிஹி!//
  ஹாஹா எவ்ளோ சந்தோஷம் :)

  எனக்கே அங்கே டிராவல் செஞ்சி கூட இருந்து பார்த்தமாதிரி உணர்வு .
  உளுந்து வடை எப்போ எந்த காம்பினேஷனோட சாப்பிட்டாலும் ருசிதான் :) நான் குட்டி கப் ஊறவைச்சி 10 சுட்டு 6 சட்னியோட மீதி நாலை கொதிக்கிற சாம்பாரில் போட்டு சாம்பார்வடையா செய்வேன் இதுவும் வருஷம் ஒருமுறைதான் நடப்பது :)

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல், சாம்பார் வடை எனக்கு ரொம்பப் பிடிச்சது. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு முறையும் பெரியகுளத்தில் ஒரு ஓட்டலிலும் சாப்பிட்டேன். அந்த ருசி வராது!

   Delete
 4. எங்கள் வீட்டில் மாவிளக்கு மாவு பழக்கம் எல்லாம் இல்லை. எனவே இதில் நான் வேறு சப்ஜெக்ட் எடுத்துக் கொள்கிறேன். கல்லுரலில் மாவு அரைப்பது மற்றும் பொடி இடிப்பது. இதுபோன்ற வேலைகளில் பெரும்பாலும் என் அம்மாவுக்கு நான்தான் துணை இருப்பேன். மாவு தொடர்ந்து ஆட்டுவது (குழவி சுற்றுவது) ஒரு கலை என்றால், விரல் நசுங்காமல் மாவு தள்ளி விடுவது இன்னொரு கலை! பூண்டுப்பொடி, வாழைக்காய்ப்பொடி போன்றவை இடிக்கும்போது நான்தான் உதவுவேன் அம்மாவுக்கு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், அம்பத்தூரில் இருந்தவரைக்கும் அம்மியில் அரைத்தேன். இங்கே அம்மி வைச்சுக்க முடியாது!

   Delete
  2. ஸ்ரீராம், படிக்கற காலத்தில், படிப்புக்கு டிமிக்கி கொடுக்கவும், அப்பாவின் 'என்னடா படிக்கலையா' என்ற கேள்வியிலிருந்து தப்பவும், அம்மாவுக்கு அடுக்களையில் உதவி செய்திருப்பாரோ?

   Delete
  3. ஹாஹாஹா, சில பிள்ளைகள் அம்மாவுக்கு உதவுவாங்க! என் தம்பியும் இந்த ரகம் தான்! இப்போவும் மனைவிக்குக் காய் நறுக்கித் தருவது மட்டுமின்றி விசேஷ நாட்களிலும் கொழுக்கட்டை செய்வது, வடை தட்டுவது என உதவுவார்!

   Delete
 5. வடை மெஷின் மேல் எல்லாம் ஏன் ஆசை வருகிறது என்றால் எவ்வளவு முயற்சித்து வடை போட்டாலும் அயர்ன் செய்தது போலவே வடை வரும்! நல்ல வடை கிடைக்காதா... நாவினிலே விழாதா என்கிற ஆவல்!

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம், கையால் தட்டுவது போல் வருமா? ஒரு முறை மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் மாலை 3 3மணிக்கு மேல் கிடைக்கும் கீரை வடை சாப்பிட்டுப் பாருங்க. பாரதிய வித்யா பவன் எதிரே இருக்கு!

   Delete
  2. ஸ்ரீராம்.. முன்பு நானும் இப்பூடித்தான் அவதிப்பட்டேன், இப்போ கண்டு பிடிச்சிட்டேன்.. வடை அரைக்கும்போது சிலர் தட்டுவது கஸ்டமென தண்ணி சேர்க்காமல் அரைப்பார்கள்.. அப்படி எனில் வடை பொயிங்காது.. நீங்க ஜொன்னதுபோல வரும்:).. தண்ணி சேர்த்துத்தான் அரைக்கோணும்... அடுத்து சுடுவதுக்கு முன் அரை மணித்தியாலமாவது ஃபிரிஜ்ஜில் வைத்துப்போட்டு சுட்டால் சூப்பரோ சூப்பர்...

