எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 28, 2018

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை!

காலம்பர நாலேமுக்காலுக்கெல்லாம் கிளம்பிட்டோம்.நடுவில் எங்கும் நிறுத்தலை. கல்லணை வழியாகவே இப்போல்லாம் போறோம். அருமையான சாலை போட்டிருக்காங்க என்பதால் பயணம் சிரமம் இல்லை. திருவையாறு வரும் வரைக்கும் நல்லாவே இருக்கு! அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கஷ்டம். மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் பராமரிப்பின் கீழ் வரும் சாலைகள்! கல்லணையில் நீர் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. அதிகப்படி நீர் கொள்ளிடம் போய்க் கொண்டிருக்க, இங்கே உள்ள நீர் பிரித்து அனைத்து உபநதிகளுக்கும் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கும்பகோணம் காவிரியிலும், அரிசிலாற்றிலும் இன்னும் தண்ணீர் வரவில்லை. அநேகமாய் நேத்துக்கு வரலாம் என்று சொன்னார்கள். நேற்று சாயங்காலமாய் வந்திருக்கலாம்.

ஆனாலும் பல வயல்களிலும் முதல் போகம் முடிந்து இருந்தது தெரிந்தது. வழி நெடுக அதே செழுமை! காவிரி வருடா வருடம் இங்கே வராளோ இல்லையோ, தன் நெஞ்சின் ஈரத்தை இங்கேயே விட்டிருக்கிறாள். ஆகையால் கரையோரம்முழுவதும் அடர்த்தியாக தென்னஞ்சோலைகள், மூங்கில் கொத்துகள், மற்ற மரங்கள்! வாழை பயிரெல்லாம் இங்கே திருச்சிப் பக்கம் வந்தால் தான் அதிகம் பார்க்க முடியும். அங்கெல்லாம் அதிகம் நெல், அரிதாகக் கரும்பு! ஊருக்கு எட்டு மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்துட்டோம். பூசாரி அபிஷேஹத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அங்கே அபிஷேஹம் முடிந்து மாவிளக்குப் போட்டு விட்டுக் கிளம்புகையில் மணி பத்து ஆகி விட்டது. அதுக்குள்ளாகக் கும்பகோணத்தில் இருந்து சாப்பாடு போடுபவர்களிடம் இருந்து அழைப்பு மேல் அழைப்பு! என்னதான் காரில் போனாலும் 40 நிமிஷம் ஆகும். 22 கிலோ மீட்டர் போக வேண்டாமா? சாலைகள் குறுகியவை! அங்கே சாலை விரிவாக்கம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. அப்படியும் சில முக்கியமான சந்திப்புக்களில் சாலை விரிவாக்கம் செய்யத் தான் செய்திருக்கிறார்கள்.

எதிர் எதிரே இரண்டு வண்டி வந்தால் ஒன்று நின்று கொண்டு மற்றொன்றை வழி அனுப்பி விட்டுத் தான் மேலே முன்னேறலாம். சாலை ஓரமாக ஒதுங்கவும் முடியாது. ஒரு பக்கம் அரிசிலாற்றங்கரை. இன்னொரு பக்கம் வயல்களின் கரை! கீழே பள்ளமாக இருக்கும். அந்தச் சாலையில் வண்டி ஓட்டுபவர்களைக் கை எடுத்துத் தான் கும்பிட வேண்டும். அதுவும் கருவிலி வழியாகக் கும்பகோணம் வரும் வழியில் கூந்தலூரில் இருந்து கடமங்குடி வரைக்கும் சாலையைக் கொத்திப் போட்டிருக்காங்க. போன முறையே போட்டிருந்தது. இன்னமும் சாலை போடவில்லை! இன்னும் அதிக தூரம்  கொத்திப் போட்டிருக்காங்க! நாங்க மாரியம்மன் கோயிலில் இருந்து பெருமாளை தரிசனம் செய்ய வந்தால் பட்டாசாரியார் பூட்டிக் கொண்டு போய்விட்டார். காத்திருக்கப் பொறுமை இல்லை. அல்லது வேறு வேலை வந்திருக்கணும். பின்னர் அவர் பையருக்குத் தொலைபேசி அவரை வரவழைத்து தரிசனம் செய்து கொண்டு கிளம்பிக் கருவிலிக் கோயிலில் ஓர் அவசரமான தரிசனம் செய்து சற்குணேஸ்வரருக்கும், சர்வாங்க சுந்தரிக்கும் ஹலோ சொல்லிட்டுக் கிளம்பினோம். மீண்டும் அழைப்பு!

