வலை உலகத் தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் சோதனைகள், தடங்கல்கள் நீங்கி அனைத்திலும் சிறப்பாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!
*********************************************************************************
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவிப்பு! தொலைக்காட்சி சானல்கள் அனைத்திலும் இன்றைய முக்கியச் செய்தி இது தான்! இதற்கு ஏன் எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்கணும், கூச்சல், கூப்பாடுனு எனக்குப் புரியலை! இதற்கு முன்னர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி, ஜெ.ஜெயலலிதா, கடைசியாக மிக மிக எதிர்பார்ப்புடன், விஜய்காந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது போல் இப்போ ரஜினி! அவ்வளவு தான்! அதுக்குள்ளே சிலர் ரஜினி பிஜேபிக்கு பினாமி என்றும் சொல்ல ஆரம்பிச்சுட்டனர். ஆன்மிகமும், இந்துத்துவாவும் தமிழ்நாட்டுக்குள் நுழைஞ்சுடும், நுழைய விடக் கூடாதுனு சிலர் உறுதிமொழி! ஹெஹெஹெ! ஆன்மிகமும், இந்துத்துவாவும் அவ்வளவு கெடுதலா என்ன?
இன்னும் சிலருக்கு அவர் கன்னடக்காரர் என்பதால் எதிர்ப்பு! ஆனால் ரஜினியின் அதி தீவிர ரசிகர்களுக்கு இதெல்லாம் உறைக்கவில்லை என்பது தொலைக்காட்சியில் ரஜினி பேசும்போது அவங்களோட கூச்சல், கைதட்டல், விசில் சப்தம் ஆகியவற்றிலிருந்து தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை இவரால் என்ன செய்ய முடியும் என்பதே முதல் கேள்வி! தமிழக அரசியல் என்னும் கப்பல் பல்வேறு வித, விதமான தாக்குதல்களில் மூழ்கிக் கொண்டு நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. மக்களை மூளைச்சலவை செய்து தேசியத்திலிருந்து பிரிக்கும் முயற்சி மிக வேகமாக நடந்து வருகிறது.
மத்திய அரசு செய்து வரும் பல நல்ல திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறாமல் அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்போதே மற்றவற்றிற்கும் மக்கள் மத்திய அரசையே குறை கூறிக் கொண்டு அவர்கள் தங்களை வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கின்றனர். இதை எல்லாம் மக்களிடம் முக்கியமாக அடிமட்ட மக்கள் வரை தெளிவாக எடுத்துச் சொல்லும் அரசியல் கட்சி பிஜேபி உட்பட எதுவும் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நாட்டு மாடுகளைக் காப்பதற்காகப் போராடுவதாய்ச் சொன்ன மக்கள் இப்போ எங்கே? நாட்டு மாடுகள் இப்போக் காப்பாற்றப்பட்டு விட்டனவா? அதே மக்கள் பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்தனர்! மாட்டுக்கறி சாப்பிடுவது எங்கள் உரிமை என்றார்கள்.
ஆனால் இதை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று அவர்களைப் போராட வைத்தது ஒரு சில அரசியல் கட்சிகள் தான்! அவங்க தான் பிரிவினையும் வேணும் என்று சொல்பவர்கள். ஒரு பக்கம் பிரிவினை வேணும்னு சொல்லிக் கொண்டு மக்களைத் தூண்டி விட்டுக்கொண்டு மறுபக்கம் மத்திய அரசு எல்லா சௌகரியங்களையும் எங்களுக்குச் செய்து கொடுக்கலை என்றும் சொல்கின்றனர். ஆக அவங்க நிலைப்பாடு அவங்களுக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை!
