பப்பாளி விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு சமையலறைத் தொட்டி முற்றத்தின் அருகே வைத்தால் கொசுக்கள் வருவதில்லை எனக் கலிஃபோர்னியாவில் இருக்கும் ராஜம் அம்மா சொன்னார்கள். இந்தியாவிலும், தமிழ்நாட்டில், திருச்சி, ஶ்ரீரங்கத்தில் முயல்வோமே என முயன்றேன். நேற்று முன் கூடத்தில் வைத்தப்போவும் கொசுக்கள் வரவில்லை. இப்போ சமையலறைத் தொட்டி முற்றம் அருகே வைச்சிருக்கேன். சின்னச் சின்னதாகக் கூட்டமாக இருக்கும் கொசுக்கள் இல்லை! மற்றவர்களும் முயன்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். வேப்பெண்ணெயில் விளக்கு எரித்தாலும் கொசுக்கள் அண்டாது என்கிறார்கள்.
*********************************************************************************
ஶ்ரீவிஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அமர்ந்த வண்ணம் கண்களை மூடிக் கொண்டு தியானம் தான் செய்திருக்கிறார் என்பது அந்த வீடியோவை உன்னிப்பாய்ப் பார்த்தவர்களுக்குப் புரியும்! ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர்! தமிழ்த்தாயை அவமதித்து விட்டதாகச் சொல்கின்றனர்! எந்த பூஜை செய்தாலும், யாகங்கள், யக்ஞங்கள் செய்தாலும் அமர்ந்த வண்ணம் தான் செய்கிறோம்! இதனால் கடவுளை அவமதித்ததாகப் பொருள் ஆகிவிடுமா? என்னவோ போங்க! மறுபடி ஆரியன், திராவிடன் என்கிறார்கள். திராவிடம் என்பது ஓர் இனத்தைக் குறிப்பது அல்ல! அதே போல் ஆரியம் என்பதும் ஓர் இனத்தைக் குறிக்காது! பிராமணர்கள் மட்டும் தான் கைபர், போலன் கணவாய் வழி வந்தார்கள் எனில் அவங்க அவ்வளவு வீர, தீரமாகப் போரிட்டு திராவிடர்களைத் தெற்கே அனுப்பிட்டாங்களா? மாடு மேய்ச்சுட்டு வந்ததாகத் தானே சொல்வாங்க! அப்படி வந்தவங்க என்ன ஆயிரக்கணக்கிலா? லக்ஷக்கணக்கிலா? ஏதோ கொஞ்சம் பேர் வந்ததாகத் தானே சொல்வாங்க? அந்தக் கொஞ்சம் பேரைப் பார்த்துட்டு அத்தனை திராவிடர்களும் பயந்து தெற்கே ஓடி வந்துட்டாங்களா?
சரி, அதான் போகட்டும்.! ஆரியர்கள் வந்ததாகவே வைச்சுப்போம். எப்போ வந்தாங்க? தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுதறதுக்கு முன்னாடியா? பின்னாடியா? ஏன்னா தமிழர்கள் தான் இந்தியாவின் மூத்தகுடிமக்கள்! இந்தியா முழுமைக்கும் தமிழ் தான் பேசிட்டு இருந்தாங்க! ஆரியர்கள் வந்து தான் தெற்கே விரட்டிட்டாங்க என்கிறாங்க! தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரோ தொல்காப்பியர்! அதிலே என்னன்னா ஆரிய தெய்வங்கள்னு இவங்க சொல்லும் தெய்வங்கள் பத்திக் குறிப்பிடறார். ஆரிய கலாசாரத்தையும் சொல்றார்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)
இந்த மாயோன், சேயோன், வருணன் ஆகியோர் ஆரியரின் வழிபாட்டுத் தெய்வங்கள்! நாமோ தமிழர்! இந்த நாட்டின் மூத்த குடிமக்கள்! நம்ம மொழிக்கான இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் எப்படி இவங்களைக் குறிப்பிடுகிறார். அப்போ தொல்காப்பியருக்கு முன்னாடி ஆரியர்கள் வந்துட்டாங்களா? அல்லது தொல்காப்பியருக்கு அப்புறமா வந்தாங்களா? அல்லது தொல்காப்பியர் பிறக்கும்போதே இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துட்டாரோ? ஜந்தேகமா இருக்கே!
