எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 25, 2020

திரு அரசு அவர்களுக்கு அஞ்சலி!

 அருமை சிநேகிதி திருமதி கோமதி அரசுவின் கணவர் திரு அரசு அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சி தரும் விஷயமாக ஆகிவிட்டது. நினைக்க நினைக்க மனசே ஆறலை. மென்மையான பேச்சு, சுபாவம் கொண்ட இருவரும் அருமையான தம்பதிகளாக இருந்தனர். அவங்க குடும்பவழக்கப்படி இருவருக்கும் நீண்ட ஆயுள் இருக்கும் என நினைத்திருந்தேன். இது ஓர் எதிர்பாராத அதிர்ச்சி! இந்த 2020 ஆம் ஆண்டே பல விஷயங்களிலும் மன வருத்தம் தந்து கொண்டே இருக்கும் ஒன்றாக ஆகி விட்டது. இனி வரும் மாதம் நல்லபடியாகப் போய் அனைவருக்கும் நன்மையை அளிக்கட்டும்.

திரு அரசு அவர்களின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

33 comments:

 1. என்ன நடந்தது என்பது தெரிய வில்லை.. Fb வழியாக செய்தி அறிந்ததில் இருந்து மனம் தாங்க வில்லை..

  சிவநெறியில் நின்றவர்.. செம்மை வாழ்வு வாழ்ந்து சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து விட்டார்...

  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

  ஸ்ரீ கோமதிஅரசு அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் இத்துயரினைத் தாங்கிக் கொள்ளவும் நாளடைவில் மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக...

  ReplyDelete
  Replies
  1. எதுவுமே நடக்கவில்லை என்பது தான் செய்தியே துரை. காலை எழுந்து அன்றாடக் கடமைகள் முடித்துப் புயல் நிலவரம் பார்க்க உட்கார்ந்தவருக்கு ஏதோ பிரச்னையாகத் தோன்ற மிளகு கடிக்கக் கொடுக்கும்படி கேட்டுவிட்டுப் பின்னர் கோமதியை அவர் வாயருகே வந்து மூச்சு விட ஊதும்படி சொல்லி இருக்கார்.அவ்வளவே நடந்திருக்கு! புண்ணியாத்மா!

   Delete
  2. தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் அனைத்தையும் தரிசனம் செய்த தம்பதியர்..

   உண்மையில் புண்ணிய ஆத்மா!..

   Delete
 2. மயிலாடு துறையில் திரு அரசுவை அவர்கள் வீட்டில் சந்தித்து இருக்கிறேன் எங்களுக்குதங்க ஓட்டல் எற்பாடு செய்வதும் எங்களை ரயிலடியிலிருந்து அவர்கள் வீட்டுக்கு கூட்டிபோவதும்கொவில்களுக்கு கூட்டிப்போகவும்மிக உதவி செய்திருக்கிறார் மென்மையானமனிதர் அவரை இழந்து இருக்கும் திருமதி கோமதி அரசுக்கும் ஆறுத்ச்லாகமட்டும் அல்லாது உண்மையாகவே ஆழ்ந்தஇரங்கலை தெரிவிக்கிறொம்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க ஐயா. என்ன செய்வது!

   Delete
 3. திருமதி கோமதி அரசுவின் கணவர் மறைந்த விபரத்தைப்படித்ததும் மனது மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்து போனது. திருமதி.கோமதி அரசு எந்த அளவு துக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போதே மனம் நொந்து போகிறது. அவ்ர்கள் கணவர் வரையும் ஓவியங்கள் நினைவுக்கு வருகிறது. மறைந்த திரு.அரசு அவர்களுக்கு மன அஞ்சலிகள்! ஆழ்ந்த இரங்கல்கள்!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், மிகவும் வருந்தத்தக்க செய்தி தான் மனோ சாமிநாதன். இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையை கோமதிக்கு அந்த ஈசன் கொடுக்க வேண்டும்.

   Delete
 4. இன்னிக்கு காலைதான் பின்னூட்டம் மூலம் விவரம் அறிந்தேன் .அதிர்ச்சியாக இருந்துச்சி .இந்த இக்கட்டான சூழலில் கோமதியக்காவுக்கு இறைவன்  துணையிருக்க ஆறுதலை தர பிரார்த்திக்கிறேன் .மறைந்த அரசு சார் அவர்கள் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் 

  ReplyDelete
  Replies
  1. Yes Angel. We all are with Gomathy and pray for her mental peace and speedy recovery from this shock.

   Delete
 5. காலையிலிருந்து எனக்கு இதே நினைவுதான் கீசா மேடம்.

  அவங்க அப்பா அம்மா மாதிரி நீண்ட ஆயுளோடு இருப்பாங்க, வேஷ்டி சட்டை, நெற்றி நிறைய விபூதி பூசிய அரசு சாரை அவர் வீட்டில் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ரெகுலரா நடையும், ஆக்டிவ் ஆகவும் இருக்கக்கூடியவர்.

