வட மாநிலச் சுற்றுலா போகிறவர்கள் முக்கியமாய் கேதார்நாத், பத்ரிநாத், முக்திநாத், கயிலை யாத்திரை, கங்கோத்ரி, யமுனோத்ரி செல்பவர்கள் மற்றும் ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாவட்டச் சுற்றுப் பயணம் செல்பவர்கள் ஆகஸ்ட் 20 தேதிக்குப் பின்னர் கிளம்புங்கள்! அப்போத் தான் மழை நின்று இதமான சீதோஷ்ணமாக இருக்கும். அக்டோபர் 20 தேதிக்குள் சுற்றுப் பயணத்தை முடிச்சுக்கணும். அதன் பின்னர் குளிரும் ஆரம்பிக்கும். இமயமலைத் தொடர்களின் முக்கியக் கோயில்களான பத்ரி, கேதார் நாத் கோயில்கள் தீபாவளிக்குப் பின்னர் மூடப்படும்! இப்போது தென் மேற்குப் பருவ மழை என்பதாலும் அது இந்த வருஷம் முழு வீச்சுடன் பெய்து வருவதாலும் இப்போது வட மாநிலச் சுற்றுப் பயணங்களைத் தவிருங்கள். ராஜஸ்தான், குஜராத்தில் கூட இந்த வருஷம் பிகானீர், உதய்பூர், மற்றும் குஜராத்தின் ஜாம்நகர் போன்ற ஊர்களில் வெள்ளம்! மும்பை கேட்கவே வேண்டாம். வருடம் தோறும் அவதி!
ஒரிஸ்ஸாவில் ரயில்பாதையில் தண்ணீர் புகுந்து ரயில் நிறுத்தப்பட்டுப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பருவத்தில் நம் தமிழ்நாட்டில் தான் பூகோள ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பதால் மழை அதிகம் பெய்யாது! வடகிழக்குப் பருவத்தில் தான் நமக்கு மழை! மற்றபடி தென்மேற்குப் பருவம் இந்தியா முழுவதும் இருக்கும். கவனமாகப் பயணம் செய்யவும். ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் அதிகமாக இம்மாதங்கள் சுற்றுலா மேற்கொண்டு ஆங்காங்கே மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகின்றனர். சுற்றுலா அமைப்பாளர்களும் இது குறித்துச் சிந்திப்பதில்லை. கங்கை, யமுனை போன்ற நதிகள், மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகள் அனைத்தும் பூரணப் பிரவாகத்தில் ஓடும். எச்சரிக்கை தேவை. கர்நாடகாவிலும் இப்போது சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்நாடகாவில் வடகிழக்குப் பருவத்திலும் சில சமயங்கள் மழை இருக்கும். அதே போல் வடகிழக்கு மாநிலங்களான கல்கத்தா வரை வடகிழக்குப் பருவக்காற்றின் தாக்கம் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல டிசம்பர் முதல் மார்ச் வரையே சரியான பருவம்.
ஒரிஸ்ஸாவில் ரயில்பாதையில் தண்ணீர் புகுந்து ரயில் நிறுத்தப்பட்டுப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பருவத்தில் நம் தமிழ்நாட்டில் தான் பூகோள ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பதால் மழை அதிகம் பெய்யாது! வடகிழக்குப் பருவத்தில் தான் நமக்கு மழை! மற்றபடி தென்மேற்குப் பருவம் இந்தியா முழுவதும் இருக்கும். கவனமாகப் பயணம் செய்யவும். ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் அதிகமாக இம்மாதங்கள் சுற்றுலா மேற்கொண்டு ஆங்காங்கே மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகின்றனர். சுற்றுலா அமைப்பாளர்களும் இது குறித்துச் சிந்திப்பதில்லை. கங்கை, யமுனை போன்ற நதிகள், மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகள் அனைத்தும் பூரணப் பிரவாகத்தில் ஓடும். எச்சரிக்கை தேவை. கர்நாடகாவிலும் இப்போது சுற்றுப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்நாடகாவில் வடகிழக்குப் பருவத்திலும் சில சமயங்கள் மழை இருக்கும். அதே போல் வடகிழக்கு மாநிலங்களான கல்கத்தா வரை வடகிழக்குப் பருவக்காற்றின் தாக்கம் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல டிசம்பர் முதல் மார்ச் வரையே சரியான பருவம்.
நல்லதொரு எச்சரிக்கை பதிவு. நன்றிம்மா
ReplyDeleteநன்றி ராஜி! இரண்டு முறை உங்களுக்கு பதில் கொடுத்தும் மாயமாய் மறைகிறதே! ம்ம்ம்ம்?
