எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 03, 2016

நடுவில் கொஞ்சம் மொக்கை! :)

சீரியஸா எழுதிட்டு இருக்கேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிப் புரிஞ்சுட்டு இருக்காங்க! அதைப் படிக்கையிலேயே சிரிப்புத் தான் வருகுதையா! சேம் சைட் கோல் அப்படினு பானுமதி வெங்கடேஸ்வரன் சொல்றாங்க! நடப்பதைத் தான் சொல்லி இருக்கேன். அதெல்லாம் தனியா வைச்சுக்கலாம். இப்போ மொக்கைக் கச்சேரி ஆரம்பம்.

ஒரு வாரம் முன்னர் ஜெயா தொலைக்காட்சி(?) ஏதோ ஒண்ணு! அதிலே நம்ம ரங்க்ஸ் சமையல் நிகழ்ச்சி பார்த்துட்டு இருந்தார். அந்த அம்மா சிறு தானியங்களை வைச்சுச் சமைக்கிறதைக் குறித்து அதிகம் சொல்வாங்க. அன்னிக்கு பார்லி அரிசி போட்டு தோசை பண்ணறதைக் குறித்துச் சொன்னாங்களா? உடனே நம்ம வீட்டிலேயும் பார்லி தோசை பண்ணுனு ஒரே ஆவலோடு சொல்லிட்டிருந்தாரா? வீட்டிலே பார்லியே இல்லை. எல்லாத்தையும் சிறுதானியக் கஞ்சி மாவில் சேர்த்துட்டேன். நேத்திக்கு மருத்தவப் பரிசோதனைக்குப் போனப்போ வாங்கிட்டு வந்து நனைச்சு வைச்சேன். இன்னிக்குக் காலை ஆகாரம் அந்த தோசை தான்! வழக்கம் போல் தக்காளிச் சட்னியோடு!

ஒரு கிண்ணம் பார்லி களைந்து ஊற வைச்சேன். பார்லி குறைந்த்து ஆறு மணி நேரம் ஊறணும்னு சொன்னாங்க.
ஒரு கிண்ணம் இட்லிப் புழுங்கல் அரிசி
ஒரு கிண்ணம் பச்சரிசி
முக்கால் கிண்ணம் அல்லது அரைக்கிண்ணம் (உளுந்தின் தரத்துக்கு ஏற்றாற்போல்) உளுந்து
வெந்தயம் இரண்டு டீஸ்பூன்.

பார்லியைக் களைந்து கழுவி தனியாக ஊற வைக்கவும். மற்ற சாமான்களை ஒன்றாகப் போட்டுக் கலந்து களைந்து ஊற வைக்கவும். பார்லி மிக்சியில் அரைபடுமானு சந்தேகமா இருந்ததாலே கிரைண்டரிலேயே அரைச்சேன். நேற்று மாலை சுமார் ஐந்து மணி அளவில்  தோசைக்கு அரைக்கிறாப்போல் அரைச்சு உப்புப் போட்டுக் கலந்து வைத்தேன். காலையில் மாவைப் பார்த்தேன். அதிகமாப் பொங்கவும் இல்லை; பொங்காமலும் இல்லை! அளவாகப் பொங்கி இருந்தது. பின்னர் தக்காளிச் சட்னி வழக்கம் போல் அரைத்துவிட்டு தோசைகளை வார்த்தேன்.

அரைத்த மாவு தோசை வார்க்கும்போது எடுத்த படம்! ஹிஹிஹி, வழக்கம்போல் மறந்துட்டு அப்புறமாத் தான் படம் எடுத்தேன். :) 

தோசை திருப்பிப் போட்டு வேகிறது. தம்பி வாசுதேவன் திருமூர்த்தி! தோசை நடுவிலே அது தீசல் இல்லை. நான் வார்க்கையில் பார்த்தால் நல்ல நிறமாகத் தான் இருக்கு. படம் எடுத்தப்புறமாப் பார்த்தால் கொஞ்சம் கறுப்பாகத் தெரியுது. இரண்டாம் முறையும் எடுத்துப் பார்த்துட்டேன். தோசை தீயலை. ருசியாகவே இருந்தது. நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. ஆனால் நான் கொஞ்சம் சந்தேகத்தோடு இருந்ததால் ஜாஸ்தி அரைக்கலை. :)


இதான் கடைசி தோசை! 

