எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 17, 2018

ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்!

எல்லோருக்கும் ஓர் நற்செய்தி!ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்.      நாளையிலிருந்து புதன் வரை இணையத்துக்கு வர மாட்டேன். குஜராத் போகிறோம். போயிட்டு வந்து விபரங்கள் சொல்றேன். என்ன ஒரு பிரச்னைன்னா இன்டிகோ விமானத்தில் மூணு மாசம் முன்னாடியே டிக்கெட் வாங்கியாச்சு. இப்போ நாங்க போகற நேரம் பார்த்து இன்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அவங்க ரத்து செய்த விமானங்களில் நாங்க போற விமானம் இல்லைதான்! நேத்திக்கு ஏர்லைன்ஸ் வெளியிட்ட ரத்து செய்யப்பட்ட விமானங்களோடு நாங்க போக வேண்டிய ஊரோ, விமானமோ இல்லை என்பதையும் பார்த்தாச்சு.  முன்பதிவு செய்த ஏர்லைன்ஸ் ஏஜென்டிடமும் தொலைபேசிப் பேசி உறுதி செய்து கொண்டாச்சு! ஆகவே   நாளைக்கே அம்பத்தூர் போய் அங்கே சில, பல வேலைகள் முடித்துக் கொண்டு பின்னர் திங்களன்று மாலை அஹமதாபாதுக்கு விமானம் ஏறிப் பயணம்

செவ்வாயன்று அங்கே வேலையை முடித்துக் கொண்டு பின்னர் திரும்ப புதன் காலை அங்கிருந்து சென்னைக்குத் திரும்பணும். இந்தப் பதிவுக்கு நீங்க கொடுக்கும் கருத்துகளுக்கு இன்னிக்குச் சாயந்திரத்துக்குள்ளாகப் பதில் சொல்லப் பார்க்கிறேன். முடியலைனா வந்து தான். அதிரடி, இது முக்கியமா உங்களுக்குத் தான். ஊருக்குப் போறதாலே தான் முன்னர் போட்ட பதிவுகளுக்கு வந்த கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லிட்டேனாக்கும்.  (அதானே, பார்த்தேன்! இல்லைனா ஒரு மாசம் ஓட்டி இருக்க மாட்டீங்க?) ஹிஹிஹி, அது நெ.த.வோட ம.சா. போல! கொஞ்சம் சத்தமாப் பேசி இருக்கா! இங்கே வந்து கேட்குது!

சரி, சரி, போற வரைக்கும் ஏதானும் செய்து கொடுத்துச் சாப்பிட வைச்சுட்டுப் போகணும் இல்லையா? அதுக்காக நான் இன்னிக்குச் செய்து காட்டப்போவது பறங்கிக் கொட்டை போட்டு அடை! அடை தான் எல்லோருக்கும் தெரியுமேனு நினைக்காதீங்க! ஒவ்வொருத்தர் வீட்டில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அடையில் வெங்காயம், முட்டைக்கோஸ், கீரை, முருங்கைக்கீரை, வாழைப்பூ போன்றவை போடலாம். பொடிப் பொடியாய்த் தேங்காய்க் கீற்றுகள் கூடப் போடுவாங்க! அது மாதிரிதான் பறங்கிக் கொட்டையும். பறங்கிக் கொட்டை சின்னதா இருக்கணும். பழுத்த மஞ்சள் பறங்கியோ, பச்சை நிறம் மாறி வருவதோ கூடாது. பச்சை நிறப் பறங்கியாக இருந்தால் பரவாயில்லை ரகம். அன்னிக்கு எனக்குக் கொட்டை கிடைக்கலை. இந்த இளம் பறங்கிக் கொட்டையில் இளங்கொட்டைக் கூட்டு என்று பண்ணுவாங்க. அதெல்லாம் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இளங்கொட்டைக்குப் படம் போடலாம்னு தேடினா கூகிளார் கையை விரிக்கிறார். அப்பாடா! கடைசியில் கூகிளாரால் கூடக் கொடுக்க முடியாத ஒன்று இருக்கே! சந்தோஷமா இருக்கு! வெளிர் பச்சை நிறத்தில் சின்னதாகப் பப்பாளிக்காய் போல் இருக்கும் இளங்கொட்டை. இது பறங்கிப் பிஞ்சு என்றும் சொல்லலாம்.  இதைத் தோல் சீவாமல் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொண்டு தேங்காயை மட்டும் துருவிக் கொஞ்சம் போல் ஊற வைத்த அரிசியோடு அரைத்துக் கொண்டு வெந்த கூட்டில் கலக்க வேண்டும். உப்புப் போடுகையில் அவரவர் ருசிக்கு ஏற்ப வெல்லமோ, சர்க்கரையோ போட வேண்டும். தேங்காய் அரைத்துத் தேங்காய்ப் பால் சேர்த்தால் வெல்லமும்,வெறும் பால் சேர்த்தால் சர்க்கரையும் போடுவது என் வழக்கம். இதற்குத் தேங்காயைத் துருவிக் கொண்டு நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.

