எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 01, 2018

இன்னிக்கு நெ.த. மாட்டிக்கிட்டாரே! ஹஹ்ஹாஹா!

நாளைக்குத் திருவாதிரை. எல்லா வீட்டிலேயும் களியும், குழம்பும் பண்ணுவாங்க. நம்ம வீட்டிலே மாமியாருக்கு இன்னும் வருஷம் ஆகாததால் பண்ண முடியாது. ஆனால் அதுக்காகச் சும்மா இருக்கிறதா! களி பண்ணாட்டி என்னவாம்! குழம்பு பண்ணலாமே, ஒரு நாள் சாப்பாட்டில் மாறுதலா இருக்குமேனு நினைச்சேன். இன்னிக்கு நெ.த.வோட காசி அல்வாவைப் பார்த்தேனா, இன்னிக்குத் தான் "சபாஷ்! சரியான போட்டி!" என்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் பாருங்க திருவாதிரைக்கான ஏழுதான் குழம்பு பண்ணலை. எங்க குடியிருப்பிலே குடித்தனம் வந்திருக்கும் ஒரு திருநெல்வேலி மாமி திருநெல்வேலியின் சிறப்பான, "தாளகக் குழம்பு" பத்திச் சொன்னார். அதைத் தான் இன்னிக்குச் செய்தேன். நெல்லைத் தமிழனுக்கு நெல்லைத் தமிழச்சி சொன்ன சமையல் குறிப்புத் தானே சரியான போட்டியாகும்? ஹிஹிஹி! என்ன நெ.த. சரி தானே?

இது முழுக்க முழுக்கத் திருநெல்வேலி முறைப்படியானது. இதுக்குத் தேவையான பொருட்கள். முதல்லே காய்கறி! இங்கே வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி பாரணைக்கு 21 காய்கள் சேர்க்கணும்னு எல்லாத்திலேயும் வெட்டிப் போட்டுக் கொடுக்கிறாங்கனு ஆதி வெங்கட் சொல்லி இருந்தாங்க. நம்ம ரங்க்ஸை அதை வாங்கி வரச் சொன்னேன். எதுக்கும் இருக்கட்டும்னு என்னென்ன காய்கள் என்பதையும் சொன்னேன். 21 காய்கள் கொண்ட பையிலே பாகற்காய், பீன்ஸ், காரட், உ.கி. போன்றவையும் இருந்திருக்கின்றன. எனக்குத் தேவையோ நாட்டுக் காய்கள் தான்! ஆகவே அவற்றில் இருந்து ரங்க்ஸ் சேனைக்கிழங்குத் துண்டங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்குத் துண்டங்கள், கொத்தவரை, சாட்டைப்பயறு போன்றவற்றைக் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். பின்னர் வாழைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சை, பறங்கிக்காய், பூஷணிக்காய் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டார். போதுமான காய்கள் சேர்ந்தாச்சு. எல்லாவற்றையும் நறுக்கியும் வைச்சாச்சு!

 பச்சைக்காய்கள் நறுக்கியது. வாழைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரை, சாட்டைப்பயறு, பச்சை மொச்சை, அவரைக்காய், பூஷணி, பறங்கிக்காய் வகைகள். கடாயில் வேகும்போது எடுத்த படம். நீர் குறைவாக வைத்து மூடி வைத்து வேக விட்டேன்.


சர்க்கரை வ்ள்ளிக்கிழங்கும் சேனைக்கிழங்கும் தனியாக வேக வைத்துக் கொண்டேன். இரண்டிலும் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைத்தேன்.

அடுத்ததாகப் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொண்டேன். இந்தக் குழம்பிற்குத் துவரம்பருப்பு வேக வைத்துச் சேர்க்கக் கூடாதாம். ஆகவே நோ பருப்பு!

வறுக்க

மி.வத்தல் 3 (காரம் அதிகம் என்பதால் 3 மட்டும்)

துவரம்பருப்பு ஒன்றரை டேபிள் ஸ்பூன்

அரிசி இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை இரண்டு ஆர்க்கு உருவியது

எள் 3 டீஸ்பூன், களைந்து கல்லரித்து முதலில் வறுத்து எடுக்கவும்.

தேங்காய்த் துருவல் சின்ன மூடின்னா ஒரு தேங்காய் மூடி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் துருவல்

இந்த மசாலா சாமான்களை வெறும் சட்டியிலேயே வறுக்கலாம். விருப்பமானால் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். மிவத்தல், துவரம்பருப்பு, அரிசியை வறுத்துவிட்டு அந்தச் சட்டி சூட்டிலேயே கருகப்பிலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியதும் இவற்றோடு எள், தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும்.


எள் வறுத்தது. காமிரா கொஞ்சம் அசங்கி விட்டதால் முழுசா வரலை! மன்னிக்கவும்! :(


மி.வத்தல்


துவரம்பருப்பும் அரிசியும் வறுத்தது!மிக்சி ஜாரில்   பொடிக்கையில்!குழம்பு கொதிக்கிறது!

