ஆகவே மத்தியானம் சாப்பிட்டதும் இரண்டு பேருமே தபால் நிலையம் கிளம்பினோம். அவர் மட்டும் போவதாகத் தான் இருந்தது. ஆனால் சூழ்நிலை சரியில்லை என்பதால் இருவராக இருந்தால் ஒருவருக்கொருவர் ஆலோசனை கேட்டுக்கலாம். தபால் நிலையம் போய் அங்கே எங்கே பார்சல் வாங்குவாங்கனு தெரியாதேனு முழிச்சுட்டு இருக்கிறச்சே நாங்க போன ஆட்டோ ஓட்டுநரே என்ன வேலைனு கேட்டுட்டுக் கரெக்டாப் பார்சல் அனுப்பும் பகுதிக்கு நேரே ஆட்டோவை நிறுத்திட்டார். அங்கே வெளிநாட்டுப் பார்சல் வாங்கும் பகுதிக்குப் போய்க் கேட்டதற்கு உங்க பொருளைப் பக்கத்தில் உள்ள பாக்கிங் பகுதியில் பாக் செய்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார். என்ன ஆச்சரியம்! அங்கே மூட்டை மூட்டையாக வெளிநாட்டுக்குப் பார்சல் அனுப்பப் பைகளை வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னே நாங்க கொண்டு போன சின்னப் பெட்டி ஒரு ஜுஜுபி! ஹிஹிஹி!
இரண்டு நபர்கள். ஒருவர் நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி நல்ல தரமான அட்டைப்பெட்டியில் பொருட்களுக்குத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து உள்ளே போட்டுச் சுற்றிலும் தெர்மோகோல் வைத்துப் பாதுகாப்புக் கொடுத்து அட்டைப்பெட்டிகளை நன்கு மூடி இந்தியத் தபால் துறையின் சீலோடு உள்ள டேப்பினால் ஒட்டி நன்கு கயிறு போட்டு நான்கு பக்கமும் கட்டித் தருகிறார். பக்கத்திலேயே கணினியில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு அதிகாரி, பார்சல் அனுப்புகிறவர்களிடம் அனுப்ப வேண்டிய விலாசம், அனுப்பும் நபர்களின் விலாசம் வாங்கிக் கணினியில் போட்டு அழகாகப் பிரின்ட் அவுட் எடுத்து அட்டைப்பெட்டியின் மேலே ஒட்டித் தருகிறார். மிகக் கச்சிதமான பாக்கிங்! நாம் அனுப்பும் அளவைப் பொறுத்தும் பாக்கிங் மெடரியலின் அளவைப் பொறுத்தும் பாக்கிங் சார்ஜ் வாங்குகின்றனர். நாங்க பார்த்தப்போ ஒருத்தர் பித்தளை அண்டாவையும் அதற்குள் துணிமணிகளையும் வைத்து, மொத்தம் 20 கிலோ வாஷிங்டனுக்கு அனுப்பக் கொண்டு வந்தார். அவருக்குப் பாக்கிங் சார்ஜ் மட்டும் 400 ரூ ஆயிற்று.
20 கிலோ எடைக்குக் குறைந்தது ஐந்தாயிரம் ஆகும் என்று அந்த அலுவலர் சொன்னார். இது தேவையா என்றும் கேட்டார். ஆனால் அவர் அனுப்பித் தான் ஆகணும் என்று சொல்லிட்டார். அங்கேயே விதம் விதமாக் கிடைக்குதே என நான் கூடச் சொன்னேன். அவர் கேட்கலை! இதுக்குள்ளே அந்த அதிகாரி பேசிக் கொண்டே எங்களோட சின்னப் பெட்டியை அழகாய்ப் பாக் செய்து அதன் மேல் விலாசங்களையும் ப்ரின்ட் அவுட் எடுத்து ஒட்டிக் கொடுத்தார். டிக்ளரேஷன் வேறே ஒட்டணுமாம். அது பணம் கட்டும் இடத்தில் கொடுப்பாங்க என்று சொல்லி விட்டு எங்களிடம் பாக்கிங் சார்ஜாக 25 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டார். அவங்க இருவரும் மத்தியானச் சாப்பாடுக்குக் கூடப் போகவில்லை. ஏற்கெனவே இருந்தவர்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். அனைவருக்கும் அந்த அதிகாரி தன் செலவில் சூப் வரவழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்களையும் கேட்டார். நாங்க அப்போத் தான் சாப்பிட்டுவிட்டுப் போயிருந்ததால் வேண்டாம்னு சொல்லிட்டோம்.
பின்னர் பணம் கட்டும் இடம் வந்து பாக்கிங்கை எடை போட்டு பதிவுத் தபாலில் அனுப்பச் செலுத்த வேண்டிய கட்டணமான 371 ரூபாயைக் கொடுத்து டிக்ளரேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு அவங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தோம். தபால் துறை நவீனமயமாக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் இத்தகைய அரிய சேவையைக் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் செய்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியது. சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்னும் நினைப்பில்லாமல் வரும் நபர்களிடம் அவங்க நஷ்டப்படாமல் இருக்கும்படியான ஆலோசனைகளையும் கூறி சேவையும் செய்வது மிக உயர்ந்த விஷயம். நாங்க எப்போவுமே கூரியரை விடத் தபால் சேவையையே நாடுவோம். குறித்த நேரத்தில் போயும் சேர்கிறது. இப்படியான நபர்களை நேரடியாகப் பாராட்டை உடனே தெரிவித்து அவர்களை மனம் மகிழச் செய்யலாம். தபால் துறை உண்மையிலேயே சேவை நோக்கோடு தான் செயல்படுகிறது என்பதைக் கிராமத் தபால் நிலையங்களில் அதிகம் காணலாம். குடும்ப விஷயங்களைக் கூடத் தபால் அதிகாரியிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனைகள் கேட்கும் கிராமமக்கள் உண்டு.
