எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 28, 2019

கைமுறுக்கு, தட்டை, மனோகரம் வேண்டுமா?

வியாழனன்று மாலை செப்பறை போயிட்டுக் கிருஷ்ணாபுரமும் போயிட்டுத் திரும்பி வரும் வழியில் வண்டி பாளையங்கோட்டை வழியாக வந்தது. அங்கே ஓர் தெரு முழுக்க பக்ஷணக்கடைகள். பெரிய பெரிய எண்ணெய்ச் சட்டிகளில் எண்ணெயை விட்டு ஆங்காங்கே பெண்கள் முறுக்குச் சுற்றிக்கொண்டும், சுற்றியவற்றை அம்பாரமாகக் குவித்துக் கொண்டும் இருந்தனர். மக்கள் வந்து சுடச்சுட முறுக்கு வாங்கிப் போனார்கள். முறுக்கு மட்டும் இல்லை. தட்டை, சீடை, மனோகரம், மாலாடு, ரவாலாடு போன்றவையும் செய்து விற்கின்றனர். போக்குவரத்து நெரிசலில் வண்டி மெதுவாகப் போனதால் இவற்றை எல்லாம் பார்க்க நேர்ந்தது. நம்ம ரங்க்ஸும் பார்த்திருப்பார் என்னும் நினைப்பில் நான் அவரிடம் இதைக் காட்டவே இல்லை. கடைசியில் அவர் இருந்த பக்கம் இதெல்லாம் வரலை. கொஞ்ச தூரம் போனப்புறமாத் தான் சொன்னேனா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அடி விழாத குறை தான். அங்கேயே இறங்கி முறுக்கு வியாபாரம் செய்திருப்பேன். கெடுத்துட்டியேனு அடிக்காத குறை தான்!


மனோகரம்

ஆகவே வெள்ளிக்கிழமை மாலை அங்கே போவதாக இருந்தோம். ஆனால் இருவருமே மிகவும் களைப்புடனும் சோர்வுடனும் காணப்பட்டதால் அங்கே போகாமல் திருநெல்வேலியிலேயே கிடைக்குமானு ஓட்டுநரை விசாரித்ததில் ஒரு கடைக்குக் கூட்டிச் சென்றார். அங்கே அப்போது தான் வேகவிட்ட முறுக்குகள் சூடாக இருந்தன.  நம்மவருக்கு முறுக்குச் சுத்து சரியில்லையேனு குறை. நீ சுத்தறாப்போல் சுத்தலை பாருனு என்கிட்டே புகார் மனு அளிக்க, நான் நம்ம இரண்டு பேருக்கு மட்டும் செய்யறேன். இவங்க இரண்டாயிரம் பேருக்குச் செய்யறாங்க என்பதைப் புரிய வைத்தேன். பின்னர் அரை மனசாக ஒரு முறுக்கைக் கேட்டு வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துப் பார்த்து விட்டு வாங்கினார். அப்படியே தட்டைகளும் வாங்கினோம்.

                                                                          தட்டைகள்

அங்கேயே மனோகரமும் இருந்தது. ஆனால் இங்கே எங்களுடன் குடியிருக்கும் திருநெல்வேலி மாமி கல்லிடைக்குறிச்சிக் கடையில் வாங்குங்க எனச் சொல்லி இருந்ததால் அதை மட்டும் அங்கே வாங்குவது எனத் தீர்மானித்ததால் அதை வாங்கலை! அதை மட்டும் ஜானகிராமன் ஓட்டலுக்கு எதிரே உள்ள கல்லிடைக்குறிச்சி மாமா கடையில் வாங்கினோம். 

முறுக்குகள்

நேற்று மதியம் தேநீரோடு சாப்பிடலாம் என இரண்டு முறுக்கும், இரண்டு தட்டைகளும் மட்டும் எடுத்துக் கொண்டேன். சாப்பிடும்போதே முறுக்குகளும், தட்டைகளும்  திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பச் சுட வைத்த எண்ணெயில் பொரிக்கப்பட்டவை என என் பொல்லாத நாக்கு கூக்குரல் இட அதை அடக்கிவிட்டுச் சாப்பிட்டேன். சாப்பிட்ட சற்று நேரத்துக்கெல்லாம் வயிறு தன் வேலையைக் காட்டி விட்டது. மேல் வயிறெல்லாம் அடுப்பை மூட்டினாற்போல் சூடு, எரிச்சல்,வலி!  சரியாப் போச்சு போ, இனிமேல் இது வேண்டாம்னு முடிவு பண்ணி, சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு இனி அந்த முறுக்குகள், தட்டைகள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என சபதம் செய்து விட்டேன். இதனால் நேத்திக்கு ராத்திரி சாப்பாடைக் கூடத் தியாகம் செய்துவிட்டு வெறும் மோர்சாதம் சாப்பிட்டேன். நல்லவேளையாக் காலம்பர வைச்ச சாதம் மிச்சம் கொஞ்சம் இருந்தது. 

