இது ப்ழைய பதிவுகளில் சேமித்து வைத்திருந்த ஓர் அரதப் பழசான நகைச்சுவைத் துணுக்கு. அப்போ நல்லா ரசிச்சேன். இப்போ அம்புட்டுத் தெரியலை. :)))))
முன்னர் இருந்த ஆனந்த விகடனில் நான் ரசித்த ஒரு ஜோக்:படங்களுடன் வந்திருக்கிறது. ஒரு நபர் பாடுகிறார்.. மற்ற இரண்டு பேர் அது பற்றிப் பேசுகிறார்கள்.
"அதுக்குள்ளே பத்து மாசம் ஆயிடுச்சா?
எதைக் கேக்கறேன்னு புரியலியே?
அந்த ஆள் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் சீமந்தம்னு பாடறாரே? "
நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. பொதுவாக ஜோக் எல்லாம் நன்றாக இருந்தாலும் இது மாதிரி எனக்குப் பிடித்தவைனு வரது சிலது தான். என் மனசுக்குள் கற்பனை பண்ணிப் பார்த்துப்பேன்.அப்போ தன்னை அறியாமல் சிரிப்பு வந்தால் அது என்னைப் பொறுத்த வரை நல்ல ஜோக். இது அப்படிப் பட்டது. இனிமேல் இது மாதிரி எனக்குப் பிடித்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும். (இது முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் எழுதினவை! அப்போ நான் தனிப்பெரும் தலைவியாக ஆட்சி செலுத்திய நேரம். ) ஹிஹிஹி, அப்போல்லாம் மனசாட்சி அடிக்கடி வந்து கூவும். இப்போல்லாம் வரதே இல்லை!
(ம.சா.: ஆரம்பிச்சுட்டியா? உன் தலைவி புத்தியை? ரொம்பவே பந்தா காட்டறியே? உன் பதிவுக்கு வரதே பெரிய விஷயம். இதிலே இது வேறேயா? பெரிய சுஜாதான்னு நினைப்பு. என்ன பரிசு கொடுக்கப் போறே? பின்னூட்டம் தானே?)
அது அப்படித் தான் பேசும். நீங்க வழக்கம் போல் கண்டுக்காதீங்க.
கீழே மேற்கொண்டு படிக்கப் போகும் விஷயங்கள் என்ன எழுதுவது என்னும் எண்ணத்தில் என்னோட பதிவுகளின் ட்ராஃப்ட் மோடில் இருக்கும் பதிவுகளைத் தோண்டி எடுத்தப்போ இது கிடைச்சது. எத்தனை பேருக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனால் இப்போதும் உண்மை நிலைமை அதுதான் என எங்களுக்குத் தெரிந்த நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கின்றன. அங்கிருந்து வரும் வாட்சப் தகவல்களும் உறுதி கூறுகின்றன.
