எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 21, 2007

காந்தி பயந்தாரா போஸிடம்?

மணிப்ரகா்ஷின் சந்தேகங்களுக்குப் பதில் அப்புறமாய்க்கொடுக்கிறேன். ச்யாம் சொன்னதும் சத்யப்ரியனின் பதிவிலேயும் போய்ப் பார்த்தேன். வரு்ஷமும், போஸ் எத்தனாவது குழந்தை என்பதிலும் நான் எழுதியதும் அவர் எழுதி இருப்பதிலும் சற்றே வித்தியாசம் உள்ளது. நானும் கூகிளாண்டவர் தயவில் தான் எழுதி இருக்கிறேன் என்றாலும் இன்னும் நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சத்யப்ரியனும் கல்கி பத்திரிகையில் அடிக்கடி எழுது சத்யப்ரியனும் ஒருவரா தெரியலை. இப்போ நேற்று வந்த பின்னூட்டங்களுக்கும் பதில் இப்போ இல்லை. அப்புறமாய்த் தான். போஸ் வாழ்ந்த காலத்துக்குப் போவோமா?
****************************************************************************************

2-வது முறையாக போஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று நேற்று எழுதி இருந்தேன்.முதலில் 1938-ல் ஹரிபுராவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் காந்தியே போஸின் பெயரை முன்மொழிந்து, வழி மொழிந்து அவர் காங்கிரஸின் தலைவராக வர ஏற்பாடு செய்தார்.ஒரே வரு்ஷத்தில் மனம் மாறிய காந்தி 1939-ல் திரிபுரா காங்கிரஸில் நேருவையும், பட்டேலையும் புதிய தேர்தலில் நிற்கச் சொன்னார். ஆனால் இருவரும் மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை தன்னுடைய வேட்பாளராக நிறுத்டினார். ஒரு வேளை இளம் புயல் ஆன போஸ் காங்கிரஸில் துடிப்புடன் செயல்பட்டு வந்த காரணத்தால் அவரைத் தன் பால் ஈர்த்துக் கொள்வது சுலபம் என்று நினைத்தாரோ என்னவோ காந்தி அவர்கள். தெரியாது. ஏனெனில் ஏற்கெனவ ேபோஸ தேச ப்ந்து சி.ஆர். தாஸைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டிருந்ததையும் அவருடன்் சேர்ந்து பலமுறை சிறை சென்று ஒரு முறை நாடும் கடத்தப் பட்டதில் போஸின் பெயரும் சரி, அவரின் உழைப்பும் சரி மிக உயர்ந்த இடத்துக்கு வந்திருந்தது. அதுவும் ஐரோப்பாவிற்கு அவர் சென்ற சமயம் உயர் பதவிகள் வகிக்கும் முக்கியத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டு அவர்களுடன் நட்புறவும் கொண்டார். இதுவும் அவரின் சாமர்த்தியமான் அணுகு முறை என்பதால் போஸ் பெயர் நாடு முழுதும் பிரபலமாய் இருந்தது. காந்தி அதை விரும்பவில்லை. அைத் தனக்குச் சாதகமாய் உபயோகிக்க முயன்ற காந்தியால் போஸைத் தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்றுப் போனார் என்றே சொல்ல வேண்டும். (காந்தி ஆதரவாளர்கள் மன்னிக்க வேண்டும். காந்தியின் பேரைக் கெடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை. இத்தனை நாள் கழிச்சு என் ஒருத்தியால் அது முடியவும் முடியாது.)செய்வதறியாது திகைத்த காந்தி அடிகளிடம் ஏற்கெனவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். 1931-ல் அப்போது தூக்கில் இடப்பட்ட பகத்சிங், ராஜ்குரு, சக்தேவ் போன்றவர்களை காந்தி ஆதரித்து ஆங்கிலேய அரசிடம் பேசுவார் என போஸ் எதிர்பார்த்தார்.

ஆனால் காந்தி அந்தச் சம்பவத்தைப் பற்றி வாயே திறக்க வில்லை. போஸுக்கு அதில் ஏமாற்றம் தான் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவரளவில் அவர் தான் தலைவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் முதன் முதல் காந்தியை, "மகாத்மா' என்றதும் போஸ் தான். 1939-ல் திரிபுராவில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களால் போஸின் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அவரை நீக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப் பட்டது. அந்தக் கூட்டத்துக் காந்தி போகவில்லை. போகாமல் நிராகரித்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை நிராகரிக்கவில்லை. போஸ் இடைவிடாமல் காந்தியை அணுகி மூத்தவர்களின் இந்தக் கசப்பான அணுகுமுறையை மாற்ற வேண்டினார். ஆனால் காந்தி செவி கொடுக்க வில்லை. மெளனம் சாதித்தார். மூத்த தலைவர்களுக்கோ என்றால் போஸின் இந்தப் பெயர், புகழை மங்கச் செய்து அவரின் அரசியல் வாழ்வே முடிந்து விடும் இத்தோடு என்ற எண்ணம். காந்திக்கும் உள்ளூர அந்த எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ? அவரும் பேசாமலே இருந்தார். ஏற்கெனவே பட்டாபி சீதாராமையாவின் தோல்வியால் தனக்கு ஏற்பட்ட சொந்தத் தோல்வி என நினைத்த காந்தி போஸ் காங்கிரஸை விட்டு வெளியே செல்வதையே விரும்பினார். அதற்காக காந்தி எல்லாவிதமான தந்திரங்களும் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

