எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 30, 2007

உலக நாடுகள் சொல்வது என்ன?

முதலில் நேதாஜியுடன் மிக மிக நெருக்கமாய் அவரின் கடைசி நாட்களில் இருந்த ஜப்பான் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம். நேதாஜி மறைந்ததே சரியாகத் தெரியாதபோது எந்தத் தேதி எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி அதிலேயே குழப்பம். ஆனால் இந்திய தேசீய ராணுவத்தைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி அவரைக் கடைசியாக ர்ஷ்யாவின் ஒரு பகுதிக்குச் செல்லும் விமானத்தில் ஏரும்போது அவரைச் சைகோனில் பார்த்தவர்கள் அவரின் அந்தரங்க மெய்க்காப்பாளர்கள் ஆன தேப்நாத் தாஸும், பிரித்தம் சிங்கும் ஆவர். ஆகஸ்ட் 17 காலையில் அவருடன் உடன் சென்றவர்களில் ஹபிபுர் ரஹ்மானும், லெப்டினன்ட் ஜெனரல் சுநாமாசா ்ஷிதேய் என்ற ராணுவ அதிகாரியும் ஒருவர். ஆனால் விமானம் செல்லும் வழியில் நொறுங்கி விபத்துக்குள்ளானதாய்ச் சொல்லப் பட்டது ஆகஸ்ட் 18 அன்று.

ஜப்பான் அரசு அதிகார பூர்வச் செய்திகளோ, அல்லது ஜப்பானின் ராணுவத் தலைமையகமோ இதைக் கடைசி வரை உறுதி செய்யவே இல்லை. பின் முதலில் யார் சொன்னது? ஜப்பானின் செய்தி ஏஜென்சி ஒன்று இந்தச் செய்தியைத் திரு எஸ்.ஏ.ஐயருக்குக் கொடுத்தது. ஐயர் இதை முதலில் நம்பவே இல்லை. ஏனெனில் ஐயருக்கு இந்தச் செய்தியை அந்த ஏஜென்சி 23 ஆகஸ்டில் கொடுத்து போஸ் இறந்து விட்டார் எனத் தெரிவிக்கும்படிச் சொன்னது. ஆனால் 20 ஆகஸ்டிலேயே ஜப்பானிய ராணுவத்தின் முக்கிய உளவு அதிகாரிகள் இருவர் ஐயரிடம் இம்மாதிரிச் செய்தி வந்திருப்பதாயும் அதை வந்தால் நம்பவேண்டாம் எனவும் அவரிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். ஆகவே அவர் உடனேயெ தாய்பேய் போய் விபத்து நடந்ததாய்ச் சொல்லப் படும் இடத்தையும், ஹபிபுர் ரஹ்மானையும் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேற்றப் படவில்லை. குறைந்த பட்சம் இறந்த தலைவரின் உடலையாவது பார்க்கவேண்டும் என்ற விருப்பமும் நிராகரிக்கப் பட்டது. இறந்ததாய் இந்திய தேசீய ராணுவ வீரர்களிடம் அறிவிக்கும்படி வற்புறுத்தப் பட்டார்.