********************************************************************************
நேற்று துவாதசிக்குச் சில வருடங்கள் கழித்து அகத்திக்கீரை சமைத்தேன். இங்கே தினம் தினம் கீரை கிடைக்கும். என்றாலும் அது என்னமோ வாங்க முடியறதில்லை! அகத்திக்கீரை பொதுவாய்க் கசக்கும் என்பார்கள். ஆனால் நேற்று நல்ல சுவையாக இருந்தது. அகத்திக்கீரைக்கு மருந்துகளை முறிக்கும் சக்தி உண்டு என்பதால் நேற்றைய தினம் முழுவதும் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை! அகத்தின் "தீ" யை சமனப்படுத்துவதால் இந்தப் பெயர் என்று சொல்கின்றனர். அதற்காக தினம் தினம் சாப்பிடவும் கூடாது! சாப்பிட்டால் எதிர்மறையான பலன்களைத் தரும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அது போல் மது, மாமிசம் போன்றவற்றுடனும் இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. முதல்நாள் முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் வயிறு, முக்கியமாய் இரைப்பை சூடாக இருக்கும். அந்தச் சூட்டைத் தணித்துக் குளிர்விக்கும் பணியை அகத்திக்கீரை செய்கிறது. இதனால் முதல்நாள் பட்டினி இருந்த களைப்பும் அகலும். வயிறும் குளிரும். சூடு தணியும். மலச்சிக்கல் ஏற்படாது. ரத்த அழுத்தம் சமனப்படும்.
படத்துக்கு நன்றி கூகிளார்.
ஒவ்வொரு ஏகாதசிக்கும் பட்டினி இருப்பவர்கள் மறுநாள் உணவில் அகத்திக்கீரையைக் கட்டாயமாய்ச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
அகத்திக்கீரையை மட்டும் முதல் நாளே ஆய்ந்து நறுக்க வேண்டும் என்பார்கள். ஏன் என்பது தெரியவில்லை. ஆய்ந்து நறுக்கிய அகத்திக்கீரையைப் பாசிப்பருப்போடு சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வேகவிட்டுக் கொண்டு நீரை வடிகட்டவும். பின்னர் கடாயில் கடுகு, ஒரே ஒரு மி.வத்தல் தாளித்து வெந்த கீரையைப் போட்டுக் கொஞ்சம் வெல்லம் சேர்க்கவும். (வெல்லம் கட்டாயம் சேர்க்கணும். இல்லைனா கீரை சுவை பிடிக்காது.) பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி க் கீழே இறக்கவும். சுண்டைக்காய் வற்றல் போட்ட குழம்புடன் சேர்த்துச் சாப்பிட்டால் அனைவருக்கும் பிடித்துப் போகும்.
பி.கு. ஹெஹெஹெ, தலைப்பு எல்லோரையும் வர வைக்க!

எப்படியோ என் தமிழ்நாடு நாசமாப்போச்சு.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, தமிழ்நாடு முன்னேற்றங்களும் கண்டிருக்கு! என்றாலும் அரசியல் நிலைமை சரியில்லை! :(
Deleteமுதலில் இவனோட மனைவியை சென்னை மாநகராட்சி கட்டிட கடை வாடகையை கட்டச் சொல்லுங்க...
ReplyDeleteஅப்புறமாக அகத்திக்கீரையை அவிக்கலாம்.
கேனப்பயல்க ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாக வருவது இயற்க்கை.
ஹாஹா, கில்லர்ஜி, நான் சொன்னதும் உடனே கேட்பாங்க? அதோட அகத்திக்கீரையை நேத்திக்கே சமைச்சுட்டேன்! :)))) என்ன செய்ய முடியும்! ஏழைங்கன்னா அரசு மட்டுமில்லாமல் காவல் துறையும் தட்டிக் கேட்கும். இவங்களை எல்லாம் கேட்கவே கேட்காதே! :(
Deleteமுதலில் புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா அனைவருக்கும்!
ReplyDeleteபதிவுக்குப் போறேன்..
கீதா
புத்தாண்டு வாழ்த்துகள் தில்லையகத்து கீதா!
Deleteஎங்கள் வீட்டிலும் அகத்தி செய்வதுண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை...பாட்டி அகத்தியை ஆய்ந்து கிள்ளித்தான் போடுவார். கத்தி எதுவும் பயன்படுத்த மாட்டார். மாமியார் வீட்டிலும் அப்படித்தான் நானும் அப்படியே!! செய்முறை நீங்கள் சொன்னபடிதான்...
