ப்ளாகர் டாஷ்போர்டில் பக்கத்திலேயே அகுடியா/ஐடியா கொடுக்கிறாங்களாம். ஆண்டாளின் சகோதரர் பத்தி எழுதுனு ஒரு ஐடியா! இன்னொன்று சகோதரர் பெயர் தெரியுமா உனக்குனு! இன்னொன்று ரங்கநாதர் பத்தி எழுதுனு சொல்லுது. இன்னொன்று காவிரியைப் பத்தி எழுது! காவிரிப் பாசனத்தில் சூரியகாந்தியைப் பண்ணலாமானு ஒரு அகுடியா! காவிரியின் வேகம் என்னனு ஒரு அகுடியா! இன்னொன்று காவிரியை எப்படிச் சுத்தம் செய்யறதுனு! இப்படி அகுடியா மன்னனாக ஆகிவிட்டது ப்ளாகர்.
இதிலே இப்போ நவராத்திரி சமயங்கறதாலே அதைப் பத்தி எழுதுனு ஒரு அகுடியா! யாரோ ஒருத்தர் அவங்க அம்மா இறந்துட்டதாலே நவராத்திரி பொம்மைக்கொலு வைக்கலாமானு கேட்டிருக்கார். இன்னொருத்தர் ராமாயணம், மஹாபாரதம் பத்தி எழுதுனு சொல்கிறார். எதை எழுத, எதை விட? தோசைப்புராணம் எழுதச் சொல்லி ஒரு அகுடியா! கர்நாடகாவின் எம்ஜி ரோடில் ஒரு ஓட்டல் பெயரைக் குறிப்பிட்டு அங்கே தோசை சாப்பிட்டிருக்கியா? தோசையின் நடுவில் என்ன தடவித் தருவாங்கனு ஒரு கேள்வி. வெண்ணெய் தோசை கர்நாடகாவில் எங்கே பிரபலம்னு ஒரு கேள்வி! நான் சாப்பிட்டது என்னமோ கோலாப்பூரில். கர்நாடகாவில் சாப்பிடலை! இது பக்கத்திலேயே இருந்துண்டு ஒரே பிடுங்கலா இருக்குனு அதை மூடிட்டேன். யாரோ, எங்கேயோ இருந்துண்டு நம்மை வேவு பார்க்கிறாங்களோனு ஒரு எண்ணம். பக்கத்திலேயே ஏன் வருது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோருக்கும் இப்படி வருதா தெரியலை. நான் தான் weird ஆச்சே! அதனால் எனக்கு மட்டும் வருதா? ஏனெனில் யாரும் இதைப் பத்திச் சொல்லவே இல்லை.
இது என்ன சொன்னாலும் நான் எனக்கு என்ன இஷ்டமோ, என்ன எழுதணும்னு தோணுதோ அதைத் தான் எழுதப் போறேன். அது பாட்டுக்குச் சொல்லிட்டு இருக்கட்டும். அதன் வாயை அடைச்சுட்டு நான் பாட்டுக்கு எழுதறேன்.
அடடே ப்ளாக்கர் இதுவரை எனக்கு இப்படி ஐடியா எடுத்து கொடுக்கவில்லையே...?
ReplyDeleteஹாஹாஹா! ப்ளாகருக்கே குழப்பமா? :))))
Deleteமஹா எரிச்சல் கீதாமா,
ReplyDeleteமூணு நாட்களாக வருகிறது. அதே ஆண்டாள்
கதைதான்.
என்ன ஆச்சு இவங்களுக்கு:(
நமக்குத் தோணினதைத்தானே எழுத முடியும்.?
இத்தனை வார்த்தைகளுக்குல் எழுதுன்னு ஏதாவது
போட்டி வைத்தாலே ஓடும் ஜன்மம் நான்.
என்ன பண்றதுன்னு தெரியவில்லை.
வாங்க வல்லி, எனக்கு ஒரு வாரமா வருது! அதை மூடிடுவேன்! அது ஒண்ணும் பிரச்னை இல்லை. எல்லோருக்கும் வருதானு தெரிஞ்சுக்கத் தான் பதிவே!
