எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 20, 2018

குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்!

அம்பேரிக்கா போறதுக்கு முன்னாடி குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கேருந்து வந்ததும் கோயில்களுக்கே போக முடியலை! இதிலே குலதெய்வம் கோயிலுக்கு எங்கே இருந்து போறது? குடும்ப புரோகிதர் போகக் கூடாதுனு சொல்லிட்டார்! ஒரு வழியா வருஷாந்திர விசேஷங்கள் முடிஞ்சதும் போகலாம்னு முடிவு செய்து நேற்றுப் போனோம். மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடணும்னு வேறே முடிவு செய்திருந்ததால் வியாழன் அன்றே மாவிளக்குக்கு அரிசி மாவைத் தயார் செய்து கொண்டேன். ஊரில் உள்ள பொய்யாப் பிள்ளையாருக்கு நெய்க்கொழுக்கட்டையும் தயார். மற்றும் அபிஷேஹ சாமான்கள் வாங்கிக் கொண்டு பூ, பழம், இளநீர் என மற்றப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு நேற்றுக் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பினோம்.  காலை மூன்றரை மணிக்கே எழுந்து கொண்டு கைக்கு எடுத்துச் செல்ல இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றைக் குளித்து விட்டுப் பின்னர் தயார் செய்து கொண்டேன்.

மாவிளக்குப் போடும்வரையிலும் நான் சாப்பிட மாட்டேன் என்பதால் காஃபியும் ஃப்ளாஸ்கில் எடுத்துக் கொண்டேன். இம்முறை ட்ராவல்ஸ் மூலம் வண்டி ஏற்பாடு செய்யவில்லை. அவங்க கிலோ மீட்டருக்குப் பத்து ரூபாய் வரை வாங்குவதால் ஃபாஸ்ட் ட்ராக்கிலேயே புக் செய்திருந்தோம். சரியான நேரத்துக்கு டிரைவர் வந்து விட்டார். திருவானைக்காவல் தான் ஊராம்! சொந்த வண்டி என்பதால் நன்றாகப் பராமரிப்புக்கள் செய்திருந்தார். ஐந்தே முக்காலுக்குக் கிளம்பிய வண்டி கல்லணை மார்க்கமாகச் சென்று ஏழரைக்குள்ளாகக் கும்பகோணம் வந்தாயிற்று. ட்ராவல்ஸ் வண்டிக்காரங்க கல்லணை மார்க்கத்தில் வருவதில்லை. அதோடு முன்னெல்லாம் மணல்குவாரிகள் இருந்ததால் கல்லணை மார்க்கத்தில் செல்ல முடியாமல் இருபக்கமும் லாரிகள் அணி வகுத்து நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. இப்போது மணல் குவாரிகளே இல்லை என்பதால் பிரச்னை இல்லை என்பதோடு சாலையும் நன்றாக தேவையான அளவுக்கு அகலப்படுத்தப்பட்டு வாகனங்கள் விரைவாகச் செல்லும் தகுதியிலும் இருந்தன.

கும்பகோணத்தில் இறங்கிக் கொண்டு ஓட்டுநரைச் சாப்பிடச் சொல்லிவிட்டு நாங்கள் பூஜைக்குத் தேவையான மற்றச் சில சாமான்களை வாங்கிக் கொண்டோம். பின்னர் வண்டி எட்டு மணிக்கு மீண்டும் கிளம்பிக் கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரம் வந்து அடைந்தது. இது தான் நான் கல்யாணம் ஆகி முதல் முதல் புக்ககமாக வந்த ஊர். ஊருக்குச் செல்லும் வழியில் நிலங்கள் சில அறுவடைக்குத் தயாராகவும், சில பயிர்கள் வளர்ந்தும் காணப்பட்டன. அரிசிலாறு தான் சாக்கடையாக மாறிவிட்டதோடு ஓடவும் இல்லை. தண்ணீர் குட்டை போல் கன்னங்கறுக்கத் தேங்கி நின்றது. படம் எடுக்கலாம் என்றால் இந்தக் கோலத்தில் படம் எடுத்துப் போட்டால் அது அரிசிலாற்றுக்குச் செய்யும் துரோகம் என என் மனதில் தோன்றவே படமே எடுக்கவில்லை. செல்லும் வழியில் கண்ணில் பட்ட சில நிலங்களை மட்டுமே படம் எடுத்தேன்.  நான் பதினெட்டு, பத்தொன்பது வயதில் முதல் முதலாகக் கல்யாணம் ஆகிப் புக்ககம் வரும்போது அரிசிலாற்றில் வண்டியை இறக்கினார்கள். கொஞ்ச தூரம் போனதும் கீழே இறங்கி நடந்தேன். மெல்லிய வெண்மணல். பாதங்கள் மென்மையாக உள்ளே புதைந்தன! செருப்புப் போட்டுக் கொண்டு ஆற்றில் நடப்பதில்லை! ஆகவே வெறும் கால்களோடு தான் நடந்தேன். அந்த சுகம்! இப்போது நினைத்தால் அரிசிலாற்றில் காலை வைக்கவே கூசுகிறது.

