எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 04, 2018

அன்பா?? பாசமா? ஆசையா?

கொஞ்ச நாட்கள் முன்னர் எங்கள் ப்ளாகில் புதன்கிழமைப் பதிவில் இந்த அன்பு, காதல்,பாசம், நேசம், ஆசை பத்தி ஒவ்வொருத்தரும் விவரிச்சிருந்தாங்க. நானும் ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொல்லி இருந்தேன்.  அது பத்தி இன்னும் விரிவா எழுதி இருந்திருக்கலாமோ என்னும் நினைவு மனதில் இருந்து கொண்டே இருந்தது. அது ஒரு புறம் இருக்க இப்போக் கொஞ்சநாட்களாகப் பழைய சில பதிவுகள் ட்ராஃப்ட் மோடில் இருப்பதைப் பார்த்தப்போ இந்தப் பதிவு ஒன்று எழுதி வைச்சிருந்தது கண்களில் பட்டது. இது ஒரு முடிவடையாத விஷயம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அவரவர் அனுபவங்களின் அடிப்படையில். ஆனாலும் நாம் இப்போச் சில நாட்கள் முன்னர் பேசினதுக்கு இது சம்பந்தம் இருப்பதால் அதைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துச் சிலவற்றை நீக்கி, சிலவற்றைச் சேர்த்து வெளியிடுகிறேன்.

எதுக்கு எப்போ இந்தப் பேச்சு ஆரம்பிச்சதுனு தெரியலை. ஆனால் என் சிநேகிதி
 கவிநயா, அன்பாக இரு, பாசமாக இராதே என்று சொல்லப் போக அதுக்கு திவா அவர் வழியில் விளக்கி இருக்கார். (திவா என்ன விளக்கினார் என்பது எந்தப் பதிவில் என்றும் தெரியலை.) ஆனால் அதுக்கு வல்லியோ பாசம் தான் அன்பாக விரிவடையணும்னு சொல்லி இருக்காங்க. ஒரு வகையில் அதுவே உண்மை. கணவன், மனைவிக்கு இடையில் உடனேயே பாசம் எங்கே வருது??? முதல்லே வருவது ஆசைதானே? ஆசையே பாசமாக மாறுகிறது. வயசு ஆனால் அதுவே அன்பாக மாறுகிறது. ஒரே கணவன், மனைவி தான். ஆனால் சிறுவயசில் ஆசைதான் முன்னிற்கும். குழந்தைகள் பிறந்ததும் தான் மனைவிக்கும், கணவனுக்கும் பாசமே ஏற்படும். வயது ஆக, ஆக ஒருவருக்கொருவர் உடல் கவர்ச்சியை மீறிய அன்பாக மாறுகிறது. என்றாலும் இவற்றில் எல்லாம் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்போ, பாசமோ, காதலோ வருவதில்லை.

இந்த அன்பே முதலில் வச்சுக்கணும்னாக் கொஞ்சம் கஷ்டமே, என் போன்ற சாமானியர்களுக்கு. அன்பு ஒரு ஊற்றுத் தான் தோண்டத் தோண்ட வரும் நீர் போல் அன்பும் கொடுக்கக் கொடுக்கக் குறையாது தான். ஆனால் அது ஆரம்பத்திலேயே பிரவாகம் எடுத்து ஓடக் கூடாது.ஓடவும் முடியாது. நதியானது ஆரம்பத்தில் ஒரு சிறு ஊற்றாகத் தான் தோன்றுகிறது. எல்லா நதிகளுக்கும் ஆதாரமே சிறியதொரு ஊற்றுத் தான். எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் நீர் அதிலிருந்து பொங்கி வரும். அந்த நீரும் உடனேயே நதியாக மாறிப் போவதில்லை. மெல்ல, மெல்ல அல்லது வேகமாய்க் கீழே விழுந்து, அருவியாய் மாறிக் (இதைக் கணவன், மனைவியின் ஆரம்பக் காலக் காதலுக்கு உவமையாகச் சொல்லலாமோ?)குதித்துக் கும்மாளமிட்டுப் பல்வேறு தடைகளையும், மலைகளையும் தாண்டித் தான் சமவெளிக்கு வருகிறது. பெரிய நதியாக அகண்ட பிரம்மாண்டமான நதியாக மாறிப் பின்னர் அதுக்கு அப்புறமாவே கடலிலும் கலக்கிறது.

அன்பும் அப்படித் தான். வீட்டில் முதலில் சின்ன ஊற்றுப் போல் கிளம்பும் அன்பானது மெல்ல, மெல்ல அக்கம்பக்கம், சுற்று வட்டாரம், உறவு வட்டம் என விரிவடைந்து நாடு, நகரங்களையும் தாண்டி பிரம்மாண்டமான பிரபஞ்சத்தையும் நேசிக்கும் அளவுக்கு விரிவடைய வேண்டும். அத்தகையதொரு அன்பைக் கொடுக்கும் மனதை ஆண்டவன் நமக்கு அருளவேண்டும். ஆனால் அது உடனே வருமா என்றால் வராது. பல சோதனைகளையும், தடைகளையும் தாண்டித் தான் விரிவடையவேண்டும். நதி எவ்வாறு மலைகளையும், மடுக்களையும், மேடுகளையும், பள்ளங்களையும் தாண்டிச் சமவெளிக்கு வந்து பின்னர் தன் பல்வேறு கரங்களையும் நீட்டிக் கொண்டு விரிவடைந்து பாய்ந்து சுற்றுவட்டாரங்களைச் செழிப்படையச் செய்கிறதோ, அவ்வாறே வாழ்க்கையின் சோதனைகளே ஒருவரின் அன்பு வட்டத்தை விரிவடையச் செய்யும். இதற்குப் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் பிடிக்கும்.

ஆன்மீகத்தின் அன்பு என்பதை வேறுவிதமாய்ச் சொல்லுகின்றனர்.

"ஆசைகள் அறுமின், ஆசைகள் அறுமின்!
ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்!" என்றே வாக்கு. சகலத்தையும் துறந்து தான் என்பதையும் மறந்து பரப்பிரும்மத்தில் ஐக்கியம் அடைவதே, அல்லது அதனோடு ஒன்றாய்க் கலப்பதே ஆன்மீகத்தின் எல்லை. ஒரு விதத்தில் பார்த்தால் இப்படி ஈசனோடும் ஆசைகள் அறுப்பது என நினைப்பதே ஓர் ஆசையாகி விடும்.  இந்த அன்பு, பாசம் என்னும் விஷயத்தில் நாமெல்லாம் குருவாய்க் கொண்டாடும் வியாசர் கூட விதிவிலக்கில்லை. தன் பிள்ளையான சுகருக்கு உபநயனம் செய்விக்கவேண்டும் என்று எண்ணுகின்றார். சுகரோ பிரம்மஞானி! பிறந்தப்போவோ சகலத்தையும் அறிந்தவர். அனைத்திலும் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்றையும் காணாதவர். அவர் என்ன பண்ணினார்னா தன் தந்தை உபநயனம் என்னும் கட்டுக்குள்ளே தன்னைக் கட்டப் போவதை அறிந்து அனைத்தையும் துறந்து, தந்தையின் அன்பையும், பாசத்தையும் துறந்து சென்றுவிட்டார். பிள்ளையைக் காணாத வியாசரோ, மரமே, சுகரைக் கண்டாயோ?? புல்லே சுகரைக் கண்டாயோ?, நீரே, சுகர் எங்கே? மலையே சுகர் எங்கே? எனத் தேடுகிறார். எல்லாமும் இதோ, இதோ, இதோ இருக்கேனே என்கின்றதாம். அப்படி அனைத்திலும் சுகர் நிறைந்து நின்றார். நிற்க முடிஞ்சது அவரால். மனிதனாகப் பிறக்கும் முன்னேயே கிளிக்குஞ்சாக இருந்தப்போவே நேரடியாக ஈசனிடமிருந்தும், அன்னையிடமிருந்தும் தான் பெற்ற பிரம்ம ரகசியத்தைத் தான் மறக்காமல் இருக்கவேண்டும் என்றும், தன் மறுபிறவியிலும் போனபிறவியில் இருந்த கிளிக்குஞ்சு பிறவி மறக்காமல் அதே கிளி முகத்துடன் தோன்ற வேண்டும் எனவும், தாயின் கர்ப்பத்தில் தோன்றாமல் பிறவி எடுக்கவும் வரம் கேட்டுக் கிளிமுகத்தோடு தோன்றியவர் சுகர்.

