ஃபேஸ் புக்கில் நெருங்கிய நண்பர் ஒரு பதிவில் ஶ்ரீரங்கம் கருட மண்டபம் பெரிய கருடனின் படம் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் சிலர் கொடுத்த கருத்துகளில் ஒரு நண்பர் /நண்பி ஒருத்தரின் சந்தேகம்!
அவர்
வணக்கம்
பாராட்டுக்கள், இங்கே இன்னொரு ரவிவர்மா!!! ஒரு சிறு ஐயம். எல்லாத் திருக்கோயில்களிலும் (திருவெள்ளியங்குடி தவிர) ஸ்ரீ கருடாழ்வார் நின்ற திருக்கோலத்திலோ அல்லது வீராசனத்திலோ தான் வீற்றிருப்பார், ஆனால் திருவரங்கத்தில் ஏன் இந்த வித்யாசமாக வீற்றிருக்கிறார்
என் பதில்!
திருவரங்கத்தில் பெருமாள் அரிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். ஆகவே அங்கே கருடாழ்வாருக்கு வேலை இல்லை. எனினும் பெருமாள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம் என்பதால் பறக்கத் தயாரான கோலத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு வஸ்திரம் சாத்துவது எனில் பெரிய விஷயம் . கொழுக்கட்டை நிவேதனம் செய்வார்கள்
நண்பர்/நண்பி
பெருமாள் அரிதுயிலில் இருக்கும் மற்ற திருக்கோயில்களில் அவ்வாறு இல்லையே
என் பதில்
அந்தக் கோயில்களில் கேட்கவும்.
இந்த என் பதிலில் மேற்கண்ட நபர் என்ன பிழைகண்டார் எனத் தெரியவில்லை. ஏனெனில் இதற்கு அவர் கொடுத்த பதில் மிகக் கடுமையாக இருந்தது. மற்றக் கோயில்களைப் பற்றி இங்கே ஏன் சொல்லக் கூடாது என்றும் நீ என்ன ஶ்ரீரங்கம் கோயிலின் சொந்தக்காரியா என்னும்படியும் பொருள் கொள்ளும்படிக் கடுமையான வார்த்தைகளை எழுதி இருந்தார். அதோடு பெருமாள் கோயில்களில் கருட சேவை முக்கியம் என்பதும் கருட சேவை ஶ்ரீரங்கம் கோயிலிலும் உண்டு என்றும் அதுவும் எனக்குத் தெரியாதா என்றும் கேட்டிருந்தார். கருடசேவைக்குக் கருட வாகனம் தான் பெருமாளுக்கு. அதுவும் நம் பெருமாளுக்கு. இவர் கேட்டது பெரிய பெருமாளின் பெரிய கருடனைப் பற்றி. கருட மண்டபத்தில் வீற்றிருக்கும் கருடன் குறித்துக் கேட்டிருந்தார். அதுக்குத் தான் நான் மேற்கண்ட பதிலை அனுப்பிவிட்டு ஶ்ரீரங்கம் கோயிலுக்கும் மற்றக் கோயில்களுக்கும் உள்ள வித்தியாசம் ஏதேனும் கிடைக்கிறதா என கூகிளில் தேடினேன். கிடைக்கவில்லை. அல்லது எனக்குத் தேடப் பொறுமை இல்லை. எதுக்கும் அவங்களிடம் கொஞ்சம்பொறுங்க கேட்டுச் சொல்றேன்னு சொல்லலாம்னு திரும்பி வந்தால் அவங்களோட கடுமையான கமென்ட். அதற்கு நான் பதில் சொல்வதற்குள்ளாக அது திடீரென நீக்கப்பட்டது! எனினும் அவங்க கொடுத்த கருத்தை நான் படிச்சதால் பதில் சொன்னேன்.
கீழே என் பதில்.
வணக்கம் Nandhitha Kaappiyan நான் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது உங்கள் கருத்தை நீக்கி இருக்கிறீர்கள். அதனால் பரவாயில்லை. எனக்குத் தெரிஞ்சு நான் கோயிலின் எவ்விதமான அதிகாரத்திலும் இருப்பதாக எங்கேயும் எப்போவும் சொல்லிக் கொண்டதில்லை. நீங்க உங்க கருத்திலே கேட்டிருந்தீங்க!நீங்க என்ன கோயிலின் அதிகாரபூர்வமான அதிகாரியானு. சாதாரணமான ஒரு பக்தை கூட இல்லை! அதுக்கே ரொம்ப தூரம்போயாகணும். :) நீண்ட பதிலுக்கு மன்னிக்கவும்.
எனக்குத் தெரிந்தவரை, அறிந்தவரை கோயிலின் பழமை வாய்ந்த பட்டாசாரியார்கள் ஊர்க்காரர்கள் சொல்வது இந்த ஊர்ப் பெருமாள் பெரிய பெருமாள், அவருக்கேற்ற கருட வாகனம்! அதான் கருடனும் பெரியவர்! பெருமாள் எப்போ வரும்னு காத்துட்டு இருக்கார்னு தான் சொல்வாங்க. இதைக் குறித்து நான் படித்த ஆதாரத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். கிடைக்கலை. அவகாசம் தேவை!
நீங்க சொன்ன மாதிரி இங்கேயும்கருட வாகனம் உண்டு. வெள்ளி, தங்க கருட வாகனங்கள். ஆனால் அதில் பவனி வருபவர் நம்பெருமாள் தான். பெரிய பெருமாள் இல்லை. கருட வாகன சேவை இல்லாத பெருமாள் கோயிலே இல்லை என்பது எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மேலே சொன்ன "ஆனால் திருவரங்கத்தில் ஏன் இந்த வித்யாசமாக வீற்றிருக்கிறார்?" இந்தக் கேள்வியைக் கேட்டது நீங்கள் தான் என்பதை முன்னரே கவனித்திருந்தால் பதிலே சொல்லி இருக்க மாட்டேன். தவறு என் மீது தான் மன்னிக்கவும். நீங்கள் அறியாத விஷயங்கள் இல்லை! ஆகவே உங்களுக்குத் தெரிந்த ஒன்றை நான் தவறாய்க் கூறியதற்கு மிகவும் மன்னிக்கவும்.
நம்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆகவே அவர் கருட வாகனத்தில் எழுந்தருளுவார்
மேற்கண்ட என் பதிலுக்கு
அவர் கொடுத்த பதில்!
Geetha Sambasivam அந்த அந்த கோயில்களில் கேட்கவும் என்ற உத்தரவிட்டதனால் தான் அவ்வாறு கேட்க நேர்ந்தது, எல்லாத் திருக்கோயில்களிலும் உற்சவர் தான் திருவிழாவில் எழுந்தருளுவார், மூலவர் என்றுமே வெளியில் வருவதில்லை.
இது உத்தரவு என அவர்களுக்குப்பட்டிருக்கிறது. எல்லாக் கோயில்கள் பற்றியும் அதன் திருவிழாக்கள், நடைமுறை பற்றியும் எனக்குத் தெரியாதே! ஆகவே சம்பந்தப் பட்ட கோயில்களில் கேட்டால் சொல்வார்கள் என்று நினைத்துத் தான் பதில் கொடுத்தேன். அது தவறு எனப் புரிஞ்சுக்கலை. அவ்வளவெல்லாம் மூளை இல்லை. அது வேலையும் செய்யலை! :( ஆனாலும் அவங்க விடவில்லை. திரும்பத் திரும்ப நான் உத்தரவு கொடுக்கிறேன் என்னும் தொனியிலேயே பேசிட்டு இருந்தாங்க! அதோடு ஶ்ரீரங்கம் கோயில்களில் கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல ஒரு தளமே இருக்கு. அதையும் அவங்களுக்குச் சுட்டி இருந்தேன்.
என் பதில்
இந்த இடத்தைத் தெரியுமா?விரைவான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
கேள்விகளும் பதில்களும்
கே: Why this Temple que system is very poorly organised. Free and paid que are treated as animals. What the temple organisers are doing. One day let them take the frer que and find the people isssues.
ப: Many temples i visited are like that. But here i got a better crowd without much mess up.. i think the devotees ourself shud try not to make problems..
(மேலும் 16 பதில்கள்)
எல்லாக் கேள்விகளையும் காட்டு (140)
பாப்புலர் டைம்ஸ்
நேரம் இருந்தால் இங்கே சென்று உங்கள் சந்தேகத்தைக் கேட்கவும். தீர்த்து வைப்பார்கள். இதே போல் அந்த அந்தக் கோயில்களிலும் கேட்கலாம்.
