கண்ணால் கண்டவள் காவேரி, கருத்தில் நின்றவள் சிங்காரி! காவிரியில் வெள்ளம்! அம்மாமண்டபப் படித்துறையிலும் மற்றப் படித்துறைகளிலும் காவல்துறைப் பாதுகாப்புப் போட்டாச்சு! அந்த அளவுக்கு வெள்ளம் வந்திருக்கு! திருவையாறில் காவிரி கரை புரண்டு உற்சாகத்துடன் ஓடுவதை ஃபேஸ்புக்கில் சிலர் போட்டிருந்தார்கள். இங்கேயும் கீழே இறங்கிப் படித்துறைப்பக்கம் போய்ப் படம் எடுக்கத் தான் ஆசை. ஆனால் அனுமதிப்பதில்லை. அதிலும் இங்கேயும் கல்லணைப் பகுதிகளிலும் பெரும்பாலான மணல் 30 அடி ஆழத்துக்கும் மேல் எடுக்கப்பட்டிருப்பதால் தண்ணீரின் அளவு தெரியாமல் யாரேனும் மாட்டிக் கொள்ளலாம். காவிரி மேலே அமைதியாக் காட்சி அளித்தாலும் உள்ளூரப் பொங்குவாள். ஆகவே காலை வைத்தால் சுழல் இழுக்கும்.
எதிர்க்கரையில் திருச்சி சிந்தாமணிப் படித்துறை
இந்தப் படங்கள் எல்லாம் எங்க வீட்டுப் பிரபலமான மொட்டைமாடியிலிருந்து காவிரியைப் பல கோணங்களில் எடுத்த படங்கள். காமிராவில் தான் எடுத்தேன். பல நாட்கள் ஆகிவிட்ட படியால் பாட்டரியில் சார்ஜ் இல்லை. ஆகவே சில படங்கள் வரலை. என்றாலும் பாட்டரியைச் சார்ஜ் செய்துட்டேன். ஆகவே மறுபடி எடுக்க உள்ளேன். உ.பி.கோயிலையும், தெற்கு கோபுரத்தையும் எடுக்கும்போது தான் படம் வரலை. அதையும் எடுக்கணும். அடுத்து அவற்றை எடுக்கிறேன். என்னதான் மொபைலில் எடுக்கலாம் என்றாலும் எனக்கு என்னமோ சரியா வரதில்லை. ஆகவே காமிரா!
சந்தோஷமான காட்சிகள் இவை நிலைத்து இருக்கட்டும்.
ReplyDeleteசின்ன டவுட்டு....
//எங்க வீட்டுப் பிரபலமான மொட்டைமாடியிலிருந்து...//
இதற்கு அர்த்தம் என்ன ?
//எங்க வீட்டுப் பிரபலமான மொட்டைமாடியிலிருந்து...//எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் மொட்டை மாடியைப்பார்க்காமல் அனுப்புவதில்லை. பலரும் போயிட்டு வந்திருக்காங்க. பானுமதி வெங்கடேஸ்வரன் தம்பதியர் தவிர்த்து! :)))) வலை உலகில் எங்க வீட்டு மொட்டைமாடிப் படங்கள் ரொம்பவே பிரபலம். அதுவும் லிஃப்ட் பக்கத்து ஜன்னலில் இருந்து தெரியும் காவிரியைப் படம் எடுக்காமல் யாரும் போனதில்லை.
Deleteகாவிரியின் அழகே அழகு.
ReplyDeleteஆம், முனைவர் ஐயா!
Deleteஆஹா காவேரி பார்க்கவே பரவசம் ...
ReplyDeleteபொங்கி வருகிறாள்...எத்தனை ஆனந்தம்..
எங்க வீட்டில் எல்லாரும் போய் பார்த்துட்டு வந்தாச்சு அந்த பாலத்தில் நின்னு...
நான் வரும் போது இவ்வோளோ நீரும் இருக்குமோ என்னமோ...
எங்களுக்கு அடுத்த மாதம் தான் பிளான் ..
வாங்க அனுராதா, அடுத்த மாசம் வரச்சே சொல்லுங்க! எங்க வீட்டுக்கும் வந்துட்டுப் போகலாம்.
Deleteஅந்த பக்கம் கடக்கும் போது நிச்சயம் உங்க நியாபகம் வரும் மா..இங்க தான் கீதா மா வீடு ன்னு...
Deleteஅடுத்த முறை வரும் போது கண்டிப்பா முயற்சிக்கிறேன் தங்களை காண...மிக்க நன்றி மா அழைப்பிற்கு..