எல்லோரும் சுகரைப் போல் பற்றற்று இருக்க முடியுமா!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
என்கிறார் வள்ளுவப் பெருமான். இங்கே அன்பு என்பது மனைவி கணவனிடத்தும், கணவன் மனைவியிடமும் செலுத்தும் அன்பை மட்டும் குறித்து அல்ல என நினைக்கிறேன்.அதே போல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, மற்ற உறவு, நட்பு ஆகியோரிடம் காட்டும் அன்பு எனப் பரந்து விரிந்ததாய்த் தான் இருக்கும்.அப்போது தான் அத்தகைய இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் இருக்கும்.  இங்கே பண்பையும், பயனையும் இந்தப் பிறவிக்குச் செல்வமும் மறுமைக்கு மோட்சமும் எனக் கொள்ளலாம் என நினைக்கிறேன். பொதுவான கருத்து கணவன், மனைவி இருவரும் ஒத்த கருத்துடையவராகி அவர்கள் செய்ய வேண்டிய நல்லறங்களைச் சேர்ந்து செய்து பிறர்க்கும் உதவுமாறு இருந்தால் அத்தகைய இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உள்ளது எனக் கொள்ளலாம்.

மற்றக் காதல், நேசம், பாசம், ஆசை பத்திப் பின்னர் பார்ப்போம். இதில் காதல் தான் நேசமாக ஆகிறது என நினைக்கிறேன். முதலில் ஆசை தோன்றிக் காதலாகிப் பின்னர் நேசமும், பாசமும் வருமோ! தெரியலை.
*********************************************************************************

இன்னிக்கு ரங்குவை ரொம்பநாள் கழிச்சுப்பார்க்கப் போனோம். கூட்டம் இல்லை. ஆனால் மழை விட்டு விட்டுப் பெய்வதால் முதலில் வேண்டாம்னு இருந்தோம். ஆனால்பின்னர் பளீரென வெயில் அடிக்க சரினு அவசரம் அவசரமாக் கிளம்பினோம். திரும்பி வரும்போது மழையில் மாட்டிக் கொண்டோம். வீட்டுக்குத்திரும்பிடலாம்னு நினைச்சா திடீர்னு மழை! வீட்டுக்கு வந்ததும் நின்னாச்சு! கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து நடந்து வருகிறது. ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பம். பெரிய ரங்குவைச் சரியாப் பார்க்கவிடலை. கூட்டம் இல்லைனாலும் பட்டாசாரியார்கள் விரட்டறாங்க. நம்பெருமாள் எப்போதும் போல் சிரிப்புடன் காணப்பட்டார். ஆச்சு இன்னும் இரண்டு நாளில் அவரும்மும்முரமாக வேலையில் ஆழ்ந்துடுவார். பாட்டரி கார் ஓடவில்லை. மழை காரணம் என்கிறார்கள். அப்போத் தானே முக்கியத் தேவை! ரங்குவைப் பார்க்கணும்ங்கற ஆசையே இன்னும் போகலையே! நான் எதை எப்போ விடப் போறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











69 comments:

  1. புதிய கணவன், மனைவிக்குள் ஆசையே முதலில் விளைகிறது.

    அவர்களுக்குள் எல்லா விடயங்களிலும் பொருந்திப்போக, பிறகு அன்பு கூடுதலாகிறது பின்பு குழந்தைகள் வந்தவுடன் அன்பே பாசமாகி வலுக்கிறது. இப்படியானவர்களே இறுதிவரை சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

    எந்த ஆசையும் இல்லாமல் சூல்நிலை காரணமாக ஏதோ திருமணம் நடந்து விட்டவர்களிடம் அன்பு பிறக்க வழியின்றி அதன் காரணமாய் பாசமும் கிடைக்காத கணவன்-மனைவியர் பலர் உண்டு.

    ஆனால் குழந்தை மட்டும் பிறந்துவிடும் காரணம் இருவரும் காமத்தை துறக்க இயலவில்லை. அதற்கும் காரணம் சமூகத்தின் அவச்சொல்லிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காகவே...

    அந்தக்குழந்தைகளால் பாசம் கிடைத்தால் ???

    இருவருக்குமே வாழ்வில் பிடிப்பு தோன்றும் அதுவும் கிடைக்காதவர்களின் வாழ்வு இறுதிவரை துயரமே...

    எது எப்படியோ நல்ல கணவன்-மனைவி இணைவது இறைவன் கொடுத்த வரம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! நீங்க சொல்வது சரியே! ஆனால் ஆசை அன்பாக மாறும் எனத் தோன்றவில்லை. ஆசை நேசமாக மாறுகிறது. ஏனெனில் நேசம் எதிர்பார்ப்புடன் கூடியது. அன்பு விரிந்து பரந்தது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இருக்காது. சுழ்நிலை காரணமாத் திருமணம் செய்து கொண்டவர்கள் கூட நாளாவட்டத்தில் ஆசையும், நேசமும் இல்லாமல் பாசம் மட்டும் கொண்டு வாழ்ந்தது உண்டு. குழந்தைகள் மூலம் வாழ்க்கையில் பிடிப்பு வரலாம். எனக்குத் தெரிந்து ஒரு கணவன், மனைவி அப்படித்தான். கணவன் ஆணழகன். மனைவி சுமார் ரகம் தான்! முதலில் மறுத்த கணவன் பின்னர் அம்மாவின் வற்புறுத்தலுக்காக மணந்தான். அம்மா அப்போது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். மனைவியோடு வெளிநாடு சென்றும் கணவன், மனைவிக்குள் அதிகம் பேச்சு வார்த்தைகளோ ஒட்டுதலோ இருக்காது. கடமைக்காகக் கணவன், மனைவியை விடாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். குழந்தையும் பிறக்கவில்லை. அவர்களுக்குள் அப்படி ஓர் உறவு உண்டான்னே சந்தேகம். திடீர்னு பத்து வருஷம் கழிச்சு அந்தப் பெண் கர்ப்பவதியாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு ஒரு வயசு வரை ஏனோதானோவென இருந்த கணவன் இப்போது மனைவி வைச்சது தான் சட்டம்! எதைக் கேட்டாலும் மனைவியின் பெயரைச் சொல்லி அவளுக்குத் தான் தெரியும், அவளைத் தான் கேட்கணும் என்கிறார். அந்தப் பெண் குழந்தைக்கும் இப்போ பதினைந்து வயது ஆகப் போகிறது!