மேற்கண்ட பதிலையே மீண்டும் சொல்லி இருந்தேன். அதுவும் அவங்களுக்குத் தவறாகவே தோன்றி இருக்கிறது. அதோடு இல்லாமல் எல்லாக் கோயில்களிலும் மூலவர் வருவதில்லை என்ற அவர்களின் கருத்துக்கு எதிராக,
என் பதில்
ஶ்ரீரங்கத்தில் கருட மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் கருடன் மூலவர்! மூலவருக்கு உரியவர்! அவர் எப்படி வெளியே வருவார்? எல்லாக் கோயில்களிலும் மூலவர் வர மாட்டார் எனினும் சிதம்பரம் கோயிலில் மூலவரான நடராஜர் தான் வெளியே வருவார். வருகிறார், வந்து கொண்டு இருக்கிறார் இனியும் வருவார்.
என்றும் பதில் சொன்னேன். அதுக்கு அவங்க மறுபடியும்,
நண்பர்/நண்பி
ஏன் இங்கு கேட்கக் கூடாதா? இது என்ன புதுவிதமான உத்தரவு?
என்று கேட்டிருந்தார். என்றாலும் நான் விடாமல் மீண்டும் மீண்டும்,
கீழ்க்கண்ட பதிலைக் கொடுத்தேன்.
என் பதில்
/அந்த அந்த கோயில்களில் கேட்கவும் என்ற உத்தரவிட்டதனால் தான் அவ்வாறு கேட்க // நாம் எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தைப் பொறுத்தது அது!
அவங்க சரியாப் புரிஞ்சுக்கலை என்பதை எடுத்துச் சொன்னேன். இது எல்லோருடனும் சொல்வது தான். ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு சம்பிரதாயம், நடைமுறை, மரபுகள் இருக்கின்றனவே! ஆகையால் தான் அப்படிச் சொன்னேன். இதை நான் இங்கு தான் கேட்பேன், நீ பதில் சொல்லித் தான் ஆகணும்னு அவர் தான் உத்தரவு போடுகிறார். ஆனால் என்னை நான் உத்தரவு போடுவதாகச் சொல்கிறார். மனம் ரொம்பவே வருந்தி விட்டது. இன்னமும் இது ஆறவில்லை. அவங்க விடாமல் அவங்க சொல்வதையே சொன்னார்கள்.
மீண்டும் அவர் பதில்மீ
சொல்வதைச் சொல்லும் விதமாகச் சொன்னால் புரிந்து கொள்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள்! தங்கள் வார்த்தைகளில் அதிகாரத்வனி தெரிந்தது அதனால் தான் அவ்வாறு பதில் எழுதினேன்.
என் பதில்
Nandhitha Kaappiyan உங்களோட புரிதல் அவ்வளவு தான். எனக்குத் தெரிந்ததைத் தான் நான் சொல்ல முடியும். மற்றப் பெருமாள் கோயில்கள் பற்றி நான் எவ்வாறு சொல்ல முடியும்? உங்களுக்கு எந்தக் கோயில் பத்தித் தெரிஞ்சுக்கணுமோ அங்கே கேட்டால் சொல்லுவார்கள். எத்தனை முறை கேட்டாலும் இதை அதிகாரம் என நினைத்தாலும் இதான் என் பதில்! முதலிலேயே உங்க பெயரைப் பார்த்திருந்தால் நான் பதிலே சொல்லி இருக்க மாட்டேன். உங்களைப்புண் படுத்தியதற்கு மிகவும் மன்னிக்கவும். தாழ்மையான மன்னிப்புக் கேட்டுக்கிறேன். _/\_
மன்னிப்பும் கேட்டுக்கொண்டு விட்டேன். என்றாலும் மேலும் மேலும் இகழ்ச்சியாகப் பேசியதோடு அல்லாமல் உனக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா என்றெல்லாம் கேட்டார்.
அவர் சொன்னது!
மன்னிப்பெல்லாம் எதற்கு, விட்டுத் தள்ளுங்கள், நானும் ஓரளவு வைகானஸம் பாஞ்ச ராத்திரம்(பாத்ம புராணத்தில் உள்ள பரமேஸ்வர சம்ஹிதை) முதலியவற்றைப் படித்திருக்கிறேன், என்னைக் கண்டு எதற்காக ஒதுங்கவேண்டும்? என் புரிதல் பற்றித் தெரிந்து கொண்டமைக்கு நன்றி,
मौनान्मूक: प्रवचनपटुर्वातुलो जल्पको वा
धृष्ट: पाश्र्वे वसति च तदा दूरतश्चाप्रगल्भ:।
क्षान्त्याभीरुर्यदि न सहते प्रायशो नाभिजात:
सेवाधर्म: परमगौनो योगिनामप्यगम्य:॥
தங்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்தால் நல்லது இல்லையேல் யாரிடமாவது இதன்பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுகிறேன்
என்று எழுதி இருக்கிறார். என்னத்தைச் சொல்வது! :(
அப்படியும் மீண்டும் அவங்களுக்கு கருடனைப் பற்றிப் புரிய வைக்கக் கீழ்க்கண்ட பகுதியை திரு கைலாஷி அவர்களின் வலைப்பதிவில் இருந்து போட்டேன்.
நான் சொன்னது!
திருவரங்கத்தில் எல்லாம் பெரியதுதான் கோவில் - பெரிய கோவில், பேரும் பெரிது, ஊரும் பெரிது. பெருமாள் - இராம பெருமான் வழிபட்ட பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டி, ஊர் - பேரரங்கம். தளிகை - பெரிய அவசரம், வாத்யம் - பெரிய மேளம், பட்சணம் - பெரிய திருப்பணியாரம் என்று அனைத்துமே பெரியதுதான்.
பெரியாழ்வார் பாசுரம் ( கருடன் மற்றும் திருவரங்கம்)
செருவாளும்புள்ளானன்மண்ணாளன் செருசெய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன்பகலாளனென்னையாளன் ஏழுலகப்பெரும் புரவாளன்
திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்றதிருவரங்கமே.
இதைச் சொல்லிவிட்டுக் கடைசியாக
எனக்குத் தமிழே தகராறு! சம்ஸ்கிருதம் எல்லாம் எங்கே இருந்து தெரியும்! உங்கள் முயற்சிக்கு நன்றி. :)"" என்று சொல்லி முடித்தேன்.
நல்லவேளையா அவங்க இதுக்கு பதில் எதுவும் சொல்லலை. இவங்க எனக்கு சுமார் ஏழெட்டு வருடங்களாகத் தெரிஞ்சவங்க தான். இருந்திருந்து என் பெண் அல்லது பிள்ளை வயசு இருப்பாங்க! ஆணா, பெண்ணா தெரியலை. சிலர் பெண் பெயரில் எழுதுவதாகச் சொன்னார்கள். மழலைகள் குழுமத்தில் கரிகாலன் பற்றி எழுதினப்போ என்னிடம், "கரிகாலன்" என்று எப்படிக் கூப்பிடலாம்!" என வாதம் செய்தார். இத்தனைக்கும் கரிகாலன் என்ற பெயர் நான் வைக்கலை. சரித்திரத்திலேயே குறிப்பிட்டிருக்கு என்று சொல்லியும் விடலை! திரும்பத் திரும்ப கரிகாலன் என்று சொன்னது அந்த அரசனை அவமதிக்கிறாப்போல். இந்தப்பெயரைச் சொல்லி எப்படிக் குறிப்பிடலாம் என்றே கேட்டார்கள். இது போல் சில பதிவுகளில் இவங்க இன்னும் சிலவற்றுக்குக் கேட்டிருந்தார்கள். ஆகவே இவங்க பெயரைக் கண்டாலே ஒதுங்கிப் போவது என் வழக்கம். இந்தப் பதிவில் ஶ்ரீரங்கம் குறித்தும் அந்த கருடன் குறித்தும் கேள்வி இருக்கவே ஓர் ஆர்வத்தில் பதில் சொல்லி விட்டேன். உடனே மற்றக் கோயில்களில் ஏன் அப்படி இல்லை என்று கேட்கிறார். அதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? கோயில் கட்டினவங்க கூட இப்போ இல்லை! :( எழுதி வைச்சது தானே! அதுவும் எல்லாக் கோயில்கள் பற்றியும் தெரிஞ்சுண்டு உடனே சொல்லணும்னா எப்படி முடியும்? ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு பத்ததி! வைகானச ஆகமம், பாஞ்சராத்திர ஆகமம் இவற்றுக்கும் கருடாழ்வார் இங்கே அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை.
திருப்பாற்கடலில் இருந்து இந்தப் பிரணவ விமானம் மேலெழுந்தபோது கருடன் அதைத் தாங்கி வந்தானாம். அப்படியே இங்கே வைக்கப்பட்ட விமானத்தோடு பெருமாள் எப்போக் கூப்பிடுவார் என கருடன் காத்திருப்பதாகத் தான் இங்குள்ள பெரியோர்கள் சொல்கின்றனர். எனக்குத் தெரிந்ததைத் தான் நான் சொல்ல முடியும்! இதிலே நான் என்ன தப்பு செய்திருக்கேன் என்பதை நண்பர்களான நீங்கள் எல்லோரும் எந்தவிதமான மனத் தடங்கலும் இல்லாமல் தவறு என் பக்கம் எனில் என்ன தவறு, என்ன சொல்லி இருக்கணும் என்பதைச் சுட்டிக் காட்டுமாறு வேண்டுகிறேன்.