அதோடு இல்லாமல் இத்தகையை அரிய சேவை திருச்சி போன்ற நகரங்களிலும் இருப்பது தெரியாமல் பலரும் சென்னை மாதிரி வசதி உண்டா என்கின்றனர். நாங்க இங்கே ஶ்ரீரங்கம் குடித்தனம் வந்தப்போ ஶ்ரீரங்கம் ஒரு கிராமம் அங்கெல்லாம் என்ன வசதி இருக்கும்னு எல்லோரும் கேலி பேசினாங்க. முக்கியமாய் மருத்துவ வசதி இல்லைனு சொல்வாங்க! ஆனால் இங்கேயும் ஃப்ரன்ட்லைன் மருத்துவமனையிலிருந்து அப்போலோ மருத்துவமனை வரை வந்திருக்கு! ஃப்ரன்ட்லைன் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. ஏற்கெனவே காவேரி மருத்துவமனை பல சிறந்த முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்குப் பெயர் போனது. சென்னையில் இருக்கும் வாசன் கண் மருத்துவமனையும், அகர்வால் கண் மருத்துவமனையும் இங்கேயும் உள்ளது. என்றாலும் நாங்க போவது எங்க தெருவிலேயே இருக்கும் கண் மருத்துவரிடம் தான்! எல்லா முக்கிய நகரங்களும் மும்பை, கொல்கத்தா, தில்லி, ஹைதராபாத், பெண்களூரு, புவனேஸ்வர் போன்ற எல்லா நகரங்களும் இங்கிருந்து செல்லும்படி இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னை போய்க் கஷ்டப்பட வேண்டாம்.
ஆக முன்னேற்றம் என்பது இருக்கத் தான் செய்கிறது. நாம் தான் உணரவில்லை. சென்னையிலே மட்டும் எல்லா வசதிகளும் இருக்கிறாப்போல் நினைத்துக் கொண்டு அங்கேயே போய் மக்கள் கூட்டம் குவிந்து கொண்டு இருக்கிறது. நெரிசலில் அவதியும் படுகிறது. நெல்லைத் தமிழர் சென்னையில் ஆறில் ஒருத்தர் வெளியூர் என்று சொல்கிறார். அந்த அளவுக்குச்சென்னை நெரிசல் மிகுந்த நகராக மாறி விட்டது!
தபால் சேவை இப்போ நல்ல முன்னேற்றம்தான் .முந்திலாம் போட்டோ அனுப்பினாலே ரெஜிஸ்டர் பண்ணிதான் அனுப்புவேன் .இப்போ பார்சல் எதுனாலும் பத்திரமா சேர்த்து .
ReplyDeletefedex 3 நாளில் அங்கிருந்து வரும் ஆனா எக்ஸ்பென்சிவ் .400 ரூபாயில் 2கிலோவுக்கு அனுப்பலாம் னு நினைக்கிறேன் .
கீரைத்தண்டு !! இங்கே வங்காளியர் கடையில் இருக்கு ஆனா எப்படி செய்யனு தெரில .ரெசிப்பி ப்ளீஸ் :)
அதேபோல் மணத்தக்காளி வற்றல் உங்கள் செய்முறை லிங்க் இருக்கா ?
கொஞ்சம் நாளா எனக்கு முதல் பிளேஸ் கிடைக்குது :)
Deleteகீரைத் தண்டுப் பொரிச்ச குழம்பு செய்யலாம், கீரைத்தண்டை மட்டும் போட்டு சாம்பார் வைக்கலாம். கீரையோடு தண்டும் சேர்ந்து இருந்தால் புளி விட்ட கீரை, பாசிப்பருப்புப் போட்டு மி.வத்தல், தேங்காய், ஜீரகம் அரைத்துவிட்டு மொளகூட்டல் பண்ணலாம். வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்புடன் போட்டு தேங்காய் அரைத்து விட்டுச் சப்பாத்திக்கு சைட் டிஷ் பண்ணலாம். புளி விட்டுக் கீரை பண்ணலாம். கீரைத்தண்டை மட்டும் போட்டு மோர்க்கூட்டு பண்ணலாம்.
Deleteமணத்தக்காளியை நன்கு கழுவி அலசி வடிகட்டி விட்டு எவ்வளவுனு பாத்திரத்தில் அளந்து பாருங்க ஒரு கிண்ணம் மணத்தக்காளிக்கு 200 மி.லி. மோரில் உப்புப் போட்டு மணத்தக்காளியை அதில் போட்டு ஊற வைக்கணும். பின்னர் 2நாட்கள் ஊற விட்டு வெயிலில் காய வைக்கணும். உங்களுக்கு அதான் பிரச்னை! வெயில் இருக்குமா? இல்லைனா அப்படியே மோரில் ஊறியதை வடிகட்டி எடுத்துக் குழம்பில் போடலாம். வறுத்துத் தொட்டுக்கலாம்.
Deleteஹாஹாஹா, ஃபர்ஷ்டு வந்ததுக்கு நன்னி!
Deleteநன்றீஸ் :) நேற்றோடு வெயில் காற்றோடு போச்சே :) ஒரு மாதம் கொளுத்துச்சி
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteகீரைத்தண்டு மெழுக்கு வரட்டி செய்யலாம். கேரளத்தில் மெழுக்கு வரட்டி சிறுவர்களுக்குப் பிடித்த சைட் டிஷ்.
Deleteவாங்க ஜேகே அண்ணா, மெழுக்கு வரட்டி நான் அதிகம் செய்ததில்லை. அதுவும் கீரைத்தண்டில். எப்போதாவது வாழைக்காயில் செய்வது உண்டு.
Deleteஅக்கா இப்போல்லாம் எல்லா பொருளும் இங்கே வெளிநாட்டில் கிடைக்குது .லண்டனில் லக்ஷ்மி ஸ்டோர்ஸ்ன்னு நம்ம ஊர் ரத்னா கடை போல் எல்லா சில்வர் பித்தளையும் கிடைக்குது அண்டா குண்டாலாம் இருக்கு .ஆனாலும் இஞ்சி மாங்காலாம்கூட ஏர்போர்ட் செக்கிங்கில் மாட்டுறமாதிரி இங்கே வரும் உறவினர்கள் எல்லாரும் அள்ளிட்டு வராங்க பிளைட்டில் :)
ReplyDeleteஆமாம், நாங்க எதுவுமே இங்கேருந்தும் கொண்டு போவதில்லை. அங்கிருந்தும் வாங்கி வரதில்லை. யாராவது உறவினர் கேட்டால் சாக்லேட் மட்டும் கொஞ்சம் போல வாங்கி வருவோம்.