இப்போச் சும்மா நீங்க பார்ப்பதற்காகப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அம்புடுதேன். தைரியம் உள்ளவர்கள் எடுத்துச் சாப்பிடலாம். :)))))

62 comments:

  1. நீங்க சாப்பிடாமல் நிறுத்தியவரை மகிழ்ச்சி அப்படியே தேவகோட்டைக்கு பார்சல் செய்யலாமே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, உங்களுக்கு நானே செய்து தரேன். இது ஏன்? :) நான் சாப்பிட்டுப் பட்ட அவதி போதாதா? :)

      Delete

  2. நல்லாவே பார்த்து திருஷ்டி போட்டுட்டோம் வயிறு வலிச்சா எங்களை குற்றம் சொல்லக் கூடாதும்மா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, தமிழரே, நீங்க பார்க்கும் முன்னரே என்னோட வயிறு தன் வேலையைக் காட்டி விட்டது! ஆகவே உங்களைக் குற்றம் சொல்ல மாட்டேன். :)

      Delete
  3. தலைப்பே ஈர்க்குதே இதோ பதிவுக்குப் போறேன் கீதாக்காஅ..

    கீதா

    ReplyDelete
  4. அங்கேயே இறங்கி முறுக்கு வியாபாரம் செய்திருப்பேன். கெடுத்துட்டியேனு அடிக்காத குறை தான்!//

    இப்ப நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பின்னே ஒழுங்கா மாமாகிட்ட காமிச்சுருந்தா அடுத்த நாள் // நீ சுத்தறாப்போல் சுத்தலை பாருனு என்கிட்டே புகார் மனு அளிக்க, // இந்தப் புகார் வந்திருக்குமோ??!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    இதுக்குத்தான் பார்த்ததும் சொல்லிடனும் !!! ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, அப்போ என்னமோ முக்கியமான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததில் இவை எல்லாம் என் மனதில் பதிந்து அவரிடம் சொல்லணும்னு தோணவே இல்லை! :)))) ஆனால் சொன்னப்புறமா ஒரு குருக்ஷேத்திரம் நடந்தாச்சு! மறுநாள் வாங்கிய இடம் சுமார்தான்.

      Delete
  5. ஹையோ அக்கா இப்ப எப்படி இருக்கு வயிறு?!!!

    முறுக்குச் சுத்து பஸ்டான்ட் கடையில் விற்கும் முறுக்கு போல இருக்கு. பரவாயில்லை நீங்கள் சொல்லும் காரணம் மிகவும் சரியே. நிறைய முறுக்குகள் சுற்றும் போது என்ன செய்ய முடியும்?

    தட்டை கலர் என்னவோ வெளுப்பாக இருக்கிறதே...

    மனகோரம் எப்படி இருக்கு? சாப்பிட்டுப் பார்க்க தைரியம் இல்லையோ நேற்றைய நிகழ்வால்?!!! தின்னவேலி மனோகரம் சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் செய்து. அல்லது வீட்டு விசேஷங்களில் கிடைக்கும். வாங்கியதில்லை. கொஞ்சம் தடியாகக் கடலைமாவு, அரிசிமாவு தேங்குழல் பிழிந்து வெல்லப்பாகில் போட்டு..சுவை நல்லாருக்கும்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தட்டை பரவாயில்லை ரகம். ஆனாலும் நான் சாப்பிடறதை நிறுத்திட்டேன். மனோகரம் பரவாயில்லை.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    இப்பத்தான் "லன்ச் பாக்ஸை" இன்னமும் மூடாத குறையாக சாப்பிட்டு விட்டு கை கூட அலம்பாத நிலையில் நிமிர்ந்து பார்க்க, நீங்கள் விதவிதமான பட்சணங்களை எங்களுக்கு காட்டி ஆசையை உண்டாக்கி விடுகிறீர்கள். அனைத்தும் பார்க்க நன்றாகவே உள்ளது. வெளியில் வாங்குபவை அனைத்துமே திரும்ப,திரும்ப சுட வைத்த எண்ணெய்தான். என்ன செய்வது? என்ன இருந்தாலும் நம் வீட்டில் செய்வது போல் வருமா?