இதைப்பதிவிட வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இரண்டு நாட்களாக மன உளைச்சல் தாங்கலை. அதிரா மாதிரி மனோபாவத்தை இறைவனிடம் வேண்டிக் கொண்டு இதுவும் கடந்து போம் என நினைக்க வேண்டும். அத்தகைய மனோபாவம் எனக்கும் கொடு பிள்ளையாரப்பா!
//அந்தக் கோயில்களில் கேட்கவும்//
ReplyDeleteஉங்களது இந்தப்பதிலில்தான் புரிதல் தடம்மாறி இருக்கிறது.
//எனக்குத் தெரியவில்லை// என்று சொல்லி இருந்தால் மனச்சஞ்சலம் வந்து இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.
நாம் சொல்ல நினைத்தபடியே பிறருடைய புரிதல் இருக்கும் என்று கருதமுடியாது.
மேலும் கருத்துப்போரை நட்புடன் இணைத்துப் பார்ப்பது தவறு.
கருத்தில் இணையவில்லை என்பதால் எதிரியாக நினைக்கவும் கூடாது.
எல்லாம் தெரிந்தவர் உலகில் எவரும் இல்லை.
//அந்தக் கோயில்களில் கேட்கவும்// தெரியலை கில்லர்ஜி, நான் சாதாரணமாய்த் தான் சொன்னேன். அதோட ஆதாரம் தேடணும்னு வேறே ஆர்வமாக இருந்தது. ஆகவே அவசரமாய்ச் சொல்லிட்டுப்போயிட்டேன். அதுஇப்படிப்புரிஞ்சுப்பாங்கனு நினைக்கலை! :( எத்தனையோ பெரியவங்க கிட்டே எல்லாம் சொல்லி இருக்கேன். அவங்க உடனே தெரிஞ்சுக்கணும்னு சொன்னதால் அந்தக் கோயில்களில் கேளுங்க என்பதைச் சொன்னேன். ம்ம்ம்ம்ம்ம் இப்படி ஒரு கோணம் இருக்கா? நன்றி, சுட்டிக் காட்டியதற்கு! இனி கவனமாக இருக்கணும்! :)))))
Deleteஆனால் அவங்க எப்படி மற்றக் கோயில்கள் பத்தியும் நான் சொல்லணும்னு எதிர்பார்த்தாங்க? அதான் புரியலை! :( நான் ஶ்ரீரங்கத்தில் இருப்பதால் இந்தக் கோயில் பத்தித் தெரியும்! மற்றக் கோயில் பத்தியும் நான் சொல்லணும்னு எப்படி நினைச்சாங்க?
Deleteமுதல் புரிதலில் தவறு தொடங்கியதால் வார்த்தைகள் தடுமாறி விழுகின்றது. இது மனித இயல்பு.
Deleteநான் உங்களை குற்றம் சொல்வில்லை ஆனால் நாம் வாதாடுவதற்கு இறங்கும்போது எதிர்புறமும் நம்மைப் போன்ற விஸ்தார மனமுள்ளவரா ? என்பதை தீர்மானித்துக் கொள்வது மிகமிக அவசியம்.
மேலும் ஒரு கசப்பான நிகழ்வு ஒருவரது மனதை விட்டு மறைய மறுக்கிறது என்றால் ?
Deleteஅவர் 100% நியாயமான உணர்வாளரே அவ்வகையில் நீங்களும் இந்த ஜாதிதான்.
இந்நேரம் அவர் இதை மறந்து விட்டு போயிருப்பார்.
மறக்க முயலுங்கள். ஒரு சமையல் பதிவைப் போட்டு மனதை திசை மாற்றுங்கள்.
அதான் சொன்னேனே கில்லர்ஜி, கருடன் பத்திய கேள்வினதும் கேட்டது யார்னு பார்க்காமல் பதில்கொடுத்தேன். அப்புறமா ஆதாரங்களைத் தேடப்போனேன். அப்போத் தான் மத்தக் கோயில்கள் பத்திக் கேட்டதும், அதுக்கு நான் யதார்த்தமாக கூகிள் தேடலில் இருந்து கொண்டே பதில் கொடுத்தேன் ஆதாரத்தோடுபோவோம் என! அதுக்கு வந்த பதிலைப் படித்த பின்னர் தான் என்னடா இது! யாரு இப்படி எல்லாம் இந்தப் பதிவில் பேசினதுனு பார்த்ததும் தான் அவங்க பெயரே கண்ணில் பட்டது. அப்புறமாத் தான் புரிஞ்சது! தப்புப் பண்ணிட்டோம்னு! இருந்தாலும் விடாமல் விளக்கலாம் என்றே முயன்றேன். :(
Deleteநீங்க சொல்றாப்போல் கொஞ்சம் மொக்கை ஏதேனும் போட்டுத் தான் மனதைத் தேத்திக்கணும் கில்லர்ஜி! :)
Deleteஅதை விரைவில் போடுங்க :) ஏன்னா நான் தி ஜாவின் சிறுகதைத்தொகுப்பு 1200 பேஜஸ் இருக்கும் என் சிஸ்டரின்லா தந்தாங்க படிக்கணும் அத திறந்தா ஒரே மூச்சில் படிச்சிட்டுதான எழும் புவேன் :)
Deleteஏஞ்சல், மொக்கைக்கு அவ்வளவு ஆர்வமா? :))))
Deleteyessss :))
Deleteகீதா மேடம்,தவறு உங்களுடையது அல்ல. இதுவும் கடந்து போகும்
ReplyDeleteநன்றி சிவா. நீங்க எந்த சிவானு தெரியலை! நிறைய சிவாவைத் தெரியும் முன்னெல்லாம்! :)
Deleteநான் புது சிவா மேடம்.
Deleteநன்றி. உங்க ப்ரொஃபைலும் போய்ப்பார்த்தேன். தெரிஞ்ச சிவாவானு! :)
Deleteநாச்சியார் கோவில் கல் கருடன் - மூலவர்தானே. அவர் எழுந்தருள்கிறார்.
ReplyDeleteஇதைப் பார்த்துத்தானோ என்னவோ, பிரகதீச்வரர் ஆலயத்தில் மிகப் பெரிய நந்தியை நிர்மாணித்திருக்கிறார்கள்.
மற்றபடி, தவறுதலாக வார்த்தைப் பிரயோகம் இணையத்தில் வந்துவிடும் (நம்மை அறியாமலே. நாம் ஒன்று நினைத்து படிப்பவர்கள் வேறாகப் புரிந்துகொள்வார்கள்). அந்த மாதிரி சமயத்தில், 'தவறா வந்துவிட்டது' என்று முடித்துக்கொள்ளலாம், இல்லைனா 'கடந்து போயிடலாம்'. சாதாரண விஷயத்துக்கு நமக்கு எதுக்கு ஹெல்த் பிரச்சனையைக் கொண்டுவரணும்?
மற்றபடி நல்ல எண்ணத்துடந்தான் நீங்கள் விளக்கம் சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள். அப்போ ஏன் அதைப் பற்றிக் கவலைப்படணும்?
நாச்சியார் கோயிலில் கருட வாகனம் இல்லை. மூலவரான கருடனிலேயே பெருமாள் எழுந்தருளுவார். அது ஒரு கோலாகலமான திருவிழா! இங்கே அப்படி இல்லை. நீங்கள் ச்ரீரங்கம் கருடனைப் பார்த்திருப்பீங்களே! சாதாரண விஷயம் தான்! ஆனால் மனசு ரொம்பவே பாதிச்சுடுத்து! ஏற்கெனவே பட்ட அனுபவங்கள் வேறே நினைவில் வந்தது! :)))) மற்றபடி கவலை எல்லாம் இல்லை. ஒரு மாதிரியான தவிப்பு! :)
Deleteநோஓஓஓஓஓ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ.. அதெப்பூடி அதுக்குள் வந்திட்டினம் கர்ர்ர்ர்ர்:))
ReplyDeleteஹாஹாஹா, ஹிஹிஹிஹி, ஹெஹெஹெஹெ!
Deleteஈவினிங் வாறேன் கீசாக்கா .. வெளியே போகிறோம்ம்..