Deleteமுன்னேற்றம் என்பது இருக்கத் தான் செய்கிறது. நாம் தான் உணரவில்லை //
ReplyDeleteஉண்மைதான் .
சென்னை நரகமாகிட்டு வருது என்பதில் மாற்றுக்கருத்தில்லை .மூச்சுவிட கூட கஷ்டப்படப்போறாங்க இனி வரு ம் நாளில் நெரிசலால்
ஆமாம், ஏஞ்சல், எங்க உறவினர்களே எங்களைக் கேலி செய்திருக்கிறாங்க! ஶ்ரீரங்கத்தில் என்ன இருக்குனு! பெருமாள் பெரும் ஆளாக இருக்காரே! அவரை விடவா? :))))) சென்னை எனக்குச் சின்ன வயசில் இருந்தே பிடிக்காது! காரணம் புரியலை! தெரியலை! :))))
Deleteநானும் 11 வயசு டு கல்யாணம் வரைக்கும் சென்னைதான் .ஆனா அப்ப இருந்த சென்னை இப்போ இல்லை ..எங்க ஏரியா முழுக்க வெறும் அழகான ஒட்டு வீடு இப்போ கேப் இல்லாம பிளாட்ஸ் அபார்ட்மெண்ட்ஸ் ,மரங்கள் எல்லாம் வெட்டிட்டாங்க :(
Deleteமெட்றாசை இப்போ படத்தில் பார்க்க கூட பிடிக்கலை
நான் முதல் முதலாச் சென்னையைப் பார்த்தப்போப் பத்து வயசு. அண்ணாவுக்கும், தம்பிக்கும் திருப்பதியில் பூணூல் போட்டு முடித்துச் சென்னையைச் சுற்றிப் பார்க்க வந்தோம். அப்போவே பிடிக்கலை! கல்யாணம் ஆனதும் சென்னை வாசம்னதும் வருத்தப்பட்ட ஒரே ஜீவன் நானாகத் தான் இருக்கும். :)
Deleteஸ்ரீரங்கத்தில் எல்லாம் இருக்குன்னு நான் 10 வயது சிறுமியாக இருந்த போது என் அப்பா குடும்பத்தை ஸ்ரீரங்கத்துக்கு மாற்றிட்டார், பெரம்பூர், சென்னையிலிருந்து. இப்போது ஸ்ரீரங்கத்திருந்து சென்னைக்கு என் மகன்களின் எதிர்காலத்துக்காக பெயர்ந்திருக்கிறோம். வாழ்க்கைச் சக்கரம்!! :))
ReplyDeleteமற்ற ப்ரைவேட் குரியர் சர்வீஸிலும் ட்ராக்கிங் இருக்கு, சிலதில் வீட்டிலேயே வந்தும் பார்சல் வாங்கிக் கொள்கிறார்கள், ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை செய்தேன். குறுஞ்செய்தியும் வருகிறது.
வாங்க மிகிமா, விரிவான பதிலுக்கு நன்றி. என்னோட ரங்க்ஸுக்கு எப்போதுமே பெரிய நகரங்கள் அவ்வளவாப் பிடிக்காது. ஆகவே நாங்க மாற்றல் ஆகிப் போனதெல்லாம் கூடச் சிறிய நகரங்கள் தான்! சென்னையிலும் முக்கியமான இடங்களான தி.நகர், மைலாப்பூர், தென் சென்னை ஆகியவற்றை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அம்பத்தூரைத் தேர்ந்தெடுத்தார். அப்போச் சின்னக் கிராமம் தான் அம்பத்தூர். பின்னால் நெரிசலாகி விட்டது. ஆனாலும் எங்க உறவினர்கள் அம்பத்தூரில் இருப்பதையும் கேலி செய்வார்கள் தான். அங்கிருந்து எங்க குழந்தைகள் பட்டாபிராம் மிலிடரி சைடிஙில் உள்ள கே.வி. பள்ளிக்குப் படிக்கச் செல்வார்கள். இதெல்லாம் ஒரு பள்ளியா? என்பார்கள்! அம்பத்தூரில் எல்லாம் என்ன படிப்பு இருக்கும்? என்பார்கள். மருத்துவமும் அப்படியே! அம்பத்தூர் மருத்துவர்களுக்கு எதுவும் தெரியாது! அவங்க செய்யும் சிகிச்சை பலன் தராது என்பார்கள். துணி வாங்கவும் தி.நகர், மைலாப்பூர் தான் வரணும். நாங்க அம்பத்தூரிலேயே முடிப்போம். :)
Deleteகீதாக்கா நானும் தபால் சேவையே பயன்படுத்துகிறேன் பெரும்பாலும். அடையார்தான் செல்ல வேண்டும் என்றாலும் கூட. அங்கும் பார்சல் என்றால் நன்றாகச் செய்கிறார்கள். டிநகரிலும் நன்றாகச் செய்கிறார்கள். ஆலந்தூரில் 24 மணி நேர சேவை.
ReplyDeleteகூரியரிலும் ட்ராக் பண்ண முடியுமே அக்கா. ஆனால் விலை கூடுதல் என்பதால் நான் தபால்துறைதான் இப்பல்லாம் மிகவும் சரியாகச் சென்றடைகிறது. நானும் தபால் துறையை ஆதரிக்கிறேன். என்னவென்றால் எல்லா நிலையங்களிலும் எல்லா சேவையும் கிடைப்பதில்லை. விரைவில் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
//ஆக முன்னேற்றம் என்பது இருக்கத் தான் செய்கிறது. நாம் தான் உணரவில்லை. சென்னையிலே மட்டும் எல்லா வசதிகளும் இருக்கிறாப்போல் நினைத்துக் கொண்டு அங்கேயே போய் மக்கள் கூட்டம் குவிந்து கொண்டு இருக்கிறது. நெரிசலில் அவதியும் படுகிறது. // கீதாக்கா அப்படிப் போடுங்க. நான் இதை கன்னாபின்னானு கைதட்டி ஆர்பரித்து ஆதரிக்கிறேன்.