இந்தப் பறங்கிக்கொட்டையைத் துருவிக் கொண்டு துவையலும் அரைக்கலாம். துருவிய பறங்கிக்கொட்டை

மி.வத்தல் 4 அல்லது ஆறு வற்றல்கள் (காரத்துக்கு ஏற்றாற்போல்)

புளி சின்னச் சுண்டைக்காய் அளவு ஊற வைக்கவும்.

பெருங்காயம் ஒரு துண்டு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் வதக்கத் தேவையான அளவு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உ.பருப்பு.

கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பை வறுத்து எடுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் பெருங்காயத்தைப் போட்டு எடுத்துவிட்டு மி.வத்தலை நன்கு கருகாமல் வறுத்து எடுக்கவும். கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயிலேயே துருவி வைத்த பறங்கிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதக்கிய பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மி.வத்தல் ஊற வைத்த புளியோடு உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வதக்கிய பறங்கிக்காயைப் போட்டு அரைக்கவும். நன்கு அரைபட்டதும் கடைசியில் கடுகு, உ.பருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப்போட்டுப்பிசைந்து சாப்பிடவும். தொட்டுக்க டாங்கர் பச்சடி அல்லது மோர்ச்சாறு. அல்லது வெள்ளரிப் பச்சடி, காரட் பச்சடி போன்றவை.


ஹிஹிஹி, பறங்கிக்காய் அடைனு சொல்லிட்டு இது என்னனு பல்லைக் கடிக்கிறவங்களுக்கு! திங்கட்கிழமை வரமாதிரி ஷெட்யூல் பண்ணி  இருக்கேன். ஶ்ரீராமுக்குத் தான் அனுப்பறதா இருந்தேன். அவருக்கு வரிசை கட்டிச் செய்முறைகள் இருப்பதால் அனுப்பலை! :) திங்கட்கிழமைக்கு நான் இல்லைனாலும் "திங்க" போட்டி வேண்டாமா? அதான்!

27 comments:

  1. மோடியை சந்திக்கப் போறேன்னு சொல்றதை சுற்றி வளைத்து குஜராத்துனு சொல்றீங்க போல.... நல்லபடியாக போயிட்டு வாங்க.....

    அப்படியே.... நம்மளைப் பற்றியும் சொல்லி வைங்க.... பின் உதவிக்கு ஆகும் அதேநேரம் எனது ஓட்டு மட்டும் கண்டிப்பாக கிடைக்காது அதையும் சொல்லணும் காரணம் நமக்கு மறைச்சு வச்சு பேசத்தெரியாது.