ReplyDeleteவாங்க அதிரடி, மெதுவா சாயங்காலமா வாங்க, அவசரமே இல்லை. நான் தூங்கிட்டு இருப்பேன். முழிச்சு எழுந்து வந்து தான் கமென்ட் பொப்லிஷ் பண்ணுவேன். அதுக்குள்ளே பொயிங்காதீங்க! :))))
Deleteஹா ஹா ஹா கீசாக்கா நான் இப்போ மெடிரேஷன் போறேன் எல்லோ:) அங்கின சொல்லித்தந்தார்கள் பொயிங்கக்கூடாதாம்ம்:))
Deleteஞானி, நீங்க நிஜம்மாவே ஞானி தான். நான் சுமார் 16 வருடங்களில் கடந்த இரு வருடங்களாகத் தான் யோகாசனம் செய்ய முடியவில்லை. தியானமும் கொஞ்சம் கொஞ்சம் காலம்பர உட்கார்ந்தால் உண்டு. ஆனால் நீங்க இப்போத் தான் போறீங்க! உங்களோட மனது ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கும் மனம்! எல்லாவற்றையும் தள்ளிக் கொண்டு போகும் இந்த மனோபாவம் இத்தனை வருஷம் நான் செய்த யோகாசனமோ, தியானமோ எனக்குத் தரலை! இதைச் சொல்ல எனக்கு வெட்கமும் இல்லை! உண்மை அதானே! :)))))
Deleteஹா ஹா ஹா கண்ணே கலங்கி விட்டது கீசாக்கா.. இல்ல இது தியானத்தால வந்ததல்ல.. நான் சின்ன வயசிலிருந்தே தத்துவங்களுக்கும்.. முக்கியமா கண்ணதாசன் அங்கிளின் எழுத்துக்கும் அடிமையானமையால இருக்கும்.... உங்களிடம் அவரின் அர்த்தமுள்ள இந்துமதம் இருக்குதோ?.. மனதில் கொஞ்சம் மனக் கஸ்டம் வந்தால் அதை எடுத்து கொஞ்சம் படியுங்கோ.. மனம் இலேசாகிடும்...
Deleteஞானி, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் தொடராக வந்தப்போவே படிச்சிருக்கேன். புத்தகம் இல்லைனாலும் இணையத்தில் கிடைக்கலாம். தேடிப் பார்க்கிறேன். தத்துவங்களுக்கு நானும் அடிமை தான்! ஜேகேயில் இருந்து எல்லாமும் படிச்சிருக்கேன் தான்! ஆனால் நடைமுறையில் இல்லை அல்லவா? நீங்க நடைமுறையிலே வெகு அநாயாசமாக் கொண்டு வரீங்க! உண்மையில் உங்களைப் பார்த்தால் பொறாமைனு சொல்லணும்! :)))))
Deleteஎனக்கும் இப்போல்லாம் ஞானியை பார்த்து கண்ணதாசன் அங்கிள் புக்ஸ் எடுத்து படிக்க ஆசையா இருக்கு :)
Deleteஆனா உலகத்துக்கு ஒரு ஞானி போதும்னு கட்டுப்படுத்திக்கறேன் :)
அதானே! ஒரு ஞானிபோதுமே! :))))
Deleteஅட...என்ன இது...
ReplyDeleteநானும் fb ல திரு.சுஜாதா தேசிகன் அவர்கள் பதிவில் இந்த கருடனை பார்த்து சில நாள் முன்பு நானும் மிக அதிகமாக ரசித்தேன்.....
ஆனால் இந்த விவாதங்களை காணும் போது கஷ்டமாகவே இருக்கு...
சரியான புரிதல் இல்லா வாக்குவாதங்கள்...
இதில் மன வருத்தங்கள் மட்டுமே வருகிறது...
விடுங்க..அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்
நன்றி அனுராதா ப்ரேம்குமார், ஆறுதலான வார்த்தைகள் உண்மையாகவே ஆறுதலைத் தருகின்றன.
Deleteவிடுங்கள்.. கடந்து போகட்டும்... இதற்கெல்லாம் கவலை வேண்டாம்!...
ReplyDeleteபெரிய ரங்கு கிட்டே கொஞ்ச நேரம் ஆத்மார்த்தமா பேசினீங்களோ!...
பேசுங்க.. எல்லாம் சரியாயிடும்!..
>>> மேலும் ஒரு கசப்பான நிகழ்வு ஒருவரது மனதை விட்டு மறைய மறுக்கிறது என்றால்?..
அவர் 100% நியாயமான உணர்வாளரே!.. அவ்வகையில் நீங்களும் இந்த ஜாதிதான்...<<<
அவ்வகையில் எளியேனும் இந்த ஜாதி தான்...
கில்லர்ஜி அவர்களின் அமுத மொழிக்கு நன்றி..
வாங்க துரை, நீங்க என்னை விடச் சின்னவராத் தான் இருப்பீங்க! (ஹெஹெஹெ! வேறே வழியில்லை, இம்மாதிரி சமயத்தில் உண்மை சொல்லித் தானே ஆகணும்.) :) ஆகவே துரைனே சொல்றேன். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteஅடடா ! முகப்புத்தகத்தில் இப்படி நிறையபேர் இருக்காங்க .எதுக்கு டென்சன் கோபம்ப்படறாங்கன்னே தெரியாதது இதில் என்னென்ன அவங்களுக்கு விளக்கம் சொல்லப்போய் நாம் டென்ஷனாகிடுவோம் வியாக்கியானம் பேசுவோருடன் நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்கக்கா .வாக்குவாதங்கள் நன்மைதரும்னா அதில் நமது நேரத்தை செலவழிக்கலாம் .இதுக்குதான் பல இடங்களில் சிலரின் பதிவுகள் பதில்கள் என்னை உசுப்பி விட்டாலும் வடிவேலு ஸ்டைலில் ஒண்ணுமே ஆகலியேன்னு சிரிச்சிட்டு கடக்கிறேன் :)
ReplyDeleteஇதில் உங்கள் தவறுன்னு ஒன்றுமில்லை .மற்ற கோயில்களில் கேட்கவும் என்ற பதில் அவரை உசுப்பிவிட்டிருக்கலாம் ஆனால் கரிகாலன் பெயருக்கே வாக்குவாதம் செய்தவர் என்பதை படிக்கும்போது அவர் கோபக்காரர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக தோணுது .மே பி அவருக்கும் இரண்டொரு நாட்கள் கழித்து அட சே நானா அவசரப்பட்டுட்டோமேன்னு தோன்றலாம் ..
நாம் பேசும்போது எதிரில் இருப்பவர் என்ன மன நிலையில் இருக்காரா அதைப்பொறுத்தே உரையாடலின் போக்கு செல்லும் அவர் அட்ரீனலின் எபக்ட்டில் இருந்திருப்பார் :) சரி விடுங்க .
ALSO கோபம் என்பது பதிவு அலல்து உரையாடலை பொறுத்து மட்டும் அமைவதில்லை அக்கா சிலநேரம் பல காரணிகள் ஸ்ட்ரெஸ் உணவு சூழல் எல்லாமே .எல்லாருக்கும் எல் லாம் தெரிந்திருக்கும் என்ற அவசியமுமில்லை .நான் க்ரிஸ்டியந்தான் ஆனா ஆங்கிலிகன் பற்றி மட்டுமே தெரியும் மற்ற பிரிவுகள் கத்தோலிக்கர் பற்றிலாம் தெரியாதே .நானும் உங்களைபோலதான் சொல்லியிருப்பேன் /மற்ற கோயில்களில் கேளுங்கள் என்று
//மே பி அவருக்கும் இரண்டொரு நாட்கள் கழித்து அட சே நானா அவசரப்பட்டுட்டோமேன்னு தோன்றலாம் ..// தோணாது! ஏனெனில் அவங்க எப்போவுமே விடை தெரிஞ்ச கேள்வியைத் தான் கேட்பாங்க. நாம் என்ன சொல்றோம்னு பார்ப்பாங்க! அப்புறமா இதுக்கு இப்படிச் சொல்லக் கூடாது, இப்படித் தான் சொல்லணும், இதான் சரி என்பாங்க! இல்லைனா முன் முடிவு எடுத்துக் கொண்டு வந்து கேட்பாங்க! பல முறை மழலைகள் குழுமத்திலும் வேறொரு குழுமத்திலும் பார்த்தேன். :( இப்போக் கடந்த நான்கைந்து வருஷமாக அதிகம் பார்க்கலை!
Deleteம்ம் உண்மைதான் இப்படிப்பட்டவங்களுக்காக நம்ம நேரத்தில் கொஞ்சூண்டு கூட விரயம் செய்ய கூடாது .நிறையயோசிச்சி எழுதநினைத்து வச்சது ..கீதா ரெங்கன் கதை மனஸுக்குள் புகுந்து எல்லாத்தையும் மறக்கடிச்சி
Deleteஅதோட கீதாக்கா எனக்கொரு பழக்கம் இருக்கு என் மனசு உள்ளுணர்வு 100 % ஓகே சொன்னால் மட்டுமே யாருடனும் பழகுவேன் .கொஞ்சம் புதியவர்களின் குணம் நெருடுச்சினாலும் தூர ஓடிடுவேனே :)
Deleteஎச்சூஸ் மீ :) ஏதாச்சும் கமெண்ட்டை ரெண்டு மூணுதரம் தட்டி விட்டேனா தெரிலா நிறைய இருந்தா ஒன்றை மட்டும் பப்ளிஷ் :)
Delete//தோணாது! ஏனெனில் அவங்க எப்போவுமே விடை தெரிஞ்ச கேள்வியைத் தான் கேட்பாங்க. நாம் என்ன சொல்றோம்னு பார்ப்பாங்க!//
Deleteஅப்போ அவர் வேணுமெண்டே நடக்கிறார் என்பது நன்கு தெரியுதெல்லோ? பிறகெதுக்கு திரும்பத் திரும்ப போய்ப் பதில் சொல்ல முற்படுறீங்க?.. தெரிந்து கொண்டு ஒருவர் தெரியாதமாதிரிக் கேட்கிறார் எனில்.. அங்கு அவர் நடிக்க்கிறார் எனத்தானே அர்த்தம்? எனக்கு இப்படி நடிப்போரைப் பிடிக்கவே பிடிக்காது, அல்லது எனக்கு இதுக்கு பதில் தெரியும், இருப்பினும் உங்கள் பதிலை அறிய ஆவல் எனச் சொன்னால் ஓகே..
