எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 29, 2020

இரண்டாவது புத்தக வெளியீடு!

பாரம்பரியச் சமையல்கள் 

வணக்கம். என்னுடைய சமையல் குறிப்புகள், நான் சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருப்பனவற்றில் சில பாகம் ஒன்றாக இன்று அமேசான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மிகுந்த உதவி செய்தவர் வழக்கம் போல் நம் வெங்கட் தான். நேற்றே வெளியீடு காண வேண்டியது ஒரு சில பிரச்னைகளால் இன்று தான் வந்திருக்கிறது. இதை நாளை திங்கள் 30-11-2020 மதியம் 12-30 மணியில் இருந்து சனிக்கிழமை மதியம் 12-00 5-12-2020 வரை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். இதற்கான சுட்டி மேலே கொடுத்துள்ளேன். அந்தச் சுட்டியை இங்கே இணைப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆகி விட்டது. மொத்தத்தில் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் கற்கிறேன். புத்தகம் விலை 50 ரூபாய் தான். அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி. வாட்சப் மூலமும் இலவசத் தரவிறக்குவதற்கான சுட்டி கொடுத்துள்ளேன். 

27 comments:

  1. வாழ்த்துகள். உங்கள் விடா முயற்சி, ஆர்வம், உழைப்பு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத் தமிழரே!

      Delete
  2. இன்னும் ஸ்ரீரங்கன் உலா போன்றவற்றையும் நீங்க புத்தகமாக விரைவில் வெளியிடணும்.

    பாரம்பர்ய புத்தகங்கள் உங்கள் பெயரை இணையத்தில் சொல்லிக்கொண்டிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீரங்கம் பற்றிய தகவல்கள் தினமும் முகநூலில் கூட வருகின்றன.

      Delete
    2. நீங்க அந்த இடுகைகளை முடித்து அதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவந்தால் அது பெரிய அச்சீவ்மெண்ட் ஆக இருக்கும். செய்ங்க.

      Delete
    3. பார்க்கலாம் நெ.த. இப்போ எல்லோரும் நான் எழுதிய "கண்ணன் வருவான்" தொடர்களைப் புத்தகமாகக் கொண்டு வரச் சொல்லிக் கொண்டிருக்காங்க. அதில் தி.வா. முனைப்புடன் இருக்கார். ஒவ்வொரு பாகமும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல். எட்டு பாகங்கள் என நினைக்கிறேன். எடிட்டிங் செய்யவே நாள் ஆகும். பார்க்கலாம்.

      Delete
  3. அமேசான் தளத்தில் இரண்டாவது மின்னூல் வெளியீடு - மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் வெளியீடுகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். உங்களால் தான் இந்த வெளியீடுகளே!

      Delete
  4. இரண்டாவது புத்தக வெளியீட்டுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன்.

      Delete
  5. வாழ்த்துகள் மா. மேலும் மேலும் வளரட்டும் இந்தப் பணி.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.மென்மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள். சாதனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  8. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆன்மிகம். நல்ல மணம் வீசட்டும்.

      Delete
  10. தங்களது இரண்டாவது மின்நூலுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி. என்னுடைய மின்னூல்கள் பலவும் https://freetamilebooks.com மூலம் சுமார் 10 அல்லது 12 வந்திருக்கின்றன. கூகிள் புக்ஸிலும் இவை கிடைக்கும். இது கின்டில் மூலம் வெளியிடப்பட்ட 2 ஆவது புத்தகம்.

      Delete
  11. அக்கா, Amazon மூலம் வாங்கி கொள்வது நல்லதா? பதிவிறக்கம் செய்வது நல்லதா? நான் அதிகம் முகநூல் வராததால் உங்களின் முதல் நூல் கூட தெரியவில்லை. விபரம் எனக்கு WhatsApp அனுப்பினால் வாங்கி கொள்கிறேன். புத்தகம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.💐

    ReplyDelete
    Replies
    1. அக்கா இது Shanthi Venkatraman

      Delete
    2. சாந்தி, நல்லவேளையா சொன்னியே! நான் பவானியோனு நினைச்சேன். உனக்கு நேரமிருந்தால் சனிக்கிழமைக்குள்ளாக இலவசத் தரவிறக்கம் செய்துக்கலாம். அல்லது அக்காவுக்குக் கொடுக்கணும்னா கொடுத்துட்டுத் தரவிறக்கிக்கொள்! :)))))) சனிக்கிழமைக்குள் தரவிறக்கிக்கொள் சாந்தி. முதல் புத்தகம் மறுபடி இரண்டாம் முறை இலவசத் தரவிறக்கம் கொடுக்கும்போது உனக்கும் செய்தி அனுப்புகிறேன். அல்லது அமேசானில் Cooking for Youngsters என்று தேடு! கிடைக்கும். அடுத்தது அநேகமாக ஏதேனும் travellogue ஆக இருக்கலாம். :))))

      Delete
    3. // அடுத்தது அநேகமாக ஏதேனும் travellogue ஆக இருக்கலாம். :)))) //

      ஆ... கிசுகிசு!

      Delete
    4. ஹா ஹா ஹா ஸ்ரீராம்!! தகவல் கசிஞ்சுருச்சே!!

      வாழ்த்துகள் கீதாக்கா அடுத்த புத்தகத்துக்கும் வாழ்த்துகள்!

      கீதா

      Delete
    5. ம்ம்ம்? ட்ராவலாக் என்று சொல்கிறேன். ஆனால் பலரும் என்னோட கண்ணன் கதைகளை வெளியிடச் சொல்றாங்க. பார்ப்போம். தி.வா. சொல்லிக்கொண்டே இருக்கார்.

      Delete