    நன்றி வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே கில்லர்ஜி, மோதியைச் சந்திக்க தில்லிக்கு இல்ல போகணும்! நான் குஜராத்தில்ல போறேன். :))))) உங்களைப் பற்றி நிறையவே சொல்லறேன், சந்திச்சா! முன்னாடி 2010 ஆம் ஆண்டில் மோதி ஆட்சியில் பரோடா போனோம். அப்போ மோதியும் எங்களைப் பார்க்க பரோடா வந்தார். ஆனாப் பாருங்க எந்தவிதமான ஃபெளெக்ஸ் பானரோ, தொண்டரடிப் பொடிகளின் ஊர்வலமோ, காலில் விழுதலோ, கட்சிக் கொடிகளோ, கட் அவுட்களோ வரவேற்பு வளைவுகளோ இல்லையா வந்ததே தெரியாமல் போச்சு! :)))

      Delete
    2. //அதேநேரம் எனது ஓட்டு மட்டும் கண்டிப்பாக கிடைக்காது அதையும் சொல்லணும் காரணம் நமக்கு மறைச்சு வச்சு பேசத்தெரியாது.// அவங்களும் ஓட்டுக்காக எதுவும் செய்யறவ்ங்க இல்லையே! ஓட்டுக் கிடைச்சாலும் கிடைக்காட்டியும் கவலைப்படறவங்களும் இல்லை! :))))

      Delete
    3. ///அவங்களும் ஓட்டுக்காக எதுவும் செய்யறவ்ங்க இல்லையே! ஓட்டுக் கிடைச்சாலும் கிடைக்காட்டியும் கவலைப்படறவங்களும் இல்லை! :))))///

      ஹையோ மீஈஈஈஈஈஈ ஃபுல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அரிச்சு நிக்கிறேன்ன்ன் முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:)).. எதுக்கும் ஆட்சி மட்டும் மாறட்டும்:) அப்போ கீசாக்கா கட்டிலுக்குக் கீழேயேதான் இருந்து போஸ்ட் எழுதோணும்:) ஹா ஹா ஹா...

      Delete
    4. அதிரடி அதிரா எம்பி எம்பி வாங்கின பி.எஸ். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்சி மாறணும்னு தானே எதிர்க்கட்சிங்க எல்லாம் உள்ளடி வேலை செய்யுது! மாறட்டும், மாறட்டும்! :)

      Delete
  2. இன்னைக்கு கிளம்பறதுனால, வீட்டுல இருக்கற பறங்கிக்காயை உபயோகப்படுத்துகிறீர்களா?

    நானும் பார்த்தேன்... பறங்கிக்கொட்டை அடையா? கேள்விப்பட்டதேயில்லையே என்று. சிறிய பறங்கிக்காயை அப்படிச் சொல்கிறீர்களா?

    குஜராத்தில் மழை குறைவாக இருப்பதால் உங்களுக்கு அழைப்பு வந்திருக்கோ? பத்திரமாகச் சென்றுவாருங்கள்.

    உங்கள் செய்முறைக்கு படம் எடுத்திருக்கிறீர்களா இல்லையா? நேற்று, கீரைக்கு உடனே பதில் வந்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. பொதுவா 'உணவே மருந்து'க்கு நீங்கள் பல காலம் சென்றுதானே பதில் சொல்வீர்கள். அந்தக் காலத்தில் (அம்பேரிக்காவில் இருந்தபோது) மீதி தக்காளியை என்ன செய்தீர்கள் என்று சொல்வீர்கள் என காத்திருந்ததுதான் மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இன்னிக்குக் கிளம்பலை. நாளைக்குத் தான் பல்லவன்! பறங்கிக்கொட்டை அடை எங்க வீட்டிலே ரொம்பவே பிரபலம்! சின்னதாக இருக்கும் பாருங்க வெளிர் பச்சை நிறத்தில் அதை இளங்கொட்டை என்போம். செய்முறை எல்லாம் போட்டு (படங்களோடு) ஷெட்யூல் பண்ணியாச்சு! வரும் பார்த்துக்குங்க! எந்தப் பதிவில் மீதித் தக்காளி? இத்தனை நாட்கள் அழுகிப் போயிருக்காதோ? அதைத் தூக்கி எறிஞ்சிருப்பேனோ? :))))))