ReplyDeleteஜல்லிக்கட்டு முதலில் நானும் நம்பினேன் (மாட்டிற்காக என்றில்லை...அதில் பல பேசப்பட்டனவே...உணவுப் பொருட்கள் இது கூடாது பாராம்பரியம் என்று அதனால்) பரவாயில்லையே என்று ஆனால் ஃபேக் அதுவும் சும்மா அரசியல் ட்ராமா என்பதும் தெரிய வந்ததும் சீ என்று ஆகிவிட்டது இனி இது போன்ற போராட்டங்களை நம்பி பதிவும் போடக் கூடாது என்று. இத்தனைக்கும் அதில் ஒரு முகம் அறியா குழுவில் - ஹிந்து கூட பேட்டி போட்டிருந்தனர் பெயரில்லாமல்....முகம் காட்டாத அவர்களைப் பற்றி - எனக்குத் தனிப்பட்ட முறையில் சில தகவல்கள் வந்ததால் பதிவு போட்டேன்...ஆனால் அதன் பின் எவ்வளவோ நடந்தது....இன்னும் குப்பைகள் குவிந்துதான் இருக்கின்றன..நான் எப்போதும் வாங்கும், பல வருடங்களாகப் பயன்படுத்தும்பா,பாரம்பரியம் என்று சொல்லப்பட்டவைகளின் விலை குதிரைக் கொம்பாக ஏறியிருக்கே தவிர மற்றபடி எந்தப் பயனும் இல்லை...கோக் பெப்ஸி போடு போடென்று போடுகின்றன....
தமிழ்நாடு நல்ல தலைவர் இல்லாமல் தத்தளிக்கிறது என்பதுதான் உண்மை...இப்போது யார் வந்தாலும் சரி...ரஜனியோ, கமலோ...அரசியல் என்ன என்பது தெரியாமல் இவர்கள் எல்லோரும் கால் வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது..ஒரு நாள் முதல்வன் என்ற முதல்வன் படம் தான் நினைவுக்கு வருகிறது..
கீதா
நல்லதொரு தலைமை, திடமான, உறுதியான தலைமை இல்லாமல் தான் அரசியல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது! என்ன செய்ய முடியும்!
Deleteஅகத்திக்கீரை ஏனோ பிடிப்பதில்லை.
ReplyDeleteதமிழக அரசியல் - மகா கேவலமாக இருக்கிறது.
வாங்க வெங்கட், அகத்திக்கீரை வயிற்றுக்கு நல்லது செய்யும்! :)
Deleteஇப்போ கீதாக்காவுக்கு என்ன பிரச்சனை? ரஜனி அங்கிள் களத்தில குதிக்கோணுமோ இல்ல வாணாமோ?:) ஜொல்லிட்டால் அவர் ஒரு முடிவுக்கு வந்திடுவாரெல்லோ...:)..
ReplyDeleteஹை, அதிரா, இன்னிக்குப் பட்டம் சூட்டிக்காமல் வந்திருக்காங்களே! அதோட நான் சொல்லிட்டா, சேச்சே, ஜொள்ளிட்டா ரஜினி முடிவு எடுத்துடுவார்னும் சொல்றாங்களே! ஹையா, ஜாலி, எனக்கு அவ்வளவு சக்தியா? :)
Deleteஇந்த ஊரிலும் அகத்திக்கீரை விற்கிறார்கள். ஒரு கட்டு 40 ரூபாய். அகத்திப்பூ கூட விற்பனைக்குப் பார்த்திருக்கிறேன். 50-70 பூ, 200 ரூபாய். (அது எதுக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரியலை).
ReplyDeleteவாங்க நெ.த. பூவையும் சமைக்கலாம். பாசிப்பருப்புப் போட்டுக் கூட்டு, கறி செய்யலாம். பூவிலும் மருத்துவ குணங்கள் உண்டு.
Deleteஅகத்திக்கீரை அத்தனையும் உண்மை.. இதனை ஏன் அகத்திக் கீரை என்கிறீங்கள்? நாங்கள் அகத்தி இலை என்போம்:)... இது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. சிலநேரம் வறை செய்வேன்.. பல நேரம்.. நன் செய்வது...