இப்போ வெந்து கொண்டிருக்கும் தான்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டுத் தேவையான உப்பை மட்டும் சேர்த்துக் கொதிக்கவிடவும். நிறம் அதிகம் வேண்டும் எனில் மஞ்சள் பொடி சேர்க்கலாம். ஏற்கெனவே காய்கள் வேகும்போது தனித்தனியாக உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே இப்போப் புளி ஜலத்துக்கு மட்டுமான உப்புச் சேர்த்தால் போதும். சேர்ந்து கொதித்ததும் பொடித்த பொடியைப்போட்டுக்கலக்கவும். நன்கு கலக்க வேண்டும். பொடி கட்டியாக ஆகாமல் கலக்க வேண்டும். அது முடியலைனால் தேவையான பொடியை மட்டும் எடுத்துக் கொண்டு அரைக் கிண்ணம் நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு குழம்பில் ஊற்றலாம். பொடி போட்டு ஐந்து நிமிஷம் கொதித்தால் போதும். பின்னர் கீழே இறக்கும் முன்னர் தே.எண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்றே ஒன்று தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி போட்டு இறக்கவும்.


பி.கு. இன்று மதியம் இதான் சாப்பாட்டுக்குப் பண்ணினேன். ரங்க்ஸுக்கு என்ன இருந்தாலும் நம்ம ஏழுதான் குழம்பின் ருசி இதில் இல்லைனு சொல்லிட்டார்! :) ஹெஹெஹெ முக்கியமான ஒண்ணு, பெருங்காயம் சேர்க்கலை! எள் வறுத்துச் சேர்ப்பதால்னு நினைக்கிறேன். ஆனால் பொதுவாகத் திருநெல்வேலி சமையலிலேயே பெருங்காயம் குறைவாகத் தான் சேர்க்கின்றனர்.  பெருங்காயம் சேர்க்காதது தான் குறையோ? தெரியலை! பொதுவாக வெங்காய சாம்பார், வெங்காயம் சேர்க்கும் பொருட்கள், ஜீரக ரசம் போன்றவற்றிற்குப் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.


குழம்பு கொதிச்சு முடிச்சுத் தாளிதம் ஆன பின்னர்!

60 comments:

 1. ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கும் போலயே..... பார்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! ஓகே! இப்படி என்னிக்கானும் ஒரு நாள் செய்து சாப்பிடலாம்.

   Delete
 2. ஆஹா இங்கேயும் எசப்பாட்டோ?:) இப்பூடி அசம்பாவிதம் ஏதும் நடக்கலாம் எனத் தெரிஞ்சுதான் போல நெல்லைத்தமிழன் தலை மறைவு:)...

  இந்தியாவில் சமையலுக்குத் தேவையான படி 21 காய்கறிகள், 7 காய்கறிகள் இப்பூடி வெட்டி பக் பண்ணிக் கிடைக்குதாம் என நானும் அறிஞ்சேன்.. அப்போ விரத காலங்களில் நோகாமல் நொங்கெடுக்கலாம்:).. இங்கு நாங்க வாங்கி, வெட்டி எடுக்கவே உய்ர் போகுது...:)

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெ செஃப் அதிரா, நெ.த. குடும்பத்தோடு புத்தாண்டு கொண்டாடுகிறார். இங்கே காய்கள் வெட்டிப் பாக்கிங் செய்து கிடைச்சாலும் நாங்க வாங்கறதில்லை. தேவையான காய்களைக் கால் கிலோ வாங்குவோம். இருக்கும் மனிதர்களுக்குத் தகுந்தாற்போல் அதிலிருந்து எடுத்துப்போம். மிச்சம் இருந்தால் அவியல், எரிசேரி, கூட்டு, பொரிச்ச குழம்பு போன்றவை! இம்முறை தான் வாங்கிப் பார்க்கலாமேனு வாங்கினோம்.

   Delete
 3. கறி பார்க்க நல்லாத்தான் இருக்கு.. இக்கறியைச் சாப்பிட்டுப் போட்டு, அந்த அல்வாவைச் சாப்பிட்டால் ஜூப்பரா இருக்கும்:)..

  ///காமிரா கொஞ்சம் அசங்கி விட்டதால் முழுசா வரலை! மன்னிக்கவும்! :(///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *890:)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் நல்லாவே இருந்தது! என்றாலும் பருப்புச் சேர்த்துச் செய்யும் எங்க வீட்டுக் குழம்பு (பல வீடுகளிலும் இப்படித் தான் செய்வாங்க) மசாலா அரைப்பதும் வித்தியாசப்படும்! அது சுவை தனி தான்! :))))

   ஃபோட்டோகிராஃபர் அதிரா, வலது பக்கத் தோள்பட்டை கரண்டி, காமிரா, மற்றும் எதையானும் தூக்குகையில் சில, பல சமயங்கள் டபக்கென்று கீழே இறங்கிடும். அப்படியான ஒரு சமயத்தில் நான் க்ளிக் செய்யவே படமும் கீழே இறங்கி விட்டது! :(

   Delete
  2. அதிரா - இந்தக் கறியைப் போட்டு அந்த அல்வாவைச் சாப்பிட்டால் - என்ன அநியாயம். சிலர் பாயசத்துக்கு, பொரித்த அப்பளாம் தொட்டுக்கொள்வதைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. இனிப்பை உள்ளே தள்ள, கார உணவா?