      Delete
    2. சொல்ல மறந்துட்டேனே, ஊருக்குக் கிளம்பறதுக்கு 2 நாட்கள் முன்னிருந்தே நான் உணவுக்கட்டுப்பாடு கடுமையாகக் கடைப்பிடிப்பேன். ஆகவே அடைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை! இன்னிக்குச் சப்பாத்தி! நான் கொஞ்சம் போல் வெஜிடபிள் ஊறுகாயோடு சாப்பிட்டுடுவேன். அவருக்கு மட்டும் உ.கி. நாளையிலிருந்து தொடர்ந்து பயணம் என்பதால் உணவு எடுக்கும்போது கவனமாக இருக்கணும்! பழங்கள், பழச்சாறு, தயிர், லஸ்ஸி மட்டுமே ஏற்கப்படும்! :)))))

      Delete
    3. நான், மாங்கொட்டை என்று சொல்வதுபோல, பரங்கி விதைகளை எடுத்து அதைவைத்து அடை செய்தீர்களோ என்று புரிந்துகொண்டேன். சிறிய பரங்கியை (பச்சையா இருக்குமே) பரங்கிக்கொட்டை என்று சொல்கிறீர்களா?

      Delete
    4. என்ன... கன்னா பின்னான்னு பின்னூட்டம் வரும்னு பயந்து ஷெடியூல் பண்ணியிருக்கீங்களா? நல்லாத்தானே பண்ணியிருப்பீங்க? ஹா ஹா ஹா

      Delete
    5. நெல்லை சின்ன பறங்கியை பறங்கிக் கொட்டைனுதான் சொல்லுவோம்...அடையும் நல்லாருக்கும்....பறங்கிக் கொட்டை இளம் பச்சை அல்லது இளம் மஞ்சள்/ரோஸ் கலர்லயும் அது ஒரு மாதிரி கலர் ..சரியா சொல்லத் தெரியலை.. கிடைக்குமே...

      அட!! நானும் ஊருக்குக் கிளம்புவதென்றால் அது எவ்வகைப் பயணமா இருந்தாலும்...டயட் தான்...அனாவசியமான வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்...ஸாஃப்ட் ஃபுட்!!

      கீதா

      Delete
    6. நெ.த. பறங்கி விதைகளை உரித்து உள்ளே உள்ள பருப்பைஎடுத்து நெய்யில் வறுத்து பாக்குப்பொடியில் சேர்ப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன். அதெல்லாம் கன்னா, பின்னா பின்னூட்டத்துக்குப்பயந்தெல்லாம் ஷெட்யூல் செய்யவில்லை. ஊருக்குப் போறதாலே ஷெட்யூல், ஒரு சில பதிவுகளுக்கும் ஷெட்யூல் பண்ணி வைப்பேன்.

      Delete
    7. தி/கீதா,ஊர் சுற்றும்போது நிம்மதியாக சௌகரியமாகச் சுத்தணும் இல்லையா? வயிற்றில் வேதனையோடுசுத்தமுடியாதே!

      Delete
  3. அப்போ இப்போ சென்னையிலா இருக்கீங்க?

    நறநற.... அடையா அது? நாங்கள் பரங்கிப்பிஞ்சு போட்டு வெல்லக்கூட்டு செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம்,பறங்கிப் பிஞ்சைத் தான் இளங்கொட்டை என்போம் மதுரைப் பக்கம். எப்போச் சென்னை? 18 ஆம் தேதி மதியம் சென்னை! 19 ஆம் தேதி அஹமதாபாத் பயணம்.

      Delete
  4. குஜராத் பயணம் இனிமை = வெற்றி அடையட்டும். ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கொண்டு எங்களின் திங்கற பதிவுக்கு ஒன்றும் அனுப்புவதில்லை. நீங்கள் முதலில் கேட்ட நாளிலிருந்து கணக்கு பார்த்தால் இந்நேரம் வெளியாகியிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், அனுப்பக் கூடாதுனு எல்லாம் இல்லை. அந்தச் சமயம் பார்த்து இங்கே விருந்தினர் வருகை. கணினியில் உட்கார்ந்து படங்களை எல்லாம் ஏற்றுவதில் சிரமம். பதிவு போட முடியவில்லை. அதுக்கப்புறமாப் பத்து நாட்கள் செல்ஃபோன் திருடு போனதில் ஓட்டியாச்சு! :))))

      Delete
  5. >>> இளம் பறங்கிக் கொட்டையில் இளங்கொட்டைக் கூட்டு என்று பண்ணுவாங்க... <<<

    ஓ... அதையும் விட்டு வைக்கிறதில்லையா!...