  எப்படிப்பட்ட அதிர்ச்சியா இது கோமதி அரசு மேடத்துக்கு இருக்கும்னு புரிஞ்சிக்கறேன். சில நேரங்களில், பத்து பதினைந்து நாட்கள் உடம்பு சரியில்லாமல் இருந்து என்றெல்லாம் ப்ராக்ரஸ் இருந்தால், மனசு கொஞ்சம் பக்குவப்படும். இது ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கும்.

  இந்த இழப்பை எப்படித் தாங்கப் போகிறாரோ. இறைவன் அவருக்கு அந்த வல்லமையைக் கொடுக்கணும்.

  இணைய நண்பர்கள் நலம்விரும்பிகள் அனைவரும் இந்த துக்க சமயத்தில் அவருக்காக நிச்சயம் ப்ராத்திப்பாங்க.

  ReplyDelete
  Replies
  1. Thank You Nellai. Still I am trying to recover

   Delete
 6. செய்தியை படித்ததிலிருந்து மனசே ஆறலை. எனது ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 7. கீசாக்கா , அஞ்சுதான் எனக்குத் தகவல் சொல்லியிருந்தா, செய்தி கேட்ட நேரம் தொடங்கி என்னால ஸ்கூலில் இருக்க முடியவில்லை, கோமதி அக்காவின் முகம்தான் மனக்கண்ணில் வந்துகொண்டிருந்தது... வலையுலகில் நாம் கும்மி அடித்துப் பழகுவோரெல்லாம் நம் குடும்பத்தில் ஒருவராகவே இருப்பதனால மனம் பதைக்கிறது...

  கோமதி அக்கா எப்படித் தாங்கப்போகிறாவோ... தாங்கித்தானே ஆகோணும்...என்ன பண்ணுவது...

  சமீபத்தில் இலங்கைப்பிள்ளை பிக்பொஸ் இல் கலந்து கொண்ட லொஸ்லியாவின் தந்தை கனடாவில் மரணம் .. அதுவும் கார்ட் அட்டாக் எனக் கேட்டு.. மனம் கலங்கி, கடவுளே இந்த 2020 கடகடவென ஓடி முடிஞ்சு 21 கெதியா வரட்டும் என வேண்டினேன், ஆனா அதுக்குள் கோமதி அக்காவின் செய்தி.. என்ன சொல்வதென்றே புரியவில்லை எனக்கு... பிரார்த்திக்க மட்டும்தானே முடியும்.. பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில எல்லோ... நல்லவேளை இப்பொழுது போக்கு வரத்து ஓக்கேயாக இருக்கிறது... அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சிலர் வந்திருக்கின்றனர்.. இப்படி துக்க வீட்டுக்காக என.. இல்லை எனில் விசா கொடுக்கிறார்கள் இல்லை.

  ReplyDelete
 8. திருமதி கோமதி அவர்களின் கணவர் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைகின்றேன். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா

   Delete
 9. அனைவருக்கும் நன்றி. கோமதி அரசு அவர்கள் விரைவில் மனம் தேறி (முடியாத ஒன்று) மீண்டு வரப் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 10. நேற்று எ. பியில் செய்தி அறிந்ததும் மனது மிகவும் கலங்கி விட்டேன். வேலைகளை தொடர முடியாமல் பிரமை பிடித்த மாதிரி மனதுக்குள் இன்று வரை அவ்வளவு வருத்தம். நேற்று மதியம் உங்கள் பகிர்வை கண்டும், உடனே மன வருத்தத்தை பகிர முடியாமல், உங்கள் தளம் எனக்கு ஏனோ திறக்கவே முடியாது போனதும், ஒரு சோதனையான காலகட்டந்தான்.இரண்டொரு நாட்களாகவே இந்த நிலை தொடர்கிறது.

  சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நேர்ந்த இழப்பு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நான்கைந்து வருடங்களாக பதிவுலகில் அவருடன் பேசி பழகியதில் இது நீண்ட வருடங்களாக நீடித்த ஒரு உறவான உணர்வை தருகிறது. அவரின் அன்பான பேச்சும், பண்பான குணங்களும் கண்டு மிகவும் மகிழ்வும், ஆறுதலுமடைந்திருக்கிறேன். அவருக்கு இவ்வளவு பெரிய சோதனையை தந்த இறைவன் இதை தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்வோம்.

  திரு அரசு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.
  அவரை இழந்து வாடும், சகோதரிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் அவர்களது மனப்புண்களை விரைவில் ஆற்ற வேண்டும். வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஈடு செய்யமுடியாத இழப்பு கமலா. காலம் தான் அவர்களைத் தேற்ற வேண்டும்.

   Delete
 11. மனம் வருந்தும் செய்தி.....கோமதிம்மா அவர்களுக்கு ஆருதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... காலம்தான் அவர்களுக்கு மன ஆறுதலை தரும்.....


  ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நம் குடும்ப உறுப்பினரை இழந்து விட்டாற்போல் அனைவருக்குமே அதிர்ச்சியாகி விட்டது மதுரைத் தமிழரே. அன்னாரின் ஆத்மா நற்கதியைத் தான் அடைந்திருக்கும்.