    பட்சணங்கள் என்றால் எனக்கும் பிடித்தமானவைதான். முன்பெல்லாம் ஒரு வேளை உணவை கூட தியாகம் செய்து விட்டு இந்த மாதிரி முறுக்கு தட்டையுடன் வாழ்ந்திருக்கிறேன். இப்போ எண்ணெய் பலகாரங்கள் ஒரு வித புரட்சியை வயிற்றுக்குள் உண்டாக்குகின்றன. அது தொண்டை வரை யுத்தம் செய்து நம்மிடம் இருக்கும் சைனஸ் பிரச்சனையை துணை தளபதியாக கொண்டு போராடி ஜெயித்து நாம் பேசுவதை நாமே கேட்காதபடிக்கு செய்கின்றன. ஆனாலும்,மகன்களுடன் வெளியில் செல்லும் சமயம் இங்கு அருகிலிருக்கும் பட்சணக்கடை ஒன்றை கண்டவுடன் (அந்தகடை முழுதும் பட்சணங்கள் மட்டுந்தான். நிரம்பி வழியும். கடையின் ஒரு இடத்தில் விதவிதமான போளிகள் வேறு சுடச்சுட தயாராகி விற்பனை நடந்த வண்ணம் இருக்கும். அதை வாங்க மக்கள் கூட்டம் வேறு.) கால்கள் தாமாக நின்று பின் ஆசை வென்று விடும். ஹா ஹா ஹா.

    தாங்கள் காண்பித்த பட்சணங்களில் எனக்கு பிடித்தவற்றை (எல்லாமும் தான்) எடுத்துக் கொண்டேன். சற்று குறைந்திருக்கும் பாருங்கள்..மாலை நேர சிற்றுண்டிக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பக்ஷணங்கள் பண்ணினாலும் எங்க வீட்டில் சாயந்திரமாப் பள்ளி விட்டு வந்ததும் தான் ஒரே ஒரு வேளை கண்ணில் காட்டுவாங்க. அப்பா எண்ணி எடுத்து வைத்து விடுவார். ஆகவே அவர் இல்லைனாக் கூட எடுத்துச் சாப்பிட முடியாது! சாப்பிட்டதும் இல்லை. ஆகவே பெரிய அளவில் இதில் ஆசை இல்லை என்றாலும் பண்ணித் தருவதில் ஆசை உண்டு. நிறையப் பண்ணிக் கொடுத்தாச்சு! இப்போக் கொஞ்ச நாட்களாக முறுக்குச் சுத்தும்போது கை இழுப்பதால் கொஞ்சம் கோணல் மாணலாக வரும்! :) போளி எல்லாம் கடைகளில் வாங்கியே சாப்பிட்டதில்லை. வீட்டுத் தயாரிப்புத் தான்! இங்கே மாமனார் வீட்டில் தீபாவளிக்கு பக்ஷணங்கள் பண்ணுவதைப் பார்த்தால் அசந்து போயிடுவீங்க! ஒரு முறை அந்தச் சமயம் வீட்டுக்கு வந்த என்னோட பிறந்த வீட்டு உறவினர் யாருக்குக் கல்யாணம், சீர் பக்ஷணம் தயாரிக்கிறீங்களேனு கேட்டார்! :) ஆகவே பக்ஷணத் தொழிற்சாலை நடத்திய அனுபவமும் உண்டு.

      Delete
  7. ///. நீ சுத்தறாப்போல் சுத்தலை பாருனு என்கிட்டே புகார் ///
    மாமா முதேல்ல்ல்ல்ல்ல் தடவையா கீசாக்காவுக்கு சப்போர்ட் பண்றார்... அது ஒரு ஸ்மைல் பண்ணாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அதிரடி, மாமாவுக்கு இந்த மாதிரித் தண்டனைகள் கிடைச்சால் தான் நம்ம சமையலையே ஒத்துப்பார்! :)))))

