ஜீரகம் ரசம் மிகவும் பெயர் போன ஒன்று. இதை மூன்று நான்கு விதங்களில் தயாரிக்கலாம்.
முதல்முறை
ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுப் புளி. சிறிய தக்காளி ஒன்று,
ரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு! பெருங்காயம்(தேவையானால்). ஜீரகம் போட்டால் சிலர் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.
அரைக்க:- ஒரு சின்ன மிளகாய் வற்றல், இரண்டு டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன். மி.வத்தல், ஜீரகம், துபருப்பு ஆகியவற்றை நன்கு ஊற வைத்துக் கருகப்பிலையுடன் சேர்த்து மிக்சியில் அல்லது அம்மியில் நன்கு அரைக்கவும்.
தாளிக்க: நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, சின்ன மி.வத்தல்
மேலே சொன்ன அளவுப்படி புளிக்கரைசலைத் தக்காளி, உப்பு, ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அரைத்த கலவையை மேலும் கொஞ்சம் நீர் விட்டுக் கலக்கி ரசத்தில் விட்டு தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும். மேலே பொங்கி வருகையில் நுரையை எடுத்துவிடவும். நுரை இருந்தால் ரசம் கெட்டியாகக் குழம்பு போல் இருக்கும். அப்படி இருந்தால் பிடிக்குமெனில் அப்படியே வைச்சுக்கலாம். ரசம் தெளிவாக வேண்டுமெனில் நுரையை எடுத்தால் தான் நல்லது. பின்னர் நெய்யில் கடுகு, கருகப்பிலை ஒரு சிறு மி.வத்தல் போட்டுத் தாளிக்கவும்.
இன்னொரு முறை:
அதே அளவுப் புளி, உப்பு, தக்காளி எடுத்துக்கொள்ளவும். பெருங்காயம் தேவை எனில் சேர்க்கவும். ஆனால் ரசப்பொடி போட வேண்டாம்.
மி.வத்தல் ஒன்று, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒன்றரை டீஸ்பூன் ஜீரகம், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், கருகப்பிலை எடுத்துக் கொண்டு முதலில் சொன்ன பொருட்களை நீரில் ஊற வைத்துக் கொண்டு கருகப்பிலை சேர்த்து அரைக்கவும். புளிக் கரைசல், உப்பு, தக்காளி சேர்த்துப் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதில் நீர் விட்டுத் தேவையான அளவுக்கு விளாவவும். இதற்கும் நுரையை எடுக்கலாம். எடுக்காமலும் பயன்படுத்தலாம். பின்னர் மேலே சொன்ன மாதிரி நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, மி.வத்தல் தாளிக்கவும்.
இன்னொரு முறை புளிக்கரைசலில் உப்புச் சேர்த்து ரசப்பொடி சேர்த்துப் பெருங்காயம் போட்டுக் கொதிக்க விடவும். பின்னர் அரைத் தக்காளியுடன் டீஸ்பூன் ஜீரகம், பத்து மிளகு சேர்த்துக் கொண்டுக் கருகப்பிலையுடன் அரைத்து ரசத்தில் சேர்த்து விளாவவும். நெய்யில் தாளிக்கலாம். மிளகு, ஜீரகம் அரைத்த ரசம் ஏற்கெனவே மிளகு பதிவில் வந்து விட்டது.
இப்போ நம்ம வெங்கடேஷ் பட் சொன்ன உடுப்பி ரசம் பத்திப் பார்ப்போம். இதிலும் சீரகம் தான் சேர்க்கிறார். ஆனால் அளவு எல்லாம் இருக்கு! மேலும் இதற்காகப் பயன்படுத்தும் மிளகாய் வற்றலும் மங்களூர் வற்றல் என்றார். அதாவது காய்ந்த மிளகாய் கொஞ்சம் சுருங்கிக் காணப்படுமே அது தேவை! அல்லது காஷ்மீர் மிளகாய் எனப் பெரிய பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும். அதைப் பயன்படுத்திக்கலாம். இதுவும் கிட்டத்தட்ட ஜீரக ரசமே! ஆகையால் தான் இங்கே போடுகிறேன். முந்தாநாள் செய்து பார்த்தேன். நல்ல தெளிவாக ரசம் இருந்தது.
நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இங்கே எழுதுகிறேன்.
காஷ்மீர் மிளகாய் வற்றல் 4
தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
ஜீரகம் ஒன்றரை டீஸ்பூன்
கருகப்பிலை ஒரு கைப்பிடி இவற்றை
வறுக்க தே.எண்ணெய் தேவையான அளவு. மேலே சொன்னவற்றை ஒவ்வொன்றாக நிதானமாக வறுத்துக் கொண்டு ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும்.
தாளிக்க
நெய் அல்லது தே.எண்ணெய்
கடுகு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை
ரசம் செய்யத் தேவையான பொருட்கள்
தக்காளி நடுத்தரமாக ஒன்று
புளிக்கரைசல் அரைக்கிண்ணம்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
பெருங்காயம் கால் டீஸ்பூன் அல்லது ஒரு துண்டு பெருங்காயக் கட்டி
பச்சை மிளகாய் தேவையானால் நடுவில் கீறிக்கொள்ளவும். இந்த அளவு ரசத்துக்கு ஒன்று போதும்.
கொத்துமல்லித் தழை
வெல்லம் தூளாக இரண்டு டீஸ்பூன் (நான் வெல்லம் சேர்க்கவில்லை. ரங்க்ஸுக்கு சர்க்கரை என்பதோடு வெல்லம் சேர்த்தால் அந்த ருசியும் பிடிக்கிறதில்லை)
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பெருங்காயம் சேர்க்கவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தே.எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துத் தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்பு பருப்புக் கரைசலைக் கொஞ்சம் ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும். மீதம் இருக்கும் பருப்புக் கரைசலில் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றவும். பொடி போட்டதும் ரசம் அதிகம் கொதிக்கக் கூடாது. கீழே இறக்கியதும் கொத்துமல்லித் தழை தூவவும்.
சாதாரணமாக ரசத்துக்குக் கடைசியில் தான் தாளிதம் சேர்ப்போம். இங்கே ரசம் கொதிக்கையிலேயே தாளிதம் செய்து சேர்க்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் முதலில் தாளிதம் செய்து கொண்டு தான் வெங்கடேஷ் பட் அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்தார். இதுவும் ஒரு வகை ஜீரக ரசமே!

பி.கு. இன்னிக்கு வேறே சூடான பதிவு எழுதி வைச்சிருக்கேன். ஆனால் நெ.த. ஜீரகம் பதிவில் (சாப்பிடலாம் வாங்க) போய் ரச வகைகளைப் பார்க்கவே இல்லை என்பதை இப்போத் தான் கவனிச்சேன். அதனால் உடனே இங்கே போட்டிருக்கேன். இன்னிக்குக் கூட ஜீரக ரசம் தான் வைச்சேன். ஆனால் பதிவு போடப் போவது தெரியாததால் படம் எடுக்கலை! முதல் முறையில் செய்திருந்தேன்.
வர வர "எண்ணங்கள்" வலைப்பக்கம் சமையல் பக்கமாய் மாறிடுமோ! தெரியலை!
எல்லாம் சரி நெ.த.வுக்காக... என்றால் நாங்கள் செய்து பார்க்க கூடாதா ???
ReplyDeleteஹாஹாஹா கில்லர்ஜி! நீங்களும் செய்து பார்க்கலாமே! அவர் கேட்டதினால் அவ்ர் பெயரைப் போட்டேன்! :) உங்க ஊர்ச் சமையல் தான் உலகப் பிரசித்தி ஆயிற்றே! வெள்ளைப்பணியாரமும். குழி அப்பமும் போதுமே!