அதோடு இல்லாமல் வேதங்களில் சொல்லப்படும் எட்டுவகைத் திருமணங்கள் பத்தியும் தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கு! அது எப்பூடி? அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க்கலைக் களஞ்சியத்தில் இந்த எட்டுவகைத் திருமணங்கள் பற்றிச் சொல்லி இருக்காங்களே! பிராம்மம், தெய்விகம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகியன எட்டுவகைத் திருமணங்கள். இதிலே பிராம்மம் வகைத் திருமணங்களே அதிகம் நடைபெற்றதாகவும் தெரியுது! அது எல்லாம் வேதம் ஓதிச் செய்யப்படும் திருமணங்களாச்சே! அதிலேயும் கன்னிகாதானம் பற்றியும் சிறப்பாகச் சொல்லி இருக்காங்க! அது எப்பூடிங்க? ஆரியர்களின் இந்தப் பழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே தொல்காப்பியத்துக்கு வந்திருக்கு?
அதோடு இல்லாமல் முப்புரிநூல் எனப்படும் பூணூல், கமண்டலம், முக்கோல், பலகை போன்றவை அந்தணர்க்கு மட்டுமில்லாமல் அரசர்க்கும் உரியவை என்கிறாரே தொல்காப்பியர்! என்னங்க இது? அப்போத் தொல்காப்பியருக்கு முன்னாடியே ஆரியர் வந்துட்டாங்களா? அவங்க வந்து தான் நமக்கெல்லாம் மொழி அறிவே வந்துச்சோ? அப்படின்னா அதுக்கு முன்னாடி என்ன மொழி பேசினோம்? தொல்காப்பியருக்கு அப்புறமா ஆரியர் வந்தாங்கன்னா அவங்க பழக்கங்களெல்லாம் தொல்காப்பியருக்கு எப்படித் தெரிஞ்சுச்சு? மொழி அறிவே நமக்கு அப்புறமாத் தான் வந்ததா? அதுக்கு முன்னாடி? இல்லைனா தொல்காப்பியமே தப்போ? அப்போ இலக்கண மரபுகள்? அதுங்க கதி என்னாகும்? இந்த மரபியல்கள் எல்லாம் நமக்குக் காலம் காலமாத் தானே வந்திருக்கணும்? புதுசா ஏன் ஆரியர்கள் வந்தாங்க, திராவிடர்களைத் தெற்கே விரட்டி அடிச்சாங்க,அவங்க பழக்கங்களை நுழைச்சாங்கனு சொல்லிட்டு இருக்கணும். கொஞ்சமும் பொருந்தும்படியா இல்லையே! ஒண்ணு தொல்காப்பியம் பொய்யா இருக்கணும்! இல்லைனா ஆரியர்கள் தொல்காப்பியருக்கு முன்னாடியே வந்திருக்கணும்! அதான் ஆரியப் பழக்கங்களை எல்லாம் சொல்லி இருக்காரோ! :)))))) அவங்க மூலமாத் தான் நமக்கு மொழி அறிவும், இலக்கண, இலக்கியங்களின் லக்ஷணமும் புரிய ஆரம்பிச்சிருக்கணும்! :))))
என்னவோ போங்க! ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை!

கொசுவைப்பற்றிய விடயம் பயனளிக்குமா... என்று பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteexcellent
ReplyDeleteநன்றி உமாமஹேஸ்வரி!
Deleteஅவரு தேசிய கீதம் படும் போதும் இதே மாதிரி தியானத்தில் இருந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது
ReplyDeleteஅப்புறம் இந்த தமிழனெல்லாம் என்னாத்த செஞ்சி கிழிச்சான்னு பீத்துறானுங்கன்னே புரிய மாட்டேங்குது, இப்ப பாருங்க இதெல்லாத்தையும் கூட நீங்கெல்லாம் இங்கே வந்து தான் இவனுங்களுக்கு சொல்லி குடுத்திருக்கீங்க. என்னவோ போங்க ...