அது சரி அந்த மனிதர் ஏன் அண்டா குண்டா எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். ஆச்சரியம்தான்...அதுவும் இத்தனை செலவழிச்சு...
உங்கள் உடல்நலம் தேறி வருவது மகிழ்ச்சி அக்கா
கீதா
வாங்க தி/கீதா, பெரும்பாலும் ஶ்ரீரங்கம் தபால் நிலையத்திலேயே வெளிநாட்டுத் தபால்களை அனுப்ப முடியும். பட்டுக்குஞ்சுலுவுக்கான பிறந்த நாள் பரிசை எல்லாம் ஶ்ரீரங்கம் தபால் நிலையம் மூலமே அனுப்பினோம். அதே போல் எங்களுக்கும் என் தம்பி சென்னையிலிருந்து அனுப்பி வைத்த புடைவை, வேஷ்டி பார்சல் நாலே நாட்களில் வந்து சேர்ந்தது. மோகன் ஜி, மற்றும் நீங்கள், கடுகு சார் போன்றோர் அனுப்பிய புத்தகங்களும் சரியாகவே வந்தன. ஆனால் நீங்க சொல்றாப்போல் நீங்க இருக்கும் இடத்தின் அருகே இந்த வசதி உங்களுக்கு இருக்க வாய்ப்பு இல்லை. எங்களுக்கு ஶ்ரீரங்கத்திலும் இருக்கு. இப்போக் கொஞ்சம் முக்கியமான பொருள் என்பதால் இங்கே ஶ்ரீரங்கத்திலேயே திருச்சி போய் அனுப்பச் சொன்னதால் போனோம். அதுவும் அவ்வளவு தூரம் இல்லை தான் சென்னையோடு ஒப்பிட்டால்! ஆகவே இது வசதி என்றே சொல்வேன்.
Deleteஎங்கள் ஊரில் எல்லாம் தபால்துறை வெஸ்டர்ன் யூனியன் பணம் பெறும் அனுப்பும் சேவை இணைத்து செயல்படுகிறது எங்கள் ஊரில் கல்ஃப் தொடர்புடன் கூடிய குடும்பங்கள் மிக மிக அதிகம் என்பதால். ஒவ்வொரு வீட்டிலும் ஓரிருவர் கல்ஃபில் இருப்பார்கள். நிறைய வெளிநாட்டுப் பொருட்களும் புழங்கும் இத்தனைக்கும் மிக மிகச் சிறிய ஊர். ஆனால் வசதிகளுடன் மலை, காடு, ஆறு, அருவி, ரப்பர் தோட்டம் என்று பச்சையுடனும் இருக்கும் ஊர்.
ReplyDeleteசென்ற பதிவுகளையும் வாசித்துவிட்டேன் கருத்துதான் அனுப்ப இயலவில்லை. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது காண அழகாக இருக்கிறது. உங்கள் உடல் நலம் இப்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது பார்த்து மகிழ்ச்சி சகோதரி.
துளசிதரன்
வாங்க துளசிதரன், வெஸ்டர்ன் யூனியன் வசதி அநேகமாய்க் கிராமங்களின் தபால் அலுவலகத்தில் கூட உண்டு. ஏனெனில் பலரும் துபாய் போன்ற அரபு நாடுகளில் வேலைபார்க்கின்றார்களே! இங்கேயும் உண்டு. கருத்து அனுப்ப இயலும்போது அனுப்புங்கள். காவிரியில் தண்ணீர் நன்றாகவே ஓடுகிறது. இன்னிக்கும் போய்ப் படங்கள் எடுத்திருக்கேன்.
Deleteநிறைய சேவைகள் உண்டு. பயன்படுத்த மக்களுக்கு மனதில்லை. இன்னும் நிறைய முன்னேற்றம் கொண்டு வருகிறார்கள்.
ReplyDeleteஆமாம், வெங்கட். மக்களுக்கு மனதில்லை என்பதை விட இதைக் குறித்த விழிப்புணர்வு இல்லை. யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. அரசும் சும்மாச் சோம்பல் விட்டுக் கொண்டு இருக்கு!
Deleteஅண்டாவை வாஷிங்டனுக்கு அனுப்புவது டூமச்சாகத்தான் தெரிகிறது.
ReplyDeleteவாஷிங்டனில் திருமணம். அண்டா சீர்வரிசை????
Deleteவாங்க கில்லர்ஜி, அந்தத் தபால்துறைஅதிகாரியும் சொன்னார். அண்டா 3,000 ரூபாய்க்குள் தான் இருக்கும். அனுப்பும் செலவு ஆறாயிரம் ஆகிறது என! ஆனாலும் அந்த மனிதர் கேட்கவில்லை. பார்த்தால் படித்தவர் போல் தான் இருந்தார். இன்னும் உட்காரும் பாய்கள், ப்ளாஸ்டிக்கிலும், கோரைப்பாய்களும் அனுப்புகின்றனர். என்னென்னவோ அனுப்புகிறார்கள். நான் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் சுமார் 20,30 கிலோ சாமான்கள். அப்படி வரிசையாக அடுக்கி வைச்சிருந்தாங்க தபால் அலுவலகத்திலே! மேலே மேலே பார்சல் வேலைகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.
Deleteவாங்க ஜேகே அண்ணா, அண்டா சீருக்கா என்ன என்று தெரியலை.
Deleteஅது தான் முதல்லேயே இருக்கே. வாஷிங்டனில் திருமணம்.
Deleteஅப்படி எல்லாம் தெரியலை!
Deleteதபால் சேவை லாம் நான் பெரிதளவு அறிந்ததில்லை,
ReplyDeleteஎல்லாமே கூரியர்தான்,ஆனால்
கூரியர் நம்பகத்தன்மை அற்றதேதான்.
ஒருமுறை அனுபவப்பட்டிருக்கேன்,
ஒருவருக்கு 16 செட் சுடிதார் தைத்து
அனுப்பினால் 14 செட்டே போய் சேர்ந்தது.