   ஹோட்டல்களில் எல்லாம் மா பழுதடையாமல் இருக்க ஃபிரீசரில்கூட போட்டு வைக்கிறார்கள்.. அதனால்தான் அது பொயிங்குது:))

   Delete
  3. ஏற்கனவே சொல்லியிருந்தேனே.. நானும் என் மனைவியும் சென்றமுறை (அக்டோபரில்) அங்கு போயிருந்தபோது, கீரை வடை அவளுக்கு வாங்கினேன். தொஞ்சுபோயிருந்தது. எனக்கு அங்கு சில பலமுறை சாப்பிட்டபோதும் அவ்வளவு பிடிக்கலை.

   இதுக்கு முன்னால எழுதியிருந்தீங்களே.. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்னு. அங்க நான் 87-90கள்ல பொங்கல், வடைலாம் சாப்பிட்டிருக்கேன். மாம்பளம் ஸ்டேஷன்லயும் நன்றாக இருக்கும். ஆனா இத்தனை வருஷ வெளி'நாட்டு வாழ்க்கைக்குப் பிறகு அங்கெல்லாம் சாப்பிடவே பிடிப்பதில்லை இப்போது.

   Delete
  4. ம்ம்ம்ம்ம், கற்பகாம்பாள் மெஸ் பிடிக்கலையா? அப்போ ராயர் மெஸ்? அங்கே போயிருக்கீங்களா? நாங்களும் இப்போ ரயில் நிலையத்தில் விற்பதை எல்லாம் இப்போ வாங்கிச் சாப்பிடுவதில்லைதான்! :)))))

   //தொஞ்சுபோயிருந்தது. எனக்கு அங்கு சில பலமுறை சாப்பிட்டபோதும் அவ்வளவு பிடிக்கலை.// ஹிஹிஹி, உங்களுக்குனு அன்னிக்குச் சிறப்புத் தயாரிப்போ? :)))))) பொதுவா நாங்க அந்தப் பக்கம் போனால் கற்பகாம்பாள் மெஸ் போகாமல் வந்ததில்லை. எல்லா நேரங்களிலும் நல்லாவே இருந்திருக்கு!

   Delete
  5. நான், பத்திரிகை, இணையச் செய்திகளைப் பார்த்துவிட்டு, ஹோட்டல்களைக் குறித்துக்கொண்டுதான் ஒவ்வொரு முறையும் சென்னை (அல்லது எந்த ஊருக்கும்) செல்வேன். (ஒவ்வொரு டிரிப்புக்கும் சிறிய நோட்டு ஒன்றை, 8 தாள்களைச் சேர்த்து, செய்வேன். அதில், என்ன கொண்டு செல்லவேண்டும், அங்கிருந்து என்ன என்ன வாங்கிவரவேண்டும், ஒவ்வொரு நாளும் என்ன திட்டம், முக்கியமான போன் நம்பர்கள், எந்த எந்த உணவகத்துக்குச் செல்லவேண்டும், இந்தக் கோவிலுக்குச் செல்லும் அன்று இரவு உணவு எங்கு சாப்பிடணும் என்றெல்லாம் குறித்துக்கொண்டு செல்வேன். உதாரணமா, ஸ்ரீரங்கம் டிரிப் வரேன்னு வச்சுக்குங்க, அங்கு தங்கும்போது, திருச்சி ரமா, மதுரா கஃபே எப்போ போகணும், டெலெபோன் நம்பர் எல்லாம் குறித்துக்கொண்டு வருவேன்-ஸ்ரீரங்கத்தில் முரளி காபி கடை?.. )

   ராயர் மெஸ், தேடிக் கண்டுபிடித்து முதல் முறை சென்றேன் (அந்தோ..அன்றைக்கு அவர்களது சொந்த அவசரம் காரணமாக விடுமுறை). அப்புறம் 2-3 தடவை மனைவியோட, அப்புறம் குழந்தைகளோட சென்றுவிட்டேன். ஆனால் அவ்வளவு பிடிக்கலை... எங்க யாருக்குமே. அதுபோல்தான், ரங்காச்சாரி அருகில் இருக்கும் பட்டப்பா தளிகை..சுத்தமா பிடிக்கலை. திருவானக்கா பார்த்தசாரதி... நெய் தோசை.. பரவாயில்லை ரகம்தான். கற்பகாம்பாள் 3-4 முறை என் மனைவியை அழைத்துக்கொண்டு போயிருக்கேன் (அங்க போகும்போதெல்லாம் மயிலை டேங்க் முழுவதும் சுற்றுவேன்). அவ்வளவு பிடிக்கலை. சென்னையில், கல்யாணச் சாப்பாடு இலை போட்டு, எந்த ஹோட்டலில் போடறான்னு நானும் தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் அமையலை.

