வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ “ஆலோலம்” பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள்.
அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள். வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். “ஏ! வளைச்செட்டி, “ஆருமற்ற வள்ளி
நாம் அருந்தினையைக் காக்கப் போறேன்
வாசலிட்டுப் போறவளுக்கு வளசலு எனக்கெதுக்கு?”
என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள்.
ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ”
ஆலோலங்கடி சோஓஓஓஓஓ
ஆயலோ கிளி ஆயலோ
அன்னங்களே, வாத்துகளே
போவென்று விரட்டினாலும்
குந்துகெட்ட வெள்ளக்கிளி ஆனாலும்
போவதில்லை அடி ஆலோலம், ஆலோலம்,
ஆலோலங்கடி சோஓஓஓஓ”
எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர். கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள்.
"சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. “வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!” என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது.
“கல்லை உரலாக்கி
கருங்கம்பை ஒலக்கையாக்கி
தேக்கிலையை அளவாக்கி
தெள்ளி விடு வள்ளி
தினைமாவை அள்ளி” என்ற கிழவரிடம்
சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது. “தண்ணீர் தவிக்குதடி வள்ளி” என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், “வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!” என்று ஆரம்பித்தார்.
வேலன் வந்தாண்டி வடிவேலன் வந்தாண்டி யானை முகன் வேலனுக்கு அண்ணனாமடி அவன்சிக்காட்டி வள்ளிப்பெண்ணை மணந்து கொண்டான்டி
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஇது என்னது? வள்ளித் திருமணம் நாடக டயலாக், பாடல்கள் மாதிரி இருக்கு? இருந்தாலும் ரசித்தேன்.
ReplyDeleteஎழுதிக் கொண்டிருப்பது வள்ளி திருமணம் பற்றித் தான்! அது மாதிரி இல்லாமல் வேறே எப்படி இருக்கும்?
Deleteசுவையான பதிவு.
ReplyDeleteபாவம் முருகன்:)
நல்ல நாடகம்.
பாடல்கள் அருமை மா கீதா.
நன்றி ரேவதி!
Deleteஆயிரம் தான் சொல்லுங்க..
ReplyDeleteவள்ளி கதை கேட்பதே அலாதி மகிழ்ச்சி.. இம்மியும் பிசகாத அன்றைய ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் இப்போது காணக் கிடைக்காதது..
வடிவேல் முருகனுக்கு அரோஹரா..
வள்ளி மணவாளனுக்கு அரோஹரா...
உண்மை தான் துரை! இப்போல்லாம் அது மாதிரி துள்ளல், துடிப்போடு காண முடியாது!
Deleteவள்ளி பாடிய பாடலை கேட்டேன்.
ReplyDeleteதவசி வடிவில் வந்த கந்தனை கண்டேன்.
யானை என்றால் பயப்படும் வள்ளியை பயமுறுத்த அழைத்தார்
அண்ணனை கந்தன் . விநாயகபெருமானை காண வருகிறேன்.
கோமதி அரசு, என்ன சொல்வதுனு புரியலை!
Deleteடி ஆர் மகாலிங்கம் நினைவுக்கு வருகிறார்! குறும்புக்கார முருகன்!
ReplyDeleteநான் அந்தப் படம் பார்த்ததில்லை ஶ்ரீராம். லக்ஷ்மியின் அம்மா குமாரி ருக்மிணி நடிச்சது!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநேற்று மாலையிலிருந்து உங்கள் தளம் எனக்கு ஏனோ திறக்கவே முடியவில்லை. (சகோதரர் கில்லர்ஜியின் தளமுந்தான்) அதனால் மாலை வேலைகள் முடிந்து, அதன் பின் வரும் நேரத்தில் எப்போதும் போல் படித்து கருத்துரைக்க வர இயலவில்லை. இப்போது உங்கள் தளம் திறக்கிறது. இனி மதியம் பதிவைப் படித்து விட்டு வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மெதுவா வாங்க கமலா. எனக்கும் சில தளங்கள் இப்படித்தான் திறக்க முடியாமல் ஆகின்றன. சில சமயம் என்னோட வலைத்தளமே எனக்குத் திறக்காது! மெதுவா வந்து படிச்சுக் கருத்துச் சொல்லுங்க.
Deleteஇப்படித்தான் நாடகத்திலும் சொல்வதுண்டு. பாடல்கள் ரசித்தேன்.
ReplyDeleteவள்ளி திருமணம் வெள்ளி மலையில் நடந்தது என்று சொல்லப்படுவது பத்தி முந்தைய பதிவில் சென்னேன் இல்லையா அப்ப அது சேரர் ஆட்சி...கேரளத்தோடு இணைந்த பகுதியாக..
கீதா
கோவையிலும் ஓர் வெள்ளிமலை உண்டு தி/கீதா. அதுவோனு நினைச்சேன். பின்னர் புரிந்தது.
Deleteவெள்ளி மலையில் மேலே போனால் கிட்டத்தட்ட கோயிலில் இருந்து கொஞ்சம் தூரம்.. ஒன்றரை கிலோமீட்டர் இருக்கும் என்று நினைக்கிறேன். வள்ளி குகை உண்டு, சுனை வள்ளி சோலை (வள்ளி காவல் காத்தது) என்று சொல்லப்பட்டது. இதெல்லாம் பல வருடங்கள் முன் நான் அங்கிருந்தப்ப போனது. இப்போது எப்படி என்று தெரியவில்லை. வள்ளியின் பிறப்பிடம் என்றும் சொல்லுறாங்க. இக்கோயிலில் கேரள முறைப்படி பூஜை.
ReplyDeleteநான் வள்ளியூரில் இருந்தப்ப அங்குள்ள முருகன் கோயில் உயரமான பாறை மீது இருக்குமம் குடைவரைக் குகை கோயில். அக்கோயிலிலும் பாறையில் வள்ளி குகை என்று சொல்லப்பட்டு அதை இரும்புக் கதவால் மூடி வைத்திருந்தாங்க, அங்கு புகழ் பெற்ற வைர வேல் உண்டு. (அல்லி ராணி கவனிக்கவும்!!!) வள்ளியூரின் பெயர்க்காரணம் பெயரிலேயே இருக்கிறதே..இப்படிப் பல தகவல்கள்..
கீதா
என் மாமி வள்ளியூரில் இருந்திருக்காங்க. ஆனால் இதெல்லாம் சொன்னதில்லை. எனக்கு ஆர்வம் இருக்காதுனு நினைச்சிருப்பாங்களோ? வைரவேல் இன்னமும் இருக்கோ இல்லையோ! யாருக்குத் தெரியும்! நல்ல தகவல்கள் தி/கீதா
Delete