   Delete
  3. பாயசம் எல்லாம் நான் மோர் சாதத்துக்கு அப்புறமாத் தான் சாப்பிடுவேன்/குடிப்பேன்(?) நான் வைக்கும் பாயசம் குடிக்கும்படி நீர்க்க இருக்காது! பாயசம்னா அள்ளு அள்ளாகக் கையால் எடுத்துச் சாப்பிடும்படி இருந்தால் தான் சுவைனு என்னோட கருத்து! அப்படித் தான் பண்ணுவேன். :)

   Delete
  4. ஆமாம் கீதா சாம்பசிவம் மேடம். அதிலயும் அரிசிப் பாயசமோ அல்லது எந்தப் பாயசமாக இருந்தாலும் நெகிழ நெகிழ இருக்கணும். சும்மா, பால் ஒரு பக்கம் ஓட, சக்கை இன்னொரு பக்கம் என்று பாயசம் இருந்தால், அது பாயசமல்ல. பந்திகளில், முதலில் பாயசம், அதற்கு அப்புறம்தான் மோர் சாதம். நான் பாயசத்தோடு சாப்பாட்டுக்கு டாட்டா காட்டிவிடுவேன்.

   Delete
  5. கல்யாணப்பந்தின்னா இப்போல்லாம் சின்னக் கிண்ணங்களில் கொடுப்பதால் மோர்சாதத்துக்குப் பின்னர் சாப்பிட்டுக்கலாம். நம்ம வீட்டில் எனில் கேள்வியே இல்லை. யார் வீட்டுக்காவது சாப்பிடப் போறச்சே தான்! அவங்க பாயசத்தை அவசரம் அவசரமா இலையில் ஊத்திடுவாங்க. மோர் சாதம் வேண்டாம்னால் விசித்திரமாப் பார்ப்பாங்க! இப்போல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு! :)

   Delete
  6. ///நெல்லைத் தமிழன்02 January, 2018
   அதிரா - இந்தக் கறியைப் போட்டு அந்த அல்வாவைச் சாப்பிட்டால் ///

   ஹா ஹா ஹா அப்படி இல்லை.. இதைச் சாப்பிட்டு விட்டு அதைச் சாப்பிடலாம் என்றேன்:) ஏனெனில் இது உங்கள் அல்வாவுக்கு எசப்பாட்டாமெல்லோ:))..

   இன்னொன்று எனக்கு நல்ல உறைப்போடு இனிப்பு சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும்:))

   Delete
 4. இங்கே இப்படி fresh காய் கறி வெட்டிவச்சது frozen தான் இருக்கு ..நீங்க சொன்ன எல்லா காயும் இங்கே தனியா வாங்கலாம் ..இங்கொரு வசதிக்கா நம்ம வசதிக்கு மூணு எண்ணிக்கையில் காய் எடுத்தாலும் அதை எடைபோட்டு விலை சொல்லுவாங்க ..குஜராத்தி பஞ்சாபிகாரங்களால் எங்களுக்கும் வசதி :)
  சாட்டைப்பயறு ..இஸ் இட் காராமணி பயற்றங்காய் ??
  அவரைக்காய்லாம் விதவித நிறத்தில் இருக்கு நாளைக்கு வாங்கிட்டுவந்து செய்யணும் ..எனக்கு எல்லாம் ஓகே ஆனா எள்ளு ? அது எப்படிக்கா சுவை இருந்தது ? அதை சேர்க்கலைன்னா நல்லா வராதா ?

  இதை நேத்து பார்த்திருந்தா இன்னிக்கு தோசைக்கு சைட் டிஷாக்கிருப்பேன் :)

  ReplyDelete
  Replies
  1. பேப்பர் க்ராஃப்ட்ஸ், சாதா தோசையை விடக் கொஞ்சம் கனமாக வார்க்கும் வெந்தய தோசைக்கு நல்லா இருக்கும். எள் சேர்த்து நானும் குழம்பு வைத்ததில்லை. இதான் முதல் முறை! அப்படி ஒண்ணும் மோசமா இல்லை. குழம்பில் எள் வாசனை எல்லாம் வரலை. வறுத்துப் பொடிக்கையில் வந்தது. அவ்வளவு தான்! சாட்டைப்பயறு என்றால் காராமணிக்காய், பயத்தங்காய் வேறே! எங்க ஊர்ப்பக்கம், (தேனீ, மேல்மங்கலம், சின்னமனூர்) பயத்தங்காய் தான் நிறைய! இங்கே கிடைப்பது வெள்ளைக்காராமணிக் காய்! பயத்தங்காய் உள்ளே பச்சைப்பயறு தான் இருக்கும் இல்லையோ!