25 comments:

 1. ஆமாமா! தோசக்கல்லே வெள்ளைதான். படத்துல அது கருப்பா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது இரும்பு தோசைக்கல்! நான் ஸ்டிக் எல்லாம் இல்லை! வார்ப்பிரும்பு தோசைக்கல்லும் இல்லை. வார்ப்பிரும்பு தோசைக்கல் தான் தேய்க்கத் தேய்க்க வெள்ளையாக வரும்! :) தோசை உங்களுக்குக் கிடையாது போங்க! :)

   Delete
 2. பார்லிக்கே வழவழப்பு அதிகம். உளுந்து அதிகம் தேவைப்படாது. நான் நினைத்தேன் பச்சரிசியும்,உளுந்தும் சேர்த்துச் செய்யலாமென்று. நீங்கள் எல்லாம் சேர்த்தே செய்து ருசியை அனுப்பி விட்டீர்கள். இன்னும் தவலைதோசை,ஊத்தப்பம் என்று பல அவதாரங்களையும் இஷ்டத்திற்குச் செய்ய நல்ல அஸ்திவாரம். ருசியாக இருக்கு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. இந்த பார்லி அவ்வளவு வழவழப்பாக இல்லை அம்மா! அரைச்சதும் கொஞ்சம் கொரகொரப்பாகவே இருந்தது. அவ்வளவாக சுத்தம் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி போன்ற பார்லி! :) தோசை நன்றாகவே இருந்தது.

   Delete
 3. செய்து விடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. போட்டோவை காண்பித்து ஏமாற்றி விடுகின்றீர்கள்

   Delete
  2. செய்துட்டுச் சொல்லுங்க கோமதி அரசு!

   Delete
  3. ஹாஹா கில்லர்ஜி! ஒருமுறை வீட்டுக்கு வாங்க!

   Delete
  4. 'நான் வருவதற்காவது அதிக வாய்ப்பு இருக்கிறது. என்னை வரச் சொல்லவேயில்லையே.. இவ்வளவு செய்முறை எழுதுறவங்க, எப்படிச் செய்யறாங்க என்று சாப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா?

   Delete
 4. பார்லி தோசையில் என்ன விசேஷம்

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசமான சுவை! அதோடு உடலுக்கு நல்லது! நாங்க இப்போச் சில மாதங்களாக சிறு தானியங்கள், பார்லி, ஜவ்வரிசி என்றே அதிகம் பயன்படுத்துகிறோம். :)

   Delete
 5. பார்க்க நல்லா இருக்கு.... சாப்பிட உங்க வீட்டுக்கு தான் வரணும்....

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, வாங்க, வாங்க மாவை நிறைய அரைச்சு வைச்சுட்டுத் தலையில் கட்டிட மாட்டோமா! விடுவோமா! :)

   Delete
 6. குறித்துக் கொண்டாயிற்று. 1/2 கிண்ணம் உளுந்து போதும் என்று நினைக்கின்றேன்...ஏனென்றால் வெந்தயமும் கொஞ்சம் வழவழா....பார்லியும் வழவழா கொஞ்சம்...எனவே...

  குறிப்பிற்கு மிக்க நன்றி கீதாக்கா.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதான் உளுந்தின் தரம் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். பலரும் ரேஷனில் வாங்கும் உளுந்தைப் போடுகின்றனர். என் அண்ணா வீட்டில் ரேஷன் உளுந்து தான். அது அவ்வளவு தரமாக இருப்பதில்லை. அதைப் போட்டால் முக்கால் கிண்ணம் உளுந்து கூடப் போதுமோ போதாதோ என்று தான் தோன்றும்.