Deleteஅப்பாடி, ஒரு வழியாப் போயிடுச்சு! :)))) என்னமோ மாஜிக் வேலை எல்லாம் ப்ளாகர் செய்யுது! :)))))
Deleteநல்லது இமயமலை பயணத்தை தேர்தல்வரை ஒத்தி வைக்கிறேன். தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஹாஹா, கில்லர்ஜி, அத்தனை நாட்கள்/வருடங்கள் ஏன் காத்திருக்கணும்! இதோ அடுத்து ஆகஸ்ட் தானே! கிளம்புங்க! :)))))
Delete//நல்லது இமயமலை பயணத்தை தேர்தல்வரை ஒத்தி வைக்கிறேன். தகவலுக்கு நன்றி.///
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்கு தேர்தல் எதுக்கு இன்றே ஃபிளைட் டில ஏறுங்கோ:))
அதானே!
Deleteதனியா அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணாதீங்க. "தமிழர் எழுச்சித் தலைவர்" ரஜினி விரைவில் பயணிக்கும்போது நாமிருவரும் சேர்ந்துக்கலாம். ஹா ஹா.
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழன் மெதுவாப் பேசுங்கோ.. ரஜனி அங்கிளின் ரசிகர்கள் பொயிங்கப்போகினம்:))
Deleteஆமாம் அக்கா!! நல்ல குறிப்புகள்!
ReplyDeleteஅது போல தென்மேற்குப் பருவ மழையின் போது கேரளா கூட சில இடங்கள் தவிர்ப்பது நல்லது. அதுவும் இந்த வருடம் அங்கும் நல்ல மழை. 10 நாட்கள் முன்பு மலப்புரம் மாவட்டம், ஊட்டி எல்லாம் செம மழை. கல்லூரி பள்ளிகள் எல்லாம் லீவு விடும்படியான அளவு. நிற்காத மழை அதுவும் அங்கு எல்லாமே மலைகள். எனவே....
அது போல நாகர்கோவிலும் கூட இரு பருவங்களிலும் மழை பெறும் இடம். அதுவும் வடகிழக்குப் பருவ மழையில் சில வருடங்கள் எங்கள் ஊர் எல்லாம் உடப்பெடுத்து சமீபத்தில் கூட சென்ற வருடம் அக்டோபர் நவம்பரில் எங்கள் ஊர் கிராமம் வரை ஆற்று நீர் புகுந்து வீட்டுப்படிகள் வரை நிறைந்துவிட்டது. அப்படி ஆகும் சமயம் திருநெல்வேலி நாகர்கோவில் சாலையில் இருக்கும் பழையாறு பொங்கினால் நாகர்கோவில் டவுனுக்குள் போக முடியாது. நாங்கள் பல முறை எங்கள் ஊர் சுற்றி தண்ணீர்க்காடாக இருந்து மெயின் ரோடு கூடச் செல்ல முடியாத அளவு ஆகிவிட்டதுண்டு. அது போல திருவனந்தபுரம் ரயில் பாதை மற்றும் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் திருவனந்தபுரம் உள்ளே செல்ல கரமனை ஆறு பெருக்கெடுத்தால் முடியாது. சாலைகளும் கூட சில இடங்களில் (மிக மிக ஒடுங்கிய சாலை என்பதால்) பழுதாகும்...
கீதா
வாங்க தி/கீதா, ஊட்டி மழை பத்தித் தெரியும். அங்கே இருந்திருக்கோமே! ஆனால் கேரளம் மழையை முதல் முதல் வர வைக்கும் மாநிலம் என்றாலும் ஜூன், ஜூலை மாதத்தில் அங்கே பிரயாணம் செய்ததில் அவ்வளவாகப்பாதிப்புத் தெரியவில்லை. திருவனந்தபுரம் போனோம். மற்றும் குருவாயூர் போயிருக்கோம். நாகர்கோயில், கன்யாகுமரியும் போனோம். வெயில் தெரியவில்லை! மற்றபடி மழை எல்லாம் அவ்வளவாய்த் தெரியலை! இப்போத் தான் 2015 ஆம் ஆண்டில் போனோம். ஆகவே அதைக் குறிப்பிடவில்லை. மேலும் கேரளாவில் மழையினால் சேதம் என்பதையே இப்போத் தான் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்கிறோம். இத்தனை வருடங்களில் தெரியாது!
Deleteஆவ்வ்வ்வ் கீதாக்கா எப்போ ரேடியோ ஜக்கியானாஆஆஆஆஆஆ?:)) ஜொள்ளவே இல்லை:))
ReplyDeleteஹாஹாஹாஹா, நண்பர்கள் சிலரின் திண்டாட்டங்களைப் பார்த்து!