ReplyDeleteகொஞ்சம் பழப்புளி, வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு சொட்டுத் தண்ணியில் அவிச்சு, அதனுள் கொஞ்சம் பால் விட்டு.. கொதிச்சதும் இவ்விலைகளை காம்போடு அப்படியே, அல்லது இலைகளை உருவிப் போட்டு மூடி அடுப்பை ஓஃப் பண்ணிடுவேன், அந்தச் சூட்டிலேயே அவிஞ்சிடும்.. சாப்பிடச் சூப்பரா இருக்கும்.. கஸ்டமில்லாத ஒரு ரெசிப்பி:)..
அதிரடி அதிரா, நீங்க சொல்லும் முறையில் அகத்திக்கீரை சமைக்கையில் பாலுக்குப் பதிலாகத் தேங்காய்ப் பால் விட்டுப் பார்த்திருக்கேன்.
Deleteதேங்காய்ப்பால் தான் கீதாக்கா சுவை அதிகம், வெளிநாடு வந்தது தொடங்கி, பசுப்பாலே அனைத்துக்கும் பாவிச்சுப் பழகிட்டோம்ம்.. கொழுப்புக் குறைந்தது..
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், கீதா. தமிழ் நாட்டிற்கு எப்போ விடிவு காலம் என்று மிகவும் யோசனையாக இருக்கிறது.
ReplyDeleteமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒருவர் வரவேண்டும். எப்போது வருவார் என்றுதான் புரியவில்லை.
கூடிய சீக்கிரத்தில் வருவார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை?
வாங்க ரஞ்சனி, பேத்தி நல்லா இருக்காளா? குழந்தையுடன் பொழுது இனிமையாகப் போகும் என நம்புகிறேன். தலைவர்னு ஒருத்தர் இல்லாமல் தான் தமிழ்நாடே இப்படி ஆகி இருக்கு! ரஜினிக்கு அந்த அளவுக்குத் திறமை, செயல் திறன் உண்டா? தெரியலை! வெகு எளிதான விஷயம் இல்லை இது!
Deleteகீதாம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ReplyDeleteரஜினியின் அரசியல் வருகைக்கும் ஏன் இந்த் அளவு எதிர்ப்பு என்று கேட்டு இருக்கிறீர்கள்...ஆமாம் ரஜினி என்ன மகாத்மாவா என்ன? அவர் அப்படி என்ன மக்களுக்காக தியாயகங்கள் செய்து இருக்கிறார்? அதனால் அவரை எதிர்க்க கூடாது என்பதற்கு..
அரசியலில் குதித்த ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தல் வரும் வரை அவரும் அவர் ரசிகர்களும் அரசியல் விமர்சனங்கள் பண்ணப் போவதில்லையாம். ஆமாம் இது என்ன வகையான துறவறம். # எனக்கு புரியலை உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்கம்மா
சட்டமன்ற தேர்தல் வரும் வரை தமிழகத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் வாய் திறக்கமாட்டோம் ஆர்பாட்டம் போராட்டம் நடத்த மாட்டோம் யாருக்கும் எதிர்ப்பு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் . அதெல்லாம் எதிர்கட்சிகள் மற்ற கட்சிகள் செய்து கொள்ளட்டும்,ஆனால் தேர்தல் அறிவித்த பின் களத்தில் இறங்கி நோகாமல் நொங்கு ம்ட்டும் தின்போம் இதுதான் ரஜினிகாந்த்
அதுமட்டுமல்ல தமிழக அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லும் ரஜினி அதில் இறங்கும் ப்து சாக்கடை தண்ணிர் படத்தானே செய்யும்....
