நன்றி. முகநூல் மூலமாக நண்பர் ஜம்புகேஸ்வரன் கணபதி அவர்கள்
நேத்திக்கு நம்ம பெரிய ரங்குவைப் பார்க்கப் போனோம். இப்போ பூபதித் திருநாள் நடப்பதால் நம்பெருமாள் கருவறையில் இருக்க மாட்டார். விசாரித்ததில் அவர் இங்கே தான் காவிரிக்கரைக்கு கருட மண்டபம் வந்திருப்பதாய்த் தெரிந்தது. அங்கே போகலாமா அல்லது பெரிய ரங்குவைப் பார்க்கலாமானு ஒரு சின்ன பட்டிமன்றம். அப்புறமாப் பெரிய ரங்குவையே பார்க்கலாம். கோயிலுக்குப் போயே ஒரு வருஷம் ஆகுதேனு முடிவெடுத்தோம். நம்பெருமாளுக்கு நேத்திக்குத் தங்க கருடன் வாகனமாம். மாலை ஆறு மணிக்கு மேல் கருடமண்டபத்திலிருந்து எழுந்தருளுவார் என்றார்கள். இந்த ஊருக்கு வந்த வருடம் போய்ப் பார்த்தோம். அப்புறமாப் போக முடியலை.
ஒரு வழியா மூணு மணிக்கு மேல் கிளம்பினோம். வழக்கம் போல் வடக்கு வாசலில் இறங்கிக் கொண்டு முதலில் தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டோம். கோயில்களுக்குப் போகாமலேயே ஒருவருடம் கடந்ததாலோ என்னமோ இரண்டு பேருக்குமே நடக்கச் சிரமமாகவே இருந்தது. என்றாலும் மேலே தொடர்ந்தோம். தாயாரைப் பார்க்கக் கூட்டம் இருந்தாலும் பட்டாசாரியார்கள் விரட்டவில்லை. மென்மையாகவே சொன்னார்கள். நன்கு தரிசனம் செய்து கொண்டு மஞ்சள், சடாரி போன்றவை கிடைக்கப் பெற்று வெளியேறினோம். பொய்கைக்கரை வாசலில் பாட்டரி காருக்குக் காத்து நின்றோம். வருவதற்கு நேரம் ஆகும் என ஒருத்தர் சொல்ல நடக்க ஆரம்பித்தோம். பாதிவழியில் எதிரே பாட்டரி கார்! என்னத்தைச் சொல்றது!
மெதுவாக ஆர்யபடாள் வாசலுக்கு வந்து அங்கே மலை போல் உயரமான படியை ஒரு மாதிரியாக் கடந்து ஏறினோம். இரண்டு வருடங்கள் முன்னால் வரை அதைச் சாய்வுத் தளம் போட்டு ஏற வசதியாகச் செய்திருந்தார்கள். இப்போ மாத்திட்டாங்க. வழக்கம்போல் கொடிமரத்துக்கிட்டேயே டிக்கெட் கவுன்டர். 50 ரூபாய்க்குக் கூட்டம் இல்லை என்பதால் அதே எடுத்துக் கொண்டோம். மறுபடியும் படிகள் ஏறுதல், இறங்குதல்! நம்ம ரங்க்ஸானாத் திரும்பியே பார்க்காமல் போகிறார். அப்புறமா ஓர் அம்மாள் உதவி செய்ய மெதுவாக ஏறினேன். அதுக்குள்ளே கால் கட்டைவிரலில் இடித்துக் கொண்டேன். ஏற்கெனவே அங்கே மாவு வைத்திருந்த அடுக்கு விழுந்து அடிபட்டு வீக்கம் இன்னும் வடியவில்லை. மேலே மேலே அதே இடத்திலேயே இடித்துக் கொண்டு வந்தேன்.