      Delete
  8. எங்கள் வீட்டிலும் தட்டை வடை ரொம்பப் பிடிக்கும், கிரிஸ்மஸ் இலிருந்து செய்ய நினைக்கிறேன் இன்னும் நேரம் ஒதுக்கவே இல்லை...
    முறுக்கு பார்க்க நல்லாத்தானே இருக்கு... மாமா எதுக்கோ ஐஸ் வச்சிருக்கிறார் கீசாக்காவுக்கு:) இதைப் புரியாமல் ரெண்டாம் ரெண்டாயிரமாம் என எக்ஸ்ஸுபிளேன்னு வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, பார்க்க நல்லா இருக்குத் தான்! ஆனால் எண்ணெய்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட எண்ணெய்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அங்கே இரண்டாயிரம் என்பதெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! :) மேலேயே வாங்குவாங்க!

      Delete
    2. நேத்து வந்திருந்தா அல்வா, பால்கோவா கிடைச்சிருக்கும்! வரலை! :)

      Delete
  9. வே க வே வெ க வே!

    ReplyDelete
    Replies
    1. வே.போ. வே.போ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  10. முறுக்கு தட்டை அதிகம் சாப்பிட்டால் வயிறு உப்புசமாகி சாப்பாடு சாப்பிட முடியாமல் போய்விடும். எனவே அளவாய்த்தான் சாப்பிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், அளவோடு தான் சாப்பிட்டேன் என்பதைச் சொல்லி இருக்கேனே! இரண்டு குட்டிக் குட்டி முறுக்கு, தட்டை கொஞ்சம் பரவாயில்லை ரகம்! அதுவே தான் ஒத்துக்கலை!

      Delete
  11. கல்யாணங்களில் தரும் இதுபோன்ற முறுக்குகள் சமயங்களில் மிக நன்றாய் அமைந்துவிடும். சிலர் தேங்காய் எண்ணெயில் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் தே.எ. தான். எல்லாக் கல்யாணங்களிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதில்லை.

      Delete
    2. தேங்காய் எண்ணெய்ல செய்தால் நல்ல வாசனையாத்தான் இருக்கும். சீடையும் தட்டயும் அதில் பொரிப்பார்கள்

      Delete
    3. எங்க வீட்டில் சமையலிலும் தே.எ. கீரை, அவியல், மோர்க்குழம்பு, பொரிச்ச குழம்பு, தேங்காய் சாதம், தேங்காய் சேவை போன்றவற்றிலே தே.எ. மட்டும்.

      Delete
  12. பரவாயில்லையே மாமா உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்ததை நாசூக்காகச் சொல்லியிருக்கிறீர்களே...!!

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, இஃகி, அதிசயம் இல்லையா ஶ்ரீராம், அதான் சொன்னேன்.

      Delete
  13. முறுக்கு வாயில் போட்டால் கரைய வேண்டும். நீங்கள் வாங்கிய முறுக்கு எப்படி இருந்ததோ.. சில தட்டைகளை வாயில் போட்டு ஒருமணிநேரம் ஊறவைத்துதான் சாப்பிட முடியும். சில தட்டைகள் மென்மையாக வாயில் கரையும்!

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம், வாயில் போட்டால் கரையறதுக்கு வெண்ணெய் சேர்க்கணும்! இங்கே எல்லாம் அதிக அளவில் பண்ணும்போது கிலோக்கணக்கில் வெண்ணெய் போடணுமே! அது முடியாது! தட்டைக்குப் பொட்டுக்கடலை மாவு போடணும்.

      Delete
    2. என்னது... முறுக்கு தட்டை வாயில போட்டா கரையணுமா? நான் ஶ்ரீராமுக்கு 30-40 வயசிருக்கலாமோன்னு நினைத்தால் நீங்க கூட ஒரு சைபர் சேர்த்துக்கச் சொல்றீங்களே. அடுத்து கரும்பு ரவாலட்டு போல மிருதுவா இருக்கணும்னு சொல்வீங்க போலிருக்கே.

      முறுக்கு தட்டைக்கு அழகு கறுக் முறுக் என்று சாப்பிடமுடிவதுதான். சமீபத்தில் கிரான்ட் ஸ்னாக்ஸ்ல தட்டை (சிறிது உடைந்தது) வாங்கினேன். கறுக் முறுக்னு இருந்தாலும் எண்ணெய் ஒரு படி பிழியலாம் மாதிரி இருந்ததால் ருசியாக இருந்தாலும் பிடிக்கலை.

