எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 21, 2020

மைய நடம் செய்யும் மயில் வாகனனை! கந்த சஷ்டிப் பதிவுகள்! 7

முத்தரசன் எட்டிப் பிடி, எட்டிப் பிடி என அந்தச் சிலையைப் பிடிக்கச் சொன்னதே ஊரின் பெயராக அமைந்து இன்று எட்டுக் குடி என விளங்குகின்றது எனச் சொல்கின்றனர். பறக்க ஆரம்பித்த மயிலையும், வேலவனையும் பார்த்து பக்திப் பரவசத்துடன் மக்கள் அனைவரும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டே வேலா, எங்களை விட்டுப் போய்விடாதா, கந்தா, கடம்பா எனக் கூவிக் கொண்டே போக, சிற்பியோ தன் உளியை எடுத்து அவசரத்துடனும் பதற்றத்துடனும், பறக்கும் மயிலை நோக்கி வீச, உளிபட்டு பின்னமடைந்த சிலை கீழே இறங்கி நின்றது. சிற்பி கண்களில் கண்ணீருடன் அழகிய சிலையைப் பின்னப் படுத்திவிட்டேனே எனக் கதற, திடீரென சிலையின் பின்னமடைந்த இடம் நேராகி நிற்க, மன்னனும், மக்களும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் விக்கித்துப் போய் சிற்பியைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

பின்னர் சிலையைச் சந்நிதானத்துக்கு எடுத்துப் போய் முறைப்படி அனைத்து வழிபாடுகளும் செய்து கும்பாபிஷேகமும் செய்வித்தான் முத்தரசன். மக்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து சில்பா சிற்பியையும் ஒரு தெய்வமே எனக் கொண்டாட ஆரம்பித்தனர். மன்னனை விடச் சிற்பியின் புகழும், அவருக்கு மரியாதையும் கூடியது. உலகிலேயே இம்மாதிரியான சிற்பி கிடையாது என ஏகோபித்த உணர்வோடு மக்களின் புகழ் சிற்பிக்குக் கிடைக்க மன்னன் மனம் புழுங்கியது. பொறாமையால் வெந்தான். "மன்னன் நான், ஆனால் புகழ் அவனுக்கு! போயும் போயும் ஓர் அற்ப சிற்பிக்கு என் முன்னேயே இத்தனை போற்றுதல்களும், புகழும் போய்ச் சேருகின்றனவே! இது என்ன அநியாயம்?" கொதித்துப் போனான் முத்தரசன். சேவகர்களை அருகே அழைத்துக் காதில் ஏதோ மெல்லச் சொல்ல சேவகர்களே பயத்தில் நடுங்கிப் போனார்கள். 

அவர்களுக்குத் தைரியம் சொன்னதோடு அல்லாமல் இது தன் கட்டளை எனவும் அரசன் என்ற முறையில் ஆணையிட்டான் முத்தரசன். அரசன் ஆணையை மீறும் தைரியம் இல்லாத சேவகர்கள் சில்பா சிற்பியையும் அழைத்துக் கொண்டு அவரின் சிற்ப மண்டபத்துக்குச் சென்றனர். அங்கே அவர் செய்து முடித்திருந்த, செய்து கொண்டிருந்த பல சிற்பங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் பின்னப்படுத்தி அலங்கோலம் செய்தனர். சிற்பி பதற்றத்தோடு அவர்களைத் தடுக்க வர, சேவகர்களில் சிலர் அவர் கை, கால்களை இறுகக் கட்டிக் கீழே தள்ள, இருவர் அவர் கண்களில் காய்ச்சி வைத்திருந்த கள்ளிப்பாலை ஊற்றினார்கள். துடிதுடித்தார் சிற்பி. கண்களைத் திறக்கவே முடியவில்லை.

"முருகா, ஆறுமுகா, உனக்குப் பதினெட்டு கண்கள் இருந்தும் எனக்கு இந்தக் கொடுமையா?" என்று கதறுகின்றார் சிற்பி. "உன்னைச் சிலையாய் வடித்தது தவிர, நான் செய்த தவறு என்ன? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?" எனப் புலம்பிய சிற்பி, அப்படியே மயங்கிப் போக அவருக்கு மீண்டும் குமாரன் தோன்றி, "சிற்பியே, மும்முறைகள் என்னை நீர் வடிக்கவேண்டும் எனச் சொன்னது மறந்து விட்டீரா?? எடும் உளியைக் கையில், மீண்டும் நீர் என்னைச் சிலையாக வடிக்கவேண்டும் என்பதை மறந்து, மயங்கிப் போனீரோ?" எனக் கேட்க, " கந்தனே, இது என்ன சோதனை? நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கண்ணிழந்து கிடக்கும் என்னையா உன் சிலையைச் செய்யச் சொல்கின்றாய்? இது என்னப்பா சோதனை?" என்று கதறுகின்றார். 