அதனால் கூரியரில் அனுப்ப பயமே...
ஆமாம், நாங்க குட்டிக்குஞ்சுலுவுக்குப் பிறந்த நாள் பரிசு அனுப்ப முதல்லே கூரியரில் தான் போய்க் கேட்டோம். அவங்களே நிச்சயமாய்ச் சொல்லலை! இன்ஷூரன்ஸும் பண்ண மாட்டாங்களாம். அதோடு பணமும் அதிகம். அதுக்கப்புறமாத் தபால் நிலையம் போனால் அவங்களே அழகாப் பாக்கிங் செய்து அட்ரஸெல்லாம் ஒட்டி, இன்ஷூரன்ஸ் இதுக்கெல்லாம் தேவை இல்லை என்றும் சொல்லி பதிவுத் தபாலில் அனுப்பினாலே கரெக்டாப் போயிடும்னு சொல்லி அனுப்பி வைச்சாங்க. இம்மாதிரி ஆலோசனைகள் தனியாரில் சொல்லுவது இல்லை.
Deleteகீசாக்கா, எங்காவது விசாரிச்சுப் பாருங்கோ ஸ்பீட் டெலிவரி இருக்கும். இலங்கையிலிருந்து மாமா பார்சல் எங்களுக்கு அனுப்புவார்ர்.. பிரைவேட் ஆக, அது ஒரு கிலோ எனில் 2000 ரூபா, 5 கிலோ எனில் 7000 ரூபா, 10 கிலோ எனில் 12 ஆயிரம் இப்படி ஏதோ கணக்கு, ஆனா 3 நாளில் நம் கைக்குக் கிடைக்கும்...
ReplyDeleteமற்றும்படி இந்தியாவிலிருந்து இங்கு ஒரு குடும்பம் பார்சல் அனுப்பினார்கள் அது சிப் இல்.. 20 நாட்களோ என்னமோ எடுத்திருக்கு ரேட் மிக மிக குறைவு...
தபாலிலும் ஸ்பீட் போஸ்ட் இந்தியா முழுமைக்கும் உண்டு. வெளிநாடுகளுக்கும் உண்டு. கூரியர் சேவையை விடக் குறைவு தான்.ஒருகிலோவுக்குத் தபாலில் அனுப்பினால் 2000 ரூபாய்க்கும் குறையும். ஷிப்பில் வர 20 நாட்கள் ஆனாலும் செலவு குறைவு என்பதோடு நம்பகத் தன்மையும் இருக்கே!
Deleteதுளசியின் கமென்டை தங்கிலிஷை தமிழாக்கி இங்கு போட்டுவிட்டு, என் கமென்டையும் போட்டேனே....போட்.............ட்...............ட்.................ட நினைவு.....ஆனால் காணாமல் போச்சு போல இந்த கூகுளார் ரொம்பவே பார்ஷியல்......போனா போகுது!!
Deleteநான் 99% தபால் சேவையைத்தான் பயன்படுத்துகிறேன். ஸ்பீட் போஸ்ட் என் மகனது டாக்குமென்ட்ஸ் எல்லாமே தபால் சேவை வழிதான். நீங்க சொல்லியிருப்பது போல் விலை குறைவு கொஞ்சம் நாள் ஆனாலும் நம்பகத்தன்மை யெஸ்...அதே....
கீதா
//இன்னிக்கு மத்தியானம் பூரா மின்சாரம் இல்லை! இப்போத் தான் வந்திருக்கு.//
ReplyDeleteஅப்பாடா மின்சாரம் வந்ததும் கீசாக்கா மின்னி முழக்கிட்டா:)).. ஓகே ஓகே முறைக்கக்கூடாது பிறகு காவிரிப் பிரச்ச்சனையை இழுத்து விட்டிடுவேன்:)) ஹா ஹா ஹா:)...
அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteகீரைத் தண்டு, பீன்ஸ்,காரட் மூன்றும் போட்டு கறியா? சாம்பார்ல என்ன காய்?? மூன்று நாட்களுக்குப் பின் சமையலா? ஜாலிதான் போங்க!
ReplyDeleteஹிஹிஹி. அ.வ.சி. ஶ்ரீராம், திருத்திட்டேன் , கீரைத்தண்டு சாம்பார், ரசம், பீன்ஸ், காரட் போட்டுக் கறி. :))))
Deleteஇங்கும் மின்சாரம் போய்ப்போய் வருகிறது. மின்சாரம் இருந்ததாலேயே வெக்கையையும், புழுக்கத்தையும் சகிக்க முடியவில்லை.
ReplyDeleteஇங்கே ட்ரான்ஸ்ஃபார்மரில் அடிக்கடி பழுது வருது ஶ்ரீராம், ஓவர்லோடோனு நினைக்கிறேன்.
Deleteதபால் நிலையம் சென்று வருடங்களாகிறது. இத்தனைக்கும் எங்கள் வீட்டுக்கு கொஞ்ச தூரத்திலேயே தபால் நிலையம்!
ReplyDeleteநாங்க சேமிப்புக்கணக்கு, ரெகரிங் டெபாசிட் கணக்கு எல்லாமும் அம்பத்தூரிலும் வைச்சிருந்தோம். இங்கேயும் மாற்றிக் கொண்டோம். இப்போத் தான் அதை எல்லாம் கணக்கு முடிச்சு எல்லாத்தையும் ஒரே குடைக்குக் கீழ்க் கொண்டு வந்தோம். ஏனெனில் அம்பத்தூர் வீட்டில் இருந்து தபால் நிலையம் ரொம்பக் கிட்ட. ஒரு தெரு திரும்பினால் வந்துடும். அவசரத்துக்குப் பணம் எடுக்க வசதி! இங்கே கொஞ்ச தூரம் போயாகணும். வங்கி எனில் குடியிருப்பு வளாகத்துக்கு எதிரே. பக்கத்திலேயே இரண்டு, மூன்று ஏடிஎம்! அதனால் மூடிட்டோம்.
Deleteசேமிப்புக்கணக்கு, ரெகரிங் டெபாசிட் கணக்கு - இவைகளை பற்றியும் விரிவாக எழுதவும்... அனைவரும் பயன் பெறுவார்கள்...