      Delete
    2. நான் ஆசையே அன்பாக மாறுகிறது என்று சொல்லவில்லையே...

      எல்லா விடயங்களிலும் பொருந்தி வரும்போது அன்பு கூடுதலாகும் வழி பிறக்கிறது என்று சொன்னேன்.

      Delete
    3. விளக்கத்துக்கு நன்றி கில்லர்ஜி! எல்லாத்திலேயும் பொருந்திய ஜோடி அதிசயமாத் தான் கிடைக்கும்னு நினைக்கிறேன். Opposite poles attract each others எனவும் சொல்லப்படுகிறது. எனவே இதில் அவரவருக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்தே இருக்கும்னு நினைக்கிறேன்.

      Delete
  2. அருமையா அழகா எழுதியிருக்கிங்கக்கா அன்பு பத்தி .. .காதல் பிரியம் நேசம் ஆசை எல்லாம் ஒரு கடைசீ புள்ளிக்கு அழைத்து செல்லும் அந்த புள்ளி எதிர்பார்ப்பில்லாத அன்பு .எடுத்தவுடனே அன்பை வெளிப்படுத்துவது கஷ்டம்தான் ,,
    //வீட்டில் முதலில் சின்ன ஊற்றுப் போல் கிளம்பும் அன்பானது மெல்ல, மெல்ல அக்கம்பக்கம், சுற்று வட்டாரம், உறவு வட்டம் என விரிவடைந்து நாடு, நகரங்களையும் தாண்டி பிரம்மாண்டமான பிரபஞ்சத்தையும் நேசிக்கும் அளவுக்கு//

    அதே அதே சூப்பர்ப் விளக்கம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல்! வேலைப் பளு குறைந்திருக்கா? முன்னைப் போல் வருவதில்லை. நீங்க சொல்லுவது சரியே! எனினும் பெரும்பாலோர் அன்பையும் நேசத்தையும் ஒண்ணாப் புரிஞ்சுக்கறாங்க! மிக்க நன்றி.

      Delete
  3. அன்பு + பாசம் = ஆசை!...

    பழரசம் போல சுவைக்கச் சுவைக்க ஆனந்தம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. ஆனால் அன்பும் பாசமும் சேர்ந்து தான் ஆசை என்பதை ஏற்க முடியலை. ஆசை தான் நேசமாக மாறும். அன்பு இயல்பான இயற்கையான ஒன்று. எல்லோரிடமும் காணக் கிடைப்பது! அப்படித் தான் தோணுது!

      Delete
  4. >> ரங்குவைப் பார்க்கணும்ங்கற ஆசையே இன்னும் போகலையே!..
    நான் எதை எப்போ விடப் போறேன்!..<<

    ஆசைப்படு நெஞ்சே ஆசைப்படு - எங்கும்
    அன்பு கொண்டு ஆள்வதற்கு ஆசைப்படு!..
    அருள் எனும் நிதிகொள்ள ஆசைப்படு - அதில்
    ஆயிரமாய் உயிர் காக்க ஆசைப்படு!..

    மனிதருக்குள் பேதம் அற ஆசைப்படு - எங்கும்
    மங்கலங்கள் தங்கிடவே ஆசைப்படு!..
    மானிடமும் கொள்வதற்கு ஆசைப்படு - மலர்த்
    தமிழ் எங்கும் வெல்வதற்கு ஆசைப்படு!..

    அரங்கனின் பதங்காண ஆசைப்படு - அந்த
    அருள்சிவன் முகங்காண ஆசைப்படு!..
    அருள் அமுதம் பருக ஆசைப்படு - வல்லி
    அபிராமி தருவள் என்று ஆசைப்படு!..

    ஆசைகள் வாழ்க..
    அவனியெங்கும் வாழ்க!..

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் நல்ல ஆசைகள். ஆகவே ஆசைப்படலாம். ஆனால் மனிதருக்கு வரும் வேண்டாத ஆசைகளை என்ன செய்வது?

      Delete
    2. /// வேண்டாத ஆசைகளை என்ன செய்வது?...///

      இதற்கெல்லாம் விரிவாக எழுத வேண்டும்...

      இப்போதைக்கு என் தளத்தில்
      தை மாதம் முடிய இடம் இல்லை..

      ஆனாலும் ஒன்று...

      இவர்க்கு வேண்டியது என்பது
      அவர்க்கு வேண்டாதது...

      உமி இல்லாமல் அரிசி இல்லை..
      இரண்டையும் சேர்ந்ததே நெல்...

      வேண்டிய ஆசைகளை நிறைத்துக் கொண்டாலே...
      வேண்டாத ஆசைகள் குறைந்து போகும்....

      நலம் வாழ்க...

      Delete
  5. இது ஒரு முடிவடையாத விஷயம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அவரவர் அனுபவங்களின் அடிப்படையில். //

    ஆமாம் கீதாக்கா ...அனுபவத்தின் அடிப்படையில் நமது கருத்துகள் பல அமைவது...இதோ இன்னும் படிச்சுட்டு வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா! உங்கள் கருத்தை என்னனு பார்க்கிறேன்.

      Delete
  6. //ஆசையே பாசமாக மாறுகிறது. வயசு ஆனால் அதுவே அன்பாக மாறுகிறது. //

    வயதோடு வந்தாலும் காதல்... அது வயதாகி வந்தாலும் காதல்... காதலில் காமம் உண்டு. காமத்தில் காதல் கம்மி.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம் ஆசை வேறே! பாசம் வேறே! பெற்றோர் மகனிடமும், மகளிடமும் கொள்வது பாசம்! பாசம் கலந்த நேசம் எனலாமோ? அதே ஆசைப்படுவது வேறே! பேச்சு வழக்கில் "உன் மீது எனக்கு ஆசை!" என்றாலும் அந்த ஆசை தான் நேசமாக மாறுகிறது. அன்பு வேறே! முற்றிலும் வேறே! இதுக்குக் கணவன், மனைவியாகவோ, உடன் பிறந்தாராகவோ, பெற்றோர் பிள்ளையாகவோ இருக்க வேண்டாம்.

      Delete
  7. அன்பு பற்றி என்னால் சொல்ல சரியாகக் கணிக்க, சொல்ல முடியவில்லை. அன்பு என்பது சுயநலம் சார்ந்தது, சார்பு நிலை சார்ந்தது என்கிற எண்ணம் அடிக்கடி எனக்குத் தோன்றும். நாம் வைத்திருக்கும் அன்பும் சரி, நம் மீது வைக்கப்பட்டிருக்கும் அன்பும் சரி சந்தேகத்தோடயே பார்க்கிற குணம் இருக்கிறது எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. அன்பு பற்றிச் சரியாச் சொல்ல முடியலை என்கிறீர்கள்! அதான் சரி! ஏனெனில் அன்பில் சுயநலமே இருக்காது. எதையும் எதிர்பார்க்காது. கொடுக்கக் கொடுக்கக் குறையாது! சார்பு நிலை சார்ந்தது ஆசை கலந்த நேசம். நம்மிடம் எதிர்பார்ப்புடனேயே இதைக் கொடுப்பார்கள். நாமும் அவர்களிடம் இதற்கான எதிரொலியை எதிர்பார்த்தே கொடுப்போம். ஆகவே அன்பு என்பது முற்றிலும் வேறு.