   Delete
 7. கல்தோசை! ஆமாம், பார்லி போட்டுச் செய்தால், அதுவும் இரவில் சாப்பிட்டால் இரவில் தூங்க விடாதே! தோசை அழகாக இருக்கிறது. என்ன, 'தளிர்' சுரேஷ் தான் கரண்டி போட்டு படம் எடுக்கக் கூடாது என்பார்! தக்காளி சட்னி படம் எங்கே? வெறும் தோசையை மட்டும்தான் நாங்கள் பார்க்கணுமா?!!

  ReplyDelete
  Replies
  1. கல் தோசை எல்லாம் இல்லை! அது வேறே! இது பார்லியும், அரிசி வகைகளும் உளுந்தோடு சேர்த்து ஊற வைத்து அரைச்சுப் புளிக்க விட்டுச் செய்தது. நேற்றுக் காலையிலே தான் சாப்பிட்டோம். இரவில் சாப்பிடலை! என்றாலும் வயிற்றில் முக்கியமாகச் சிறு நீரகத்துக்கு நல்லதாச்சே!

   Delete
  2. சுவாமி நிவேதனத்துக்கு நிவேதன உணவோடு வைக்கும் பாத்திரத்தில் தான் கரண்டி போடக் கூடாது என்று தளிர் சுரேஷ் சொன்னார். இன்னும் சிலரும் சொன்னார்கள். இது தோசை வார்க்கும்போது மாவுப் பாத்திரத்தில் கரண்டியைப் போட்டு மாவை எடுக்காமல் எப்பூடி?

   Delete
  3. தக்காளி சட்னி படம் ஏற்கெனவே நிறையப் போட்டாச்சு! :)

   Delete
  4. நல்ல கதை. ஏற்கெனவே பலமுறை செய்தாச்சு என்று வெறும் தோசையைச் சாப்பிட முடியுமா!! :P

   Delete
  5. ஹிஹிஹிஹி, நோ தக்காளி சட்னி! அது இல்லாமலே சாப்பிடுங்க!

   Delete
  6. இது எனக்கு நியூஸ். எதுனால கரண்டி போட்டு நிவேதனத்துல வைக்கக்கூடாது? (ஒருவேளை அவர், எச்சில் கரண்டியாக இருக்கும் என்று நினைத்துச் சொல்லியிருப்பாரோ?) நான் எப்போதும் அந்த அந்தப் பாத்திரத்தில் உள்ளவற்றை எதை வைத்து எடுப்போமோ அந்தக் கரண்டி/ஸ்பூனுடந்தான் சன்னிதியில் வைக்கிறேன். தளிர் இதை விளக்குவாரா (ஒருவேளை பார்த்தால்?)

   Delete
 8. கண்டிப்பாக தோசை வார்க்கும் போது கரண்டி வேணுமில்லையா? கரண்டியோட படம் எடுக்க நோ அப்ஜெக்‌ஷன்! தோசை எங்க அம்மா வார்க்கிறாப்போல நல்லாவே வந்திருக்கு! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்! இரும்புக் கல்லில் வார்த்தால் தோசை நன்றாகவே வரும். நேற்றுத் தான் கல்தோசை அதாவது புளிக்காத மாவில் தோசை வார்த்தேன். வெள்ளை வெளேரென்று வந்தது. ஆனால் படம் எடுத்துட்டுப்பார்த்தால் கொஞ்சம் சிவந்தே தெரிகிறது. அதான் போடலை! அப்புறமாத் தம்பி வா.தி. வந்து இதான் வெளுப்பான தோசையானு கேட்பார்! :)

   Delete
  2. ஆமாம் அக்கா இரும்புக் கல் அதுவும் கொஞ்சம் கனமான கல் சூப்பரா இயற்கையான நான் ஸ்டிக். எங்கள் வீட்டில் நோ நான் ஸ்டிக். எல்லாம் இரும்பு... சிலவற்றிற்கு மட்டும் கல்கத்தா வாணலிகள். அதான் ஹிண்டாலியம் ஃபுட் க்ரேடட்.

   அது போல வெண்கலம், பித்தளைப் பானை அரிசி உப்புமா எல்லாம் இவற்றில்தான்...

   கீதா

   Delete