இப்போ நிஜமாவே சுஜாதா இந்த வார விகடனில் (எந்த வாரம்னு எல்லாம் தெரியாது.) எழுதி இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்தி. (இந்தப் பதிவை எப்போச் சேமித்தேன்னு தெரியலை. விகடன் எல்லாம் படிக்கிற காலத்தில் எடுத்து வைச்சிருக்கேன். அதுவும் சுஜாதா எழுதினப்போ! ) குஜராத்தில் இருந்து வெளிநாடு போன இந்திய மருத்துவர்கள் திரும்ப இந்தியா வரும்போது அதுவும் குஜராத் வரும்போது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று பணி புரிகிறார்கள் என்பதாக அவருக்கு மின்னஞ்சல் கணேசன் மஹாதேவன் என்பவர் கொடுத்திருப்பதாய் எழுதி இருக்கிறார். மேலும் "medical tourism" "911 service about trauma care" துவங்கவும்போவதாக எழுதி இருக்கிறார்.இது ஒண்ணும் புதிசு இல்லை. குஜராத்தில் எந்தக் கிராமத்துக்குப் போனாலும் பள்ளிகள் மிகத் தரமான கட்டிடங்களுடன் இருக்கும். பள்ளியில் நுழையும்போதே சரஸ்வதியின் சிலை வீணையுடன் இருக்கும்படியாக எழுப்பி இருப்பார்கள். தினமும் பிரார்த்தனை அங்கே தான் நடைபெறும். அவரவர் சொந்தக் கிராமங்களுக்குத் தரமான சாலைவசதிகளுக்கு வேண்டிய பண உதவி, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, மதம்பார்க்காமல் பண உதவி போன்ற நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன. அங்கங்கே மருத்துவ ட்ரஸ்ட் ஏற்படுத்தி டாக்டர்களுக்குச் சம்பளம் கொடுத்து வாரம் இரு முறை, மூன்று முறை என்று வரச் சொல்லி மருந்துகளைக் குறைந்த விலையில் கொடுத்து, அதாவது வெளியில் 50/-ரூ கொடுத்துத் தான்வாங்க வேண்டும் என்றால் இங்கே ஒரு ரூ. முதல் 5ரூ வரை மருந்தின் தரத்துக்குத் தகுந்த விலை இருக்கும். ஆயுர்வேத மருந்துகள் இன்னும் குறைவு.
அரசும் பெண்களுக்கு எதுவரை படித்தாலும் இலவசம்தான். இது எல்லாம் நாங்க அங்கே இருந்தப்போவும் இருந்தது, அதுக்கு முன்னாலேயேவும் இருந்திருக்கிறது. எங்க பையன் இஞ்சினீரிங் சேரும்போது அரசாங்கக் கல்லூரியில் மெரிட்டில் தான் சேர்ந்தான். நாங்க கட்டின ஃபீஸ் பல்கலைக் கழகத்துக்கும் கல்லூரிக்கும் சேர்த்து வெறும் 250/-ரூ. தான். ஹாஸ்டல், சாப்பாடு, ட்ரஸ் என்றுதான் எங்களுக்குக் கொஞ்சம் தொகை செலவு செய்ய நேர்ந்தது. மேலும் அரசுப் பேருந்துகளில் போனால் கோடை நாட்களில் ஜூஸ், ,பெப்ஸி, போன்றவையும் குளிர் நாளில் டீயும் கொடுப்பார்கள்.காங்கிரஸ் முதலமைச்சரோ அல்லது பிஜேபி முதலமைச்சரோ அவரிடம் நாம் சென்றால் தோழமையுடன் பேச முடியும். சாதாரண மனிதர்கள் போல நடந்து போய்க் கொண்டு இருப்பார்கள். நாம் போய் நம்மோட வேலையைச் சொல்லலாம். எந்தத் தடையும் இருக்காது. இது ராஜஸ்தானிலும் இருந்தது. குஜராத்தில் இப்பவும் இப்படித்தான் என்று ஜாம்நகரில் இருந்து வந்த எங்கள் சிநேகிதர் கூறுகிறார். தேர்தல் சமயம் நகரங்களில் எந்தவிதப் பரபரப்பும் தெரியாது.
கட்சிக் கொடிகளோ, பானர்களோ, கட் அவுட்டுகளோ பார்க்க முடியாது. சொல்லப் போனால் தமிழ்நாடு தாண்டினாலே இவை குறைவாகவே பார்க்க முடியும். அரசியல் தலைவர்கள் சாதாரணமாக வருவார்கள், போவார்கள், நாம் பெயரைச் சொல்லி கூடவே "பாய்" சேர்த்து அழைக்கலாம். உதாரணமாகப் பிரதமரை அங்கே "மோதி பாய்" என அழைப்பார்கள். இது பிஜேபி முதலமைச்சர் என்றில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தப்போவும் இருந்திருக்கோம். அப்போவும் சிமன் பாய் படேலை, "சிமன் பாய்" என்றே அழைக்கலாம். அதே போல் ஊர்மிளா பென் படேலையும் "ஊர்மிளா பென்" என அழைக்க முடியும். இங்கெல்லாம் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பெயர் சொன்னால் அம்புட்டுத்தேன்!