   Delete
 5. ஆமாம், திருவாதிரைக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், உங்க வீட்டிலே இன்னிக்குக் களி, ஏழுதான் குழம்பா? எஞ்சாய்!

   Delete
 6. நெல்லைத்தமிழனுக்குப் போட்டி? ஹா.... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, பின்னே இல்லையோ! :))))

   Delete
 7. தயாரான குழம்பைப் பார்க்கையில் கிளம்பி வந்து விடலாமா என்றுதான் இருக்கிறது.. என்ன செய்ய? கடமை தடுக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், உங்க வீட்டுக் களி&குழம்புப்படமும் போடுங்க! பார்த்துக்கலாம்! :)

   Delete
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இது ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்வதைத் தவறுனு மாரிதாஸ் சொல்கிறார். :)

   Delete
  2. அப்படியா... ஒருத்தர் இப்படிச் சொன்னா... இன்னொருத்தர் அப்படிச் சொல்வார்! ஏனாம்?

   Delete
  3. மாரிதாஸின் விளக்கத்தை முகநூலில் பகிர்ந்திருக்கேனே!

   Delete
 9. குறித்துக் கொண்டு என்ன வித்தியாசம் என்று பின்னர்தான் பார்க்கவேண்டும். எங்கள் தளம் ஓடுகிறேன். அங்கு வேலை இருக்கிறது. மணி ஆறு!

  ReplyDelete
  Replies
  1. நிறைய வித்தியாசம் ஶ்ரீராம், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கொஞ்சம் அரிசி ஆகியவற்றை மி,வத்தலோடு எண்ணெய் விட்டு வறுத்துத் தேங்காய்த் துருவலையும் வறுத்துக் கொண்டு பொடியாக்கி வைச்சுப்போம். சாதாரணமாக மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தான் சாம்பாருக்கு வறுத்து அரைப்பது. இதுக்கு நாங்க மேற்சொன்ன முறையில் வறுத்து அரைப்போம். இதன் மணம் தனி! இங்கே திருநெல்வேலி தாளகத்திற்கு தனியா, கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம், உபருப்பு, பெருங்காயம் போன்றவை இல்லை. மேலும் வறுக்கும்போது கருகப்பிலையும், எள்ளும் சேர்த்து வறுத்து அரைக்கிறார்கள். ஆகவே நிறையவே வித்தியாசம்!

   Delete
 10. எங்கள் வீட்டிலும் இதே குழம்புதான் இன்று !!! தாளகம்...திருவாதிரைக் களி....பின்னர் வரேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, நிதானமாக் களி சாப்பிட்டு விட்டு வாங்க! :) உங்க தாளகம் செய்முறையும் போடுங்க!

   Delete
  2. கீதாக்கா எங்கள் மாமியார் வீட்டில் தாளகமோ இல்லை வறுத்து அரைத்த குழம்போ செய்வதில்லை. திருவாதிரைக் களியும் செய்ய மாட்டாங்க...என் பிறந்தகத்திலும் திருவாதரைக் களி செய்யமாட்டாங்க ஆனா குழம்பு மட்டும் செய்வதுண்டு அதுவும் அவ்வப்போது.. நான் இரு குழம்பு அதாவது தாளகம் மற்றும் பாட்டி செய்யும் வறுத்து அரைத்த குழம்பு - குழம்பு சகோதரிகள் என்று திங்க பதிவுக்கு எழுதி வழக்கம் போல பாதி எழுதி வைச்சுருக்கேன்...இதுக்கு முன்னாடி அனுப்ப வேண்டியதே இன்னும் அனுப்பலை ஸ்ரீராமுக்கு...ஹிஹிஹிஹி...

   எங்க வீட்டுல செய்யறத இங்க சொல்லிருக்கேன்...

   கீதா

   Delete
  3. விரைவில் வெளியிடுங்க குழம்பு சகோதரிகளை! பார்ப்போம். ஒரு சிலர் வீடுகளிலே பொங்கல் அன்னிக்கும் இந்தத் திருவாதிரை ஏழுதான் குழம்பு தான் செய்யறாங்க. எங்க அம்மா வீட்டுப்பக்கங்களில் அப்படி ஒரு பழக்கம் இல்லை. அநேகமாப் பொங்கல் அன்னிக்கு மோர்க்குழம்பு தான்! மாமியார் வீட்டிலே தனிக்கூட்டு என்று செய்வாங்க! ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கூட்டுகள் வரும். அப்புறமா அதை எல்லாம் ஒண்ணாக்கி அன்னிக்குப் பண்ணின ரசத்தையும் விட்டுக் கலந்து மறுபடி கொதிக்க வைச்சு எரிச்ச கறினு செய்வாங்க. இது சுமார் ஒரு மாசமாவது தொடரும். தினசரி செய்யும் குழம்பு, ரச வகைகளை அதில் சேர்த்துக் கொட்டிச் சூடு பண்ணிட்டே இருப்பாங்க. எனக்கு ஒத்துக்காது, பிடிக்காது இரண்டுமே! ஆகவே நான் கொஞ்சமா அன்னிக்கு மட்டும் சாப்பிடுவது போல் பண்ணுவேன்.