"உளியைக் கையில் எடும் சிற்பியே! நீர் கையில் எடுத்தால் தாமாய் வேலைகள் நடக்கும். உம் பேத்தி உமக்குத் துணை இருப்பாள்."என்று கந்தவேள் ஆணை இடுகின்றான். மறுநாள் முதல் சிற்பவேலை தொடங்குகின்றது. பேத்தியாக வந்த பெண்ணின் உதவியோடு சிற்பி சிலை வடிக்கத் தொடங்குகின்றார். அவயங்களை அந்தப் பெண் சிற்பியின் கைகளை எடுத்து வைத்து, இங்கே, இங்கே எனக் காட்டிக் கொடுக்க அவ்வாறே சிற்பியும் செதுக்க மெல்ல, மெல்ல கந்தன் உருவாகத் தொடங்கினான். ஆனால் இப்போது சிலை செய்வது முத்தரசன் காதுகளில் எட்டவே கூடாது என மிக மிக கவனமாய்ச் சிலையைச் செதுக்கி வந்தார் சில்பா சிற்பி. பார்த்தாலே தெரியும் வண்ணம் முருகனின் சிறப்பான, 

"பன்னிரு கண்ணும்,பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்" "ஈராறு செவியில் இலகு குண்டலமும்" 

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கையும், கீதம் பாடக் கிண்கிணி ஆட" 

"மைய நடம் செய்யும் மயில்வாகனனை' 

மிக அழகாகவும், அருமையாகவும், ஜீவ சக்தி ததும்பும் வண்ணமும் செதுக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. மெல்ல, மெல்ல சிலை வடிவெடுத்துக் கொண்டு வந்தது. அப்போது ஒரு வயதானவர் அங்கே சிற்ப மண்டபத்துக்குச் சிற்பியைத் தேடிக்கொண்டு வந்தார். சில்பா சிற்பியைப் பார்த்து சிக்கலிலும், எட்டுக்குடியிலும் அவர் செதுக்கி வடிவமைத்த சிற்பங்களைப் பார்த்து அதன் அழகிலும், உயிரோட்டத்திலும் மனதைப் பறி கொடுத்துவிட்டதாயும், தாம் சமீவனம்(தற்போது எண்கண், புராண காலத்தில் அஷ்டநேத்திரபுரம்) என்னும் ஊரில் இருந்து வருவதாயும், சில்பியைத் தம்மோடு சமீவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆர்வத்தோடு வந்திருப்பதாயும் தெரிவிக்கின்றார்."முத்தரசனுக்குப் பயந்து பயந்து வாழும் நீர் அங்கே வந்து என்னுடன் இருந்தால் எங்கள் ஊரினுள் இருக்கும் வன்னிமரக் காட்டில் இருந்த வண்ணம் உம் சிற்பப்பணியை நீர் தொடரலாம். உம்மை எவரும் தடுக்க மாட்டார்கள்." என்று அழைக்க, சிற்பி தயங்குகின்றார். ஆனால் பேத்தியாக வந்த பெண்ணோ, அவரைச் சமாதானம் செய்து இது தான் சிறந்தது எனச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்த முருகன் சிலையையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பெரியவரோடு சமீவனம் அழைத்துச் செல்கின்றாள். 


எண்கண் முருகன் கோயில், படத்துக்கு நன்றி விக்கிபீடியா

சமீவனத்தில் சிலையை எந்தத் தொந்திரவும் இல்லாமல் செதுக்க ஆரம்பித்த சிற்பி சில மாதங்களிலேயே பேரழகன் ஆன கந்தன் சிலையை, உயிரோட்டத்துடன் மீண்டும் செதுக்கி முடித்தார். மெல்ல, மெல்ல, சமீவனத்து மக்களுக்கும் இந்தச் செய்தி பரவ, ஊரார் அனைவரும் காட்டுக்குள் வந்து கந்தனைத் தரிசிக்கின்றனர். அப்போது......