Deleteவாங்க டிடி, ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க! அஞ்சலக சிறு சேமிப்பு அங்கீகரிக்கப்பட்ட முகவராக நான் சுமார் நான்கு, ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கேன். ஆகவே வண்டி வண்டியாய் அனுபவங்கள்! :) சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் சுத்தி இருக்கேன்.
Deleteஇவ்வளவு அழகா அவங்களே பாக்கிங் செய்து தருகிறார்களா? அட.. அதற்குக் கட்டணம் உண்டா? கூட்டம்? பித்தளை அண்டாவை எல்லாம் அனுப்புகிறார்களா?!!
ReplyDeleteஅந்தப் பாக்கிங்கைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க ஶ்ரீராம், என்ன அழகாய் கவனமாய்ச் செய்யறாங்க தெரியுமா! சும்மா காமாசோமானு எல்லாம் செய்யறதில்லை.
Delete20 கிலோவுக்குக் குறைந்திருந்தாலும் அனுப்பும் கட்டணம் 5,000 ரூபாயா? ஓ.. 371 ரூபாத்தான் ஆச்சா? சென்னையை விட வெளியூர்களில் இன்னும் வசதிகள் இருக்கும் அல்லது கூட்டம் இல்லாமலாவது இருக்கும்.
ReplyDeleteவெயிட் போட்டு அதற்கேற்றாற்போல் பணம் வசூலிக்கின்றனர் ஶ்ரீராம். சென்னையை விட வெளியூர்களில் பிரயாண நேரம் மிச்சம் ஆகும் என நினைக்கிறேன். மற்றபடி கூட்டம் எல்லாம் இருக்கத் தான் செய்யுது! எங்களுக்கு அந்த அதிகாரியே சின்னப் பாக்கிங்க் என்பதால் முன்னுரிமை எடுத்துச் செய்து கொடுத்தார். ஆகையால் சீக்கிரம் வேலை முடிந்தது. அதுக்கே முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். ஏனெனில் முன்னால் இரண்டு நபர்கள் காத்திருந்தார்கள்.
Deleteஆம். கைலாசத்துக்கு போனவர் வைகுண்டத்தில் [பூலோக வைகுண்டம்] வசிப்பது தானே நல்லது.
ReplyDeleteஜேகே அண்ணா, ஹாஹாஹா! எல்லாம் ஒண்ணு தான்!
Delete/சென்னை போய்க் கஷ்டப்பட வேண்டாம். // - வீடு விலையும் சென்னயைப் போல் ஸ்ரீரங்கத்தில் ஆனதைச் சொல்லலையே.
ReplyDeleteநம்ம தபால் துறை நிச்சயம் நல்ல சேவை செய்யறாங்க. நான் சமீபத்துல 3800 ரூ கொடுத்து வேறு கொரியர் கம்பெனி மூலமா டாக்குமெண்ட் அனுப்பினேன். அதுக்கு பேசாம நம்ம தபால் நிலையத்துக்கே போயிருக்கலாம்.
நெ.த. எங்க வீடு எப்படினு ஶ்ரீராம், பானுமதி ஆகியவர்களைக் கேளுங்க! சென்னையில் 3BHK இத்தனை வசதியோடு கிடைக்குமானும் கேட்டுச் சொல்லுங்க! ஶ்ரீரங்கம் விலை அதிகம் சென்னையைப் போல் அல்லது சென்னையை விடனு ஒத்துக்கறேன். நாங்க எப்போவுமே தபால் துறையைத் தான் நம்புவோம். எங்களுக்குக் கூரியர் யாரானும் அனுப்பி வரது தான்! மற்றபடி நாங்க பயன்பாட்டில் தபால் துறையைத் தான்பெரும்பாலும் நம்புவோம்.
Deleteஆற்றங்கரையோரத்தில் அழகான வீடு. அங்கு சதுர அடி என்ன விலை அக்கா? ஸ்ரீரங்கம் என்பதால் கிட்டத்தட்ட சென்னை விலை விற்கிறது என்று நினைக்கிறேன்.
Deleteஉண்மைதான். சென்னையில் இருப்பது பெரிய சிறப்புன்னு நான் நினைக்கலை. எனக்கு மாயவரம் (சும்மா ஒரு பேச்சுக்கு... எனக்கு அங்கு யாரும் கிடையாது, இருந்ததும் இல்லை) போன்று ஒரு இடத்தில் செட்டில் ஆகணும் என்றுதான் நினைப்பு. ஆனால் 'விதி' என்னை பெங்களூரில்தான் செட்டிலாகவிடும் என்று நினைக்கிறேன்.
Deleteநாங்க சுமார் பத்து வருஷத்துக்கும் மேலாகச் சென்னை வேண்டாம் எனப் பல ஊர்கள் போய்ப் பார்த்தோம். மைசூரில் கிட்டத்தட்ட ஒரு வீடு முடிவு செய்துவிட்டுப் பின்னர் வேண்டாம் என விட்டோம். இது 2008 ஆம் ஆண்டில்! அதன் பின்னர் பல ஊர்கள் போனோம். கோசூரில் முடிக்கலாம் என்னும்போது நண்பர் ஒருத்தர் அங்கே தண்ணீர்ப் பிரச்னை என்றார். பெண்களூரு வேண்டாம்னு எனக்கு ஏற்கெனவே முடிவு! மதுரையிலிருந்து மேற்கே இருக்கும் பெரியகுளம், மேல்மங்கலம் சீதோஷ்ணம் நன்றாக இருக்கும் என்பதோடு என் அப்பாவின் பூர்விகம் என்பதால் அங்கே தங்கிப் பார்த்தோம். அங்கிருந்து இன்னும் தென்மேற்கே சின்னமனூர் (என்ன் சித்தப்பா இங்கே மருத்தவராக இருந்தார்) போயும் பார்த்தோம். திருநெல்வேலியில் முயற்சி செய்தோம். பின்னர் கும்பகோணம் என முடிவு செய்து சோலையப்பன் தெருவிலே நிலம் எல்லாம் பார்த்தாச்சு! தங்க வீடும் பார்த்தோம். மாடி போர்ஷன். பின்னால் காவிரி! எனக்குக் கும்பகோணம் எப்போதுமே அலர்ஜி! என்றாலும் காவிரியை உத்தேசித்துப் பேசாமல் இருந்தேன். ஊரை விட்டுத் தள்ளி வேறே இருந்தது. கிட்டத்தட்ட வீடு மாற்ற வேண்டும் என்ற சமயம் திடீர் என ஏதோ காரணத்தால் அந்த வீட்டுக்குக் குடி போக முடியலை! எங்க பையரும் உடனே அம்பேரிக்கா வரும்படி அழைத்துவிட்டார். அங்கே போயிட்டோம். :) இப்படியாகத் தானே பல ஊர்கள் பார்த்துக் கடைசியில் இங்கே வந்தோம். அரங்கன் அழைப்பு!