நீங்க ஶ்ரீரங்கம் தான் சொந்த ஊர்னு முன்னமேயே தெரிஞ்சுக்கலை! அல்லது சொல்லியும் நினைவில் இல்லை. இனி நினைவில் வைச்சுப்பேன். :)
Deleteஅம்மா வீடு உறையூர் மா...
Deleteமாமியார் ஊர் துறையூர்...
பரவாயில்ல மா..நேரில் பார்த்தா நியாபகம் வரும்...☺️☺️☺️
Deleteஉங்களை ஏற்கெனவே பார்த்திருக்கேனா???????????????????
Deleteகண்ணால் கண்டேன் சிங்காரியை.
ReplyDeleteகரைபுரண்டு ஓடும் காவேரி அழகு.
முடிந்த போதெல்லாம் படம் எடுத்து போடுங்கள்.
ஓடும் போது ரசிப்போம். வீடியோவும் எடுங்கள்.
நன்றி.
சில நாட்கள் முன்னரே எடுக்க நினைச்சு முடியலை. நேத்துத் தான் நேரம் வாய்ச்சது. பார்க்கலாம், தொடர்ந்து எடுக்க முடியுமா என!
Deleteonly yesterday i was thinking of you posting a photo of Mother Cauvery flowing bank to bank. thanks, will visit soon to see the refreshing sight
ReplyDeleteவாங்க நன்மனம், இங்கேயும் வருவீங்க தானே? சொல்லிட்டுச் சாப்பிடறாப்போல் வாங்க! :) நானும் உங்களை நினைத்துக் கொண்டேன்.
Deleteஆர்ப்பரிக்கும் காவேரி மிக அழகு.
ReplyDeleteமணலை 30 அடி வரை கொள்ளையடித்துவிட்டார்களா?
கேமராவில் நீங்க படம் எடுத்தும் ரொம்ப நல்லா வந்திருக்கே. பாராட்டுகள்.
//கேமராவில் நீங்க படம் எடுத்தும் ரொம்ப நல்லா வந்திருக்கே. பாராட்டுகள்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ? :))))) ஆமாம், கொள்ளிடத்தில் சமீபத்தில் செய்த ஆய்வில் 500 அடிக்குக்கீழே தான் தண்ணீர் இருக்குனு சொல்றாங்க! செய்தி வேறே எங்கேயும் பார்க்காததால் படிக்காததால் எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை. ஏனெனில் எங்க குடியிருப்பு வளாகத்தில் 50 அடி தான் போர்வெல்! தண்ணீர்ப் பஞ்சம் எல்லாம் இல்லை.
Deleteஆகா...!
ReplyDelete(திருப்பாவை – 23)
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்...
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீவிழித்து...
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி…
வாங்க டிடி, அருமை!
Deleteகாவிரி அப்படி சிங்கம் கம்பீரமாக தன் உரோமங்களைச் சிலுப்பிக்கொண்டு தன் குகையை விட்டு வெளிவருவதுபோல், கம்பீரமாகப் பாய்கிறது என்று சொல்கிறீர்களா தி.த?
Deleteடிடி... ரொம்பவே அசத்தறீங்க...
Deleteகாவிரியில் நீர் பார்த்தால் மகிழ்ச்சிதானே தெரிகிறது
ReplyDeleteஆம்,ஐயா!
Delete//காவிரியில் வெள்ளம்! //
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ இனி கீசாக்காவை காவேரியில் தள்ளலாம்ம்:))
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க முதல்லே ஜேம்ஸிலே சேச்சே, தேம்ஸிலே குதிங்க! எழுந்து வந்து என்னைத் தள்ளலாம். :))))
Deleteஸ்ஸ்ஸ்ஸ்... லேட்டானால் காவிரியில தண்ணி வத்திடும், ஒக்டோபரில வியாளமாற்றம்:) அப்போ நீங்க தப்பிடுவீங்க என்னிடமிருந்து:))
Delete//இனி கீசாக்காவை காவேரியில் தள்ளலாம்ம்//
Deleteநம்ம ஊர் மக்கள் சீக்கிரமே இல்லாத தண்ணீரையும் கடலுக்கு அனுப்பி விட்டு மணலாக வைத்திருப்பார்கள். மன்னிக்கவும், மணலையும் கொள்ளையடித்துவிட்டு வெறும் தரையாகவே வைத்திருப்பார்கள்.
லேட்டானால் எல்லாம் வத்தாது அதிரடி, ஏனெனில் அடுத்த பருவமழை தமிழ்நாட்டிலும் சரி,கர்நாடகாவிலும் சரி பெய்யும்! ஆகவே இந்த வருஷம் முடிஞ்சு அடுத்த ஜனவரி வரை காவிரியில் தண்ணீருக்கு வாய்ப்பு உள்ளது என்றே நினைக்கிறேன்.