ராஜஶ்ரீ, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் என்று சட்டமே இருக்கிறது. அரசாணையின் நகலும் உள்ளது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் பாடப்படலாம் என்று தான் அரசாணை! எழுந்து நிற்கச் சொல்லி இல்லை. அதோடு இப்போது விஜயேந்திரர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியும் அல்ல! அங்கே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் இருந்திருந்தாலும் ஒன்றும் நடந்திருக்காது! ஆனால் அவங்க பாடினதும் இவர் தியானம் செய்ததும் தான் குற்றம்! இதே சம்ஸ்கிருத மந்திரங்களினால் ஆன வாழ்த்துப் பாடல் பாடி இருந்தாலும் அமர்ந்த வண்ணம் தியானம் செய்து கொண்டு தான் இருந்திருப்பார். எத்தனையோ தமிழ்நாட்டு மந்திரிகள் அரசு விழாக்களிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நின்றதில்லை! நேற்று திருமதி சுப்புலக்ஷ்மி ஜகதீசன் நிகழ்ச்சி முடியும் நேரம் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தப்பும் தவறுமாகப் பாடினார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன!
Deleteதிரை அரங்குகளில் தேசிய கீதம் போடவேண்டும், எழுந்து நிற்கவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னபோது அதை இங்கு எத்தனை பேர்கள் விமர்சனம் செய்தார்கள் என்று எடுத்துக் பாருங்களேன்.
Deleteஅவங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துப்பாங்க! :(
Deleteமிகவும் அருமை. பல புரிதல்களைக் கொண்ட பதிவு. இக்காலகட்டத்தில் எதுவுமே முன்னுக்குப் பின் முரணாகத்தான் நடக்கிறது என்பதே உண்மை.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா! இன்னும் விரிவாக எழுத ஆதாரங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். ஆனால்!!!!!!!!
Deleteகொசு இப்போதைக்கு மாலை ஆறு மணிக்கு முன் கதவை அடைந்துவிட்டால் வருவதில்லை. அப்படி வந்தால் அப்போது சேயென்று பப்பாளி விதைகள் வாங்கி வரவேண்டும்!!!
ReplyDelete//அப்போது சேயென்று // ?????????
Deleteஇங்கே நாலாவது மாடிக்கே கொசுக்கள் வரும்போது அங்கே வராமல் என்ன? இப்போ சமையலறையில் குறைஞ்சிருக்கு! :)
நன்றாக அலசி இருக்கிறீர்கள். வழக்கம் போல ஏகப்பட்ட விவரங்கள். ஆண்டாள் சர்ச்சையை திசை திருப்பவும், ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளவும் எழுப்பப் பட்டிருக்கும் பிரச்னை இது. இதில் இரண்டு பக்கமும் நியாயம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள்... கலைஞரே எழுந்து நிற்கவில்லை என்று ராஜா, குருமூர்த்தி போன்றோர் வீடியோ போடுகிறார்கள். என்ன இருந்தாலும் மொழி என்பது தெய்வம், யாராய் இருந்தாலும் எழுந்து நின்றிருக்க வேண்டும் என்று "நடுநிலைவாதிகள்" சொல்கிறார்கள். தேவை இல்லாமத பிரச்னை! ஜெயேந்திரர் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம்.
ReplyDeleteபஸ் கட்டண உயர்வு மற்றும் பற்றி எரியும் பிரச்னைகளை மறந்து விட்டு இவற்றில் ஆழ்ந்து விடலாம். பிரிட்டிஷ்காரன் கற்றுக் கொடுத்த பாடம்!
நன்றி ஶ்ரீராம். கோவை செம்மொழி மாநாட்டின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகையில் அப்போதைய முதலமைச்சர் எழுந்து நிற்கவில்லை. நிகழ்ச்சி முடிவின் போது தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்றிருக்கிறார். என்றாலும் விஜயேந்திரர் செய்தது தான் தப்பு! இல்லையா? தமிழை அவமதித்து விட்டார்! :))))))
Deleteஅடிக்கடி பப்பாளி வாங்குவதால் என்னிடம் பப்பாளி விதைகள் இருக்கின்றன ஆனால் என்ன நான் இருக்கும் இடத்தில் கொசுக்கலே இல்லையே இப்ப நான் அந்த விதைகளை என்ன செய்வது...?