Deleteஎன்னை சாப்பாட்டு ராமனாக வைத்துவிட்டது அந்த பிளாக்கர் ஐடியா. இட்லி பற்றி எழுத்து, சாம்பார் பற்றி எழுத்து, தோசை பற்றி எழுத்து என்கிறது. நம் பதிவுகளிலிருந்துதான் இவை வருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் சீதை பற்றி நிறைய கேள்விகள், ஐடியாக்கள்... சீதை ராமனை மன்னித்தாளை வைத்து ஐடியா கொடுக்கிறது போலும்!
ReplyDeleteஉங்க "திங்க" பதிவுகளை மட்டுமே படிச்சிருக்குமோ? அப்புறமா கே.வா.போ.க. மட்டும்? அதான் போல!
Deleteபரவாயில்லை. உங்களை ஆன்மீகப் பதிவர் என்று புரிந்து வைத்திருக்கிறது பிளாக்கர்!
ReplyDeleteஇஃகி,இஃகி,இஃகி,இஃகி! இன்னிக்கும் அதான் வந்திருக்கு! நவராத்திரி பத்தி, பிள்ளையார், கம்சன், பத்தி எல்லாம் எழுதச் சொல்லிட்டு இருக்கு!
DeleteInteresting! எனக்கு அப்படி எந்த ஐடியாவும் வரவில்லையே?
ReplyDeleteவாங்க பானுமதி! நீங்க அப்போ அப்போ வீடியோ வேறே இணைப்பதால் என்ன செய்யறதுனு முழிக்குதோ என்னமோ!
Deleteதிருக்குறள்
ReplyDeleteதிரைப்பாடல்
HTML
இதை தவிர வேறு எதையும் காணாம் இங்கு...!
வாங்க டிடி. அதான் திருக்குறள் மயமா இருக்கேனு விட்டிருக்கும்.
Deleteபுதிய பிளாக்கரில் இந்த மாதிரி அகுடியா வந்துட்டு தான் இருக்கு! எனக்கும் நிறைய வருகிறது. அதைக் கவனிப்பதே இல்லை! ஃப்ரூட் சாலட் எப்படிச் செய்யணும்னு போஸ்ட் போட சொல்லி தான் முதல் இரண்டு மூணு இருக்கு! அம்மா கவிதை எழுதியது யாருன்னு கூட ஒரு ஐடியா! ஹாஹா...
ReplyDeleteநமக்கு என்ன தோணுதோ அதைத்தான எழுத முடியும்! நீங்க பாட்டுக்கு எழுதுங்க! அதையெல்லாம் கண்டுக்க தேவையில்லை!
ஆஹா! வெங்கட், உங்களுக்கும் வருதா? நல்லதாப் போச்சு, நானும் அதிகம் கவனிப்பது இல்லை தான். இருந்தாலும் தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன்.
Deleteநான் பாட்டுக்கு எழுதறேன்னு சொல்லிட்டு ஒண்ணுமே எழுதலையே
ReplyDeleteவாங்க நெ.த. இது எழுதினதெல்லாம் நான் பாட்டுக்குத் தானே!
Deleteதாவெண்கெரே பெண்ணே தோசை (வெண்ணை தோசை) மிகப் பிரபலம். நேற்றைக்கு முந்தைய தினம்தான் 70 ரூபாய் கொடுத்துச் சாப்பிட்டேன். அவ்வளவு நெய் ஒத்துக்குமான்னுதான் தெரியலை. உள்ள வச்சிருந்த மசாலா ரொம்பவே சுமார்.
ReplyDeleteநாங்க கோலாப்பூரில் சாப்பிட்டப்போ நன்றாகவே இருந்தது. தொட்டுக்கச் சட்னி! அதுவும் நன்றாக இருந்தது.
Deleteஎன் கமெண்ட் எங்கே...