நீங்களாகவே போய் அவர் பின்னும் வலையில் விழுந்து விட்டு:), பின்பு.. என்னை வலையில மாட்டிட்டார் என்றால் என்ன அர்த்தம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒதுங்கிடுங்கோ.. உலகில் இருக்கும் எத்தனையோ கோடி மக்களுக்குள் ஒருவரை இழப்பதால் நிங்க ஒன்றும் கிலோக்கணக்கில் குறைஞ்சிட மாட்டீங்க ஹா ஹா ஹா:).
ஏஞ்சல், இந்த உள்ளுணர்வு சொல்வதை நானும் மதிப்பேன். இந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் சண்டையே வரும். கடைசியில் நான் சொல்வது சரியா இருக்கும். அரை மனசா ஏத்துப்பார்! :))))) நானும் உள்ளுணர்ச்சி சொல்வதை வைத்தேப்பழகுவேன்.
Deleteஞானி அதிரா, முதல் 2 கமென்டுகள் யாருனு தெரியாமலேயே கொடுத்திருந்தேன். அதுக்கு வந்த பதிலைப் பார்த்து மன வருத்தத்தில் மேலே சொல்லும்படி ஆயிற்று! அதோடு விட்டிருக்கணும் தான்! ஆனால் என்னுள்ளும் ஈகோ னு ஒண்ணு இருக்கே! அது ஏத்துக்கலை! ஏனெனில் நான் ஶ்ரீரங்கத்தில் இருப்பதால் அந்தக் கோயில் பத்தித் தெரிஞ்சு வைச்சுச் சொல்றேன். மற்ற ஊர்கள் அப்படி இல்லையே!
Delete/ அதிரா மாதிரி மனோபாவத்தை இறைவனிடம் வேண்டிக் கொண்டு இதுவும் கடந்து போம் என நினைக்க வேண்டும். அத்தகைய மனோபாவம்//
ReplyDeleteஆமாக்கா ஆமா :) ஆனா 98 % தான் ஒத்துக்குவேன் பிக்காஸ் :)
தட்டு நிறைய வெஜ் சமோசா வச்சிட்டு பெர்மிஷன் கேக்கறேன் குடுக்க மாட்டேங்கிறாங்க :)
ஹெஹெஹெ, வெஜ் சமோசா நீங்க சாப்பிடுவிங்க? நீங்க ரொம்பவே உணவுக் கட்டுப்பாடு உள்ளவராச்சே. சமோசா மைதா மாவில் செய்வது. ஒரு சிலர் தான் கோதுமை மாவு சேர்க்கிறாங்க. அதனால் உங்களுக்குக் கொடுத்திருக்க மாட்டாங்க! :))))
Delete//தட்டு நிறைய வெஜ் சமோசா வச்சிட்டு பெர்மிஷன் கேக்கறேன் குடுக்க மாட்டேங்கிறாங்க :)///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருங்கோ ஒருநாளைக்கு கீசாக்கா ஏதும் சினிம ரிவியூ ஏடாகூடமாப் போடுவா.. முன்பு குறும்பட ரிவியூ போட்டாவே அதுபோல:) அன்று உங்களுக்கு நானே சமோசா தந்து வழி அனுப்பி வைக்கிறேன் கீசாக்கா பக்கம் கொமெண்ட்ஸ் போட ஹா ஹா ஹா:).
ஹிஹிஹி, சினிமா இப்போதைக்கு ஏதும் பார்க்கலை. நீங்க சொல்றதுக்காகவே பார்க்கணும்னு தான் இருக்கு. இந்தத் தொலைக்காட்சியில் செட் டாப் பாக்ஸ் போட்டப்புறமா எந்த சானல் எதிலே வருது ஒண்ணுமே புரியலை! டிவி கிட்டே போயே ஆறு மாசத்துக்கு மேல் ஆச்சு! :)))
Deleteசில சமயங்களில் சில வார்த்தைகள் நாம் நினைக்கும் அர்த்தத்தில் இல்லாமல் வெளிப்பட்டு விடும். பேசினாலாவது பாவத்தில் புரிய வைக்கலாம். எழுத்தில் வரும்போது எதிராளிகள் என்ன புரிந்து கொள்கிறார்களோ அதுதான். "அந்தக் கோவில்களில் கேட்டால் அவர்கள் இதற்கான விளக்கத்தைச் சொல்லக் கூடும்" என்பது மாதிரி பதில் அளித்திருக்கலாம். விடுங்கள். இதுவும் கடந்து போகும். சில சமயங்களில் இப்படித்தான் என்று விட்டு மறந்து விடுங்கள்.
ReplyDeleteவாங்க சிரிராம்! (ஹெஹெஹே) ஶ்ரீராம், நீங்க சொல்வது சரியே! நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன். அப்போத் தேடிட்டு இருந்த மும்முரத்திலே விரிவான பதில் கொடுக்கணும்னு எல்லாம்தோணலை. மேலும் நான் சொன்னது தப்பாய்ப் புரிந்து கொள்ளப்படும்னு நினைக்கவே இல்லையே! :(
Deleteசிற்...றாம் சொல்வதைப்போல..:)நமக்குத் தெரிஞ்சவர், நன்கு பழக்கமானவர் எனில், கொஞ்சம் முறைச்சு ஏசிப்போட்டு.. இனி இப்படிப் பண்ணாதே எனச் சொல்லிட்டு தொடரலாம், தெரியாத ஒருவர் எனில் ஒதுங்குவது பெட்டர் என்பதே என் கருத்து.
Deleteஶ்ரீராமுக்குத் தெரியும் யாராவது தப்பாய்ப் புரிஞ்சுண்டா அவங்களை விட்டு விலகிடுவேன் என்பது! அவர் அறிவார் ஞானி! ஆனால் இது என்னமோ நேரம்! சரியில்லை! மாட்டிக் கொண்டு விட்டேன்.
Delete
Deleteகீதாக்காவுக்கு இதை நான் முன்னரே அவரின் இன்னொரு அனுபவத்தில் சொன்னேன்.
:))
ஆமாம், நாம் ஒரு அர்த்தத்தில் சொல்ல அவர் நினைக்கும் விதத்தில் தான் எழுதணும்னு பிடிவாதம் பிடிப்பார் அவர்! :)))) அப்புறமா அந்தப் பக்கமே போவதில்லை! :)))
Deleteரெண்டு பேர் ஶ்ரீராம்! :))) இன்னொருத்தரை மறந்துட்டீங்க! :)
Deleteநான் அந்த இன்னொருவரைத்தான் சொன்னேன்!!!
Deleteஹெஹெஹெ ஶ்ரீராம், நீங்க சொல்லாத அந்த இன்னொருத்தரை நான் நினைச்சேன். :)))) அதுவும் தெரியும் தானே! :))))
Delete//. !நீங்க என்ன கோயிலின் அதிகாரபூர்வமான அதிகாரியானு. ///
ReplyDeleteசிலர் இப்படித்தான் கீசாக்கா சபை நாகரீகம் என்பதையும் மறந்து மனதை நோகடிக்கும்படி பேசுவார்கள்.. இப்படியான இடங்களில் பேசாமல் ஒதுங்கிப் போவதே நல்லது என்பது என் கருத்து.. வாதம் செய்வதில் அர்த்தமில்லை.
வாங்கஞானி! இதை விடக்கடுமையான வார்த்தைப் பிரயோகம் இருந்தது. அவங்களுக்கே மனசு உறுத்தியதா, யாரும் சொன்னாங்களா தெரியலை! எடுத்துட்டாங்க! வாதம் செய்திருக்கக் கூடாது தான்! நேரம்! :(
Deleteஅப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்போது எனக்கு என்ன தோன்றும் என்றால், இது புதிதான கோபம் இல்லை. ஏற்கெனவே நம் மீது வேறு அபிப்ராயத்தில் இருக்கிறவர் இவர், அது இப்போது வெளிப்படுகிறது என்று தோன்றும்.