   Delete
 12. இந்த வருடம் தனது கொடுமைகளை இதனுடனாவது நிறுத்திக் கொள்ளட்டும்.  சற்றும் எதிர்பாராத செய்தியாக இது தாக்கியபோது தாங்க முடியாமல் போனது.  அவர்கள் இருவரையும் மதுரையில் ஒருமுறை சந்தித்து இருக்கிறேன்.  

  கோமதி அக்கா என் கொரோனா காலத்திலும், என் மாமா மறைந்தபோதும், வெள்ளம் வரும் என்று இரண்டு நாட்கள் முன்பு பயமுறுத்தல் இருந்தபோதும் தொடர்ச்சியாக வாட்ஸாப்பில் வந்து விசாரித்து, ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தார்.  அவரை என்ன சொல்லித் தேற்றுவது..   அக்காவின் மனம் அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன், 

  ReplyDelete
  Replies
  1. நல்ல மனிதர்கள்! காலம் தான் மனப்புண்ணை ஆற்ற வேண்டும்.

   Delete
 13. கேள்விப்பட்டதிலிருந்து மனதிற்குள் வலி. நல்ல மனிதர். தில்லியிலும் தமிழகத்தில் அவர் வீட்டிற்கும் சென்று சந்தித்து இருக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதியைத் தர இறைவனை இறைஞ்சுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பிரார்த்திப்போம் வெங்கட்.

   Delete
 14. திடீரென்று இது எபபடி ஏற்பட்டது? மனது குழம்பியே போய்விட்டது. காலம்தான் ஆறுதலளிக்க முடியும். நாம் அதையே மனதிலிருத்த வேண்டும். சென்ற ஆகஸ்டில் இப்படி ஒரு நொடியில் எனது பெரிய மகன் போய்விட்டது ஞாபகம் வந்து மீளவே முடியவில்லை. அரசு அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. புத்திர சோகம் மிகக் கொடுமையானது அம்மா. அதுவும் இந்த வயதில். இந்த நிகழ்வைப் பற்றிக் கேள்விப் பட்டு நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். என்ன சொல்லித் தேற்றுவது இம்மாதிரிப் பெரிய இழப்பைச் சந்திப்பவர்களுக்கு! காலம் ஒன்றே மனதை ஆற்றும்.

   Delete
 15. இத்தனை நேரம் காரியங்கள் முடிந்திருக்க வேண்டும். யாராலும் இந்த அதிர்ச்சியிலிருந்து
  மீள்வது கடினம். நாம் எல்லோரும் துணை இருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வல்லி, இன்னமும் என் மனது மீண்டு வரவில்லை. திரும்பத் திரும்ப அதே நினைவுகள். நமக்கே இப்படி இருந்தால் கோமதிக்கு?

   Delete
 16. அறிந்ததும் ஒரே அதிர்ச்சி.குடும்பம் துயரில் இருந்து மீண்டு வர பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 17. எனக்கு அன்றிலிருந்தே மனது சரியா இல்லை கீதாக்கா. எதிர்பார்க்காத அதிர்ச்சி. இன்னமும் மனது மீண்டு வர மாட்டேங்குது. நமக்கே அப்படின்னா அக்காவுக்கு எப்படி இருக்கும் இல்லையா கீதாக்கா. மாமாவை நான் நேரில் சந்தித்ததே இல்லை ஆனாலும் அக்கா நிறைய பகிர்ந்துகொள்ளுவாங்க அப்படி மனதிற்கு நெருக்கமான நம் நட்பு ஸோ மனது ஆறமாட்டேங்குது. எனக்கு அக்காவிடம் பேசும் தைரியம் இல்லை. அவங்க மெசேஜ் அனுப்பிருக்காங்க தொடர்ந்து. இனிதான் அக்காவோடு பேச வேண்டும். என்ன சொல்லி அஆறுதல் சொல்ல இயலும்? சில விஷயங்களுக்கு அஆறுதல் வார்த்தைகள் இல்லை. காலம்தான் தேற்ற வேண்டும்.

  அக்கா அவங்க குடும்ப்டத்தார் எல்லாருக்காகவும் பிரார்த்தனைகள்.

  கீதா

  ReplyDelete
 18. எனக்குத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. அறிந்ததும் மனம் மிக மிக வேதனையுற்றது. அவரது பதிவுகள் வழியாகவே சகோதரியின் கணவர் பற்றி அறிந்து கொண்டதுண்டு. நன்றாக வரைவார், பேரனுடன் விளையாடுவது போன்றவை. இது போன்ற இழப்புகளை ஈடு செய்ய எதுவுமே இல்லை. வார்த்தைகள் சொல்லித் தேற்ற இயலுமோ? சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் மன தைரியத்தைக் கொடுக்க வேண்டும், அவரும் அவரது குடும்பத்தாரும் இந்த வேதனையிலிருந்து மீண்டு வந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

  துளசிதரன்

  ReplyDelete