Deleteபார்த்துக்கொண்டேன். ஏற்கனவே சொல்லிருக்கேன். ஒவ்வொன்றையும் படத்துடன் போட்டால், காலா காலத்துக்கும் இணையத்தில் உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது செய்துபார்க்கிறேன் (அதுவும் உடுப்பி முறைல). மிக்க நன்றி.
நெ.த. இன்னிக்குச் சூடான பதிவு வந்திருக்கணும்! :) திடீர்னு மாத்தினேன்! அதைக் கொஞ்சம் எடிட் பண்ணணுமோனு நிறுத்திட்டேன். அதனால் இன்னிக்கு ரசம் படம் எடுக்கலை! பின்னர் எடுக்கும்போது சேர்க்கணும். இவை எல்லாம் சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் இருக்கு! சுட்டி கொடுத்திருக்கேனே!
Deleteமுதல் முதல்ல, உங்க சமையல் குறிப்புகளையெல்லாம், காப்பி பேஸ்ட் பண்ணி ஒரு டாகுமென்ட் தயாரித்தேன் (இரு வருடங்களுக்கு முன்). அந்த சமயத்துல ராக்ஸ் கிச்சனையும் பார்ப்பேன், ஆனா அவங்க செய்முறை எங்களுடைய முறைக்கு மாறானது. அதனால உங்க செய்முறையைப் பார்த்துக்குவேன். மிக்க நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.
ReplyDeleteநன்றி நெ.த. நான் அர்ச்சனா'ஸ் கிச்சனும், ஹெப்பார் கிச்சனும் பார்ப்பேன். ராக்ஸ் பார்த்தது இல்லை. அவங்களோடதையும் போய்ப் பார்க்கிறேன். முகநூலில் பிராமின்ஸ் போஜன் என்னும் குழுமத்தில் எல்லா ஊர்ச் சமையலும் பகிரப்படுகிறது.
Deleteநான் பல தளங்கள் பார்ப்பதுண்டு..நீங்கள் குறிப்பிட்டிருப்பதும்..ராக்ஸ் கிச்சனும்....வெஜிட்டேரியன் ரெசிப்பிஸ் என்றால்...அது போல எக்லெஸ் பேக்கிங்க் மதுரம்ஸ் தளம் ரொம்ப நல்லாருக்கும். அதிலும் சில மாற்றங்கள் செய்து செய்வதுண்டு ஏனென்றால் அது அமெரிக்காவில் இந்தியரின் தளம்...நமக்கு சிலது இங்கு கிடைப்பது கஷ்டம்...கிடைத்தாலும் விலை கூடுதலாக இருக்கும் என்பதால்..
Deleteஊர் ஊராகச் சென்றதால் ஒவ்வொரு ஊரிலும் நட்பு வட்டத்திலும், உறவினர்களிடமும் கற்றுக் கொண்டவை நிறைய...
கீதா
நெத போட்டியாக இன்னும்பல ரசவகைகள் எழுதலாம் சாதாரணமாக செய்யாத வகைகள் எழுதலாமே
ReplyDeleteஆமாம், ஐயா, எழுதலாம். என்னிடமும் இன்னும் நிறைய ரச வகைகளின் குறிப்புகள் உள்ளன.