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு பெண்ணை ஏழு, எட்டுப் பேர் எப்படி பலாத்காரம் செய்கிறார்களோ என எனக்குக் கொஞ்சம் வியப்பாக இருக்கும். ஆனால் இப்போது இந்த அரிசிலாற்றைப் பார்க்கையில் வியப்பெல்லாம் போய்விட்டது! ஏனெனில் அரிசிலாற்றின் கதியும் அப்படித் தான் இருக்கிறது இப்போது. அந்தப்புரத்தை விட்டு வெளியேயே வராத அரசிளங்குமரி போல் அழகாய்க் காட்சி அளித்த அரிசிலாறு இப்போது போர் வீரர்களின் கைகளில் மாட்டிக் கொண்ட அரச குமாரியைப் போல் நிர்க்கதியாக மாறிச் சிக்கிச் சீரழிந்து விட்டது!

    


பின்னர் கருவிலி கிராமத்துக்கு வந்தோம். நாங்கள் வரப்போகும் தகவலை முன் கூட்டியே சொல்லி இருந்ததால் குருக்கள் அபிஷேஹ, அலங்காரங்களை முடித்துவிட்டுத் தயாராக இருந்தார். அவரிடம் அர்ச்சனை செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டோம். சர்வாங்க சுந்தரிக்கும் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டோம். ரங்க்ஸின் செல்லப் பிள்ளையாரைப் பார்க்கப் பிரகாரம் சுற்ற வேண்டும். ஆனால் எங்களுக்கு உடனடியாகப் பரவாக்கரை செல்ல வேண்டும். அங்கே பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்து தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பட்டாசாரியாரை ஒன்பதரைக்கு வரச் சொல்லி விட்டோம். இப்போதே மணி ஒன்பதே கால் ஆகி விட்டது. ஆகவே சுருக்கமான வழிபாடாகச் செய்து விட்டுப் பின்னர் பரவாக்கரை நோக்கிச் சென்றோம். கருவிலி கோயிலிலும் படங்கள் அதிகம் எடுக்கவில்லை. ராஜ கோபுரம் மட்டும் படம் எடுத்தேன். மூலவரை எடுக்க முடியாது!
                                                         
  

ராஜ கோபுரம் தூர இருந்தும் சற்றுக் கிட்டத்தில் இருந்தும்!  என்ன பிரச்னைன்னா படங்களை அலைபேசி மூலம் எடுத்தேன். காமிரா எடுத்துப் போகலை! அலைபேசியில் இந்தப் படங்களை ஏற்றியது புதிய லாப்டாப்பில்! அதில் மவுஸ் வேலை செய்யலையா! எனக்கு அதைப் பயன்படுத்தக் கொஞ்சம் சிரமமாக இருக்கு! ஏனெனில் விரல்கள் தகராறு! சட்டுனு ஸ்தம்பிச்சு நிற்கும் விரல்கள்! அசையாது! விரல்களால் மடிக்கணினியை இயக்கும் வித்தை இன்னும் கைவரவில்லை!  ஆகவே பழைய லாப்டாப்பை எடுத்து அதைக் கொஞ்சம் கெஞ்சிக் கொஞ்சிச் சீராட்டிக் கண்ணே, மணியேனு சொல்லி அதைப் பயன்படுத்தும் நேரம் முழுசுக்கும் அதற்கு சார்ஜிலேயே போட்டு வைச்சு( இல்லைனா, உடனே கண்ணை மூடிடும்! ) ஏதோ ஓரளவுக்கு வேலை செய்யறேனா! இதிலே மற்றப் படங்களையும் இங்கே போடுன்னா எப்படிப் போட முடியும்? எங்க பையர் பழைய லாப்டாப்பின் மவுஸையே  புதுசுக்கும் பயன்படுத்தலாம்னு சொல்றார். ஆனால் புதுசு பழைய லாப்டாப்பின் மவுஸைக் கிண்டலாய்ப் பார்க்குது! ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு! என்ன செய்ய! பழைய லாப்டாப்போ எந்நேரமும் சார்ஜில் இருந்தால் அற்புதமா வேலை செய்யுது! ஆகவே இப்போது கொஞ்ச நாட்களாக நம்ம வேலையெல்லாம் இப்படித் தான் நடக்குதாக்கும்!