Deleteஶ்ரீராம், பூகோளம் தெரியும் தானே! முகத்துவாரத்தில் நதி நீர் கடலோடு சேர்ந்தே ஆகணும். இல்லை எனில் முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள ஊர்களின் தண்ணீர் கடல்நீர் போல் ஆகிவிடும். அதோடு இல்லாமல் இந்த இயற்கையான நீர்வளம் எப்போதும் கடலில் கலக்குமிடத்தில் இல்லை எனில் அந்தப் பிரதேசமே பாலைவனம் ஆகிடும். சுமார் 50,60 மைல் தூரத்துக்குப்பாலைவனமாகவும் உப்பு நீராகவும் ஆயிடும். அப்புறமாத் தண்ணீர் கடலுக்குள் கலப்பதற்கு வேண்டாத முயற்சிகள் எல்லாம் செய்யும்படி இருக்கும். நதி நீர் கடலில் கலப்பது என்பதே இயற்கையான முறை! எல்லா நீரும் கலக்கப்போவதும் இல்லை! ஆகவே இதுக்காகக் கலங்க வேண்டாம். இயற்கையை மீறி எதுவும் செய்யக் கூடாதுஅல்லவா!
Deleteகீசா மேடம்.... நதி நீர் முகத்துவாரம் என்பதுபோல், நதி ஓடும் இடங்களிலெல்லாம் மணற்பரப்பு இருப்பதால், பூமியும் தண்ணீரை உள்வாங்கிக்கொள்ளும். அதனால்தான் வெயில் காலங்களிலும், பொதுவாக நதிபாயும் பூமி, அதனை ஒட்டிய ஊர்களில் கிணற்றுத்தண்ணீர் வற்றாது. மணலைக் கொள்ளையடிப்பதால், கட்டாந்தரையில் தண்ணீர் எப்படி உள்ளே செல்லும்?
Deleteமணல் விஷயத்தில், நம்மைவிட மலையாளிகள் நூறு மடங்கு மேலானவர்கள் (சுற்றுச்சூழல் விஷயத்திலும்) என்பது என் எண்ணம்.
மலையாளிகள் புத்திசாலிகள், அவங்க மாநிலத்து நதிகளின் மணலை அள்ள மாட்டாங்க! அதே சமயம் தமிழ்நாட்டிலிருந்து வரவைச்சு வீடு கட்டிப்பாங்க! சுற்றுச் சூழல் விஷயத்திலும் அவங்க மாநிலக் குப்பை எல்லாம் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டிட்டு அவங்க மாநிலத்தைச் சுத்தமா வைச்சுப்பாங்க! :(((( என்ன செய்யலாம்! தமிழக மக்களைப் போன்ற சோம்பேறிகளை எங்கும் காண முடியாது! :((( கனவிலே மிதக்கின்றனர்.
Deleteதஞ்சாவூரில் ஓடும் ஆறு சுத்தமாக வரண்டு போயிருப்பதைப் பார்த்தேன், ஆற்று மணலில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அவ்வ்வ்வ்வ்:)
ReplyDeleteதஞ்சாவூரில் காவிரியின் உபநதிகளான வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவையே உள்ளன. இங்கே கல்லணையில் திறக்கும் நீர் அவற்றிற்குச் சென்று சேர வேண்டும். பொதுவாகவே கும்பகோணம், மாயவரம் போன்ற இடங்களின் செழிப்பும், நீர் வளமும் தஞ்சையில் பார்க்க முடியாது! :))))
Deleteபெயர் மறந்துபோச்சு, இப்போதான் டக்கென கிட்னியில் தட்டிச்சுது.. அது திருவையாறு கீசாக்கா நான் சொன்னது...
Deleteஆமாம், ஞானி, திருவையாற்றில் இப்போது காவிரி இருகரையும் புரண்டு ஓடுகிறது!
Delete// பொதுவாகவே கும்பகோணம், மாயவரம் போன்ற இடங்களின் செழிப்பும், நீர் வளமும் தஞ்சையில் பார்க்க முடியாது! :))))//
Deleteஅது மட்டுமல்ல, தஞ்சாவூருக்கு அழகும் கிடையாது. காரணம் மராட்டிய மன்னன் சிவாஜியின் மகன் சாம்பாஜியின் காலத்தில் ஒரு அந்தணர் அளித்த சாபம் காரணமாக தஞ்சை பொலிவிழந்தது என்பார்கள்.
ஆமாம், படிச்சிருக்கேன்.