Deleteவாவ் !!எனக்கும் ரசம் விதவிதமா செய்ய ஆசை .எங்க வீட்ல ரசம் ரசிகை இருக்கா :) எப்பவும் ரஸம்சாதம் கேட்பா :)
ReplyDeleteநான் இதுவரைக்கும் நுரை வந்ததும் இறக்குவேன் ஆனா நுரையை எடுத்து போட்டதில்லை ..எதுக்கும் இனிமே ட்ரை பண்ணிப்பார்க்கிறேன் .எங்க ஊரில் காஷ்மீரிசில்லி கிடைக்குது .வீட்டிலும் இருக்கு ஆனா எப்பவும் ரசத்துக்கு பருப்புக்கும் தாளிக்க குட்டி குண்டு ப்ளம் சில்லி னு சொல்வாங்களே அந்த குண்டு மிளகாய்தான் யூஸ் பண்ணுவேன் .இந்த வெல்ல த்துண்டு போடற பழக்கம் எழுத்தாளர் அனுராதா ரமணன் சொல்லியதை பிடிச்சி நானும் செய்வேன் .எனக்கு ரசத்தை பெரிய கார்ன் ப்ளெக்ஸ் பவுலில் போட்டு சுடசுட அப்பளம் உடைச்சிப்போட்டு குடிக்க ஆசை :)
வாங்க ஏஞ்சல்! செய்து பாருங்க. ஆனால் எல்லா ரசங்களிலும் நான் நுரையை எடுப்பதில்லை. ஜீரக ரசத்தில் மட்டும்! துவரம்பருப்பு ஊற வைத்து அரைப்பதால் கெட்டியாக ஆகிவிடுமோ என்று எடுப்பேன்.
Deleteதுளசி : எனக்கு ரஸம் ரொம்பப் பிடிக்கும். என்ன செய்தாலும் எங்கள் வீட்டில் எனக்கு மட்டும் என்று என் அக்கா ரஸம் வைப்பார்கள். பூண்டு போட்டு வைப்பார்கள். ரசம் மணக்கிறது. உணவுப் பதிவுக்குப் பொதுவாக வராத நான் வந்துவிட்டேன் ரஸம் என்றவுடன். அது போல இன்று வெங்கட்ஜியின் பதிவிலும் பாலட என்றதும் வந்துவிட்டேன்...
ReplyDeleteகீதா: கீதாக்கா முதல் இரண்டாவது முறைகள் எல்லாம் மாமியார், என் பாட்டி, உறவினர் என்று ..
என் பாட்டி மற்றொரு முறையும் செய்வார். புளி, தக்காளி கொதிக்கவிட்டு, பச்சையாக து ப ஜீரகம் மிளகு சின்ன மிளகாய் வத்தல் ஜீரகம் கொஞ்சம் தூக்கலாக பொடித்து போட்டு ஒரு கொதித்ததும் விளாவி நுரைக்கவிட்டு என்று செய்வார்...
செய்து பார்க்க வேண்டியது உடுப்பி ரஸம் தான் ரொம்ப நன்றி அக்கா உடுப்பி ரஸம் கொடுத்தமைக்கு...குறித்த்க் கொண்டு விட்டேன் நாளையெ செய்து விடுகிறேன்...
வாங்க துளசி, நீண்ட நாட்கள் கழிச்சு வருகை தந்தமைக்கும் ரசம் பற்றிய கருத்துக்கும் நன்றி.
Deleteகீதா! நீங்க சொல்லி இருக்கும் துவரம்பருப்பு, ஜீரகம், மிளகு, மிவத்தல் பச்சையாகப் பொடி செய்து எப்போதும் கைவசம் இருக்கும். தினசரி ரசத்துக்குக் கீழே இறக்கும்போது அரை டீஸ்பூன் போடுவேன். ரசம் மாற்றிச் செய்கையில் முழுக்க இந்தப் பொடியே போட்டும் பண்ணுவேன். உடுப்பி ரசமும் நன்றாகவே இருக்கு!
ஓ ஒகே அக்கா சூப்பர்..நானும் ரெடியா வைச்சுருப்பேன் இப்படியான ரெசிப்பிஸ்
Deleteஅக்கா உடுப்பி ரசம் செஞ்சுட்டேனே இன்று...உங்களுக்கு வாட்சப்புல படம் அனுப்பிருக்கேன்...கலர் கிட்டத்தட்ட பங்களூர் ரசம் போல இருக்கு...மாமியார் செய்வாங்க...மைசூர் ரஸமும் செய்வாங்க அப்ப அளவு எல்லாம் தெரியாது ஏன்னா அவங்க அப்படியெ சும்மா செய்வாங்க நானும் அப்படியேதான் அப்புறம் எதோ ஒரு மாகசின்ல மங்கையர்மலர்னு நினைக்கறென்...அந்த அளவைக் குறித்துக் கொண்டு செய்வேன்...திங்கக்கு வரும்.....