      Delete
  8. நல்ல பதிவு அக்கா. அன்பு விதை ஊன்றப்பட்டு மெதுவாகத்துளிர்த்து பூவாக மலர்ந்து விரிந்து வாசம் வீசுவதைப் போல....நதியை ஒப்பிட்டு அழகாகச் சொல்லியிருக்கீங்க.

    அக்கா இந்த அன்பு என்பது கணவன் அப்புறம் தானே வருகிறார் அல்லது மனைவி அப்புறம்தானே...அதன் முன்னரேயே பெற்றோர், நம் சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர் என்று தொடங்கிடுமே இல்லையோ...முதலில் பாசம் தான் தொடங்கும் இவர்களிடத்தும்...ரத்தபந்தம் வேறு...எனவே ஒட்டுதல் பாசம் அப்புரம் மனம் பக்குவம் அடையும் போது அதே பாசம் விரிவடைந்து அன்பாக மாறும் ஆனால் அந்த மனம் பக்குவம் அடைந்தால் மட்டுமே இல்லையோ அக்கா?

    பாசம் என்பது கோபதாபங்களுக்கு இடம் கொடுக்கும்....அன்பு என்பது அந்தக் கோப தாபங்களை அப்புறப்படுத்தி அன்பே சிவம் எனும் நிலைக்குக் கொண்டு செல்லும் ஆனால் இது ரொம்பவே கடினமான ஒன்று இந்த மாதிரியான அன்பு..அப்படி எல்லாம் டக்கென்று கோப தாபத்தை விட்டு விட முடியுதா என்ன..?!!!

    பதிவு நல்லா சொல்லிருக்கீங்கக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாசம் நாளடைவில் அன்பாக மாறும் என்கிறீர்கள். இல்லை என்கிறேன் நான். அன்பானது எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்க்கும். வித்தியாசம் இருக்காது. பாசம் மனிதருக்கு மனிதர், உறவுக்கு உறவு மாறுபடும். பாசத்தில் கண்மூடித்தனமாக நாம் யார் மீது பாசம் வைத்திருக்கோமோ அவர்கள் தவறுகள், குற்றங்கள், குறைகள் நம் கண்களுக்குத் தெரியாது! தவறு செய்தால் கண்டிக்கக் கூட மாட்டோம். ஆனால் அன்பு இதை மிருதுவாகச் சுட்டிக் காட்டும்! இதைச் செய்யாதே எனச் சொல்லும்.அதை ஏற்கவில்லை எனினும் விட்டுக் கொடுத்து நகரும். அதே சமயம் பாசம் வலியுறுத்தும். வற்புறுத்தும். தான், தன்னுடையது என்று சொல்லும்.

      Delete
  9. ரங்குவைப் பார்க்கணும்ங்கற ஆசையே இன்னும் போகலையே! நான் எதை எப்போ விடப் போறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

    ரங்குவைத்தானே பார்க்க ஆசைப்படுகிறீர்கள்!!!! அந்த ஆசை ஒன்றும் மோசமானது இல்லைதானே...நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது....இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம்!!! இது எப்போ வரும்ன்னு தானே!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், மனசிலே கூடப் பார்த்துக்கலாமே ரங்குவை! இன்னும் அந்த அளவுக்குப் பக்குவம் வரலை! நேரே போய்ப் பார்த்தால் தானே திருப்தி வருது! அப்போக் கூட இன்னும் ஒரு நிமிஷம் நிற்க விட்டிருக்கலாமோனு எல்லாம் தோணுதே!

      Delete
  10. நான் எங்கேனும் போகனும் என்று ஆசைப்பட்டால் என் பாட்டி சொல்லுவார் இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம் ந்னு மனசை வைச்சுக்கணும்...அந்த மாதிரி எங்கயாவது போனும்னு ஆசை எல்லாம் வைச்சுக்கக் கூடாது...நம்மால முடியாது....பஸ்ஸுக்கு பைசா அப்புறம் செலவு எல்லாம் கட்டுப்படியாகாது. நடந்தா சந்தோஷமா ஏத்துக்கோ இல்லைனாலும் சந்தோஷமா ஏத்துக்கனும் இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம் நு அப்படினு...ஆசைகள் குறைக்கபப்டனும்னு என் வீட்டுல சொல்லி சொல்லி ....அது என் வாழ்க்கைக்கு ரொம்பவே பயன்பட்டு வருகிறது...குறிப்பா இந்த இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம்...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா நீங்க சொல்றாப்போல் நான் எங்கும் செல்லணும் ஆசைப்பட்டது இல்லை. சின்ன வயசில் கூட அப்பா சுற்றுலா போகும்போது அண்ணாவையும், தம்பியையும் மட்டும் அழைத்துக் கொண்டு போயிருக்கார். என்னையும், அம்மாவையும் அழைத்துப் போனதில்லை. முதல்லே கொஞ்சம் அழுகையா வரும். பின்னர் சமாதானம் ஆகி விடுவேன். புத்தகங்கள் இருந்தால் போதும்! ஆனால் இப்போ அப்படி இல்லை! வீட்டை விட்டுக் கிளம்ப முடியலைனு இருந்தால் கூடச் சில இடங்களுக்குக் கட்டாயமாய்ப் போய் வரும்படி இருக்கு! ஆகவே அதெல்லாம் நினைக்கவே இல்லை.

      Delete
    2. ஏற்கெனவே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். பத்ரிநாத், கேதார்நாத் 2003 இல் சென்றபோது பத்ரிநாத்திலேயே எனக்கு உடம்புக்கு வந்து வீசிங் ஜாஸ்தியாகிக் கேதார்நாத் பார்க்காமல் திரும்பும்படி ஆச்சு! திரும்பும் போதும் எங்களுக்கு முன் சென்ற பேருந்து பள்ளத்தில் விழ இருந்து நுனியில் தொற்றிக்கொண்டு இருந்தது. எப்படியோ நாங்க அதிலிருந்து வெளியே வந்தோம். ஆனால் இதை எல்லாம் சுட்டிக் காட்டி என் கணவர் என்னைத் திருக்கயிலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை; நான் மட்டும் தான் போகப் போறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அவருக்கு டிக்கெட் கொடுக்க வந்த ஏஜென்ட் என்னோட பாஸ்போர்ட்டையும் சேர்த்து வாங்கிக்கொண்டு போய் எனக்கும் விசா வாங்கிக் கொண்டு வந்து விட்டார். நம்மவருக்கு அரை மனசு தான்! ஆனாலும் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்விட்டு வந்தோம். (குதிரையிலிருந்து விழுந்தது தவிர்த்து) அங்கே அவருக்குத் தான் ஒத்துக்கலை! எனக்கு ரொம்பவே நன்றாக இருந்தது. ஆக அப்போ என்ன தோன்றியது என்றால் இதெல்லாம் நம்ம கையில் இல்லை! நடப்பவைகளை அதன் போக்கிலேயே விடணும்! தானே எல்லாம் நடக்கும் என்பது தான்! கயிலைநாதனை நான் பார்க்கணும் என எனக்கு இருந்திருக்கு! அவனே என்னை அழைத்தான். தரிசனமும் கிடைச்சது!