ReplyDeleteவாங்க அவர்கள் உண்மைகள்! உங்க வீடு சொந்த வீடு தானே? தோட்டத்தில் விதைத்து விடுங்கள். பப்பாளி வரும்! :)))
Deleteதமிழ்தாய் வாழ்த்து பாடிய போது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதுபோல இதற்கும் எழுந்து நிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாததால் அமர்ந்தவாறே அதை கேட்டு மகிழ்ந்தேன் என்ற ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவர் மக்கள் மனதில் உயர்ந்து இருப்பார் இப்படி அவர் சொல்லி இருந்தால் மன்னிப்பு கூட கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.. அப்படி பேச அவரின் "அகந்தை" இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை அதுமட்டுமல்ல எழுந்து நிற்பது மரபு அல்ல என்று மடத்தார் அறிவித்ததும் தவறு என நினைக்கிறேன் அப்படியென்றால் தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நிற்பது சரியா என்ற கேள்வியும் எழுகிறது
ReplyDeleteநிச்சயம் அவர் அவமதிக்கும் என்ற நோக்கத்தில் உட்கார்ந்து இருக்க மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன் அவர் அறியாமையால்தான் அப்படி செய்து இருக்க வேண்டும் ஆனால் அதை ஒப்புக் கொள்ள அவர் மனம் இடம் கொடுக்கவில்லையோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது
இவர் தமிழ்தாய் வாழ்த்துபாடலை அவமத்திதார் என்று சொல்லும் பலபேர் தமிழையே அவமதித்து கொண்டுதான் தன் பிள்ளைகளுக்கு கூட தமிழை கற்றுக் கொடுக்காமல் இருக்கிறார்கள் அதை வெளியே சொன்னால் வெட்ககேடு
அவர்கள் உண்மைகள், இந்தக் குற்றச்சாட்டு எழுந்த உடனேயே அவரும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் சார்பில் மடமும் விளக்கம் கொடுத்திருக்கிறது. "அகந்தை" என்று சொல்வதை ஏற்க முடியாது! வைரமுத்து மன்னிப்புக் கேட்கவே இல்லை! அப்போ அவருக்கும் "அகந்தை" என்றால் ஏற்றுக் கொள்வார்களா? அதோடு விளக்கம் கொடுத்த பின்னரும் கத்திக் கொண்டே இருப்பவர்களிடம் என்னத்தைப் பேச முடியும்! அதான் பேசாமல் இருக்கிறார்கள்.
Deleteபப்பாளி விதை நல்ல ஐடியாவாயிருக்கே ! இனிமே ஊருக்கு போகும்போதுபப்பாளி விதைகளை படுக்கிற இடம் சுத்தி அவுட் லைன் போட்டுட்டு தான் தூங்குவேன் .தேடித்தேடி வந்து கடிக்குங்க நம்மூர் கொசுங்க அதுவும் கடிச்சா ரெண்டு மாசத்துக்கு மார்க் வச்சிடும் எனக்கும் பொண்ணுக்கும் .
ReplyDeleteவாங்க ஏஞ்சல்! எந்த ஊரில் சொல்றீங்க? இங்கே சென்னையில் கொசுக்கள் அதிகம் தான்! திருச்சியில் குறைச்சல் என்றாலும் எப்படியோ ஒன்றிரண்டு உள்ளே வந்து தொல்லை கொடுக்கும். நான் சொல்வது சின்னச் சின்னதாகக் கடுகு சைஸில் இருக்கும் சமையலறைக் கொசுக்கள்.
DeleteMadras akka .not in UK. Haven't seen mosquito's here :) spotted one or two in my our fish pond. But they don't come in side our house.
Deleteம்ம்ம்ம்ம் ஓகே! :)
Deleteகொசுத் தொல்லையில் இருந்து கீசாக்காவுக்கு விடுதலை கிடைச்சது மகிழ்ச்சி:)... என்னமோ தமிழெல்லாம் பேசுறீங்க.. இதுக்கு நெல்லைத்தமிழன் தான் பொருத்தமான ஆள்:)...
ReplyDeleteஆஹா அதிரடி, இதுக்குப் பேருதான் கழுவற மீனிலே நழுவற மீனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteவிஜயேந்திரர் எழுந்திரிப்பதும் எழுந்திருக்காமல் இருப்பதும் அவருடைய உரிமை. அதை குறை கூறுவது கூறுபவர்கள் உரிமை. இந்த சர்சையைப் பற்றி பதிவு எழுதுவதும் உங்களுடைய உரிமை. இந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டம் அல்லது விமரிசனம் செய்வது வாசிப்பவர்களுடைய உரிமை.
ReplyDeleteபிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் மிகவும் உன்னிப்பாக ஆராயப்படுகின்றன என்பது மட்டும் உண்மை. வாலு போயி கத்தி வந்தது. வைரமுத்து போயி விஜயேந்திரர் வந்தார்.
அடுத்து ஒரு பக்கோடா பதிவு எதிர்பார்க்கிறேன். (அதாங்க பிரதமர் பக்கோடா விக்க சொன்னாரில்லையோ )
Jayakumar
//அடுத்து ஒரு பக்கோடா பதிவு எதிர்பார்க்கிறேன். (அதாங்க பிரதமர் பக்கோடா விக்க சொன்னாரில்லையோ )// ஆமாம், அவர் சொன்னது தப்புத் தான்! இளைஞர்களை நேர விரயம் செய்யாமல் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்யுங்கனு சொல்லி இருக்கக் கூடாது தான்.
Deleteஇதையே காங்கிரஸ் பஜ்ஜி, சமோசா, தேநீர்க்கடை வைக்கலாம்னு சொல்லலாம். தப்பில்லை. திமுக கட்சியினர் பனையேறலாம் என்றும் சொல்லலாம். அதுவும் தப்பு இல்லை! எதுவுமே இப்போதைய மத்திய அரசும், பிரதமரும் சொன்னால் தான் தப்பு!
ஒரு காலத்தில் கல்லூரி இளைஞர்கள் சேர்ந்து கியோஸ்க் என்னும் தின்பண்டங்கள் விற்கும் கடைகளைச் சென்னை நகரில் ஆங்காங்கே கொண்டு வந்தார்கள்! நீங்கள் சென்னையில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும். நியாயமான விலைக்குப் பண்டங்கள் விற்கப் பட்டன! ஆக்கபூர்வமான செயலுக்குக் கூடக் கிண்டல்! ஹூம்! :(((((
Deleteநான் புரிந்துகொள்றது என்னன்னா, 'குஜராத்தி'களுக்கே உரித்தான, BUSINESS MINDல, எல்லோரையும் சுய தொழில் செய்யச் சொல்லியிருக்கார். 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்' என்று கவிமணி பாடியிருக்கார்னு நினைக்கறேன்.
Deleteஇப்போதெல்லாம் (இல்லை.. எப்போதுமே), சொல்றது என்ன என்பதைப் பார்ப்பதைவிட, யார் சொல்றா என்றுதான் மனித மனம் பார்க்கும்.
வாங்க நெ.த. இதைத் தான் கைத்தொழில் கற்க வேண்டும் என ராஜாஜி பாடத்திட்டத்தில் கொண்டு வந்ததைக் குலக்கல்வினு சொல்லி எதிர்ப்புத் தெரிவிச்சாங்க! இப்போ என்னன்னா பரம்பரை ஆசாரிகளோ, ஸ்தபதிகளோ, நாதஸ்வரக் காரங்களோ, நெசவாளர்களோ கிடைப்பதே அரிதாக இருக்கிறது. அதிலும் நாதஸ்வரக் கலை தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. பாரம்பரியமான கோயில்களில் இன்னும் வைச்சிருப்பதால் ஏதோ அங்கும் இங்குமாகச் சிலர்! :(
Deleteநன்றாக சொன்னீர்கள்
ReplyDeleteநன்றிங்க! புது வரவு?
Deleteபப்பாளி விதை கொசுக்களை வரவிடாமல் செய்யுமா? நல்ல செய்தியாச்சே. மனதில் குறித்துவைத்துக்கறேன்.
ReplyDeleteதமிழிசை போஸ்ட் காலியாகப்போகிறது. சும்மா ஜெனெரல் நாலட்ஜுக்கு உங்கள்ட சொன்னேன் கீசா மேடம்.
// தமிழிசை போஸ்ட் காலியாகப்போகிறது. சும்மா ஜெனெரல் நாலட்ஜுக்கு உங்கள்ட சொன்னேன் கீசா மேடம்.// நெ.த. நீங்களுமா?????????????????????????
Deleteஇங்கே மோதியைப் பத்தியோ, அரசைக் குறித்தோ எதுவுமே சொல்லவில்லை! அப்படியும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பின்னூட்டத்தை ஜாலியா எடுத்துக்கோங்க.