Delete@ஶ்ரீராம், அப்படியும் இருக்குமா? அவர்யார்னே எனக்குத் தெரியாது!
Deleteநமக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லையே...
Deleteம்ம்ம்ம், தெரியாதவங்க, முகம் தெரியாதவங்க நம்ம கூட சண்டை போடுவது இது எனக்கு 3 ஆம் தரம். முதலில் குழுமத்தில் ஒருத்தர். என்ன காரணம்னே தெரியாது. கடுமையான வார்த்தைகள்> என்ன சொன்னாலும் நீ யார் சொல்ல! என்பார்! :( நெருங்கிய நண்பர் ஒருத்தரிடம் என்னோட பேசக் கூடாது என்பார்! எனக்கு வேடிக்கையா இருக்கும்! அடுத்து ஒருத்தர் பதிவுகளீல் தன் கருத்தைச் சொல்லி அது போல் எழுது என்பார்! :)))) இப்போ இந்தப் பேர்வழி! :(
Deleteகருட வாகனம் தெரியும், கருடனுக்கென ஒரு கோயில் உண்டோ? கேள்விப்பட்டதில்லை நான், கம்பராமாயணத்தில் வரும் பறவைதானே கருடபகவான்?.
ReplyDeleteஅதிரடி ஞானி, கருடனுக்கெனக் கோயில் இருப்பதாய்த் தெரியலை! கம்பராமாயணத்தில் மட்டுமில்லாமல் பாகவதம், கம்ப பாரதம், சே! மஹா பாரதம் எல்லாத்திலும் கருடன் வருவார்! கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்காரோ அங்கெல்லாம் கருடனும் உண்டு! :) நாச்சியார் கோயில் எனக் கும்பகோணம் அருகே ஒரு பெருமாள் கோயில். அங்கே கல்லினால் செதுக்கப்பட்ட கருட விக்ரஹம். அந்த ஒரு கோயிலில் மட்டும் உலோகத்தால் ஆன கருட வாஹனம் இல்லை. பெருமாள் இந்தக் கல் கருடன்மேலேயே எழுந்தருளுவார். இவரைப் பற்றி எழுதி இருக்கேன், சுட்டி தேடிப் போடறேன்.
Delete//இருந்திருந்து என் பெண் அல்லது பிள்ளை வயசு இருப்பாங்க! ஆணா, பெண்ணா தெரியலை. //
ReplyDeleteஅப்படித்தெரியாத ஒருவருக்கு நீங்க இவ்ளோ விளக்கம் கொடுக்கப் போனதே வேஸ்ட்.. சரி அனுபவங்கள்தானே நமக்கு நல்ல பாடத்தைக் கற்பித்து விட்டுப் போகிறது.. சோ இனிமேல் பார்த்து நடவுங்கோ..
உண்மை தான்
Deleteஉண்மைதான், இனிமேல் பார்த்துத் தான் நடக்கணும்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரங்க்ஸ் பேச்சுக் கொடுத்தாரா! அதிலே இப்பூடி வந்திருக்கு! :P
Delete//"கரிகாலன்" என்று எப்படிக் கூப்பிடலாம்!" என வாதம் செய்தார். இத்தனைக்கும் கரிகாலன் என்ற பெயர் நான் வைக்கலை. சரித்திரத்திலேயே குறிப்பிட்டிருக்கு என்று சொல்லியும் விடலை! திரும்பத் திரும்ப கரிகாலன் என்று சொன்னது அந்த அரசனை அவமதிக்கிறாப்போல். ///
ReplyDeleteஇதென்ன கொடுமை இது? நாங்க கடவுளையே பெயர் சொல்லித்தானே அழைக்கிறோம் அப்போ கரிகாலன் எம்மாத்திரம் ஹையோ ஹையோ?:))
இது கீசாக்கா ஆரோ உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான். வேண்டுமென்றே உங்களைத்தாக்குகின்றனர், நீங்க கொஞ்சம் ஒதுங்கியிருப்பது உங்கள் ஹார்ட் க்கு நல்லது. நாம் ஒருவித றிலாக்ஸ் க்காகத்தானே நெட் பக்கம் வருகிறோம்ம்.. அப்போ இங்கும் பிரச்சனை எனில் என்ன பண்ணுவது.. இதை எல்லாம் புத்திக்குக் கொண்டுபோய் ஓவரா சிந்திக்கக்கூடாது.. ஏதோ அன்று நாள் சரியில்லை என எடுத்திட்டுப் போய்க்கொண்டே இருங்கோ...
அதிரடி, தெரிஞ்சவங்க எல்லாம் இல்லை.எந்த ஊரில் இருக்காங்கனே தெரியாது. என்ன வேலை செய்யறாங்கனும் தெரியலை! வேணும்னு தாக்கறாங்கனு புரியுது! அதான் ஏன்னு தெரியலை.திரும்பத் திரும்ப கரிகாலன் என்று சொல்லி நான் சோழ மன்னனை அவமானம் செய்து விட்டதாகச் சொன்னார்கள். என்ன சொல்றது போங்க! :(
Deleteஇல்ல கீசாக்கா பேஸ் புக்கில் நிறையப்பேர் ஃபேக் ஐடியில் இருக்கிறார்கள், சிலர் உங்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம், இப்படி சின்னவர்கள்போல வந்து உங்களைச் சோதிக்கலாம், மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம்.. அதைச் சொன்னேன்... அதனால தெரியாதவர்கள் எனில் கொஞ்சம் ஜாக்ர்தையா இருங்கோ.
Deleteஇப்போ புளொக்கில் ஃபேக் ஐடி எனில், கொஞ்ச நாளில் கண்டு பிடிச்சிடலாம், ஆனா ஃபேஸ்புக்கில் அப்படிப் பிடிப்பது மிக மிக கஸ்டம்...:(...
அப்படீங்கறீங்க? சரி சாப்பிட்டுவிட்டு மத்ததுக்கு வரேன்.
Delete//இதிலே நான் என்ன தப்பு செய்திருக்கேன் என்பதை நண்பர்களான நீங்கள் எல்லோரும் எந்தவிதமான மனத் தடங்கலும் இல்லாமல் தவறு என் பக்கம் எனில் என்ன தவறு, என்ன சொல்லி இருக்கணும் என்பதைச் சுட்டிக் காட்டுமாறு வேண்டுகிறேன்.//
ReplyDeleteயாரோ தெரியாத ஒருவருக்காக உங்கள் ரைம் ஐச் செலவளித்து வியக்கம்:) ஜொள்ளப் போனதுதான் நீங்கள் செய்த தப்பு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
இன்னொன்று மனதில் வைத்துக் கொள்ளுங்கோ கீசாக்கா.. நாம் எப்பவும் நமக்கு வேண்டியவர்கள்.. தெரிந்தவர்கள் என நினைச்சுத்தானே கதைக்கப் போகிறோம்... ஆனா அவர்களின் பதில் கொஞ்சம் மரியாதைக் குறைவாகவோ அல்லது எடுத்தெறிஞ்சு பேசுவதுபோலவோ இருப்பின்.. உடனேயே அவ்விடத்திலிருந்து ஒதுங்கி மெளனமாகிட்டால்ல்.. அவர்களும் அமைதியாகிவிடுவினம், நமக்கும் மன உளைச்சல் இல்லை.. மெளனம் கலகநாஸ்தி:)).. இது நாம் தோத்துப் போயிட்டோம்ம் நமக்கொண்ணும் தெரியாதென நினைச்சிடுவார்களோ என்றெல்லாம் எண்ணவே கூடாது.. அது அவர்கள் கிட்னி:), அவர்கள் எண்ணம்.. என்ன வேணுமெண்டாலும் எண்ணிக்கொள்ளட்டும் நம்மைப்பற்றி நமக்குத் தெரியும் என நினைக்கோணும்.
அவங்க என்ன நினைச்சுப்பாங்க என்பது எனக்குக் கவலை இல்லை ஞானி! நான் செய்தது தப்பே இல்லையே! அப்புறமும் ஏன் இந்தக் கடுமை என்பது தான் என் மண்டைக் குடைச்சல்! :(
Deleteஅது ஒருவரின் எழுத்தை வைத்துத்தானே அந்த நபரை எடை போடுகிறோம்ம்.. சோ அவர் பற்றி அறிய இது ஒரு சந்தர்ப்பம் அவ்வளவே.. இன்னும் பெரிய பிரச்சனை வருமுன் இந்த சின்னப் பிரச்சனையோடு கடவுள் உங்களைக் காப்பாத்துகிறார் என நினைச்சு உசாராகிடுங்கோ.. இதில் கவலைப்பட என்ன இருக்கு?:)
Deleteநீங்க சொல்வது உண்மை தான் ஞானி! பல சமயங்களில் பிரச்னை வரும்போதெல்லாம் இதோடு போச்சேனு தான் நினைப்பேன். அப்படியே இப்போவும் நினைச்சுக்கணும். நன்றி.