      என் மனைவி, முறுக்குக்கு பிழியும் மாவுபோல் எனக்கு வேறு எங்கும் சுவை அமைந்ததில்லை. அவளிடம் கஷ்டப்பட்டு முறுக்கு பிழியாதே, சூப்பி செய்தாலே போதும்னு சொன்னால் அவ கேட்கமாட்டாள். என்னவோ அந்த முறுக்கு மணம் ரொம்பப் பிடிக்கும். ("சூப்பி"னா என்னன்னு தெரியுமோ? நெல்லைக்கே உரியது அது.

      Delete
    3. அநியாயமா இல்லையோ? சீப்பி, இல்லைனா சூப்பி எல்லோருக்கும் பொதுவானது. சின்னக்குழந்தைகளுக்கான
      அந்தக் கால "டீதர்"

      http://sivamgss.blogspot.com/2012/08/blog-post_3590.html just go through this post. :D grrrrrrrrrrrrrrrrrrr

      Delete
    4. க்ரான்ட் ஸ்நாக்ஸ் தட்டை சகிக்காது ரகம்! அம்பேரிக்காவிலே அதான் கிடைக்குது! நான் தொடவே மாட்டேன்.

      Delete
    5. க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் அதை விட மோசம் இங்கே கடை காத்தாடுதேனு ஸ்பெஷல் மிக்சர் அரைக்கிலோ வாங்கிட்டு எங்க செல்லப்பறவைங்க கூடச் சாப்பிட அடம் பிடிச்சதுங்க! :)))

      Delete
  14. நீங்கள் பயணம் போனதின் மகிமையே இந்த முறுக்கு தட்டைகள் தான்.
    வயித்துக்கு ஒத்துக்கவில்லையா.
    அப்பசரி நானும் அதை சாப்பிடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ரேவதி! அப்படியா சொல்றீங்க? ஆனால் ஒத்துக்கலையே!

      Delete
  15. // அம்புடுதேன். தைரியம் உள்ளவர்கள் எடுத்துச் சாப்பிடலாம். :)))))//

    ஆவ்வ்வ் ஆசையாத்தான் இருக்கு ஆனா எனக்கு வேணாம் ..அந்த மனோலம் மாதிரி பொருள்களின் ரெசிப்பி போட்ருக்கிங்களா இங்கே ?

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் வாங்க, வாங்க, மனோகரம் ரெசிபி இன்னும் போடலை! பண்ணும்போது போடணும்.

      Delete
  16. அந்த வயிறு எரிச்சலுக்கு,பிரச்சினைகளுக்கு காரணம் கடைக்காரங்க பழைய எண்ணையிலேயே பொரிப்பது அதோட முழு அரிசிமாவு மட்டும் சேர்ப்பதில்லைக்கா ,மைதா மாவு மரவள்ளி மாவ்ன்னு கலந்துடறாங்க அது நமக்கு கஷ்டம் தருது ..

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், மாவு அரிசி மாவு தான்! நம் கண்ணெதிரே சுத்தறாங்க! மிஷினில் மாவு அரைத்துத் தூக்குத் தூக்காக வருது! இரண்டு பெண்கள் சுற்றிக்கொண்டே இருக்காங்க! இரண்டு பேர் போட்டு எடுக்கிறாங்க. ஒருத்தர் வியாபாரத்தைக் கவனிக்கிறார்.

      Delete
    2. நேத்திக்குப் போட்ட அல்வாவும், பால்கோவாவும் சாப்பிட நீங்களும் வரலை, அதிரடியும் வரலை!

      Delete
    3. வெள்ளை கத்திரிக்காகூடத்தானே போட்டிருந்திங்க ? நான் வந்தேன் கர்ர்ர் :) ஒரு நிமிஷம் எனக்கே டவுட் வந்துடுச்சி ஹஹ்ஹா ..அது பால்கோவா ஸ்வீட் அல்வா இதெல்லாம் பாக்காம ஒன்லி கத்திரிக்காவை பத்தி மட்டும் சொல்லிட்டு போயிருக்கேன் ..இன்னும் அந்த வெள்ளை கத்திரி ரெசிப்பிக்காக மீ வெயிட்டிங் ..இன்னிக்கும் கடையில் பார்த்தேன் ஆனா வெள்ளிக்கிழமை பிரெஷா வாங்கி சமைக்கணும்

      Delete
    4. ஏஞ்சல், ஹிஹிஹி, ஆமா இல்ல, வந்திருந்தீங்க மறந்துட்டேன். அ.வ.சி.