   Delete
 11. அக்கா பெருங்காயம் சேர்ப்பதில்லை. தேங்காய் வறுத்துச் சேர்ப்பதால்...திருவனந்தபுரத்தில் பக்கத்து வீட்டு மாமியிடம் கற்றுக் கொண்டதுதான் தாளகம். து ப, உ ப, வெந்தயம், மி வ, பச்சரிசி இதில் எள்ளு சேர்க்கறதில்லை..தேங்காய் வறுத்து...ஒன்லி நாட்டுக்காய்...நான் திங்க பதிவுக்குப் பாதி எழுதி வைச்சுருக்கேன்.. குழம்பு சகோதரிகள் என்று ஏனென்றால் இதே குழம்பை என் பாட்டி வறுத்து அரைத்த குழம்பு என்று து ப வுக்குப் பதில் க ப சேர்த்து, மற்றதெல்லாம் சேம்.... எள்ளும் வெறும் வாணலியில் வறுத்துச் சேர்த்துச் செய்வார்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பொதுவாகவே நிவேதனம் செய்யும் பிரசாதங்களில் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள். பருப்பு, சாதம் நிவேதனத்துக்கு எனில் பருப்பில் உப்புச் சேர்க்க மாட்டார்கள். உப்பில்லாமல் தான் நிவேதனம்! ஆனால் இதெல்லாம் ரொம்ப ஆசாரக் காரர்களுக்கு! எங்க வீட்டில் திருவாதிரைக் களிக்குழம்பிற்கு அம்மா பெருங்காயம் சேர்த்ததில்லை. ஆனால் மாமியார் வீட்டில் சேர்ப்பார்கள். மாமியார் வீட்டில் குழம்பில் வெல்லமும் சேர்ப்பார்கள். காய்களும் நாட்டுக்காய்கள் தான் இரண்டு வீட்டிலும். அப்பா வீட்டில் சேப்பங்கிழங்கு போடுவதில்லை. அப்பாவுக்குப் பிடிக்காது. மாமியார் வீட்டில் அது நிறையவே!

   Delete
  2. எள் போட்டுக் குழம்பு நானும் வைத்ததில்லை. இதான் முதல் முறை! பருப்பு இல்லை என்பதாலோ என்னமோ ரங்க்ஸுக்கு அவ்வளவாப் பிடிக்கலை. நான் பருப்புப் போடாமல் பொரிச்ச கூட்டுச் செய்தாலே மாமியார் வீட்டில் அதிசயமாய்ப் பார்த்துச் சிரிப்பார்கள். பருப்பு அங்கே தினமும் சேர்க்கணும். சாம்பார் தினமும் இருக்கும். தாளகத்துக்கு உ.பருப்பு, வெந்தயம் சேர்க்கச் சொல்லி அந்த மாமி சொல்லலை! ஆகவே நான் சேர்க்கவில்லை. :)

   Delete
 12. எங்கள் சின்ன மாமியார் வீட்டில் இருந்த திருமலை
  நெல்லை தான்.
  அவர் செய்யும் தாளகக் குழம்பில் து.பருப்பு உண்டு. பெருங்காயமும் உண்டு.
  எனக்குப் பெருங்காயம் இல்லாமல் கை ஓடாது.
  நல்ல வாசனையாக இருக்கும்.
  காரடையான் நோம்புக்கும், கனு அன்றும் செய்வார்.
  இட்லிக்குத் தொட்டுக்க அதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இட்லிக்கெல்லாம் தொட்டுண்டதில்லை. பருப்பும் சேர்க்கக் கூடாதுனு அந்த மாமி சொன்னார். பெருங்காயம் அவர் சேர்க்கலை. ஆகவே நானும் அப்படியே பண்ணினேன்.

   Delete
 13. இரு குழம்புகளுமே இங்கு எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஃபேமஸ் ஆகிவிட்டது....சனிக்கிழமை ஒரு கெட்டுகெதர் அன்று கூட தாளகம் தான் அவர்கள் கேட்டுச் செய்தேன்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் முதல்முறையாக இப்போத் தான் தாளகம் செய்தேன் தில்லையகத்து கீதா!

   Delete
 14. இன்னிக்குத் தாளகம் செய்யும் போது ஃபோட்டோ புடிச்சாச்சு...