18 comments:

  1. வணக்கம் சகோதரி

    எட்டிப்பிடி..எட்டிப்பிடி என்பது மருவி எட்டுக்குடியான கதை ஸ்வாரஸ்யமாக உள்ளது. மன்னனுக்கு மீண்டும் பொறாமையோ என நினைக்கும் போதே சிற்பிக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடப் போகிறது என பயமாக இருந்தது. அதேப் போல் அவர் கண்களை இழக்கச் செய்த கொடூரம்... நெஞ்சம் பதைக்கிறது. என்ன மன்னனவன்...! முருகன் அவனுக்கும் எந்த தண்டனையும் தராமல் கடைசியில் தவறை மட்டும் உணரச் செய்வான். ஏனெனில் கருணையே உருவான கந்தன் மன்னிக்கும் தன்மை நிறைந்தவன்.

    நல்ல இடத்தில் நிறுத்தி தொடரும் போட்டு விட்டீர்கள். இன்னமும் சிற்பிக்கு என்னென்ன சோதனைகள் வரப்போகிறதோ என கலக்கமாக உள்ளது. நாளையும் உங்கள் பதிவை தொடர ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. @ கமலா, மன்னனின் பொறாமை இன்னும் அதிகமாகப் போகும். ஆனாலும் கந்தன் காப்பாற்றுவான் சில்பா சில்பியை. ஆமாம், கொஞ்சமானும் விறுவிறுப்பு வர வேண்டாமா? அதான் தொடரும் போட்டேன்.

      Delete
  2. அப்போது...  ? 

    சிறந்த முறையில் கதையை நகர்த்திக் செல்கிறீர்கள்.  காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. எட்டுக் குடி பெயர்க்காரணம் சிற்பி மூன்று முறை சிலை வடிக்க வேண்டியது எல்லாம் சுவாரசியம். தொடர்கிறேன் கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தி/கீதா. நீங்கள் கொடுத்த கருத்துரை இதான் என நினைக்கிறேன். வேறே ஏதும் இல்லை.

      Delete
  4. எட்டுக் குடி பெயர்க்காரணம் சிற்பி மூன்று முறை சிலை வடிக்க வேண்டியது எல்லாம் சுவாரசியம். தொடர்கிறேன் கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெ, ரெண்டு தரம் வந்திருக்கு. நானும் கவனிக்கலை.

      Delete
    2. அக்கா நான் 7 8 தடவைக்கு மேல அழுத்தினேன் ..

      கூட ஒரு லைனும் சேர்த்து போட்டேன் அது வரலை போல..

      எட்டுக் குடி பெயர்க்காரணம் சிற்பி மூன்று முறை சிலை வடிக்க வேண்டியது எல்லாம் சுவாரசியம். தொடர்கிறேன் கீதாக்கா.

      கடைசில அப்போதுன்னு ...அப்ப அந்த அரசன் அங்கு வந்துவிடுகிறானோ?

      கீதா

      இவ்வளவுதான்...எப்படியோ வந்திருச்சே!!! நன்றி கீதாக்கா

      கீதா

      Delete
  5. கதை நன்று. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. நீங்க குற்றம் கண்டு பிடிச்சுச் சொல்லலைனா எப்படியோ இருக்கு! :))))

      Delete
  6. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத கந்தன், சிங்கார வேலன்
    கதை.
    சில்பா சில்பியின் தெய்வீக அனுபவம்.
    அருமையாக எடுத்துச் சொல்லும் அன்பு கீதாவின்
    எழுத்து.
    மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நன்றி.

      Delete
  7. தொடர்ந்து வாசித்து வருகிறேன். கேட்ட கதை, பார்த்த இடங்கள். இருந்தாலும் இவ்வாறான வடிவில் படிக்கும்போது இன்னும் மகிழ்வாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே. அநேகமாக அனைவருக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கிறது.

      Delete
  8. முருகா சரணம்..
    சரணம்.. சரனம்..

    ReplyDelete
  9. மிக அருமையாக கதை சொல்கிறீர்கள்.
    நன்றாக இருக்கிறது. கஷ்டங்களை கொடுத்து சில்பியின் பெருமையை உலகறிய செய்கிறார்.

    ReplyDelete