      Delete
    3. //நடப்பவைகளை அதன் போக்கிலேயே விடணும்! தானே எல்லாம் நடக்கும் என்பது தான்! கயிலைநாதனை நான் பார்க்கணும் என எனக்கு இருந்திருக்கு! அவனே என்னை அழைத்தான். //

      இது ரொம்ப உண்மை. புஷ்கரத்தைப் பற்றிப் பேசினோம் படித்தோம் ஆனால் போகும் எண்ணம் இல்லை. திடுமென்று யோகா கிளாஸில் (காலை 7 மணி) ஒருவர் புஷ்கரத்தைப் பற்றிச் சொன்னபோது நெல்லையைச் சேர்ந்த நாம் போகாமல் இருப்பதா என்று எண்ணி, 9.30 மணிக்கு ஹஸ்பண்ட் இடம் சொல்லி, மாலை 4 மணிக்கு கிளம்பிவிட்டோம். மிக நல்ல தரிசனங்கள் (நவதிருப்பதி, சில கைலாயங்கள், இன்னும் சில புகழ் வாய்ந்த கோவில்கள், உணவு அனேகமாக பிரசாதங்களே).

      நான் இரவு 7 மணிக்கு ஆஸ்ரமத்திலிருந்து வரும் புத்தகத்தைப் புரட்டியபோது அங்கு, சோளிங்கர் செல்ல ஒரு விளம்பரம் பார்த்தேன். அந்த நம்பருக்குக் கூப்பிட்டால் அவர், இரவு 10 மணிக்கு நங்கைநல்லூரிலிருந்து கிளம்பறோம், சீட் இருக்கு, வருவதென்றால் கன்ஃபர்ம் பண்ணவும் என்று சொல்லி, மனைவியிடம் சொல்லிவிட்டு, 8.30 மணிக்கு குளித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அதிகாலை 2 மணிக்கு மலையேற்றம் தொடங்கியது. கார்த்திகை முதல் ஞாயிறு பெருமாள் சேவை.

      இதுமாதிரி பல கோவில் தரிசனங்கள், ஆச்சார்யர்கள் தரிசனம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. (திருப்பதி மூலஸ்ஸ்தானத்தில் மூன்று ஆச்சார்யர்கள் முன்னிலையில் பெருமாள் தரிசனம்)

      அவன் அழைக்காமல் எந்தத் தரிசனமும் இல்லை. அவன் அழைத்தால், தடுப்பாரும் இல்லை.

      Delete
    4. ஆமாம். நெல்லைத் தமிழரே, இதைப் பல முறை உணர்ந்திருக்கேன்.

      Delete
  11. //பார்க்கணும்ங்கற ஆசையே இன்னும் போகலையே! // - இரண்டு நாட்கள் முன்பாக 'சாத்துமுறை' சேவைக்கு திருப்பதியில் சென்றிருந்தேன். (காலை, ஜீயருடன். பெருமாளை 4 அடி தூரத்தில் தரிசிக்கமுடியும். அந்த மூலஸ்தானத்தின் இரண்டாவது கட்டுக்குள் 4 நிமிடமாவது நிற்கமுடியும், இறைவனை தரிசிக்க 10 செகண்டுகள்தான் கிடைக்கும் என்றாலும்). வெகு நிறைவான சேவை. ஆசை கட்டுப்படுமா? மறுநாளும் சென்றிருந்தேன். ஆனால் இறை தரிசனம் என்பது சாதாரண 'ஆசையில்' சேராதுன்னுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைச்சவர் நீங்க நெல்லை. இங்கே வந்தபோதும் விஸ்வரூப தரிசனம் பார்த்துட்டீங்க. எங்களிடம் முன்னாடியே சொல்லி இருந்திருந்தால்! ஒரு வேளை நாங்களும் வந்திருப்போமோ எனத் தோன்றுகிறது! பாருங்க ஆசை வேண்டாம்னு சொல்லிக் கொண்டே விஸ்வரூப சேவைக்கு ஆசைப்படறேன். திருந்தாத ஜன்மம் நானெல்லாம்! ))))

      Delete
    2. இதைப்பற்றி அப்புறம் உங்கள்ட விரிவாச் சொல்றேன். ஒன்று மட்டும் உண்மை, மூலவரை எத்தனை முறை தரிசனம் செய்தாலும் திருப்தி வராது. அவனைப் பார்க்கும்போது அவனை ஆராதித்த எல்லா ஆச்சார்யர்களையும் பார்க்கும் திருப்தி. இந்த ஸ்ரீரங்கம் டிரிப்பில் ஒரு முறைதானே அவனைத் தரிசிக்க முடிந்தது என்று எனக்கு வருத்தம்தான். முந்தைய நாள் இரவு சேவிக்கமுடியலை, தேசிகர் சன்னிதி-உத்தரவீதியில் உபன்யாசத்தில் ஆச்சார்யரோடு இருந்தோம். மறுநாள் பகலில் நேரமே கிடைக்கலை. (ராமானுஜரை அலங்காரம் எதுவுமின்றி அவருடைய தரிசனம் கிடைத்தது, கிடைத்தற்கரிய பேறு என்று தோன்றியது. நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா? அவருடைய ரூபம் சிலிர்ப்பை உண்டாக்கக்கூடியது)

      Delete
    3. ஒவ்வொரு முறை போகும்போதும் ராமாநுஜரைப் பார்க்க முடிவதில்லை என்பதே உண்மை. ஏனெனில் தாயாரை தரிசித்துவிட்டு ரங்குவையும் பார்த்துவிட்டு வருவதற்கே அநேகமாய் ஒன்றரை மணி நேரம் ஆயிடும். ஆகவே பெரும்பாலும் தனியாக இதுக்குனு போய்ப் பார்த்தால் தான்! இப்போ சமீபத்தில் சக்கரத்தாழ்வாரையோ, ராமானுஜரையோ பார்க்கலை.

      Delete
    4. கீசா மேடம்... வருடத்துக்கு இரு முறை பச்சைக்கற்பூரம் குங்குமப்பூவினால் ராமானுஜர் திருமேனிக்கு பூசுவார்கள். அப்போது அலங்காரம் எதுவும் இருக்காது (கால் பகுதி மட்டும் மறைக்கப்பட்டிருக்கும்). நீங்கள் கண்டிப்பாக ராமானுஜரை மட்டும் சேவித்துவிட்டு வாருங்கள் (மற்றப் பகுதிக்கெல்லாம் நடந்தால் முடியாது). சிலிர்க்கவைக்கும் உருவம்.

      Delete
  12. //எதிர்பார்ப்பு இல்லாமல் அன்போ, பாசமோ, காதலோ வருவதில்லை// - உண்மைதான். ஆனால் எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றத்துக்கும் மனது தயாராகவேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, ஏமாற்றத்துக்கு மனம் தயாராகிறதோ இல்லையோ, ஏமாற்றங்கள் குறையவில்லை. நிறையவே ஏமாற்றங்கள்! தாங்கிக் கொண்டு தானே வரோம்!