அலைபேசியில் இருந்து இந்தப் பழைய லாப்டாப்பில் படங்களை ஏற்ற முடியலை! அதான் புதுசுலேயே ஏற்ற வேண்டி இருக்கு. காமிரான்னால் இதிலேயும் ஏற்றலாம், அதிலேயும் ஏற்றலாம். ஆனால் கிளம்பும் அவசரத்தில் ம.மவுக்கு அதெல்லாம் தோணவே இல்லை! அதான் கையிலே அலைபேசி இருக்கில்ல, போதும்னு கிளம்பியாச்சு!  இந்த அழகிலே நான் பின்னூட்டக் கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லலைனு நெ.த. அதிரடி அதிரா ஆகியோருக்குக் கிண்டல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அவங்க அவங்க இங்கே கணினிக்கு வந்து எழுதறதே பெரிய விஷயமாப் போச்சு! இதிலே இது வேறேயாக்கும்! இந்த மொக்கைக்குக் கூட்டம்  கூடிக் கும்மியடிக்கலாம்! என்ன வேணா நடக்கும்!

தொடரும்!



36 comments:

  1. கருவிலியா? பரவாக்கரையா? எது உங்கள் குலதெய்வ ஊர்? எங்கள் குலதெய்வம் கூட கும்பகோணம் பக்கம்தான்.மழுவச்சேரி. சேங்காலிபுரம் அருகில். சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் குல தெய்வம் கோவிலுக்கு 97 இல் சென்றது. இப்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், பரவாக்கரை தான் பூர்விகம். எங்க மாமனார், மாமியார் அங்கே தான் இருந்திருக்காங்க. நம்ம ரங்க்ஸ் அஞ்சாப்பு வரைக்கும் அங்கே தான் படிச்சிருக்கார். அதன் பின்னரே பாகப்பிரிவினை காரணமாக மாமனார் பக்கத்திலேயே ஒரு மைல் தூரத்தில் இருந்த கருவிலிக்குக் குடி பெயர்ந்திருக்கார். அங்கேயும் வீடு, நிலங்கள் இருந்தன. அவை மாமனாரின் பாகத்தில் வந்ததால் நேரடியாகக் கவனிக்க வாய்ப்பு என்று கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இங்கே வந்தார். :) என்னோட கடைசி நாத்தனார், இரு மைத்துனர்கள் ஆகிய மூவரும் கருவிலியில் பிறந்ததால் அவங்களுக்குக் கருவிலி தான் ஊர்! இன்றளவும் கருவிலி என்றாலே அவங்கல்லாம் உருகுவாங்க!

      Delete
  2. அடடே தொடருமா ?
    நல்லது கொழுக்கட்டையை கண்ணலயே காட்டவில்லையே.... அடுத்தாவது வரட்டும்.
    பசுமைக்காட்சி அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! ஆமாம், இன்னும் முடிக்கலை!

      Delete
  3. ஆஹா.. குலதெய்வம் கோவில் விசிட்டா? கோவில்லயே பிரசாதம் பண்ணிவைக்கச் சொல்லியிருந்தா செய்துகொண்டு போயிருக்க வேண்டாமே. அடுத்த இடுகைலதான் படங்களும் (மாவிளக்கு உட்பட) வருதா?

    ஆற்றை நினைத்து வருத்தப்படுவது உண்மை. நாங்க சின்ன வயசுல குளித்து, மணற்பரப்பில் விளையாடி, ஆற்றின் நடுவில் இருந்த அழகிய பாறையில், அலம்பிட்டு, மோர் சாத்த்தை போட்டுக்கொண்டு கையில் விடும் குழம்புடன் சாப்பிட்ட தாமிரவருணி ஆறு, அடையாளம் தெரியாமல் சிலவருடங்களுக்கு முன்பு பார்த்தபோது இதே எண்ணம்தான் எனக்குத் தோன்றியது.