      Delete
  17. முறுக்கு, தட்டை, மனோகரம், எல்லாம் சுட்ட எண்ணெய் கிடையாது, புது எண்ணெயில் செய்தது என்று சில கடைகளில் சொல்வார்கள் அதை வாங்கினால் ஒன்றும் செய்யாது.
    வீடுகளில் செய்வதை வாங்கி வருவார்கள் அது நன்றாக இருக்கும்.
    பாளையங்கோட்டையில் இருக்கும் போது இந்த மாதிரி பலகாரங்கள் செய்ய ஆச்சிமார்கள் கிடைப்பார்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து செய்து கொடுப்பார்கள்.
    இடித்து சலித்து திருவையில் திரித்து என்று சகலமும் அவர்கள் செய்வார்கள்.

    செப்பறை கோவில் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுபுறம் கொண்டது.
    பனைமரம் சல சலப்பதை காணொளி எடுத்தேன்.

    வயல்கள் சூழ்ந்து இருக்கும்.
    நடராஜர் அபிஷேகம் பார்த்தோம் முன்பு போன போது.
    கிருஷ்ணாபுரம் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, இங்கேயும் புதுசுனு தான் சொன்னாங்க. அதோடு முறுக்குகளும் சூடாக இருந்தன. பாளையங்கோட்டையில் இன்னமும் நிறையக் கடைகள் இருப்பதால் அங்கே தேர்ந்தெடுக்கும் விருப்பங்கள் நிறைய! இங்கே திருநெல்வேலியில் ஒரே கடை தானே!

      Delete
  18. ஐயோ... எனக்கு வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, டிடி, பயப்படாதீங்க, உங்களுக்குக் கொடுக்கலை! :) ஏற்கெனவே 2 முறை பதில் கொடுத்தும் போகலை! :)

      Delete
  19. ஆஹா.... உங்களுக்கு பிடிக்காமல் போனதை படம் எடுத்து போட்டாச்சு..... :) திருவரங்கத்தில் நிறைய பேர் இப்படி செய்து விற்கிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, வெங்கட், நேத்திக்குப் பிடிச்சதையும் போட்டு இருந்தேன், நீங்க தான் வரலை! அதிரடி, ஏஞ்சல் ஆகியோரும் வரலை! :)

      Delete
  20. நன்றாக சமைக்கத் தெரிந்தவர்களுக்கு அடுத்தவர் சமையல் எப்போதும்இரண்டாம்ரகம்தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, சமையலைக் குத்தம் சொல்லலை! எண்ணெய் தான்! :) வயித்தைக் கெடுத்துக்க முடியுமா?

      Delete
  21. Replies
    1. என்ன ஆச்சு? அனுராதா?

      Delete
  22. ஒன்றையும் கேட்காமல் விர்ர்ர்ரென எங்க பகுதிக்குப் போயிட்டு அப்புறம் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லவேண்டியது. ம்ஹும்.

    பாளையில் தெற்கு பஜாரில் ஸ்ரீராம் ஸ்வீட்ஸ் இருக்கிறது. அவங்க மனோகரத்தில் எக்ஸ்பர்ட். சாந்தி ஸ்வீட்ஸ்லயே எனக்கு அப்படித்தான் சொன்னாங்க. நான் வாங்கினேன். பிறகு ஒரு முறை கொரியரில் அனுப்பச் சொன்னேன்.

    கல்லிடைக் குறிச்சியிலும் (அந்த ஊரில் ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ்) நான் மனோகரம் வாங்கியிருக்கிறேன். துளி வித்தியாசம். அதுவும் நல்லாத்தான் இருந்தது. அங்கு அதிரசம், சீடைலாம் நன்றாக இருக்கும். (இனிப்பு, உப்பு சீடை)