வண்டியை வேகமாய் விடச் சொன்னால் சாலை முழுக்கப் பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வெட்டிப் போட்டிருக்காங்க! என்னத்தைச் சொல்றது! ஒரு வழியாப் பதினொன்றே காலுக்குக் கும்பகோணம் போய் அவங்க வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தோம். ரங்க்ஸுக்கு பழக்கமான ஊர் தான் என்றாலும் வீடு கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஒருத்தரிடம் வழி கேட்டதுக்கு அவர் அங்கே சாப்பிடவா வந்திருக்கீங்க? அவங்களுக்குத் தெரியுமா? சாப்பாடு போடறேன்னு சொல்லி இருக்காங்களா? என்று ஆயிரம் கேள்வி கேட்டார். சரிதான், இவங்க ரொம்பவே பிரபலம் போலனு நினைச்சேன். அங்கே போனதுமே தட்டெல்லாம் போட்டு (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ஓட்டலுக்குப் போனால் கூட வாழை இலை கேட்கும் டைப்) தயாராக இருந்தது. போனதுமே நான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டுக் கொஞ்சம் போல ரசம், கொஞ்சம் போல மோர் ஒரு கரண்டி சாதத்திலேயே முடித்துக் கொண்டேன். அதுக்குள்ளே வயிறு கடபுடா! மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு அதை அதட்டி சமாதானம் செய்துட்டு ரங்க்ஸ் சாப்பிட்டு வந்ததும் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

வரச்சே தான் திருச்சியிலிருந்து கல்லணைக்கு வந்து கொண்டிருக்கும் காவிரியைப் படம் எடுக்க முடிந்தது. போகும்போது நல்ல இருட்டு என்பதோடு எனக்கும் களைப்பாக இருந்தது. ஓரளவுக்குப் படங்கள் எடுத்தேன். ஓட்டுநருக்கு வீடு திரும்பும் குஷியோ என்னமோ ரொம்பவே வேகமாக வந்தார். கல்லணைப் பாலத்தில் இப்போக் காவல் போட்டிருப்பதால் காவல்துறை ஊழியர் தான் வண்டிகளைப் பார்த்து அனுப்புகிறார். அதனால் கொஞ்சம் தாமதம் ஆயிற்று. இல்லை எனில் நாம் பாதிப் பாலம் போனதுமே எதிர்ப்பக்கம் இருந்து அலறி அடித்துக் கொண்டு வண்டியை ஓட்டி வந்து இடிக்கிறாப்போல் நிற்பாங்க! நாம் தான் பின்னால் போகணும்.

நல்ல வேளையாகப் போலீஸ் வந்து வருவோர் போவோரை முறைப்படுத்தியதால் அதிக நேரம் காக்காமல் அங்கிருந்து பாலத்தில் ஏறித் தாண்டி வந்தோம். 2மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு! போயிட்டு வந்த களைப்புத் தான் அதிகம்! இம்முறை 2,3 நாட்கள் சாப்பாடே இல்லாமல் ஹார்லிக்ஸ் மட்டும் குடித்துக் கொண்டு போனதில் ரொம்பவே சிரமமாக இருந்தது. இந்தப் பெயின்டிங் வேலை முடியும்வரை இந்த அவஸ்தை இருக்கும். :( வியாழன் அன்னிக்கு நான் பேசும்போதே பானுமதி உடம்பு சரியில்லை எனக் கண்டு பிடித்ததோடு வீசிங் சப்தமும் வருவதாய்ச் சொன்னாங்க! கொஞ்சம் ஆச்சரியமாவே இருந்தது எனக்கு! !!!!!!!!!!!



தூரத்தில் தெரியும் காவிரி


வழி நெடுகச் சோலைகள்


மரங்கள் இடையே தெரிந்த காவிரியைப் படம் எடுக்கும் முன்னே வண்டி அந்த இடத்தைக் கடந்து விட்டது! :(


திருவையாற்றைத் தாண்டிக் கல்லணை செல்லும் வழி! திருச்சி நோக்கி! 

காவிரியில் வெள்ளம் என்பதைக் கேள்விப் பட்டுப் பார்க்க வந்திருக்கும் சுற்றுலாப் பயணி! கல்லணையில்!