Deleteமுடிந்தவரை அரசியல் பின்னூட்டம் தரக்கூடாதுன்னு பார்க்கிறேன்.
கீ.சா மேடம்... தூங்கறவங்களை எப்போதும் எழுப்பலாம். தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எப்போதும் எழுப்பமுடியாது. எந்த இலக்கியங்களிலும், நம் அரசியலுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்தாள்வது அரசியல்வாதிகள் வேலை. அதனால் நீங்கள் எழுதியிருக்கறது, 'உண்மை' என்பதைத் தவிர, அதனால் எந்த விளைவும் வரப்போவதில்லை.
சரி... உங்களுக்கு அடுத்த இடுகைக்கு ஒரு கேள்வி. தாலி என்பதே வழக்கத்தில் கிடையாது. 'தாலம்' (பனையோலைக் குறுத்து) என்பதை அடையாளமாக கழுத்தில் பழந்தமிழர் கட்டிக்கொள்வதே 'தாலி' என்ற வழக்கமாக பின்னால் மாறியது. 'வாரணமாயிரம்' (அதே ஆண்டாள்தான்) பாடலில், 'கைத்தலம் பற்ற' என்பதோடு திருமணம் முடிஞ்சுடுது. அங்கே 'தாலி' என்ற வழக்கம் இல்லை. இலக்கியங்களிலும் அதைப் பற்றி எதுவும் இல்லை என்று சொல்வதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க. அதுக்கு ஏதாகிலும் ஆதாரம் இருக்கா? இல்லை அதைப்பற்றி முன்னமேயே எழுதியிருக்கீங்களா?
//முடிந்தவரை அரசியல் பின்னூட்டம் தரக்கூடாதுன்னு பார்க்கிறேன்.//
Deleteநெல்லைத்தமிழன் இது தவறு... உங்கள் மனதில் நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள் கருத்துக்கள் என்றுமே ஒத்துப் போகனும் என்று கருத வேண்டாம்...மாறித்தான் இருக்கும்..
புரிந்துணர்வு இருந்தால் போதும் .அப்படி கருதிதான் கீதாம்மா தளத்தில் நான் கருத்துக்கள் சொல்லுகிறேன்.அவர்கள் மாற்றுக் கருத்துக்கள் சொன்னால் அது எனக்கு ஏற்புடையதாக் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் அப்படி இல்லையென்றால் அமைதியாக சென்று விடுவேன் அவ்வளவுதான் அதனால் அவரை எல்லாம் தப்பா எடுத்து கொள்ளவே மாட்டேன்
எனது அரசியல் பதிவுகளில் எல்லோரையும் கலாய்த்து பதிவுகள் எழுதுகிறேன் ஆனால் தற்போது மோடி எதிர்ப்பு அல்லது கலாய்ப்பு அதிகம் இருக்கும் காரணம் இந்தியாவை ஆள்வது அவர்தான் எனது பழைய பதிவுகளை பார்த்தால் மன்மோகன் சிங் கலைஞர் ஜெயலலிதா ஸ்டாலின் மேலும் பல தலைவர்களையும் கலாய்த்து/எதிர்த்து எழுதி இருக்கிறேன்
அதனால் சொல்லுகிறேன் உங்கள் மனதில் இருப்பதை தோன்றுவதை தைரியமாக சொல்லுங்கள்..புரிந்துணர்வு உள்ளவர்கள் தப்பாக எடுத்து கொள்ளமாட்டார்கள் இல்லாதவர்கள் பற்றி நாம் கவலைக் கொள்ள தேவையில்லை.
கீதாம்மா நான் சொலவது சரிதானே நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்
நெ.த. நான் கோவிக்கவெல்லாம் இல்லை. நேற்றுக் கொஞ்சம் மனநிலையும் சரியில்லாமல் இருந்தது. அதோடு உங்கள் கருத்தையும் பார்த்து வருத்தம் வந்தது! அப்புறமாத் தாலி பற்றி எல்லாம் இப்போ எதுவும் எழுதப் போவதில்லை! திருமாங்கல்யத்தைப் பரமேஸ்வரன் பார்வதிக்கு அணிவித்ததாக சௌந்தரிய லஹரியில்/ லலிதா சஹஸ்ரநாமத்திலும் வரும். அந்தத் திருமாங்கல்யத்தின் அடையாளமாகத் தான் அம்பிகையின் கழுத்தில் உள்ள மூன்று கோடுகள் என சௌந்தரிய லஹரியில் ஆதிசங்கரர் குறிப்பிட்டு இருப்பதாக தெய்வத்தின் குரலில் படித்திருக்கிறேன்.