கொஞ்ச நேரக் காத்திருப்புக்கு அப்புறமா கருவறைக்குப் போயிட்டோம். எங்களுக்கு முன்னால் சென்றவர் பட்டாசாரியார்களுக்கு வேண்டியவர் என்பதால் அவருக்கு தீபம் காட்டி முகம், திருவடி சேவை செய்து வைத்தார்கள். அதிர்ஷ்டம் அடிக்குதுனு நாங்களும் பார்த்துக் கொண்டோம். வெகு நாட்கள் கழித்துப் பார்க்கிறோமா! ரங்குவைப் பார்த்ததுமே கண்ணில் நீர் ததும்பியது. நம்பெருமாள் அவர் இடத்தில் இல்லாமல் வெறிச்சென இருந்தது. உபய நாச்சியார்கள் இருந்தனர். யாகபேரர் இல்லை. அவரை எங்கே வைச்சிருக்காங்கனு கேட்க ஆசை! ஆனால் பதில் சொல்வாங்களோ இல்லையோனு திரும்பினேன். திரும்பும்போதும் படியைக் கவனிக்காமல் ரங்குவையே கவனிச்சதில் மறுபடி இடித்துத் தடுக்கி விழுந்து அங்கிருந்த பாலாஜி என்னும் ஊழியர் கையைப் பிடித்துக் கூட்டி வந்து இறக்கி விட்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுத் தீர்த்தம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பாட்டரி கார் வர அதிலே வெளியே வந்தோம். இதுக்கே வீட்டுக்கு வரச்சே மணி ஐந்தே கால் ஆகி இருந்தது.
மேலே கருட சேவைப் படம். நேத்திக்குக் கோயிலில் படம் எடுக்க முடியவில்லை. அலைபேசி இருந்தாலும் சார்ஜ் இல்லை என்பதைக் கவனிக்கவே இல்லை! :) அதோடு படிகள் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் கவனம் அதில் இருந்தது. இன்னும் சில நாட்களில் தேர்த் திருவிழா. அப்போப் படம் எடுக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பார்க்கலாம்.
இது கும்பாபிஷேஹத் திருப்பணிகள் செய்கையில் எடுத்த படம்!
அப்பாலிக்கா வாரன்!
ReplyDeleteஎப்பாலிக்கா?
Deleteபடம் அழகாக இருக்கிறது.
ReplyDeleteகீழே விழுந்துவிட்டீங்களா...அடி எதுவும் படவில்லை என்று நினைக்கிறோம்...கவனமாக இருங்கள். இறைவனை தரிசிப்பதில் ஆர்வம் இருந்தாலும் கவனத்துடன் இருங்கள்..இப்போது எப்படி இருக்கிறீர்கள்..ரங்குவின் அருள் கிடைத்திடட்டும்!
பெரிய ரங்குவின் தர்சனம் கிடைத்தது மகிழ்ச்சி சகோதரி/ கீதாக்கா...
ஹாஹா, துளசி/கீதா, படம் நான் எடுத்தது கீழே காணும் தங்க கோபுரம் தான்! மேலே கருட சேவை தெற்கு கோபுர வாசலில் எடுத்திருக்காங்க! அதைப் போட்டிருந்தது முகநூல் நண்பர் ஒருவர்! நான் அதைப் பகிர்ந்திருக்கேன்.
Deleteநல்லவேளையாக் கீழே விழலை! அந்த ஊழியர் பிடிச்சுண்டார்! இல்லைனா குப்புற விழுந்திருக்கணும்! :)) ஒரு வாரமாகவே ஆங்காங்கே சின்னச் சின்ன அடி, இடித்து வீங்குதல் என இருக்கு! :)
பார்த்து கீசா மேடம். முதுகு, எலும்பு சம்பந்தமானவற்றில் (வழுக்கிவிழுவது, தடுக்கி அதனால் சுளுக்கு ஏற்படுவது போன்று) 60+ல் மிகக் கவனமுடன் இருங்க. அதுவும் கோவில்களில் தேவையான வெளிச்சம் இருக்காது, படிகளும் uneven ஆக இருக்கும்.
Deleteகொஞ்சம் நாட்கள் போகாததால் எங்கே படிகள் இருக்கும் என்பது புரியலை! அதான் தடுமாற்றம். :))) மற்றபடி கீழே விழலை!