மக்கள் கூட்டமெல்லாம் தென் பகுதிக்குப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தைத் தாண்டித் திருச்சி செல்ல வேண்டி இருந்ததால் அந்தப் பக்கம் போகலை. அதோடு அந்தப் பக்கம் இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். 


பாலத்தைக் கடக்கையில் வரும் மதில்! கீழே காவிரி



பாலத்தில் போகும்போது!




37 comments:

  1. //காவிரி வருடா வருடம் இங்கே வராளோ இல்லையோ, தன் நெஞ்சின் ஈரத்தை இங்கேயே விட்டிருக்கிறாள் //
    ரசித்த வரிகள்


    படத்தில் மரங்கள் நடுவில் காவிரி தெரியுது .வெறும் வயிற்றில் ஹார்லிக்ஸ் தொல்லை தருமே ! அதான் வீசிங் வந்திருக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், முதல் வரவு. சாப்பாடே சாப்பிட முடியலையே! வயிற்றில் எதைப் போட்டாலும் வலி, கடபுடா! ஹார்லிக்ஸ் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் குடிக்க வேண்டி இருந்தது.

      Delete
  2. அடிக்கடி செல்லும் இடம். எனக்கு ரொம்ப பிடிச்ச இடமும்கூட. படங்கள் அருமைம்மா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி/ ஶ்ரீரங்கம் வந்தால் வீட்டுக்கும் வாங்க. மொட்டை மாடியில் இருந்து காவிரியைப் பார்க்கலாம்.

      Delete
  3. படங்கள் லாம் நல்லா இருக்கு,
    சுற்றுலா என்று நானெங்கும் போனதில்லையா
    அதனால் இந்தப்பதிவில் சுற்றுலா போன உணர்வு எனக்குள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஜய், சுற்றுலாவே போனதில்லையா? ஆச்சரியம் தான்! நாங்க எங்கேயுமே போகலையேனு பையரும், பெண்ணும் கேட்டுட்டு இருக்காங்க! உடம்பு சரியில்லையா என! :))))

      Delete
  4. நடந்தாய் வாழி காவேரி என காவேரியைத் தொடர்ந்து சென்றிருக்கிறீர்கள் போல கொடுத்து வைத்தவர்

    ReplyDelete
  5. எனக்குத் தெரிந்தவரைக் கும்பகோண சாலைகள் மாட்டு வண்டிகள் போகத்தான் லாயக்கு. நாம் மெதுவாகப் போனாலும் அடித்துப் பிடித்துக் கொண்டு வரும் ஆவேசக் காரர்களைக் கண்டு பயந்து ஒதுங்கியே வரவேண்டி இருக்கும். நீங்கள் இந்த உடல் நிலையோடு போய் வந்தது மிகவும்
    பாராட்ட வேண்டிய விஷயம். சீக்கிரமே நலம் பெற பிரார்த்தனைகள் கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. எல்லாம் அந்தப் பிள்ளையார் அருளாலும் அவங்க அம்மா அருளாலும் தான் போயிட்டு வர முடிஞ்சது! இன்னிக்குத் தான் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்தேன்.

      Delete
  6. என்ன கீதாக்கா இப்படி ஹார்லிக்ஸ் கு விளம்பரம் தரும் அளவு (நான் அப்படியே சாப்பிடுவேன் போல!!!) அதிலேயே ஓட்டுறீங்களே!!

    வயிற்றில் பிரச்சனை நீங்க அடிக்கடி சொல்லறீங்களே...அதுக்கு என்ன மருத்துவம் பார்க்கறீங்கக்கா? நேச்சுரோபதி ஏதாவது பார்க்கலாமே..கவனிச்சுக்கோங்கக்கா ஹெல்த் இஷ்ஷூஸை..

    காவிரி நிறைய தண்ணி தெரியுது. அழகா இருக்கு அகண்ட காவேரி! பசுமையும் அழகு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சின்ன வயசிலே இருந்தே அம்மா ஹார்லிக்ஸ் தான் கொடுப்பா! :)))))) (ஹிஹிஹி, உண்மையாகவே!) அதே பழக்கம். காஃபி எல்லாம் கூட வேண்டாம், ஹார்லிக்ஸ் இருந்தால் போதும் என்னும் ரகம் நான்.