ரொம்ப தாங்கஸ் அக்கா உடுப்பி ரச ரெசிப்பிக்கு..நல்லாருக்கு...எங்க வீட்டுல போணியாச்சு...
கீதா
வாங்க கீதா, நானும் இன்னிக்கு உடுப்பி ரசம் தான் செய்தேன். நல்லா இருந்தது. ஆனால் அவருக்குக் கொஞ்சம் காரம் வேணும்னு சொன்னார்! :)
Delete//ஆனால் பதிவு போடப் போவது தெரியாததால் படம் எடுக்கலை!//
ReplyDeleteநொ கு ச வி சா!
ஹாஹாஹா! அப்படி எல்லாம் இல்லை நிஜம்மாவே முதலில் தோணலை! நேற்று ஆயிரக்கால் மண்டபத்தில் நம்பெருமாளையாவது போய்ப் பார்க்கலாம், திருவிழா முடியப் போகிறதே என்று போகத் திட்டம்! அதனால் கணினியில் உட்காருவேன் மதியம் என முதலில் நினைக்கவில்லை. ஒரு அரை மணி நேரம் கிடைக்கவே அவசரம் அவசரமாப் பதிவுகளைக் காப்பி,பேஸ்ட் செய்துட்டுப் போயிட்டேன். :)))))
Deleteஎத்தனை விதமான ரெசிப்பி? ஆனாலும் கிட்டத்தட்ட ஒரே ரகம்தான். மொ தா கு வி அல்லது கு பூ வி பா போல நாங்கள் ஒரே மாதிரி ரசம் செய்து கொண்டிருக்கிறோம்!!
ReplyDeleteநான் தினம் தினம் சமையலே ஒரே மாதிரி சாம்பார், வத்தக்குழம்புனு பண்ண மாட்டேன். வாரம் ஒரு நாள் கிழமையைப் பொறுத்து கலந்த சாத வகைகளும் இருக்கும். வெள்ளிக்கிழமை எனில் எலுமிச்சை சாதம், சனிக்கிழமைன்னா புளியஞ்சாதம் அல்லது எள்ளுச் சாதம்னு பண்ணுவேன். நடுவில் என்னிக்கானும் ஓர் நாள் தால், ரொட்டியும் இருக்கும்! அன்னிக்கு ஏதேனும் கறி பண்ணிக் கொஞ்சமா கொட்டு ரசம் வைப்பேன்.
Deleteஹை அக்கா மீ டூ...ஆனா கிழமை எல்லாம் பாக்கறது இல்லை...பட் எல்லா மாநில சமையலும் இடம் பெறும் மாற்ரி மாற்றி...
Deleteகீதா
சனிக்கிழமைகளில் எள் சாதம் பண்ணினால் சனைச்வரனுக்குப் ப்ரீதி என்பார்கள். அதான்! வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு எலுமிச்சையில் நிவேதனம் செய்வது நல்லது. சனிக்கிழமை சில சமயங்களில் தயிர்சாதம் கூடப் பண்ணலாம். ஆஞ்சநேயருக்குச் செய்வோம்.
Deleteகுறித்து வைத்துக் கொள்கிறேன். ஏதோ உடனே செய்து பார்த்து விடுகிற மாதிரி!! நான் என்ன நெல்லைத்தமிழனா? உடனே உடனே எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்க? நான் ஒரு வாபசோ!
ReplyDeleteஹிஹிஹி, ஶ்ரீராம், இது ஒண்ணும் அப்படி எல்லாம் கஷ்டம் இல்லை! சிஸ்டத்தை மாத்தணுமாக்கும்!
