எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 23, 2019

நாளையிலிருந்து 3 நாட்கள் லீவு!

ஏற்கெனவே ஒரு முறை இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி பத்தி எழுதி இருக்கேன். நடுவில் கொஞ்ச நாட்களுக்கு இதைச் செய்யவே இல்லை. இப்போ திடீர்னு நம்ம வீட்டில் சாபுதானாவுக்கு வரவேற்புப் பெருகவே இந்த வருஷம் வைகுண்ட ஏகாதசி அன்று விரதத்திற்கான ஆகாராமாக இதைச் செய்தேன். அதற்கு முன்னரும் ஓர் நாள் செய்திருந்தேன். அப்போப் படம் எல்லாம் எடுக்கலை. விரதத்தன்னிக்குக் கொஞ்சம் நிதானமாச் செய்ததால் எல்லாம் ஏற்பாடுகள் செய்து கொண்டு படங்களும் எடுத்துவிட்டு கிச்சடி செய்தேன். இதற்குத் தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு மட்டும்

படத்தில் பார்க்கும் உழக்கினால் (ஆழாக்கு) முக்கால் ஆழாக்கு ஜவ்வரிசி. காலையில் செய்வதானால் முதல் நாள் இரவு ஜவ்வரிசியைக் கழுவி ஊற வைக்கணும். நான் இரவில் செய்ததால் அன்று காலை ஜவ்வரிசியைக் கழுவி ஊற வைச்சேன். முதல்நாளே  ஊற வைச்சாலும் நன்றாகவே இருக்கும்.

வறுத்த வேர்க்கடலை, சாபுதானாவின் அளவுக்கே இருந்தால் நல்லது. கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை. இது வறுத்திருந்தால் தோலை நன்கு உரித்துக் கொண்டு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளணும். பின்னர் மிக்சியில் போட்டு ஒரே சுத்துச் சுத்தினால் கொஞ்சம் மாவாகவும் இல்லாமல் ரொம்பக் கொரகொரப்பாயும் இல்லாமல் வரும்படி எடுத்துக்கொள்ளணும். ஒன்றிரண்டு உடைபடலைனாலும் பரவாயில்லை. நன்றாகவே இருக்கும். குஜராத், மஹாராஷ்ட்ராவில் இந்த வேர்க்கடலைப் பொடி தயாரித்து விற்பார்கள். பெரும்பாலும் அவங்க உணவில் அடிக்கடி இடம் பெறுவதால் நிறைய வாங்கி வைச்சுப்பாங்க. நாம எப்போவோ தானே பண்ணறோம். ஆகவே வேர்க்கடலை வறுத்தது வாங்கியோ அல்லது பச்சைக் கடலையை வறுத்தோ சுத்தம் செய்து உபயோகிக்கலாம்.


அடுத்த முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு. சாபுதானா வடை செய்தாலும் சரி, கிச்சடி செய்தாலும் சரி உ.கி. வேர்க்கடலை இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. நாங்க இரண்டு பேர் தான் என்பதால் 2 கிழங்கு நிதானமாக எடுத்துக் கொண்டேன். அதைத் தோலைச் சீவும் பழக்கம் இருந்தால் சீவலாம். நான் பெரும்பாலும் உ.கி. தோலோடு தான் பயன்படுத்துவேன். நன்கு ஊற வைத்துக் கழுவிக்கொண்டு காரட் துருவலில் சீவிக்கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கலாம். அன்று பொடியாக நறுக்கினேன்.


அடுத்துத் தேவைப்படுவது தாளிக்க எண்ணெய், கடுகு, ஜீரகம். (உபருப்பு, கபருப்புப் போடுவதெல்லாம் உங்க இஷ்டம். நான் போடுவதில்லை) பச்சைமிளகாய் சின்னதாக 2  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு பொடியாக நறுக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும். எலுமிச்சம்பழம் பழத்தில் இருக்கும் சாறுக்கு ஏற்ப ஒன்று அல்லது பாதி.