Deleteஇங்கே நாங்க இருக்கும் ஏரியாவில் சதுர அடி 5,000த்தில் இருந்து 6,000 வரை விற்கிறது. கொஞ்சம் உள்ளே தள்ளி எனில் 5,500க்குக் கிடைக்கும். ஆதி வெங்கட் இருக்கும் ஏரியாவில் 5000 ரூபாய்! சென்னையில் மாம்பலம், தி.நகர். மயிலாப்பூர் ஆகிய இடங்களில் சதுர அடி பதினைந்தாயிரம் வரை விற்கிறது. தென் சென்னையில் 7000 முதல் 8000 வரை விற்பதாகச் சொன்னார்கள். தாம்பரத்திலேயே ஆறாயிரத்துக்கும் மேல் என்றார்கள் அதோடு அங்கே கட்டுவது போல் அல்லாமல் இங்கே நல்ல காற்றோட்டமாக வெளிச்சத்துடன் அறைகள் பெரிதாகவும் கட்டறாங்க! ஆகவே அங்கேயும் இங்கேயும் ஒத்துப்பார்த்தால் இங்கே தான் விலையும் குறைவு. வசதியும் அதிகம்.
Deleteமுக்கியமாய்க் கையை நீட்டினால் பக்கத்து ஃப்ளாட்டில் கை இடிக்காது! துணி உலர்த்தினா நம்ம பக்கமே போட்டுக் காய வைச்சு எடுத்துக்கலாம். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் சம்பந்தம் என்பது இல்லை. எங்க வீட்டில் நாலு பக்கத்துச் சுவர்களும் எங்களுக்கே வரும்! அந்த மாதிரி அமைப்பு! ஓடிஎஸ் எல்லாமே பெரிசாக இருக்கும்.
Deleteநீங்கள் திருவனந்தபுரத்தில் தங்கிப் பார்க்கவில்லை. 24 மணி நேரமும் வரும் நல்ல தண்ணீர், எல்லா மருத்துவ வசதிகள், 20-33 டிகிரி என்ற அருமையான சீதோஷ்ணம்,மலை,பீச் என்று் பொழுது போக்கு இடங்கள்,இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல நேரடி ரயில்கள், அம்பேரிக்காவுக்கும் 20 மணி நேரத்தில் செல்ல வசதி என பல வசதிகள் உண்டு. போதாதற்க்கு பத்மநாபசுவாமி அனுக்கிரகமும் கிடைக்கும்.
ReplyDeleteஜேகே அண்ணா, திருவனந்தபுரம் வந்திருக்கேன். அனந்தபத்மநாபசுவாமியைப் பார்க்கவும் ஒரு சஷ்டி அப்தபூர்த்திக்காகவும். என் தங்கையின் கணவர் திரு ரவி என்பவரின் சஷ்டி அப்தபூர்த்தி அங்கே ஒரு கொட்டாரத்தில் நடந்தது. அப்போ ஒரு இரவு தங்கினோம். அப்படி ஒண்ணும் மனசைக் கவரவில்லை. நெரிசல், கூட்டம் இருக்கு! நாங்க போன கொட்டாரத்தில் இருந்து கோவில் ரொம்பக் கிட்டக்க.நடந்தே போக முடிஞ்சது! கொஞ்சம்சந்தாக இருந்தது.
Deleteஎப்பவுமே தபால் அலுவலகம் பிடிக்கும். அதுவும் கல்யாண சமயங்களில்
ReplyDeleteவெளினாடுகளுக்கு பத்திரிகை அனுப்ப அத்தனை சுலபமாக முடிந்தது.
நீங்கள் சொல்லி இருக்கும் விதம் மிகப் பெருமைப் பட வைக்கிறது. கீதா.
மனம் நிறை வாழ்த்துகள்.
உண்மையிலேயே தபால் துறையின் சேவை எப்போதுமே அருமையானது. அதோடு நமக்குப் புகார் ஏதேனும் இருந்தால் தபால் துறையின் விஜிலன்ஸிற்கு எழுதிப் போட்டால் போதும் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்! எடுத்து நமக்குத் தெரிவித்துப் புகார் யார் மேல் கொடுத்தோமோ அந்த சம்பந்தப்பட்டவருக்கும் தெரிவித்து இப்போ நிலைமை எப்படி இருக்குனு நம்மிடமே அறிக்கை வாங்கி அனுப்பச் சொல்வார்கள். இந்த அனுபவமும் உண்டு!
Deleteஉண்மையில் இத்துறையில் பங்களிப்பானது நிகரற்றது. பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை.
ReplyDeleteஆம், முனைவர் ஐயா! உண்மையில் ஒப்பற்ற சேவை!
Deleteஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு அம்மா...
ReplyDeleteமுகநூலில் Rajendran Dindigul என்பவர் தபால் நிலையம் குறித்தும் பல்வேறு சிறப்புகளை பகிர்ந்து கொள்வார்...
அப்படியா டிடி, தேடிப் பார்க்கிறேன்.
Deleteதபால் துறை பற்றிய தகவலுக்கு நன்றி. என் பேத்திக்காக சில புத்தகங்கள் வாங்கினேன். அவற்றை அனுப்ப வேண்டும். மேலும் என் மகளுக்கும் சில போடி வகைகள் அனுப்ப வேண்டும். இங்கு அருகில் இருக்கும் தபால் நிலையத்தை அணுகுகிறேன்.