காந்தி செய்தது சரியா? தப்பா? தெரியாது. போஸைக் கண்டு பயந்தாரா என்றும் தெரியாது. காந்தி ஆதரவாளர்களுக்கு இதை ஒத்துக் கொள்ள முடியாது. காந்தியை விட போஸ் அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லை. அவர் சிறிய அளவில் தான் தெரிந்தவர், காந்தி அப்படி இல்லை எனச் சொல்வார்கள். அப்படி என்றால் காந்தி ஏன் போஸ் தலைமை வகிப்பதில் அசெளகரியம் அடைய வேண்டும்? அவருக்கு என்ன தொந்திரவு போஸால் ஏற்பட்டது? போஸ் தலைமை வகிப்பதை ஏன் காந்தி விரும்பவில்லை? காந்தியை ஆலோசிக்காமல் எதுவும் போஸ் தன்னிச்சையாகச் செய்தது இல்லை. வேகம் தேவை அவருக்கு. அதற்குக் காந்தியுடன் வாதாடுவார். காந்தியின் அஹிம்சைக் கொள்கையினால் சுதந்திரம் தாமதப் படும் என்பது அவர் கருத்து. ஆனால் காந்தியோ என்றால் ஆங்கிலேய அரசை விட போஸின் தலைமையையும் அவர் புகழையும் கண்டு அதிகம் பயந்தாரோ என்று சொல்லும்படி அவர் நடவடிக்கை இருந்தது அந்தச் சமயத்தில். இன்றளவும் வங்காளியருக்குக் காந்தி திரிபுரா காங்கிரஸில் போஸுக்குச் செய்த அநியாயத்தை மறக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை போஸுக்குப் பின் தான் மகாத்மா.
(தொடரும்)

நன்றி:கூகிளாண்டவர்>

16 comments:

  1. இன்னைக்கும் நான் தான் பர்ஸ்ட்டா :-)

    ReplyDelete
  2. இதுக்கும் வருகைப் பதிவு.. மொத்தமா ரெண்டு பதிவையும் படிச்சிட்டு வர்றேங்க மேடம்

    ReplyDelete
  3. //ஒரே வரு்ஷத்தில் மனம் மாறிய காந்தி //

    மனம் மாறும் அளவுக்கு போஸின் வளர்ச்சி இருந்தது. அசுர வளர்ச்சி, ஆளுமை தன்மை, நிர்வாக தன்மை, அனல் பறக்கும் பேச்சாற்றல், வேகம், விவேகம் அனைத்தும் அடங்கிய புயலாக இருந்தார் போஸ்.

    //காந்தி பயந்தாரா போஸிடம்?"//

    ரொம்பவே.... இன்னும் சொல்ல போனால் பொறாமைப்பட்டார் என்றே சொல்லாம்.

    ReplyDelete
  4. //காந்தி ஆதரவாளர்கள் மன்னிக்க வேண்டும். காந்தியின் பேரைக் கெடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை. இத்தனை நாள் கழிச்சு என் ஒருத்தியால் அது முடியவும் முடியாது.//

    இதுல மன்னிக்க என்ன இருக்கு, உண்மை என்று ஒன்று இருக்குல, அதை மறைக்க பலர் முயன்றாலும் அதை அனைவரும் நம்பவது இல்லை. நீங்க சொல்வது அனைத்தும் சரித்திர உண்மை.

    //1931-ல் அப்போது தூக்கில் இடப்பட்ட பகத்சிங், ராஜ்குரு, சக்தேவ் போன்றவர்களை காந்தி ஆதரித்து ஆங்கிலேய அரசிடம் பேசுவார் என போஸ் எதிர்பார்த்தார்//

    அது என்னமோ தெரியலங்க, காந்தி இந்த விசயத்தில் மட்டும் இல்ல இது போன்ற பல விசயங்களில் ரொம்பவே மவுனம் காத்து விட்டார். ஒரு மகாத்மா என்று அழைப்படுவர் இப்படி நடந்து கொண்டதை பல சமய்த்தில் ஜீரணிக்க முடியவில்லை. இதை சொன்னால் தேச விராதி போல் பாக்குறாங்க, சொல்லுறாங்க என்னத்த சொல்ல...