Deleteஅது சரி காவேரியா? காவிரியா? நீங்க தப்புடப்பா ஜொள்றீங்க கீசாக்கா கர்:))
ReplyDeleteஅதிரடி, கா+விரி= காவிரி தான் சரியான உச்சரிப்பு. பேச்சு வழக்கில் காவேரி என வந்துடுது. என்னோட நண்பர் ஒருத்தர் இ.கொ(இலவசக் கொத்தனார்)னு இருக்கார். காவேரினு எழுதினா தேடிப் பிடிச்சு வந்து சத்தம் போடுவார்! இப்போல்லாம் வரதில்லை! :)))) இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் பிசியோ பிசி!
Deleteஅதோட இல்லை, "ஜெயம்"னு எழுதினா அது பெண்ணின் பெயரைக் குறிப்பதாகவும், "ஜயம்"னு எழுதினா வெற்றியைக் குறிக்கும்னும் சொல்வாங்க. அதே போல் பெண்களின் பெயரை எழுதும்போது காவேரி என்றே எழுதணுமாம். :))))
Deleteஓ பெண்களின் பெயரை வச்சே இதனையும் நினைச்சேன்.. காவேரி எனத்தானே சொல்லுவோம்.
Deleteஆனா கங்கை என ஆற்றுக்கும் பெண்ணுக்கும் வைக்கிறார்கள்தானே.. அதை எப்படி விட்டார்கள்:)).. என்னோடு ஒரு டுவின்ஸ் படிச்சார்கள்.. கங்கா, ஜமுனா எனப் பெயர்.. அழகான பெயர்களெல்லோ?..
காவிரி - ஜயம் ... உண்மைதான். இதுதான் சரி.
Deleteகங்கை, கங்காவுக்கு, யமுனை, யமுனாவுக்கு, ஜமுனானும் சொல்வாங்க! அந்த நதிகளுக்கு எல்லாம் இந்த மாதிரியான நிபந்தனைகள் இல்லை! :))))
Deleteரொம்ப தாங்க்ஸ், எப்போ பாரப்பேன்னு ஆசையா இருந்தது..
ReplyDeleteவாங்க மிகிமா, காவிரித் தண்ணீரைப் பார்ப்பது போல் உங்களையும் அபூர்வமாத் தான் பார்க்க முடியுது! :))))
Deleteபடங்கள் அழகு.. நீங்கள் எடுத்ததோ? உங்கள் வீட்டருகில் ஓடுதோ ஆறு ?
ReplyDeleteஅதிரடி, எங்க குடியிருப்பு வளாகத்தின் பின் பக்கம், பக்கவாட்டில் எல்லாம் காவிரி தான்! அம்மாமண்டபம் படித்துறை எங்க வீட்டிலிருந்து நாலைந்து கட்டிடங்கள் தாண்டித் தான்!
Deleteபடங்கள் நான் தான் எடுத்தேன். மேல்வானத்துச் சூரியன் கண்களைத் திறக்கவே விடலை! ஆகவே சில படங்கள் தான் எடுக்க முடிந்தது. காலை சூரிய உதயத்தின் முன்னரே போய் எடுக்கணும். சூரிய உதயம் ஆனாலும் காவிரியை எடுக்கப் பாதிப்பு இருக்காது! காவிரி மேற்கே இருந்து தானே வரா! சாயங்காலச் சூரியனின் பிரதிபலிப்பு நதியில் மிக அழகாய் விழுந்திருந்தது. அதை எடுக்க முயன்றப்போத் தான் பாட்டரி சார்ஜ் இல்லைனு தெரிஞ்சது! எப்படியும் ஒருநாள் சூரியனார் மாட்டுவார்!
Deleteஓ சூப்பர், அப்போ கீசாக்கா இந்த ஆற்றிலும் தண்ணி இல்லாமல் மணலாக இருந்ததோ? மணலில் நீங்க நடந்திருக்கிறீங்களோ?
Deleteஇங்கே நம்மிடத்தில் இல்லை, ரஷ்யாவில் படிச்ச சில நட்புக்கள் சொன்னார்கள், அங்கு கொலீச் க்கு அருகே ஒரு ஆறு ஓடுமாம், அந்த ஆற்றுக்கு அந்தப்பக்கமா ஹொஸ்டல் இருந்ததாம், அப்போ எப்பவும் பாலத்தால ஏறி சுற்றியே ஹொஸ்டலுக்குப் போகோணுமாம், ஆனா நல்ல விண்டரில், ஆறு அப்படியே ஐஸ் கட்டியாகிடுமாம், அப்போ அங்கத்தைய ரஷ்யன் நண்பர்கள், தம்மை இரு பக்கமும் கையைப் பிடிச்சு, ஆற்றின் மேலால குறுக்கே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனச்சறுக்கி இழுத்துக் கொண்டு டக்கென ஹொலிச் போயிடுவினமாம்:).. கேட்க இன்றஸ்ரிங்கா இருக்குதெல்லோ, ஆனா கொஞ்சம் இடையில் எங்காவது ஆற்று மேல் ஐஸ் இல் ஒரு ஓட்டை இருப்பின் அவ்ளோதேன் கதை ஹையோ ஹையோ:).