ReplyDeleteஎன் அக்காக்கள் அவர்கள் குழந்தைகளுக்கு அனுப்ப வேண்டியவைகளை கூரியரில்தான் அனுப்புகிறார்கள். கொஞ்சம் காஸ்ட்லீ என்றாலும் விரைவில் சென்று விடுகிறது என்கிறார்கள். அதிலும் ட்ராக் பண்ணும் வசதி உண்டு.
வாங்க பானுமதி, உங்க வீட்டருகே இருக்கும் தபால் நிலையத்தில் இந்த வசதி இருக்கணும். இங்கே ச்ரீரங்கத்திலும் இருக்கு. திருச்சியிலும் இருக்கு. இரண்டு இடங்களில் இருந்தும் அனுப்பலாம். வீட்டுப் பக்கம் இல்லைனா நீங்க பெண்களூரில் தேடிக் கொண்டு போகணும். :) அதுக்குப் பக்கத்தில் உள்ள கூரியரே தேவலைனு தோணும்! ஆனால் கூரியரில் ட்ராக்கிங் வசதி எல்லாவற்றிலும் இல்லைனு நினைக்கிறேன்.
Deleteநான் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்றதால் என் புகுந்த வீட்டில் என்னை,"காவோன் கீ லடுக்கி" என்பார்கள். திருச்சியில் எல்லா வசதிகளும் இருந்தாலும் இன்னமும் திருச்சியை ஒரு கிராமமாகத்தான் நம் திரைப்படங்களில் சித்தரிக்கின்றார்கள்.
ReplyDeleteஇஃகி, இஃகி, இப்படியே சிரிச்சுடறேன். இந்த மடிக்கணினியில் இ கலப்பை இன்னமும் பிரச்னை தான்! :) நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் மதுரை! மதுரையை ஒரு சின்னக் கிராமம் என்றே சொல்லுவார்கள். ஆனால் என்னை இப்படி ச்ரீரங்கத்தில் வந்து உட்கார்ந்திருக்கானு கேலி செய்வது பிறந்ததில் இருந்து மின்சாரமே பார்த்திராத , கழிவறை வசதிகளே இல்லாத குக்கிராமத்தில் இருந்த என் உறவினர்கள்! :))) இப்போ அந்தக் கிராமத்துக்கு எல்லாம் மின் வசதி வந்திருக்கு. கழிப்பறைகளும் வந்துவிட்டன. ஆனால் எண்பதுகளின் கடைசி வரை ரொம்பக் கஷ்டம். எனக்கு அங்கே போவது என்றாலே வயிற்றைக் கலக்கும்.
Deleteஅக்கா எங்கள் கிராமத்திலும் சிறிய வயதில் எல்லாம் பின்பக்கம் போவது என்றால் ரொம்பக் கஷ்டம்தான்...அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆச்சு. கல்லூரி போன சமயத்தில் கூட பீரியட்ஸ் டைமில் பாட்டி கிராமத்தில் கொல்லைப்புறம் என்பது, தாழ்வாரம், முற்றம், இரு கொட்டில் தாண்டி...போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்க் கொண்டே.....அதிலும் இரண்டாவது கொட்டில் எல்லாம் ரொம்பப் பாழடைந்து....கிணற்றில் நீர் இரைத்து தூக்கிக் கொண்டு பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ண்டி இருக்கும் கழிவறை???? மண்ணில் ஏதோ கல்லால் கட்டி இருப்பார்கள்....அங்குதான் போகணும்...இது அப்பா அம்மா வீடு. நான் வளர்ந்த அம்மா பாட்டி/மாமா வீட்டில் நான் கல்லூரி படிக்கும் சமயம் வசதிகள் வந்துவிட்டது வீட்டிற்குள்ளேயே பின்புறம் கழிவறை, அட்டாச்டு கழிவறை என்று...மாமா கட்டிய புதிய வீட்டில்..
Deleteகீதா
வாங்க தி/கீதா மீள் வரவுக்கு நன்னி ஹை! எனக்கு முதல் நாள் புக்ககம் வந்த அன்னிக்கே இது பெரிய அதிர்ச்சி! ஏனெனில் எங்க பக்கம் கிராமம் என்றால் கூட நீங்க சொன்ன மாதிரி உட்கார்ந்து போகக் கொஞ்சமானும் வசதி இருக்கும். இங்கே அதுவும் இல்லை. மறைப்பும் இல்லை! நான் போன உடனே கிரஹப்ரவேசத்துக்கு நேரம் ஆகிறது, குளிச்சுட்டு வா என்றார்கள். குளியலறை, கழிவறைனு கேட்டப்போ கிணற்றடியைக் காட்டினார்கள். ஒரு ஐம்பது பேர் அங்கே உட்கார்ந்திருந்தனர்! அவங்க முன்னாடி குளிக்கணும். கழிவறைனு கேட்டதுக்குக் கொல்லைப்பக்கம் போகணும். அங்கே இப்போ ஆட்கள் வேலை செய்வதால் போக முடியாது என்று சொல்லிட்டாங்க! முதல்நாளே இயற்கை உபாதைகளை அடக்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இப்போ என்றால் முடிஞ்சிருக்காது. ரொம்பச் சின்ன வயது, தாங்கிக்க முடிஞ்சது! :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதபால் துறையின் சிறந்த சேவைகளைப் பற்றி அனைவரும் பயன் பெறும்படி அழகாக கூறியிருக்கிறீர்கள். விபரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.
இப்போது விதவிதமாக கூரியர் சேவைகள் வந்து விட்ட படியால், அனைவரும் முதலில் அதைதான் நாடுகிறார்கள். அதில் அப்படியென்ன வசதிகள் என தெரியவில்லை. அது ஒரு பேஷனாகவே ஆகி விட்டதென்று நினைக்கிறேன். நீங்கள் தபால் துறையின் தற்காலிக நிலையை பாராட்டும் போது, எனக்கும் அதுவே சரியென படுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.