Deleteபெரிய ரங்கு அனைவருக்கும் நலத்தை தரட்டும்.
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துகள்.
வாங்க கில்லர்ஜி, ரங்குவையும் அதான் கேட்டேன்!
Deleteஸ்ரீரங்கத்திலேயே இருந்தும் ரங்குவை தரிசனம்செய்வதுகடினம் போல் இருக்கிறதே
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, எங்க குடியிருப்பு வளாகத்தில் இருந்து தினம் இரண்டு தரம் போறவங்க உண்டு. எங்களுக்கு ஒரு வருஷமாப் போக முடியாத சூழ்நிலை! அதான் இப்போப் போனோம்.
Deleteஆஹா.... ரங்கநாதர் நல்ல தரிசனம் தந்தாரா.... பிரசாதம் வாங்க வாய்ப்பு கிடைத்ததா?
ReplyDeleteஜெ. ஆரம்பித்துவைத்த பேட்டரி கார் உபயோகமா இருந்ததா?
நெ.த. எல்லா நேரமும் பிரசாதம் கிடைக்காது! :) அந்த நேரம் நிவேதனம் பண்ணும் நேரமா இருக்கணும். ஆனால் மாலைஐந்தரை ஆறுக்கெல்லாம் தோசை கிடைக்கும். எதிரே கிளி மண்டபத்திலேயே கிடைக்கும்.
Deleteபாட்டரி காரில் பல முறை போயிருக்கோம்! பல முறை நடந்தும் போயிருக்கோம். மத்தியான நேரம் எனில் ஊழியர்கள் வருவதற்குச் சுணக்கம் காட்டுவாங்க. மாலை நாலு மணிக்கப்புறமாவும் காலை பனிரண்டு வரையிலும் கொஞ்சம் ஓடும்! முன்னெல்லாம் கண்காணிப்பு இருந்தது. இப்போ இல்லை!
அங்கு வரும் வேளை வரும்போது, உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு நாள் இருந்து பிரசாதமும் வாங்குவோமில்ல.
Deleteசெய்ங்க! காலை விஸ்வரூப தரிசனத்துக்குப் பின்னர் ஏதோ பிரசாதம் கொடுக்கிறாங்க என்று கேள்வி. நாங்க இன்னும் விஸ்வரூப தரிசனத்துக்குப் போகலை! ஒருமுறையாவது போகணும்னு எண்ணம் இருக்கு! :))))
Deleteஉங்களால் தரிசனம்.
ReplyDeleteஅன்பு கீதா, உங்கள் கருணையால்
ReplyDeleteபெரிய ரங்கு தரிசனம் கிடைத்தது.
எனக்கும் அவருடைய கிருபை கொஞ்சம் இருக்கிறது போல.
என்ன ஒரு ஆகிருதி. அந்தக் கண்ணும், அபய ஹஸ்தமும் அப்படியே
மனக்கண்ணில் பார்த்துக் கொண்டேன்.
மிக மிக நன்றி.
பட்டகால் ,அதுவும் கட்டை விரல்.
கேட்பானேன். வலி குறையட்டும்.
வாங்க வல்லி, ஆமாம் கட்டைவிரலிலேயே திரும்பத் திரும்பப் பட்டுக் கொண்டிருக்கு! எல்லாம் ரங்கு பார்த்துப்பார்! :)
Deleteபட்ட காலிலே படும் என்பது இதுதானோ... தடுக்கி வேறு விழுந்தீர்களா? அட பெருமாளே...
ReplyDeleteபடங்களை பார்த்து ரசித்தேன்.
வாங்க ஶ்ரீராம், தடுக்கினது, சமாளிச்சாச்சு!
Deleteபடம் எடுப்பதைவிட தங்களின் உடல் பாதுகாப்பில் கவனம் கொள்ளுங்கள்l
ReplyDeleteதனிமரம், படமே எடுக்கலை. மற்றபடி உங்கள் அக்கறையான பதிலுக்கூ மிக்க நன்றி.
Delete