ஞானி, மணலில் இறங்கி நடக்கணும்னா கீழே படித்துறைச் சேற்றில் இறங்கிக் கொஞ்ச தூரம் போகணும். அல்லது மேற்கே தள்ளிப் போய் இருக்கும் படித்துறை மூலமாப் போகணும். நான் அப்படி எல்லாம் ரிஸ்க் எடுப்பதில்லை. ஏனெனில் இங்கே இந்தச் சேறு புதைசேறு! கம்பித் தடுப்புக்கு அப்பால் போகக் கூடாது என எப்போதுமே சொல்வார்கள்.
Deleteபனிக்கட்டியில் இறங்கி நடப்பதற்கும் சறுக்குவதற்கும் மனோதைரியம் வேணும் தான்!
Deleteஇதெல்லாம் ஒன்றும் தெரியாமல் நான் (ங்கள்) அம்மா மண்டபத்துக்குப் போய், அருகே காவிரியில் காலை வைக்கலாம் என்று (ப்ரோட்சித்துக்கொள்ள) நினைத்தோம். போய்ப் பார்த்தால் அங்கெல்லாம் ஏதோ கிரியைகள் செய்த அறிகுறி (ச்ராத்தமோ என்னவோ). (நான் சொல்றது, மண்டபம் தாண்டியவுடன் வரும் வெளியிலேயே. அதற்கு அப்பால்தான் கம்பித் தடுப்பு இருக்கிறது). இது ஏதடா வம்பு என்று நினைத்து எதன்மீதும் படாமல், காலை வைக்காமல் திரும்ப வந்து சேர்ந்தோம்.
Deleteகாவிரியின் தண்ணீரில் நனைய எந்த இடம் சரியானது (இப்போ இல்லை. பொதுவாகவே)
அம்மாமண்டபத்தில் மண்டபத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் பித்ருகாரியம் செய்வதற்கென ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். பலரும் காவிரிக்கரையில் பிண்டம் கரைப்பதற்கோ, அஸ்தி கரைப்பதற்கோ வருவது உண்டு. அவங்க விட்டுச் செல்லும் துணிகளால் தான் நதியே வீணாகிறது. அங்கேயே குளித்து அங்கேயே காரியங்கள் செய்யலாம். எல்லா சாமான்களும் கிடைக்கும்.
Deleteஇங்கேயே கேட்டுவிடுகிறேன். நான் மேட்டூரில் இருந்தபோது, ஆடிப் பதினெட்டுக்குக்கு (ஆடிப் பெருக்கு) எல்லோரும் மேட்டூர் அணைப் பக்கம் சென்று காவிரி ஆற்றருகில் கொண்டாடுவார்கள். நான் சிறு வயதில் கிராமத்தில் இருந்தபோது, தாமிரவருணி படித்துறைக்குச் சென்று கலந்த சாதங்கள் கொண்டு சென்று உண்டு மகிழ்வோம் (அதுல என்ன மகிழ்ச்சினா, கிராமத்துப் பெண்களும் வருவாங்க, நண்பர்கள் எல்லோருடனும் சேர்ந்திருப்போம்)
Deleteநீங்கள்லாம் இப்போ இதுபோல் காவிரிக் கரைக்கு கலந்த சாதத்துடன் செல்லும் வழக்கம் உண்டா?
மதுரையிலே படிச்சுண்டு இருந்தப்போ பள்ளிகள் எல்லாம் ஆடிப்பெருக்குக்கு அரை நாள் லீவு விடுவாங்க கூடப் படித்த பல பெண்களும் மத்தியானமாப் புட்டுத்தோப்புப் படித்துறைக்குப் போகப் போகிறோம் என்பார்கள். ஆறு இவ்வளவு மோசமாக இருந்த காலம் இல்லை அது! அதோடு அப்போ சுவாமி புறப்பாடும் இருக்கும். ஆனால் நாங்க போனதில்லை. அப்பா அனுமதிச்சதில்லை. இங்கே கல்யாணம் ஆகி வந்தப்புறமும் முதல் ஆடியில் இருந்து நாங்க தனியாத் தான் கொண்டாடிட்டு இருக்கோம். காவிரிக்கரைக்குப் போவோம்னு மாமியார் சொன்னது தான். சிறுபிள்ளைகளுக்குச் சப்பரம் செய்து அலங்கரித்துக் காவிரிக்கரைக்கு ஓட்டிச் செல்ல வைப்பார்கள். சப்பரம் பார்த்திருக்கேன். ஆனால் ஆடி மாசம் காவிரிக்கரைக்குப் போய்ப் பார்த்ததில்லை.