    ReplyDelete
  5. //போஸுக்கு அதில் ஏமாற்றம் தான் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. //

    இதில் தாங்க போஸின் பெருதன்மை இருக்கு, ஒரு இடத்தில் கூட காந்தியை அவர் குறைத்து கூறியதில்லை. வெகு சில சமயங்களில் மட்டும் வருத்தப்பட்ட பேசி உள்ளார்.

    //இன்னும் சொல்லப் போனால் முதன் முதல் காந்தியை, "மகாத்மா' என்றதும் போஸ் தான்//

    இது எனக்கு சரியாக தெரியவில்லை. நம் நாட்டின் தேச தந்தை காந்தி என்று முதன் முதலில் முழங்கியவர் போஸ் தான்.

    ReplyDelete
  6. //காந்தி ஆதரவாளர்களுக்கு இதை ஒத்துக் கொள்ள முடியாது. காந்தியை விட போஸ் அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லை. அவர் சிறிய அளவில் தான் தெரிந்தவர், காந்தி அப்படி இல்லை எனச் சொல்வார்கள்.//

    இது முற்றிலும் மறுப்பதற்கு இல்லை. முதல் காரணம் போஸ் என்றுமே காந்தியை எதிர்த்து தான் தனியாக பெரிய ஆளாக வேண்டும் என்று எண்ணியது இல்லை. காந்தியே கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற காரணத்தால் தானாக தான் காங்கிரஸ் விட்டு வெளியேறினார்.

    ReplyDelete
  7. எனக்கும் போசுக்குப் பின்னர்தான் காந்தி....

    ReplyDelete
  8. ஆகா..சூடு பிடிச்சு இருக்கு..


    அப்புறம் எல்லாருமே இங்க நம்பள மாதிரிதானா..

    போஸ்,அப்புறம் காந்தி..

    எனக்கு என்னமோ, சின்னவயசுல இருந்தே காந்தி அவர்களை அவ்வளாக பிடிக்காது...

    ReplyDelete
  9. //
    இந்த சத்யப்ரியனும் கல்கி பத்திரிகையில் அடிக்கடி எழுது சத்யப்ரியனும் ஒருவரா தெரியலை.
    //
    இல்லை மேடம். நான் எந்த பத்திரிக்கையிலும் எழுதவில்லை. நானும் அவரும் ஒன்றில்லை.

    //
    சத்யப்ரியனின் பதிவிலேயும் போய்ப் பார்த்தேன். வரு்ஷமும், போஸ் எத்தனாவது குழந்தை என்பதிலும் நான் எழுதியதும் அவர் எழுதி இருப்பதிலும் சற்றே வித்தியாசம் உள்ளது.
    //
    நான் எந்த தளங்களில் இருந்து சேகரித்து எழுதினேன் என்பதை பதிவின் முடிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். தவரு ஏதேனும் இருந்தால் சுட்டிகளுடன் தெரியப்படுத்தவும். திருத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  10. அருமையாகப் பொறுமையாக எழுதுகிறீர்கள் கீதா.
    எத்தனையோ விஷயங்களை விவரமாக எழுதிவருகிறீர்கள்.

    அனைத்துக்கும் நன்றி.
    சுவாரஸ்யம் குன்றாமல் எழுதுவதற்கும் ஒரு பிடிப்பு வேண்டும் இல்லையா.
    அது உங்களிடம் நிறையவே இருக்கிறது.

    ReplyDelete
  11. சுவாரஸ்யமாக இருக்கிறது....தகவல்களும் புதிது. நன்றி கீதாம்மா...

    ReplyDelete
  12. //காந்தி அதை விரும்பவில்லை. அைத் தனக்குச் சாதகமாய் உபயோகிக்க முயன்ற காந்தியால் போஸைத் தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்றுப் போனார் என்றே சொல்ல வேண்டும்.//

    காந்தியில் இருந்து கலைஞர் வரை அரசியலில் எல்லோரும் ஒன்றே

    ReplyDelete
  13. /சொல்லப் போனால் முதன் முதல் காந்தியை, "மகாத்மா' என்றதும் போஸ் தான்//

    அட! புது விஷயம்!

    ReplyDelete
  14. /காந்தி செய்தது சரியா? தப்பா? தெரியாது. போஸைக் கண்டு பயந்தாரா என்றும் தெரியாது. காந்தி ஆதரவாளர்களுக்கு இதை ஒத்துக் கொள்ள முடியாது. //

    ஆனால் உண்மையில் காந்தியின் வியூகம் என்ன? அவர் ஏன் இப்படி யெல்லாம் செய்தார் என்று எங்காவது இருக்கிறதா மேடம்..

    ReplyDelete
  15. தலைவி விறு விறுப்பாக போய் கொண்டு இருக்கிறது ;-))

    பல விஷயங்களை படிக்கும் போது வியப்பாக உள்ளது.

    ReplyDelete