Deleteஅவர்கள் உண்மைகள். நெ.த.வுக்கு அரசியல் கருத்துக்கள் சொல்வதில் மனத்தடை இருந்தால் அதனால் என்ன? அது அவர் விருப்பம்! மற்றபடி மாற்றுக்கருத்துக்களை எந்த விஷயத்திலும் நான் எப்போவும் வரவேற்கிறேன். ஆகவே நீங்கள் எவ்விதமான மனத்தடையுமின்றி உங்கள் கருத்துகளைப் பதியலாம்.
Deleteமொழிக்குப் பின் இலக்கணமா இலக்கந்த்துக்குப் பொஇன் மொழியா தொல்காப்பியர் பற்றி பைத்ததால் இந்தக் கேள்வி ஆரியர் திராவிடர் கள் யார் யாரென்பதுமிகவும் சர்ச்சைக்கு உரிய விஷயம் விஜயேந்திரர் செய்ததை ஒப்புக் கொள்ள முடியாது அதற்காக இங்கு கர்நாடகாவில் ஒரு முறை கவர்னர்தேசியகீதம் பாடும் போது இடத்தைக் காலி பண்ணினார் என்பது சரியாகுமா எல்லாமே ஏட்டிக்கு போட்டியாக நினைப்பதில்தாந்தவறு
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார் பிரச்னை தேசிய கீதத்தினால் இல்லை! தமிழ்த்தாய் வாழ்த்தில்! அது பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்னும் அரசாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை!
Delete’’..ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை! ’’ -என்று முடித்திருந்தாலும், ஏகப்பட்டதை சொல்லி, மேற்கோள் எல்லாம் காட்டி, ஜந்தேகத்தையெல்லாம் கிளப்பியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஆனாப் பாருங்க ’தமிழ்’ என்று தன் தாய்மொழியின் பெயரை சுத்தமாக உச்சரிக்கக்கூட நாக்கு வளையாதவய்ங்க, அதப்பத்திக் கவலகூடப்படாதவய்ங்கதான், ஆத்திச்சூடியைத் தாண்டி கொன்றை வேந்தன் வரக்கூடப் போகாதவய்ங்கதான், தமிள்நாட்டில இப்போதைக்கு அதிகம். அவிங்க பேசுறதுதான் பேச்சு. எந்த விசயத்தப்பத்தியும் அவிங்க சொல்றதுதாங்க கருத்து..அதாங்க சரி..
திருக்குறள பஸ்லயெல்லாம் எளுதிப்போட்டுமே எதுவும் மாறலயே தமிள்நாட்டுல.. கவனீச்சீங்களா? அப்பிடி இருக்கயில, தொல்காப்பியம், குண்டலகேசிலலாம் என்ன எளுதியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு என்னங்க ஆகப்போகுது.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீகளே?
வாங்க ஏகாந்தன் சார், அதிகமா ஜிந்திக்கிறேன்னு நம்ம ரங்க்ஸ் சொல்றாரு! அதான் இல்லாத ஜந்தேகமெல்லாம் வருது! மற்றபடி இன்னும் குண்டலகேசிக்குப் போகலை! :)))) அதுவும் போயிடுவோம்!
Deleteஎன்ன! பப்பாளி விதையைக்கண்டா கொசுவுக்கு அலர்ஜியா! இந்த முக்கியமான விஷயம் ஜனங்களுக்குத் தெரியவிடாம சதி பண்ணிட்டாங்களே. போதாக்குறைக்கு, கொசுவர்த்திச்சுருள், ஓடோமாஸ், ஆல்-அவுட், குட்நைட் என்றெல்லாம் சொல்லி அப்பாவி மக்களின் காசைவேறு பறித்துக்கொண்டிருக்கிறார்களே நாட்டில்..
ReplyDeleteஇந்த அளவுக்கா சதில்லாம் பண்றாரு அந்த ஆளு? அதாங்க, அந்த மோடி..?
