எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 01, 2015

நீலத் திரைக்கடல் ஓரத்திலே !





பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சிறிது தூரத்தில் தான் தொட்டிப் பாலம் இருந்திருக்கிறது. ஆனால் அதை அந்த  ஓட்டுநர் எங்களுக்குத் தெரிவிக்கவே இல்லை. திருவட்டாறிலிருந்தும் 3 கிலோ மீட்டருக்குள் தான் இருந்திருக்கிறது. ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து வெளியே வரும்போதே இரண்டு மணிக்கு மேல் ஆனதால் நேரே கன்யாகுமரிக்குக் கூட்டிச் சென்று விட்டார். போகும் வழியிலேயே ஒரு ஓட்டலில் ரங்க்ஸும், ஓட்டுநரும் சாப்பாடு சாப்பிட்டார்கள் . நான் சப்பாத்தியும் லஸ்ஸியும் வாங்கிக் கொண்டேன். பின்னர் கன்யாகுமரிக்கு மூன்றரை மணிக்கே போய்விட்டதால் அங்கே ரயில் நிலையத்தில் போய் எங்கள் வெள்ளிக்கிழமைக்கான பயணச்சீட்டை ரத்து செய்து விட்டு அங்கேயே நாலு மணிக்குக் கோயில் திறக்கும் வரை உட்கார்ந்திருந்தோம். பின்னர் கோயில் திறக்கும் நேரத்துக்கு மெல்ல மெல்ல கடற்கரை அருகே கொண்டு விட்டார் ஒட்டுநர். 

அந்த நீண்ட கடற்கரையில் நடந்து கொண்டே இன்னொரு முனைக்குச் செல்ல முயன்றோம். நடுவில் நிறையக் கடைகள். பலவற்றில் ஏலம், முந்திரி, கிராம்பு, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தனர். ஓட்டுநரைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர்களிடம் பெசி வீட்டுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம். பின்னர் கடற்கரை நீளம் அதிகமாக இருந்தபடியால் ஓட்டுநர் எங்களைக் கோயில் வாசலில் இறக்கிவிடுவதாகச் சொல்லி மீண்டும் அழைத்துச் சென்றார்.  மேலும் அங்கே தான் முக்கடலும் சங்கமிக்கும் முனை உள்ளது. இது கடற்கரையில் நடக்கையில் இருவிதமான கோணங்களில் இருந்து எடுத்த படங்கள்.


நாங்கள் செல்லுவதற்கு முதல்நாள் வரை நிறுத்தி வைத்திருந்த படகு சவாரியை அன்று தான் ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் போவதற்கு இரு நாட்கள் முன் வரை மழை பெய்து வெள்ளம் வந்திருந்தபடியால் படகுப் பயணம் ரத்தாகி இருந்தது. ஒரே கூட்டம். அந்தக் கூட்டத்தில் படகுப்பயணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே நேரே கோயிலுக்கே செல்வோம் எனக் கோயிலுக்கே சென்றோம். கூட்டம் ஓரளவுக்கு இருந்தாலும் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் கோயிலுக்குள்ளே போனோம்.

15 comments:

  1. அலைகள் ஆர்ப்பரித்திருக்குமே கீதா.. அழகான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒண்ணும் ஜாஸ்தியாத் தெரியலை! வங்காளவிரிகுடாப்பக்கம் கொஞ்சம் அலைகள் தென்பட்டன. இந்து மஹாசமுத்திரமும், அரபிக்கடல் பகுதியும் மேல்பார்வைக்கு அமைதியாகக் காட்சி அளித்தது. மூன்றும் ஒவ்வொரு நிறம். நேரில் பார்த்து அனுபவிக்கணும்.

      Delete
  2. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறேன். விவேகானந்தர் பாறையும் சென்று வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் நாங்களும் 89 ஆம் வருடம் போனோம். அப்போ விவேகாநந்தர் பாறையெல்லாம் போனோம்.

      Delete
  3. Replies
    1. சுட்டிக்கு நன்றி, பார்க்கிறேன்.

      Delete
  4. நான் கன்னியாகுமரி போய் வந்து 30 வருடங்களாகி விட்டது எவ்வளவு மாற்றங்களோ....
    எனது கட்டுரைப்போட்டி காண வருக சகோ..

    ReplyDelete
    Replies
    1. உண்மை கில்லர்ஜி, நிறையவே மாற்றங்கள்! :(

      Delete
  5. கன்னியாகுமரியின் அழகே தனி. நன்றாக ஊர் சுத்தியுள்ளீர்கள். ஹாஹா... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பழைய விச்சுவா? இது புதுசா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. இந்த பதிவு படிக்காம எப்படியோ மிஸ் ஆகிட்டுது! இன்னிக்கு பார்த்தாச்சு! நன்றி!

    ReplyDelete
  7. அட எங்க ஊரு! ம்ம்ம் பல வருடங்கள் ஆயிற்று சென்று...இப்போது நீங்கள் பதிந்ததும். செல்லும் ஆசை வந்துவிட்டது...ம்ம்ம்

    கீதா

    ReplyDelete