மிக்சி ஜாரில் பொடி செய்த வேர்க்கடலைப்பொடி, பாத்திரத்தில் நீரில் உ.கி. நறுக்கியது. இன்னொரு பாத்திரத்தில் ஊறிய சாபுதானா.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் (எண்ணெய் நல்ல கடலை எண்ணெயாக இருந்தால் நல்லது. இல்லை எனில் நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்) கடுகு, ஜீரகம் தாளித்துப் பிடிக்குமானால் பெருங்காயப் பொடி போடவும். பின்னர் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டு வதக்கி விட்டு உ.கியை நீரை வடித்துப் போட்டு நன்கு வதக்கவும். உ.கி. நசுங்கும் பதம் வரணும். துருவல் எனில் சீக்கிரம் வெந்து விடும். 


பின்னர் ஊற வைத்த சாபுதானாவைப் போட்டுக் கூடவே வேர்க்கடலைப் பொடியையும் போட்டு கையோடு நினைவாகத் தேவையான உப்பைச் சேர்க்கவும். சிறிது நேரம் நன்கு கிளறவும். சாபுதானா தனித்தனியாகப் பிரிந்து நசுங்கும் பதம் வேகும் வரை கிளறவும்.



நன்கு வெந்ததும் மேலே பச்சைக்கொத்துமல்லி தூவிக் கீழே இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். சூடாக இருக்கும்போதே சாப்பிடவும்.



இதைப் பல நாட்களாகப் போட நினைத்துப் போடவே முடியலை! இன்னிக்குத் தான் போட்டிருக்கேன். ஏனெனில் நாளையிலிருந்து 3 நாட்கள் லீவு! ஞாயிற்றுக்கிழமை பார்க்கலாம். :)))))) கருத்துச் சொல்லுபவர்கள் பதில் வரலையேனு நினைக்க வேண்டாம். வந்து தான் சொல்லுவேன். 

56 comments:

  1. ரொம்ப நாளாக செய்ய நினைத்தது. இடுகை பார்த்த உடனேயே செய்யலாம்னு நினைச்சா எந்த ஜவ்வரிசி என்று சொல்ல விட்டுட்டீங்களே... பெரிய கண்ணாடி ஜவ்வரிசி ஊற ரொம்ப நேரமாகும். வெறும் வாணலில வேகாதே

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. மாவு ஜவ்வரிசி தான் நான் வாங்குவேன். படத்தில் பார்த்தாலே தெரியுமே! நைலான் ஜவ்வரிசி இப்படி இருக்காது. வாங்கவும் மாட்டேன்.

      Delete
    2. நெல்லை நானும் நைலான் ஜவ்வரிசி வாங்குவதில்லை. வெள்ளை வெளேரென்று இருக்கும் பெரிய ஜவ்வரிசிதான். நெல்லை சென்னையில் அந்த ஜவ்வரிசி கொஞ்சம் மாவாகிவிடுகிறது தான். ஆனால் இங்கு பங்களூரில் கிடைப்பது மாவாகவில்லை. ஊற வைத்து தண்ணீரை வடித்தபின் அப்படியே தனி தனியாக வருது. ஈசியாக இருக்கு செய்யவும்....ரொம்பவே நன்றாக வருகிறது. என் அனுபவத்தில் சென்னையில் நான் வாங்கிய ஜவ்வரிசி ஊற வைக்கும் போதே கொஞ்சம் மாவாகிவிடும்.

      நீங்க பங்களூர் வரும் போது பார்த்து வாங்கிப் போய்ப் பாருங்க....

      கீதா

      Delete
    3. வடாம் போடும் ஜவ்வரிசினும் கேட்டு வாங்கலாம். ஆனால் தி/கீதா சொல்றாப்போல் சென்னையில் கழுவும்போதே வெள்ளையாக மாவு மாதிரித் தான் வரும். இங்கே அப்படி இல்லை.

      Delete
  2. ஜவ்வரிசியை விரதத்துக்கு உபயோகப்படுத்தலாம்னு யார் சொன்னா? அதன் தயாரிப்பு முறையே சரியில்லையே. எனக்குத் தெரிந்தவரை குருணைதான் விரதத்துக்கு.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. அரிசியை உடைத்துப் பயன்படுத்துவது நம் பக்கம் தான். மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் ஜவ்வரிசி தான் விரதங்களுக்கு. நம்ம ரங்க்ஸ் புனேயில் இருந்த காலகட்டத்தில் அங்கே ஓட்டல்களில் கூட சோமவாரம் மற்ற விரத நாட்களில் சாபுதானா கிச்சடி தான் போடுவாங்களாம்.