நல்ல திட்டங்களை செய்யும் மத்திய அரசை கண்மூடிக் கொண்டு எதிர்க்கிறார்கள் சரி ஒரு சிறு கேள்வி மத்திய அரசு நல்ல திட்டங்கள் கொண்டுவந்து இருந்தால் அதனால் பலன் அடையும் மக்கள் ஏன் மத்திய அரசை குறை சொல்லப் போகிறார்கள் அப்படி சொல்ல யாரும் முட்டாள்கள் கிடையாது. ஒரு வேளை மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் சாமான்ய மக்களுக்கான திட்டமல்லாமல் மேல்மட்ட மக்களுக்கான திட்டமோ என்னவோ.. அடுத்தாக உண்மையிலேயே மத்திய அரசு நல்ல திட்டங்களை கொண்டு வந்திருந்தால் அதை அவர்களின் கட்சியை சார்ந்த தமிழக தலைவர்கள்தானே மக்களிடம் எடுத்து சொல்லி விளக்கி இருக்க வேண்டும் அப்படி செய்யாத தலைவர்களை மத்திய அரசை ஆளும் கட்சியை சார்ந்த பெரிய தலைவர்கள் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
எந்த கீரையையும் நீங்கள் சொன்ன முறைப்படி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்....
எது எப்படியோ கீரை வகைகளை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம் அது ஜீரணம் ஆவது கடினம் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை... இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிருங்கள்....
வரும் புத்தாண்டில் மேலும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்
ஊசி குறிப்பு : அரசியல் செய்திகளை நாம் வெளியிடும் போது நமக்கு மாற்று கருத்துக்கள் இருப்பது உண்மையை ஆனால் கருத்துக்கள் மாறுபட்டாலும் நாம் பதிவர் குடும்பம் என்பதை மறந்துவிட வேண்டாம் .எப்படி ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் எனக்கு இந்த உணவு பிடிக்கும் அ அந்த உணவு பிடிக்காது என்று நாம் சொல்லுவோமோ அது போலத்தான் இந்த அரசியலும்....அதனால் நான் ஏதாவது மாற்று கருத்தை சொன்னால் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்
///எது எப்படியோ கீரை வகைகளை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம் அது ஜீரணம் ஆவது கடினம் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதைக் கண்ணதாசன் அங்கிள்தான் சொல்லியிருக்கிறார்ர்.. அதிராவின் அங்கிள்:)..
வாங்க அவர்கள் உண்மைகள், உங்கள் கருத்துகளை மாறுபட்டிருந்தாலும் வரவேற்பேன். தனிமனிதத் தாக்குதல்களோடு இருந்தவற்றையே நான் ராமாயணம் எழுதுகையில் பிரசுரம் செய்துள்ளேனே! :) நீங்க மென்மையாகவும் நாகரிகமாகவும் தான் எதையும் அணுகுகிறீர்கள். சொல்கிறீர்கள். ஆகவே பிரச்னை இல்லை! :)
Deleteரஜினியை நான் மஹாத்மா என்றெல்லாம் சொல்லவில்லை! அவருக்கு அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது என்பதே நான் சொல்வது! நான் பெரிசா எந்த நடிகருக்கும் குறிப்பா ரஜினியோ, கமலோ, விஜயோ அவங்களுக்கெல்லாம் ரசிகை கிடையாது! ரஜினியின் ஆரம்பகாலப் படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கேன் அவ்வளவே! எல்லோரும் புகழ்ந்த படையப்பா, முத்து, பாஷா அல்லது பாட்சா?, எந்திரன், கபாலி போன்றவற்றை எல்லாம் தொலைக்காட்சியில் கூடப் பார்த்தது இல்லை! முதல்வன் படத்தை அனைவரும் புகழ்ந்து சொல்வார்கள். நான் பார்த்தது இல்லை! அதே போல் பல படங்களும்! எனக்காப் பார்க்கணும்னு தோணும் படங்களை மட்டுமே பார்க்கிறேன். ஆகவே நான் சினிமா நடிகர்கள், நடிகைகள் எவருக்கும் ஆதரவு கொடுப்பதில்லை. இப்போ எங்க தொகுதியிலே ரஜினி நின்றால் நிச்சயமா அவருக்கு எங்க ஓட்டுப் போட மாட்டோம். நிற்கிறவங்களிலே யார் செயல்திறன் உள்ளவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள்னு பார்த்துத் தான் போடுவோம்.
Deleteஅவர்கள் உண்மைகள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் தான் மறைக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் இல்லை! மற்ற எந்த மாநிலங்களிலும், (காங்கிரஸ் ஆளும் மாநிலமானாலும் சரி) இந்த அளவுக்கு மக்கள் எதிர்ப்பு இல்லை! இங்கே தான் தொட்டதுக்கெல்லாம் போராட்டங்கள், மத்திய அரசைக் குற்றம் சாட்டுதல்!