   Delete
  6. அவசர வேலை, பின்னர் வரேன். :)

   Delete
  7. நெ.த. திருச்சியில் நீங்க சொல்ற ஓட்டலில் எல்லாம் சாப்பிட்டுப் பார்த்தாச்சு! சகிக்கலை! அதுவும் திருவானக்கா பார்த்தசாரதி கோயில் நெய் தோசை! ம்ஹூம்! சொத, சொத, சொதா! ஆதிகுடி காஃபி க்ளப்! ஊசல் வாசனைச் சட்னி, சாம்பார்! முரளி காஃபி கடை தெற்கு கோபுரத்தின் அருகேயே இருக்கு! யானை ஆண்டாளுக்குத் தான் காலை, மாலை இருவேளையும் முதல் பக்கெட் காஃபி!

   Delete
  8. ராயர் மெஸ்ஸுக்குக் கடைசியா எண்பதுகளில் போனது! அப்புறம் போகலை! ஆனாலும் இப்போவும் சிலர் சிலாகித்துச் சொல்கிறார்கள். ஆனால் பட்டப்பா தளிகை கேள்வி தான்! போனதில்லை. எதிரே தான் வல்லிம்மா வீடு! :)))))கற்பகாம்பாள் மெஸ் போன வருஷம் கூடப் போனேன். நன்றாகவே இருந்தது. அதுவும் அந்த வெந்தய தோசை! ஆஹா! ரகம்! மயிலைத் திருக்குளத்தைச் சுற்றின ஏதோ ஓர் வீதியில் சங்கீதா ஓட்டல் இருக்கு! கொத்துமல்லி வடை அங்கே நன்றாக இருந்தது. இப்போ ஓட்டல் இருக்கா, கொத்துமல்லி வடை உண்டானு எல்லாம் தெரியாது! சென்னையில் இருந்தப்போ மாசம் ஒரு முறை மயிலைக் கோயில், திருவல்லிக்கேணி கோயில், டவுனில் காளிகாம்பாள் கோயில்னு போவோம். அப்போ அங்கே எங்கே நல்லா இருக்கும்னு விசாரித்துக் கொண்டு சாப்பிடுவோம். எலக்ட்ரிக் ரயிலில் போய்விட்டு அதிலேயே திரும்புவோம் என்பதால் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் ஆகும்! ஆகவே சாப்பிட்டுவிட்டே வருவோம். சென்ட்ரல் அருகே உள்ள பிக்னிக் ஓட்டல் எழுபதுகளில் ரூஃப் கார்டனில் ரெஸ்டாரன்ட் இருந்தப்போ அங்கே சாப்பிட்டிருக்கோம். அதே போல் தான் சென்ட்ரல் அருகே சிடி கஃபே, சென்ட்ரல் லாட்ஜ் போன்றவையும்! சிடி கஃபே இப்போ இல்லைனு நினைக்கிறேன். சென்ட்ரல் லாட்ஜ் நிர்வாகம் மாறி விட்டது!

   Delete
 6. கீசாக்கா நேற்று ஜொன்னனே நாங்க மாவிளக்கு போடுவது சாமி/தினை யை ஊறப்போட்டு உடனே அரைச்சு அரிக்காமல் சக்கரை தேன் சேர்ட்த்ஹுக் குழைச்சு நெய்யில் எரிப்போம்.

  என்னுடையது கொஞ்சம் தண்ணி ஆகி விட்டமையால் நிறையத் திரி போட்டு எரிச்சேன்:)..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரடி, திரி நீளமெல்லாம் அவங்க அவங்க வீட்டு வழக்கம். :)

   Delete
 7. இவ்ளோ மூச்சுப் பிடிச்சு கோயில் சுயஸ்ரீதம் எழுதிட்டீங்க படிக்க நல்லா இருக்கு... நேரில் போகோணும் என ஆசை வருது., எனக்கும் கிராமக் கோயில்கள் இப்படிப் போக ஆசை.. அதிலும் அமைதியான சூழலில், ஆலமரத்தடியில் இப்படி இருக்கும் கோயில்கள் எனில் அங்கேயே இருக்கத் தோணும்.

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, இந்தக் கோயிலிலும் அமைதியான சூழலே! கிராமத்துக் கோயிலின் அமைப்பு இன்னமும் மாறவில்லை!