Delete// யாரோ தெரியாத ஒருவருக்காக உங்கள் ரைம் ஐச் செலவளித்து வியக்கம்:) ஜொள்ளப் போனதுதான் நீங்கள் செய்த தப்பு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//
Deleteஆமாம். தெரிந்தவர் என்று நாம் எண்ணிக் கொள்பவரையே நாம் முழுதாக அறிவதில்லை. அப்படி இருக்கும்போது...!
அது தான் உண்மை. தெரிந்தவங்களே தப்பாய் எடுத்துக்கொண்ட சம்பவங்களும் உண்டு தான்! :(
Deleteஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!
Deleteயாராக்கும் அது?
Deleteநாம் இங்கு அதிகம் பழகுவது ஸ்கொட்டிஸ் உடன் என்பதாலோ என்னமோ.. இவர்களோடு சேர்ந்து நமக்கும் பெரும்பாலும் எல்லாம் ரேக் இட் ஈசி என்பது போலாகி விட்டது...
ReplyDeleteஇன்னொன்று இந்த வாழ்க்கை.... இந்த நெட்.. இந்த நட்பு... இந்த உலகம்.. எல்லாமே அநிச்சை:)) அப்படி இருக்கும்போது எதுக்காக மன உளைச்சலுக்கு ஆளாகிறீங்க? எல்லாமே அநிச்சை.. இதுவும் கடந்து போகும்.. உங்கள் மனதுக்கு சந்தோசம் தருவதில் மட்டும் அதிகம் நேரம் செலவழியுங்கோ.. போய் மாமாவுக்கு வாழைக்காய் ரோஸ்ட் செய்து குடுங்கோ.. அப்படியே ஸ்ரெப் பை ஸ்ரெப் படங்கள் எடுத்து.. எங்கள் புளொக் அனுப்புங்கோ:)) ஹா ஹா ஹா.
ஹாஹாஹா, ஞானி, வட மாநிலங்களிலும்பெரும்பாலும் இந்த"ரேக் (க்ர்ர்ர்) டேக் இட் ஈசி" மனப்பான்மை தான். வாழைக்காய் ரோஸ்ட் மாமாவுக்குப்பிடிக்காது. ஆனால் இன்னிக்கு விருந்தாளிகள் வராங்க. பொண்ணோட நண்பர்கள்! அம்பேரிக்காவில் இருந்து வந்திருக்காங்க! அதுக்காகச் சிறப்புத் தயாரிப்பு ஒண்ணு செய்யறேன். எல்லா ஏற்பாடுகளும் செய்து வைச்சாச்சு. அவங்க வரதுக்கு அரை மணி முன்னாடி சூடாச்செய்யணும்.
Deleteஹை அக்கா அப்பா திங்க பதிவுக்கு வந்த ஸ்பெஷல் வருமா அக்கா...
Deleteகீதா
ஞானியல்லவா அதான் வாழைக்க்ய் ரோஸ்ட் எல்லாம் செய்யத் தெரியாது போல அக்காகிட்ட ஸ்டெப் பை ஸ்டெப் போஸ்ட் கேட்டுருக்காங்க ஹா ஹா ஹாஅ ஹாஅ....ஹையோ அக்கா தெரியாம சொல்லிட்டேன்...அப்புறம்...பூஸோ கொக்கோ எனக்கோ வாழைக்காய் ரோஸ்ட் செய்யத் தெரியாது என்று திங்கவுக்கு அனுப்பிடப் போறாங்க....
Deleteசரி சரி அந்த ஃபேஸ்புக்ல என்ன சொன்னாங்க நீங்க உத்தரவு போடறீங்கனுதானே!!!! இப்ப நான் உத்தரவு போடறேன் உங்களுக்கு அந்த ஸ்பெஷன் தயாரிப்பு எங்களுக்கும் வேணும்...சொல்ல்புட்டேன்....ஒயிங்கா போட்டோ எடுத்துருக்கீங்களா இல்லையா...போஸ்ட் போடணும் ....இல்லைனா பூஸார் உங்களை தேம்ஸ்ல தள்ளிடுவாங்க காவிரில தண்ணி இல்லையெ...
கீதா
இன்னொன்று இந்த வாழ்க்கை.... இந்த நெட்.. இந்த நட்பு... இந்த உலகம்.. எல்லாமே அநிச்சை:)) அப்படி இருக்கும்போது எதுக்காக மன உளைச்சலுக்கு ஆளாகிறீங்க? எல்லாமே அநிச்சை.. //
Deleteஞானி!!! ஞானி! சரணம்!! சரணம்! ஹா ஹா ஹா ஹா ஹா
கீதா
ம்ம்ம்ம் தி/கீதா, உங்களுக்கு வாட்சப்பில் செய்தி கொடுத்திருந்தேன், எங்கே காணோம்னு! அதுக்குள்ளே வந்திருக்கீங்க! :) "திங்க" பதிவில் போடலாமா, இல்லை இங்கேயே போடலாமானு யோசனை. எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வந்தவங்களுக்குத் தெரியாது! :)
Deleteஃபோட்டோ எடுத்திருக்கேன். இன்னும் அப்லோட் பண்ணலை!
Deleteஇன்னிக்கு வாழைக்காய் வறுவல் செய்கையில் பூஸாரை நினைச்சுக் கொண்டே செய்தேன். :)))))
Delete:)
Deleteவரும் விருந்தாளிகளுக்கு சிறப்புத் தயாரிப்பு செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
ReplyDeleteசிலரிடம் வாதித்து பயன் இல்லை.
கவலைபட வேண்டாம்.
வாங்க கோமதி, கவலை எல்லாம் இல்லை! நன்றி.
Deleteஅப்பாடா.எத்தனை சப்போர்ட்.சரி நான் ஒரு புது குழப்பம் உண்டாக்குகிறேன்.சிவன் கோவில்களில் லிங்க வடிவில் தானே மூலவர் இருக்கிறார். வாகனம் தேவைப்படாத போதும் நந்தியார் ஏன் சந்நிதியை பார்த்தபடி இருக்கிறார். மேலும் எல்லா கோவில்களிலும் நந்தியார் ஏன் படுத்தே இருக்கிறார். இந்த கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும் கூறாவிட்டால் எலி செத்துப்போவதாக.
ReplyDeleteஆஹா! ஜேகே அண்ணா, கண்ணு படப் போகுது! :))))) புதுக்குழப்பம் எல்லாம் இல்லை, இந்தக் கேள்வி ஏற்கெனவே பலரும் கேட்டிருக்காங்க! எலி எல்லாம் எதுக்குச் செத்துப் போகணும். பாவம் இல்லையோ? :)))))
Delete///இந்த கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும் கூறாவிட்டால் எலி செத்துப்போவதாக.///
Deletehaa ஹா ஹா மீ பொறுக்கிட்டேன்ன்ன்ன்ன்:)).. இனி இதை வச்சே எல்லோரையும் ஓட்டிடுவேன்ன்:))..
நினைச்சேன்! :)))))
Deleteஎலினதும் அதிரா பூனைக்கு குஷியை பார்த்திங்களா :)
Deleteஹாஹாஹா ஏஞ்சல், பூசாருக்கு எலிசார் மேலே தான் எப்போவும் கண்!:))))
Deleteகீதா சாம்பசிவம் சகோதரி பல மாதங்கள் கழித்து ஃபேஸ்புக் நான் வந்த போதுதான் தெரிந்தது நிறைய விவாதங்கள் என்று. கேர்ஃபுல்லாக இருந்துவிட்டுப்போவது நல்லது என்று தோன்றியது. நீங்கள் சொல்லியதில் எந்தத் தவறும் இல்லை ஆனால் எல்லாவற்றையும் தவறாக எடுத்துக் கொள்பவர்களை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. உங்களுக்கு அப்படி ஒரு கர்வமோ அகங்காரமோ இருந்திருந்தால் நிச்சயமாகவிளக்கம் கூடக் கொடுத்திருக்க மாட்டீங்க. கூகுளில் ஆர்வத்துடன் தேடி அவர்களுக்குச் சொல்லப் போக....இப்படித்தான் சிலர். சில சமயம் நாம் சொல்ல நினைப்பது எழுதும் போது விடுபட்டு விடுகிறது. எனவே நீங்கள் நல்லதையே நினைக்கும் போது இதை விட்டுத் தள்ளுங்கள். உங்களை ஹேப்பியாக வைத்துக் கொள்ளுங்கள். இனிமேல் கவனமாக இருங்கள் சகோதரி.