ஹெஹெஹெ, இன்னிக்குக் காயந்த விதைகளை அகற்றியதும் கொசுவார் படை எடுத்து விட்டார்! ஆனால் வேப்பெண்ணெய்க்கும் மாம்பூவைக் கொளுத்தி வைத்தாலும் கொசுக்கள் வருவதில்லை. :))))
Delete@ஏகாந்தன் சார் - // இந்த முக்கியமான விஷயம் ஜனங்களுக்குத் தெரியவிடாம சதி பண்ணிட்டாங்களே.// - எனக்கு சந்தேகம் என்னன்னா, இந்த விஷயம் கொசுக்களுக்குத் தெரியுமா? நான் முயற்சி பண்ணிப் பார்த்துட்டுத்தான் சொல்லமுடியும். ஆனால் எங்க ஊரில் (வெளியூர்) கொசுக்களே கிடையாது. சென்னை வரும்போதுதான் முயற்சிக்கணும்.
Delete@ கீதா சாம்பசிவம்:
ReplyDeleteமாம்பூவுமா இந்த லிஸ்ட்டுல? வேப்பெண்ணெய்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிராமத்துக்கிழவிகள் தாராளமாக தலையிலும் உடம்பிலும் பூசிக்கொண்டு தூங்குவார்கள் ஆனந்தமாக! வேறென்ன - ஒரு இருபதடிக்கு பக்கத்தில ஒருத்தரும் நெருங்கமுடியாது..
@நெல்லைத்தமிழன்:
சரிதான். சென்னைதான் ஹாட்-ஸ்பாட் சோதனைக்களம். இயற்கைகூட ஒவ்வொரு வருஷமும் டிசம்பர்வாக்கில சென்னைக்கு வந்து எதெதையோ சோதிச்சுட்டுப்போறதா சொல்றாங்க..!
ஆமாம், மாம்பூக்களும் இந்த லிஸ்ட்லே உண்டு! வேப்பெண்ணெயை உடம்பில் தடவிக்கொண்டெல்லாம் இருக்க வேண்டாம். அகலில் வேப்பெண்ணெயை ஊற்றித் திரி போட்டு எரித்தால் போதுமானது! :)))))
Deleteபப்பாளி விதை கொசுக்களை விரட்டுகிறது என்பது புதிய தகவல். பயன்படுத்திப் பார்க்கணும். எங்கள் வீட்டில் கொசுக்கள் மட்டுமல்ல பல பூச்சிகளும் வரும் வீடு சுற்றித் தோட்டம் என்பதால். வீடுகள் ரொம்பக் குறைவு. நிறைய மரங்கள், செடிகள்தான்...
ReplyDeleteதமிழ்நாட்டில் அரசியல் ரொம்பவும் மோசமாகப் போகிறதோ என்றுதான் எண்ண வைக்கிறது.
கீதா: கீதாக்கா எங்கள் வீட்டில் மாம்பூவும், வேப்பெண்ணையும் பயன்படுத்துகிறோம் கொசு விரட்ட. பப்பாளி விதை இனி சேகரிச்சுட்டா போச்சு. வாங்கும் சமயத்துல. ஆனா இப்பல்லாம் பப்பாளில விதைகளே பல சமயத்துல இல்லையே!!
அப்புறம் மக்களுக்கு வேற வேலையே இல்லை. நான் வர ஞாயிறு மகனின் நண்பனின் கல்யாணத்துக்கு பாண்டிச்சேரி போகணுமே....டிக்கெட் 200 போவதற்கு மட்டுமே...வர 200 என்று ஆகப் போகுதேனு யோசித்துக் கொண்டிருக்கேன்..டபுள் விலை கூடியிருக்கு....அதிலும் இருவர் என்றால்.....ஆ!!! இதுல இந்தச் சண்டையை எல்லாம் இப்ப நினைக்க முடியலை...
வாங்க துளசிதரன், தமிழ்நாட்டு அரசியல் இதை விட மோசமாகப் போவதற்கு எதுவும் இல்லை! :((((
Deleteகீதா, பப்பாளி ஹைபிரிட் என்றால் விதைகள் இருக்காது. நாட்டுப் பப்பாளி எனில் விதைகளோடு வரும். பார்த்து வாங்கணும்! ரொம்பப் பெரிசா அழுத்தமா இருந்தால் அநேகமா ஹைபிரிட் தான்!