   Delete
 8. வடைக் கதை, 500 கிராமில் 30 க்குள்தான் சுடலாம் என நினைக்கிறேன்.. நீங்க சரியான நப்பிபோல கீசாக்கா கர்ர்:) அதுதான் குட்டிக் குட்டியாத் தட்டி நிறைய வடை சுடுறீங்க.. நான் ஓரளவு பெரிசாவே சுடுவேன்.. நேரமும் மிச்சம் எல்லோ:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், 500 கிராம் மாவு (பவுடராக்கினது) எனில் என்ற கணக்கில் தான் நான் சொல்லி இருக்கேன். மற்றபடி என்னோட வடை எல்லாம் உள்ளங்கை அளவுக்கு இருக்குமாக்கும். குட்டிக் குட்டியாத் தட்டறதெல்லாம் நீங்க தான்! நானில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  2. ஹா ஹா ஹா ஓ வடை மா என இருக்கோ?:) என்ன இது புயுக் கதை குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மா எனில் நிறைய வர வாய்பிருக்கு:)..

   Delete
  3. இதை எங்கிட்ட நிரூபிக்கச் சொன்னா, கீசா மேடம், ஒருவேளை நான் அவங்க வீட்டுக்குப் போனால், கீழ கடைல இருந்து வாங்கிட்டு வந்துடுவாங்க. ஏதேனும் விசேஷ நாளின் அவங்க வீட்டுக்குப் போய் பார்க்கிறேன். (சாப்பிட்டுப்)

   Delete
  4. நெ.த. இப்போக் கீழ்க்கடையில் ஆட்கள், நிர்வாகம், சமைப்பவர்கள்னு எல்லாரும் மாறிட்டாங்க. அதனால் நாங்க எதுவும் அங்கே வாங்குவதில்லை. அங்கே இருந்த வணிகவளாகமும் இப்போ செயல்பாட்டில் இல்லை. கீழே போய் ஏதானும் வாங்கியே மாசக்கணக்கா ஆகிறது. அநேகமா வீட்டிலேயே ஏதானும் பண்ணி வைக்கிறேன். திடீர்னு நிறையப் பேர் வந்தால் தான் கொஞ்சம் சிரமம்! :))))

   Delete
 9. //ஏற்றிவிட்டுத் திரி முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைத்தால் தான் அதிராவின் மாவிளக்கில் பார்த்த மாதிரி ஆகி விடுகிறதோ என நினைக்கிறேன்.//
  நெய்யை ஊற்றி ஊற்றி நன்கு எரிச்சேன், திரி முழுவதும் எரிச்சேன்.. அது என் கன்னி மாவிளக்கெல்லோ.. முன்பு அம்மா செய்தது மனதில் நின்றுது, அம்மாவிடம் கேட்டுக் கேட்டே ஃபோனில செய்தேன்:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, அச்சச்சோ! ஃபோனில் செய்தீங்களா? ஃபோனுக்கு ஒண்ணும் ஆகலை தானே! :))))))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இடியப்பம் அவிக்கப் பழகினதும் இப்படித்தான், காதில ஃபோனை வச்சு அம்மாவிடம் கேட்டுக் கேட்டே அவிக்கப் பழகினேன்:))

   Delete
 10. ///இப்போல்லாம் காரிலேயே போய்விடுவதால் (ஹை, பணக்காரங்களாயிட்டோமுல்ல!)//

  ஆவ்வ்வ்வ் அப்போ எங்கட எக்கவுண்ட் நம்பரைக் குடுத்திடுவோம் கீசாக்காவுக்கு:) அப்பப்ப பணம் போட்டு விடுவா பவுண்ட்டில:))

  ReplyDelete
  Replies
  1. என்னாது? அக்கவுன்ட் நம்பரா? அப்படின்னா என்ன?

   Delete
 11. இரண்டு பெரிய மாவிளக்கு மட்டும்தான் பொடுவீங்களோ?:).. நாங்க குட்டிக் குட்டியாக சுட்டி விளக்கு சைஸ் இல் நிறையப் போடுவோம்... அப்போதான் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துக் குடுக்க முடியும் என.

  ReplyDelete
  Replies
  1. அம்மா வீட்டில் ஒன்றே ஒன்று. மாமியார் வீட்டில் இரண்டு பெரிய மாவிளக்கு! குட்டிக் குட்டியாப் போடுவது இல்லை. :)

   Delete
 12. மாவிளக்குக்கு உழுந்து வடையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பிட்சாவை காரக்குழம்பு தொட்டுச் சாப்பிடுவதைப்போல இருக்கும்:)) ஹாஅ ஹா ஹா:)..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, பிட்சாவைக் காரக்குழம்போடு சேர்த்துச் சாப்பிட்டுப் பார்க்கலாமே! என்ன தப்பு?