// ... பெயர் சொன்னால்
ReplyDeleteஅம்புட்டு தேன்!.. //
(அவ்வளவு தேன்..)
// .. பெயர் சொன்னா
அருவா வெட்டுதேங்!.. //
வாங்க துரை, ஹாஹாஹா, ஆமாம் இல்ல! :)
Deleteவாலை மீனுக்க்கும், விலாங்கு மீனுக்கும் சீமந்தமா?! புதுசா இருக்கே!
ReplyDeleteராஜி, இதுக்கு ஒரு பதினைந்து வருடம் ஆகி இருக்கும். குழந்தை பிறந்து பேரன், பேத்தி எடுத்திருக்கும்! :))))
Deleteநீங்க வேற... கருணாநிதி என்று ஒருவர் பெயர் சொல்லி எழுதியதற்காக கடுமையாக வசை பாடினார்கள்.
ReplyDeleteநம்ம ஊர்ல ஜால்ராக்களும் அல்லக்கைகளும்தான் பெரும்பான்மை. வேற எப்படி இருக்கும்?
ரொம்ப உங்க டிராஃப்டுகளைத் தோண்டாதீர்கள். அப்புறம் இராமாயணம் மஹாபாரதம் நடந்தபோது எழுதி வைத்ததெல்லாம் வந்துவிடும். எங்களால புரிஞ்சுக்கவே முடியாது. நாங்களோ தவறுதலா உங்களைக் குழந்தைனு நினைச்சுக்கிட்டிருக்கோம்.
ஹாஹாஹா! நெல்லையாரே, இன்னமும் 2,3 ட்ராஃப்டுகளைத் தோண்டி இருக்கேன். அதிலே ஒன்று அன்றும் இன்றும் என்றும் வாத, விவாதங்களுக்கு உட்படும் ஒரு விஷயம்! என்னனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Deleteதவறுதலா எல்லாம் இல்லை, மீ த ஒன் அன்ட் ஒன்லி குழந்தை!
பழைய எழுத்துன்னு சொன்னாலும் இப்போதைக்கு பொருந்தும் எழுத்துதான்! அரசு பஸ்களில் குளிர்பானங்களா? இங்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எப்போதும் பொருந்தும் எழுத்து! இல்லையா? முன்னெல்லாம் அரசுப் பேருந்துகளில் கொடுத்தாங்க. சமீபத்திய நிலவரம் தெரியலை. 2 வருஷம் முன்னே போனப்போக் காரிலேயே பயணம் செய்ததால் தெரியலை! :(
Delete// பெயர் சொன்னால் அம்புட்டுதேன்...//
ReplyDeleteநான் பிடரியில் அடிவாங்கிய சம்பவத்தை கூடச் சொல்லி இருந்தேனே...!
ஆமா இல்ல? நினைவில் இருக்கு! அதோடு இங்கே எல்லாம் பட்டங்கள், அடைமொழி எல்லாத்தையும் சேர்த்துச் சொல்லணுமே!
Deleteபழசோ புதுசோ. மிக அருமை. அப்போ இந்தப் பாட்டு சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது இல்லையா.
ReplyDeleteகுஜராத் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
இங்கேயும் நடக்கிறதே கூத்து.
பொய்யாட்சி.
நாளை நல்ல முடிவு வரவேண்டும் என்று வேண்டியபடி நேரம் செல்கிறது.
வாங்க வல்லி. இது ஒரு 20 வருஷத்துப் பழைய செய்தியாக இருக்கலாம். ஆனால் 2 வருஷம் முன்னர் பார்த்தப்போவும் குஜராத் மாறவில்லை. அதிலும் நாங்க பரோடாவில் இருக்கையில் மோதி வரப்போவதாகப் பேச்சு! எப்போ வந்தார், எப்போப் போனார்னு ஒண்ணுமே தெரியலை!