Deleteஇங்கே அம்மாமண்டபத்தில் உள்ளூர், வெளியூரில் இருந்தெல்லாம் கூட்டம் வரும். தெருவின் இரண்டு பக்கமும் சின்னச் சின்னக் கடைகள் போட்டுடுவாங்க!
Deleteஅதிரா நீங்கள் சொல்லியிருக்கும் ரஷ்யா யுனிவெர்ஸ்ட்டி நார்தர்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி என்று நினைக்கிறேன் அதன் அருகில் அழகான பெரிய ஆறு ஓடுகிறது!! வின்டடரில் உறைந்துவிடும் ஆம்...
Deleteகீதா
நெல்லை, காவிரியில் காலை நனைக்கணும்னா மேற்கே கொஞ்சம் தள்ளி கீதாபுரம் பக்கம் உள்ள படித்துறை, கம்பரசம்பேட்டை ஆகிய இடங்களில் போய் நனைச்சுக்கலாம். காவிரி புஷகரம் போது கம்பரசம்பேட்டைக்குக் கொஞ்சம் தள்ளிப் போய்க் குளிச்சுட்டு வந்தார் நம்ம ரங்க்ஸும் இன்னும் சிலரும்.
Deleteஆடியிலே பெருக்கெடுத்து
ReplyDeleteஆடி வரும் காவேரி...
வாடியம்மா எங்களுக்கு
வழித்துணையாக!...
எம்மை வாழ வைக்க
வேணுமம்மா.. வளர்பிறையாக!...
கார்முகிலின் கருணையினால்
காவிரியாள் பொங்கினாள்!..
கனிவுகொண்ட நெஞ்சங்களில்
கவிதையாகத் தங்கினாள்!..
வாழ்க வையகம்!..
வாங்க துரை, அருமையான கவிதை! காவிரி என்றென்றும் வந்தாரை வாழ வைப்பாள். அப்படி இருக்கையில் தன் புகுந்த வீடான தமிழகத்தை விட்டுக் கொடுப்பாளா? எப்படியும் ஓடோடி வந்துடுவா!
Deleteநல்ல பாடலை நினைவு படுத்தினீர்கள் துரை ஸார்..
Deleteஸ்ரீராம்.... எனக்கு இது ஏற்கனவே கேட்ட பாடல் போலவே இல்லை. ஆனால், சினிமாப் பாடல் போல இதை இசையமைக்கலாமே, இரண்டாவது பகுதியை (சரணத்தை) மாற்றினால் நல்லா வருமோ என்று தோன்றியது.
Deleteகார்முகிலின் கருணையினால் காவிரியாள் பொங்கிவிட்டாள்
கனிவு கொண்ட நெஞ்சங்களில் கவிதையாகத் தங்கிவிட்டாள்
அப்புறம் எதுக்கு இதை எழுதுவது என்று விட்டுவிட்டேன். நீங்கள் எழுதியதைப் படித்தபிறகுதான் இது ஏற்கனவே வந்த பாடல் என்பதைப் புரிந்துகொண்டேன்.
எனக்கு இப்போத் தான் தெரியும்!
Deleteஅழகான பாட்டு. இது படப் பாடலா? எந்தப் படத்தில்...அப்போ எபியில ஸ்ரீராம போடச் சொல்லிட்டா போச்சு ஹா ஹா
Deleteகீதா
கார்முகிலின் கருணையினால்
Deleteகாவிரியாள் பொங்கினாள்!..
கனிவுகொண்ட நெஞ்சங்களில்
கவிதையாகத் தங்கினாள்!..//
அருமையான வரிகள்!!! யார் எழுதியதோ?!!!
துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் நோட்ஸ் ப்ளீஸ் ஹா ஹா ஹா ஹா
கீதா
பச்சைபசேல்னு குளுமையா இருக்கு வீடும் அதை சுற்றிய இடமும் ..
ReplyDeleteஎங்கள் பிளாக்கில் முந்தி உங்க வீட்டு மொட்டை மாடியை பார்த்த நினைவு இருக்கு
ஆமாம் ஏஞ்சல், நானுமே நிறையப் படங்கள் போட்டிருக்கேனே! எ.பியிலும் வந்தன!
Deleteமருங்கு வண்டு சிறந்தார்ப்ப
ReplyDeleteமணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி
செங்கோல் வளையலைனு தண்ணீர் வரச்சே சொல்லுகிறோம். இல்லைனா வேறே மாதிரிச் சொல்லுவோம்! :))))
Deleteஉங்களுக்கான பதில் அடுத்த பதிவில் இ.கொ. கொடுத்திருக்கார்.