   Delete
  2. அதன் சுவையே மாறிவிடும்.. காரக்குழம்பெனில் ரொட்டி போதுமே:) எதுக்கு கஸ்டப்பட்டு பிட்ஷா செய்யோணும் என்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

   ஊரில கறி ரொட்டி யைப் பார்த்து ஒருவர் கேட்டாராம்.. உருளைக்கிழங்குக் கறி வச்சு, ரொட்டியில் சேர்த்து சாப்பிடுவதை விட்டுப் போட்டு எதுக்கு இப்பூடி எல்லாம் கஸ்டப்படுறீங்க ரெண்டும் ஒண்டுதானே என ஹா ஹா ஹா:)).. ஒவ்வொன்றிலும் ஒரு சுவை இருக்குதெல்லோ:)

   Delete
 13. எங்க வீட்டுலயும் மாவு உரலில் இடித்துத்தான் கடையில் வாங்கிச் செய்ததில்லை. முன்பெல்லாம் உரல். நானுமே திருவனந்தபுரத்தில் இருந்தவரை உரலில் அங்கு வீடுகலில் உரல் அம்மி எல்லாம் இருக்கும். இங்கு தமிழ்நாடு வந்த பிறகு எந்த வீட்டிலும் உரல் அம்மி இல்லாததால் மிக்ஸியில்தான் பொடித்துக் கொள்கிறேன் கீதாக்க்கா..

  என்மாமியார் வீட்டில் மாவாக வைத்துத்தான் நீங்களும் நெல்லையும் சொல்லியிருப்பது போல் என் பிறந்த வீட்டில் கலந்து விளக்கும் போல செய்து .ஏற்றுவார்கள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தில்லையகத்து கீதா! முன்னெல்லாம் அதாவது 90 கள் வரை தமிழ்நாட்டிலும் கல்லுரல், அம்மி போட்டிருந்தார்கள். நானே எங்க அம்பத்தூர் வீட்டிலே இரண்டு போர்ஷனுக்கும் தனித்தனி அம்மி, கல்லுரல் போட்டிருந்தேன். போன வருஷம் தான் ஒரு கல்லுரலை அங்கேயே விட்டு, அம்மி சமையலறையில் பதிச்சிருந்தோம். எடுக்கலை, இன்னொரு கல்லுரல், அம்மியை எடுத்து வந்திருக்கேன். இப்போத் தான் போடுவது இல்லை! ஆந்திராவில் வீட்டுக்காரங்க போடுவது இல்லை! அங்கே இருக்கும்னு நம்பி சிகந்திராபாத் மாற்றல் ஆகி வரச்சே கையில் இருந்ததைக் கொடுத்துட்டுப் பட்ட பாடு! :))))

   Delete
 14. ஒரு மாவிளக்குதான் எற்றுவார்கள் எங்கள் வீட்டிலும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மாமியார் வீட்டில் இரட்டைப்படை தான்! நாமெல்லாம் குழந்தை பிறந்து 45 நாளில் மொட்டை அடிச்சுக் காது குத்துவோம். அல்லது 5,7, 9 ஆம் மாதங்களில் மொட்டை அடிப்போம். இங்கே ஆண்டு நிறைவு ஆனதும் ஆண்டு நிறைவன்னிக்குச் சாயங்காலம் அல்லது காலையிலேயே வைதிக வழிபாடுகள் முடிஞ்சதும் குத்தறாங்க. அதன் பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து மொட்டை, மாவிளக்கு போன்றவை! இரட்டைப்படை வயதில் தான் செய்யறாங்க!

   Delete
 15. மாவிளக்கு என்றால் என்ன என்பதே இப்போதுதான் தெரிகிறது. எங்கள் வீட்டில் எல்லாம் பழக்கம் இல்லையா அதனால் தெரியவில்லை. நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. வடை ரொம்பவே பிடிக்கும்

  துளசி

  ReplyDelete
  Replies
  1. மாவிளக்கு நல்ல சத்துள்ள உணவு துளசிதரன்! தேங்காயும் இளசாக அமைந்து விட்டால் சாப்பிடச் சாப்பிட ருசி! வடை பிடிக்காதவங்களும் உண்டோ! அந்த விஷயத்தில் எல்லோருமே எலிகள் தான்! :))))))

   Delete