Deleteஆஹா, நானும் தலைவி தான் என்பதை நிரூபிச்சுட்டேனே! ஹையா, ஜாலி!
ஆஹா அக்கா எப்போ நீங்க தலைவி போஸ்ட்டுக்குப் போனீங்க....சரி சரி வாங்க இங்க ஒரு கூட்டமே இருக்காக்கும்!! கூவிடுவோம்ல!!! எங்கள் தலைவி வாழ்கனு!! ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
கீதா சாம்பசிவம் மேடம் - நீங்க எல்லாருடைய எழுத்தையும் கெடுக்க (சோம்பேறியாக்குவது) ஆரம்பிச்சுட்டீங்க. நொண்டிக் குதிரைக்கு சறுக்கி விழுந்தது சாக்கு, வாழைப்பழ சோம்பேறி. ஆமாம்..மொதாகுவி, குபூவிபா கண்டுபிடிக்கணும்.
Deleteஹிஹிஹி, கீதா, என்னோட ஆரம்பகாலப் பதிவுகளைப் போய்ப் பாருங்க! நான் 2005 ஆம் ஆண்டில் இணையத்துக்குள் நுழையறச்சேயே "தலைவி"யாகத் தான் நுழைஞ்சேனாக்கும்! இதெல்லாம் என்ன ஜுஜுபி! நமக்கு நாமே திட்டம் தானே! என்னோட மூணு பிறந்த நாள் (ஹிஹிஹி, சர்டிஃபிகேட் படிப் பிறந்த நாள் ஒண்ணு! ஒரிஜினல் பிறந்த தேதி ஆங்கிலத் தேதி ஒண்ணு, நக்ஷத்திரப் பிறந்தநாள்) ஆக மூணையும் ஒண்ணாச் சேர்த்து முப்பெரும் விழாவெல்லாம் கொண்டாடி இருக்கோம்! என்ன நீங்க வலை உலகச் சரித்திரமே தெரியலை! :))))))
Deleteஹிஹிஹிஹிஹிஹிஹி, நெ.த. திட்டாதீங்க! :))))) அப்படியே அபுரிக்கும் புதசெவிக்கும் விரிவாக்கம் கண்டுபிடிங்க! முடியுதானு பார்க்கலாம்! நான் சொல்லவே மாட்டேனே!
Deleteஹா ஹா ஹா அக்கா எண்ணங்கள் சமையல் பக்கமா மாறிடுமோ நு பயமா...
ReplyDeleteதிங்க மொசுக்கீட்டர்ஸ் இருக்கும் போது போடாம இருக்க முடியுமா...ஹா ஹா ஹா
கீதா
கீதா
தில்லையகத்து கீதா!ம்ம்ம், ஆனாலும் இது ஏற்கெனவே சாப்பிடலாம் வாங்க! வலைப்பக்கம் பகிர்ந்தவையே! :)
Deleteகீதாக்கா உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் என் பக்கம் வந்து பாருங்க
ReplyDeleteவரேன், வரேன், கண்டிப்பா வரேன்.
Deleteஆஹா ரசத்தை வைத்து மூன்று பக்க ஸ்டோரி எழுதி ஒரு பதிவாக்கிட்டா கீதாக்கா..
ReplyDeleteமுதல் செய்முறை எனக்கு நன்கு பிடிச்சிருக்கு.. பார்க்கலாம் ஒரு நாளைக்கு செய்து.
நாங்க ரசத்தில் பருப்பு வகைகள் சேர்க்க மாட்டோம்..
ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் வெரி சோரி ரசங்கள்:)..
ஹெஹெஹெ அதிராமியாவ்! ரசம் பருப்பு ரசம்னால் நான் பருப்பை நன்கு குழைய வேக வைத்துக் கரைத்து மேலே இருக்கும் பருப்பு நீரைத் தான் ஊற்றுவேன். செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க!