Deleteமாடியில் ரெண்டு wooden பார்க் சீட் இருந்தது :) எனக்கு பிடிச்ச யெல்லோ கலரில்
ReplyDeleteமொட்டை மாடியை பார்த்தா வற்றல் வடாம் காயப்போட ஆசையா இருக்கு .
இந்த காவிரி எப்பவும் இப்படி இருக்குமா .வேறு காட்சிகளை நினைக்க முடியலை இப்படியே செழிப்பா இருக்கட்டும்
எங்க மொட்டை மாடியில் சிமென்டால் கட்டப்பட்ட பெஞ்சுகள். மேற்கே இந்தப் பக்கம் உள்ள பகுதியிலும் உண்டு. கிழக்கே உள்ள பகுதியிலும் உண்டு! நடைப்பயிற்சி செய்ய நல்லா இருக்கும்.
Deleteபிரபலமான மொட்டை மாடி! ஆம், கண்டிப்பாக. அங்கு நடக்க நீண்ட இடம் உண்டு. உட்கார்ந்து ஓய்வெடுக்க, புத்தகம் படிக்க அழகிய பெஞ்ச் இருக்கைகள் உண்டு..
ReplyDeleteஆமாம், நல்ல மொட்டை மாடி! சாயந்திரம் ஏழு மணிக்குக் காத்து அப்படியே அள்ளிக் கொண்டு போகும். அது எந்தப்பருவமானாலும். காலையிலும் இளங்காற்று மணத்துடன் வீசும்! உடலும், மனமும் சிலிர்க்கும்.
Deleteகாவிரியில் புரண்டோடும் காவிரி (மகளா? தாயா?!!) பார்க்கப் பார்க்கப் பரவசம் வருகிறது. எவ்வளவு தண்ணீர்? பார்த்துதான் எத்தனை நாட்கள் ஆகிவிட்டன?
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம், அனைவருக்குமே காவிரியில் தண்ணீர் வந்தால் மட்டும் என்னமோ மனம் நிறைகிறது. இதே மத்த ஆறுகளில் தண்ணீர் வந்தால் வருவதில்லை. தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு இத்தனை முக்கியத்துவம் இல்லை!:))))
Deleteஅதுக்குப் பெரிய காரணம் இல்லை. சோழ வளநாடு சோறுடைத்து என்பதிலிருந்தே தெரிந்திருக்குமே.. இங்குதான் நதியின் தண்ணீரால் நெற் பயிர்கள் வளரும். நதியில் தண்ணீர் இல்லாவிட்டால் உணவுக்குப் பிரச்சனை வந்துவிடும்.
Deleteதாமிரபரணியை சமீபத்தில் பார்த்தேன். நிறையத் தண்ணீர் ஓடினாலும், எங்கள் காலம்போல் வராது. அந்தப் படங்களை எ.பிக்கு அனுப்ப்லாம்னு நினைத்தேன். இளமைக் காலத்தில் பார்த்ததற்கும் இப்போது காண்பதற்கும் எவ்வளவு வேறுபாடு. நதியின் முக்கியத்துவம் தெரியாதவர்களாக மக்கள் ஆகிவிட்டார்கள்.
நெ.த. திருநெல்வேலி மாவட்டத்திலும் நெற்பயிர்கள் உண்டு. அதோடு இல்லாமல், "மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் எனக் கருதி ஆனை கட்டிப் போரடித்த அழகாய தென் மதுரை"யிலும் நெல் பாசனம் உண்டு! :)))) ஆனாலும் காவிரியில் நீர் என்றால் காவிரிக்கரையில் பிறக்காத எனக்கே மனதில் சந்தோஷம் ஏற்படத் தான் செய்கிறது. தாமிரபரணி நாங்க பார்த்தப்போ கொஞ்சமானும் சுத்தமாகக் காணப்பட்டது. இப்போ சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருத்தர் போட்டிருந்த படங்கள் மனதை நோக வைச்சுடுத்து!
Deleteநான் படங்களை அனுப்புவேன், ஸ்ரீராம் வெளியிடுவாரென்றால்.ஹா ஹா.
Deleteபடங்களை அனுப்புங்கள்! ஶ்ரீராம் வெளியிடுவார்.
Deleteமணல்நிறை காவிரியை முதலில் படம் எடுத்து விட்டு, அப்புறம் இதனை வெளியிட்டிருந்தால் வித்தியாசம் இன்னும் நிறைய தெரியும்! சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும்! ஆனால் மனதில்தான் சமீபத்து மணல் காவிரிதானே நிறைந்திருக்கிறது!