    ம ம - மர மண்டைனு புரிஞ்சுக்கறேன். அங்க எப்படி வு வந்தது?

    ReplyDelete
    Replies
    1. //ம ம - மர மண்டைனு புரிஞ்சுக்கறேன். அங்க எப்படி வு வந்தது?//

      நெ.த. புதசெவி! ஹெஹெஹெஹெ, மண்டை காய்ஞ்சு போயிடுச்சா?

      மாவிளக்குப் படம்? ம்ம்ம்ம்ம்ம்! :) தாமிரபரணி/வருணி (?) நிலைமையைப் பார்த்தாலும் கண்ணில் ரத்தம் வருது!

      Delete
  4. ஆஹா.. குலதெய்வம் கோவில் விசிட்டா? கோவில்லயே பிரசாதம் பண்ணிவைக்கச் சொல்லியிருந்தா செய்துகொண்டு போயிருக்க வேண்டாமே. அடுத்த இடுகைலதான் படங்களும் (மாவிளக்கு உட்பட) வருதா?

    ஆற்றை நினைத்து வருத்தப்படுவது உண்மை. நாங்க சின்ன வயசுல குளித்து, மணற்பரப்பில் விளையாடி, ஆற்றின் நடுவில் இருந்த அழகிய பாறையில், அலம்பிட்டு, மோர் சாத்த்தை போட்டுக்கொண்டு கையில் விடும் குழம்புடன் சாப்பிட்ட தாமிரவருணி ஆறு, அடையாளம் தெரியாமல் சிலவருடங்களுக்கு முன்பு பார்த்தபோது இதே எண்ணம்தான் எனக்குத் தோன்றியது.

    ம ம - மர மண்டைனு புரிஞ்சுக்கறேன். அங்க எப்படி வு வந்தது?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு தரம் வந்திருக்கு! :)

      Delete
  5. மா விளக்கு எங்கே ஏற்றினாப்புல கீதா. அந்தப் படத்தைக் காணோமே.
    நல்லபடியாகக் குலதெய்வ வழிபாடு நடந்தது சந்தோஷம். துன்பம் எல்லாம்விலகி நல்லருள்
    கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி! இன்னும் சில படங்கள் இருக்கு! :) மாரியம்மன் கோயிலில் தான் மாவிளக்கு!

      Delete
  6. ஆஹா கீதாக்காவின் ஜொந்தக் கதை ஜோகக்:) கதை படிக்கப் படிக்க சுவாரஷ்யம்:).. எனக்கு ஊர் வம்பு பிடிக்காதாக்கும்:) ஆனா கீசாக்காவின் வம்பெனில் பிடிக்கிறதே:)) ஹா ஹா ஹா..

    அதென்ன பொய்யாப் பிள்ளையார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ பொய்ப் பிள்ளையாரும் இருக்கிறாரோ?:)..

    அந்தக் கோயில் படம் பார்க்க சூப்பரா இருக்கு.. உள்ளே இருட்டாக இருக்கே... அதுசரி மாவிளக்கை கண்ணிலே காட்டவே இல்லையே நீங்க கர்:) அடுத்த பகுதியில வரும்போல:)...

    நீங்க மட்டும் அந்தக் காலம் போல இல்லாமல் இந்தக்காலம் மாறுவீங்க.. அம்பேரிக்காவுக்குப் பிளேனில ஏறி கை காட்டிக் காட்டிப் போவீங்க ஆனா.. பூமி நிலம் மட்டும் அப்டேட் ஆகாமல்:).. உங்கட 17 வயசிலயே இருந்ததைப் போல இருக்கோணும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..?

    ReplyDelete
    Replies
    1. ///அதென்ன பொய்யாப் பிள்ளையார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ பொய்ப் பிள்ளையாரும் இருக்கிறாரோ?:)..// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்ன வாக்கைத் தட்டாமல் வாக்குப் பொய்க்காமல் காப்பாற்றுவாராம்!