      Delete
  13. வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டார்களா? எப்போது வை.ஏ.?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், டிசம்பர் 18 வைகுண்ட ஏகாதசி! நாங்க என்னமோ கூட்டத்தில் போகப் போவதில்லை. ஆனால் பெரிய வரிசைக்காக கம்புகள் கட்டி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தாயார் சந்நிதிக்குப்போகும் பிரகாரத்தில் கூடக் கம்புகள் கட்டித் தடுப்பு! டிசம்பர் ஏழாம் தேதி பகல் பத்து முதல் நாள் உற்சவம்

      Delete
  14. அழகாக அலசியிருக்கிறீர்கள்.
    //"ஆசைகள் அறுமின், ஆசைகள் அறுமின்!
    ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்!"// சிலர் ஆன்மீகம் என்ற பெயரில் திரும்பத் திரும்ப பூஜை, புனஸ்காரம், ஆசாரம் என்று அதிலேயே சுற்றிக்கொண்டிருப்பார்களேயொழிய உள்முகமாக திரும்ப மாட்டார்கள். அவர்களுக்காக சொல்லப்பட்டதாக இருக்க்லாமோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! பொதுவாக யாருமே உள்முகமாய்ப் பார்ப்பதாய்த் தெரியலை. பலருக்கும் பூஜை மற்ற நியமங்களே போதும் என்னும் எண்ணம். நீங்க சொல்றாப்போல் அவங்களுக்காகத் தான் இருக்கும்.

      Delete
  15. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது
    இந்த குறள் உணர்த்துவதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எல்லா விஷயங்களுக்கும் பண்பு, பயன் என்ற இரண்டு உண்டு. உதாரணமாக சர்க்கரை என்று எடுத்துக் கொண்டால் அதன் பண்பு இனிப்பு, பயன் சக்தி கொடுப்பது. அதைப்போல இல்வாழ்க்கையின் பண்பு அன்பு, பயன் அறம். அறத்தை வளர்க்கக்கூடிய அன்பு என்பது கணவன், மனைவி இடையே மட்டும் இருக்க முடியுமா? மொத்த உறவினரிடையே இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை பானுமதி! கணவன், மனைவி இருவரும் அறத்தைக் கடைப்பிடித்தால் போதாது தான். மொத்த உறவினரும் அதுக்கு ஒத்துழைக்கணும்! அதெல்லாம் எங்கே!

      Delete
  16. மழையில் நனைந்து விட்டீர்களா? ஏற்கனவே வீசிங்க்..,உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பாதி வழி வந்துட்டோம். பெருந்தூற்றலாக ஆரம்பித்து விட்டது. நிற்கிறேன்னு தான் சொன்னார். ஆனால் ஒதுங்க இடம் இல்லை. கொஞ்சமாவது நனையாமல் போய் ஒதுங்க முடியாது! அதான் வீட்டுக்கே வந்துட்டோம். கொஞ்சம் பயமாத் தான் இருந்தது; இப்போவும் இருக்கு! இதுவரை ஒண்ணும் இல்லை!

      Delete
  17. 2 மணி நேரம் தூங்கி எழும்பினதில் நிறைய தோணுது இப்போ :) அன்பை நிறைய ஆராய்ச்சி செஞ்சிட்டேன் ..
    அன் கண்டிஷனல் (unconditional ) இதுதான் அன்பு இதற்க்கு எந்த அளவுகோலும் இல்லை மனுஷங்க மேல் மட்டுமில்ல எல்லா ஜீவராசி மேலும் மரம் செடிகொடி மீது வருவதும் அன்பே .எங்காவது வெட்டுப்பட்ட மரத்தை பார்த்தா தேம்பி அழும் மக்களும் உண்டு அதுவும் அன்பே ..
    அன்பிற்கு பொறாமை போட்டி வெறுப்பு இன்னும் நிறைய நெகட்டிவிட்டிஸ் போன்ற கெட்ட எதுவும் தெரியாது ..இந்த உலகத்தில் அன்பைத்தவிர எதுவும் நிரந்தரமில்லை அன்புக்கு முடிவுமில்லை ...
    பாசம் பொஸசிவ்னெஸ்ல் மற்றும் பல கண்டிஷன்களை போடும் ஆனா அன்பு எந்த கண்டிஷனும் போடாதது எதையும் எதிர்பார்க்காது ..ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாடி இன்னும் நிறைய தோணுச்சு ஆனா இதோட முடிச்சிக்கறேன் ..

    ReplyDelete
    Replies
    1. மேலும் மரம் செடிகொடி மீது வருவதும் அன்பே .எங்காவது வெட்டுப்பட்ட மரத்தை பார்த்தா தேம்பி அழும் மக்களும் உண்டு அதுவும் அன்பே ..
      இது அன்பு அல்ல. நேசம். மரம் சிடி கொடிகளின் மேல் வைக்கப்படுவது நேசம். N
      அன்புக்கு negativities தெரியும். தெரிந்தால் அன்பு விடப்படும். negativities தெரியாதது பாசம் மட்டுமே.
      Jayakumar​​

      Delete
    2. ஏஞ்சல், நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன். அன்புக்கு நீங்கள் சொல்லும் பொருள் பொருத்தமானதே! அன்பையும், பாசத்தையும் ஒன்றாகப் புரிந்து கொண்டு சொல்வது சரியில்லை. பாசம் வேறே! அன்பு வேறே தான்!

      Delete
    3. ஜேகே அண்ணா, பாசம் தான் தவறு செய்தாலும் ஏற்கும் மனம் கொண்டது. தனக்குப் பிடித்த தான் அதிகம் நேசிக்கும் நபர் செய்யும் தவறுகளைப் பாராட்டாது! அதே தான் பாசம் காட்டாதவர்கள் தவறே செய்யாட்டியும் அவர்களிடம் குற்றமும் கண்டுபிடிக்கும். இதுவே அன்பாக இருந்தால் இருவரிடமும் ஒரே மாதிரியா இருக்கச் சொல்லும். அன்பு கொடுப்பதைத் தவிர்த்து எதுவும் அறியாதது. அதற்குக் குற்றம், குறை கண்டுபிடிக்கத் தெரியாது. எப்படி இருந்தாலும் அதை மென்மையாகச் சுட்டிக்காட்டிவிட்டு ஏற்கும். பாசம் அப்படி இல்லை. தனக்குப் பிடித்தவர்களிடம் மட்டுமே தோன்றும். எல்லோரிடமும் தோன்றுவதில்லை.

      Delete
    4. அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
      அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
      அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
      அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

      Delete
  18. இவற்றுக்கிடையே நூலிழை போன்ற வேறுபாடு உள்ளது என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, நீங்க சொல்வது சரியே!

      Delete
  19. ஆசை என்பது அனுபவிப்பது அல்லது எடுத்துக்கொள்ளப்படுவது. இது உணர்வுகள் , பருப்பொருள், உயிர்ப்பொருள் எல்லாவற்றிற்கும் பொருந்தும்,.

    உதாரணம். லட்டு தின்ன ஆசை (ருசி), நித்யஸ்ரீ பாட்டு கேட்க ஆசை (செவி), ரங்குவைப்பார்க்க ஆசை (கண்), கடற்காற்றை நுகர ஆசை ​(மூக்கு ), முதல்வர் ஆக ஆசை (பதவி புகழ், பெருமை, உணர்வு சமபந்தப்பட்டது), வீடு வாங்க ஆசை (ஜடப்பொருள், பருப்பொருள்), ----மனைவி ஆக்க ஆசை (உயிர்ப்பொருள்). ஆசை என்பது அனுபவிக்கப்படுவது.

    அன்பு எனப்படுவது உயிர்களின் மேல் செலுத்தப்படுவது. அது மிருகம், மற்றும் மனிதர்களாக இருக்கலாம். நாயின் மேல் அன்பு செலுத்தினார் என்றோ அல்லது வேலைக்காரனிடம் அன்பாக இருந்தார் என்றோ கூறுகிறோம். கல்லை அன்பாக வைத்திருந்தார் என்று கூறுவதில்லை. ஆசையாக வைத்திருந்தார் என்றே கூற முடியும்.