Deleteபழசக் கிண்டிப் போட்டாலும் (திப்பிசம் என்பாரோ நெல்லை?), சரியான விஷயத்தைத்தான் எடுத்துவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருப்பது குஜராத்தின் அரசியலைப்பற்றி மட்டுமல்ல. ஒரு நல்ல சமூகம் என்கிற நிலையில் அவர்கள் தங்களுக்குள்ளே எப்படிப் பார்க்கிறார்கள், பழகுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது. வெளிநாடுகளில் குறிப்பாக ஆஃப்பிரிக்க நாடுகளில் ஒரு கான்ஸுலர் ஆஃபீஸர் என்கிற நிலையில், மற்றவர்களோடு சேர்த்து குஜராத்தி இந்தியக் கம்யூனிட்டியோடும் அளவளாவ, பழக நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.
ReplyDeleteஅரசியல் என்கிற ஒரு விஷயத்தைப் பேசுகையில், தமிழ்நாடு என்கிற பெயரைக் குறிப்பிடாதிருப்பது நமது oral health -க்கும் நல்லது. சொன்னால், வாயில் மௌத்வாஷோடு டெட்டாலும் விட்டுச் சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏகாந்தன், திப்பிசம் என்ற சொல்லுக்கு முழு ராயல்டியும் நான் வாங்கி வைச்சிருக்கேன். நீங்க பாட்டுக்கு நெல்லைக்குக் கொடுக்கிறீங்களே! :)))))
Deleteஅது சரி! உங்கள் வெளிநாட்டு அனுபவங்களை எப்போது எழுதப் போகிறீர்கள்? கொஞ்சம் கொஞ்சம் எழுதி இருந்ததே படிக்கச் சுவாரசியம்.
அட! குஜராத் பத்தியா? என் உறவினர் கூட அங்க இருந்தாங்க, இப்ப வேற ஒரு உறவினர் இருக்காங்க. ராஜஸ்தானிலும் இருந்தார்கள். மகனின் நண்பரும் (தமிழ்தான்) சென்ற வருடம் வரை குஜராத்தில்தான் வேலை செய்தார். இப்போது வாரணாசியில் அரசு கால்நடைக் கல்லூரியில் வேலை கிடைத்து அங்கு இருக்கிறார்.
ReplyDeleteகுஜராத் பத்தி கீதாக்கா நீங்க சொல்லியிருப்பதில் சிலது அவங்களும் சொல்லியிருக்காங்க. சாலைகள், மக்களின் உதவி புரியும் மனம், எளிமை, கட் அவுட் இல்லாதது பற்றி. ஆனால் அரசுப் பேருந்துகளில் குளிர்பானம் என்பது தகவல்.
கீதா
வாங்க தி/கீதா, இப்போவும் எங்களுக்கு அங்கே உறவுகள், நட்புக்கள் இருக்கின்றனர். ராஜஸ்தான் கேட்கவே வேண்டாம். எனக்குப் பிறந்த வீடு மாதிரி! அரசுப் பேருந்துகளில் முன்பெல்லாம் குளிர்பானம் கொடுத்து வந்தாங்க. இப்போத் தெரியாது, பயணம் செய்யவில்லையே!
Deleteஓ ஒ ...!
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteநம்மைபற்றி எவ்வளவு வேண்டுமானாலும் இழிவாக எழுதலாம் வாசிப்பவர் ஒத்த கருத்துகொண்டவர்தானே பெரும் பாலும் ஓக்கே
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!
Deleteகுஜராத்தை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வாழ்க !
ReplyDeleteவாங்க மாதேவி, ஆமாம், ஆச்சரியம் தான் அப்போவும்/இப்போவும்/எப்போவும்!
Deleteதலைப்புப் பார்த்ததும், கீசாக்கா தனக்குத்தான் ஜொள்ளுறா என ஓடி வந்தேனாக்கும்:))...