    இருக்கட்டும்...
    நல்லபடியா போய்ட்டு வாங்க!...

    எபி..யில நாங்களே காஃபி ஆத்துறது நல்லா இருக்காது!..

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, ஊரில் இருந்து வந்தாச்சு. ஆனாலும் இன்னமும் எபி பக்கம் வரமுடியலை! வரேன். நாளைக்குக்காஃபி ஆத்தமுடியுமானு பார்க்கணும். :)

      Delete
  6. படம் இல்லாமல் குறிப்பு போட்டால் ஒத்துக்கவே மாட்டேன்ன்:)) ஆவாரத்தோட சே..சே.. ஆதாரத்தோடு நிரூபியுங்கோ:))..

    ஆடிப்பாடிப் போட்டு இடுப்புப்பிடிப்பு கால் சுழுக்கு என படுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, ஏற்கெனவே இடுப்புப் பிடிப்பு, கால் நரம்புப் பிடிப்பு, தசைப்பிடிப்பு எல்லாம் இருக்கு. அதனால் புதுசா ஏதேனும் இருக்கானு கண்டு பிடிக்கணும். சிலதைப் படம் எடுக்க முடியாது! :)

      Delete
  7. ஓ நான் லேட்டு போல !!!! சரி சரி உங்க பயணம் இனிதாய் அமைந்திடட்டும்!!

    //வெளிர் பச்சை நிறத்தில் சின்னதாகப் பப்பாளிக்காய் போல் இருக்கும் இளங்கொட்டை. இது பறங்கிப் பிஞ்சு என்றும் சொல்லலாம். இதைத் தோல் சீவாமல் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொண்டு தேங்காயை மட்டும் துருவிக் கொஞ்சம் போல் ஊற வைத்த அரிசியோடு அரைத்துக் கொண்டு வெந்த கூட்டில் கலக்க வேண்டும். உப்புப் போடுகையில் அவரவர் ருசிக்கு ஏற்ப வெல்லமோ, சர்க்கரையோ போட வேண்டும். தேங்காய் அரைத்துத் தேங்காய்ப் பால் சேர்த்தால் வெல்லமும்,வெறும் பால் சேர்த்தால் சர்க்கரையும் போடுவது என் வழக்கம். இதற்குத் தேங்காயைத் துருவிக் கொண்டு நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.

    இந்தப் பறங்கிக்கொட்டையைத் துருவிக் கொண்டு துவையலும் அரைக்கலாம். //

    ஹையோ ஹையோ அக்கா சேம் சேம்...ஹைஃபைவ்!!!!!!! துவையலும் இதே இதேதான்...

    அடையும் செய்வதுண்டு....வெயிட்டிங்க் உங்க ரெசிப்பி என்னனு பார்க்க திங்க வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, லேட்டோ சீக்கிரமோ வெளியிடும்போது ஒண்ணாத்தானே வரப் போகுது! :)))))) ரொம்பப் பேருக்கு இளங்கொட்டைன்னாப் புரியறதே இல்லை. :)

      Delete
  8. என்ன ஒரே பயணமாக இருக்கிறதே .நல்லபடியாகப் போய் வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, பயணங்கள் முடிவதில்லை.

      Delete
  9. குஜராத் பயண அனுபவங்களை கேட்க(படிக்க) ஆவலாக உள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தளிர் சுரேஷ், அப்படி ஒண்ணும் ஊரெல்லாம் சுத்திப் பார்க்கலை. :)

      Delete