      Delete
  7. மாவிளக்கு ஏற்றுவது முடிச்சுட்டீங்க. கருவிலியிலும் அவசரமாக தரிசனம் கிடைத்தது குறித்தும் மகிழ்ச்சி அக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, கருவிலிக்கு இன்னொரு முறை போகணும். அப்போ நிதானமாக் கொஞ்சம் படங்கள் எல்லாம் எடுக்கணும்.பார்ப்போம்.

      Delete
  8. நான் கல்லணை போகும் ஐடியாவை டிராப் செய்து விட்டேன். எங்கள் க்ரூப் செல்கிறது. அந்த ஊர்ப்பக்கம் சாலைகள் அப்படிக் குறுகலாகத்தான் இருக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ஏன்? உடம்பு நல்லா இருக்கு இல்லையா? யார் போனாலும் கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல்லவும்.

      Delete
  9. ஒரு காலத்தில் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலைகள் எல்லாம் நெல் அறுவடை செய்து போட்டு வைத்திருப்பார்கள். அல்லது வயல்கள் பசுமைச் செழுமையாய் இருக்கும். இப்போது இடங்களின் அளவு குறைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சாலைகள் அப்படியே தான் இருக்கின்றன ஶ்ரீராம். எனக்குத் தெரிந்து கும்பகோணம்--சாக்கோட்டை வழியில் மட்டும் வயல்கள் எல்லாம் ஸ்வாஹா! மற்றபடி உள்ளே வயல்கள் இன்னமும் பிழைத்திருக்கின்றன.

      Delete
  10. நாளைய ஞாயிறில் நானும் தாண்டிச் செல்லும்போது எடுத்த படங்கள் பகிர்ந்திருக்கிறேன்! அந்த ஊர்ப்பக்கப் படங்கள்தான்!

    காவிரிப்படங்கள் மகிழ்ச்சி தருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. உங்க படங்களையும் பார்த்தேன். நான் அவ்வளவெல்லாம் தேர்ந்த புகைப்படக்காரி இல்லை! :))))

      Delete
  11. ஹார்லிக்ஸ் கார்லிக்ஸ் என்று வந்து அர்த்தம் மாறி விடுகிறது! பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்ததா இல்லையா? தலைவலி...

    ReplyDelete
    Replies
    1. கவனக்குறைவால் நேர்ந்த எழுத்துப் பிழை! சரி பண்ணிட்டேன். பெயின்டிங் வேலை முடிய இன்னமும் ஒரு மாசம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். எவ்வளவு பெரிய குடியிருப்பு வளாகம்! முழுதும் அடிக்கிறதுக்கு நாளாகும்!

      Delete
  12. கருவிலி போனதையா எழுதியிருக்கீங்க. ஏன் வண்டி போகும்போது கஷ்டப்பட்டு புகைப்படம் எடுக்கறீங்க. ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்தச் சொல்லலாம் இல்லையா? (சமையல்ல ஃபாஸ்டா இருந்தாலும், போட்டோ எடுப்பதில் ஃபாஸ்டா இல்லை போலிருக்கு. நானெல்லாம் கட கடவென நிறைய போட்டோ எடுத்து அதில் ஏதாவது ஒன்றிரண்டு சரியாக வந்துவிடும்)

    சாப்பாடு ஏற்பாடு - நமக்கு விதிச்சதுதான் நமக்கு ஹா ஹா ஹா. சாப்பாடு சூடாக இருந்ததா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, கருவிலி போனது மட்டுமில்லை, பரவாக்கரையில் மாவிளக்குப் போட்டதும் தான் எழுதி இருக்கேன். வண்டியை நிறுத்தச் சொல்லும்படியான இடங்களாக இல்லை! ஃபோட்டோவெல்லாம் இப்போத் தான் டிஜிடல் காமிரா வந்தப்புறமா எடுக்க ஆரம்பிச்சிருக்கேன்! நம்ம ரங்க்ஸ், பொண்ணு இரண்டு பேரும் அருமையா எடுப்பாங்க!

      Delete
    2. இப்போத் தான் டிஜிடல் காமிராவை அவர் கையாளுவது இல்லை! :(

      Delete
  13. அழகான இடம். நானும் கல்லணை வழியே தான் நேமம் செல்வேன். முன்பெல்லாம் பேருந்தில் - இப்போது வாடகை வாகனத்தில்.... நல்ல இடங்கள்.