    நெல்லை பழைய பஸ் ஸ்டாண்டில், வெளிப்புறம் 3 சாந்தி ஸ்வீட்ஸ் (இப்போ 4 ஓ) இருக்கும். அதில் எது கூட்டம் அதிகமோ அதுதான் ஒரிஜினல் (செயிண்ட் மேரீஸ் பார்மசிக்குத் தொட்டடுத்துள்ள கடை). அங்கு அல்வா, மிக்சர், பாதுஷா மூன்றும் ரொம்ப நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முதல்லே திருநெல்வேலிப்பக்கம் போனது வள்ளியூரில் நடந்த எங்க மாமா கல்யாணத்தின் போது! அப்போ ஏர்வாடி எல்லாம் போய்ப் பார்த்தோம். அது நான் எஸ் எஸ் எல்.சி எழுதின வருஷம். அதுக்கப்புறமா ஊர் பார்க்கப் போனது 2007 ஆம் ஆண்டு. அங்கே கல்லிடைக்குறிச்சியில் என் நெருங்கிய சிநேகிதன்/இளைய நண்பர் அம்பியின் வீட்டுக்குக் கூடப் போனோம். அம்பாசமுத்திரம் கௌரிசங்கரில் தயிர்வடை, அருமையான காஃபியுடன் சாப்பிட்டோம். கல்லிடைக்குறிச்சியில் அம்பியின் அம்மா மூலம் அப்பளம் இடுபவர்கள் வீட்டுக்கே போய் அப்பளம், மாலாடு, மனோகரம், புழுங்கலரிசி முறுக்கு எல்லாமும் வாங்கினோம். அப்போ எங்க பொண்ணு பத்துவருஷம் கழிச்சு குழந்தை உண்டாகி இருந்தாள். அவளுக்காக எல்லாம் வாங்கினோம். அதைப் பத்தி அப்போவே எழுதிட்டேன். தேடிப்பிடிச்சுப் படிச்சுக்குங்க! :)))) ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் தான் கல்லிடைக்குறிச்சிக்காரங்களோடது திருநெல்வேலியும் ஜானகிராமன் ஓட்டலுக்கு எதிரேயும் இருக்கு. அங்கே தான் மனோகரம் வாங்கினோம். இங்கே எங்களோட கூட இதே தளத்தில் திருநெல்வேலிக்காரங்கதான் இருக்காங்க! அவங்களைக் கேட்டுக் கொண்டு தான் போனோம். அவங்க மாசாமாசம் திருநெல்வேலி போறவங்க. கருங்குளம் ஊர்! முதல்முறை போனப்போ 2007 ஆம் ஆண்டில் யாரையும் கேட்காமல் தான் போனோம். எல்லாம் அருமையாக அமைந்தது.

      Delete
  23. செப்பறை போனீங்களா? நான் நெல்லையப்பர் கோவிலில் தாமிர சபை பார்த்துட்டு, சின்ன வயசுல வேற எங்கேயோ போனோமேன்னு யோசிச்சுட்டிருந்தேன். இப்போதான் ஞாபகம் வருது. பதின்ம வயதில், ராப்பத்தின்போது (கீழநத்தத்துல), நம்மாழ்வார் மோட்சத்துக்காக நாங்க பசங்க 5-6 பேர் நடந்து செப்பறை வரைல போய் துளசி பறிச்சிக்கிட்டுவந்தோம். அங்கயும் போயிருந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. செப்பறை பத்தி நான் சிதம்பர ரகசியம் எழுதும்போதே எழுதி அதைப்படிச்சுட்டுப் பலரும் போனாங்க. ஆனால் எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கலை! இனி எங்கேனு நினைச்சப்போத் தான் இந்த வாய்ப்புக் கிடைச்சது. அது பற்றி எழுதிய விபரங்கள் சிதம்பர ரகசியத்தில் இப்போவும் பார்க்கலாம்/படிக்கலாம். இதோடு சேர்ந்து இன்னமும் 3 நடராஜர் கோயில்கள். ஒன்று கரிசூழ்ந்த மங்கலம், இன்னொன்று கட்டாரி மங்கலம், அந்த இரண்டுக்கும் போகக் கிடைக்குமா தெரியலை. அடுத்துப் பார்க்க ஆசை உத்தரகோசமங்கை நடராஜரை! அவங்க அழைத்தால் எல்லாவற்றுக்கும் போகலாம். நான் சொல்லி/எழுதி சிதம்பரம் தீக்ஷிதர்களில் நண்பரான ஒருவர் கூடப் போயிட்டு வந்தார்.

      Delete
  24. பாளையங்கோட்டைல, எனக்குத் தெரியாம இதெல்லாம் (முறுக்கு தட்டைலாம்) எங்க விக்கறாங்க? இடம் எங்க இருக்குன்னாவது பார்த்தீங்களா?