  நெ தவுக்குப் போட்டியா ஹா ஹா ஹா ஹா ஹா நெ த பிஸி...குடும்பத்துடன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அப்போ விரைவில் எதிர்பார்க்கலாம். தாளகம் சமையல் குறிப்பு! :)

   Delete
 15. தாளகக் குழம்பு செய்முறை நன்றாக இருக்கிறது. கண்டிப்பா பெருங்காயம் சேர்க்கணுமே. ஏன் சேர்க்கவில்லை?

  நான் சும்மா 'கத்துக்குட்டி'. சும்மா 10 செய்முறை போட்டதை வைத்து ஏதோ, சமையலில் நிபுணன் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். 'எங்கூர்க்காரவுக சொன்ன செய்முறை' நிச்சயம் செய்துபார்ப்பேன்.

  21 காய்களா? அப்போ தேவையில்லாத காயெல்லாம் சேர்த்துடுவாங்க (சும்மா கணக்கு காண்பிக்க). சேனை, சேப்பங்கிழங்கு, முருங்கை(? நாங்க உபயோகப்படுத்தமாட்டோம்), பூசணி, பறங்கி, வெண்டை, மாங்காய்(?), புடலை, வாழைக்காய் - இவைகளெல்லாம் இருந்ததா?

  பெருங்காயம் (மற்றவர்கள் பூண்டு) சேர்ப்பது, சேர்மானப் பொருட்களில் வாய்வு ஏற்படுத்தும் பொருட்கள் இருந்தால்தான். ஜீரக ரசத்தில் பருப்பு சேர்ப்பதில்லை (குறிப்பிடத்தக்க அளவு). வெங்காய சாம்பாரில் நான் சேர்ப்பேன். ரொம்ப சேர்த்தால் வெங்காய வாசனை (அதுக்குத்தானே அதனைச் செய்வது) குறைந்துவிடும்.

  நேற்றும் நான் பிஸி. அவங்க இருக்கும்போது, அலுவலக வேலை தவிர வேறு எதற்கும் பெரும்பாலும் கணிணி உபயோகப்படுத்தமாட்டேன். முதல் தேதியிலிருந்து சௌதி அரேபியா, எமிரேட்ஸ் இவற்றில் VAT Implementation. அதுலயும் கொஞ்சம் பிஸி. அதனால்தான் உடனடியாக வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. ரொம்ப மடி, ஆசாரம் பார்க்கிறவங்க பெருங்காயத்தைச் சமையலில் சேர்க்க மாட்டாங்க! அதனால் இல்லைனாலும் வழக்கமே இப்படி இருந்திருக்கும். மாற்றி இருக்க மாட்டாங்க! நானும் சேர்க்கலை! 21 காய்கள் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசிக்குத் தான்! முருங்கைக்காய் துவாதசிக்கும் சேர்ப்பதில்லை. கத்திரிக்காய்க்கும் துவாதசியில் தடா! சேனை, சேம்பு உண்டு! ச்ராத்தத்திலேயே பயன்படுத்துகிறோமே! மற்ற நாட்டுக்காய்கள் அனைத்தும் உண்டு, வெண்டைக்காய் தவிர்த்து!

   Delete
  2. ஜீரக ரசம் நான் மூன்று முறைகளில் வைப்பேன். பின்னர் பகிர்கிறேன். வெங்காய சாம்பாரில் நான் பெருங்காயம் சேர்ப்பேன்.

   Delete
  3. நான் மூன்று முறைகளில் வைப்பேன். - இது என்ன, உலக்கை நாயகர், தசாவதாரத்தில், 'தெலுங்கை' ஐந்து விதமாகப் பேசுவார் என்று சொன்னதுபோல இருக்கிறதே. விரைவில் பகிருங்கள் (உணவே மருந்து-கொஞ்சம் இடைவெளிவிட்டே வருகிறது)

   Delete
 16. தாளகம் செய்ததில்லை. தில்லையகத்து கீதாவின் தாளாக பதிவும் வரட்டும். ரெண்டையும் கம்பேர் பண்ணி சிறந்ததை முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி! தளம் திறந்ததா? மொபைலில் எப்படினு எனக்குத் தெரியலை! ஶ்ரீராம், நெ.த. தில்லையகத்து கீதா ஆகியோரைக் கேட்டுப் பாருங்க! எனக்கு முகநூல், வாட்ஸப் இரண்டு மட்டுமே தான் மொபைல் மூலம்! அதிலும் காப்பி, பேஸ்ட் பண்ணவோ, தமிழில் தட்டச்சு செய்யவோ வரலை! :( ஆகவே முகநூல் சும்மா அவ்வப்போது பார்க்க மட்டும் மொபைல் மூலம். வாட்ஸப் உறவினர், நண்பர், குழந்தைகளுடன் தொடர்புக்கு! அதிலும் தமிழில் தட்டச்ச வராது! :) நேத்து நீங்க கேட்டப்போ பேச முடியாததால் சரியான பதில் சொல்ல முடியலை. அதான் இங்கே தட்டச்சிட்டேன். :)