ReplyDeleteகீதா: கீதாக்கா பாஸிங்க் களவுட்ஸ். விடுங்க ஆனா ஃபேஸ்புக்ல எல்லாம் இப்படியா? ஆனால் கேட்டுள்ளேன் அடிதடி சண்டை போல நாறுமாமே சில டாப்பிக்குகள். ம்ம்ம்ம்
அக்கா அவர்களின் புரிதல் அவ்வளவுதான். உங்கள் எண்ணம் நல்லதுதான் சில சமயம் நாம் நலல்தே சொல்லிருந்தாலும் அது எதிரிலிருப்பவர்க்கு விளங்காமல் போய்விடுகிறது என்ன செய்ய....ஜஸ்ட் கம் அவுட் அண்ட் இனி பார்த்து யாரு கொடுத்துருக்காங்கனு கூட ஒரு முறை வாசித்து மறைமுகமா ஏதேனும் இருககனும் பார்த்து பதில் கொடுங்கக்கா....இல்லைனா கண்டுக்காம வந்துருங்க....சரி சரி ஹேப்பியா உங்களுக்குப் பிடிச்சத செய்யுங்க....ரங்குவை பார்க்க முடியாதோ...இத்தனை நாட்கள்னு சொல்லிருந்தீங்ங்களே....சரி சரி அந்த ஸ்பெஷல் டிஷ் என்னவோ?!! திங்கவுக்குக் காத்திருகக்ணுமோ....வாங்க புதுசா செஞ்சத சொல்லுங்க...ஜாலியா கலாய்க்கலாம்...அதுல என்ன திப்பிசம் பண்ணினீங்களானும் சொல்லுங்க..ஹா அஹ ஹா
வாங்க துளசிதரன், நான் அதிகம் ஃபேஸ்புக்கில் இருப்பதில்லை. மிகவும் நெருங்கிய நண்பர்களின் பதிவுகளை மட்டும் பார்த்துக் கருத்துச் சொல்லுவேன். அப்படி இருந்தும் மாட்டிக் கொண்டேன். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteதி/கீதா, இனி யார் கொடுத்திருக்காங்க என்று பார்ப்பேன். அது நெருங்கிய நண்பர் பதிவு என்பதால் கேள்வி கேட்டவர் யாருனு கவனிச்சுக்கலை! ரங்குவைப் பார்க்கலாம். முகம் மட்டும் பார்க்கலாம். இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் திரையை நீக்குவாங்க. இப்போத் தானே ஒரு வாரம் ஆகுது! 48 நாட்கள் திரை போட்டிருப்பாங்க! அல்லது ஆடி பதினெட்டு ஆடி இருபத்தெட்டு இரண்டு நாட்களில் எந்த நாளில் 45,48 ஆம் நாளாக வருதோ அன்னிக்குத் திரையை நீக்குவதாய்ச் சொல்றாங்க!
இப்பல்லாம் நானும் அதிராவிடமிருந்து இந்த டேக் இட் ஈஸி பாலிசியைப் பழக முயற்சித்து வருகிறேன்.
ReplyDeleteஆம், அதிரா, ஏஞ்சலின் ஆகியோரிடமிருந்து நான் கற்கவேண்டியதும் நிறையவே இருக்கு.
Deleteகுறைந்தபட்சம் எனக்கு பதில் கொடுக்கும்போதாவது பெயர் சொல்லி போடவும். மெயிலில் படிக்கும்போது யாருக்கு பதில் சொல்கிறீர்கள் என்று தெரியமாட்டேன் என்கிறது.
ReplyDelete:)))
:( அது என்னமோ சில சமயம் அந்தக் கருத்தின் கீழேயே பதிவதால் பெயர் குறிப்பிடத் தோணுவது இல்லை. என்றாலும் கூடியவரை பெயரைச் சொல்கிறேன். உங்க பெயர் என்னமோ விடுபடுகிறது! :( நீங்களும் பலமுறை சொல்லி விட்டீங்க! :)))) எனக்கு மெயிலில் எந்தப் பின்னூட்டமும் (என்னோட பதிவுகளில்) வருவது இல்லை. இங்கே வந்து அவெயிடிங் மாடரேஷன் பார்த்தே தெரிஞ்சுக்கறேன். அப்படியே நான் கொடுக்கும் பதில்களோ, வெளியிடும் பின்னூட்டங்களோ மெயிலுக்குப் போவதில்லை! :)
Delete///ஸ்ரீராம்.04 July, 2018
Deleteகுறைந்தபட்சம் எனக்கு பதில் கொடுக்கும்போதாவது பெயர் சொல்லி போடவும். மெயிலில் படிக்கும்போது யாருக்கு பதில் சொல்கிறீர்கள் என்று தெரியமாட்டேன் என்கிறது.///
கீசாக்கா பெயர் போட்டிடாதீங்க:)) போஸ்ட்டை ஓபின் பண்ணிப் படிக்கச் சொல்லுங்கோ:) நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறார் ஹா ஹா ஹா:).
ஹாஹாஹா, ஞானி, சரியாச் சொன்னீங்க! என்ன சோம்பல் வேண்டிக்கிடக்கு! :)))))
Delete// போஸ்ட்டை ஓபின் பண்ணிப் படிக்கச் சொல்லுங்கோ:) நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறார் ஹா ஹா ஹா:).//
Deleteஅவசியமானா இங்கு வந்துதானே கமெண்ட் கொடுக்கவேண்டும்..!
அது!!!!!!!!!!!!!!!!!!
Delete'தெரியலை'ங்கிற வார்த்தையை 'அந்தக் கோயில்களில் கேட்கவும்'கு முன்னாடி சேர்த்திருந்தால் இத்தனை ப்ரச்னை மனக்கசப்பு வந்திருக்காதோ? இருந்தாலும் வாக்குவாதம் செய்யணும்னு நினைக்கறவங்களுக்கு வேறு காரணம் கிடைத்திருக்கும்! இதுவும் கடந்து போகும்....
ReplyDeleteஇருந்தாலும் சமையல் திப்பிச வேலைகளை மொக்கை பதிவாக பார்ப்பவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்....:-))))
ம்ம்ம்ம், அப்புறமாத் தோணும் இதெல்லாம், மிகிமா! முன்னாடி தோணாது. பட்டால் தானே தெரியும். கடலை மாவு பஜ்ஜிக்குக் கரைப்பதை என்ன செய்யலாம்னு ஏஞ்சலின் மூலமா ஒரு ஐடியா கிடைச்சது. செய்து பார்த்துட்டுச் சொல்றேன் அந்தத் திப்பிசத்தை! :)))))
Deleteஆஆவ் :) சீக்கிரம் செய்யுங்க :)
Deleteசப்பாத்திக்கு கடீ செய்யலாம். பெரிய வெங்காயம் நறுக்கிப் போட்டு மோடி பகோடா செய்யலாம். குளிக்க சோப்புக்கு பதில் உபயோகிக்கலாம்
Deleteஎலி என்று சொன்னது கணிணி மவுஸ் தான்.
ஹையோ ஜேகே அண்ணா, குளிக்க சோப்புக்குப் பதில் உபயோகிச்சா உடம்பெல்லாம் எரியாதோ! வேண்டாம். வேண்டாம்! அவ்வளவு கடலை மாவு போட்டு கடி செய்தாலும் சாப்பிட யார் இருக்காங்க? நான் இரண்டு நாளைக்கு ஒப்பேத்துவேன். அடுத்துச் சொன்னீங்க பாருங்க மோதி பகோடா! அது வேண்டாம், பஜியா பண்ணலாம்! குஜராத், ராஜஸ்தானில் பண்ணறாப்போல்! ஆனா ஏற்கெனவே பஜ்ஜிக்குக் கரைச மாவாச்சே அது! அதான் யோசனை! :))))
Deleteஅடக் கடவுளே கருடா. உன் முன்னிலையில் இந்த வாக்குவாதக் குமுறல்.
ReplyDeleteகீதாமா உங்களைக் கோபிக்கிறார்கள் என்றால்
அவர்களுக்கு மேல் மாடி காலின்னு.இன்னிக்கு
நான் ஒரு தப்பு பண்ணேன். அரைகுறை வீடியோ ஒண்ணை அனுப்பிட்டு
எல்லாரிடமும் ஸாரி சொல்லிண்டிருக்கேன்.
உங்கள் மேல் தப்பில்லை. விதண்டாவாதம் செய்கிறவர்களைக் கண்டு கொள்ள வேண்டாம்.
ஏதோ நடந்து போச்சு. இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கவும்.
வாங்க வல்லி. இப்படியும் மனிதர்கள். இதே மாதிரி ஒரு நண்பர் மின் தமிழ்க் குழுமத்திலும் இருந்திருக்கார். ஆகையால் எனக்கு இது புதுசு இல்லை! ஒதுங்கிப் போயிருக்கணும். கவனிக்காமல் இருந்துட்டேன்! :)))
Deleteநான் அவ்வளவாப் பின்னூட்டங்கள் எதிர்பார்ப்பதில்லை. என்றாலும் அதிக பட்சமாக 70,80 வரை வந்திருக்கு. அதுவும் தமிழ்மணம் நட்சத்திரமா இருந்தப்போனு நினைக்கிறேன். இப்போ இந்தப் பனிரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக 100 கருத்துகள் என்னோட பதில்களையும் சேர்த்து!
ReplyDelete