      Delete
    2. ஆமாம் கீதாக்கா பூனேவில் சாபுதானா கிச்சடிதான் விரத நாட்களில் அதுவும் ஹோட்டலிலும்....நானும் அங்கு மச்சினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது சாபுதானா கிச்சடி ஹோட்டலில் எப்படி இருக்கும் என்று பார்க்கவே சாப்பிட்டேன் அன்று ஏதோ விரதம் என்றும் சொன்னார்கள்.

      கீதா

      Delete
    3. நம்ம பக்கமெல்லாம் அரிசிக்குருணையில் அதுவும் பச்சரிசிக்குருணையில் அடை, தோசை எனச் செய்வார்கள். ஆனால் மஹாராஷ்ட்ராவில் விரத நாட்களில் அரிசி உணவைத் தொடவே மாட்டார்கள். சின்னக்குழந்தை கூடச் சாப்பிடாது!

      Delete
  3. சாபுதானா கிச்சடி ரொம்ப நல்லா இருக்கும். ஆனா கடைல வாங்கும்போது ரொம்ப எண்ணெயா இருப்பதா உணருவேன். எனக்கு சாபுதானா வடையும் பிடிக்கும். சமீபத்தில்கூட பெசண்ட் நகர் கடைல வாங்கிச் சாப்பிட்டேன். முன்பிருந்த ஆர்வம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நான்/நாங்க இதெல்லாம் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டது என்பதே இல்லை. சாபுதானா வடை அதிகம் பண்ணலை. ஒரு முறை தாலிபீத் செய்தேன். ரொம்பவே ஹெவியான ஆகாரமாக இருப்பதால் ஒன்றுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை.மாவு மிச்சம் ஆயிடும். :(

      Delete
    2. இது என்னடா நெல்லைக்கு வந்த சோதனைனு நினைச்சிக்கிட்டே 'தாலிபீத்' நெட்ல தேடி, அட வெறும் வெங்காயம் போட்ட ஒரு மாதிரியான பராத்தா/ரொட்டியை இப்படிச் சொல்றாங்களா? ஓ... இவங்க மஹாராஷ்டிராவிலும் இருந்தவங்களாச்சேன்னு கண்டுபிடிச்சேன். நடத்துங்க நடத்துங்க...

      Delete
    3. http://sivamgss.blogspot.com/2016/04/blog-post.html இங்கே பாருங்க தாலிபீத். ஆனால் ஜவ்வரிசியில் இல்லை! :)

      Delete
  4. வேர்க்கடலையைப் பார்த்த உடனேயே, வெல்லப்பாகு வைத்து உருண்டை பிடித்திருக்கலாமேன்னு தோன்றியது. அதைப் போய் பொடி பண்ணி இந்த உப்புமாவில் போட்டு.....ம்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வேர்க்கடலை இல்லாமல் இந்த சாபுதானா கிச்சடி செய்ய முடியாது. அதோடு தாலிபீத் பண்ணினால் தொட்டுக்கவும் தெல்சா என வேர்க்கடலைச் சட்டினி தான்! வேர்க்கடலை நம்மை விட அதிகம் பயன்படுத்துவாங்க மஹாராஷ்ட்ரா, குஜராத்தில். மஹாராஷ்ட்ராவில் பூண்டின் பயன்பாடும் அதிகம். குஜராத்தில் பூண்டு, வெங்காயம் இல்லாமலே நன்றாகச் சமைப்பார்கள். போட்டும் பண்ணுவார்கள்.

      Delete
  5. நாளைலேர்ந்து லீவு என்று சொல்லிவிட்டு, லீவு லெட்டர் கொடுத்துட்டு வீட்டைப் பார்த்துப் போகும் மாணவி போல இன்னைக்கே காணமல் போயிட்டீங்களே கீசா மேடம்...

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பதிவு போட்டது புது மடிக்கணினியில் இருந்து. படங்கள் எல்லாம் மொபைல் வழி எடுத்ததால் அதில் தான் அப்லோட் செய்ய வசதியா இருக்கு. இது பழசு! பதிவு போட்டதும் தேநீர் தயாரிக்கப் போயிட்டேன். அந்தக் கணினியில் சார்ஜ் இல்லை என்பதால் அதை சார்ஜில் போட்டுட்டுத் தேநீர்க்கடையை முடித்துக் கொண்டு வந்தால் வீட்டு வேலை செய்யும் பெண்! அவளுக்கும் தேநீர் போட்டுக் கொடுத்துட்டுப் பின்னர் அவளை அனுப்பியதும் மறுபடி வந்தேன். :))))

      Delete
    2. நெல்லை அப்ப இந்த மூன்று நாள் பதிவும் வரும் அப்ப தெரியும் எதுக்கு லீவுன்னு ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. அதான் எனக்குத் தெரியுமே! இஃகி, இஃகி, இஃகி!