Delete"ஓகி" புயல் நவம்பர் 30 அன்று வந்து வானிலை நிலையம் எச்சரிக்கை கொடுத்தும் மீனவர்கள் கடலுக்குப் போனார்கள். சரி! போயிட்டாங்க! ஆனால் உடனேயே பொன்.ராதாகிருஷ்ணன், அதன் பின்னர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்து பார்வையிட்டு மக்கள் குறைகளைக் கேட்டுச் சென்றார்கள். அப்போதெல்லாம் எதுவும் இல்லை! அதன் பின்னர் ஒரு வாரம் கழிச்சு டிசம்பர் ஏழாம் தேதி மீனவர்களைக் கண்டு பிடிச்சுக் கொடுக்கும்படி போராட்டம்! கேரளாவுடன் இணைக்கச் சொல்லிப் போராட்டம். ரயில்களை நிறுத்திப் போராட்டம்! எத்தனை பேருக்கு அவசரமாகக் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததோ! இத்தனைக்கும் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, லக்ஷத்தீவு, தியூ ஆகிய மாநிலங்களில் மீனவர்கள் பலர் ஒதுங்கி இருப்பதாகவும், பத்திரமாக இருப்பதாகவும் அரசுகள் மூலமே தெரிவித்துக் கொண்டிருந்தன. சுமார் பத்துக் கப்பல்களை அனுப்பி நம்முடைய கடலோரக் காவல்படை மீனவர்களைத் தேடித் தேடிக் கண்டு பிடித்தது. தப்பி வந்த மீனவர்கள் கடலோரக் காவல்படையைப் பாராட்டிப் பேசியதும் யூ.ட்யூப்களில் வந்திருக்கு! அதை எல்லாம் யாரும் பார்க்கவில்லை! சுமார் ஒரு வாரத்துக்கும் மேல் சும்மா இருந்து விட்டு திடீரென்று போராட்டம், அரசுக்கு எதிர்ப்பு என்றால் என்ன செய்ய முடியும்?
ராமேஸ்வரம் வந்தப்போ மோதி மீனவர்களுக்கென பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்தார். அவற்றில் மீனவர்கள் படகுகளில் ஜிபிஎஸ் பொருத்த வேண்டும் என்பதும் ஒன்று. அதுவும் மானியத்தில் தருவதாகத் தான் சொல்லி இருக்கார். ஆனால் மீனவர்கள் எவருக்கும் அதில் இஷ்டம் இல்லை. ஏனெனில் ஜிபிஎஸ் பொருத்தினால் அவங்க கடலில் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க முடியும்! எளிது! நம் கடலோரக் காவல்படை மீனவர்களை அதிலும் குறிப்பிட்ட சிலரை இரட்டை மடிவலை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை கொடுக்கிறார்கள். ஆனால் மீனவர்கள் சொல்வது கடலோரக் காவல்படை துன்புறுத்தல் என! இது பத்திரிகைகளிலேயே கடலோரக் காவல்படை அதிகாரபூர்வமான செய்தியாக வெளியிட்டிருந்தது. ஆகையால் சொல்லி இருக்கேன். இப்படி எத்தனையோ சொல்லலாம். சிலவற்றைத் தெரிந்தாலும் வெளியே சொல்ல முடியாது!
Deleteஆஆஆஆவ்வ் டெல்ல மறந்திட்டேன்ன்ன்ன்:)..
ReplyDeleteஆண்டவா பழனியப்பா.. புதுக்கோட்டை வைரவா, திருப்பரங் குன்றத்து முருகா... இந்த மலரப்போகும் புத்தாண்டில்.. கீதாக்காவுக்கு
டாஸ் போர்ட்டிலயே எங்கள் புளொக் தெரியோணும்:)
அதிராவின் புளொக் ஃபுல்லாஆஆஆஆஆஆ ஓபின் ஆகோணும்..
அதிராவின் கொமெண்ட் பொக்ஸ் ஃபுல்லாஆஆஆஆ தெரியோணும்...