    இத்தனை தண்ணீருடன் பார்க்கவே வர வேண்டும் போல!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இன்னிக்கு ஆதியும் ரோஷ்ணியும் வந்துட்டு இப்போத் தான் போறாங்க! தண்ணீரைப் படமும் எடுத்திருக்கா ரோஷ்ணி.

      Delete
  14. பயண விபரங்கள் நன்று. படங்கள் ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, வேலை மும்முரம் போல தாமதமான வருகை! நன்றிங்க!

      Delete
  15. நான் படித்ததெல்லாம் திருச்சி என்கிறவகையில் பிடித்தது . காவிரியில் தண்ணீர் படங்கள் அழகு

    ReplyDelete
    Replies
    1. வாங்க அபயா அருணா, காவிரி உங்களை இங்கே இழுத்து வந்துட்டா! இணையத்தில் நிறையப் பேர் திருச்சிக்காரங்க இருக்காங்க! :))))

      Delete
  16. உடல் நிலை சரியில்லையா? கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் கீதா!
    வழக்கம்போல உங்களின் சுவாரஸ்யமான எழுத்து மேலும் மேலும் படிக்கத்தூண்டியது!
    புகைப்படங்களும் மிகவும் அழகு!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! நீண்ட நாட்கள் கழித்து வந்ததுக்கும் அக்கறையான விசாரிப்புக்கும் நன்றி.

      Delete
  17. வணக்கம் சகோதரி

    காவிரி படங்கள் மிகவும் அருமையாக உள்ளது. காவிரியின் நீர் நிறைந்த அழகினை காண மிகவும் அழகாக உன்னது. ஒவ்வொரு படங்களையும் மிக அருமையாக படமெடுத்து போட்டுள்ளீர்கள். இந்த மாதம் (ஆடி) மாவிளக்குமா பிரார்த்தனையா? கருவிலி என்ற ஊரில்தான் தங்கள் குல தெய்வ கோவிலா? இது இரண்டாவது முறை செல்லுகிறீர்கள் என நினைக்கிறேன். அந்தப் பக்கம் அவ்வளவாக வந்து தங்கியதில்லையாகையால், ஊர்களின் பெயர்கள் புரிபடவில்லை. திருச்சி வழியாகத்தான் சென்னையில் இருக்கும் போது, அம்மா வீட்டுக்கு (தி. லி) அடிக்கடி பயணம்..ஆனால் அங்கு இறங்கியதில்லை.
    காலை (சிலசமயம்) உறக்கத்திலேயே திருச்சி கடந்து விடும். சில வேளை என்ன ஸ்டேஷன் என்று பார்க்கும் போது உறக்கம் கலையும். இப்படியாக திருச்சியை நிறைய தடவை நானும் கடந்துள்ளேன்..
    ஆனால் மதுரையில் வசித்த சமயம் திருச்சி ஒரு தடவை வந்து மலைக்கோட்டை தரிசனம் செய்திருக்கிறேன். தங்கள் பதிவை படிக்கையில், நானும் தங்களுடன் பயணித்த உணர்வைப் பெற்றேன். நன்றி.

    தங்களது மற்ற விடுபட்ட பதிவுகளையும் வாசிக்கிறேன். தங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும். இத்தனை சிரமத்திலும், என்தளம் வந்து எனக்கு ஆறுதலாக கருத்திடுவதற்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, மாமனாரின் சொந்த ஊர் பரவாக்கரை. கருவிலியில் இருந்து ஒரு கிலோமீட்டரில் உள்ளது. நிலங்கள் கருவிலியில் இருந்ததால் மாமனார் பின்னாட்களில் கருவிலியில் உள்ள வீட்டுக்கு வந்து விட்டார். பரவாக்கரையிலும் வீடு இருந்தது. பெரிய மாமனார் வைத்திருந்தார். பின்னால் அவரும் விற்று விட்டுக் கருவிலிக்கே வந்து விட்டார். இப்போ இரண்டு ஊர்களிலும் வீடும் இல்லை. நிலங்களும் இல்லை. குலதெய்வக்கோயில் பரவாக்கரையில்!பெருமாளும் அங்கே தான்! கருவிலியில் சிவன் கோயில் சோழர் காலத்தது. ஆயிரம் வருஷங்களுக்கும் மேல் பழமையான கோயில்! அப்பரால் பாடப்பட்டது.

      Delete
  18. படங்கள் அருமை...

    காவிரி போல் மனம் வேண்டும்...@!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, படங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்ததற்கு நன்றிப்பா!

      Delete