ReplyDeleteஅதுவும் எடுத்திருந்தேன். முன்னரே போடுவதற்காக! அதோடு கூட இன்னும் சில சமையல் செய்முறைப்படங்களும் ஒரு திப்பிச சமையல் செய்முறைக்குறிப்பும் எடுத்திருந்தேன். எல்லாம் கணினியில் அப்லோடு செய்வதற்குள்ளாக அந்த செல்லே காணாமல் போயிடுச்சு! அதுக்கப்புறமாக் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் காவிரியில் இருந்ததால் எடுக்கலை!
Deleteகாவிரியை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா...!
ReplyDeleteநன்றி தம்பி! உங்க பெயர் தெரிந்தால் நல்லா இருக்கும்.
Deleteஎனக்கு ஒரு தலை போகிற கேள்வி. அம்மா மண்டபம் என்பதின் பெயர் காரணம் என்ன? சரியான விடை தெரிந்தும் கூறாவிட்டால் ..,....
ReplyDeleteஏற்கெனவே முன்னர் எழுதி இருக்கேன். இருந்தாலும் திரும்பச் சொல்றேன். திருமலை நாயக்கரின் அம்மாவுக்காக இந்தப் படித்துறை ஏற்படுத்தப்பட்டது என்கின்றனர் சிலர். இன்னும் சிலர் வேறே ஏதோ நாயக்க மன்னரின் பெயரைச் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் இதற்கும் ராணி மங்கம்மாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பலரும் ராணி மங்கம்மா பெயரில் உள்ளது என நினைக்கின்றனர். இல்லை! நாயக்க மன்னன் தன் தாய்க்காக ஏற்படுத்திக் கொடுத்த படித்துறை. உள்ளே ஶ்ரீராமருக்கு நேர் எதிரே ஆஞ்சி இருப்பார். பிள்ளையாரும் உண்டு. நடுவில் உள்ள மண்டபத்தில் தான் நம்பெருமாள் வந்து தங்குவார். நதிக்கரையில் பிள்ளையார்,சிவன், நவகிரஹங்கள், காவிரி அம்மன் ஆகியோருக்குக் கோயில்கள் உண்டு. சிவன் கோயிலில் பிரதோஷம் நன்றாக நடைபெறும். முன்னால் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் நிற்க முடியறதில்லை என்பதால் அப்புறமாப் போக முடியலை! நாகராஜாக்களும் இருக்கின்றனர்.
Deleteகரைபுரண்டோடும் காவிரியைக், கண்ணால் பார்க்கக் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
ReplyDeleteஅரிதிலும் அரிதான உங்கள் வருகை காவிரியைத் தண்ணீரோடு கண்டது போன்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது அம்மா.
Deleteநீர் நிறைந்த காவிரியை பார்த்ததில் மகிழ்ச்சி. இனி எப்போதும் இப்படியே காவிரி மற்றும் அணைத்து ஆறுகளிலும் நீரோட இறைவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteஉண்மை மஹேஷ், இன்று காலை பார்த்தப்போ நீரின் அளவு இன்னமும் ஏறி இருப்பது தெரிந்தது. இப்படியே நிரந்தரமாக இருக்க இறைவன் அருள் புரியட்டும். மிக்க நன்றி உங்கள் பிரார்த்தனைகளுக்கு.
Deleteஅது சரி, தி/கீதாவும் , பானுமதியும் ஏன் என் பதிவுக்கு அதிகம் வரதில்லை. பானுமதி படிச்சிருக்காங்க என்பது அவங்க பேச்சிலே இருந்து தெரியும். கருத்துச் சொல்ல நேரம் இல்லையோ! கொஞ்சம் சிரமம் தான். எல்லாப் பதிவுகளுக்கும் போய்க் கருத்துச் சொல்லுவது!
ReplyDeleteஆஹா... கரை புரண்டு ஓடும் காட்சி.... படங்கள் மூலம் பார்க்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteகாவிரி பெருக்கெடுத்து ஓடும் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. உங்கள் வீட்டுப் பின்புறம் ஆறு அழகு இல்லையா. இப்போது கூலாகவும் இருக்கும்..
ReplyDeleteதுளசிதரன்.
கீதாக்கா எல்லா படமும் செமையா இருக்கு. பார்க்கவே என்னா அழகு காவிரி!! ஹப்பா...எனக்கும் கேமராதான் வொர்கவுட் ஆகுது மொபைல் அத்தனை எளிதாக வருவதில்லை எனக்கும்..ஆனால் என் கேமரா இப்போது வேலை செய்யவில்லை.....
கீதா
வாங்க தி.கீதா. என்னோட காமிராவும் என்னமோ சரியாத் திறக்கலை. என்னனு பார்க்கணும்! 2 நாளாப் படுத்துக் கிடந்தாச்சு! :))))
Delete