      Delete
    4. நிச்சயம் வரும் கீதா ரங்கன். ஆனா அது சில வாரங்கள் கழித்துத்தான் வரும்.

      பாருங்க.... ஒரு காலத்துல கொடைக்கானல் பூம்பாறை போனதைப் பற்றி எழுத ஆரம்பித்தாங்க. அப்புறம் அது தொடரவே இல்லை. கேட்டா, எல்லாரும் மறந்திருப்பாங்கன்னு சொல்லிடுவாங்க.

      Delete
    5. ஆமாம், பல பதிவுகள் இப்படி முடிக்காமல் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அதுக்குள்ளே வேறே விஷயம் வந்துவிடுவதால் கவனம் மாறிவிடுகிறது. பின்னர் மறுபடி ஆரம்பித்தால் படிக்க வாசகர்கள் வருவாங்களோ, மாட்டாங்களோ என்னும் எண்ணத்திலேயே விட்டு விடுவேன். :(

      Delete
  6. எதுக்கு லீவு!!?? எதுக்கு லீவு லெட்டர்?!!! பார்க்கறேன் இருங்க....எபில கருத்துகள் பார்த்தே போச்சு...அப்புறம் ப்ளாகர் பார்த்த உங்க இடுகை முதல்ல இருந்துச்சு...வந்துட்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹை, சொல்லுவோமா என்ன? போயிட்டு வந்து பார்த்துக்கலாம்.

      Delete
    2. ம்ஹூம்ம்.. பெரிய சிதம்பர ரகசியமாக்கும்ம்.. ஆண்டாள் ஆனையுடன் செல்ஃபி எடுக்கப்போவதைப்போலவே ஒரு பில்டப்பூஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்:).

      Delete
    3. இஃகி,இஃகி, அதிரடி எங்கே போனேன்னு முகநூலில் சத்தம் போட்டுச் சொல்லும்படி ஆயிடுச்சு! :)

      Delete
  7. சேம் மெத்தட் அக்கா....நானும் உ கி தோல் உரிப்பதில்லை. அப்புறம் க ப உ ப போடுவதில்லை.....மற்றதெல்லாம் சேம்...இஞ்சி மட்டும் சில சமயம் போடுவேன் சில சமயம் இல்லை...

    நானும் இதே ஜவ்வர்சிதான் வாங்கறேன்...வெள்ளையாக...பெரிதாக...

    போனவாரம் செஞ்சேன். இங்கு பங்களூரில் ஜவ்வரிசி மிக மிக நன்றாகக் கிடைக்கிறது. நல்ல வெள்ளை வெளேரென்று பெரிதாக ஊற வைத்தாலும் மாவு ஆகாமல் அழகாகக் கிடைக்கிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சில ஊர்களில் ஜவ்வரிசி நன்றாகக் கிடைக்கும். உதிர் உதிராக நன்கு வெந்து வரும். சென்னையில் செய்யும்போதெல்லாம் சமயங்களில் சேர்ந்துக்கும். :)

      Delete
    2. ஜவ்வரிசி எப்பவும் பிடிக்கும் . நல்ல செய்முறை விளக்கம். செய்து பார்க்கிறேன் கீதா மா.
      எனக்கு விரதம் எல்லாம் கிடையாது. எங்கேயும் எப்போதும் உணவென்றால் ஓகே.
      அழகான படங்கள்.

      Delete
    3. வாங்க ரேவதி, பெரிசா விரதம் எல்லாம் நாங்களும் இருப்பதில்லை. வயித்துக்கு ஏதானும் சாப்பிட்டுத் தானே ஆகணும்! :)))

      Delete
  8. சாபுதானா அருமை அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றி.