    பாளையில் 1500 ஆண்டுகள் பழமையான கோபாலன் கோவிலுக்குப் போயிருக்கமாட்டீர்கள். பெரிய கோவில். இப்போ ரொம்பவே சுத்தமா வச்சிருக்காங்க (ஆனால் ஆண்கள் சட்டையைக் கழட்டணும்)

    ReplyDelete
    Replies
    1. நெ.த. வாமன முதலியார் தெருவோ என்னமோ! பெயர் மறந்து போச்சு. ஆனால் ஏதோ முதலியார் தெருனு தான் நினைக்கிறேன். இல்லைனா சுலோசன முதலியார் தெருவா? அங்கே நான் எங்க வண்டி ஓட்டுநரிடம் பாளையங்கோட்டையிலிருந்து சுலோசன முதலியார் பாலம் வழியாகத் தானே திருநெல்வேலி போகும் எனக் கேட்டதுக்கு, இது என்னம்மாப் புதுசாச் சொல்றீங்க? இப்படி ஒரு பாலம் நான் கேள்விப்படவே இல்லையேனு சொல்றார். சுமார் 30 வயதிருக்கும் அவரின் வரலாற்று அறிவு இப்படி மோசமா இருக்கேனு நொந்து போயிட்டேன். அதோடு செப்பறைனு சொன்னாலும் புரியலை/ ராஜவல்லிபுரம்னு சொன்னாலும் புரியலை! அப்புறமாக் கேட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டு போனோம். :( இப்போதைய தலைமுறையின் பொது அறிவை நினைத்தால் எதிர்காலம் கவலை தருகிறது. பாளையங்கோட்டை கோபாலனைப் பத்தி யாரும் சொல்லலை. பின்னால் ஒரு முறை போய் விசாரிச்சுக்கறோம்.

      Delete
  25. //நீ சுத்தறாப்போல் சுத்தலை பாருனு // - நீங்க சுத்தி முறுக்கு செய்தபோது மாமா, 'ஆஹா ஓஹோ' என்று புகழ்ந்திருக்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. நெ.த, இந்தப் புகழ்ச்சி, பாராட்டெல்லாம் எங்க பிறந்த வீட்டு மனிதர்கள் தாம்! நேருக்கு நேர் புகழ்வாங்க, புகுந்த வீட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்ததும் இல்லை. வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டாலே நல்லா இருக்குனு அர்த்தம் என நினைச்சுப்பேன். ஆகவே எதிர்பார்ப்பே இல்லை. இங்கே முறுக்குச் சுத்தல் ரொம்ப மோசமா இருந்ததால் அவர் கேட்டுட்டார். நல்லாச் சுத்தின முறுக்குகள் இங்கே அஷ்வின் மற்றும் சில கடைகளில் கிடைக்கின்றன. அதைப் பார்த்துட்டு இது சுத்தே நல்லா இல்லையேனு தோணி இருக்கும்.

      Delete
  26. பதிவு தொடக்கத்திலேயே உள்ளுணர்வு சத்தம் போட்டது...அம்பாரமாக முறுக்கு என்றதுமே தமிழரின் களப்பணி நினைவுக்கு வந்து விட்டது...ஆக நினைத்தது போலவே வயிற்றில் அடுப்பு மூட்டல்... திரும்ப x திரும்ப x திரும்ப கொதிக்கிற எண்ணெய் முறுக்கை எப்படித்தான் விற்று காசை வாங்க முடிகிறதோ.. மனசாட்சி இல்லாதவர்கள்....

    வியாபாரம் என்றாலே ஏமாற்று என்பதாகி விட்டது..

    இனி உஷாராக இருக்கணும்..

    சுடச்சுட முறுக்கு
    சுட்டெடுத்த முறுக்கு
    வட்ட வட்ட முறுக்கு
    வாங்கிப் போட்டு நொறுக்கு..

    என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  27. கடக் முடக் என்று முறுக்கு தின்றதெல்லாம் ஒரு காலம்... இப்போது மிருதுவாகக் கரையும் முறுக்கைத் தேடுகிறது நா..

    பற்கள் எல்லாம் அசையத் தொடங்கி விட்டன..

    வந்ததுக்கு அப்புறம் வந்தீங்களே..
    வந்துட்டு ஒருதரம் போனீங்களே..
    போய் விட்டு மறுதரம் வந்தீங்களே..
    இனிமேல் போனா வருவீங்களா?..

    யாருங்க அவங்க?....

    ReplyDelete