    பாசம் என்பது நெருங்கிய உயிர்கள் மீது செலுத்தப்படும் கண்மூடித்தனமான அன்பு என்று கூறலாம். ஆசை நிறைவேறியவுடன் அற்றுப்போகும் அல்லது முடியும். அன்பு சில காரணங்களால் வெறுப்பாக மாறும். ஆனால் பாசம் நிலையானது. அது செலுத்தப்படும் உயிரின் நிறை குறைகளை ஆராயாமல் செலுத்தப்படுவது.

    ஆக ஆசை அனுபவிக்கப்படுவது, அன்பு காரணங்களுடன் செலுத்தப்படுவது, பாசம் காரண காரியம் இல்லாமல் கண்மூடித்தனமாக செலுத்தப்படும் அன்பு எனலாம்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பாசம் கண்மூடித்தனமான அன்பு என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா ஜேகே அண்ணா! அந்தப் பாசத்துக்குத் தான் குற்றம் குறை கண்களில் படாது! அதுவும் தனக்கு வேண்டியவர் எனில்! அன்பு அப்படி அல்ல. எல்லோரிடமும் ஒரே மாதிரியாகக் காட்டும். அனைவரையும் சமமாக எண்ணும். அன்பு அனைத்து உயிர்களிடமும் செலுத்தப்படுவது என்னும்போது அங்கே எந்தக் காரணம் வருகிறது? இங்கேயே நீங்கள் சொல்வதில் முரணாக இருக்கே! நாயோ, வேலைக்காரனோ அவர்களிடம் வைப்பதும் ஆசை கலந்த பாசம் தான்! அது தான் பின்னர் வேறு காரணங்களால் வெறுப்பாக மாறுகிறது.

      Delete
    2. அது எப்படி காரணம் இன்றி அன்பு உண்டாக முடியும்? நாம் பார்க்கும் எல்லோரையும் நாம் சமமாகத்தான் பார்க்க முடியும். அது அன்பு ஆகாது. அன்பு செலுத்தப்படும் பொருள் அல்லது உயிரினத்தில் உள்ள எதோ ஒன்று (அழகு,குணம்,நிறம், உறவு,கருணை போன்றவை) நம்மை அன்பு கொள்ளச் செய்துவிடுகிறது.
      Jayakumar

      Delete
    3. நாம் அனைவரையும் சமமாகப் பார்ப்பது என்பது வேறு. அன்பு என்பது வேறு. எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலை என நினைக்கிறேன். அன்பு தானாக வரும்! அதற்கு எதுவும் தடை இல்லை. எல்லோரிடமும் வெள்ளமாகப் பாயும். அத்தகைய மனிதர்கள் அபூர்வமாக இருக்கலாம். அன்பு உண்டாகக் காரணம், காரியம் ஏதுவும் தேவை இல்லை. தி.ஜா. கதை ஒன்றில் அத்தகைய அன்பைப் பற்றி அவர் விவரித்திருந்தார். எந்த நாவல் என்பது நினைவில் இல்லை. உயிர்த்தேன் என நினைக்கிறேன்.

      Delete
    4. எனக்கும் ஜே கே ஐயா சொல்வதுதான் சரியெனப் படுது கீசாக்கா... எத்தனை பேரோடு நட்பாக இருந்தாலும் ஒரு சிலரோடு மட்டும்தானே அன்பு வருது... அது ஏதோ நமக்குப் பிடித்த ஒன்று அவரிடம் இருப்பதனால தானே... பழகும் எல்லோருடனும் அன்பு வைக்கிறோமா இல்லையே.. அன்பாக இருப்பது வேறு அன்பு வைப்பது வேறு..

      Delete
    5. ஞானி, அன்பைக் குறித்து நான் சொல்வதை நீங்க சரியாப் புரிஞ்சுக்கலையா? இல்லைனா எனக்குச் சொல்லத் தெரியலையா? :( நட்பில் வரும் அன்பு என்பதே முற்றிலும் வேறு. தன்னையே நேசிப்பவன் இவ்வுலகையும் நேசிக்கத் தொடங்குவான்.

      Delete
  20. இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக ஒரு சுட்டி நீளம் கருதி சுட்டியில் தருகிறேன் /https://gmbat1649.blogspot.com/2011/05/blog-post.html பல நிலைகளில் சொல்ல முயன்றிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, படித்துப் பார்க்கிறேன். நன்றி.

      Delete
    2. படித்து அங்கேயே பதிலும் கொடுத்துவிட்டேன்.

      Delete
    3. அன்பை பாசமாக ஆசையாக என்று என்னவெல்லாமோ செய்து எழுதிய பதிவுக்கு அன்பு என்பது என்ன என்று தோன்றியதை எழுதினேன் கேள்விகளுக்குப் பதில் தேடும்போது உண்மை நிலை தெரியுமே

      Delete
  21. விளக்கம் அருமை அம்மா...

    "அன்பு உடைமை" அதிகாரத்தில் அனைத்து குறள்களும் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. அந்த அதிகாரத்தின் குறள்களையும் படிச்சேன்.

      Delete
  22. Universally most misunderstood, mis-represented, விஷயங்களை வைத்து போட்டீர்கள் ஒரு பதிவை! பின்னூட்டங்கள் ஜெகஜ்ஜோதியாகப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருன்றன. படித்து நான் திக்குமுக்காடிப்போய், சரி ஒரு காஃபியைப் போட்டுக்கொண்டு உட்காருவோம் என உட்கார்ந்து சிந்திக்கிறேன்.

    இந்த விஷயங்களை அவரவர்களின் குறுகிய அனுபவங்களைத் தாண்டி பார்க்கவேண்டும். அப்போதுதான் ஏதாவது புரியும். இங்கு, குறுகிய அனுபவம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனுபவம் என்பது ஒருவருக்கு வாய்த்திருக்கும் சிறிய வாழ்நாளின் experience.ஒரு எல்லைக்குட்பட்டதுதான். (But, experience is always limited. Hence, knowledge, based on experience, is also limited. –JK). அந்த அனுபவம் என்பது அவரவர்க்கு வாய்த்தவாறே, வாய்த்த அளவிலேதான் நிகழும், இல்லையா? எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவிக்க முடியாதே? அப்போது இத்தகைய குறுகிய, ஒரு எல்லைக்குட்பட்ட அனுபவங்களின் வழியே, ஒன்றைப்பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கும் அறிவு, புரிந்துகொள்ளல்/பிம்பம், அதன் முழு பரிமாணமாக இருக்க முடியாது.