Delete///(நான் வெல்லம் சேர்க்கவில்லை. ரங்க்ஸுக்கு சர்க்கரை என்பதோடு வெல்லம் சேர்த்தால் அந்த ருசியும் பிடிக்கிறதில்லை)///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவருக்கு சக்கரை... அவருக்கு சக்கரை... இப்பூடிச் சொல்லிச் சொல்லியே அவரை எதுவும் சாப்பிட விடாமல் பண்ணிடுவீங்க போலிருக்கே...:)
முதல்ல அவருக்கு வெறும் வயிற்ரில் பச்சைப்பாவக்காய், வேப்பந்துளிர் இப்படி சாப்பிடக் கொடுத்து கொன்ரோலுக்கு கொண்டு வாங்கோ.. பின்பு ஆசைக்கு அனைத்தையும் ரேஸ்ட் பார்க்கவாவது விடுங்கோ கர்ர்ர்:)).
எங்கட அப்பாவுக்கு 45 வயதில் சுகர் வந்துது... அப்பா இவற்ரைத்தான் கடைச்ச்ப்பிடிச்சு குறுகிய காலத்திலேயே நன்கு குறைச்சு.. பின்னர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.. நிறைய சிறுகுறிஞ்சா அல்லது பெருங் குறிஞ்சாவும் சாப்பிடோணும்..
//நிறைய சிறுகுறிஞ்சா அல்லது பெருங் குறிஞ்சாவும் சாப்பிடோணும்..//
Deleteதிருநெல்வேலிக்கே அல்வாவா? கீதாக்காவுக்கே மருத்துவக் குறிப்பா?!!!!
http://sivamgss.blogspot.in/2010/07/blog-post_26.html// அதிராமியாவ், இதுக்குத் தான் பழைய பதிவெல்லாம் பார்க்கணும்னு சொல்றது! இந்தச் சுட்டியில் போய்ப் பாருங்க! என்னவெல்லாம் செய்திருக்கோம், செய்யறோம்னு தெரியும்! :))))) அதோடு வீட்டிலேயே கொஞ்சமா ஸ்வீட் ஏதானும் செய்வதும் உண்டு!
Deleteநெல்லிக்காயும், பாகற்காயும் சேர்த்துப் போட்டு மிக்சி ஜாரில் அரைத்துச் சாறு எடுத்துக் குடித்துப் பின்னர் ஒரு மணி நேரம் கழிச்சே காஃபி குடிப்போம். இப்போத் தான் நெல்லிக்காய் கொஞ்சம் வர ஆரம்பித்திருக்கு!
Deleteஹாஹாஹா, ஶ்ரீராம், இந்த அட்வைஸ் பத்தித் தான் இப்போப் படிச்சுட்டு வந்தேன்! அதிராமியாவும் அவங்களுக்குத் தெரிஞ்ச புத்திமதியைச் சொல்றாங்க இங்கே! :)
Deleteஎங்களுக்கு இங்கு முழு நெல்லி முழு வருசமும் வாங்க முடியுது... அரிநெல்லி கண்ணால பார்க்கவும் கிடைக்காது.
Deleteபச்சைப்பாவக்காயை கரட் கிரேப்பரில் கிரேப் பண்ணி எடுத்து, அப்படியே ஸ்பூனால அள்ளி விழுங்கிடோணும்... வேப்பங் குருத்தையும் மையா அரைச்சு இப்படியே விழுங்கோணும்:)..
பெரும்பாலும் கை வைத்தியங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சவைதான்... சொல்வது சுலபம்... கடைப்பிடிப்பது கஸ்டமே:).... லிங் பார்க்கிறேன்.
டப்பூ ஸ்ரீராம் டப்பூஊ:)... அது... ஸ்ரீரங்கத்துக்கே வைத்தியமா என வருமாக்கும்:) ஹா ஹா ஹா...
Deleteஎத்தனை விதமாக ரசம் செய்யலாம்.... சில குறிப்புகள் புதியவை. நன்றி
ReplyDelete