ReplyDeleteஜோக் சொல்லியிருக்கிறீங்களோ? சத்தியமாக எனக்கு எதுவும் பிரியுதேயில்லை:) கீசாக்கா கர்ர்ர்ர்:))..
நகைச்சுவை, படத்தில் வரும் கொமெடிகளைத்தாண்டிப் பார்க்க விரும்பினால்.. கலக்கப்போவது யாரு.. பழைய நிகழ்ச்சிகள் தேடிப் பாருங்கோ நன்றாக இருக்கும்... நிறையவே சிரிச்சிருக்கிறோம் அவை பார்த்து....
ஹாஹாஹாஹா அல்லி ராணி, அந்தக் காலத்தில் அதாவது சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர், "வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்னும் கானா பாடல் தமிழ்நாட்டின் தேசிய கீதமாக இருந்தது. அப்போதைய நினைவுகள் இவை! எப்போவோ குறிச்சு வைச்சிருந்தேன். நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. மத்தியானம் பாலிமரில் செய்திகள் கேட்டுப்பேன். சாயந்திரம் நம்மவர் போடும் சானலில் ஓடும் தொடர்களைக் கேட்டுக் கொள்வேன். இல்லைனாலும் ஒண்ணும் பிரச்னை இல்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபழையதானாலும், நீங்கள் தரும் ஜோரில் எல்லாமே புதியதாகத்தான் தெரிகிறது. நல்ல பழக்க வழக்கங்களுடன் தந்த தகவல்களின்படி அமைந்த குஜராத் மாநிலம் வாழ்க.நீங்கள் ரசித்த ஜோக்கும் நன்றாக உள்ளது. தாமதமாக வந்ததினால், கருத்துரைகளும் வரிசையாக படித்து ரசித்தேன்.பகிர்வுக்குமிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். குஜராத் மாநிலத்தில் நாங்கள் குடும்பத்தோடு ஐந்தாறு வருஷம் குப்பை கொட்டினோம் எனில் எங்கள் பையர் முழுக்க முழுக்கப் படித்து அங்கேயே பரோடாவில் 3 வருடங்கள் வேலையிலும் இருந்தார். தாமதமாய் வந்தால் என்ன? பரவாயில்லை.
Deleteஎன்னது சீமந்தமா ஹாஹா. மொத தரமா கேள்விப்படுறேன்ல. அதான் உருண்டு பெரண்டு சிரிக்கிறேன் ;)
ReplyDeleteவாங்க தேனம்மை, பின்னே கல்யாணம்னு ஒண்ணு ஆனால் சீமந்தமும் ஆகி இருக்கணுமே!
Deleteபழையதின் சுவை அலாதிதான்! நல்ல கெட்டித்தயிரில் பிசைந்து, மாங்காய் தொக்கோடு சாப்பிட்டது போல் இருக்கிறது. குஜராத் நிலவரம் இந்தியா முழுவதும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
ReplyDeleteஹாஹாஹா, பானுமதி, வாங்க, கெட்டித்தயிரில் பிசைந்த சாதத்துக்குத் துண்டமாங்காய் ஊறுகாயும் நல்லா இருக்குமே! குஜராத் நிலவரம் இந்தியா முழுசும் எங்கே வரும்? கனவு கூடக் காண முடியாது.
Deleteபழைய பகிர்வு நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாளைமீன் பாடல் வந்து 20 வருடம் ஆச்சா?
கல்யாணமாம், கல்யாணம் என்று ஆரம்பிக்கும் பாட்டு அடிக்கடி முன்பு ஒலிபரப்புவார்கள்.
வாங்க கோமதி, இந்தப் பதிவை எப்போச் சேமித்து ட்ராஃப்டில் வைத்தேன்னு புரியலை, உத்தேசமாகச் சொன்னேன், 20 வருஷம்னு!
Delete