ReplyDeleteரெண்டு வந்திருந்ததையும் போட்டிருக்கேன் ஸ்ரீராம். வேறே ஏதும் இல்லை.
Deleteமத்தியானமா வரேன்.
ReplyDeleteஎனக்கும் வருகிறது. அதனை ஒதுக்கிவிட்டுச் சென்று பிறவற்றைப் படிக்கிறேன்.
ReplyDeleteவாங்க முனைவரே, நானும் ஒதுக்கி விடுகிறேன் தான்! இருந்தாலும் தெரிஞ்சுக்கக் கேட்டேன்.
Deleteநமக்கு தோணறதை எழுதி முடிக்கவே இங்க நேரத்தை காணோம், இதுல அவர் வேற அகுடியா எல்லாம் குடுக்கறாரா? ஹா ஹா ஹா...
ReplyDeleteசந்தேகமே வேண்டாம், நம் ஒவ்வொரு அசைவும் உளவுபார்க்க படுகிறது. ஆனா வேற வழியில்லை, சோசியல் மீடியானு வந்துட்டா எல்லாத்துக்கும் தயாரா இருக்க வேண்டியது தான் மாமி. நம்ம பத்திரத்துல நாம இருந்துப்போம், அதுக்கு மேல கண்ணன் பாத்துப்பார் இல்லையா? :)
வாங்க ஏடிஎம், இன்னிக்குக் கோலங்கள் பத்தி எழுதச் சொல்லிட்டு இருக்கு. ஹாஹாஹா, நீங்க வலைப்பக்கம் போயே ஒரு மாமாங்கம் ஆகுதே! அதனால் தெரியலை! ஆனால் நம்மை உளவு பார்ப்பது என்பது மட்டும் நிஜம்! கண்ணன் பார்த்துப்பான்.
Deleteநான் கணினி வழியாக பிளாக்கரை இயக்கி நாலு மாதங்கள் ஆகின்றன...
ReplyDeleteகைத் தொலைபேசி வழியாக இயங்குவதால் என்னென்ன கூத்துகள் நடக்கின்றன என்பது தெரியவில்லை...
எனக்குக் கைத் தொலைபேசியின் பயன்பாடே மிகக் குறைச்சல் துரை! பேசுவதற்கும் வாட்சப் பார்க்கவும் மட்டும் தான்!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஎனக்கு இந்த தொந்தரவுகள் இல்லை.ஒரு வேளை சகோதரர் துரை செல்வராஜ் சொல்வது போல், நான் கைப்பேசியிலேயே எல்லாவற்றையும் பார்ப்பதால், (கருத்திடுவது, பதிவுகள் எழுதுவது) இது இல்லையோ என்னவோ? ஆனால் என்ன எழுதுவது என்று குழம்பும் போது இப்படி ஐடியாக்களை எடுத்துத் தந்தால், நன்றாகத்தானே இருக்கும். தங்களைப் போன்றவர்கள் உடனே விவரங்களை சேகரித்து அருமையாக எழுதி விடலாமே.!:) ஆனாலும் நாம் ஏதாவது மும்மரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது அருகிலேயே தொந்தரவு மாதிரி இதைப் போல் கேள்விகளுடன் வந்தால் கடுப்புத்தான்...! சகிப்புதன்மை வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, கடுப்பெல்லாம் ஆகலை. அது பாட்டுக்கு வலது ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு சொல்லிட்டு இருக்கும். சமயங்களில் அதை எடுத்துடுவேன். க்ளோஸ் பண்ணும் ஆப்ஷன் இருக்கு. அதன் மூலம் க்ளோஸ் பண்ணிட்டு வேலைகளைப் பார்ப்பேன். ஆனால் கணினியை மூடிட்டு மறுபடி திறக்கையில் வந்துடும். மறுபடி அதை மூடிடுவேன். :))))) ஒண்ணும் பிரச்னை எல்லாம் இல்லை. எல்லோருக்கும் இருக்கானு பார்க்கத் தான் பதிவிட்டேன்.
Delete