    அன்பு, காதல், பாசமென்றால் உடனே சராசரி மணவாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, ’முதலில் ஆசைதான் வருது, அதுக்கப்புறம் காதல், அன்பு, அப்புறம் பாசம் பெருக்கெடுத்து ஓடுது’ என்று ஒரு ஸ்டீரியோடைப் ஃபார்முலாவைத் தயார் செய்து, எல்லாவற்றிலும் பொருத்திப்பார்க்க முயற்சிக்கலாகாது. இப்படி ஒருவரின் அனுபவம் இன்னொருவரின் அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமேதுமில்லை. வாழ்க்கை நாம் போடும் எந்தக் கட்டத்துக்குள்ளும் வாராதது. முடிச்சுகள், திருப்பங்களை அவ்வப்போது அள்ளி விசிறுவது. வேறொரு கோணத்தில் பார்த்தால், ஒருவருக்கு ‘மணம்’ நிகழவில்லை என வைத்துக்கொள்வோம். ஒரு பிரும்மச்சாரி அல்லது கன்னியாக வாழ நேர்ந்தவர்கள் - இவர்களது வாழ்க்கையில் ஆசை, அன்பு, காதல், பாசம், நேசம் எல்லாம் நிகழாதா என்ன? அவரவர் அனுபவிக்கவேண்டியது, விதிவசமாய், ஏதோ ஒரு ரூபத்தில் நிகழும்தானே. இவற்றைப்பற்றி அவர்களின் கருத்து எப்படி இருக்கும்? மணவாழ்க்கை மாந்தரிடமிருந்து வேறுபட்டிருக்கும் அல்லவா? பிறகெப்படி அன்பென்றால் இது, காதலென்றால் அது, பாசமென்றால் இப்படி, நேசமென்றால் அப்படி –என்றெல்லாம் அவற்றை ஒரு கட்டத்துக்குள் கொண்டுவரமுடியும்!

    தத்துவார்த்த ரீதியாக -

    ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’-இது கௌதம புத்தர்.

    இன்னும் உயர்ந்த சிந்தனா தளத்தில் -

    ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
    ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

    எனச் சொல்லும் திருமூலர். எல்லாவற்றையும் கடந்த மனநிலையில், சமாதி, முக்தியைத் தவிர வேறெதுவும் வேண்டாம் எனத் தேடும் மனிதர்க்கான நிலைகள் இவை. வாழ்வில் ஆசை, இன்பம், மேலும் இன்பம் எனத் தேடும், அவற்றில் களித்து மகிழும் சராசரி வாழ்க்கையாளர்களுக்கானதல்ல மேற்சொன்னது.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஏகாந்தன். இது தான் நான் சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமல் தடுமாறியதும். அன்பு என்பது சராசரி மணவாழ்க்கையோடோ அல்லது உடன்பிறந்தவர்களிடமோ அல்லது நட்பின் காரணமாகவோ ஏற்படுவது அல்ல என்பதே என்னுடைய கருத்தும். ஆனால் சரியாகச் சொல்லத் தெரியலை. நீங்க சொல்லிட்டீங்க!

      Delete
  23. நான் ரொம்ப லேட்டாகிட்டேன் சொல்ல வேண்டியதெல்லாம் நீங்களும் பின்னூட்டமிட்டோரும் சொல்லிட்டினம்... எனக்குத்தான் உடனே ஓடி வர முடியுதில்ல பகலில், இரவில் போடுவதால் கில்லர்ஜி பக்கம் மட்டும் 1ச்ட்டா ஓட முடியுது...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஞானி, ஓடி ஓடி வர வேண்டாமோ! நான் இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்குப் பின்னர் கணினியில் உட்காருவதில்லை எனக் கொ"ல்"கை வைச்சிருக்கேன். அவசரம் நேர்ந்தால் தான் வருவேன்.ஆகவே பதிவுகள் மதியம் தான் வரும்.

      Delete
    2. .ஆகவே பதிவுகள் மதியம் தான் வரும்.
      /////
      கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  24. //அன்பு ஒரு ஊற்றுத் தான் தோண்டத் தோண்ட வரும் நீர் போல் அன்பும் கொடுக்கக் கொடுக்கக் குறையாது தான். ஆனால் அது ஆரம்பத்திலேயே பிரவாகம் எடுத்து ஓடக் கூடாது.ஓடவும் முடியாது. நதியானது ஆரம்பத்தில் ஒரு சிறு ஊற்றாகத் தான் தோன்றுகிறது. எல்லா நதிகளுக்கும் ஆதாரமே சிறியதொரு ஊற்றுத் தான். எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் நீர் அதிலிருந்து பொங்கி வரும். அந்த நீரும் உடனேயே நதியாக மாறிப் போவதில்லை. மெல்ல, மெல்ல அல்லது வேகமாய்க் கீழே விழுந்து, அருவியாய் மாறிக் (இதைக் கணவன், மனைவியின் ஆரம்பக் காலக் காதலுக்கு உவமையாகச் சொல்லலாமோ?)குதித்துக் கும்மாளமிட்டுப் பல்வேறு தடைகளையும், மலைகளையும் தாண்டித் தான் சமவெளிக்கு வருகிறது. பெரிய நதியாக அகண்ட பிரம்மாண்டமான நதியாக மாறிப் பின்னர் அதுக்கு அப்புறமாவே கடலிலும் கலக்கிறது. //

    அருமையாக சொன்னீர்கள்.

    எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செய்வது கடினம், எதிர்பார்ப்பு சில நேரம் ஏம்மாற்றம் தரும் தான்.
    ஒரு பக்கம் அன்பு மட்டும் இருக்கும் எதிர்பக்கம் அன்பு இருக்காது.
    சில நேரங்களில் என்ன அன்பு, பாசம் என்று தோன்றவைக்கும், சில நேரம் அன்பு வேன்டி இருக்கும்.
    அன்பு வாழ வைக்கும், பாசம் கண்ணை மறைக்கும் என்பார்கள் .
    அன்பு செய்து வாழ்வோம்.

    கொஞ்சம், சகிப்புதன்மை, பொறுமை, தியாகம் தேவை படுது அன்புக்கு.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான அன்பு எவரிடமும் எதையும் எப்போதும் எதிர்பார்க்காது கோமதி அரசு. அத்தகைய அன்பைப் பொழிபவர்கள் அபூர்வமே! பெரும்பாலும் பாசத்தையும் நேசத்தையுமே அன்பு என்கிறோம்.

      Delete
  25. உண்மையான அன்பு என்பது யாரிடமும் எதையும் எதிர்ப்பார்க்கா அன்பு என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லைதான். அவர்களை அதிசய பிறவிகள் என்று சொல்லிவிடுவார்கள். எல்லோர் கிட்டயும் அன்பாய் இருப்பது அன்பு. இறைவன் நம்மிடம் வைத்து இருப்பது அருள்.


    பாசம், நேசம், எல்லாம் அன்பைதான் சொல்கிறது. பாசம், நேசம் எல்லாம் சமஸ்கிருதம்.
    அன்பு, அருள் தமிழ். அன்பு நாம் செலுத்துவது, அருளார்கள், இறைவன் செலுத்தும் அருள்
    அன்பு பழுத்து அருளாக மலர்ந்து மணம் வீச வேண்டும்.

    ReplyDelete
  26. அன்பு என்பது பொறுப்பாக இருப்பது, அன்பு எதையும் எதிர்பாக்காது, அது கொடுக்குற தண்மைல மட்டும் தான் இருக்கும். இதை நான் சொல்லல, ஆனால் நான் படித்தது இது உண்மைதான்.
    ஒரு தாய் தன் பிள்ளை மீது எதையும் எதிர்பாக்காது எ. கா (பிள்ளை கருப்பா, சிவப்பா &குட்டையா,நெட்டையா )எதையும் எதிர்பாக்காது ஆனால் கணவன் மனைவி உறவு ஆரப்பத்தில் எதிர்பாக்கும்,.
    குழந்தைகள் பிறந்து வளர்த்த பிறகு தான் அன்பாக மாறும்..

    ReplyDelete