      Delete
    2. //நீங்க மட்டும் அந்தக் காலம் போல இல்லாமல் இந்தக்காலம் மாறுவீங்க.. அம்பேரிக்காவுக்குப் பிளேனில ஏறி கை காட்டிக் காட்டிப் போவீங்க ஆனா.. பூமி நிலம் மட்டும் அப்டேட் ஆகாமல்:).. உங்கட 17 வயசிலயே இருந்ததைப் போல இருக்கோணும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..?// அம்பேரிக்காவில் எல்லாம் ஆறுகளை நாசமாப் பண்ணி வைச்சிருக்காங்களா? லண்டனில் தேம்ஸ் சுத்தமா இருக்கிறதாலே தானே நீங்க தினம் ஒரு முறை குதிச்சுட்டுத் திரும்ப வரீங்க? :P :P :P

      Delete
  7. ///கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு பெண்ணை ஏழு, எட்டுப் பேர் எப்படி பலாத்காரம் செய்கிறார்களோ என எனக்குக் கொஞ்சம் வியப்பாக இருக்கும். ஆனால் இப்போது இந்த அரிசிலாற்றைப் பார்க்கையில் வியப்பெல்லாம் போய்விட்டது!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ரொம்ப ஓவரூஊஊஊஊ:)..

    /// இந்த அழகிலே நான் பின்னூட்டக் கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லலைனு நெ.த. அதிரடி அதிரா ஆகியோருக்குக் கிண்டல்///

    ஹா ஹா ஹா நீங்க என்னதான் மூக்கால அழுதழுது:) சிம்பதி கலெக்ட் பண்ணினாலும் நாங்க விட மாட்டோம்ம்:))... கொமெண்ட்ஸ் ஐக்கூட டக்குப் பக்கென பப்ளிஸ் பண்ணுறீங்க இல்ல கர்ர்:)).. மொபைலில் மெயிலை போட்டு வையுங்கோ அப்போ டக்கு டக்கெனப் பப்ளிஸ் பண்ணிடலாம்:))..

    சரி சரி ஒண்னும் அவசரமில்லை:) நீங்க சுண்டெலி சரியாகும்போது வாங்கோ:))

    ReplyDelete
    Replies
    1. ஓவரெல்லாம் ஒண்ணும் இல்லை. அந்த ஆறை இப்போப் பார்த்தால் உங்களுக்கே புரியும். சுண்டெலி புதுசா வாங்கணும்னு பார்க்கிறேன்.

      Delete
    2. if your mouse is of PS2 type new laptops don't support it. If it is USB type you can go to settings and see if external mouse is enabled. If not enable it.

      What is your OS? Sometimes New OS does not support old gadgets.

      பேட்டரி amazon, shopclues, snapdeal, flipkart, ebay, போன்ற online வர்த்தக மையங்களில் கிடைக்கும். 1500 முதல் உள்ளன. வாங்கிக்கொள்ளலாம்.

      Jayakumar

      Delete
    3. மிக்க நன்றி ஜேகே அண்ணா. புது மடிக்கணினியில் வின்டோஸ் 10! அதனால் இந்தப் பழைய மவுஸ் ஏற்கலையோனு இப்போத் தோணுது! நன்றி சொன்னதுக்கு! இதை யோசிக்கலை! பழைய மடிக்கணினியில் வின்டோஸ்7 பிரிமியம்! பேட்டரி புதுசு தான் அம்பேரிக்கா போறதுக்கு முன்னால் பழைய மடிக்கணினிக்குப் போட்டது! அதென்னமோ சார்ஜ் நிக்கவே இல்லை! எப்போவும் சார்ஜில் வைச்சிருந்தால் கணினியில் வேலை செய்ய முடியுது! மற்றபடி என்னோட மவுஸ் எந்த டைப் என்பதைக் குறித்து எனக்குத் தெரியலை! பார்க்கிறேன்.

      Delete
  8. ///இதிலே இது வேறேயாக்கும்! இந்த மொக்கைக்குக் கூட்டம் கூடிக் கும்மியடிக்கலாம்! என்ன வேணா நடக்கும்!//

    ம்ஹூம்ம்ம்ம்:) ஒரு கொமெண்ட் பப்ளிஸ் பண்ணவே ஒம்பேது நாள் எடுக்கும் இதில கும்மி வேற தேவைப்படுதுபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) எனக்கு ட்றம்ப் அங்கிளோடு அவசர மீட்டிங் இருக்கு மீ ரன்னிங்:).