   Delete
  2. இரண்டு முறைத் தாளகங்களும் செய்து பாருங்க, பானுமதி! ஒரு மாறுதலுக்கு ஒரே மாதிரி சமைக்காமல் வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

   Delete
 17. என் பாட்டி திருவாதிரைக் களிக்கு காவத்துக் கிழங்கு கறி செய்வார்கள் இங்கு கிடைப்பதில்லை

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, கேள்விப் பட்டிருக்கேன். சாப்பிட்டதாக நினைவில் இல்லை. புழுக்கு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். பானுமதி வெங்கடேஸ்வரனுக்கோ அல்லது துளசிதரன்/தில்லையகத்து கீதா ஆகியோருக்குத் தெரிந்திருக்கலாம்.

   Delete
 18. தாளகம் எனக்குப் புதியது. செய்யும் பொறுமை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வெங்கட்! நிச்சயமா இருக்காது! :)

   Delete
 19. //இன்று மதியம் இதான் சாப்பாட்டுக்குப் பண்ணினேன். ரங்க்ஸுக்கு என்ன இருந்தாலும் நம்ம ஏழுதான் குழம்பின் ருசி இதில் இல்லைனு சொல்லிட்டார்! :) //

  கொஞ்சம் நாளாகவே பார்க்கிறேன். மாமா நீங்க எது செய்தாலும் ஒரிஜினல் ருசி இல்லை என்று சொல்லி விடுகிறார். நாக்கு செத்துப் போய்விட்டது போலும்.

  வயசானதால் உங்களுக்கும் பக்குவம், திட்டம் எல்லாம் சரியாக வருவதில்லை என்று தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு இந்த சமையல் ஆராய்ச்சி எல்லாம் விட்டு விட்டு சாதாரண சாம்பார், வத்தல் குழம்பு, மிளகு குழம்பு, வெந்தய குழம்பு, பொரிச்ச குழம்பு, மோர்க்குழம்பு, குருமா, புளிசேரி, ரசம், சூப், பொரியல், வறுவல்,கூட்டு, எரிசேரி, அவியல், பச்சடி, அப்பளம், மோர் மிளகாய், ஊறுகாய் என்று சமையலை முடித்துக்கொள்ளுங்கள். நாக்கு சரிப்பட்டு வரும்.

  புழுக்கு என்பது கேரளத்தில் இறந்தோர் நினைவு தினத்தில் செய்யப்படுவது. முக்கியமாக சிவப்பு அரிசி கஞ்சியும், புழுக்கும், மாங்காய் ஊறுகாயும் செய்வார்கள். தில்லையகத்து விரிவாகக் கூறலாம்.
  புழுக்கில் முக்கியமாக கிழங்கு வகைகள் மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பால் சேப்பங்கிழங்கு, பயறு, பூசணி (இங்கே இளவன் என்று சொல்வார்கள், உருண்டையான சுரைக்காய் போன்று பெரிதாக இருக்கும், ஆனால் பூசணி சுவை இருக்கும்,) போன்றவை இடம் பெறும். சுக்கு மிளகு ஜீரகம் (சில சமயம் திப்பிலியும் சேர்ப்பதுண்டு) சேர்ப்பார்கள்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. //கொஞ்சம் நாளாகவே பார்க்கிறேன். மாமா நீங்க எது செய்தாலும் ஒரிஜினல் ருசி இல்லை என்று சொல்லி விடுகிறார். நாக்கு செத்துப் போய்விட்டது போலும்.

   வயசானதால் உங்களுக்கும் பக்குவம், திட்டம் எல்லாம் சரியாக வருவதில்லை என்று தோன்றுகிறது. //

   :))))) நான் எழுதுவதை வைச்சு இப்படி எல்லாம் சொல்ல முடியும் என்பது ஆச்சரியம் தான்! ஏனெனில் ஏற்கெனவே சில முறைகள் ரங்க்ஸுக்குச் சாப்பாட்டு விஷயத்தில் ஏதேனும் குற்றம், குறை இருந்துட்டே இருக்கும்னு சொல்லி இருக்கேன்! அதோடு இந்தக் குழம்பில் துவரம்பருப்புக் குழைய வேக விட்டுச் சேர்க்கவில்லை! இங்கே எங்க புக்ககத்தில் பருப்பு இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க. ரசத்துக்கு நான் பருப்பு ஜலம் விட்டால் அவங்க பருப்பையே போட்டுப் பண்ணுவாங்க! அடியில் ரசம் பருப்புக் கரைசலோடு பார்க்கவே சாம்பார் மாதிரித் தெரியும்! :))))