Deleteஇப்போதெல்லாம் பயணங்களை நினைப்பதில்லை ஆனால் இது என் போன்றோருக்கு அல்லவே
ReplyDeleteஅதனால் என்ன ஐயா, பரவாயில்லை. இந்த வயதில் அதிகம் பயணம் செய்வது உடல் நலனுக்கு உகந்தது அல்ல.
Delete//சுற்றுலா அமைப்பாளர்களும் இது குறித்துச் சிந்திப்பதில்லை.//
ReplyDeletepros and cons பத்திலாம் அவங்களுக்கு(டிராவல் ஏஜெண்ட்ஸுக்கு ) கவலையில்லை .இவங்களுக்கு பணம் தானே முக்கியம்..எல்லாருக்கும் சேரட்டும் இதுபோன்ற தகவல்கள் .குறிப்பா சவுத் சைட் இருக்கவங்க வட இந்தியா பற்றி அறிந்திருக்க நியாயமில்லை
ஆமாம், ஏஞ்சல்! ஒவ்வொரு முறையும் பத்ரி, கேதார்நாத், கயிலை யாத்திரை செல்பவர்கள் ஆங்காங்கே மாட்டிக் கொண்டு தவிப்பதைப் பார்க்க முடிகிறது. தட்பவெப்பநிலை பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல் பயணம் மேற்கொள்வது ஆபத்து என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியவில்லை.
Deleteரொம்ப உபயோகம். நம்ம குழுவுல இந்தமாதிர விஷயங்கள் தெரிஞ்சவங்க இருப்பது ரொம்ப உபயோகம். (இரண்டு கீதா மேடம்ஸ், வெங்கட் போன்றோர்)
ReplyDeleteவாங்க நெல்லை, என்னைவிட, வெங்கட்டும் தி/கீதாவும் இன்னும் இதில் அனுபவம் உள்ளவர்கள்.
Deleteஇந்த மாதங்களில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான பதிவு.
நன்றி வெங்கட்
Deleteநன்றி
ReplyDeleteநன்றி
Deleteநன்றி அம்மா...
ReplyDeleteநன்றி DD
Deleteநல்ல ஆலோசனை.
ReplyDeleteநன்றி Sriram
Deleteஆகஸ்ட் மூன்று நான்கு ஐந்து ஒரு பயணம் இருக்கக் கூடும். கல்லணை போன்ற இடங்கள்..
ReplyDeleteஆகஸ்ட் 3 அன்னிக்குப் பதினெட்டாம் பெருக்கு. ஜ்யேஷ்டாபிஷேகம் ஆகி 48 நாட்கள் ஆகி இருந்தால் அன்னிக்கு நம்பெருமாள் அம்மாமண்டபம் வருவார். அது பத்தி இனித் தான் தெரியும். 5 ஆம் தேதி மாமனார் ச்ராத்தம். 4 ஆம் தேதி முன்னேற்பாடுகள். நீங்க 3 ஆம் தேதி இங்கே எங்க வீட்டுக்கு வந்தால் இங்கேயே சாப்பிட்டுக்கலாம். இங்கிருந்து கல்லணை சுமார் 17 கிலோ மீட்டர் தான்! இங்கே சாப்பாடை முடித்துக்கொண்டு உங்கள் பயணத்தைத் தொடரலாம். ச்ராத்தம் வருவதால் உங்களை இங்கே தங்கச் சொல்ல முடியவில்லை! :))))
Deleteதங்கச் சொல்வதா?
Delete13 முதல் 20 பேர்கள்!
ஸ்ராத்தம் இல்லை என்றாலும் அது சிரமம்.
Oho, அப்போச் சரி. என்றாலும் கல்லணையிலோ, முக்கொம்பிலோ, காவிரியிலோ குளிக்க இறங்க வேண்டாம். முக்கொம்பில் சகதி நிறைய! கல்லணையில் மணல் எடுத்து, எடுத்து எங்கே மேடு, எங்கே பள்ளம்னு தெரியாது! காவிரியில் இறங்கினால் நதியின் வேகத்துக்கு இழுக்கும். போலீஸ் இருக்குத்தான் என்றாலும் கவனமாக இருக்கணும். கல்லணை என்பது ஓர் அணைக்கட்டும் அல்ல! ரெகுலேட்டர். காவிரித் தண்ணீரை அதன் உபநதிகளுக்கும் அதிகப்படி நீரைக் கொள்ளிடத்துக்கும் பிரித்துக் கொடுக்கும். கொள்ளிடம் நீர் தான் வெள்ளம் அதிகம் ஆனால் வீராணம் போகிறது. இதெல்லாம் தெரிஞ்சிருக்கும் என்றாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாச் சொல்லி வைச்சேன்.
Deleteஎச்சரிக்கை பதிவு பகிர்கிறேன் அம்மா...!
ReplyDelete