    ReplyDelete
    Replies
    1. //ஒரு கொமெண்ட் பப்ளிஸ் பண்ணவே ஒம்பேது நாள் எடுக்கும் இதில கும்மி வேற தேவைப்படுதுபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) எனக்கு ட்றம்ப் அங்கிளோடு அவசர மீட்டிங் இருக்கு மீ ரன்னிங்:).// அநியாயமா இல்லையோ? ஒரு காலத்திலே நாங்க தினம் இரண்டு பதிவு போட்டு எல்லாத்துக்கும் பதிலும் சொன்னவங்களாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ட்ரம்ப் இப்போதைய அரசியல் நிலைமையைப் பத்திப் பேசறதுக்குக் கூப்பிட்டாராக்கும்? :)))))))

      Delete
  9. //மாவிளக்குப் //அந்த மாவிளக்கு படங்களை எடுக்கல்லியாக்கா .இல்லை எதுக்கு கேக்கிறேன்னா ஒருத்தர் சொக்கப்பனை கணக்கா மாவிளக்கை கொளுத்தி படம் போட்டு ஜகதகன்னு போட்டிருந்தாங்க அதில் மாவிளக்கு தேடினேன் கடைசீ வரைக்கும் கிடைக்கலை இங்காச்சும் பார்க்கலாமேன்னுதான் :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின்! அதென்ன எல்லோரும் மாவிளக்குப் படத்தையே கேட்டுட்டு இருக்கீங்க????????? :))))))

      Delete
    2. அது கீசாக்கா ... அதிரா மாவிளக்குப் போட்டதிலிருந்தே எல்லோருக்கும் மாவியக்குப்:) பிடிச்சுப் போச்ச்ச்ச்:))

      Delete
    3. நாங்க அதுக்கும் முன்னாடியே மாவிளக்குப் படம் போட்டிருக்கோமாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போனாப் போகுதுனு க்ர்ர்ர்ர்ர் ருக்கு ராயல்டி கேட்காமல் விட்டிருக்கேன்! நினைப்பிருக்கட்டும்! :))))))

      Delete
  10. பாவம் அரிசிலாறு :( அதன் இந்நிலைக்கு மனுஷங்கதானே காரணம் . ஆறுங்கலாம் பேச துவங்கினா மனுஷங்க அவ்வளவுதான்
    இயற்கை காட்சிகள் கார் ஜன்னல் வழியா பசுமையா இருக்கு
    கோவிலும் அழகா இருக்கு .எனக்கு கூட்டமில்லா கோயில்கள் பிடிக்கும் அப்போதான் சாமிகிட்ட தனியா பேச முடியும்

    படங்கள் நான் அவசரத்துக்கு ஜிமெயிலில் அனுப்பிட்டு அங்கிருந்து லேப்டாப்புக்கு டவுன்லோட் பண்ணிப்பேன் 6 /7 படங்கள்னா மெயிலில் ஈஸி

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின், ஜிமெயிலில் என்னோட அக்கவுன்டுக்குப் படங்களை அனுப்பினால் போகறதில்லை. அதனால் ஶ்ரீராமுக்கு வாட்ஸப்பில் அனுப்பி அவரை என்னோட மெயிலுக்கு அனுப்பச் சொல்லுவேன். :) இம்முறை அப்படிச் சொல்லலை! கணினியில் ஏற்றுவது சிரமம் இல்லை. ஆனால் பதிவில் போடுகையில் கொஞ்சம் பிரச்னைகள் வருது!

      Delete
  11. அரிசிலாறு பற்றி நீங்கள் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் மனதுக்கு இருக்கு. உங்கள் மாமியார் வருஷாப்தீகம் முடிந்தவுடன் குலா தெய்வம் கோவிலுக்குச் சென்ற விட்டு வந்த உங்கள் சுறு சுறுப்பை பாராட்டுகிறேன்.God bless!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! கோயிலுக்குப் போக வசதியாக தை மாதமாகவும், வெள்ளிக்கிழமையும் அமைந்ததே அவள் அருளால் தான்! :)))) அதோடு நாங்க நினைச்சாக் குலதெய்வம் கோயிலுக்குப் போவோம். ஒரு வருஷமாப் போக முடியாமல் மனதே வேதனையாக இருந்தது!