கீதாக்காவுக்கு இருமல் இருக்கப்புடா.. அவ இருமாமல் வந்து நிறையக் கொமெண்ட்ஸ் அடிராக்கு ஹையோ டங்கு ஸ்லிப்ட்.. அதிராக்குப் போடோணும்:)..
டெல்லுங்க, டெல்லுங்க அதிரடி! டாஷ்போர்டிலே எங்கள் ப்ளாக் தெரியுது! ஆனால் நீங்கல்லாம் ஏறிக் குதிக்கிறீங்களா! நான் கதவைத் திறந்து உள்ளே போறதுக்குள்ளே நீங்க மூணு பேரும் நுழைஞ்சுடறீங்க! ஹிஹிஹி! :))))
Deleteபி.கு. இருமல் எவ்வளவோ குறைஞ்சிருக்கு! :) ரொம்ப நன்றி பிரார்த்தனைக்கு! இன்னிக்கு உங்க ப்ளாகும் திறந்துச்சு. கமென்ட் பொட்டியும் !
கும்ப கோணத்தில் என் நண்பர் ஒருவ கோவிலுக்குப் போகும்போது அகத்திக்கீரையை வாங்கிச் செல்வார் மாடுகளுக்கு கொடுக்க
ReplyDeleteஇங்கேயும் தினம் தினம் கொடுக்கிறவங்க இருக்காங்க. அகத்திக்கீரையை உண்ணும் மாட்டின் பால் மருத்துவ குணம் நிரம்பியதாக இருக்கும்னு ஓர் நம்பிக்கை!
Deleteமாற்றுக் கருத்துகளே சரியான புரிதலைக் கொடுக்கும் என்ன அவை தனிமனிதரைத் தாக்கக் கூடாது
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, மாற்றுக்கருத்துகள் அனைவருக்கும் உண்டே!
Deleteமனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி மனோ சாமிநாதன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteஇனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கும் நிலை இருப்பதினால்தான் ஆட்சி மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையான வற்றைபலம் செய்ய முடியாமல் போகிறது, இதை தடுக்க RTI போன்ற சில வழிகள் இருந்தாலும் வன்முறை மிரட்டல் போன்ற ஆபத்துகட்கு அஞ்சி பெரும்பாலன மக்கள் ஒன்றும் செய்வதில்லை. Judiciaryம் தனது கடமையை சரிவர சரியான நேரத்திற்குள் செய்வதில்லை. தேர்தல் கமிஷன் பலம் தெரிய ஒரு சேஷன் தேவைப்பட்டார். அது போன்று அரசியலுக்கும் நீதித்துறைக்கும் சரியான ஆட்கள் வர வேண்டும். ரஜனி காந்த் அப்படி ஒருவர் என்று நான் நினைக்கவில்லை. மாறாக அவர் அப்படி அமைந்தால் சந்தோஷம் தான். நல்லதொரு மாற்றம் செய்ய வல்ல தலைவர்கள் நீதிமான்கள் வருவார்களா? நம்பிக்கைதான் வாழ்க்கை, நம்புகிறேன்,-பாபு
வாங்க பொன்மலை பாபு, உங்க ப்ளாகில் அப்புறம் ஏதும் இல்லையே! :) உங்களோட கருத்து சரி தான். ரஜினி காந்தால் மாற்றங்களைக் கொண்டு வர இயலும் என என்னாலும் நம்ப முடியவில்லை! பார்ப்போம். எப்படியும் அவர் உடனடியாக அரசியல் ரீதியாக எதுவும் செய்யப் போவதில்லை என்று சொல்லி விட்டார்! :)
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்
ReplyDeleteரஜினி அரசியலுக்கு வருவதால் மிகப்பெரிய மாறுதல்கள் வரும் என்று சொல்ல முடியாது. இத்தனை வருடங்களாக கடவுள் மறுப்பாளர்களால் சுரண்டப்பட்ட தமிழகத்தை ஒரு ஆன்மீகவாதி மீட்டெடுப்பாரா என்று ஒரு ஆர்வம். அம்புட்டுதான்.
ReplyDeleteஅகத்திக்கீரை சுண்டல் மிகவும் பிடிக்கும்.