      Delete
  9. ஜவ்வரிசியில் கிச்சடி வேர்கடலை சேர்த்து செய்தது இல்லை.
    படங்களுடன் செய்முறை அருமை.
    தேங்காய் பூ போடமாட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, ஜவ்வரிசியில் செய்யும் எந்த உணவுக்கும் வேர்க்கடலையும், உ.கியும் ரொம்ப முக்கியமாச்சே! பொதுவாக இந்தக் கிச்சடியில் தேங்காய் சேர்ப்பதில்லை. தேவையானால் சேர்க்கலாம். அமைதிச் சாரல் வெங்காயம், தேங்காய் இரண்டும் சேர்ப்பதாகச் சொல்லி இருக்கார்.

      Delete
  10. அரிசி/குருணை இல்லாது ரவை/கோதுமை ரவை / சப்பாத்தி/பூரின்னுதான் எங்க வீட்ல விரதம் - சாபுதானா/கோபுதானா இல்லை - என்பாட்டி இதில்லாமல்தான் வடாம்/அரிசி அப்பளாம் கூட (சுமாராகவே இருந்தாலும்) என்று கேள்வி -

    ReplyDelete
    Replies
    1. வாங்க மௌலி, கருத்துக்கு நன்றி.

      Delete
  11. சாபுதானா க்ளூட்டன் ஃ ப்ரியான்னு செக் பண்ணிக்கிட்டேன் ..யெஸ் நான் சாப்பிடலாம்னு கூகிள் சொல்லுது ..
    ஆனா ஒரு டவுட்கா இங்தஜவ்வரிசி மூணு வெரைட்டி கிடைக்குது இங்கே ஒன்னு ரொம்ப குட்டி கடுகை போல இருக்கு அடுத்தது வெள்ளை சோளம் சைஸ் மூணாவது குண்டு .இதில் எதை யூஸ் பண்ணனும் ?
    தயார் செஞ்சபிறகு படம் எங்கே ? இதுவரைக்கும் நான் சுவைத்தது கூட இல்லை ஜவ்வரிசி கிச்சடி ..அதனால் செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், மாவு ஜவ்வரிசியில் செய்தால் தான் இது நன்றாக இருக்கும். வேர்க்கடலை சேர்ப்பதால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் வரும். எவ்வளவு வேர்க்கடலை சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாது! நீங்க முதல்லே குண்டாக இருப்பதில் கொஞ்சமாகச் செய்து பார்த்துட்டு போணி ஆச்சுன்னா நிறையச் செய்யுங்க! :))))

      Delete
  12. இது மாதிரி எல்லாம் செய்து சாப்பிட்டதே இல்லை.... செய்ய ஆசைதான்... ம்ம்ம்... நேரம் அமையட்டும்! பார்ப்போம் ஒருகை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், வேர்க்கடலை வறுத்தது வீட்டிலே இருந்தால் இது செய்வது ரொம்பவே எளிது. சீக்கிரமாயும் ஆயிடும்.

      Delete
  13. சமையல் குறிப்பே மிகவும் சுவையாக இருந்தது! அதை சொல்லிய விதமும் சுவாரஸ்யமான பின்னூட்டங்களும் சுவையோ சுவை!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! சாப்பிடவும் சுவையாக இருக்கும். செய்து பாருங்க!

      Delete
  14. சாபு தாணா கிச்சடி.... மஹாராஷ்டிரா மக்கள் மிகவும் விரும்பும் உணவு. நான் மராட்டி நண்பர் வீட்டில் சுவைத்தது உண்டு.

    லீவா... ஓகே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஶ்ரீரங்கம் வந்தாச்சா? வீட்டிலும் செய்து சாப்பிட்டுப் பாருங்க ஒரு முறை!

      Delete
  15. கீசாக்காஆஆஆஆஆ ஸ்ரொப்ப்ப்ப்ப்ப் எனக்குப் பதில் ஜொள்ளிட்டுத்தான் நீங்க லீவு எடுக்கோணுமாக்கும்:)) எண்டு சொல்ல ஆசைதான்:), இருப்பினும் மீதான் விட்டுக்கொடுக்கும் பேர்வழியாச்சே[நம்மள நாமதானே புகழோணும்:) பின்ன அஞ்சுவோ இல்ல கீதாவோ வந்து புகழுவா கர்ர்ர்:))].. நீங்க மெதுவா வாங்கோ.