   அதோடு என் சமையல் திட்டமோ, பக்குவமோ காரணம் இல்லை! இந்தக் குழம்பில் பெருங்காயம் இல்லை பருப்பு இல்லை! சாதாரணப் புளிக்கூட்டு மாதிரி (அதுக்கும் நாங்க பருப்புச் சேர்ப்போம்) இருந்ததால் அவருக்கு ருசிக்கலை! :)))

   Delete
  2. எங்க வீட்டிலே தினம் ஒரு சமையல் தான். அதுவும் மாறி மாறி! நீங்க சொல்லி இருக்கும் எல்லாக் குழம்பு வகைகளும் மாற்றி மாற்றிப் பண்ணுவேன் என்பதோடு ரச வகைகளும் மாறி மாறியே வரும். மிளகு குழம்பும், புளிக்காய்ச்சலும் மாறி மாறிப் பண்ணி வைச்சுப்பேன்! ஆகவே நீங்க சொல்லி இருப்பது எனக்கு/எங்களுக்குப்புதிது இல்லை! எங்க வீட்டு சமையல் வழக்கமே இதான்! :)))))))

   Delete
  3. முகநூலில் ஓரிரு பாலக்காட்டு நண்பர்கள் திருவாதிரைக் களிக்குக் காவத்தக்கிழங்கு, சிறுகிழங்கு போன்றவை போட்டுப் புழுக்குச் செய்வார்கள் எனச் சொல்லி இருந்ததால் நானும் இங்கே பகிர்ந்தேன். மற்றபடி எனக்கு அதைக் குறித்த மேலதிகத் தகவல்கள் தெரியாது.

   Delete
 20. தெரிந்தவர்கள் சொல்வதைக் கொண்டு தாளகம் முன்பே எழுதியிருக்கிறேன். அப்போது படங்களெல்லாம் போடத் தெரியாது. எள் போடலே. பெருங்காயம் போட்டேன். அப்புறம் செய்ய கைவரலே. மனஸாலே பாத்து சாப்பிட்டாச்சு. இப்போதெல்லாம் தயிர்,மோர் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை. உங்கள் தாளகமும் நன்றாக இருக்கு. தேங்காய்தான் சிலபேர் அதிகம் போடரா. கம்மியாகப் போடரா. வித்தியாஸங்கள் அதிகமில்லை. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா, ரொம்ப நாட்களுக்கு அப்புறமா வந்திருக்கீங்க. நல்வரவு! தாளகம் நீங்க எழுதி இருப்பதைத் தேடினேன். கிடைக்கலை! ஒரு நாள் பெருங்காயம் போட்டும் பண்ணிப் பார்க்கணும். பருப்புச் சேர்த்தும் பண்ணிப் பார்க்கணும். உங்கள் உடல்நிலையை கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் மும்பை வாசம் தான், இல்லையா?

   Delete
  2. குழம்பு வகைகள் என்பதில் இருக்கிறது. எல்லா பதிவுகளும் படித்து விடுகிறேன். எழுத மனம் போவது இல்லை. மும்பை வாஸம் குளிருக்கு அனுகூலம். இன்னும் என்ன மாறுதல்கள் வருமோ தெரியாது. அன்புடன்

   Delete
  3. நன்றி அம்மா, போய்ப் பார்க்கிறேன். முடிஞ்சப்போ கருத்துச் சொல்லுங்க! உங்க கருத்து எங்களுக்கு முக்கியம் இல்லையா! அதான்! எதிர்பார்ப்பு! :)

   Delete

 21. தாளகம் புதுசு எனக்கு....

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனுராதா, நானும் கேள்விப் பட்டது தான். இப்போத் தான் முதல்முறையாச் செய்தேன்.

   Delete
 22. //நான் மூன்று முறைகளில் வைப்பேன். - இது என்ன, உலக்கை நாயகர், தசாவதாரத்தில், 'தெலுங்கை' ஐந்து விதமாகப் பேசுவார் என்று சொன்னதுபோல இருக்கிறதே. விரைவில் பகிருங்கள் (உணவே மருந்து-கொஞ்சம் இடைவெளிவிட்டே வருகிறது)// அது "தசாவதாரம்" படமா? "மரோ சரித்ரா" தெலுங்கு இல்லையோ? :))))

  சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை! உண்மை தான்! :) ஆன்மிகப் பயணம் பக்கம் எழுதுவதற்காகப் படிக்க வேண்டி இருக்கு! சில புத்தகங்கள் எங்கோ ஒளிந்திருக்கின்றன. கண்டு பிடிக்கணும்! :) இணையத்தில் முன்னாடி கோயிலொழுகு பத்திக் கிடைச்சது. இப்போ அந்தச் சுட்டியே கிடைக்க மாட்டேன் என்கிறது. தேடுவதில் நேரம் போய் விடுகிறது. அதோடு இன்னிக்கு இன்னொரு சகோதரருடன் சச்சிதானந்தம் பற்றிய பேச்சு முகநூலில்! :))))

  ReplyDelete