      Delete
  12. ஆறுகள் வற்றிப்போனதைப்பற்றிப் பேசினால் தொண்டை வற்றிப்போகும். உடம்பில் உயிர் வற்றும்வரை இந்த உலகைப் படைத்துக் காப்பவனையாவது உருப்படியாக நினைத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆறு வற்றவில்லை, சாக்கடையாகக் குட்டை போல் நீர் தேங்கி ஓடாமல் ஒரே இடத்திலேயே நிற்கிறது!இதை 100 நாள் வேலைத்திட்டத்தில் சுத்தம் செய்ய முடியாதாமே! அதைப் பற்றியும் விசாரித்தோம் ஊரில்! இது அந்த வேலைத் திட்டங்களின் பட்டியலில் வரவில்லையாம், ஊர்க்கிணறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், வாய்க்கால்கள் போன்றவை தான் அந்தப் பட்டியலில் உள்ளன என்கிறார்கள். என்னவோ சட்டம்! சற்றும் ஏற்கமுடியாத சட்டம்! எது தேவையோ அதற்குத் தானே முன்னுரிமை கொடுக்கணும்! சட்டம் இங்கே கொஞ்சம் வளைந்து கொடுத்தால் தான் என்ன? :(

      Delete
  13. //அந்தப்புரத்தை விட்டு வெளியேயே வராத அரசிளங்குமரி போல் அழகாய்க் காட்சி அளித்த அரிசிலாறு இப்போது போர் வீரர்களின் கைகளில் மாட்டிக் கொண்ட அரச குமாரியைப் போல் நிர்க்கதியாக மாறிச் சிக்கிச் சீரழிந்து விட்டது!//

    மிக அழகான உவமை!!

    எங்கள் ஊர் [ தஞ்சை] வழியாக செல்லாமல் கல்லணை, திருவையாறு வழியாகச் சென்று விட்டீர்களா? கருவிலி, பரவாக்கரை கும்பகோணத்திலிருந்து எந்த ஊருக்கு செலும் வழியில் உள்ளன?


    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, உங்க ஊர் தஞ்சாவூரா? ஒவ்வொரு முறையும் அப்படித் தான் போனோம். ஒரு முறை கல்லணை வழி சென்று போக்குவரத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடியதிலிருந்து கல்லணை வழி செல்லுவதில்லை. ஆனால் இப்போத் தான் குவாரிகள் இல்லை என்பதால் போக்குவரத்து சீராக இருப்பதாக ஓட்டுநர் சொன்னார். அதன்படி போக்குவரத்தும் குறைவாக இருந்தது. சாலையும் நல்ல தரமாகப் போடப்பட்டுள்ளது. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்துகளில் கருவிலிக்குச் செல்லலாம். அல்லது கும்பகோணத்திலிருந்து 4 ஆம் எண் டவுன் பஸ் எரவாஞ்சேரி செல்கிறது. அதிலும் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் செல்லும் பேருந்துகளில் பரவாக்கரை செல்லலாம். அல்லது கருவிலியிலிருந்தும் பரவாக்கரை செல்லலாம். முன்னர் கருவிலி, பரவாக்கரை மினி பேருந்து இருந்தது. இப்போ இல்லை. வடமட்டத்திலிருந்து பரவாக்கரைக்கு மினி பேருந்து இயங்குகிறது. வடமட்டத்திலிருந்தும் பரவாக்கரை செல்லலாம். பொதுவாகக் காரைக்கால் வழி என்பார்கள்.

      Delete
  14. பதில் அளித்ததற்கு அன்பு நன்றி! உங்கள் பதில் பார்த்ததும் பூந்தோட்டம், முடிகொண்டான், சன்னாநல்லூர் வழியே சிறு வயதில் நடந்து சென்றது ஞாபகத்துக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மனோ சாமிநாதன்!

      Delete
  15. ஓ! வருஷாப்தீகம் முடிந்ததும் குலதெய்வக் கோயில் விசிட்!! சூப்பர்!!! இதோ அடுத்த பார்ட்டுக்குப் போறோம்....கொழுக்கட்டை பார்க்க..ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா கீதா, கொழுக்கட்டையும் இல்லை. மாவிளக்கும் இல்லை! இம்முறை என்னமோ படம் எடுக்கத் தடா போட்டுட்டாங்க! :(

      Delete