போஸின் மெய்க்காப்பாளர்கள் இருவருக்கும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என ஜப்பானிய உளவுப்படைத் தகவலும், இந்திய தேசீய ராணுவத்தின் உளவுப்படைத் தகவலும் வந்திருந்தது. ஜப்பானிய அரசும் உறுதி செய்ய மிகவும் தாமதித்து இந்த வி்ஷயத்தில் அதிக அலட்சியம் காட்டி வந்தது. பின்னர் வந்த ஐம்பதுகளில் நியமிக்கப் பட்ட கமிஷன்களுக்கும் சரி, சமீபத்தில் நியமிக்கப் பட்ட முகர்ஜி கமிஷனுக்கும் சரி, ஜப்பானிய அரசு போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. போஸ் இறந்ததாகச் சொல்லப் படுவது ஆதாரமற்ற செய்தி என முகர்ஜி கமிஷனால் தெளிவு படுத்தப் பட்டபோது அதை மறுக்கவும் இல்லை. போஸ் சென்ற விமானம் சென்றது என்னமோ ர்ஷிய எல்லைக்குட்பட்ட ஒரு பகுதிக்கு. அங்கே தான் போகவேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டிய போஸும், விமான ஓட்டிகளும், அல்லது லெஃப்டினன்ட் ஜெனரல் ்ஷிதேயும் மட்்டும் இறந்திருக்கிறார்கள். அவர்கள் உடனேயே 18 ஆகஸ்ட் அன்றே எரியூட்டவும் பட்டிருக்கிறார்கள். இவருடன் சென்ற மற்றவர்கள் தங்கள் கதையைச் சொல்ல உயிருடன் இருக்கும்போது இவர்கள் மட்டும் இறந்ததாய்ச் சொல்லப் படுவது விசித்திரமாய்த் தான் இருக்கிறது. இம்மாதிரியான அபூர்வ நிகழ்ச்சியை யாரும் கண்டிருக்கிறீர்களா? புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் வருவதை உண்மை என்பது எவ்வளவு கொடூரமான ஒரு விஷயம்?

இனி, ஆங்கில அரசு என்ன சொன்னது என்பதும் இந்திய அரசு என்ன சொன்னது என்பதும் அமெரிக்க அரசு சொன்னதும், ர்ஷ்யாவின் பங்கு என்ன என்பதும் வரும் நாட்களில்.

8 comments:

  1. :-)

    உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ஒரு இந்தியரை இரண்டு நாட்கள் போராடி குணப்படுத்த இயலாமல் அவர் இறந்து விட்டதாகவும், அவர் தான் நேதாஜி என்றும் கூட ஒரு கருத்து நிலவுகிறது.

    மேலும் 1952 ஆம் ஆண்டு நேதாஜியை என்ன செய்வது என்று ரஷ்ய தலைவர்கள் பேசிக் கொண்டது வெளியானதாகவும் ஒரு தகவல் உண்டு.

    ஒரு வேளை காங்கிரஸ் தவிர்த்த வேறு ஒரு அரசு வந்திருந்தால் நேதாஜி பற்றிய பல உண்மைகள் வெளி வரலாம்.

    ReplyDelete
  2. I am sorry. I meant this smiley :-( and not this one :-).

    ReplyDelete
  3. நேதாஜியின் இறப்பு குறித்த மர்மம் ...இன்னும் தொடர்கிறதே..
    ஹூம்.

    போராட்டக்காராக இருந்தாலும் இந்தியர்கள் அனைவராலும் போற்றப்படும் அந்த தலைவனுக்கு ஒரு சல்யூட் !

    ReplyDelete
  4. இல்லை சத்தியபிரியன்! என் அப்பா அடிக்கடி சொல்லுவாங்க, "நேதாஜி வல்லளார் மாதிரி மறைஞ்சுட்டார் யாராலும் கண்டு பிடிக்க முடியாது அந்த ரகசியத்தை"ன்னு. அது எனக்கு ஊறிப்போச்சு!இதுவும் கிட்டதட்ட சிதம்பர ரகசியம் மாதிரி ஆயிடுச்சு!!!

    ReplyDelete
  5. //ஒரு வேளை காங்கிரஸ் தவிர்த்த வேறு ஒரு அரசு வந்திருந்தால் நேதாஜி பற்றிய பல உண்மைகள் வெளி வரலாம்//

    வந்திருக்கலமோ...

    மேடம், நேதாஜியின் போது வாழ்க்கை மட்டும்தானா, அவரது பெர்சனல் லைஃப் எல்லாம் எழுதவில்லை?

    ReplyDelete
  6. Read all the posts. waiting for the next part. :)

    ReplyDelete
  7. varren varren vitta padhivai ellam padichittu thiruppi varren :-)

    ReplyDelete
  8. idhai paarthingla? http://www.missionnetaji.org/index_new.php

    ReplyDelete