    அதுசரி ஜவ்வரிசி எனச் சொல்லாமல் தேவையில்லாமல் ஜாவுதானா சாவுதானா என் அஹிந்தியில பேசிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி, அதான் வந்துட்டேனே! ஏன் (ஹி)கிந்தி மேலே இம்புட்டு வெறுப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))

      Delete
  16. இது நான் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னம் செய்தேன்.. முறை வேறு.. உருளைக்கிழங்கு சேர்க்கவில்லை.. மற்றும்படி அனைத்தும் சேர்த்து, வதக்கியபின் அதனுள் ஜவ்வரிசியையும் போட்டு[ஊற விடாதது].. ரவ்வை கிண்டுவதைப்போல தண்ணி விட்டு அவியப்பண்ணிக் கிண்டச் சொன்னார்கள்.. அது முடிவில்.. ஜவ்வரிசி கிழக்கிலயும்.. மிகுதி எல்லாம் மேற்கிலயும் போய்.. ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டி ஹம் போல திரண்டு.. முடிவு.. கொட்டி விட்டேன்ன்ன்.. அது ஒரு வித செய்முறையாம் கர்ர்:).

    உங்கள் முறையில் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ... ஏன் கொட்டிவிட்டீர்கள் அதிரா... உங்கள் செய்முறையைப் பார்த்தால் மிக அட்டஹாசமாக வந்திருக்குமே (என்னது வந்திருக்கும்? சினிமா போஸ்டர் ஒட்டற கோந்து பசைதான்... ஏஞ்சலினுக்குக் கொடுத்திருந்தால் பாசிமணி, ஊசிமணி இதெல்லாம் ஒட்டி கிரீட்டிங்க்ஸ் செய்து தளத்தில் போட்டிருப்பார்) ஹா ஹா ஹா

      Delete
    2. அதிரடி, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜவ்வரிசி வடாம் போடுவது என்றாலே நன்றாக ஊறினால் தான் சாப்பிடச் சுவையா இருக்கும். ஊறாத ஜவ்வரிசியிலேயே கிளறுவாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்படி எல்லாம் செய்முறை இருப்பதாகச் சொல்லி யாரோ உங்களை நல்லா ஏமாத்தி இருக்காங்க!நீங்களும் காதுலே பூசுத்திக்கிட்டு கேட்டு இருக்கீங்க! :)))))

      Delete
    3. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  17. கடசியில அதென்ன வெறும் தட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. அமுதசுரபி, படம் சேர்த்தேன். ஏனோ வரலை! அப்புறமும் சேர்த்துப் பார்த்தேன். :(

      Delete
  18. வணக்கம் சகோதரி

    ஜவ்வரிசி கிச்சடி தயாரிப்பு செய்முறை படங்கள் எல்லாம் அழகாக அருமையாக இருக்கிறது. நான் இதுவரை செய்ததில்லை. இனி தங்கள் பதிவை பார்த்ததும் செய்ய வேண்டுமென தோன்றுகிறது. விடுமுறையை ஜாலியாக கழித்து விட்டு வாருங்கள். என்ன இருந்தாலும் ஒழுங்கான பதிவர் நீங்கள்தான். பாராட்டுக்கள்.. நானெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்து விடுகிறேன். தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, அதெல்லாம் நானும் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்துட்டுத் தான் இருப்பேன்/இருந்தேன்.இந்தத் தரம் என்னமோ சொல்லி இருக்கேன்! இஃகி, இஃகி! சாபுதானா கிச்சடி செய்து சாப்பிட்டுப் பாருங்க!

      Delete
  19. ஆஆஆஆஆ கீசாக்காவை மூணூஊஊ நாளாக் காணல்ல... ஆனாப் பாருங்கோ ஆருக்குமே அக்கறை இல்லை:).. அதிரா மட்டும்தான் தேடுறேனாக்கும்:).. கீசாக்கா கெதியா வாண்டோ:)...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, அதான் கொட்டை எழுத்திலே மூணு நாள் லீவுனு சொல்லி இருக்கேன் இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேத்திக்குத் தான் ராத்திரி வந்தோம். பத்து மணி ஆயிடுச்சு! காலம்பரவும் நேரம் கிடைக்கலை! :))))

      Delete
  20. பதில் தரலே..ந்னா என்ன!...
    பட்சணம் இருக்குதே!...

    நல்லபடியாக சுற்றுலா நடந்திருக்கும்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இந்த அதிரடிக்கு எப்போவும் அவசரம்! உடனே பதில் தரணும்! ஆனால் அவங்க பதிவு போட்டுட்டுப் போய் ஒளிஞ்சுப்பாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))

      Delete